அறிமுகம்
யாழ்ப்பாண ஓவியமரபிற்க்கு நீண்டதொரு வரலாறு உண்டு. இதன் ஒரு பகுதியினை கலாகேசரிதம்பித்துரயின் பிற்கால யாழ்ப்பாணத்துச்சுவரோவியங்கள் என்ற நூல் மூலம் அறிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணம் சட்டநாதர்கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போன்ற இடங்களில் காணப்பட்ட சுவரோவியங்கள் பற்றிய தகவல்கள் இந்நூலில்தரப்பட்டுள்ளன. எனினும் இன்று இச்சுவரோவியங்களைப்
பார்த்தனுபவிக்கக்கூடிய நிலை இல்லை. முற்கால ஓவியங்கள் வெளிநாட்டவர் படையெடுப்புகளாலும். பிற்கால ஓவியங்கள் கலைப் பொருட்களைப் பாதுகாக்கும் .உணர்வு இன்மையாலும்அழிந்து போயின. யாழ்ப்பாணத்து ஓவியக்கலை ஆலயங்களுடன் இணைந்தே வளர்ச்சி பெற்றது. ஆலய நிர்வாகிகள் கலையைப் பேணும் உணர்வற்றவர்களாகக் காணப்பட்டமையினால் சுவரோவியங்சுளைப் பேணும் நினைப்பில்லாதவர்களாக
அவற்றை அழியவிட்டனர். ஆலயங்களிற்கு வெளியே ஓவியக்கலை பாடசாலைகளுடன்தொடர்புடையவர்களாலேயே பெரிதும் வளர்க்கப்பட்டது.
சித்திர ஆசிரியர்களிற்கு முறையான ஓவியப் பயிற்சியைத் தருவதை இலக்காகக் கொண்டு 1938ல் வின்ஸர் ஆட் கிளப் என்ற ஓவியர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. புகழ்பெற்ற யாழ்ப்பாணத்து முத்த ஓவியர்கள் அனைவருமே ஏதோ ஓரு வகையில் வின்ஸர் ஆட்கிளப்புடன் தொடர்புடையவர்களாகவே இருந்தனர். வின்ஸர் ஆட் கிளப்பின் ஸ்தாபகர் எஸ். ஆர். கனகசபை. இவரையே (எஸ்.ஆர்.கே) தற்கால யாழ்ப்பாண ஓவியக்கலையின் முன்னோடி எனலாம். கனகசபாபதி, வின்ஸர், பீலிங் என்ற சித்திர வித்தியாதிகாரிகள் இருவரினதும் உதவியுடன் வடமாகாணத்தில் கலையாக்கவிருத்திக்குப் பெரிதும் பங்களித்தாரென பிற்காலத்தில் சித்திர வித்தியாதிகாரியாயிருந்த விஜயரத்தினா குறிப்பிடுகிறார்.
1920ம் ஆண்டில் இலங்கைக்கு வந்தவரான சி. எவ்.வின்ஸர் புகழ் பெற்றதொரு ஓவியராவார். இவர் இலங்கை கல்வித்திணைக் கழகத்தில் பிரதமவித்தியாதிகாரியாகபதவியேற்று கடமையாற்றிய காலங்களில் யாழ்ப்பாணஓவியக் கலைஞர்களை உத்வேகத்துடன் செயல்பட வைத்தார். வின்ஸர் அழகியற் பிரக்ஞைஉடையவராகவும் சிறந்த ஓவியப் பயிற்சி உடையவராகவும்எல்லாவகையான கலையாக்கங்களையும் புரிந்து கொண்டு ரசிப்பவராகவும் இருந்ததுடன். கலையை ஊடகமாகக் கொண்டு கல்விபயிற்றுதலில் நிறைந்த அறிவுடையவராகவும் இருந்தாரென டபிள்யூ.ஐே.ஜீ.பீலிங் குறிப்பிடுகின்றார்.
வின்ஸர் பிரதம சித்திரவித்தியாதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் பீலிங் அப்பதவியை ஏற்றார். பீலிங்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரான எஸ்.ஆர்.கே. இக்காலத்தில் வின்ஸரின் ஞாபகார்த்தமாக வின்ஸர் ஆட்கிளப் என்ற ஓவியர் கழகத்தை ஸ்தாபித்து செயற்பட்டார். 1940ம் ஆண்டு ஈழகேசரியில் ஓவியப் பயிற்சி பற்றிய செய்தியொன்று வெளியாகியது. ”விடுமுறை சித்திர வகுப்பு”என்ற தலையங்கத்தில் வெளியாகிய அச்செய்தி பின்வருமாறு, ”ஈஸ்ரர்விடுமுறைக் காலத்தில்சாதாரண பள்ளிக்கூட வேலைத் திட்டத்திலும் பார்க்க உயர்தரமான முறைமில் சித்திர வகுப்பு ஓன்று ஏப்பிரல் 3ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரைக்கும் கோப்பாய் அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் நடாத்தப்படும் இவ்வகுப்பில் கற்பிக்கப்படும்
பாடங்களாவன: வரைதல், வர்ணச்சித்திரம், மனித உருவங்கள், உயிர்ப் பொருட்கள்,காட்சிகள் முதலியவற்றைப் பார்த்து வரைதல்சித்திரம், சரித்திரம், உலகப் பிரசித்திபெற்ற சித்திரகாரர்கள், அவர்களின் சித்திரங்கள் பற்றிய விரிவுரைகள். யாழ்ப்பாணத்தில் சித்திரசம்பந்தமான இடங்களிற்குச் சென்று பார்வையிடல்.
பொதுவான விரிவுரைகள் நிகழ்த்தல். சித்திரப் பரிசோதகர் பீலிங் அவர்கள் இவ்வகுப்புசுள் நடைபெறும் சுாலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்குவதாகச் சம்மதித்துள்ளார். யாழ்ப்பாணம் உதவிச்சித்திரப் பரிசோதகர் (எஸ்.ஆர்.கே) சகல ஒழுங்குகளிற்கும் பொறுப்பேற்றிருக்கின்றார் இக்காலத்தில் வின்ஸர் ஆட்கிளப்பின் செயலாளராக இருந்தவர் கிருணர் என்பவர். இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக கடனமயாற்றியர்.
இதே காலப்பகுதியில் கொழும்பில் ஓவிய ஈடுபாடுடையவர்கள் இணைந்து ஓவிய வளர்ச்சியில் ஈடுபட்ட.னர். ”43 குழுவிளர்”என்ற ஓவிய இயக்கம் ஆரம்பமாயிற்று. பாடசாலைகளுடள் தொட.ர்புடைய ஓவியக்கலைஞர்களில் முற்போக்கான சிந்தையுடையவர்சுள் இக்குழுவில் சேர்ந்தியங்கினர். இலங்கையின் ஓவிய வரலாற்றில் ”43குழுவினர்”முக்கிய இடம் பெறுகின்றனர். புகழ் பெற்ற காட்டூனிஸ்ட்டான ஏ.சி. கொலேட், றிச்சாட் கிபிரியேல், சீ. ஏப்பிரகரம்.என்பவர்களுடன் யாழ்ப்பாணத்து ஓவியர்களான எஸ். ஆர். கனகசபை. கந்தர்மடம்தீகனகசபாபதியும் ”43குழுவில்”அங்கம் வகித்தனர்.
வின்ஸர்ஆட்கிளப்பின் தோற்றத்துடன்யாழ்ப்பாணஓவியக்கலை புதிய பரிமாணத்தை பெற்றது. அறிவார்ந்த அடிப்படையில் அழகியலுணர்வுடன் ஓவியம் வரைதல் முதன்மைப்படுத்தப்பட்டது. ஓவியத்தை வெறுமனே ஒரு வினைத் திறனாகவோ அல்லது புகைப்படக்கருவி செய்வது போன்ற பட.ப்பிடிப்பு வரைதலாகவோ இல்லாது ஓவீயத்தை ஓரு ”கலையாக”. ஆக்கத்திறன் செுாண்டதாக வளர்ப்பதில் எஸ்.ஆர்.கே. மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அக்ககாலத்தில் இளைஞர்களாய் இருந்த கனகசபாபதி, இராசையா போன்றவர்கள்ஊக்கமுடன்
செயற்பட்டார்கள் என பிலிங் குறிப்பிடுகிறார். எஸ்.ஆர்.கே. தனது வின்ஸர் கலைக்கழகத்தின் மூலமாக உள்ளூரிலிருந்த திறமைசாலிகளைக் கண்டுபிடித்து அவர்களது சுலைஞானத்தை விருத்தி செய்தார்.
ஓவியத்தில் னதலவர்ணப்பிரயோகம் எஸ்.ஆர்.கே.யினாலேயே முதன் முதலில் யாழ்ப்பாணத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இக்சுால ஓவியக் சுலைஞர்கள் பெரும்பாலும் பாடசாலைகளுடன் தொடர்புடையவர்களாக காணப்பட்டபொழுதும் அடிக்கடிஓவியக்கண்காட்சிகளை ஒழுங்குசெய்து பொது மக்களின் ஓவிய இரசனையை வளர்ப்பதிலும் பெருமூயற்சியுடன் ஈடுபட்டனர். ”1940ம் ஆண்டு மார்ச் இருபதாம் திகதி வின்ஸர் ஆட்கிளப்பினர் ஏற்பாடு செய்த ஓவியக்கண்காட்சி பற்றியதொரு விமர்சனம் பின்வருமாறு வெளிவந்தது ”இதுவே யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தவர் ஒழுங்கு செய்த முதன்முதலான ஓவியக்காட்சி. ஓவியப் பிரதிகளின்றி ஓவியத்தைக் சுாண்பது இலகுவானதன்று. இங்கு அதைக் சுாணக்கூடியதாயிருந்தது. ஏறக்குறைய 300 படங்சுள் வரைதலும் ஓவியமுமாகக் காட்சிக் கிருந்தன. ஓருவருட சுாலத்தில் கழகத்தார் இவ்வளவு திருத்தம் பெற்றிருப்பது மெச்சப் படத்தக்சுதே. பென்சில்வேலை. சோக்கலர் வேலை, நீர் வர்ண வேலை, தைல வர்ண வேலை, சுளிமண்வேலை ஆகிய வேனலகள் வைக்சுப்பட்டு இருந்தன,
1952ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச வியக்கண்காட்சியில் எஸ்.ஆர்.கேயின் இரு ஓவியங்சுளும்சுந்தர்மடம் கனகசபாபதியின் ஓரு ஓவியமும்அ. இராசையாவின் மூன்று ஓவியங்களும் இடம்பெற்றன.இக்சுாட்சியில் எஸ்.ஆர்.கேயின் இருட்டடிப்பு (தைலவர்ணம்) ஓவியம் மிகச்சிறப்பானதென பாராட்டப்பெற்று பரிசும் பெற்றதாம். இவ்வோவியம் இங்கிலாந்திலும் ஓவியக் காட்.சியில் வைக்கப்பட்ட பெருமையுடயது.இலங்கை ஓவியர்களைத் தவிர மேற்படி காட்சியில் இங்கிலாந்து, கனடா, இந்தியா. இந்தோனேசியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுசுளிலுமிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட. ஓவியங்சுள் காட்சிக்கு வைக்சுப்பட்ட.ன, நீண்ட காலமாக சிறப்பாகச் செயற்பட்ட வின்ஸர் ஆட்கிளப் 1955 ல்எஸ்.ஆர்.கேநோய்வாய்ப்பட்டதைத் தொட.ர்ந்து செயலற்றுப் போய்விட்டது, அத்துடன்எஸ்.ஆர்.கே.யுடன் செயற்பட்ட. ஓவியர்களும் ஆசிரியநியமனம் பெற்றும்மாற்றலாகியும் தென்னிலங்கைக்குச் சென்றனமயும் . வின்ஸர் ஆட்கிளப் செயலற்றுப்போகக் காரணமானது
1959ல் விடுமுறைக்கால ஓவியக்கழகம் உருவாயிற்று.மாற்கு, எம்.எஸ்.கந்தையா, கந்தையாவின் மகன் செல்வநாதன், சி. பொன்னம்பலம் போன்ற ஓவியர்களின்
முயற்சியினால் விடுமுறைக்கால ஓவியர் கழகம் சிறப்பாகச் செயற்பட்டு வந்தது. இக்கழகத்தின் வளர்ச்சிக்காக கலையரசு சொர்ணலிங்கம் பெரிதும் உழைத்தாரென காட்சிக்கையேடு தெரிவிக்கிறது. “ஈழத் தமிழ் நாட்டைத் தாயகமாகக் கொண்ட கலாரசிகர்களும் ஓவிய விற்பன்னர்களும் ஒன்றுகூடி 1959 ம் ஆண்டு சித்திரை மாதம் ”ஓய்வுசுால ஓவியர் கழகம்”என்னும் ஓர் உயர்ந்த கழகத்தை ஸ்தாபித்தனர்” என 1962 ல் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிக்கையேட்டின் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1962 ம் ஆண்டும் தொடர்ந்து 1963 ம் ஆண்டும் சிற்பஓவியக்காட்சிகளை யாழ்.மாநகரசபை மண்டபத்தில் நடாத்திய விடுமுறைக்கால ஓவியர்கழகம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு சித்திர, சிற்ப வகுப்புக்களையும், அரசினர் கலைக்கல்லூரிப் புகுமுக வகுப்பையும் நடாத்தி வந்துள்ளது.
விடுமுறைக்கால ஓவியர் சுழகத்தின் தொடக்க காலத்தில் கலையரசு சொர்ணலிங்கம் தொடர்பு கொண்டிருந்தார். இவர்களின் முதலாவது கண்காட்சி எஸ்.ஆர். கனகசபை யினால் தொடக்கிவைக்கப்பட்டது,பெருந்தொகையான மாணவர்களிற்கு சித்திர, சிற்ப வகுப்புக்சுளை நடாத்தி விடுமுறைக்கால ஓவியர் கழகத்தின் அங்கத்தவர்களான மாற்கு, சி. பொன்னம்பலம், எம்.எஸ். கந்தையா ஆகியோர் முனைப்புடன் செயற்
பட்டனர். இக்காலத்தில் ஓவியர் மாற்கு கழுவுதற்பாணி ஓவியங்கள் வரைவதிலேயே அதிகஈடுபாடு கொண்டிருந்தார். 1962 ல் நடைபெற்ற ஓவியக்காட்சியில் இவரது கழுவுதல்பாணி ஓவியமான ”தாயும் சேயும்”இடம் பெற்றிருந்தது. இக்கண்காட்சியில் இடம் பெற்ற எம்.எஸ்.கந்தையாவின் ”ரேகையும்உருவமும்,வர்ணமும்” பெண்ணின் பிரதிமைஎன்ற இரு ஓவியங்கள் மட்டுமே பார்வைக்குக் கிடைக்கக்கூடிய தாயிருக்கிறது. இவர் அடிப்படை வர்ணங்களையே பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளார். எம்.எஸ். கந்தையாவின் மகனான ஓவியர் செல்வநாதனின் ”வாயில்” என்ற ஓவியமும் மேற்படி கண்காட்சியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணக் கோட்டையின் கடல்பக்க முகப்புவாயில் தோற்றத்தை இவ்வோவியம் காட்சிப்படுத்துகிறது.அளவெட்டியைச் சேர்ந்த சி.பொன்னம்பவத்தின் பெருந்தொகையான ஓவியங்களும் 1962 ம் கண்காட்சியில் இடம்பெற்றபொழுதும் அவையெவையும் பார்வைக்குக் கிடைக்கவில்லை. இவைதவிர விடுமுறைக்கால ஓவியர் கழக மாணவர்களின் ஓவியங்கள் உட்பட எல்லாமாக 175 ஓவியங்களும் 24 மண் வேலைச் சிற்பங்களும், 15 உலோக வேலைச் சிற்பங்சுளும்,8 மரச்செதுக்குச் சிற்பங்களும் 1962 ம் ஆண்டுக் காட்சியில் இடம்பெற்றதாக ஓவியக் கைப்பணிக் கண்காட்சிக் கையேட்டின் மூலம் அறியக் கிடைக்கின்றது. கலைப்படைப்புக்களைப் பேணிக் காப்பதற்கு எத்தகைய நிறுவனமுமில்வாத துரதிர்ஷ்டநிலைகாரணமாக இக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் பற்றிய தகவல்களை அறியமுடியாது உள்ளது.
விடுமுறைக்கால ஓவியர்கழகம் மாற்குவின் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஓவிய நாட்டமுடையவர்களிற்கு இலவசமாக போதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வாசுகி, அருந்ததி, ஜக்குவின், பப்சி போன்ற இளம் ஓவியர்கள் மாற்குவின் மாணவர்களாக விடுமுறைக்கால ஓவியர் கழகத்தில் பயிற்சி பெற்றவர்களே. இவைதவிர ஓவியர் பெனடிக்ற் ”ஈழக்கவை மன்றம்”என்றதொரு ஓவியக் கழகத்தையும் 1959 ம் ஆண்டுகாலப் பகுதியில் இயக்கிவந்ததாகத் தெரிகின்றது, ”கற்காலக்கலையும் சுவையும்”என்ற நூல் மேற்படி ஓவியரால் எழுதப்பட்டு ஈழக்கலை மன்ற வெளியீடாக
வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
1962 ம் ஆண்டையண்டிய காலப்பகுதியில் கரவெட்டியில் பண்டிதர் வீரகத்தி”வர்ணி கழகம்” என்ற நிறுவனத்தை இயக்கினார். ஓவியப்பகுதியொன்றும் இருந்ததாகத் தெரிகிறது. ஓவியர் ஆ.சுப்பிரமணியம், பொ.விசாகப்பெருமாள் என்போர் பங்குகொண்டு ஓவிய வகுப்புக்களை சிறிதுகாலம் நடாத்தி வந்தனர்.
சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க தொகையினரானஇளந்தலைமுறையினர் ஓவியத்தில் ஆர்வங்காட்டி வருகின்றனர். இவர்களின் தேர்ச்சியும் திறனும் எதிர்காலத்திலேயே மதிக்கப்படல் வேண்டும். அடுத்துவரும் பக்கங்களில் தற்சுால யாழ்ப்பாணத்து ஓவியர்கள் பற்றிப் பார்க்கலாம்.
நவீன ஓவியக்கலையின் முன்னோடி எஸ்.ஆா. கனகசபை (1901-1964)
தற்கால யாழ்ப்பாண ஓவியக்கலை பெரும்பாலும் கல்வியோடும், பாடசாலை
களோடும் தொடர்புடைய கலைஞர்களாலேயே வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள மூத்த ஓவியர்கள் அனைவருமே கல்லூரி ஆசிரியர்களாகவும்,
ஆசிரியகலாசாலை விரிவுரையாளர்களாகவும் இருந்தவர்களேயாவர். சுதந்திரத்திற்கு
முற்பட்ட காலத்துப் பாடசாலையமைப்பில் ஆங்கிலேயர்களே வித்தியாதிகாரிகளாக
இருந்தனர். ஆசிரிய பயிற்சி கலாசாலைகளிலும், பாடசாலைகளிலும் இக்காலத்தில்
ஓவியப்பயிற்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. சித்திர வித்தியாதி
காரிகளில் சீ.எவ்.வின்ஸர், டபிள்யூ. ஐே.ஜீ. பீலிங் என்போர் குறிப்பிடத் தக்கவர்கள்,
இவர்களின் தூண்டுதலாலேயே வருவாயை இலக்காகக் கொண்ட ஆசிரியர்கள் பலர்
ஓவியர்களாக, கலைஞர்களாக மாறினர்.
வின்ஸரின் நூண்டுதலால் ஓவியத்தை சீவனோபாயத் தொழிவாக வரித்துக்
கொண்ட எஸ்.ஆர். களகசபை, !?தீநில் !தீ.வின்ஸர் சித்திரக்கழகம் என்ற ஓவியப்
பயிற்சிக் கழகத்தை ஸ்தாபித்து 1995ம் ஆண்டுவரை இயக்கினார்
யாழ்ப்பாண ஓவியவரலாற்றில். வின்ஸர் ஆட்கிளப் இயங்கிய காலம் ஓரு
மலர்ச்சிக்சகாலம் எனக் குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாண்ம் இந்துக்கல்லூரியில்
பொன்விழாக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வின்ஸர் ஆட்கிளப்பின் சித்திரக்
கண்காட்சியும் இடம் பெற்றது, எஸ்.ஆர்.சேு.யின் முயற்சியின் பெறுபேறாக
ஓழுங்கமைக்கப்பட்ட இவ்வோவியக் காட்சியில் பிரதிமைகள். இயற்கைக்காட்சிகள்.
வர்ணவேலை, பென்சில்வேலை எனப் பல்வகைப்பட்ட சித்திரங்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டன எஸ்,ஆர். கைளாசபையின் நயினாதீவுச் சாமியார், சோமசுந்தரப்
புலவர்டு என்ற இருஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன என்றும். யாழ்ப்பாணத்துச்
சித்திரகாரரின் தலைமைஸ்தானம் எஸ்.ஆர்.கே.க்குத்தான் என்றும் ஈழகேசரியில்
வெளிவந்த விமரிசனமொன்று கூறுகின்றது. மேற்படி விமரிசனத்தை உறுதி செய்யும்
வகையில் இம் ஆண்டு நடைபெற்ற சிறுவர் சித்திரக் காட்சிக் கையேடு ஒன்றில்
பின்வரும் வாசகம் காணப்படுகிறது. திரு. எஸ்.ஆர்.கே. வடமாகாண சித்திர
வித்தியாதிகாரியாக இருந்தபொழுது சிறுவர் சித்திரக்காட்சி. முதியோர் சித்திரக்காட்சி
எனப்பல காட்சிகளை ஏற்பாடு செய்ததுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்க்கு
புத்தூக்க வகுப்புக்ககளை நடாத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூர் ஓவியத்திறமை
இவரது தனலைமத்துவ வழிகாட்டலில் விருத்தியடைந்தது.
சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தில் கலைகள் பெரும்பாலும் ஆலயங்களைச்
சார்ந்ததே வளர்ந்து வந்துள்ளது. ஓவியமும் இதற்கு விதிவிலக்கல்ல இதனால் ஓவியக்
கலை தன் வளர்ச்சிக்கு வேண்டிய கட்டுப்பாடற்ற, தன்னமயைப் பெறமுடியாதிருந்தது.
அக்காலத்து யாழ்ப்பாண சைவச்சூழலும். சமயக் கட்டுப்பாடுகளும் நாவலர் மரபுச்
செல்வாக்குப்பட்டிருந்தன. எஸ்,ஆர்.கே,யின் விள்ஸர் ஆட்கிளப் ஓவியத்தை அதன்
ஆலயம் சார்ந்த சூழலிருந்து வெளிக் செுாண்டு வந்தமையினாலேயே அக்காலம் ஓவியக்
கலையின் மலர்ச்சிக் காலமாமிற்று.
யாழ்ப்பாணத்தில் சித்திர நுண்கலையை தன்னுயர் வொப்பற்ற கலையாக
மிளிரச் செய்த பெருமை இவர்களிற்கே உண்டு. எஸ்.ஆர்.கே. பலபல
இடங்களிலும் சித்திர நுண்கலைச் சங்கங்களையாக்கி அக்கலையில் பெரிதும்
ஆர்வமுடையாரை ஊக்கி காட்சிகளைப் பலவிடங்களிலும் ஏற்படுத்திச்
சாதாரண பள்ளிக்கூடங்களிலும் சித்திரத்திற்குப் புத்துயிர் கொடுத்த
பெருவள்ளல் இவரேதான்.
1938 மார்ச்சில் கோப்பாயில் தொடக்கப்பட்ட வின்ஸர் ஆட்கிளப் ஆரம்பத்தில்
முப்பது மாணவர்களைக் கொண்டிருந்ததாய் அ, இராசையா குறிப்பிடுகிறார்.
எஸ்.ஆர்.கே.யின் வழிகாட்டலில் ஓவியப்பயிற்சிகளில் ஈடுபட்ட இராசையா,
எம்.எஸ்.கந்தையா. கே. கனகசபாபதி, ஐ, நடராசா, க. இராசரத்தினம் என்போர்
பின்னாளில் புகழ்பெற்ற ஓவியர்களாகப் பரிணமித்தனர். நகைச்சுவை நடிகரும். நாடகத்
தயாரிப்பாளருமான சானா வும் வின்ஸர் ஆட்கிளப்புடன் .தொடர்புடையவரா
யிருந்தவராவார்.
கோப்பாயைச் சேர்ந்தவரான எஸ்.ஆர்.கனகசபை ஆண்டு காலப் பகுதியில்
மானிப்பாயில் இந்துக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக கடமையாற்றினார்.
பின்னர் சென்ளை ஓவியக்கல்லூரியில் ஓவியப்பயிற்சி பெற்றபின். 1921ல் இராம
நாதனால் பரமேஸ்வராக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக நியமனம் பெற்றார். 1927ல்
வடக்கு கிழக்கு மாகாண ஓவியக் கல்விப் பரிசோதகராகப் பதவியேற்று 1957ல்
ஓய்வு பெற்றார். வின்ஸரின் வழிகாட்டலினால் ஓவியக்கலைஞனாகப் பரிணமித்த
எஸ். ஆர்.கே. இலங்கை ஓவிய வரவாற்றில் புகழ்பெற்ற 43 குழுவின் அங்கத்தினராக
இருந்தவர் ஆவார். எஸ்.ஆர்.கே.யின் பெரும்பாலான ஓவியங்கள் தக்க கவனிப்பின்றி
போய்விட்டன. பார்வைக்குக் கிடைக்கக் கூடியதாயிருப்பவை ஒரு
நிகழ்ச்சிக் சித்தரிப்பு ஓவியமும் ஒரு நிலக் காட்சி ஓவியமும், நான்கு பிரதிமை
ஓவியங்களுமேயாம். எஸ்.ஆர்.கே.யின் நிகழ்ச்சிக் சித்திரிப்பு ஓவியமான இருட்டடிப்பு
(தைலவர்ணம்) வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை 1940 இற்கும் 1959 இற்கும்
இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டதாயிருக்கலாம். இரண்டாம் .உலகயுத்த
இராக்கால வீதியோரக் காட்சியைச் சித்திரிக்கிறது. இருட்டடிப்பு காட்சியில்
தெருவிளக்கின் மங்கல் வெளிச்சம் தெருவில் வட்டவடிவமாக விழுந்திருப்பதும்.
இருளும் அமைதியும் ஆக்கிரமிப்பதும் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.
நிலக்காட்சிச் சித்திரிப்பான கடற்கரைக்காட்சி (தைலவர்ணம்) வரையப்பட்ட
ஆண்டு தெரியவில்லை. ஓவியர் அ. இராசையாவிடம் உண்டு. மங்கல் வர்ணப்
பிரயோகத்தைக் கொண்டுள்ள இவ்வோவியம் மனப்பதிவு வெளிப்பாடாக காணப்
படுகின்றது. ஓவியன் “தன் முயற்சியால் தன்னைச் சூழ்ந்துள்ள உலனக அகக் கண்ணும்,
புறக்கண்ணும் கண்டுணர்ந்து ஓவியம் வரைதல் வேண்டும், என எஸ்.ஆர். கே. ஓரிடத்தில்
குறிப்பிட்டது இங்கு நினைவு கூர்த்தக்கது பிரதிமை ஓவியங்களில் சிறப்புத் தேர்ச்சி
பெற்ற எஸ்.ஆர்.சேு.யின் பிரதிமை ஓவியங்களில் ஒன்று நாவவர் பிரதிமையாகும். இது
இன்று நீராவியடிப் பிள்ளையார் கோயிலிற்கு மேற்காக உள்ள நாவலர் மண்டபத்தில்
காணப்படுகிறது. இவைதவிர அருட்தந்தை வோங் அடிகளாரின் பிரதிமை ஓவியமும்,
எஸ்.ஆர்.சேு.வின் மகனின் இளமைக்கால பிரதிமை ஓவியமும் குறிப்பிடத்தக்கன.
திருமுருசு கிருபானந்தவாரியாரின் பிரதிமை ஓவியம் ஒன்றையும் எஸ்.ஆர்.கே.
வரைந்தாராம். இவ்வோவியம் பற்றிச் சுவையானதொரு குறிப்பு உண்டு.
திருமுருக கிருபானந்தவாரியார் இலங்கை வந்திருந்த பொழுது யாழ்ப்
பாணத்தில் எஸ்.ஆர்.கே.யின் வீட்டிலும் விருந்தினராய்த் தங்கியிருந்தாராம்,
அப்பொழுது எஸ்.ஆர்.கே. வாரியாரின் பிரதிமை ஓவியம் ஒன்றைத் தீட்டி
வாரியாரிடம் காட்டிய பொழுது, பெரியாரின் வாயிலிருந்து எத்தகைய
பாராட்டும் கிட்டவில்லை. இதனால் எஸ்.ஆர்.சேு. மனம் வெதும்பினார். பின்
ஒருநாள் ஓவியர் இராசரத்தினம் எஸ்.ஆர்.கே.யின் வீட்டிற்கு சென்றபொழுது
வாரியாரிள் பிரநிமை ஓவியத்தைக் கண்டு அதனைச் சிலாகித்துப் பாராட்டி
ளார். அதற்குப் பதிலாக எஸ்.ஆர்.கே., வாரியார் வாரிக்கொள்ள வந்தவர்
வாரியெடுக்கவுமில்லை, வாரிக்கொடுக்கவுமில்லை என கவித்துவமாகத் தன்
கவலையை வெளியிட்டு சிரித்தாராம்
எஸ்,ஆர்.கே. நவாலியூர் சோமசுந்தரப்புவவரது பிரதிமை ஓவியத்தையும்
வரைந்தார். இவ்வோவியம் கிடைக்காதபொழுதும், அதனைப் பார்த்து நயந்த
ஓவியர் மு.கனகசபை சோமசுந்தரப்புலவரின் ஆளுமையை எஸ்.ஆர்.கே. முழுமையாக
வெளிக்கொண்டு வருகிறார் எனக் குறிப்பிடுகின்றார். சோமசுந்தரப் புவவரின் படம்
நன்றாக அமைந்திருந்தது, மூக்குக் கண்ணாடியும் முகரோமங்களும் அப்படியே
இருக்கின்றன,, என ஈழகேசரி இதனை விமர்சித்தது.
இவ்வோவியத்தைப் பார்த்து மகிழ்ந்த புலவர் பின்வரும் பாடலைப் பாடினார்.
பார்த்தவுடன் உள்ளே படமாக்கும் தூரிகைக்கோல்,
சேர்த்தவுடன் கிழியில் சித்திரமாம் கூர்த்த
சுவையோர் வியக்கும் கனகசபை போல
இவையோ வியப் புலவர்
ஒன்றுபோ லொன்றை உற்ற உலகருளும்
மன்றல் மலரோனும் மாட்டானால் நன்று
கனகசபை யென்னும் கலைவல்லோன் செய்தான்
எனதுருப்போல் மற்றொன்னற
பொன்னின் சபைக்குருவும் அச்சபையின் அதிபதியும் .. ,
இன்றுமுள இராசையனும் இசைந்துள்ள மற்றோவியரும்
மன்னுசீர் வின்ஸர் ஓவிய மன்றும் வளமுற்று வான்புகழ்
பன்னு பலகாலம் பார்புகழ வாழிய வாழியவே,
இன்று அழிந்து போயுள்ள சோமசுந்தரப்புலவரின் ஓவியம் 1940ம் ஆண்டு
வரையப்பட்டது. எஸ்.ஆர்.கே, தன் இளவயதில் சாவகச்சேரினயக் சேர்ந்த சின்னையா
மாஸ்டரிடம் ஓவியம் பயின்றார். சின்னையா மாஸ்டர் உவர்பசை வர்ணத்தைப்
பயன்படுத்தி சிறப்பாக ஓவியம் வரைவாராம். சென்னையில் எஸ்.ஆர்.கே. பிரதிமை
ஓவியப் பயிற்சிபெற தூண்டுதலாயிருந்தவர் லோட்டன் என்ற புகைப்படக்
கலைஞராவார். இவரே கலையரசு சொர்னாலிங்கத்தின் தந்தையாவார். எஸ்.ஆர்.கே, மனக்கருத்தை வெளிப்படுத்தும் சித்திரங்களிற்கு முக்கிய இடம் கொடுத்தவர்
என்றும், சித்திரக்கலைக்கே பெரும் விசித்திரத்தைக் கொடுத்தவர்,,, என்றும்
பாராட்டப்படுகின்றார்.
பிரசுரம் பெறாத ஓவியக்கலைஞர் போட்டி என்ற குறிப்பிலிருந்து எஸ்.ஆர்.கே.
பற்றிய தகவல்களைப் பெறக்கூடியதாயிருக்கிறது இவருக்குப் பிடித்த இலங்சகை
ஓவியர்கள் டபிள்யூ,ஜே.ஜீ,பீலிங், ஜே.டீ.ஏ. பெரேரா, ஹறிபீரீஸ், டெரெனியகல
எனக் குறிப்பிடுவதிலிருந்து பெரும்பாலும் மேற்கூறிய ஓவியர்களது பாணியையே
எஸ்.ஆர்.கே.யும் பின்பற்றிருந்தாரெள ஊகிக்சுலாம். இலக்கியம், சங்கீதம், பரதம்
என்பனவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தவரான எஸ்.ஆர்.கே. கலை பொழுதுபோக்கு
யுடையதாயிருத்தல் வேண்டும் எனவும் அபிப்பிராயமுடையவர். 1945ல்
ஈழகேசரிப் பத்திரிகையில் “ஓவியம்” என்ற தலைப்பில் எஸ்.ஆர்.கே.யின்
கட்டுரையொன்று வெளியானது. ஓவியம் பற்றியும் ஓவியக்கலைஞர்கள் பற்றியும்
எஸ்,ஆர்.கே. அக்கட்டுரையில் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றார்
இயற்கையை அப்படியே தத்ரூபமாக தோன்றும்படி தீட்டுவது உயர்ந்த
ஓவியமல்ல, பிரதிமைப்படம் ஓவியமல்ல, அழகிய அரண்மனை, பூந்தோட்டம் முதலிய
காட்சிகளை அப்படியே பார்த்து அதேபோல வரைவது ஓவியமல்ல. அவை பார்வைக்கு
நன்றாய் இருக்கக்கூடும். உண்மை ஓவியமானது உவகசீவியத்தின் ஒரு உண்மையை
பார்ப்போர் கண்டனுபவித்து ஆனந்தத்தைப் பெறச் செய்யக்கூடியது.
ஓவியன் பெற்ற இன்பத்தை. உண்மையை, அனுபவித்த இன்பத்தை உலகமும்
கண்டனுபவிக்கும் பெரும்நோக்குடன் வரையப்பட்டதே ஓவியமாகும். உணர்ச்சியின்
வழியே பெற்ற மெய்ப்பாட்டனுபவத்தை படரூபமாக, ரேகை., உருவம், வர்ணம் ஆகிய
மூன்றினாலும் தீட்டுவதே ஓவியமாகும். ஓவியன் தன் கருத்தை வெளிக்காட்டச் செய்த
கிருத்தியமே ஓவியம், உண்மை உயர்ச்சியாற் பிறக்கும் உயர்ந்த கிருத்திய வகையில் ஒன்றே ஓவியம் இது காலம், நேரம் சாதி, சமயம் எல்லாவற்றையும் கடந்து நிற்க வேண்டும்.
தன் உணர்ச்சியை, தன் எண்ணக்கருத்தை தனது திருப்திக்கேயன்றி வேறொரு நோக்கமின்றி தன் ஆற்றல் முழுவதும் விளங்க ஓவியத்தைச் சித்தரிக்க வேண்டும். உலகை ஒருவர் உணருவது போல இன்னொருவர் உணரமுடியாது. ஆகையால் பிறரின் திருப்திக்காக ஓவியினால் சித்தரிக்கப்பட்டது உயர்ந்த ஓவியம் ஆகாது. தான் உணர்ந்து தானே செய்யும் கிருத்தியத்திற்கும், இன்னொருவரைத் திருப்திப்படுத்த செய்யும் முயற்சிக்கும் அதிக வித்தியாசமுண்டு. உணர்ச்சி, மெய்ப்பாடு என்பன ஒருவர் தானே அனுபவிப்பன. அதை அனுபவிப்பவர் தான் பிறருக்கு எடுத்துக்காட்ட வல்லவர் அத்தகையோரே ஓவியர்.
தனது வாழ்நாள் முழுவதையும் ஓவியக்கலையின் வளர்ச்சிக்கே அர்ப்பணித்த எஸ். ஆர். கே. யை இருபதாம் நூற்றாண்டின் யாழ்ப்பாண ஓவியக்கலை முன்னோடி என அழைப்பதில் தவறொன்றுமில்லை.
நிலைப்பொருள் ஓவியர் ஐயாத்துரை நடேசு (1906 - 1988)
மானிப்பாய் இந்துக் கல்லூரியில் 1930 - 40 ஓவிய ஆசிரியராகப் பணியாற்றிய நடேசு நிலைப் பொருள் ஓவியங்கள் மூலம் தன் கலையாளுமையை வெளிப்பார்வைக்குக் கிடைத்தன. ஓவியங்களில் படைக்கபட்ட ஆண்டுகள் பற்றிய தகவல்கள் தரப்படாத பொழுதுமு; இவையனைத்தும் ஆகக் குறைந்தது 1947 ஆம் ஆண்டிற்கு முன்னரே தரப்படாத பொழுதும் இவையணைத்தும் ஆகக் குறைந்தது 1947 ம் ஆண்டிற்கு முன்னரே படைக்கபட்டிருத்தல் வேண்டுமென ஓவியர் இராசரத்தினம் குறிப்பிடுகின்றார். ஓவியக்கலையில் நடராசாவைத் தனது குரு என குறிப்பிடும் இராசரத்தினம், வர்ணப் பயன்பாட்டில் தான் நடராசாவின் செல்வாக்குக்குட்பட்டவர் என்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றில் வளர்ச்சி பெற்ற யாழ்ப்பாண ஓவியமரபில் நடேசுவின் நிலைப்பொருள் ஓவியங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுவன. இவரது ஓவியங்களில் பின்னணியமைக்கப்பட்ட முறைமை, அதன் வர்ணத்தெரிவு என்பன மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஓவியப் பொருளும் அதன் பின்னணியும் தகுந்த முறையில் வர்ணத்தெரிவைக் கொண்டு விளங்குகின்றது. நிலைப்பொருளின் பால் நுகர்வோர் கவனத்தை ஈர்ப்பதுவும், கவனச் சிதைப்பை ஏற்படுத்தாத பின்னணியும் இவரது வர்ணத் தெரிவின் அடிப்படையா அமைந்துள்ளன. நடேசுவின் ஏழு ஓவியங்களிலும் ஐந்தில் ரேகைகளால் கட்டுப்படுத்தப்பட்ட வர்ணப் பிரயோகத்தையும் இரண்டு ஓவியங்களில் (இவை நடேசுவின் பிந்திய ஓவியங்களாக இருக்கலாம்) திட்டுத் திட்டான வர்ணப் பிரயோகத்தையும் காணலாம். அனைத்து ஓவியங்களிலும் பிரகாசமான வர்ணப் பயன்பாடு இடம்பெற்றுள்ளது. தற்பொழுது கிடைக்கக் கூடியதாயிருக்கும் நிலைப்பொருள் ஓவியங்களை மாத்திரமே ஆதாரமாகக் கொண்டு நடேசு என்ற ஓவியனின் கலையாளுமையைப் பூரணமாக மதிப்பிட முடியாது போயினும் அவர் விரல்விட்டெண்ணக்கூடிய யாழ்ப்பாணத்து ஓவியர்களில் ஒருவரென்பதில் ஐயமில்லை.25
நிலக்காட்சி ஓவியர் எஸ். பாலசுந்தரம்
சென்னை கலைக்கல்லூரியில் பயிற்சி பெற்றவரான பாலசுந்தரம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்தவராவார். அச்சுக்கூடம் ஒன்றில் வேலை செய்த இவர் இயற்கைக் காட்சியோவியங்களைச் சிறப்பாக வரைவாராம். ஓவியர் இராசரத்தினத்தின் தகவலின் படி இவரது ஓவியங்கள் பணிக்கரின் பாணியைப் பின்பற்றியமைந்தனவாகும். இவரது இரு ஓவியங்களின் புகைப்படப் பிரதிகள் மட்டுமே பார்வைக்குக் கிடைத்தன. சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரரின் தகவலின் படி பாலசுந்தரம் மிகச் சிறந்ததொரு ஓவியராவார். மிகவுமு; கஷ;டப்பட்டு தன்னியல்பிற்கு மீறிய பொருட்செலவு செய்து தனிநபர் ஓவியக்காட்சியொன்றை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியல் பாலசுந்தரம் செய்தார். இயல்பான அசட்டையினால் யாழ்ப்பாணம் கல்லூரியில் பாலசுந்தரம் செய்தார். இயல்பான அசட்டையினால் யாழ்ப்பாணத்தவரிடையே காட்சிக்கு அதிகம் வரவேற்பிருக்கவில்லை. இதனால் மனம் நொந்த பாலசுந்தரம் கலைஞனை மதிக்கத் தெரியாத யாழ்ப்பாண மண்ணில் தொடர்ந்தும் சீவிக்க விரும்பாது தனது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு கொழும்பில் சென்று குடியேறினார். அதன் பின்னர் இறக்கும் வரை அவர் யாழ்ப்பாணம் வரவேயில்லை.
கொழும்பில் குடியேறிய பாலசுந்தரம் தனிநபர் ஓவியக்காட்சிகளை ஏற்பாடு செய்து புகழ்பெற்றார். அமெரிக்க ஸ்தானிகராலய வரவேற்பறையில் பாலசுந்தரத்தின் ஓவியம் ஒன்று காட்சிக்கு வைக்கப்ட்டிருந்தமையை தான் கண்டதாக சிரித்திரன் கொழும்பில் குடியேறிய பாலசுந்தரம் தனிநபர் ஓவியக்காட்சிகளை ஏற்பாடு செய்து புகழ்பெற்றார். அமெரிக்க ஸ்தானிகராலய வரவேற்பறையில் பாலசுந்தரத்தின் ஓவியம் ஒன்று காட்சிக்கு வைக்கபட்டிருந்தமையை தான் கண்டதாக சிரித்திரன் ஆசிரியர் கூறுகின்றார். வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் பலரும் விலைக்கு இவரது ஓவியங்களை வாங்கிச் சென்றதால் நல்ல வருமானத்தைப் பெற்றார் எனவும் சிரித்திரன் ஆசிரியர் மேலும் தெரிவித்தார். விரக்கியுற்ற நிலையில் யாழ்ப்பாண மண்ணை வெறுத்து கொழும்பு சென்ற இக்கலைஞனின் ஓர் ஓவியந்தானும் இங்கில்லாதது கவலைக்குரியது.26
(பிறப்பு, இறப்பு பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை)
ச. பெனடிக்ற்
ஆசிரிய மரபில் வராத யாழ்பாபணத்து ஓவியர்களில் பெனடிக்ற் குறிப்பிடத்தக்கவர். ஷஷபென்|| என்ற பெயரிலேயே இவர் ஓவியங்களை வரைந்தார். முழுநேர ஓவியராக வாழ்ந்து வந்த பெனடிக்ற் வணிமுறை ஓவியம் வரைதலில் பெரிதும் ஈடுபட்டார். பாடசாலை ஓவிய ஆசரிpயராக இல்லாதரிருந்த பொழுதும், தான் வாழ்நத காலத்தில பலராலும் அறியப்பட்ட கணிப்புப் பெற்ற ஓவியராக பெனடிக்ற் இருந்திருக்கின்றார். பெரும்பாலும் மனித உருவரைகளாகவே இவரது ஆக்கங்கள் இருந்தன. ஓவியர் மாற்கு இவரிடம் ஓவியம் பயின்றவர். வணிகமுறை ஓவியர்களாக இருந்த பலருக்கு ஆசிரியராக பெனடிக்ற் இருந்திருக்கிறார்.
பெனடிக்ற்றினது வாழ்க்கை வரலாறு பற்றி அதிகம் அறியமுடியாதுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சித்திரக் கண்காட்சியில் பங்கு கொண்டிருந்தார் எனவும், தென்னிந்தியத் தொடர்புகள் இவருக்கிருந்ததென்றும் தென்னிந்தியாவிலேயே காலாமாயினார் என்றும் தெரியவருகின்றது. 1977 ம் ஆண்டு இவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஓவியக்கலைக்கு யாழ்ப்பாணத்தவர் ஆதரவு இல்லை என்றும் ஓவியம் வரைதலை முழுநேரத் தொழிலாகக் கொண்டு இங்கு சீவிப்பதென்பது இயலாத காரியமென்றும் தென்னிந்தியாவிற்கு சென்று சீவிக்க விரும்புவதாகவும் அப்பொழுது தெரிவித்தார். பௌடிக்ற்றினது ஓவியங்கள் எவையும் பார்வைக்குக் கிடைக்கவில்லை. எனினும் பெருந்தொகையான ஓவியங்களை அவர் வரைந்தார் பேணிப்பாதுகாக்கப்பட்டாததால் அவை அழிந்து போயின. ரேகைச் சித்திரங்க்ள வரைவதில் இவர் வல்லவர்.
ஷஷதற்காலக் கலையும் சுவையும்|| என்ற நூல் பெனடிக்ற்றினால் எழுதப்பட்டு 1969 ம் ஆண்டு ஈழக்கலைமன்ற வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூல் தற்காலக் கலை பற்றியதாக இருப்பினும் ஆங்காங்கு கலை பற்றிய பொதுவான காணப்படுகின்றன. அழகுணர்ச்சியின் வெளிப்பாடே கலையாகப் பரிணமிக்கிறது. உணர்ச்சியும், ஓசையும் நடிப்பிற்கு மெருகு கொடுக்க அந்த நடிப்பிலிருந்து ஓவியக் கலை பிறக்கின்றதென்று பெனடிக்ற் கருதினார்.26
நடிப்பில் வெளிப்படா உண்மைகளை ஓவியம் வெளிக்கொண்டு வருகின்றது. புள்ளிகளின் இணைப்பால் சித்திரங்களும் அழகைத் தோன்றுவிக்கின்றன. அழகுக் கலைகளினாலேயே மனிதருக்கு அவதான சக்தி ஏற்படுகிறதென்றும், அழகுணர்ச்சியே ஓவியக்கலைக்கு பூரணவளர்ச்சியைக் கொடுக்கிறதெனவும் பெனடிக்ற் கூறுகின்றார்.28
கருத்து விளக்கத்தை சித்திர - சிற்ப கலைகள் தருகின்றன எனக்கூறும் இவர் உள்ளத்து, அழகுணர்ச்சியின் வெளிப்பாடே சுவை என்கிறார். நாத - உருவ - பேத நிலைகளிற்கேற்ப உணர்ச்சியும் அதன் சுவையும் வேறுபடுகின்றதென்பது இவர் அபிப்பராயம்.29 இதற்கேற்றவாறு மேற்படி நூலில் ஒன்பான் சுவை பற்றிய விளக்கமும் தரப்பட்டுள்ளது. உண்ணும் உணவுகளில் சுவைகள் அமைந்திருப்பது போல நாம் வாழும் வாழ்க்கையிலும் கவின்கலைகள் கலந்திருக்கின்றன எனக்கருதும் பெனடிக்ற் சுவையின்றி உணவில்லை, அதுபோல் உணர்ச்சியின்றி வாழ்க்கையில்லை எனக் கூறுகிறார்.
ஓர் ஒவியராக மட்டுமல்லாது கலைஞானமும், கலை விளக்கமுடையவராகவும் வாழ்ந்து மறைந்து போன ஒரு ஓவியரின் கலையாக்க முயற்சிகள் பற்றி அறிய முடியாதிருப்பது கவலைக்குரியது.
(பிறப்பு, இறப்பு பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை)
மின்சாரம் அன்ரனிப்பிள்ளை வேதநாயகம்
யாழ்ப்பாணம் சென்.பற்றிக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகவும் எஸ்.
ஆர்.கேக்குப் பின்பு சித்திரவித்தியாதிகாரியாகவும் இருந்த அன்ரனிப்பிள்ளை
நாயகம் பற்றிய விபரங்கள் மிகவும் அருந்தலாகவே கிடைக்கின்றன ஓவியர்களான
மாற்கு இராசரத்தினம் அமிர்தநாதன் சிரித்திரன் சிவஞான சுந்தரம் என்போர்களிட
மிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி அன்ரனிப்பிள்ளை தேவநாயகம் கலையாளுமை
மிக்க ஓவியரென அறியமுடிகின்றது. இவரின் படைப்புக்கள் இரண்டு பார்வைக்குக்
கிடைத்தன. ஒன்று இவர் ஆசிரியராகப் பணியாற்றிய சென். பற்றிக் கல்லூரியிலுள்ள
தேவமாதா ஓவியம் (தைலவர்ணம் வரையப்பட்ட ஆண்டு தெரியவில்லை) நவ
புலமைவாதப் பாணியில் தேவமாதா வரையப்பட்டுள்ளது. மிகச்சிதைந்து போன
நிலையிலுள்ள இவ்வோவியத்தைப் பார்க்கும் பொழுது “தேடலும் படைப்புலகும்”
என்ற நூலில் வரும் குறிப்பொன்று ஞாபகம் வருகின்றது. அவ்வாசகம் பின்வருமாறு
“இத்தாலியில் ஓவியப் பயிற்சிபெற்ற அன்ரனிப்பிள்ளை தேவநாயகம். மைக்கே
லேஞ்சலோவின் மானசீக பக்தர். இத்தாலியில் மைக்கல் சீவித்த வீட்டிற்கு அருகில் குடியமர்ந்து விடிகாலையில் முழுவியத்திற்கு மைக்கேலேஞ்சலோவின் வீட்டில்
முளிப்பார். நவபுலமைவாத ஓவியரான அன்ரனிப்பிள்ளை தேவநாயகத்தின்
கலையாற்றலை மேற்படி கூற்றும் “தேவமாதா” ஓவியமும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்து ஓவியர்களில் இவரைப்போலச் சிறப்பாக ஓவியம் வரைபவர்
எவருமில்லையெனச் சிரித்திரன் ஆசிரியர் ஒரு தடவை என்னிடம் கூறினார். கரையோரக்காட்சிகள் மீன்சந்தை என பல்வேறு காட்சிகளை ஓவியமாக இவர் வரைந்தாரெனவும் வர்ணப்பயன்பாட்டில் மிகச்சிறந்த ஆளுமை பெற்றிருந்தாரெனவும் அறிய முடிகின்றது. இரண்டாவது படைப்பு வண. பிதா லோங் அடிகளாரின் தலை
(கோட்டுருவமாக வரையப்பட்டது) மனித உடலின் சிறப்பியல்பான கூறுகளை
தெரிந்தெடுத்து கோட்டுருவம் கொடுக்கும் “காட்டூனிஸ்ட்” கலையிலும் அன்ரனிப்
பிள்ளை சமத்தர் எனத் தெரிகின்றது.
யாழ்ப்பாணம் கத்தோலிக்க பேராயரின் உதவியால் இத்தாலி சென்று ஓவியப்
பயிற்சி பெற்ற அன்ரனிப்பிள்ளைக்கு “மின்சாரம்” என ஒரு பட்டப் பெயரும் உண்டாம்.
“மின்சாரம்” அன்ரனிப்பிள்ளை எனத் தன் நண்பர்களால் அழைக்கப்பட்ட அன்ரனிப்
பிள்ளை தேவநாயகம் தேர்ந்த சுவாரசனையுடைய ஓவியரென்பதை ஓவியர் இராசரத்தினத்தின் மூலம் அறிய முடிகின்றது. ஒருமுறை நிலக்காட்சி ஓவியமொன்னற வரையும்
பொழுது நாயொன்று கால்களில் சலம் விட்டுச் சென்றதாம். படைப்பாக்கத்தின்
பொழுது அன்ரனிப்பிள்ளை தன்னுணர்வின்றி. இருப்பார் என சிவஞானசுந்தரம் தகவல்தந்தார். ஓவியப் புனைவாக்கத்தின் பொழுது விசித்திரமாக நடந்து கொள்வார்.
அன்ரனிப் பிள்ளையின் விசித்திர நடத்தை குறிப்பிட்ட சிரித்திரன். ஒரு
கூட்டத்திற்கு அன்ரனிப்பிள்ளை தலைமை வகித்த பொழுது ஒரு விடயம் பற்றி வந்தவர்
களிடையே அபிப்பிராயபேதம் இருந்தது வாக்
கெடுப்பு முறையில் பிரச்சனையை தீர்க்க
முயன்ற அன்ரனிப்பிள்ளை “பிரேரணைக்கு சார்பானவர்கள் தங்கள் கால்களை உயர்த்தவும் எனக்கூறினாராம்.”
ஓவியர் அமிர்தநாத்ரின் தகவலின்படி அன்ரனிப்பிள்ளை பார்த்து வரைவதில்
தேர்ந்த பயிற்சியுடையவர். 1957ல் யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற சித்திரசிற்பக்கண்காட்சியில் அன்ரனிப்பிள்ளை மிகத் தீவிரமாக பங்கு பற்றியிருந்தார். சிரித்திரன்
சிவஞானசுந்தரம் அமிர்தநாதர் ஆகியோர்களிடமிருந்தே அன்ரனிப்பிள்ளை
தேவநாயகம் பற்றிய தகவல்களை ஓரளவிற்கு பெறக்கூடியதாயிருந்தது. விபரமான
தகவல்களைப் பெறமுடியாத பொழுதும் அன்ரனிப்பிள்ளை தேவநாயகம் 1950களில்
சுறுசுறுப்பாக இயங்கிய கலைஞரென்பதை பதிவு செய்தல் அவசியமானதே.
கரவைவேலன் (த. வேலுப்பிள்ளை)
கரவைவேலன் என்ற புனைப்பெயர் கொண்ட த. வேலுப்பிள்ளை பேராசிரயர் சிவத்தம்பியின் தகவல்படி இந்தியமையினால் சித்திரங்கள் தீட்டுவதில் திறமை பெற்று இருந்தார். 1974ம் ஆண்டில் ஷஷஓவியம்|| என்ற நூலை எழுதி வெளியிட்டதன் மூலம் பரவலாக அறிமுகமானார். இந்நூல் கரவெட்டி மக்கள் ஓவியமன்றத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.30 ஒரு படைப்பாளி என்ற வகையில் பிரக்ஞையுடன் செயற்பட்ட கலைஞர்களில் கரவை வேலனும் ஓருவர்.
கலைஞன் தன் எண்ணக்கருத்தைக் கலையாக வெளியிடுகின்றான். அமரத்துவமான கலைகள் எத்தகைய நோக்கத்தையும் இலக்காகக் கொண்டதல்ல. கலைஞன் தன் எண்ணக்கருத்தை, தான் உணர்ந்ததை மற்றவருக்கு நனிவிளங்க உரைப்பதற்காக ஓவியம் வரைகின்றான். எனக் கருதுகின்ற கரவைவேலன் கண்ணுக்கு விருந்தளிப்பதால் ஓவியக் கலை ஏனைய கலைகளைவிடச் சிறந்ததாய் இருக்கின்றதெனும் அபிப்பிராயத்தை கொண்டிருந்தார். இவரது அபிப்பிராயப்படி ஷஷஓவியம் ஒரு உலகமொழி||32
ஓவியம் வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் கலந்திருக்கிறதென்றும் இனக்கவர்ச்சி தத்துவத்திற்கு ஓவியமே மூலகாரணம் என்றும் மனத்தின் அடித்தளத்தில் உள்ள உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பக் கூடிய கருத்து வெளிப்பாட்டை ஓவியம் கொண்டுள்ளதென்றும் கூறுகின்ற கருத்துக்கள் கரவைவேலனின் ஓவியப் பிரக்ஞைக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும். பார்த்து வரைவது ஓவியனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தடையாக அமைகிறது. ஓவியக் கலைஞர்கள் தம் உள்ளுணர்வையே ஓவியமாக்குதல் வேண்டும். ஞாபகத்தை விருத்தி செய்தல் வேண்டும். ஞாபகத்தில் இருந்தே வரைதல் வேண்டும் எனக்கருதும் கரவைவேலன் புகைப்படக் கருவியால் எண்ணங்களைப் படம் பிடித்து காட்ட முடியாது எனவும் ஓவியமே அதனைச் செய்யும் என்றும் கூறுகின்றார்.33
ஓவியத்தைப் பொறுத்தவரையில் மேலைத்தேய உத்திமுறைகளை கீழைத்தேய உள்ளத்துணர்வுடனும் ஆக்கச் சக்தியுடனும் இணைப்பதன் மூலம் உயிரோட்டமான ஓவியங்களை வரையலாமென்பது கரவைவேலனின் கருத்து. கருத்து வெளிப்பாடும் கற்பனையும் கலந்த ஓவியங்களையே பொதுமக்கள் பெரிதும் மதிப்பர் என்று கூறும் இவர் தனது ஓவியங்கள் யாவும் கற்பனை ஓவியங்களே என்கிறார். பார்த்து வரைவது ஓவியனுக்கு ஆகாது எனக் கருதும் கரவைவேலன் சிந்தனை வளர்ச்சிக்கு பார்த:து வரைதல் தடையாக இருக்கிறதென்ற அபிப்பிராயம் உடையவர். ஓவியக் கலைஞன் தன் உள்ளுணர்வையே ஓவியமாக்குகின்றான். இதன் மூலம் ஞாபகத்தை விருத்தி செய்யக் கூடியதாயிருக்கிறது. ஞாபகத்திலிருந்து வரைவதே சிறப்பானதென்பது இவர் கருத்து.34
கல்வித் திட்டத்தில் ஓவியக் கலையின் முக்கியத்துவத்தை வற்புறுத்துமிவர் கலைகள் புறக்கணிக்கப்பட்ட கல்வித்திட்டம் உயிரற்ற உடலுக்கொப்பானதென்று அபிப்பிராயமுடையவர். தற்கால ஐரோப்பிய ஓவியர்களின் ஆக்கங்கள் உத்தியமுறையில் சிற்நது விளங்குகனி;றன. ஓவியத்தைப் பொறுது;தவைரயில் மேலைத்தேய உத்திமுறைகளும் கீழைத்தேய உள்ளத்துணர்வும் இணைக்கப்படால் ஆக்கத்திறனுடைய உயிரோவியங்கள் உருவாகுமென்பது இவரது அபிப்பிராயம்.35
புகைப்படக் கருவியால் எண்ணங்களையும் படம் பிடித்துக் காட்ட முடியாது. ஓவியமே அதனைச் செய்யும் எனக் கருதும் கரவைவேலன் கந்தமுருகேசரின் பிரதிமை, வள்ளுவர், காதல் எல்லையில்லாத ஆனந்தம். முருகன் விநாயகர், இயற்கைக்காட்சி எனப்பல தைலவர்ண ஓவியங்களை வரைந்தார் என அறியக் கிடக்கின்றது. எனினும் இவ்வோவியங்கள், மூலப் பிரதிகள் எவையும் பார்வைக்குக் கிடைக்கவில்லை.
தத்ரூபமாக வரைவது ஓவியத்தின் சிறப்பன்று எனவும், ஆக்க சக்தியின் அற்புதங்களை உணர்த்தும் வகையில் ஓவியங்கள் அமைதல் வேண்டும் எனவும் கருத்துக் கொண்டிருந்த கரவை வேலன் தன் கருத்துக்களால் ஓவிய உலகில் முதன்மை பெறுகின்றார்.
(பிறப்பு, இறப்பு பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை)
பல்துறைக்கலை விற்பன்னர் ஷசானா| (செ. சண்முகநாதன்)
ஓவியராகிய மட்டுமல்லாது நாடக நடிகராகவும், நாடகத் தயாரிப்பளாராகவும், உரைநடைச் சித்திரங்கள் வரைவதில் வல்லவராயும் புகழ்பெற்றவே ஷஷசானா|| என்ற புனைப்பெயர் கொண்ட செ. சண்முகநாதன், சென்னை அரசினர் கலைக்கல்லூரியல் புகழ்பெற்ற பெருமை சானாவிற்குண்டு. இவர் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றவர். 1939ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த புதினப் பத்திரிகையான ஈழகேசரியல் முதலில் ஓவியராகவும், பின்னர் உதவியாசிரியராகவும் சானா பணியாற்றிய காலத்து ரேகைச் சித்திரங்களையும் கேலிச் சித்திரங்களையும் வரைந்தார். ஈழகேசரியில் வெளிவந்த இந்தியப் பிரணாயக் கட்டுரையொன்றிற்கு சானா வரைந்த ரேகைச் சித்திரங்கள் அக்காலத்திய வாசகர்களிடையே புகழ் பெற்றன. சானாவை ஷஷயாழ்ப்பாணத்து மாலி|| என வாசகர்கள் பெயரிட்டழைத்தனர்.36 ஆனந்தவிகடன் மாலியைப் போலவே ரேகைச் சித்திரங்களால் நாளாந்த வாழ்ககையில் நடமாடு பத்த்திரங்கைள் கண்முன் கொண்டுவரும் திறமை சானாவிற்குரியது.
சானா யாழ்ப்பாணத்து மக்களின் தனிச் சிறப்பியல்பான மனப்பான்மைகளை நகைச்சுவையுணர்வுடன் விமர்சித்தார். 1944 ம் ஆண்டு ஈழகேசரியில் வெளிவந்த ஷஷநத்தை|| என்ற உரைநடைச் சித்திரத்தில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது. ஷஷதமிழரின் கலை சமய சம்பந்தமான முன்னேற்றத்திற்கு நத்தை வேகம் கொடுத்து உதவியது.||37 இவ்வாறு ஈழகேசரியில் உதவியாசிரியராக கடமையாற்றிய காலத்து தமிழ் மக்களின் இவ்வாறு ஈழகேசரியல் உதவியாசிரியராக கடமையாற்றிய காலத்து தமிழ் மக்களின் வாழ்க்கையிற் காணப்பட்ட குறைபாடுகள் பலவற்றையும் உரைநடைச் சித்திரங்களாக நகைச்சுவையுணர்வுடன் சானா விமர்ச்சித்தார். பழைய ஈழகேசரி இதழ்களைப் புரட்டிப் பார்த்ததில் சானா ஷஷஈடில்லா வாழ்வு|| என்று சிறுகதையொன்றும் எழுதியிருந்தமை தெரியவந்தது. சென்னையில் சினிமாப் படங்களிற்கு ஆர்ட் டைரக்கடாரகச் சானா பணியாற்றியமை பற்றிய குறிப்பொன்று ஷஷபரியாரி பரமர்|| என்ற நூலில் காணப்படுகிறது. 1948ம் ஆண்டில் ஈழகேசரியில் ஷஷஎனது சினிமா அனுபவம்|| என்றதொரு கலையரசு சொர்ணலிங்கத்தை தனது நாடகக் குருவாகக் குறிப்பிடுகின்ற சானா 1938ல் கலையரசுவினால் தயாரிக்கப்பட்ட ஷஷவணிகபுரத்து வாணிகன்|| என்ற நாடகத்தில் நடித்து பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா சென்று ஷஷசுகுமார் பிக்சர்ஸ்|| என்ற நிறுவனம் தயாரித்த ஷஷதேவதாஸி|| என்ற படத்தில் சிறு வேடமேற்று நடித்தார். இரண்டாம் உலகயுத்தக் காலத்தில் அமெரிக்க வேவுபடையில சேர்ந்து நடித்தார். இரண்டாம் உலகயுத்தக் காலத்தில் அமெரிக்க வேவுபடையில் சேர்ந்து உளவறியும் வேலை செய்தாரென்ற சுவையான தகவலும் மேற்படி கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. தேவதாஸி என்ற திரைப்படத்திற்கான சித்திரவேலைகளை சித்திர அமைப்பாளரின் (ஆர்ட்ட டைரக்டர்) இரண்டாவது உதவியாளராக வேலைக்கமர்ந்து செய்து வந்ததாகவும், கண்ணகி தீனபந்து, பத்தினி முதலிய படங்களிற்கான சித்திர வேலைகளைச் செய்ததாகவும், இந்தியப் பத்திரிகைகளில் அவரது விளம்பரச் சித்திரங்கள் வெளிவந்ததாகவும் அறியக் கிடக்கிறது.
பேராசிரியர் சிவத்தம்பியும், கவிஞர் முருகையனும் தந்த தகவல்களின்படி கொழும்புப் பல்கலைக் கழக தமிழ்ச் சங்க நாடகங்கள் சிலவற்றிற்குத் தேவையான ஓவியக்காட்சிகளை சானா சிறப்பாகச் செய்தாரென அறியக் கிடக்கிறது. 1951 இல் இருந்து இலங்கை வானொலியின் தமிழ்நாடகத் தயாரிப்பளராக விளங்கிய சானா இக் காலத்தில் ஷஷஇலண்டனில் கந்தையா|| என்ற வானொலி நாடகத்தின் மூலம் பரவலான அறிமுகத்தைப் பெற்றார்.
ஒரு கலைஞன் என்ற வகையில் பல கலைத்துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட் சானா சிறந்தொரு கலை விமர்சகராகவும் விளங்கியமை ஈழகேசரியில் அவரெழுதிய கலை நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனங்களில் இருந்து அறியலாம். சித்திரத்தில் தனக்கு ஒருவகைப் ஷபைத்தியம்| என சானா கூறிக்கொண்டார். சானாவின் ஓவிய ஆற்றலைப் புரிந்துகொள்ள ஷஷபரியாரி பரமர்|| என்ற அவரது நூலில் வெளிவந்த ரேகைச் சித்திரங்கள், ஈழகேசரியல் வெளிவந்த ரேகைச் சித்திரங்கள் என்பனவற்றை பொருத்தமான உதாரணங்களாகத் தரலாம். மேற்படி ரேகைச் சித்திரங்கள் சானா ஒரு லலிதமான ஓவியக் கலைஞரென்பதை எடுத்துக் காட்டுகிறது.
ஓவியர்களான அ. இராசையா, கந்தர்மடம் கனகசபாபதி என்போர்கள் வாயிலாக சானா நீர்வர்ண ஓவியம் தீட்டுவதில் புலமை பெற்றிருந்தமையை அறியக் கூடியதாயிருக்கிறது. சானா வரைந்த பிரதிமையோவியம் ஒன்று பார்வைக்குக் கிடைத்தது. கனகசபாபதியன் தாயாருடைய இப்பிரதிமை ஓவியம் நீர்வர்ணம் கொண்டு வரையப்பட்டது. சானாவின் அபார ஓவியத்திறமைக்கு இவ்வோவிம் சான்று பகர்கிறது. ஈழகேசரி 1940 ஆண்டு மலரில் அட்டைப்படம் சானாவினால் வரையப்பட்டது. ஷஷகண்ணன் ராதை|| என்ற இவ்வோவியம் இந்தியப் பாணியில் அமைந்தது. மேலும் அதே ஆண்டு மலரில்
ஷஷஅல்லிக் குளத்தருகே - ஒருநாள்
அந்திப்பொழுதினிலே - அங்கார்
முல்லைச் செடியதன் பாற் - செய்தவினை
முற்றும் மறந்திடக்கற்ற தென்ன||
என்ற பாடலிற்கான ஓவியம் சானா வரைந்துள்ளார்.
போல் செசானின் செல்வாக்கு அவ்வோவியத்தில் படிந்திருப்தை அவதானிக்கலாம்.
சானா தன் ஓவியங்களை எல்லாம் ஷஷசிலைட்|| ஆக வைத்திருந்தாரென அ. இராசையா தெரிவித்தார். எனினும் அவை தற்பொழுது எங்குள்ளதெனத் தெரியவில்லை. சிரித்திரன் சிவஞானசுந்தரத்தின் தகவலின்படி சானாவின் ஓவியம் ஒன்று கொழும்பு அமெரிக்க ஸ்தானிகராலயத்தில் காட்சிக்கிருந்தது. பேராசரியர் சிவத்தம்பியினுடைய தகவலின் படி சானா ஒட்டுச் சித்திரத்தில் தேர்ச்சியுடையரென்றும், அவர் சிறந்ததொரு பிரதினை ஓவியராக இருந்தாரெனவும் தெரியவருகிறது.
கலைத்துறைகள் பலவற்றிலும் தீவிரமாக இயங்கிய சானா யாழ்ப்பாணத்து ஓவிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முதன்மை பெற்றவரென்பதில் ஐயமில்லை.
(பிறப்பு, இறப்பு விபரங்கள் கிடைக்கவில்லை)
மயில்வாகணம் கங்காதரன் (1910 - 1994)
சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணிவரும் ஓவியர்களில் கங்காதரன் குறிப்பிடத்தக்கவர். திருவுருவங்களைக் கண்ணாடியில் வரைவதில் பெயர்பெற் ற இவர் பரம்பரை பரம்பரையாக தமது குடும்பங்கள் ஆலயம் சார்ந்த சித்திர வேலைகளைச் செய்து வந்ததாகவும் தனது பேரானன சுப்பராயர் கோயிற் திரைச்சீலைகள் வரைவதில் மிகவும் புகழ்பெற்றவரெனவும் உரையாடிலின் பொழுது கங்காதரன் குறிப்பிட்டார். எஸ். ஆர். கனகசபை பரமேஸ்வராக் கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்து அவரிடம் தன் ஆரம்பகால ஓவியப் பயிற்சியைப் பெற்றதாகவும் ஓவிய உத்திமுறைகளில் தேர்ச்சி பெறுவதற்கு எஸ். ஆர்;. கேயின் போதனைகள் மிகவும் உதவியாயிருந்ததென்றார். மரபுவழி ஓவியரான கங்காதரன் கொழும்பு தொழில்நுடு;பக் கல்லூரியல் பயின்றவர். திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் சிறிதுகாலம் கைப்பணிப் போதானசிரியராகக் கடமையாற்றிய இவர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பதவியைத் துறந்து தொழில்முறைக் கலைஞராக வாழ்ந்தவர். தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைக்ள, கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக் கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோதிபாயத் தொழிலாகக் கொண்டதால் ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை. கோப்பாய் கந்தசுவாமி கோயில், நீர்வேலி கந்தசுவாமி கோயில் தேர்மூட்டி நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கோபுரவாயில், தேர்முட்டிக்கருகாமையில் உள்ளமடம் என்பவற்றிலுள்ள சுவரோவியங்கள் இவரால் வரையப்பட்டவை. வரைதலில் கங்காதரனிற்குரிய திறமை எஸ். ஆர். கே. யினால் மிகவும் மதிக்கப்பட்டது. எஸ். ஆர், கே தனது ஊர்க் கோயிலான கோப்பாய்க் கந்தசுவாமி கோயிலில் இவரைக் கொண்டே ஓவியங்களை வரைவித்தார். கண்ணாடி ஓவியங்களே கங்காதரனிற்குப் புகழ்தேடிக் கொடுத்தன. ஒரு கண்ணாடி ஓவியமும் மூன்று ரேகைச் சித்திரங்களும் பார்வைக்குக் கிடைத்தன. பார்வைக்குக் கிடைத்த ஓவியங்களில் அலங்காரப் பண்பு மேலொங்கிக் காணப்படுகிறது. இறைவனின் திருவுருவங்களை அலங்காரம் நிறைந்ததாகக் காண்பதே மரபு. ஓவியமாயினும் அலங்காரப் பொலிவு பெற்றிருக்கும். பார்வைக்கு கிடைத்த விநாயகர், சிவன், பார்வதி, திருமால் என்ற ரேகைச் சித்திரங்கள் மூன்றும் மிகவும் பிற்காலத்துக்குரியது நோயுற்று வைத்தியாசலையில் இருந்த பொழுது வேதனையைப் போக்கடிப்பதற்காக இவை வரையபட்டனவென்றும் வர்ணங்களைப் பயன்படுத்தும் மனோநிலை அப்பொழுது தனக்கிருக்கவிலையென்றும் கூறினார். கொழும்பு கலா பவனத்தில் இவரது விநாயகர் திருவுருவ திரைச்சீலையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளதாம். வணிக நோக்கில் எமது கலைகள் தம் தெய்வீக தன்மையை இழந்து விட்டன. தென்னிந்திய சினிமா நடிகைகளை காட்டுருக்களாகப் பயன்படுத்தி, இலட்சசுமி, சரஸ்வதி போன்ற தெய்வங்களை வரையுமளவிற்கு எமது கலைகளின் தரம் கீழிறங்கி கலைமரபில் அதற்கென தனித்துவமான பாணியுன்டு. அதனை நாம் பேணுதல் வேண்டுமென்கிறார்.இவரது ஓவியங்களில் எமதுகலைமரபு புத்துயிர்ப்பு பெறுகின்றது. பரம்பரை பரம்பரையாகத் தந்தை - தனயன் என்ற வரன்முறையில் இயல்பாகவே இவ்வோவியத் திறமை வளர்நதெடுக்கப்பட்டுள்ளது. ஷஷஉணவோடும் - பார்வையோடும் பார்வையிலும் - படுக்கையிலும் வளர்த்தெடுக்கப்பட்டதே இக்கலை|| யெ கங்காதரன் குறிப்பிட்டார். ஷஷஎடுத்தவுடன் தன்னிச்சையாக வரையும் வல்லமை உடையவரே உண்மைக் கலைஞன் என்றும், பார்த்து வரைவது கலையல்ல, அவ்வாறு வரைபவன் கலைஞனுமல்ல|| என்கிறார். கலைஞனின் இயல்பைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவனுக்குப் பரிசுத்தமான இதயம் அவசியமென்கிறார். கலை சமயத்தோடும் இறைவனோடும் தொடர்புடையது. கலைஞனின் மனத்திலிருந்தே அது பிறக்கிறதென்பது இவரின் அபிப்பிராயம் உண்மையான கலைக்கு மக்கள் வணக்கம் செய்தல் வேண்டும். மனிதரைப் பொருளாளக் கொண்ட சித்திரங்கள் மக்களின் வணக்கத்தைப் பெறுவதில்லை. இதனால் ஷஷமனிதரை நான் ஓவியமாக வரைவதில்i|| என்கிறார். கலை ஆன்மீகத்திற்குரியது. உலகியலிற்கல்ல, கலாரசனை என்பது பக்திச் சுவையே. ஆன்மீக நிலைப்பட்ட கலையாளுமையினால் கலைஞன் மற்றவர்களைத் தன்பால் ஈர்க்கிறான் எனக் கருதும் கங்காதரன் மரபு வழி ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற சமகாலக் கலைஞர்களில் முதலிடம் பெறுகின்றார்.
Copyright © 2013 - All Rights Reserved - Department of Computer Science, Faculty of Science, University of Jaffna