Tamil Digitization Project

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

உரை விளக்கக் குறிப்பின் முகவுரை

   தொல்காப்பியச்  சொல்லதிகாரத்துச்குப்  பலஉரைகளுளவாயினும், அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்கமுறையாகத்தெரிந்துணர்த்துவதினானும், தெளிவும் இன்பமும் பயக்கும் வாக்கிய நடையையுடைமையானும் ஆசிரியர் சூத்திரப்போக்கினையும் வடமொழி தென்மொழி என்னும்  இருமொழி வழக்கினையும் நன்குணர்ந்து தென்மொழி வழக்கொடு மாறுபடாவண்ணம் வடமொழிவழக்கினையுங்கொண்டு பொருளுரைத்தலினானும் தலைசிறந்துவிளங்குவது சேனாவரையருரையே. பிறருரைகளினும் சிற்சில நயங்கள் காணப்படினும் இதுவே பற்பல நயம்படைத்துள்ளது. ஆதலாற்றுன்அக்காலந்தொட்டு இதனைப்பலரும் போற்றிப் படித்து வந்தனர். யாம் நல்லூர் வித்துவசிரோமணி, ஸ்ரீமான், ச.பொன்னம்பலப்பிள்ளையவர்களிடம் படாங்கேட்டகாலத்தில் இதன் கண்ணேயே எமக்கு அதிகம் உள்ளஞ் சென்றது.

   இவ்வுரையை, திரிபாஷாவிற்பன்னரும், ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச்சங்க ஸ்தாபகரும், வித்தியாதரிசியுமாய பிரமஸ்ரீதி,சதாசிவஐயரவர்களால் சுன்னாகத்தில் தாபிக்கப்பட்ட பிராசீன பாடசாலையைிலே பண்டிதவகுப்பு மாணவர்களுக்குப் பதினைந்து வருடகாலம் படிப்பித்து வந்துள்ளோம். படிப்பிக்கும்போதே பலர்க்கும் பயனாகு மென்று கருதி இவ்வுரைவிளக்கக்குறிப்புக்களை ஆராய்ந்து எழுதிவைத்தோம். எழுதுங்காலத்து நேர்ந்த சில சந்தேகங்களை சுன்னாகம் ஸ்ரீமான் அ.குமாரசுவாமிப்புலவரர்களிடங்கேட்டறிந்துள்ளேம்.

   1937ம் ஆண்டில், எழுத்ததிகார நச்சினார்கினியருரை  விளக்கக்குறிப்புக்களையச்சிட்ட பின் “ஈழகேசரி” ,பத்திராதிபர் ஸ்ரீமான் நா.பொன்னையபிள்ளையவர்கள் சேனாவரையருரையையும் விளக்கக்குறிப்புக்களோடு தாங்களே யச்சிட்டு வெளிப்படுத்தின் ஆறு படிப்போர்க்குப் பெருநன்மை ஆகும் என்றும், அச்சிடுதற்கு யாம் பேருதவிசெய்வேமென்றுங் கூறினார்கள். அவர்கள் கருத்தின்படி அச்சிடவிரும்பியாம் முன் எழுதிவைத்த அக்குறிப்புகளை மீளவும் ஆராய்ந்து திருத்தி அவர்களிடம் பதிப்பிக்கும்படி கொடுத்தேம்,

   இப்பதிப்புக்குரிய மூலமும் உரையும் ஸ்ரீலஸ்ரீஆறுமுக நாவலர்களால் பரிசோதிக்கப்பெற்று, ராவ்பகதூர்  சி.வை.தாமோதரம்பிள்ளையவர்களால் பதிப்பிக்கப் பெற்ற பதிப்பைப் பெரும்பாலுக் தழுவிப் பதிப்பிக்கப்பட்டன. பதிப்பிக்கும் போது சில பாடங்கள் பிரதிகள்  நோக்கித் திருத்தப்பட்டுள்ளன. பெயரியல் கஅ-ம் சூத்திரத்துள், ‘வினையோடல்ல‘ தென்ற தலையையுடை.ய வாக்கியத்தினும், வினையியல், .ஙஎ-ம் சூத்திரத்துள் அஃறிணைக்குறிப்பு‘ என்ற தலையையுடைய வாக்கியத்தினும், எச்சவியல் கஅ-ம் சூத்திரத்துள், ‘உவம உருபு ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் இடைச்சொல்லாகலான்! என்ற வாக்கியத்தினும் எங்கருத்தின்படி சில திருத்தங்சுள் குறிப்புட்காட்டியுள்ளேம். அவைகளுந் திருத்தமுற்றனவோ?அல்லவோ? என்பதை அறிஞர்கள் நாடியுணர்வார்களாக. குறிப்புள்  விளக்கப்படாதன சிலஅரும்பத விளக்கம் முதலியன என்பதன் கண்ணும் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டு நோக்கி உணர்க.
 
   இன்னும் “பெயரினாகிய தொகையுமாருளவே” என்னுந் தலையையுடைய சூத்திரத்துள், ‘தொனகயும்‘ என்பதிலுள்ள உம்மைக்குச் சேனாவரையர் கொண்ட பொருளே பொருத்த முடையதெனவும், “ஒருவரைக்கூ.றும் பன்மைக்கிளவி என்னுஞ் சூத்திர உரையுள், ‘தாம் வந்தார் தொண்டனார்‘ , என்னும் உதாரணத்தில் ‘தாம் வந்தார்‘ என்பதே ஓருவரைக்கூ.றும் பன்மைக்கிளவிக்  குதாரணமெனவும் ‘தொண்டனார்‘ என்பது இயற்பெயர் ஆரைக்கிளவி பெற்றுவந்த தெனவும் ஆசிரியர், ”இரண்டாகுவதே- ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி”என அனுவதித்தது, பெற்றதன் பெயர்த்துரைக்குரிய பொருள்களிரண்டனுள் நியமித்தலில் வராது பிறிதொன்றுபெறுதலில் வந்ததெனவும், “இறுதியுமிடையும்” என்னுந் தலையையுடை.ய சூத்திரத்துக்கும், “ஐயுங் கண்ணும்,” என்னுந் தலையையுனடய சூத்திரத்துக்கும் “பிறிது பிறிதேற்றலும்” என்னுந் தலையையுடைய சூத்திரத்துக்கும்இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்னும் மூவரும் ஒரே கருத்தாகக் கொண்டபொருளே பொருத்தமுடையதெனவும், நும் என்பது நீயிர்எனத் திரிந்தது என எழுத்ததிகராத்திற் கூறிய ஆசிரியர், இவ்வதிகாரத்தில் ‘எல்லாம் நீயிர்நீ‘ என இயற்கைப் பெயரோடு நீயிரையுஞ் சேர்த்துக் கூறினமையின் நீயிர் என்பதே நும் என திரிந்து எனக் கோடலும் அவர்க்குக் கருத்து எனச் சேனாவாரையர் கூறியதுபோல, யாமும் வினையியல் சுகூ.ம் சூத்திரக் குறிப்புள் உண்குவ என்னும் உதாரணத்தில் அகரம் விகுதியெனக் கொள்ளாது, வகர அகரத்தை விகுதியெனக் கொண்ட ஆசிரியர் ‘உன்குவம்‘ என்பதில் வம் என்பதை விகுதி எனக்கொள்ளாது ‘அம்‘ என்பனத விகுதியெனக் கொண்டமையின் உண்குவ என்பதினும் அகரமாகவுங் கொண்டு அகர வீற்றினுள் அடக்கலாமென்பதும் கருத்தாகும்எனவும் கூறியுள்ளாம்.  இவறறின் பொருத்தங்களையும் ஆராய்ந்து உணர்ந்து கொள்க.சேனாவரையர் உன்குவ என்பது அன் பெறாமையால் வகரமாகக் கொள்ளப்பட்டது என்றனர்.உண்குவம் என்பதும் உண்குவனம் என அன் பெறுதற் கேலாமை காண்க.
 
   யாம் இவற்னற அச்சிடக்கொடுக்குமுன் எமக்குத் துணையாயிருந்து மிக நுட்பமாக இவற்றைப் படித்துப் பரர்த்து நேர்ந்த பிழைகளை எமக்கு அறிவித்துஞ் சில திருத்தியும், அவசியமன்றென எம்மால் விளக்காது விடப்பட்டவற்றுள் மாணாக்கருக்கு விளங்காவென்று கண்டன சில தாமும் விளக்கியும் பலவாறு துணைபுரிந்த திருநெல்வேலி ஆசிரிய கலாசாலைத் தமிழாசிரியரும், எம் ஆசிரியருளொருவராகிய சுன்னாகம்அ.குமாரசுவாமிப்புலவரவர்களிடங் கற்று விற்பத்திமானாய் விளங்குபவருமாகிய பன்டிதர் ஸ்ரீமான் சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு யாஞ் செய்யக்கிடந்த கடப்பாடு யாதென அறியேம்.அவர்களூடைய நற்சிந்தையும் நுண்ணறிவும் எம்மால் என்றும் பாராட்டப்படத்தக்கன.
 
   இன்னும் பிள்ளையர்கள் இவ்வுரைவிளக்கக் குறிப்பை யச்சிட்டு வெளிப்படுத்துவிக்க வேண்டுமென்னும் அவாவினால் தமது நண்பர்களானும், மாணாக்கர்களானும் அவரவர்க்கியன்ற பொருளும் உ.பகரிப்பித்தார்கள். உபசரிப்பித்த  அவர்களுடைய தமிழ்ப்பற்றும் நற்சிந்தையும் எவர்க்கும் பெறலரியவாகும்.
 
   இவ்வுரைவிளக்கக் குறிப்னப அச்சிடுதற்கு உதவியாக வடமொழி தென்மொழிப் பயிற்சியுடையவரும், சைவாகம போதகரும், திருநெல்வேலிச் சிவன்கோயிலருச்சகரும் தமிழ்ப்பற்றுடையவருமாய் விளங்கும் பிரமஸ்ரீ. சி.சபாபதிகுருக்களவர்களும் அதிக உவப்போடும் ரூபா ஐம்பது உபகரித்தார்கள்.குருக்களவர்கள் செய்த பேருபகாரம் என்றும் எம்மாற் போற்றற்பாலதாகும்.
 
   இன்னும் இக்குறிப்பை யான் அச்சிடற்குதவியாக யாழ்ப்பாணத்திலுள்ள அரசாங்க உத்தியோகஸ்தர் சிலரும் ஆசிரியர்கள் பலரும் தத்தமக்கியன்ற பொருளை உபகரித்தார்கள்.அவர்களுள்ளும் விசேடமாக, தென்மயிலை சேவையர் ஸ்ரீமான் க.சின்னப்பு அவர்கள் ரூபா இருபத்தைந்தும், அளவெட்டி ஸ்ரீமான் பொ.அருணாச்சல ஆசிரியர் அவர்கள் ரூபாஇருபத்தைந்தும் உதவிபுரிந்தார்கள்.பொருளுதவி செய்த ஏனையோர் பெயர்கள் பின்னர்க்காட்டப்படும்.இவர்களுக்கெல்லாம் எம்நன்றிஉரியதாகுக.
 
   இக்குறிப்பை அச்சிடற்கு மேலே காட்டப்பட்டவர்களுதவிய பொருளொழிய ஒழிந்தபொருளெல்லாம் ‘ஈழகேசரி‘ப்பத்திராதிபர் ஸ்ரீமான்.நா.பொன்னையபிள்ளை அவர்களே உதவிப் பதிப்பித்தார்கள்.அவர்கள் செய்த பேருதவி எவர்களாலும் பாராட்டப் படத்தக்கதேயாம்.
 
   இன்னும்,  இக்குறிப்புக்களைப் படித்துப் பார்த்துச் சில திருத்தமுங் காட்டி அன்போடு சிறப்புப்பாயிரமுதவியவர்களாகிய, ‘உயிரிளங்குமரன் நாடக .ஆசிரியரும் கலாவிற்பன்னரும் கவிஞருமாய்  விளங்கும் நாவாலியூர்  ச. சோமசுந்தரப்புலவ ரவர்களுக்கும்சுன்னாகம் அ.குமாரசுவரமிப்புலவரலர்களிடம்  கற்றுவிற்பத்திமானாய் விளங்குபவரும், கொழும்புநகர் அரசினர் கல்லூரித் தமிழாசிரிபிரியராயிருந்தவரும், உண்மை முத்திநிலை இதுவென நாட்டும் ‘வித்தக‘ ப்பத்திராசிரியருமாகிய பண்டிதர் ஸ்ரீமான் ச. கந்தையபிள்ளை அவர்களுக்கும், மட்டுவில் ஆசிரியர் க. வேற்பிள்ளையவர்க்குளப்புதல்வரும் மாணாக்கரும் விற்பத்திமானும் கோப்பாய் அரசினர்ஆசிரியகல்லூரி தமிழாசிரியருமாகிய பண்டிதர் ஸ்ரீமான்மகாலிங்கசிவம் அவர்களுக்கும் எமது பேரன்பு உரியதாகுக.
 
   இன்னும் திருநெல்வேலிப் பரமேசுவரக் கல்லூரிச்சமஸ்கிருத பண்டிதரும், வேதவிசாரதருமாகிய பிரமஸ்ரீ.வி.சிதம்பரசாஸ்திரிகளும், யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி தமிழ்ப்பண்டிதரும், வியாகரண மகோபாத்தியாயருமாகிய பிரம்மஸ்ரீ.வை. இராமசாமி சா்மாஅவர்களும்  வரும் ஆராய்ச்சிகளின் பொருட்டு வட. மொழியில் அறியவேண்டியவற்றிற்கு உதவி  செய்ததுமன்றிச் சர்மா அவர்கள் சில திருத்தமுங் காண்பித்தனர். அவ்விருவர்க்கும் எமது அன்பரர்ந்த வணக்கம் உரியதாகுக.
 
   இவ்விளக்கவுரைக் குறிப்புக்களைப் பினழகள் நேராவண்ணம் அச்சிடுதற்கு ஏற்றவாறு நன்கிதாக எழுதியும், உதாரண அகராதி விசய அகராதி முதலியவற்றை எழுதியுமுதவிய எம் மாணவர்களுக்கும் எமது பேரன்பு உரியதாகுக.
 
   யாமெழுதிய இக்குறிப்புக்களெல்லாந் , திருத்தமுடையன வென்று எம்மாற் சொல்லுதல் கூடாது. ஏனெனில், முற்கணத்து எமக்குச் சரியாகத் தோன்றியதே பிற்கணத்துப் பிழையாகக் தோன்றுகின்றதாகலின். ஆதலரல் இவற்றுள்வரும் பிழைகளைப் பேரறிஞர்கள் திருத்திக் கொள்வார்களாக. அன்றியும் இவற்றுள் தாங்கண்ட பிழைகளைநேரே எமக்கு அறிவிப்பின் அவற்றை நோக்கிஉண்மையென்று கண்டவற்றை .அவர்கள் பெயருடனே இரண்டாவது பதிப்பில்வெளியிடுவோம். அதற்கு ஓருபோதும் நாணமாட்டேம்.ஏனெனில்,சிற்றறிவையே இயற்கையாகவுடைய மக்களுள் யாமும் ஒரு மோதலின். இன்னும் பிழைகளையறிவிக்குங்கால் இக்குறிப்புத்திருத்தமுற்றுத்தமிழ்மக்களுக்கு மரபு மரபாகப் பயன்படுமென்பதற்கு ஐயமேயில்லை.யாம் எழுதிய வாக்கியங்களிலே எமது தேக அசெளக்கியங் காரணமாகச் சில பிழைகள் நேர்ந்தன..அவற்றைப் பிழைதிருத்தத்திற் காண்பித்துள்ளேன். அத்திருத்தங்களை நோக்கிதிருத்திப் படித்துக் கொள்ளுமாறும், இன்னும் வரும் பினழகளைத் திருத்திப் படித்துக் கொள்ளுமாறும் அறிஞர்களை வேண்டிக்கொள்கின்றோம்.
 
   யாம் எழுதிய வாக்கியங்களிலே எமது தேக அசெளக்கியங் காரணமாகச் சில பிழைகள் நேர்ந்தன..அவற்றைப் பிழைதிருத்தத்திற் காண்பித்துள்ளேன். அத்திருத்தங்களை நோக்கிதிருத்திப் படித்துக் கொள்ளுமாறும், இன்னும் வரும் பினழகளைத் திருத்திப் படித்துக் கொள்ளுமாறும் அறிஞர்களை வேண்டிக்கொள்கின்றோம்.
 
“குணநாடிக் குற்றமு நாடி. யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்”
 
   இக்கருமத்தைக் குறையின்றி முற்றுமாறு அருள்செய்த எங்குருபரனாக விளங்கும் விநாயகப்பெருமாள் திருவடியை மனத்துள் நிறுவி வாழ்த்தி வணங்குதும்.
 
இங்ஙனம்,
சி.கணேசையர்.

சிறப்புப் பாயிரம்

[“உயிரிளங்குமரன்”நாடக நூலாசிரியர் நவாலியூர், திரு. க. சோமசுந்தரப்புலவர் அவர்கள் இயற்றியது”]
 
      நேரிசையாசிரியப்பா
 
தேன்முகம் பிலிற்றுஞ் செய்யபங் கயத்து
நான்முக னறியா நளிர்மதிச் செஞ்சடை
வானக மகளிர் மங்கலங் காத்த
போனகம் பொதிந்த புதுமணிக் களத்துத்
திரிபுர மெரித்த வருடவழ் சிறுநகை
பெருமால் கொண்டு நெடுநில மகழ்ந்துந்
திருமால் காணுத் திருத்திய  சேவடித்
திலகவாணுதற் சேயிழைபகிர்ந்த
வுலகுபொதி யுருவத் துயர்ந்தோ னொருகால்
கடுக்கை மாற்றிக் கடிப்பகை சூடி
யானே றகற்றி மீனே றுயர்த்திச்
சடைமுடி மறைத்து மணிமுடி தாங்கி
யிடப்பாற்பிரிந்த மடக்கொடி யுடனே
யறப்பாற் றனியாசாண்டது மன்றி
யிருவினை துடைச்கு மெண்ணான் கிரட்டி
திருவிளை யாடல் செய்தருள் சிறப்பிற்
றிங்கட் டிருக்குலத் தென்னவன் சீர்பொலி
மங்கலப் பாண்டி வளநாடதனிடைத்
தொன்னாள்நிறுவிய துறைமலி சங்கத்
தந்நாள் வீற்றிருந்தாய்ந்திடு முதல்வன்
விந்தமுங் கடலு மேதக வொடுங்கச்
சுந்தரச் செங்கை துளக்கியவாய்மைச்
சந்தனப் பொதியத் தவமுனி தனுது
சாயா வாணைதலைத்தலை தாங்கிய
தேயா நல்லிசைச் சீடர்பன் னிருவருட்
பல்காப் பியக்கலைபழுநிய முதன்மைத்
தொல்காப் பியாருள் தொன்மைநன் னூற்கு
முற்படு ஞான முதுமொழி மெய்ந்நூல்
கற்பவை யெவையவை கற்றுணர்ந்தடங்கி
வளம்பூ ரித்த விளம்பூ ரணருங்
கச்சங் கடந்த கலைமலி காட்சி
நச்சினார்க் கினியரு நானில மருங்கி
னெழுத்துக் களித்த விழுப்பொரு ளவற்றுட்
பின்னவ ரெழுதிய பேருரை கற்புழி
மன்னிய குறிஞ்சி மானென மரணவர்
நின்றிடர் கூரு நிலைமையைநோக்கிக்
கன்றினுக் கிரங்குந்தாயினிற் கசிந்து
நன்றவர் புலங்கொள நன்கன நாடி
யுரைக்குரை காட்டி நெறிப்பட விளக்கி
முன்னா ளுதவிய முறைபோ லிந்நா
ளானுச் செந்தமி ழாரிய நூற்கடல்
சேனு வரையர் செய்தசொல் லுரைக்குப்
பொய்யாப் புலமைப் பூரணர் நச்சரும்
ஐயமில் காட்சித் தெய்வச் சிலையரும்
பல்லோர் பழிச்சுங் கல்லானுரு
மருளிய நல்லூரைப் பொருளொடு பொருந்த
முன்னூ னவின்ற முறையினாராய்ந்தே
யிடர்ப்பா டகற்றிப் புலப்படு நீர்மையின்
மன்னிய தமிழக வடதென் மருங்கிற்
பன்னூ னுளித்துப் பயனறி புலவரு
மிந்நாட் பிணங்கு மிலக்கண நுண்பொரு
ளொருதலை துணிய விரிவுற விளக்குழித்
தன்கோ ணிறுத்திப் பிறன்கோன் மறுத்துக்
‘கடலமு தெடுத்துக் கரையில்வைத் ததுபோ‘ற்
சங்கச் செய்யுள் மேற்கோள் காட்டி.
அன்பா லறிஞர்க ளனைவரு மியாண்டும்
பொன்போற் போற்றும் புத்துரை யாத்ததை
யெழுதா வெழுத்தி லெழிலுற வேற்றுவித்
தழியாப் பெருநிதி யாருயிர்க் கீந்தனன்
மணிநீ ரிலங்கையணியிழை தனாது
முழுமதி முகமென விழுமியோருரைக்குஞ்
சீரியாழ்ப் பாணத்துச் செந்தமிழ் மொழியு
மாரிய மொழியு மழகுடன் வாழ
வன்னக் கதலியு மாவும் பலாவுஞ்
செந்நெற் கழனியுஞ் சேர்ந்துதலைமயங்கிய
புன்னைமாநகரம் பொலியவங் குரித்தோன்
ஆசிக லறுத்த வருந்தவக் காட்சிக்
காசிப முனிவன்கால்வழி வந்தோன்
முந்நூல் மரர்பன் முதுமறை யந்தணன்
சின்னையக் குரிசில் செய்தவப் புதல்வன்
னசவமுந் தெய்வத் தமிழுநன் கோங்க
மெய்வளர் நல்லைமேவிய கலைக்கடல்
நாவலர் பெருமான் பாலுணர் மருமான்
பொன்னம் பலமெனும் புலவர் சிகாமணி
தன்னன் பகத்துத் தழைத்தமாணுக்கன்
தண்டாப் புலமை வண்டமி ழாசான
சுன்னைக் குமார சுவாமி தன் பாலு
மன்னிநின் றய்ந்து வளர்ந்த மாமணி
அரச கேசரி யாக்கியசெந்தமிழ்
இரகு வமிசத் தின்னுரை கண்டோன்
கோதிலா ஞானக் குசேலர்தங் காதையு
மோதிய புலவ ருயர்வர லாறு
முரைநடை காட்டிப் புரைதப வகுத்தோன்
ஆடகக் குடுமி மாடம .துரையி
னூன்காஞ் சங்கத்தோங்கிய புலவன்!
திங்க டோறு மங்கண் வெளிவரு
நந்தாச் சீர்த்திச் செந்தமிழ்த் தாளிற்
கூறிய சிறுபொழு தாறென நிறுவியு
மாறனு ருபுரு பேற்குமென் றமைத்து
மாகு பெயரு மன்மொழி தொகையும்
பாகுபா டறிகுபு பாரித்துவிளக்யு
நல்லுரை பலவரைசொல்லுரை யாளன்
ஏறியாழ் நகரி லிங்நாளிலங்கிடு
மாரிய திராவிட வலைக்களத் தறிஞன்
மேவுமைமம் மூன்று வவைக்களத்விரிந்த
காவியக் கழகக் கலைத்தலையாசான்
அவநெறி யகற்றுஞ் சிவநெறி யொழுக்கமு
மானடிப் பற்று மடியவர்க் கன்பும்
புலனெறி யடக்கமும் பொருந்திய புண்ணியன்
பூவல யத்துப் பொருளறி புலவர்
நாவினும் பாவினு நாடொறு நவிலுங்
கற்புறு கணேசைய னென்னு
மற்புத நாமத் தருந்தவத் தோனே
 
 
[“வித்தக” ப் பத்திராசியர் தென்கோவை, பண்டிதர் ச.கந்தையபிள்ளையவர்கள் இயற்றியது]
 
    ஆசிரியப்பா
 
பூநீர் தீவளி வானெனப் புகலும்
ஐந்திணை மயக்கா னமைந்ததிவ்வுலகே!
ஓங்காரி யான வுமையவ ளன்றே
ஆங்காரி யாகி ஐவரைப் பெற்றனள்!
“அந்தணர் மறை” யெனு மரியதத்துவமாய்
வியாப்பிய மாகிமேவுமா ரியமாம்
மகாரத்து நின்று விசர்க்கமென மரீஇ
மாவென விரிந்து மலர்ந்தவிப் பவஞ்சம்
சொற்பொருள் வடிவாய்த் துலங்கிடு மன்றே!
வியாப்பிய ஆரியங் கெளணமாய் மேவிட
வியாபகமாகி மிளிருமற் றிதுவே
தமிழ்எனச் சாற்றினர் தத்துவப் பெரியார்
இயற்கைநன் னெறியா வியம்புகுரு நெறியால்
நிறைமுறைதழீஇ நின்றுழி யிபிவே
அமீழ்த மாகி யமைதரு மன்றே!
தமிழ்அமிழ் தேயெனச் சாற்றுபொரு ளிதுவே!
ஒலிகட் கெல்லா மொருபிறப் பிடமாய்
நாத பீடமெனும் வேத வந்தமாய்
அன்னதை யணவு மாரிடர் தம்மால்
அறிந்திடுமறையாய்ச் செறிந்துள தடமாம்
“அந்தணர் மறை” யை யநுபவத்துணர்ந்து
வேதவந்தமாய் விளங்குமெய் யீறும்
சித்தி னந்தமெனத் திகழுயி ரீறும்
சமரச மாகத் தமிழையமிழ்தாக்கி
வேதாந்தசித்தாந்தசமரச மிளிர்தா
.அமிழ்த வடிவென வருமறை முழங்கும்
முன்னிலைப் பிரமந் தன்னிலையாக
ரித்தியம் பெறீஇய தத்துவப் பெரியாம்
அகத்தியர் அனைய வருந்தவச் சித்தரே!
வியாப்பியம் பிரதமகலையென மேவ
.உபய கலையா யொலிவரிவடிவாய்
வியாபக மாகிவிளங்குதமிழ் கண்டு
எழுத்துச் சொற்பொரு ளியலுற வுணர்தோர்!
.ஆதலி னன்றே, மேதகு புலவனும்
.ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனும்
எழுத்தி னிலக்கணம் வழுத்தப வுணர்த்துதல்
தனக்கிய லாதெனத் தன்மதிப் பொலிவால்
“அந்நணர் மறைத்தே!,யென் றமைந்தனன் மன்னே!
“மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்ற” வென
உரைத்தது மீங்கிதற் குறுசான் றுமே!
எல்லாச் சொல்லும் பொருளுடைத் தெனினும்
வாய்மையின் போலி யானிமென் னிடலால்
வாய்மையின் பெயரே போலியும் பெறலால்
மாயையினீர்மையு மதுவா தவினால்
மாவெனப் பூத்த ஐயெனு மாயையின்
மாழாந்துநாளும் வருந்துபு மாளும்
சீவர்கள் வாய்மையின் றிறன் றெரிகிலரே!
எழுத்தியலதனிற் பழுத்தநல் லறிவால்
மெய்யுயிரொருமை கைவரத் தெரித்தே
ஏனைய வோத்தினும் யாமினி துணா
இந்துமத வுண்மை யியல்பெற வுணர்த்திய
புலவன் மாண்பு புகலவும் படுமோ!
இன்னனவேத, வுண்மைகள் மலிந்தவித்
தொல்காப் பியமெனுந்தொல்லிய னூலுக்
குலகியற் கொப்பக் குலவுநல் லுரைகள்
கண்டனர் பலரே! பண்டைய விந்நூற்
சொல்லதிகாரக் கொல்லும்வகையால்
சேனு வரையனுர் செய்திடு முரையே
திட்ப நுட்பந்திகழுநன்னடையான்
இயன்றதெனப் போற்றுவ ரியற்றமிழ் வாணர்!
அன்னபே ருரையி லமைந்தநுண்பொருளை
மயக்கமற விளக்கி மற்றையோருரைகளும்
ஒப்பு நோக்கிவிகற்பமு முணர்த்தி
ஓருதலைதுணிந்துந் தன்மத நிறுவியும்
குறிப்புரை யறிஞர் குறிக்கொவரைந்தே
மாணவர் குழாமு மருவுமா சிரியரும்
யாவரு மெளிதி னுணர்தர விரிவான்
உதவிய புலவ னுவன்யா ரெனினே!
புனிதஐ இலங்கும் புகலிடந் தெரிக்கும்
இலங்கைப் பெயரிய வீழமண் டலத்தின்
சிரமெனத் திழ்ந்துபரவுசெந்தமிழின்
யாணரறதயாழ்ப் பாணமாச் தேத்துப்
புன்னையம் பதியினன் மன்னிய காசிப
கோத்திரத்துதித்த குலநல முடையோன்
இத்தலம் புகழும் வித்துவன் மணிகளாம்
நல்லூர் ஆறுமுக நாவலன் மருகன்
பொன்னம் பலவனும் புலவன் பாங்கரும்
என்போல் வார்பலர்க் வியற்றமிழ்க்குரிசில்
சுன்னைக்குமாரசுவாமிப் புலவனும்
தோன்றறன்பாங்கருந் தொன்மைசா லிலக்கண
இலக்கிய நூல்பல வினிதுகற் றுணர்ந்தோன்
தொல்காப் பியமுந் தொல்காப் பியங்களும்
மாணவர் பலர்ச்கு வரன்முறை பயிற்றிய
பீடுசா லநுபவப் பெற்றிகை வந்தோன்
இலக்கண வுண்ர்ச்சியி னித்தமி ழகத்தே
இணையிலாதுயர்ந்த வியற்றமிழ்க் குரிசில்
தமிழொடு சமக்கிருத சாகராங் கடந்த
புரசைமால்களிற் றரசகே சரியெனும்
அரசிளங் குமர னமைத்தகாப் பியமாம்
இரகுவம் மிசத்துக் குரைகண்ட விபுதன்
மதுரைச் சங்க மருவுசங் கியையாம்
“செந்தமிழ்” இதழிலுந் திருநந்தியாணையால்
புதுவையிற்றேன்றிப் புராதனசைவ
முத்திநிலை நாட்டும் “வித்தக” விதழிலும்
தமிழறி வோங்கத் தன்மதிப்பொலிவால்
கட்டுரைவரைந்தகல்வியாளன்
என்பா னண்பு பண்புறக் கொன்டோன்
விழுப்பமார் குணனு மொழுக்கமு மமைந்து
முத்தி வாயிலென வேதநூன் முழங்கும்
விக்கிநவிநாயகவிழுப்பே றளிக்கும்
கணேச னடிமலர் கனவினு மறவாக்
கணேசையப் பெயர்கொளு!ங் கவிஞ ரேறே
இன்னகுறிப் புரையோ டிந்நூ லுரையினை
எழிலுற வச்சிட் டியாவர்க்கு முதவும்
“ஈழ கேசரி” யிதழுக் கதிபனும்
பொன்னைய நாமன் புகழுமருங் குரைத்தே!
 
 
[கோப்பாய் அரசினர் ஆசிரிய கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் மட்டுவில்  பண்டிதர் திரு.வே.மஹாலிங்சிவம் அவர்கள் இயற்றியது]
 
       பதினுன்குசீராசிரியவிருத்தம்
 
மணிவளர் மிடற்றுச் கடவுள்பொன் னடியை
மறக்கலாக் காசிப முனிவன்
வழிவரு புனிதச் சின்னைய சுகுணன்
வளர்தவச் தருள்புரி மறையோன்
அணிவளர் தமிழ்நூற் பரப்பெலாங் குசைநுண்
மதியினுனுய்ந்தமிழ் தெனவே
அருந்தமிழ்ப் புலவோர்விருந்தென நுகர
வளவிலாப் பொருளுரை வரைந்தோன்
நணிவளர் புலமை யீழநாட் டறிஞர்
நமக்கொரு நாயக மெனவே
நயந்தினிதேத்தும் பருணித கணேச
ஞானசூ ரியனிலக் கணநூற்
றுணிவளர் தருதொல் காப்பிய வுரையிற்
றுறுமுநுண் பொருளிரு ளகன்று
துலங்குற விளக்கிச் செம்மைசெய் தனன்போன்
னையனுந் தோன்றல்வேண் டிடவே

தொல்காப்பியத்தின் தொன்மை

    தொல்காப்பியமெனப் பெயரிய இவ்விலக்கணநூல் தமிழிலே மிகப் பழைமை பொருந்தியதொரு நூலாகும்.இதுமுதற்சங்கத்திறுதியிலே செய்யப்பட்டு இடைச் சங்கத்திற்கும் கடைச் சங்கத்திற்கும் இலக்கணமாகவமைந்தது என்பர்.முதற் சங்க கால நூல்களாய்க் கடல்கொள்ளாத எஞ்சிக் கிடந்தவற்றுள் இஃதொன்றுமே இப்பொழுதும் வழங்குவது.இந்நுாலை இயற்றினார் அகத்தியரின் முதன் மாணாக்கராகிய தொல்காப்பியனாராவர்.தொல்காப்பியனார் அகத்தியரின் முதன் மாணாக்கரென்பது,
 
“பூமலி நாவன் மாமலைச் சென்னி
ஈண்டிய விமையோர் வேண்டலிற் போந்து
குடங்கையின்விந்த நெடுங்கிரி மிகைதீர்த்
தலைகட லடக்கி மலயத்திருந்த
இருந்தவன் றன்பா லியற்றமி முணர்ந்த
புலவர்பன் னிருவருட் டலைவ னுகிய
தொல் காப்பியன்”
 
    என அகப்பொருள் விளக்க நூலார் கூறுமாற்றானும் அகத்தியர் தென்றிசைக்கு வரும்போதே தொல்காப்பியரை(திரணதூமாக்கினியாரை)ச் சமதக்கினிமுனிபாற் பெற்றுவந்தாரென்று தொல்காப்பியப் பாயிரத்துள் நச்சினார்க்கினியர் கூறுதலானும் அறியப்படும். இராமபிரானாலே சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட அனுமன் முதலிய குரக்குவீரர் தென்றிசை நோக்கிச்செல்லுங்கால் பாண்டிநாட்டில் இடைச்சங்க மிருந்த கபாடபுரத்தையுங் கண்டு போனாரென்று வான்மீக ராமாயணங் கூறுதலானும், இடைச்சங்கமிருந்துதமிழாராய்ந்தார்.அகத்தியனுருந் தொல்காப்பியனாரும் முதலாயினார் என்று நூல்கள் கூறுதலினானும், இராமர் காலத்துக்கு முன்னுமிருந்த பரசுராமர் சமதக் கனியி்ன் புதல்வரென்று நூல்கள் கூறுதலானும், தொல்காப்பியரும் சமதக்கினி புதல்வரென்று தொல்காப்பியப்பாயிரங் கூறிதலினானும் தொல்காப்பியர் இராமர்காலத்திற்கு முந்தியேயிருங்தவர் என்பது துணிபாகும்.சோழவந்தான் அரசஞ் சண்முகனார் தமது சண்முகவிருத்தியுள் “இந்நூலை அதங்கோட்டாசிரியற்குக் காட்டிய காலம் வரையறையா னித்துணைத்தென வறியப் படாவிடினும் பாண்டியநாட்டைக் கடல்கொள்ளுமுன்னர்த் தென்மதுரையில் அரங்கேற்றப்பட்டமையானும் அந்நாட்டைக் கடல் கொண்ட பின்னர்க்கடாபுரத்துச் சங்கமிருந்தகாலத்தே இராமனிலங்கை சென்றமையானும் அவன் காலத்துக்கு முன் என்பது தேற்றமாகலீன்” என்.று கூறிப்போதல் காண்க. இதனால் தமிழர்களுடைப கணிதப்படி தொல்காப்பியஞ் செய்யப்பட்டுப் பலஆயீரமாண்டுகள் சென்றன என.று சொல்லலாம். தொல்காப்பியரைப் பற்றிய உண்மைச் சரிதங்கள் கிடையாமையினாலே அவர் காலத்தை வரையறுக்க முடியவில்லை.இக்காலத்தில் சரித்திர ஆராய்ச்சியாளர் தமிழர்களுனடய கணிதங்களைப்புக்கொள்கின்றிலர்.
 
    தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத்தாமே முதலில் அச்சிட்ட ராவ்பகதூர் சி.வை.தமோதரம்பிள்ளை அவர்கள் தாமெழுதியதொல்காப்பியப் பொருளதிகாரமுகவுரையுள் தொல்காப்பியம் செய்யப்பட்ட காலம் பன்னீராயிரண்டுகள்வரை ஆகும் என்றுஎழுதியுள்ளரர்கள்.மானிப்பாய் .ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையர்கள் தமது அபிதானகோச மென்னு நூலுள் “இதுவே தலைச்சங்கமாகநெடுங்காலம் நிலைபெற்று வரும்போதுஅதற்கிடமாயிருந்த தென்மதுரை கடல் கொள்ளப்பட்டகழிந்தது. இதுமாத்திரமன்று, குமரியாற்றின் றெற்கே நாற்பத்தொன்பது நாடுகள் கடலாற் கொள்ளப்பட்டன.இப்பெரும் பிரளயம் வந்த காலத்தை ஆராயுமிடத்துஅது துவாபர கலியுகசந்தியாதல் வேண்டும். யுக சந்தியாவது யுக முடிவுக்கு ஐயாயீரமறாயிரம் வருஷ முண்டென்னு மளவிலுள்ள காலம்.ஒவ்வோர் யுக சந்தியிலும் பிரளயமொன்றுண்டாகுமென்பது புராண சம்மதம்.ஆகவே, தென்மதுரை அழிந்தகாலம் இன்றைக்குப் பன்னீராயிரம் வருஷங்களுக்கு முன்னராதல் வேண்டும். இன்றைக்கு 11481 வருஷங்களுக்கு முன்னர்  ஓரு பிரளயம் வந்துபோயதென்றும், அப்பிரளயத்தால் இப் பூமுகத்திலே சமுத்திர திரஞ் சார்ந்தநாடுகளெல்லாம் சிதைந்தும் திரிந்தும் பூர்வ ரூபம் பேதித்துத்தற்காலத்துள்ள ரூபம் பெற்றனவென்றும், “போசிடோனிஸ்” முதலிய தீவுகள் சமுத்திரவாய்ப்பட்டழிந்ததும் அப் பிரளயத்தாலேயாம் என்றும் “அத்திலாந்தி” சரித்திர மெழுதிய ‘எல்லியட்‘ என்னும் பண்டிதர் கூறியதும் இதற்கோராதாரமாம்” என்று கூறினர்.
 
    இவர்கள் கூறுவதும் உன்மையன்றென மறுத்து இப்பொழுதுள்ள ஆராய்ச்சியாளர் சிலர் தொல்காப்பியர் காலம் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுவரையாகும் என்பாரும் நாலாயிரம் ஆண்டு வரை ஆகும் என்பாரும் இன்னும் பலபடக் கூறுவாருமாயினர். அவர்சள் அங்ஙனம் வரையறுத்தற்குக் காரணம், ஆரியருள் அகத்தியரே முதலில் தென்னாடு வந்தாரென்றும், அவர் வருதற்கு முன் ஒரு பூகம்பம் நடந்ததினால் கடல் வற்றியும் விந்தமலைகீழடங்கியும் விட்டமையினால்பூமி இப்போதிருக்கு நிலைக்கு வந்ததென்றும் அக்காலத்தேதான் அகத்தியர் தென்னாடு வந்தாரென்றும், கடல் வற்றியதையும் விந்தியமலை கீழடங்கியதையுமே, அகத்தியர் கடலைக் குடித்தாரென்றும், விந்தியமலை .அடக்கித்தென்னாடு வந்தாரென்றும் புராணகாரர் கூறியதென்றும் கருதினமையே ஆரியரும் தமிழரும் ஆகாயவிரதத்திற்சென்றார்கள்என்று புராணங் கூறியதை நம்பாத ஐரோப்பியர் இப்போது பல ஆகாய விமானங்சகளில் செல்லுகின்றார்களல்லவா?ஆகையால் புராணங் கூறும் ஏனைய சரிதங்களிள் உண்மைகளையும் அவர்கள் நம்புங் காலத்தை நாம் எதிர்பார்த்திருப்போமாக.
 
    இனிச் சிலர்‘ஐந்திர முணர்ந்த தொல்காப்பியன்‘ எனச் தொல்காப்பியப் பாயிரங் கூறலின், வியாகரண காலத்தை அடுத்தேதொல்காப்பியஞ் செய்திருக்க வேண்டுமென்பர். வியாகரண காலமென்று அவர் கருதுங் காலம் பாணினி வியாகரணமும் அதனுரைகளுமெழுந்து பிரசித்திபெற்ற காலத்தையே குறிக்குமன்றி ஐந்திரவியாகரண காலத்தைக் குறியாது.ஐந்திரவியாகரணத்தை இராமன் காலத்திருந்தஅனுமன் சூரியனிடம் கேட்டறிந்தானென்று இராமயணங் கூறுதலின் ஐந்திரவியாகரணம் மிகப் பழைமையுற்றது என்பது அறியப்படும்.
 
    “வேதமொருநாலுடன் விளங்கிய சடங்கமும் விரிந்தகலையும்
   ஓதநிலைவிதிமிசையேழுபரிபூணருணனூரவிரைதேர்
    மீதுசெலும் வெங்கதிர வன்றனாடயிந்திரவி யாகரணமும்
    ஓதியொரு நாளினினுணர்ந்தனனிம் மாருதியுயர்ந்தபுகழோய்”
 
என்பது இராமரயணம். அத்தகைய ஐந்திர வியாகரணத்னதயே இராமனுக்கு முன்னிருந்த தொல்காப்பியரு முணர்ந்தாராதலின், அது கொண்டு தொல்காப்பியர் வியாகரண காலத்தவராதலின் அவர் காலமும் அக்காலமேயென்று உணர்த்தல் கூடாது பாணினி காலம் கி. மு.900 ஆண்டுகளுக்குமுன் என்று சி.வீ.வைத்தியர் (எம். ஏ எல். எல். பி) என்பார் தமது வேதகால சமஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலில் கூறியிருக்கின்றார்.“ஜந்திர முணர்ந்த தொல்காப்பியன்” என்பதே பாணினி காலத்துச்கு மிக முந்தியிருந்தார் தொல்காப்பியர் என்பதை உணர்த்தும். ஆதலினாலும் தொல்காப்பியர் வியாகரண காலத்தவரல்ல ரென்பது துணியப்படும் என்க. கடைச்சங்கம் இருந்தே நாலாயிரம் ஆண்டு களுக்கு மேலாகின்!றன என்!று கூறுவாருமுண்,டு. இவற்றையெல் லாம் நாம்  ஆராய்ந்து துணிதல் முடியாதெனினும் தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்கு மிக முற்பட்ட பழையதொரு நூலாகும் என்பதை மாத்திரம் துணிந்து கூறலாம். என்னையெனின்? தொல்காப்பியர் .நூல்செய்த காலத்து வேதங்கள்! இருக்கு முதலி யனவல்ல, அவைவியாசராற் பிற்காலத்துப் பகுக்கப்பட்டன.என்று தொல்காப்பியப் பாயிரத்துள் நச்சினார்க்கினியர் கூறுவதினானும், தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட. சில சொற்களும் பொருள்களும் கடைச்சங்க நூல்களுக்கு முன்னேயே வழச்கில் வீழ்ந்தன என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறுதலினானும் என்க. தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட சில சொற் களும் பொருள்களும் வீழ்ந்தமையை இங்கே எடுத்துக்காட்டுதும்
 
எழுத்ததிகாரம் தொகைமரபில் வரும்,
        “சுட்டுமுத லாகிய விகாரவிறுதியும்
        எகர வினாவி னிகர விறுதியும்
        சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும்”
 
இதனை ஆங்கிலத்தினின்றும் பெயர்த்து உதவினார் வண்ணார்பண்ணை, ‘கலாநிலையம்‘, ஸ்ரீமான். K.நவரத்தினம்பிள்ளையவர்கள்
 
   என்னுஞ்  சூத்திரத்து சுட்டுமுத லிகரவிறுதிக்குக் காட்டிய அதோளி இதோளி உதோளி என்னு முதராணங்களுள் இதோளி (ஈதோளி)ஒழிந்தன கடைச்சங்க நூல்களுட் காணப்படாமையானும் சுட்டுச்சினைநீடியவையெ னிறுதிக்குரிய உதாரணங்களும் “அழனே புழனே” என்றுஞ் சூத்திர உதாரணங்களும் இறந்தன என்று “கடிசொல்லில்லைக் காலத்துப்படினே”என்னுஞ்  சூத்திரத்துஇளம்பூரணரும் மற்றைய உரையாசிரியர்களும் உரைத்தமையானும், பொருளதிகாரத்து களவியலில் வரும் 116-ம், 117-ம் சூத்திரங்களுள்ளும் சிலதுறைப்பொருள்களுக்கும், கற்பியலில் 146-ம், 165-ம், 179-ம் சூத்திரங்சுளுள்ளும் சில துறைப் பொருள்களுக்கும், உவம இயல் 31-.ம் சூத்திரத்துக்கும் உதராணமில்லை என்று நச்சினார்க்கினியர் முதலியோர் உரைத்தலினாலும் உணரப்படும். இன்னும் செய்யுளியலுள், “வஞ்சி மருங்கினு!மிறுதிநில்லா” என்னுஞ்  உரையுள் தேமா புளிமா என்னு நேரீற்று இயற் சீர் இரண்டும் வஞ்சிப்பாவினும் அடியீற்றனில்லாஎன்னு முரைய சிரியருரையே சூத்திகரப்போக்கிற் கேற்ற உரையாகவும், பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்  என்பதற்கு இறுதல் என்று பொருளுரைத்து, முதற்கண் தூங்கலோசைப்பட்டு நில்லா என்று கருத்துக்கொண்டு, ‘கொற்றக் கொடி உயரிய‘‘கன்றுங் கதவெறிந் தனவே‘ என உதாரணங் காட்டி, இவை தூங்கலோசைப்பட்டு நில்லாமை கண்டுகொள்க என்றும், இறுதியிலே “மண்டிணிந்த நிலனு, நிலனேந்திய விசும்பும், வீசும்புதைவரு வளியும், வளித்தலைஇய தீயும், தீமுரணிய் நீரும்” என அவ்விரு சீரும் பெரும்பான்மை வருதலின் இறுதியில் நில்லா என்று பொருள் கூறல் பொருந்தா என்றும் கூறுவர். ஆயின், கடைச் சங்க நூல்களுள் இறுதியில் வருதல்பற்றி  நில்லா என்பதற்கு அவ்வாறு மொரூள் கூறலினும் உதாரணமில்லைஎன்றலே பொருத்தமாம். கடைச்சங்க நூலுள் இறுதியில்  வருதலைக்காலத்துட்பட்டதெனலாம். ஆதலினானும், செய்யுளியல் .80-ம் சூத்திரஉரையுள் பேராசிரியர், “ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஓருகாலத்து வாராதாகலும் பொருள் வேறுபடுதலுமுடைய. அதொளி இதொளி உதொளி எனவுங் குயின் எனவும் நின்ற இவைஒருகாலத்துளவாகிஇக்காலத்திலவாயின. இவை முற்காலத்துளவென்பதே கொன்டு வீழ்ந்தகாலத்துஞ் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல்செய்த காலத்துளவாயினும் கடைச்சங்கத்தார் காலத்துவீழ்ந்தமையிற்பாட்டினுந்தொகையினும் .அவற்றைநாட்டிச்கொண்டு செய்யுள் செய்திலர்அவற்றுக்கு இது மரபிலக்கணமாகலி னென்பது”என்றும், நச்னார்க் கினியரும் அச்சூத்திரஉரையுள் “அதோளி, இதோளி, உதோளி, குயின் என்றாற்போல்வன இடைச் சங்கத்திற் காகாவாயின. ‘அட்டானானே! குட்டுவன்‘ (பதிற்றுப்பத்து ரு, சஎ.) ‘உச்சிக் கூப்பிப கையினர்‘ (,திருமுருகாற்றுப்படை)என்றாற்போல்வனகடைச்சங்கதிற்காயினசொற்கள் இக்காலத்திற் காகாவாயீன” என்றும் உரைத்துள்ளாகள்.ஆதலினானும் உணரப்படும். [பேராசிரியர் கடைச்சங்கத்திற்காகாவாயீன என்று கூறலின் நச்சினார்க் கினியரும் அவ்வாறே கூறியிருப்பர் என்பது எமது கருத்து.“கடைச்சங்கத்திற்காகாயின இக்காலத்திற் காகாவாயின! என்று கூறலானும் ‘கடைச்சங்கத்திற் காகாவாயின‘ என்றே கூறியிருக்க வேண்டுமென்பது பெறப்படும்
 
  இன்னும் மரபியலில், மூங்கா முதலியன :-
 
  ‘பறழெனப்படினு முறழாண்டில்லை” என்னுஞ் சூத்திரத்தின் கணும் “அவை இக்காலத்துவீழ்ந்தன என்று பேராசிரியர் கூறலானும் உணரப்படும். இங்ஙனம் ஒருகாலத்து வழங்கியசொற்கள்ஒருகாலத்து வீழ்தற்கு எத்துணைக்காலஞ் செல்லும் என்பதை நாம் உற்றுணருவோமாயின் அதன்றொன்மையும் நம்மாலுணரப்பெறும் என்க
 

பிழை திருத்தம்

பக்கம் வரி பிழை திருத்தம்
உகூ கூறுகின்றார்; கூறுகின்றார்,
ரு ககூ நிறுத்தினர் உணர்த்தியவெடுத்துக் கொண்டார்
கஅ சொன்மேனேற்றி சொன்மேனேற்றி
க0 தகுதி, யோக்கியதை யோக்கியதை, தகுதி
ஙஉ நிலையில் நிலையல்
கூ ஙகூ உளவாக உளதாக
க0 கஎ காரணமாதல் காரணமாகக் கோடல்
கஉ ஙகூ மகடூஉவறி மகடூஉவறிசொல்
கஎ ககூ (தனித்தனி) தனித்தனி
கங ஙச பேடுவந்தான் பேடுவந்தாள்
ககூ ங0 ஆண்மைதிரித்த ஆண்மைதிரிந்த
கஎ கஎ திரிதல் திரிந்த
கஅ வினைக்குறிப்புபற்றி வினைக்குறிப்பும்பற்றி
உக உஉ முடித்தற்கேற்பதோர் முடிதற்கேற்பதோர்
உக உகூ
உஎ
உரித்தாகின்றது உரித்தாகின்றன
உஉ உஎ சினையும் சினையவும்
உஉ உகூ சினையவும் சுனையவும் சினையும் சுனையும்
உச உரு வகரவீறும் வ ஈறும்
உகூ ககூ பாலுணர்த்தல் பாலுணர்தல்
ஙக உச ஒன்றன்செப்பு ஒன்றற் காவதென்றது --
ஙஉ செவ்வநிறை செவ்வனிறை
ஙஉ கங வழாஅலேம்பல் வழாஅலோம்பல்
ஙரு உகூ (எச்சவியல் சகூம் சூத்தரத்தில்) எச்சவியல் சகூம் சூத்தரத்தில்
ஙகூ உஅ அக்குணுமுடையது அக்குணமுடையது
ஙஎ கங நின்றதன்று, நின்றதன்று
ஙஅ உகூ எக என்க
சஉ கஉ தொக்கும்வழி தொகுக்கும் வழி
சஉ கஎ நல்லலைகளெல்லாம் நல்லவைகளெல்லாம்
சங திணைவயியென்னுது திணைவயினென்னுது
சங கூ கள்வர். கள்வர்
சங க0 வண்டலயர்ந்தார் வண்டலயர்ந்தார்
சங ங0 நிகழ்த்தி நிகழ்த்திப்
சச கஉ உயர்திணைப்பாலய உயர்திணைப்பாலைய
சரு திணையத்திற்கும் திணையையத்திற்கும்
சரு கங பிற பிற,
சரு உஎ வழுவமதியாயிற்று. வழுவமதியாயிற்று
சரு உஎ வழுவமதியாயிற்று. வழுவமதியாயிற்று
சகூ ஙக என்றது என்றதற்கு
சஎ உஎ எதிர்மறையாகலின். எதிர்மறையாகலின்;
சஎ ங0 மறுதலை வினைகளை மறுதலை வினைகளுட் சிலவற்றை
ரு0 கஉ உயர்த்துஞ் சொல் உயர்த்துச்சொல்
ருக உஉ நச்சினார் நச்சினார்க்கினியர்
ருஉ ஙங உன்குணம் உள்குணம்
ருரு கஅ வாராது] வாராதுஎன]
கூஉ உஎ கேயில் கோயில்
கூச ஙஉ தெரித்து எடுத்து
கூஎ கூ பின்னையதற்கு முன்னையதற்கு
எ0 கக சுட்டுவரு சுட்டிவரு
எ0 உஅ உருபேற்றுசுட்டுப் உருபேற்ற
எ0 உகூ குவ்வுயிருக்கு குவ்வுருபிற்கு
எக க0 கிளத்தி கிழத்தி
எக உஉ முதலாகிப முதலாகிய
எக உரு பட்டனவென்று பட்டதென்று
எகூ ககூ அவ்வழக்கு நோக்கி இவ்வாறு கூறினாரெனினு மமையும் அவ்வழக்கு ஈண்டு நோக்கத்தக்கது
எகூ ஙரு கருத்தும் கருத்துமாகிய
அச கூ மரனு மூளவேனும் மரனு முளவேனும்
கூ0 கச தெரிந்து தெரித்து
கூங உஎ செறிதல்- அறிதல் செறுதல்- அறுதல்
க0க உஅ கோடற்கு கோடல்
க0ச உகூ ஒழிந்த ஒழித்த
க0கூ உகூ விசேடணம். விசேடணம்,
க0எ ரு பிறிதொன்றனோடு பிறிதொன்றனோடு தொகாது
க0எ க0
கஉ
இச்சூத்திரத்தும்…. ஏற்புடைத்தன்று இச்சூத்திரத்தும்…. ஏற்புடைத்தன்று`
க0எ உக இது இஃது
க0அ ரு வேற்றுமை செய்தல் வேற்றுமை செய்தல்”
ககஉ ககூ பெயரிகினாகிய பெயரினாகிய
ககச கஉ ஒழித்தற்காகவே ஒழித்தற்காகச்
ககச கஎ இச்சூத்திரத்தில்…. கொண்டனர் “இச்சூத்திரத்தில்…. …….கொண்டனர்”
ககரு கஅ வினைத்தொகை (வினைத்தொகை)
ககஎ கூ திரிபினு திரியினு
கககூ உரு அன்மொழித்தொகையை அன்மொழித்தொகையை.
கஉக உஎ உரியதாகலின் உரியவாகலின்
கஉரு ககூ அறிவானமைத்த அறிவானமைந்த
கஉகூ கஎ இன்னேது இன்னானேது
கஉஎ உ0 செய்தற்கு செயப்பட்டதற்கு
கஙஎ ஙஉ ஏற்பதானும் ஏற்பதானும்.
கசஅ உங
உச
(வேற்றுமை .பகுதி) (வேற்றுமை..பகுதி)
கசஅ உச விலக்கணவதிகாரம் விலக்கணமதிகாரம்
கருரு உஅ (கிளவி-உகூ) கிளவி-உகூ.
கருஎ உரு கடவுளுக்கு கடவுளருக்கு
ககூ0 உ0 வேண்டியதில்லை வேண்டியதில்லை
ககூ0 உஅ கிளந்து விதந்து
ககூக உஉ தொகுத்தல் தொகுதல்
ககூக உகூ துணிபப்படும் துணிபப்படும்
ககூஉ ககூ பிறிது பிறிதேற்றல் !பிறிது பிறிதேற்றல்…..
ககூஉ உகூ …அமையாதென்க …அமையாதென்க‘
ககூச க0 நாண னாண
ககூரு உகூ புள்ளியிற்சலி புள்ளியிற்கலி
ககூகூ கங பிலத்த பிறத்த
கஅஉ உச
உரு
ஏயொடுசிவணும் ‘ஏயொடுசிவணும்‘
கஅங உங
உரு
தொழிலீஇ தொழீஇ
கஅகூ விளிவயினானெனல் விளிவயினானவெனல்
ககூகூ உஎ செய்தனெச்சம் செய்தெனெச்சம்
உ0ங உச முறையே ----
உககூ ஙக பெறுவதன்று பெறுவனவன்று
உஉங உஅ வருமென்றதனால் ‘ஆக்கமில்லை‘ யென்றதனால்
உஉச கங கென்னிழை கென்
உஉச கச நெகிழப் னிழை நெகிழ்
உஙரு உக நிற்றலான் நிற்றல்
உஙகூ உக
உஉ
பெறுதற்கே பெறுதலே
உஙகூ ஙக தன்மையை தன்மை
உஙகூ உஉ கூறப்பட்டது கூறப்பட்டன
உஙகூ உரு க, ட, த றக்கள் நச்சினார்க்கினியர், கடத றக்கள்
உச0 உஅ ஆண்டு ஆண்டுக்
உசக கூ (குறள்-அச) (குறு-அச)
உசக கூக ஏற்புடத்தாம் ஏற்புடையவாம்
உசச ரெவரே ரெமரே
உசஎ உ0 மாகாரம் ஆகாரம்
உசஅ உ0 அதுச்செல் அதுச்சொல்
உசகூ உ0 எனப்பட்டது எனப்பட்டன.
உரு0 ஙஉ சாத்தனை உடையாணை(சாத்தனை)
உருக உஅ உடமை உடைமை
உருஉ கஅ வாய்பாடேற்றி வாய்பாடேபற்றி
உருஉ அன்மைக் அன்மை
உகூகூ உரு முதனிலைக் முதனிலை
உஉஉ ககூ துவாமை துவ்வாமை
எஎஎ உகூ முடியாதென்றபடி முடியாவென்றபடி
உஅஎ உரு சிறந்தது சிறந்தது;
உகூகூ ஙரு ஒருவகை என்பதொருவகை
ங0ச கஅ னல்லவென்பது னல்லனென்பது
ஙககூ உகூ மாதவர் மாதவர்த்
ஙகஅ உ0 சொல் சொல்.
ஙஉஅ கங எடுத்தோத எடுத்தோதா
ஙஙஉ சென்கேழ் செங்கேழ்
ஙஙச ரு விதிர்பு விதிர்ப்பு
ஙஙச கரு வார்கை வார்க
ஙஙகூ கரு காரிகை காரி
ஙசஉ உச நாநல்லார் நாமநல்லார்
ஙசஎ கரு மார்பனணங்கிய மார்பணங்கிய
ஙசஅ உச முணர்த்த முணர்த
ஙஎங உகூ றகரம் றகர அகரம்
ஙஎரு உஉ முதனிலை தனிநிலை
ஙகூஉ கூஉ கச்சினன் கழலினன் கச்சு, கழல்
சஉச உக ளன்றே ளன்னே
 

அரும்பத விளக்க முதலியன

ருகூ ஙகூ மண்கலம் மட்கலம்
ருஎ உஉகூ கஉகூ
ருகூ கக சுண்ணம்-பொற்பொடி சுண்ணம்-பொற்பொடி் சண்ணாம்புமாம்.
 

விசேடக் குறிப்பு

  இவ்வுரையை அச்சிட்ட பின், சென்னை ஒரியண்டல் லைப்ரரியில் உள்ள கல்லாடனுருரைக்கையெழுத்துப் பிரதியில்  “எல்லாச் சொல்லும் பொருள்குறித்தினவே” என்றசூத்திரவுரையைஇப்போது அங்கு வசிக்கும் எம்முடைய எழுதுவித்துப் பார்த்தபோது, அவ்வுரையுள்,

  ‘மற்றசைநிலை யிடைச் சொற்கள் பொருளுணர்த்தாவாலெனின், அவையு மொருவாயிற் சிறுபான்மை பொருளுணர்த்துமென வுணர்க. .அல்லதூஉம் இது பெரும்பான்மை‘ எனக்காணப்படுகின்றது. பெரும்பான்மை என்றலால், அவை பொருளுணர்த்தா என்பதும் கல்லாடனார் கருத்தென்பது பெறப்படினும், இச்சொல்லதிகாரமுதற்சூத்திரத்துக்கு இவருரைத்த உரையுள்வரும், ‘எழுத்தல்லோசையும்............ஆராயப்படுன்றது.‘ என்ற வாக்கியத்துள் வரும் ‘பின்னின்றவிரண்டும் இவ்வதிகாரத் தாராயப்படுகின்றது‘என்பது‘பின்னின்ற விரண்டனுள் முன்னையதே இவ்வதிகாரத் தாராயப்படுகின்றது.‘ என்றிருப்பின் மிகப் பொருத்தமாகுமொன்பதுஎமது கருத்து

  இன்னும், எச்சவியல் சகச-ம் சூத்திர உரையுள் ‘போல என்பது குறிப்புவினையெச்சமாய் நிற்றலானும்‘ என்பதில் ‘குறிப்பு‘என்பது ‘அவை பற்றி (வினையும்வினைக்குறிப்பும் பற்றி)...........விரித்தற்கேற்புடைமை அறிக‘என வருதலை நோக்கும்போது இல்லாமலிருப்பதுபொருத்தமாகும்என்பதும்எமதுகருத்து

சி. க.

 

விளங்கா மேற்கோளில்விளங்கியன.

சகூ-ம்சூத். ‘அவன் கோலினுந் தண்ணிய தடமென்றேளே‘ பட்டினப்பாலை [அடி-300-301]
ககூ-ம்சூ. ‘துளிதலைத் தலைஇயதளிரன் னேளே‘ குறுந்தொகை .222-ம்செய்யுள்
உசு.ம்சூ. சிறுபைந்தூவி- [அகம்-57]
நுஎ-ம்சூ. இஃதோர்செல்வற் கொத்தனம்யாமெனமெல்லவென்மகன்வயிற் பெயர்தந் தேனே.இஃதோஎனவும்பாடம்.[அகம்-26[
கூ0-ம்சூ. இழிவறிந் துண்பான்கணின்பம்- [திரு.946 ]
க0அ-ம்சூ. ‘கடிநிலையின்றே யாசிரியற்க‘  [தொல்-புள்.94]
க0கூ-ம் சூ. கிளையரி நாணற்கிழங்குமணற் கீன்ற-முளையோரன்ன
முள்ளெயிற்றுத் துவர்வாய்- [அக-212]
கருக-ம்சூ. வருந்தினை வாழியென் நெஞ்சே- [அகம்-19]
கருக-ம்சூ கருங்கால்வெண்குரு- [நற்றிணை-24]
கஅஎ-ம்சூ நெறிதாழிருங்கூந்த னின்பெண்டிரெல்லாம்- [கலி-97]
உ0ச-ம்சூ. தங்கினைசென்மோ- [புறம்-320]
உ0ச-ம் சூ பெயர்த்தனென் முயங்க[குறு-84]
உகக-ம்சூ. வினவி நிற்றந்தோனே[அகம்-48]
உஉ0-ம்சூ. அறிந்தமாக்கட் டாகுகதில்ல- [அகம்-15]
உஉ0-ம் சூ. மெல்விரன்மந்திகுறைகூறுஞ்செம்மற்றே- [கலி-40]
உஙகூ-ம் சூ. வலனாகவினையென்றுவணங்கி நாம்விடுத்தக்கால்- [கலி-35]
உஉகூ-ம்சூ அகன்றவர் திறத்கினி நாடுங்கால்- [கலி-16]
உஉகூ-ம் சூ தொடர்கூரத் தூவாமை வந்தக்கடை- [கலி-22]
உச0-ம்சூ. தண்கடல் வையத்து[பெரும்பா-17]
உசகூ-ம்சூ அருங்குரைத்து- [புறம்-5]
உருக-ம்சூ. அதுமன்- [புறநாநூறு-147]
உருங-ம் சூ. பெற்றங் கறிகதில்லம்மவிவ்வூரே- [குறுந்-14]
உஎகூ-ம்சூ. புறநிழற்பட்டாளோவிவளிவட்காண்ரடிகா- [கலி-99]
உகூஉ-ம்சூ. மலைநிலம்பூவே துலாக்கோலென் றின்னர்- [தொல்-எழு-பாயிரம்]
உஅஅ-ம் சூ. நாரரி நறவிணுண்மகிழ்தூங் குந்து- [புறம்-400]
ஙகச-ம்சூ கழிகண்ணோட்டம்- [பதிற்றுப்பத்-22]
ஙஉஅ-ம் சூ ‘மாதர்...நோக்கு- [அகம்-130]
ஙஎஅ--ம் சூ ‘மதவிடை- [பெரும்பாண்-43]
ஙஅகூ –ம்சூ ‘கடியையா னெடுந்தகை செருவத் தானே- [பதிற்றுப்
பத்து-6 பத்1-ம்செய்யுள்]
ஙஅச-ம் சூ கடுத்தனளல்லளோ வன்னை- [ஐங்குறு 194-ம்செய்யுள்]
சசஉ-ம் சூ ஆன்முன் வரூஉமீகாரபகரம்- [தொல்-எழு-333]
சகூக-ம்சூ. ஏவு லிளையர்தாய்வயிறுகரிப்பு- [அகம்-66]

தொல்காப்பியச்சூத்திரப் பொருளாராய்ச்சி

அநுபந்தம்
தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி
 
வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்து
பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கு
மெல்லாச் சொல்லு முரிய வென்ப.
 
  என்பது சூத்திரம்இச்சூத்திரத்திற்குச்சேனாவரையர், “வேற்றுமைத்தொகையை விரிக்குமிடத்து, வேற்றுமையுருபேயன்றி, அன்மொழித்தொகை விரிப்புழி, வேறுபட்டுப்பல்லாறாகஅன்மொழிப்பொருளே. புணர்ந்து வரும் எல்லாச்சொல்லும் விரித்தற்குரிய” என்னுங்கருத்தமையப் பொருள்கூறி தாழ்குழல், பொற்றொடி, மட்காரணம்என்னும் அன்மொழித் தொகைகளைவிரிப்புழித் தாழ்குழலையுடையாள், பொற்றொடியையணிந்நாள், மண்ணாகிய காரணத்தானியன்றது என விரிக்கப்படும்உடைமையும், அணிதலும், இயறலும்கருங்குழற்பேதை, பொற்றொடி யரிவை, மட்குடம்என்னும்வேற்றுமைத் தொகைகளை விரிப்பழியும், கருங்குழலுயுடையபேதை, பொற்றொடியை யணிந்தஅறிவை, மண்ணானியன்றகுடம்என வந்தவாறு கண்டுகொள்க” எனஉதாரணமுந் தந்து விளக்கியுள்ளரர். ஏனைய வுரையாசிரியர்களும்இக்கருத்தி லுடன்பாடுடையர்களேயாம்
 
     அம் மூவருங்கூறும்பொருளை மறுத்துச் சிவஞானமுனிவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தியுள் வேறுஉரை கூறினர். அவ்வுரை வருமாறு- “(ஒத்தினிறுதிக்கட்புறனடை) காப்பினொப்பின்........... என்றற்றொடக்கத்தவாக ஆண்டுக் கூ.றியபொருளேயன்றி, இன்னும் வேற்றுமைப்பொருளை விரித்துக்கூறுங்கால், அக்காப்பினொப்பின் என்றற்றொடக்கததுத் தொகைச் சொற்களின் வேறுபட்டுப் பொருளொடு புணர்ந்திசைக்கும் எல்லாச்சொற்களும் ஈண்டுக் கோடற்குரியவென்பர்என்றவாறு.முடிக்குஞ்சொல்லைப் பொருள்என்றர், தொடர்மோழிப்பொருள்அதன்கன்ணதாகலின்.காப்பினொப்பின்.......முதலியசொற்கள்புரத்தல் ஒம்புதல் தேர்தல் நிகர்தல்என்றற்றொடக்கத்துப்பொருள் புணர்ந்திசைச்குஞ் சொற்களையெல்லாம் கருத்துவகையான்உள்ளடக்கித் தொகுத்த மொழியாய் நிற்றலின்அவற்றைத் தொகையென்றும் ‘அதனினியறல், அதற்றகுகிளவி, என்றற்றொடக்கத்துத்,தொடர்மொழிகளின்ஈற்றுச்சொற்களேஈண்டுக்கொள்ளப்படும்என்பது விளக்கிய‘ஈற்றினின்றியலுந்தொகை‘ என்றும், ஊரைப்பேணும், ‘ஊரைத்தாங்கும், என்றாற்போலப்பிறவாற்றான்வருவனவுங் காத்தற்பொருளேபயந்துநிற்றலின் அவையுந் தழுவுவதற்குப் ‘பல்லாருக!‘ என்றுங்கூறினார்” என்பதாம்.
 
    இவ்வுரைகளுள் எவ்வுரை பொருத்தமுடைய தென்பதே நாம் ஆராய்வது:-
 
    ஆசிரியர், “இன்றிலவுடைய வென்னுங்கிளவியும்” என்புழிப்போலச் சொற்பற்றியேரதாது “அன்மையி னின்மையின்” என்புழிப்போலக் “காப்பினெப்பின்” எனப்பொருள்பற்றியோதினாராகலின், காவன்முதலிய பொருள்பற்றிவருஞ் சொல்லெல்லாம் கொள்ளப்படுமாதலின், அதற்கெனவேறொரு சூத்திரஞ்செய்தார் எனக் கோடல்மிகைபடக் கூறலாமாதலின்ஆசிரியர்க்கது கருத்தன்றென்பது. கருத்தாயின“வேற்றுமைத்தொடரி னீற்றுமொழி நிலவயின்- பல்லா றகப்பொருள் புணர்நதிசைச்கு- மெல்லாச்சொல்லு முரிய” எனஆசிரியர் விளங்கச்சூத்திரிப்பர்மன் அங்ஙனஞ் சூத்திரியாமையானும்அவர்க் கதுகருத்தன்றுஎன்பது பெறப்படும்படவேமுனிவருரைபொருத்தமற்ற தென்பநூஉம், சேனாவரையர் முதலியோருரையே பொருத்தமென்பநூஉம்பெறப்படும்.சேனாவரையரும்“காப்பினொப்பீன்” எனப் பொருள்பற்றியோதினமையானெ அப்பொருள் பற்றிவருவனவெல்லாங் கொள்க” எனக் கூறுதல்காண்க.அன்மை முதலாயினதன்பொருட்கண் ஒருவாய்பாடேஉடையன,காப்பு முதலாயின தன்பொருட்தண் பல வாய்பாடுடையன. இதனைச் தொல்-சொல்-215-ம் சூத்திரத்துச் சேனாவரையருரை நோக்கி யுணர்க. இங்ஙனமே! பொருள்பற்றி நன்னுாலாரும், “ஆக்கலழித்த லடைத னீத்த- லொத்த லுடைமையாதியாகும்” எனப் பொருள்பற்றி யோதிப் புறனடைகூறாமையு முணர்க
 
    இன்னும், முனிவர் தம்முரையுள் “வேற்றுமைப் பொருளைவிரிக்குங் காலை” என்பதற்கு, முதற்கூறிய பொருள்களன்றி, “இன்னும், வேற்றுமைப்பொருளை “விரிக்குமிடத்து“ என்று பொருளுரைத்து, ஈண்டுப் பொருளென்றது வருமொழியை என்று விரிவுரைத்துள்ளார். அங்ஙனேல் ‘வேற்றுமைப் பொருளைவிரிக்குங் காலை‘ என்பதற்கு வேற்றுமைப் பொருளைத் தரும் வருமொழிகளை இன்னும் விரிக்குமிடத்து என்பதே பொருளாம். அங்ஙனம் பொருள் கொள்ளுங்கால், ஈற்றுநின்றியலுந் தொகை வயீன்........எல்லாச்சொல்லும், காப்பு முதலாக முன்சொன்ன பொருண்மேல் வந்தனவன்றி, இன்னும் விரிக்கப்பட்ட வேற்றுமைப் பொருளைத் தரும் வருமொழிகளன்றாதலின் அவ்வுரைமுன்னொடு பின் முரணுதலிற் பொருந்தாதென்பது. அற்றன்று இன்னும் விரிக்கப்படும் மொழியென்றது ஈற்றுநின்றியலுந்தொகைமொழிகளாகிய அம்மொழிகளையே யாதலிற் பொருந்தும் எனின் ஈற்றினின்றியலுக் தொகைமொழியென்றாவது, வேற்றுமைப்பொருள் என்றாவது ஒன்றுகூறவே யமையும் இரண்டுங் கூறவேண்டா என்பது. ஈற்றுநின்றியல்வது தொகைமொழி யென்பதை விளக்கக் கூறினாரெனின், அத்தொகையெனச் சுட்டியொழியலே யமையும், ஈற்றுநின்றியலும் என்பது வேண்டாவாம்.அன்றியும் தொகைமொழியென்பதே ஆசிரியர்க்குக்கருத்தாயின், அங்ஙனம் விளங்கத் கூறியிருப்பர்மன் அங்ஙனங் கூறமையானும் அவர்க்கு அது கருத்தன்றென்பது பெறப்படும். இன்னும் வேறுவேறு பொருளைக் கூறலன்றி, ஒரு பொருண்மேல்வரும் பலசொல்லு மப்பொருளே தருதலின் .அவற்றை விரித்தல் பயனில் கூற்றாமாதலின், அவற்றை யாசிரியர் கூறியிருப்பரென்பதூாஉம் கொள்ளத்தக்கதொன்றன்றாம், கூறினும், யாம் முன் சொன்னவாறு “வேற்றுமைத் தொடரி னீற்றுமொழி நிலுவையின்அம்மொழிப் போருண்மேல்வரும் எல்லாச் சொல் வருதற்குரிய” என்றே கூறுவாரன்றி விரிக்குங்காலை யெனவுங்கூறார். ஆதலானும் அவ்வுரை ஆசிரியர்கருத்தொடு முரணும் என்பது
 
    அங்ஙனேல், சேனுவரையருக்கண் முனிவர் நிகழ்தியதடைகள் பொருந்தாதென!க் காட்டிய பின்னன்றே அவ்வுரை பொருந்துமெனின், முனிவர்தடை பொருந்தாதனவாமாற்றையும் அத்தடையை முன்னர்த்தந்து பின்னர்க் காட்டுதும். முனிவர் தடை வருமாறு.
 
    வேற்றுமைத்தொகையை விரிக்குங்காலை என்னாமையானும், வேற்றுமைத்தொகைவிரியுமாறு வேற்றுமையியலு. கூறவோரியைபின்மையானும், வேற்றுமையியலு உருபும் பொருளும், உருபு நிற்குமிடமும் மாத்திரையே கூறியொழிந்தரான்றி, வேறென்றுங் கூறாமையானும், வேற்றுமைத்தொகைவிரியு மாறு “வேற்றுமையியல” என்பதனாற் பெறப்படுதலின் வே.று கூறவேண்டாமையானும், வேண்டுமெனின் உவமைத் ,தொகைவிரியுமாறுங் கூறவேண்டுதலானும் அச்சூத்திரத்திற் சுது பொருளன்றென்பது.
 
    இத்தடை பொருந்தாமையை முறையே காட்டுதும்தொகையைப் பொருளென வாசிரியர் ஈண்டன்றி “ணகாரவிறுதிவல்லெழுத்தியையின்- டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே”(தொல்-புள்ளி-எ) என்றும், “னகாரவிறுதி வல்லெழுத் தியையிற்...றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே” (தொல்-எழுத். புள்ளி-எ) என்றும், “யகர விறுதி வேற்றுமைப் பொருள் வயின், வல்லெழுந் தியையி னவ்வெழுத்து மிகுமே” (தொல்-புள்ளி-கூஉ) என்றும், “லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன்…” வேற்றுமை குறித்த பொருள்வயி னான”(தொல்-குற்றி-எடு)என்றும், ஆளுதலின், ,தொகையைப் பொருளென்றல் பொருந்துமென்பதூஉம், தொகை விரிப்புழி மயங்கும் மயக்கம் வரு மோத்தினாற் கூறுதலின் அதற்கியைய ஈண்டுத் தொகைவிரிக்குமாறு கூறினாரெனச் சேனாவரையரே இயையு கூறியிருத்தலினாலும், அன்றியும், வேற்றுமையியலுட் கூறியது! விரியலக்கணமே யாகலின் அதனோடியைத்தொகையிலக்கணமன்றித் தொகை விரியுங்காற் படு மிலக்கணமும் கூறுதலும் பொருந்துமாதலினாலும் “வேற்றுமையியல்” என்பதனால் வேற்றுமைத் தொகையின் இலக்கணமுணர்த்தியதன்றித் ,தொகைவிரியிலக்கணங் கூறியதன்றா மாதலானும், உவமை தொகையை விரிக்குங்கால் வேறு சொற்பெய்துவிரித்தல் வேண்டாவாகலானும் அத்தடைகள் பொருந்தாமை காண்க.
 
    உவமைத்தொகைக்குச் சொற்பெய்துவிரித்தல் ஏன் வேண்டாவெனின் ‘பவளவாய்‘ என்பதை விரிக்குங்கால், பவள!ம் போலும் வாய் என விரிந்து பொருட் பொருத்தமுறத் தழுவி வேறுசொல் வேன்டாது உவம உருபு முடிந்து நிற்றலின் என்பது. .அற்றேல் “பவளம் போலுஞ் சிவந்த வாய்” என ஆண்டுஞ் சொற்பெய்து விரிக்கப்படுமெனில் அற்றன்றுஆண்டுப் பொதுத் தன்மை இதுவென வுணர்த்தற்குச் சிவந்த எனவொரு சொல் விரிக்கப்பட்டதன்றி உவமவுருபும் பொருளு மியையாமையின்விரிக்கப்பட்டதன்றாகலான் அது பொருந்தாதென்பது. வேற்றுமைத்தொகையோவெனின் ‘பொற்றெடி யரிவை‘ என்ற விடத்து‘பொற்றொடியை அரிவை‘ என உருபு மாத்திரம் விரிக்குங்கால் வருமொழியேயைந்து பொருள் விளக்காமையின் அதற்கு அணிந்த என ஒருசொல் விரித்து முடிக்கவேண்டுமென்பது இது பற்றியே ஆசிரியர் “வேற்றுமைப் பொருளைவிரிக்குங்காலை...... ..பொருள் புணர்ந்திசைக்கும் எல்லாச் சொல்லுமுரிய” வென்றார்.பண்புத்த்தொகையில் விரிக்கப்படுவதுளதேல்அது தன்னின முடித்தலாற் கொள்ளப்படும்.
 
  அங்ஙனேல், அன்மொழித் தொகைபோல விரிக்கப்படுமென்ற தென்னையெனின், அன்மொழித்தொகை பல்லாற்றானும்பொருள் புணர்ந்திசைக்குஞ் சொல்லசனன்றி விரியாமை யாவரு முணர்ந்ததொன்றாகலின் அதனை முதற்கணெடுத்தோதி அவ்விதியை  கொண்டாரென்பது. அற்றேல் அன்மொழித்தொகை விரிதற்கு விதி முன்சொல்லவில்லையே யெனின் அவ்விதியையும் அநுவாதமுகத்தானே ஈண்டுக்கொள்ளவைத்தாரென்பது, இன்னோரன்ன அநுவாதத்தாற் பெறவைத்தல் பொருத்தமன்றெனின், .அற்றன்று முன் கூறப்படாததாயினும், ஆன்றோர்க்கெல்லா முடன்பாடாயதொன்னறத் தம் நூலுள் அநுவதித்துக் கூறுதலும் ஆசிரியர்க்கு வழக்காதலின் அது குற்றமாகாதென்க. ஆசிரியர்க்கு வழக்காதல், “அகரமுத னகரவிறுவாய் முப்பஃதென்ப” எனவும், “ஓரள பிசைக்கும் குற்றெழுத்தென்ப” எனவும், “ஒரள பிசைச்கும் நெட்டெழுத் தென்ப”எனவும், ‘அகரமுத கைவிறுவாய்‘ ‘ஒரளபு‘ ‘ஈரளபு ‘என்பவற்றை அநுவாதத்தாற் பெறவைத்தலா னறியப்படும். அதனாற் பெறவைத்தல் முனிவர்க்கு முடன்பாடாதல், “அகர முதலிய முப்பதும் நெடுங்கணக்கினுட் பெறப்படுதலின் அவற்றை விரித்தோதாது முதலு மிறுதி!பு மெடுத்தோதி அநுவதித்தார்” என முதற் சூத்திரவிருத்தியுட் கூறலா னறியப்படும். அநுவாத முகத்தாற் கூறாது அன்மொழித் தொகையையும் விதிமுகத்தாற் கூறவமையாதோவெனின், அமையுமாயினும், விதிமுகத்தாற்கூ.றின் ஈண்டு அதிகரித்தபொருள் வேற்றுமைத்தொகையென்பது பெறப்படாமையான் அவ்வாறு கூறினாரென்பது. அன்றியும், எல்லாச்சொல்லும் விரிக்கப்படுதலை வேற்றுமைத்தொகையுள் எல்லாத்தொகையும் பெறுனமயின் அஃது அன்மொழித்தொகைக்கே நியதி என்பதுணர்த்தற்காகவும் அங்ஙனங் கூறினார் என்பதுவேற்றுமைக் தொகையுள் எல்லாம் பெறாமையானன்றே ஆசிரியர்“உரிய” என்றார் என்பது.
 
    ஆகலின், சேனாவரையர் கூறியவாறு அன்மொழித் தொகையையும், வேற்றுமைத் தொகையையம் விரிப்புழி வரும் வேறுபாடு இச்சூத்திரத்தாற்கூறியதென்பதே பொருத்தமாதல் தெளிக.
 
    இனி ‘வேற்றுமையியல‘ என்பதனால் விரியிலக்கணம் பெறு தலின் வேறு கூறல்வேண்டா வென்னும் முனிவருரையையும் ஆராய்தும்
 
    முனிவர் ‘வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்”என்னுஞ் சூத்திரத்திற் குரைத்த பொருளாவது
 
    வேற்றுமைத்தொகை விரியுங்கால் தொகாநிலை வேற்றுமை யியல்பினவாய் வீரியும் எனவே அங்ஙனம் விரியுமியல்புடையது வேற்றுமைத்தொகை என்றதாயிற்று என்பதும், தொகாநிலை வேற்றுமையியல்பாவதென்னையெனின், கிழமைப்பொருட்கள்வந்த ஆறுவதொழித்து ஓழிந்த உருபுகளெல்லாம் காரகப்பொருள் வாகலின் வினைகொண்டன்றி முடியாமை என்பதுமே.
 
    தொகைகள் இவையெனக்கூறி, முறையே அவற்றின் இலக்கணங் கூ.றுவான்புகுந்த ஆசிரியர் இவ்வாறு தொகுவது வே.ற்றுமைத்தொகை என அதனியல்பு உணர்த்தாது, அது விரியு மாறிகூறி அம்முகத்தானே வேற்றுமைத்தொகையி னிலக்கண முணர்த்தினாரென்றல் மலைவுகூற்றாமாகலானும், தொகையிலக்கணங் கூறவறியாது ஆசிரியர் இடர்ப்பட்டுக் கூறினாரெனவுமமையுமாகலானும், வேற்றுமையாய் விரியுமென்றன்றி, இயல்பாய் விரியுமென்று கூறராகலரனும், உருபு வினைகொண்டு முடிதலே அதற்குச் சிறப்பிலக்கணமாய் முடியுமன்றி, உருபுவிரிதல் அதற்குச் சிறப்பிலக்கணமாய் முடியாமையானும், வினைகொண்டு முடிதல் .ஆறுதற்கட் செல்லாமையானும், ஆசிரியர் விரிப்புழி எனவும் தொகாநிலை வேற்றுமையெனவும் விதந்து கூறாமையானும் தொகாநிலையென்பது தொகையே என்பதன்கண்வரும் பிரி நிலையேகராத்தாற் பெறப்படுமெனின், அவ்வேகாரம் “னஃகா னெற்றே” என்புழியும், “அளபெடைப்பெயரே” என்புழியும் வரு மேகாரங்கள்போல அசைநிலையாவதன்றிப் பிரிநிலையாகாமையானும், ஆகுமெனின், தொகைநிலை வேற்றுமை தெகாநிலை வேற்றுமையென வேற்றுமையின் விகற்பமுணர்த்துவான்புகுந்தது இச்சூத்திரமாகுமன்றி, தொகையிலக்கண முணர்த்துவான் புகுந்ததன்றாய் முடியுமாதலானும், வினைகொண்டு முடிய விரிதலாகியஅவ்விலக்கணம் பெயரும் பெயருந்தொக்க வுவமைத் தொகைக்கட் செல்லாமையானும், வழிநூலாசிரியராகியநன்னுாலாரும் வேற்றுமைத்தொகையாவது ஆறுருபும் வெளிப்படலில்லது எனக் கூறுதலினாலும் அவ்வுரை வலிந்துகொண்டதொரு போலியுரையென்க. அன்றியும், “அளபெடைப் பெயரே யள பெடையியல” என்பது போல “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல” என மாட்டேறாகச் சூத்திரஞ் செய்திருத்தவின், அச்சூத்திரத்திற்குப்போல இச்சூத்திரத்திற்கும் பொருள் கோடல் பொருந்துமன்றிப் பிறவாறு பொருள்கோடலும் பொருந்தாது.அச்சூத்திரத்திற்குப் போலப் பொருள் கொள்ளுங்கால், வேற்றுமைச்தொகை, தொகாநிலைவேற்றுமை விரியுமாறுபோல விரியும் என்றே பொருள்கொள்ளவேண்டும். அங்ணங் கொள்ளுங்கால், பொதுத்தன்மையாகியவிரிதல் ,தொகாநிலைவேற்றுமைக்குச் செல்லமாட்டாதாதலின் அவ்வாறுகோடலும் பொருந்தாதென்பது. மாட்டேற்றைவினைவிரிதலளவிற்கே சோடலாமெனின்அது தொகையிலக்கணமன்றதலின் அதுவும் பொருந்தாது. ஆதலானும் இச்சூத்திரத்திற்குச் சேனாவரையர் முதலியோருரையே பொருத்தமாதல் தெளிவாம். ஆகவே தொகைவிரியிலக்கணம் இச்சூத்திரத்தாற் பெறப்படாமையின்“வேற்றுமைப் பொருளைவிரிக்குங் காலை என்னுஞ் சூத்திரத்தினால் அதனைக் கூறினாரென்பதே பொருத்தமாதல் காண்க
 
    இன்னும், ஆசிரியர் தொகையிலக்கணங் கூறுங்கால் வேற்றுமைத் தொடர்மொழியோடு மாட்டெறிதலின், உருபோடு விரியும் மொழிகளையும் முன்னர்க் கூறியே மாட்டெறிய வேண்டுதலினாலு!ம், ஆண்டுக் கூறுதற் கோரிடமின்மையானும், தொகைவிரியுங் காற்படு மிலக்கணமாதலினாலும், தொடர்மொழியிலக் கணத்தோடு பொருந்த வேற்றுமையியலின் ஈற்றிலே வைத்தார் எனக் கோடலும் பொருத்தமாதல் காண்க.
 
    இனித் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பாசிரியர் தாம் செந்தமிழ்-உகூ-த் தொகுதியில் (பக்-ஙச0-ஙசங) வெளிப்படுத்திய குறிப்பினுள் வரும் இச் சூத்திரக்குறிப்பின்கண் மேலுஞ் சேனாவரையர் “இதனை வேற்றுமைத் தொகையே யுவமைத் தொகையே‘ என்னுஞ் சூத்திரத்தின்பின் வைக்கவெனின், அதவு முறையாயினும் இனி வருஞ் சூத்திரங்களான் வேற்றுமைத்தொகைவிரிபற்றிய மயக்கமுணர்த்துதலான் ஆண்டுப்படுமுறை யுணர்த்துதல் ஈண்டு மியைபுடைத்தென்க” என்று கூறியுள்ளார். இது ஆராயத்தக்கது, என்றும், “வேற்றுமை மயங்கியலில், தொகை, தொக, தொகா என்ற சொற்கொண்ட சூத்திரங்கள் ஐந்தே அவைகளுள், ஒம்படைக்கிளவி என்னுஞ் சூத்திரத்துள்ள தொகை என்னுஞ் சொல்லைத் தவிர மற்றைச் சூத்திரங்களிலுள்ள தொகை, தொக, தொகா என்ற சொற்கள் சமாசனைக் குறிக்கின்றனவா?அல்லவா? என்பதை அவ்வச் சூத்திரங்களுட் கூறுவோம், எவ்வாறாயினும் இவ் வைந்து சூத்திரங்களுள் ஒன்றிலாவது வேற்றுமைத் தொகையை விரிக்குமிடத்து வேற்றுமையேயன்றி அன்மொழிப் பொருளோடு புணர்ந்துவரும் எல்லாச்சொல்லும் உ.னார்த்தப்படவில்லை. ஆதலால் சிவஞான முனிவர் கூறிய பொருளே பொருத்தமானதாகத் தோன்றுகின்றது” என்றுங் கூறியுள்ளார்கள்.அவர்கள் கூறியவாறு அச்சொற்சுள் தொகைப்பொருளை யுணர்த்துகின்றனவா?அல்லவா?என்பதையும் ஈண்டு ஆராய்தும்.
 
    ஆசிரியர் தொல்காப்பியனார் வேற்றுமை மயக்கத்தைத் தம்பொருளிற்றீராது பிறிதுபொருட்கணவரும் பொருண்மயக்கமும், தம்பொருளிற்றீர்ந்து பிறிதுபொருட்கணவரும் உருபு மயக்கமுமென இரன்டாக வகுத்துக் கூறியுள்ளார். அங்ஙனங் கூறுங்காற் பொருண்மயக்கத்தைத் தொகையிலும் தொடரிலும் உருபுமயக்கத்தைத் தொடரினும் வைத்துணர்த்தியுள்ளார்.பொருண்மயக்கத்துட்சிலவற்னறத் தொகையிலும் சிலவற்றைத் தொடரிலும் வைத்துஉணர்த்துவான் ஏன்?யாவற்றையுந் தொடரில் வைத்துணர்த்தினாலென்னை எனின், அங்ஙனமுணர்த்தின் அம்மயக்கந் தொகைக்கண் எவ்வாறமென மாணாக்கனுக்கு ஐயம் நிகழும்.ஆதலின் அவ்வையம் நீக்குமாறு தொக்கு வருவனவற்றைத் தொகைக்கண்ணும் தெகாது வருவனவற்றைத்தொடர்க்கண்ணும் வைத்துணர்தினாரென்பது. இதுபற்றியே சேனாவரையரும், “இதன திதுவிற்  றென்னுக் கிளவியும்” என்னுஞ் சூத்திரவுரைக்கண் “இதுவும் வேற்றுமை மயக்கமாதலின் மேற்கூறப்பட்டவற்றேடு ஓருங்கு வையாது இத்துணையும் போதந்துவைத்த தென்னையெனின் அது தொகை விரிப்ப மயங்குமதிகாாம், இது தொகையல்வழி யானையதுகாடு கூரிது என்னுந் தொகைப்பொருள் சிதையாதுயானைக்குக்கோடுகூரிது என நான்காவதாண்டுச் சென்றுநின்றதாகலான் அவற்றோடு வையாயினார் என்பது” எனச் கூறினாரென வுணர்க‘இன்னும் வடமொழிக்கட் போலன்றித் தமிழ்மொழிக்கட் பெயரோடு தொழிலுந்தொகுமாதலின் அவ்வழக்குப்பற்றியும்மாண வர்க்கு இனிது விளங்கந் தொகைக்கண்வைத்துணர்த்தினாரெனவு முணர்க. .ஆசிரியர்தொகைக்கண் வைத்தே இம்மயக்க முணர்த்தினாரென்பது “கருமமல்லாச் சார்பென் கிளவிக்-குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை” என்னுஞ் சூத்திர முதலாக“அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு-மெச்ச மிலவே பொருள்வயினான” என்ப திறுதியாகவுள்ள சூத்திர விதிகளெல்லாம் தொகைவிரி மயக்கத்திற்கேற்றவாறு வருதலானும், “உருபு தொடர்ந்தடுக்கியவேற்றுமைக் கிளவி-யொருசொன் னடைய பொருள்சென் மருங்கே” என் சூத்திர முதலாக “ஏனையுருபு மன்ன மரபின-மான மிலவே தொன்முறை யான” என் சூத்திர மிறுதியாக உள்ள சூத்திரங்களெல்லாம் தொடர் மொழிக்கட் படுவனவற்றையே விதிப்பனவாக வருதலானும் அறியக்கடத்தல் காண்க.
 
    இனி, உரையாசிரியர்க்கும் பொருண்மயக்கத்தைத் தொகைக்கண்ணும் வைத்துஆசிரியர் உணர்த்தினாரென்பதே கருத்தாதல் “இரண்டன் மருங்கினோக்க னோக்க-மிரண்டன் மருங்கினேதுவுமாகும்” என்னுஞ் சூத்திரவுரையுள், “வானோக்கிவாழும்” என்னுந் தொகையையே உதராணமாகத் தந்து விரித்துக்காட்டலானும் “ஒம்படைக் கிளவிக்கு” என்னுஞ்  சூத்திரவரையுள் “தொகைவருகாலை” என்பதை யாண்டும் ஒட்டிக்கொள்க என்ப தனானும், “குத்தொகவரூஉம்” என்னுஞ் சூத்திரவுரையுள் ‘நாகர்பலி என்பது தொக்கு நின்றது, ஆண்டு ஆறாவதுமாக‘ வெனக் கூறியவதனானும் அறியப்படும். அன்றியும் உரையாசிரியர்க்கது கருத்தன்றாபின் சேனாவரையர் அவரை யாண்டா யினும் மறுத்துக் கூ.றியிருப்பர்.அங்ஙனங் கூறாமையானும் உரையாசிரியர்க்கும் அதுவே கருத்தாதல் துணிபு..ஆதலின்தொகை தொக தொகா என்பன சமாசனையே உணர்த்தி வந்த பதங்களென்பது துணிபாம்.நிற்க
 
    இனித்தொகை முதலிய பதங்கள் சமாசனையே உணர்த்தி வந்தனவென்பதை யாம் முற்கூறியவாறு அவ்வச் சூத்திரங்க ளுள் வைத்து ஆராயய்ந்து காட்டுதும்.
 
“அதுவென் வேற்றுமை உயர்திணை தொகைவயின்
அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே”
 
  என்னுஞ் சூத்திரத்துள் வருந்தொகை என்பதுஉரையாசிரியர்மதப்படி சம்பந்தப்படுதல் என்னும் பொருளில் வருவதாகக்குறிப்பாசிரியர் கூறியுள்ளார்.உரையாசிரியரோ, முதலடிக்கு, ஆறாம் வேற்றுமைக்குரிய முறைப்பொருள் உயர்திணைக்காயின்எனக் கருத்துரைகூறியுள்ளார் அன்றி அதன் பதப்பொருள்கூறினாரல்லர்.ஆதலின் உயர்திணைக்காயி னென்பதற்கு உயர்திணைத்தொகைக்கண் வருமாயின் என்பதே பொருளாகும்.முறைப்பொருள்உயர்திணைத் தொகைக்கண்ணும் அஃறிணைத் தொகைக்கண்ணும் வருதலின் அவ்வாறு கூறினார்.குறிப்பாசிரியர்கூறியவாறு சம்பந்தப்படுதல் என்னும் பொருளிற்றொகையென்பது வந்ததாயின் அது விரியுங்கால் உயர்திணையொடு தொகைவயின் எனவிரிந்து நிற்றல்வேண்டும்.அவ்வாறு நில்லாமையின் அது பொருந்தாதென்பது அன்றியும் சம்பந்தப்பட்டவிடத்து என்று குறிப்பாசிரியர் கூறியுள்ளார்.அங்ஙனம்பெயரெச்சப் பொருள்படுதற்குத் தொகைவயின் என்ற பாடம்பொருந்தாதுஉயர்திணையொடு தொகுவயின் என்றிருத்தல்வேண்டும்.அங்ஙனம் ஆசிரியர் சூத்திரியாமையின் அவர்கருத்து நிரம்பாதென்பது.அன்றியும், தொகை என்பதுஉரையாசிரியர் கருத்தின்றாயிற் சேனாவரையர் மறுத்திருப்பர்.மறுக்காமையானும் அவர்க்கும் அதுவே கருத்தென்பது பெறப்படும்.ஆதலிற் றொகை சமாசமென்பதே ஆசிரியர் கருத்தாதல் துணிபு.அங்ஙனேல் உயர்திணைதொகைக்கண் அது உருபு வருவதுவழுவென்பது பெறப்படாதன்னறோவெனின், நன்று சொன்னாய்! தொகை என்னாது உயர்திணைத்தொகை என்றதனால் அது வழுவாதல் பெறப்படு மென்பது.உயர்திணைக்தொகைஎன்பதுஉயர்திணைப்பொருளோடு தொக்க தொகைஎன்றாவது உயர்திணைப்பொருட்கட் டொக்க தொகை என்றாவது விரியும்.ஆங்ஙனம் விரியவே அது உருபு வாராமைக்குக் காரணம் உயர்திணைப்பொருளோடு தொக்கமை என்பது பெறப்படும்.ஆதலின் வழுவென்பது பெறப்படாமையாண்டையதுஎன்பது.உயர்திணைத்தொகை என்பது பின்மொழி நிலையல்ல. “உயர்திணை யும்மைத்தொகைபல ரீறே” என நன்னுாலாரும் இங்கனமே பின்மொழிநிலையலாகக் கூறுதல் காண்க, இதுபற்றியே சேனாவரையரும் உயர்திணைத் தொகைவயி னதுவெனுருபுகெடக் குகரம் வருமென்றதனால் ஆறனுருபு அஃறிணைப்பாறோன்ற நிற்றல் பெற்றாம்” எனக் கூறியதூஉமென்க. உயர்திணைத்தொகைக்க ணதுவெனுருபுகெடக் குகரம் வருமெனவே அஃறிணைத்தொகைக்கண் இரண்டும் வரும் என்பதுபெற்றாம். இரண்டும் வருமென்பது“முறைகொண்டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும்”என்பதனாற் கூறுப. ஆதலீற் றொகைக்கண் எவ்வுருபு விரித்தாலென்?என்னும் ஆகேஷபம் பொருந்தாதென்பது. இனி,
 
“ஒம்படைக் கிளவிக் கையு மானும்
தாம்பிரி விலவே தொகைவருகாலை”
 
  என்பது சூத்திரம்.இச்சூத்திரச் குறிப்பில், ‘புலியாற் போற்றிவா‘என்னுந்தொடர்க்குப் பொருள் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு“புலியைப் போற்றிவா” என்றாவது “புலியாற் போற்றிவா” என்றாவது கொண்டுவிடலாம் என்று குறிப்பாசிரியர் கூறினார். இதுசெயப்படு பொருட்கண் ஏதுப்பொருள்வந்த மயக்கமேயன்றிப்பொருளால் வேறுபாடுடையதன்று.ஆதலிற் சந்தர்ப்பத்துச்கேற்றவாறு கொண்டுவிடலாம் எனக் குறிப்பாசிரியர் கூறியகருத்துநன்கு புலப்படவில்லைபுலிபோற்றிவா என்பது தனக்குத் தீங்குசெய்யாமற் போற்றிவரப்படுதல் பற்றிப் புலி செயப்படுபொருளாயும் போற்றிவருதற்குக் காரணமாதல்பற்றி ஏதுப்பொருளாயும் கொள்ளப்படுதலால் இரண்டுபொருளும் ஒருபொருட்கண்ணே வந்தனவேயாம். புலியைப் போற்றிவர என்னும்இரண்டாவதற்குப் பொருள் ‘உனக்கு தீங்குசெய்யாமற் புலியைப் போற்றிவா‘ என்பதன்றி, வேறொன்று அதற்குத் தீங்குசெய்யாமற் புவியைப் போற்றிவாஎன்பதன்று. .ஆதலால் இதன்கட் சந்தர்ப்பத்தாற் கொள்ளக்கிடந்தபொருள் யாதுமில்லைபொருண்மயங்காதுஉருபுமாத்திரம் மயங்கியதாகக் கொள்ளிற்குறிப்பாசிரியர் பொருள் பொருந்தும்.இதுபொருண்மயக்கமாதலிற் பொருந்தாது.ஆதலின்இச்சூத்திரமெற்றுக்கென்று மாகேஷபமும் ஈண்டுத்தோன்றாது.இதன்கட் டொகைஎனவந்தமையே குறிப்பாசிரியர் வெறுப்புக்குக் காரணம்போலும்.
 
இனி, “குத்தொக வரூஉங்கொடையெதிர் கிளவி
அத்தொகை யாறற் குரித்து மாகும்”
 
  என்பது சூத்திரம் இச் சூத்திரந்தொகை விதியன்றென்பதை மாற்றுதற்காகப்போலும் முற்சூத்திரங்களால் ‘நாகர்க்குப்பலிகொடுத்தான்‘ ‘நாகர்பலிகொடுத்தான்‘ என்று இரண்டுவகையாகப் பிரயோகம்வரலாமென்று தெரிய நாகாது பலிகொடுத்தான் என்றும் வரலாமென்பதை இச்சூத்திரம் விதிக்கின்றது என்று குறிப்பாசிரியர் இச்சூத்திரத்தின் முதலடிக்குக்குவ்வுருபு. தொகும்படிவருகின்ற கொடையெதிர்பொருண்மயையுணர்த்துந் தொகைச்சொல் என்று பொருள் கொள்ளப்படும், கொடையெதிர் பொருண்மையில் வருந்தொகை எனவே அப்பொருட்கண்தொக்கதொகை என்பது கருத்தாயிற்று. ஆகவேகொடையெதிர்கிளவி என்பது ஈண்டுக்கொடுத்தலென்னும் வருமொழியைக் குறித்தன்று என்பது பெற்றாம். கொடையெதிர்தல் என்பதற்குச் சேனாவரையர் கொடையை விரும்பிமேற்கோடல்என்று பொருள் கூறியதனாற் கொடையெதிர்நேர்தல் என்பது பெறப்படும். அன்றியும் நச்சினார்க்கினியர் நாகர்க்கு நேர்ந்த பலி எனவே அது பிறர்க்காகாது அவருடைமையாயிற்றாதலின் ஆண்டு ஆறுவதும் உரித்தாகப்பெற்றது. சாத்தற்கு நேர்ந்தசோறென்புழி அது பிறர்க்குமாதலின் ஆண்டு ஆறாவது நில்லாது. தெய்வமல்லாதாரினுஞ் சிறந்தணிக்கு நேர்ந்ததேல் ஆண்டாறாவது வரும் என்பதுணர்க என்று விளக்கக்கூறியதாலும் அது பெறப்படும். உரையாசிரியர்க்குமிதுவேகருத்தாதல்நாகர்பலிகொடுத்தான்என உதராணங்காட்டாது நாகர்பலி என உதாரணங்காட்டியதாலறியப்படும். அவர் ஆண்டு நாகர்க்குப்பலிஎன ஆறாவது தொக்கு நின்றதுஎன்றது குத்தொக என்பதைவிளங்கவைத்ததேயாம். அன்றிக் குறிப்பாசிரியர் கருத்தின்படிதொக்குவிரியும் என்பதை உணர்த்தக்கூறியவரல்லர்.இன்னும்கொடையெதிர்தல் நேர்தல்என்பதேஅவர்க்குங் கருத்தாதல், “நாகர்பலிஎன்பது அவர்க்குத்திரிபில்லாமையின் நாகாதுபலியென உடைமைக்கிழமை செப்பலாயிற்று” என அவர் கூ.றியதனா லறியக்கிடக்கின்றது. இக்கருத்தை யோர்ந்த சேனாவையர்“நாகர்க்கு கொடுத்தலை விரும்பி மேற்கொண்டவழியவர்க்  கஃதுடைமையாதலிற் கிழமைப்பொருட்குரிய உருபாற்கூறினும்அமையும்என்றவாறு‘ என விளங்கக் கூறினார்.இதனையுணராது குறிப்பாசிரியர் பாசஷாந்தாப் பொருளென்றது தவறேயாம். உரையாசிரியர் ‘கொடையெதிர்ந்து நின்றவழி‘ என்றது கருத்துப்பொருளேயாம், அதற்குக் கொடையெதிர் பொருளுற்று நின்றவழி என்பது பொருள். நாகர்க்குப் பலிகொடுத்தான் நாகாது பலிகொடுத்தான் என்பது தொடர்மொழி மயக்கமாதலின் நாகாது ‘ஏனை யுருபு மன்ன மரபின‘ என்னுஞ் சூத்திரத்தான் முடிக்கப்படும். அச்சூத்திரத்தின்கண் ‘அவட்குக் குற்றேவல் செய்யும் அவளது குற்றவெல் செய்யும்‘ எனச் சேனாவரையரும் உதாரணரங் காட்டுதல் காண்க. நாகர்பலி என்பது தொக்குவருமன்றேவெனின், ஆண்டுக் குவ்வுருபுக்கு முடிவுகொடுத்தான் என்பதன்றுநாகர்க்கு நேர்ந்த பலி என விரிதலின் நேர்தலே யதற்கு முடிபாம். இது போல்வனவற்றை மத்தியபதலோபன் என்றும் நாகர்க்குப் பலிகொடுத்தான் என்பதுபோல்வனவற்றை உபபதவிபத்தியென்றும் பிரயோகவிவேக நூலாரும் கூறுதல் காண்க. ஆதலின் இதனுள்ளும் தொக என்பது சமாசனைக் குறித்துவந்ததென்பதே துணிபாம். இனி,
 
“அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு
மெச்ச மிலவே பொருள்வயினான”
 
  என்பது சூத்திரம். இதன்கட் பொருள்வயினான என்பதற்குப் பொருட்கண் என்று உரையாசிரியரும், ஏனையோர் வேற்றுமை தொக அதன் பொருள் நின்றவழி என்றும் உரைத்தனர் இவற்றுள் உரையாசிரியர் பொருளே! பொருத்தமுடைத்தென்று குறிப்பாசிரியர் கூறியுள்ளார்.உரையாசிரியர் உரைக்கண் அப் பொருள்காணப்படவில்லை.ஆயினும் அப்பொருள், தொகை என்பதை விலக்காது.ஏனெனின் “தொகைவரு காலை” என்பதை யாவற்றிற்குங் கூட்டுக என முற்கூறினாரதலிற் றொகையதிகாரமென்பது பெறுதுமாதலின். அன்றியும், பொருள்மயக்க மென்றதனாற் றொடர்க்கண் என்பதுதுணிபாகாது தொகைக்கன்ணும் வருதலின். இனி ஐந்து மிரண்டு மெச்சமில என்றதனால் ஐந்தும் வரும் இரண்டும் வரும் என்பது பெறப்படுதலின் உம்மைகள் எச்சவும்மைகளாயும் கின்று தொகைவிரிக்கண் வரும் மயக்கத்தையே காட்டலானும் அதுநன்கு துணிபாம். தொடர்விரி மயக்கமாயின் ஆசிரியர் ஐந்தன் பொருள் இரண்டாவதாற் றோன்றும் எனக் கூறுவார் பின் “இதன திதுவிற் றென்னுங் கிளவியும்..........நான்கனுருபிற் றொன்னெறி மாபின தோன்ற லாறே” எனக் கூறினாற்போல என்பது ஆசிரியர் ”கரும மல்லாச் சார்பென் கிளவிக்-குரிமையுமுடைத்தே கண்ணெள் வேற்றுமை” என்பது முதலாகவருஞ் சூத்திரங்களிலெல்லாம் உம்மை கொடுத்ததுதொகைவிரி மயக்கமென்பதைப் புலப்படுத்தற்கேயாம். இச்சூத்திரமும் தொகைவிரி மயக்கங் கூறியதென்பதே துணிபாம்.
 
    இனி, “உருபு தொக வருதலும்” என்பதில் வரும் “தொக” என்பதும் “மெய்யுருபு தொகா விறுதி யான” என்பதில் வரும் “தொகா” வென்பதும் சமாசனையே யுணர்த்து மென்பது செந்தமிழ் உசு-ந் தொகுதி க-ம் பகுதியில் வெளி வந்த “தொகைநிலை” எனும் பொருளுரைநோக்கி அறிக.
 
    இதுகாறுங் கூறியவற்றால் “தொகை, தொக, தொகா”என்பன சமாசனையே யுணர்த்தி வந்தன வென்பது வலியுறுத்தப்பட்டது.ஆதலின், அவைகள் சமாசனை யுணர்த்தி வந்தன வன்றெனக் குறிப்பாசிரியர் கூறியதுபொருந்தாதென்பது.
 
    இன்னும் “நாகர்பலி,” “முறைக் குத்து,”“காட்டியானை”என்னுக் தொகைகள் உருபும் பொருளும் விரிதலிற் குறிப்பாசிரியர் உருபும் பொருளும் விரிவன ஒன்றுமின்றெனச்கூறியதூஉம் பொருந்தாதென்க.
 
-“செந்தமிழ்” தொகுதி உஎ பகுதி எ.கூ

பிறிதுபிறிதேற்றல்

“பிறிதுபிறி தேற்றலுமுருபுதொக வருதலு
  நெறிபட வழங்கியவழிமருங் கென்ப”
 
    என்னுச் தொல்காப்பியச் சூத்திரத்தினாட் “பிறிதுபிறிதேற்ற லும்” என்பதற்கு, இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்னும் மூவரும், ஆறாம் வேற்றுமையுருபு மற்றைய உருபுகளைஏற்றலும் எனப் பொருளுரைத்துச் சாத்தனதனைசாத்தனதனால்.............சாச்தனதண்கண் என உதாரணம் காட்டினார்கள். அப்பொருட்கண்ணே தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பாசிரியர் சில தடை நிகழ்த்தியுள்ளார்கள். அத்தடைகள் வருமாறு-
 
    சாத்தனதாடை என்பதுகாத்தனுடைய ஆடை எனப் பொருள்படுதல் போலச் சாத்தனதனைஎன்புழிச் சாத்தனது என்பதுசாத்தனுடைய எனப் பொருள்படாதுசாத்தனுடைய பொருள் எனப் பொருள்படுதலிற் பெயர் உருபேற்றதன்றி, உருபு உருபேற்றதலிற் என்பது ஒன்று.
 
    மற்றொன்று, சாத்தனது என்பது! பெயராயின் பெயர் உருபேற்றலின்கண் மாறுபாடொன்று மின்மையின் ஆதுகூறல் வேண்டியதின்று என்பது
 
    இவ்விருதடைகளுள், சாத்தனதனை என்புழிச் சாத்தனதுஎன்பது, சாத்தனுடைய எனஆறனுருபின் பொருள்படாது, சாத்தனுடைய பொருள் எனப் பெயாரய் நிற்றலின்ஆறனுரு பேற்ற சொல்லன்று என்னும் .தடையைமுதலில் ஆராய்தும்.
 
    ஆறாம் வேற்றுனம அதுஉருபிற்கு அஃறிணைஒருமைப் பொருளைச் தொல்காப்பியர், ஆறாம் வேற்றுமைச் சூத்திரத்துவிதந்துகூறிற்றிலராயினும் “இதனதிது” என்பதனானேகுறிப் பித்துள்ளார். அதுகொண்டு உரையாசிரியர்கள்மூவரும் ‘அது‘ஒருமை யுருபென்று உரையிற் கூறினார்கள். அன்றியும், முதனூலாசிரியராகிய அகத்தியனார்

செந்தமிழ்த்தொகுதிஉக-ல், சஉ-ம் பக்கம் பார்க்க.
 
“ஆற னுருபே யதுவாதவ்வும்
வேறொன் றுரியதைத்தனக்குரி யதையென.
விருபாற் கிழமையின் மருவுற வருமே”
    என்று கூறியதாக இலக்கணவிளக்கநூலாருரைத்தனர்.நன்னூலாரும்
 
“ஆற னொருமைச் கதுவு மாதுவும்
பன்மைக் கவ்வு முருபாம்”
    எனக் கூறினர். ஆதலின், ‘அது‘ என்னும் ஆறாம்வேற்றுமையுருபு அஃறிணையொருமைப் பொருளுண்ர்ந்துமென்பது துணிபேயாம்.
 
    ஆகவே, ஒருமையுருபாகியஅது என்பதுதன்னையேற்கும் சாத்தன் என்னும் பெயரோடு கூடிச் சாத்தனுடையதுஎன்னும் பொருள்பட நிற்குமன்றிச் சாத்தனுடைய எனப் பொருள்படாதுஎன்பதுந் திண்ணமேயாம். ஆகவே ‘சாத்தனதாடை‘ என்பது “சாத்தனுடைய பொருளாகியஆடை” என்றும், ‘சாத்தன ஆடை கள்‘ என்பது  ‘சாத்தனுடைய பொருள்களாகிய ஆடைகள்‘, என்னும் பொருடந்து முறையே, ‘இதனதித‘, ‘இதனவிவை‘ என ஆறாம்வேற்றுமைப் பொருடருமென்பநூஉம், ஆண்டு அதுவும் அகரமும் உருபெல்பதூஉம் வெள்ளிடை மலைபோல் விளங்கக்கிடந்தனவேயாம். கிடந்தன எனவே, சாத்தனதாடை என்புழி ஆண்டு, ‘அது‘, உருபு பெயராய் நின்றே ஆடையொடு தொடர்ந்தாற் போலச் ‘சாத்தனதனை‘ என்புழியும் ‘அது‘ உருபுபெயராய் நின்றே ‘ஐ‘ உருபொடு ,தொடரும் என்பநூஉம், ஆண்டுவரும்அழிவும் உருபென்பதூஉம் பெறப்படும். படவே முதலாவதுதடை தடையன்றென்பது தூணிபாயீற்று.
 
    இனி, அது உருபு ‘சாத்தனதாடை‘ என்றவிடத்து எப்படி.ச் ‘சாத்தனுடையதாகிய ஆடை‘ எனநின்று உடைமைப்பொரு ளுணர்த்திற்றே, அப்படியே. ‘சாத்தனதனை‘ என்றவிடத்தும் “சாத்தனுடையதை‘ என நின்று உடைமைப்பொருளுண்ரத்தலினும் தடையின்மை காண்க.
 
    ஆதலின் . ‘சாத்தனதனை‘ என்புழிச் சாத்தனது என்பது உருபானும் பொருளானும் ‘சாத்தனதாடை! என்புழிச் சாத்த
 
    இங்ஙனம் முதலாவதுதடைக்குத் தடையுண்டாகவே இரண்டாவது தடைக்குச் தடையுண்டாயிற்றுஎங்ஙனமெனின்,. பிறிதோருருபு பிறிதோருருபையேற்றன் மாறுபாடாதலானும், ஏனைப் பெயர்போலாது உருபே பெயராய் நின்று உருபேற்றலானு மென்பது,
 
    இன்னும் சாத்தனது என்பது சாத்தனுடைய எனப் பொருள் படுமாயின், ஒருமை, பன்மை, உயர்திணை, .அஃறிணை என்ற நியதியின்றி யாண்டும் அது உருபுவரலாமெனப்பட்டு, நூலாசிரியர்கள் கருத்தூக்களோடும மாறுபடும். என்னை? சாத்த னது ஆடை= சாத்தனுடைய ஆடை, சாத்தனது ஆடைகள்= சாத்தனுடைய ஆடைகள், சாத்தனது மகன்= சாத்தனுடைய மகன் எனப் பொருடந்து வழுவின்றாய் முடிதலின். அன்றியும், உயர்திணைப்பொருளில்வரும் ஆறாம்வேற்றுமை தொகைக்கண் , அது உருபு விரிக்கப்படாது எனத் தொல்காப்பியர் கூறிய “அது வென் வேற்றுமை யுயர்திணைத்தொகைவெயி-னதுவெ னுருபு கெடக் குகாம் வருமே” என்னுஞ் சூத்திரமும் வேண்டியதின்றாம். அன்றியும், ”உடைய”என்பதையே உருபாகக் கூறியும் விடலாம். ஆதலின் உடைய என்பது ஆறாம்வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள் இது என்பதைக் காட்ட விரிக்கப்படும் ஒர் சொல்லுருபேயன்றி அதுவின் பொருளன்று என்பது தெற்றெனப்படும்.
 
    இனி, இடைச்சொற்கள் பெயர் வினைகளைச் சார்ந்தன்றித்தம்பொருளுணர்த்தா.என்னை?“இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்-நடைபெற்றியலுந் தமக்கியல் பிலவே” எனத் தொல்காப்பியரும், அச்சூத்திரவுனரக்கண்“தமக்கெனப் பொருளின்மை இடைச்சொற்கிலக்கிணமாம்” எனச் சேனாவரையருங் கூறுதலின்.அதனால், ஆறனுருபாகிய“அதுவும் இடைச்சொல்லாதலின் தன்னையேற்கும் பெயரைச் சார்ந்துநின்றே, தன்னெருமைப் பொருளுணர்த்துமன்றித்தனித்து நின்று ,தன் பொருள் உணர்த்தாது என்பது பெறப்படும். படவேநடந்தது என்புழிந் துவ்விகுதி நட என்னும் முதனிலைவினையோடுகூடித்தன் னொருமைப்பொருளுணர்த்தினாற்போலவே, அது உருபும் தன்னையேற்கும் பெயரோடுகூடிச்.சாத்தனது என நின்றே ஒருமைப்பொருளுணர்த்துமென்பது துணிபாம்.ஆகவே ஆண்டு அது உருபுஒருமையுணர்த்துங்கால் முற்றாயேனும்.பெயராயேனும் நின்றே உணர்த்துவதல்லது.பிறவாறு உணர்த்தமாட்டாது என்பதும் துணிபாயிற்று. தொல்காப்பியர்“அதுச் சொல் வேற்றுமை யுடைமையானும்” என்னுஞ் சூத்திரத்தினால் ஆறாம்வேற்றுமை உடைமைப்பொருள் பற்றியும் குறிப்பு முற்றுப் பிறக்குமென்றலின், ‘சாத்தனது‘ என்னும்  உருபே வேறுபட்டு கின்றதென்பது பெறப்படுதலின், ‘சாத்தனது‘ என்னும் பெயராயும் உருபு வேறுபடுமென்பது பெறப்படும். இதனை அச்சூத்திரவுரையில், நச்சினார்க்கினியர், “உடைமைப்பொருளாவது- ஒன்றற்குஒன்றை உகிமைசெய்துநிற்பது.அஃது இப்பொருளினுடையது இப்பொருளென்றும், இப்பொருள் இப் பொருளினுடையதாயிருந்தது என்றும், இப்பொருளையுடையதாயிருந்ததுஇப்பொருளென்றும் மூன்றுவகைப்படும். அவை முறையே, ‘சாத்தனதாடை‘ என ஆறனுருபாயும், “.ஆடைசாத்தனது‘எனவும், ‘குழைபன், கச்சினன்‘ எனவும்வினைக்குறிப்பாயும் நிற்கும். உருபு உணர்த்தும்வழி ஆடை முதலியனமுன்னிற்குமாறும், குறிப்பு உணர்த்தும்வழி ஆடை முதலியன பின்னிற்குமாறுடம் உணர்க… எனக் கூறுமாற்றானும் ஒர்ந்துணர்ந்தகொள்க. சாத்தனதாடை. என்றவழி, அது உருபென்ற தன்றிப் பெயரென்று நச்சினார்க்கினியர்கூறிற்றிலாரா லெனின், “இறுதியுமிடையும்” என்னும் வேற்றுமைமயங்கியற் சூத்திரவுரையின்கண் “சாத்தனதாடை” என்புழி “அது”வென்பதுபெயராய் நிற்கும்” எனக் கூறினாராதலின் ஈண்டுக் கூறிற்றிலரென்க.
 
    இன்னும், ஆறனுருபு இவ்வாறு பெயராய் நிற்கும் என்னுங் கருத்துப்பற்றியே சேனாவரையரும், மேற்காட்டிய  “இறுதியு மிடையும்” என்னுஞ் சூத்திரதொகையின்கண்“ஆறுவதும் ஏழாவதும் ‘சாத்தனதாடை‘, ‘குன்றத்தின்கட் கூகை‘, என இடை நின்று தம்பொருளுணர்த்தினாற்போல ‘ஆடைசாத்தனது‘‘கூகை குன்றத்துக்கண், என இறுதிநின்றவழி அப்பொருளுணர்த்தாமையான் .அவ்வுருபுகள் ஆண்டு வரையப்படும். ஆறனுருபேற்றபெயர் உருபோடுகூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்றலுடைமையான்அந்நிலைக்கண் ஆடைசாத்தனது என இறுதிக்கண்ணு நிற்குமென்பது எனக் கூறினார்.முற்று அது உருபிற்குக்கூறிப உடைமைப் பொருளுணர்த்திவருதலினாற்றான் சாத்தனது ஆடை என்பது ஆடை சாத்தனது என நிற்குமென்று இளம்பூரணரும் உதாரணங்காட்டினார். முற்றாய் நிற்கும் சாத்தனது என்பதுசாத்தனதாடை என நிற்குங்கால் வருமொழியோடு பிளவுபட்டு ஒலித்துநிற்கும் என்பதும், பெயராய் நிற்கும் சாத்தனது என்பது வருமொழியோடு பிளவுபடாதுஒன்று பட்டுடாலித்துநிற்குமென்பதும் உணர்ந்துகொள்க.
 
    இனிச் சாத்தனது ஆடை என்புழி வரும் ‘அது‘ தொக்கு, சாத்தனாடை என நின்றவழியும், சாத்தனுடைய பொருளாகிய ஆடை என்னும் விரிப்பொருடருதற் கேற்புடைமை கண்டே, சாத்தனதுஆடை என்பதை விரியென்றும், சாத்தனாடை என்பதைத் தொகை என்றும் ஆசிரியர் வழங்கினர்போலும். இவ்வழக்கு, இவ்வழக்கைஉணர்ந்துரைத்த தொல்லாசிரியர்க்கன்றி ஏனையோர்க்குப் புலப்படலரிதென்க. இஃதுணர்ந்தே பிறிதுபிறி தேற்றலும் வழக்குநெறி என்பதை உணர்த்துதற்குப் “!பிறிதுபிறிதேற்றலும் ...... “நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப” என்றார் தொல்காப்பியரும்.
 
    அற்றேல், சாத்தனது ஆடை என்புழிச் சாத்தனது என்பது பெயர்ப்பொருடரின் அது பண்புத்தொகையாமன்றோவெனின், ஆகாது.என்னை?சாத்தனது ஆடை என்னும் ஆறாம்வேற்றுமைத்தொனக இதனது இது என்னும் பொருள்படவருதலானும் பண்புத்தொகை  இது என்னும் பொருள்பட வருதலானு மென்பது. இவ்வேறுபா டுணர்ந்துகோடற்கே ,தொல்காப்பியம் ஆறாம்வேற்றுமைச் சூத்திரத்து இதனது இது என்றும், பண்புத்தொகைச்  சூத்திரத்து இன்னது இது என்றும் விதந்து கூறினாரென்பது. அங்ஙனேல், சாத்தனது என்பது உடைப்பொருளையும் உணர்த்தி நிற்றலின் ஆடையோடு தொடரவேண்டியதின்றெனின், அற்றன்று. அது உடைப்பொருளைப் பொதுவாகத் தெரித்துநின்றதன்றிச் சிறப்பாகத் தெரித்தேநில்லாமையின் இது எனச் சிறப்பாக உணர ஆடையோடு ,தொடர்ந்தேநிற்றல்வேண்டுமென்பது இதனால் ஆறாம்வேற்றுமையை இவ்வாறு கொள்ளும் வழக்கு, தமிழ்வழக்கென்பதுஉணரக்கிடக்கின்றது. என்னை? வடநூலார் ஆறாம்வேற்றுமை விரியை (ராமஸ்ய வஸ்திரம்)இராமனுடைய ஆடையென்றும், தமிழ் நூலார்இராமனது ஆடை என்றும் கோடலின். அது என்பதிற்கு உடைய எனப் பொருள்கொள்ளின் இம்மாறுயாடு ஒன்றும் வாராதேயெனின் அது பொருந்தாது.என்னை? தமிழ் நூலார்  ஒருமை பன்மை கூறினமையின். இதனை முன்னும் உரைத்தாம்.ஆகையால் வடமொழியில்வரும் ஆறாம் வேற்றுமைக்கும் தமிழில்வரும் ஆறாம் வேற்றுமைக்கும் சிறிது வேறுபாடுண்டெனஅறிந்துகொள்க.
 
    இங்ஙனமாக, சிவஞான முனிவரைப் பின்பற்றியே, உருபு உருபேலாதென்றும், பெய ருருபேற்றலின்கன் மாறுபாடின்றாதலின் அது கூறல் வேண்டியதின்றென்றும் தொல்காப்பியச் சொல்லதிகராக் குறிப்பாசிரியர் கூறினார் என்பது எனது அபிப்பிராயம். சிவஞான முனிவர், “இதனது இது” என்றும், “இதனது இது விற்று” என்றுந் தொல்காப்பியர் கூறிய தொடர்களின் பொருள்களைநுண்மையாக ஆராய்ந்துணர்ந்திருப்பரேல், பிறிது பிறிதேற்கமாட்டாதெனக் கூறுதற்கு எழுந்திருக்கமாட்டார் என் பது என்றுணிபு.
 
    இதுகாறுங் கூறியவாற்றாற் போந்தபொருள் யாவையோ எனின், ஆறாம்வேற்றுமை அது உருபு .ஒருமைப்பொருடரும் என .ஆசிரியர் ஒதுதலின் அதுபெயர்சார்ந்தே ஒருமைப் பொரு டரும் என்பதூஉம், தருங்கால் சாத்தனது என்பதுசாத்தனுடையது எனப் பொருடந்தே ஒருமையுணர்த்துமென்பதூஉம், சாத்தனுடைய எனப் பொருடரின் ஒருமை உணர்த்தாதென்ப தூஉம், சாத்தனுடையது என்பதற்குச் சாத்தனுடையபொருள் என்பதே பொருள் என்பதூஉம், சாத்தனது ஆடை என்புழிச் சாத்தனது என்பதற்கும் அதுவே பொருளென்பதூஉம், அது, போலவே சாத்தனதனை என்புழியும் சாத்தனுடைய பொருளை என்பதே பொருள் என்பதுாஉம், பொருள் அழிவாதலாற்றின்உரையாசிரியர்கள் மூவரும் “பிறிது பிறிதேற்றறும்” என்பதற்கு ஆறனுருபு பிறிதுருபேற்றலும் எனப் பொருள் கூறிஞர்களென் பதூஉம் அதனால் அவருரைக்கண் யாதுரந் தடையில்ல யென்பதூஉம் பிறவுமென்க.
 
-“செந்தமிழ்” தொகு.உஎ பகுதி-க.

ஆறனுருபு பிறிதுருபேற்றல்

    “ஆற னுருபு மேற்குமவ் வுருபே” என்பது நன்னூற் சூத்திரம். இதற்கு ஆறாம்வேற்றுமையுருபும் மற்றையுருபுகளை யேற்றுவருமெனப் பொருளுரைத்து, அஃதேற்றுவருங்கால் சாத்தனது, சாத்தனதனை, சாத்தனதால், சாத்தனதற்கு, சாத்தனதனின் சாத்தனதனது, சாத்தனதன்கண் என உதாரணமுங் காட்டினர் மயிலைநாதர், இலக்கண விளக்க நூலாரும் அவ்வாறேயுரைத்தனர். இவர்கள் உரையை மறுத்துச் சிவஞானமுனிவர், உருபு இடைச்சொல்லாதலானும் சாத்தனதனை என்புழிச் சாத்தனது என்பது துவ்விகுதியும் ஆகாச் சாரியையும் பெற்று உருபேற்று நின்ற பெயராமாதலின் ஆண்டு அதுவென ஒன்றாக வைத்து ஆறனுருபென்றல் பொருந்தாமையானும் பொருந்தாதெனக் கூறினர். அம்மறுப்புப் பொருத்தமுடையதன்றென்பதை யாம் ஈண்டுக் காட்டுலாம்.
 
    “பெயர்வழித் தம்பொருள் தரவரு முருபே” எனவும் ”ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கு மீறாய்” எனவும் கூறப்படுதலினால் பெயர்ச்சொல்லே புருபேற்கு மென்பதும் ஏனைச்சொற்களும் பெயராய் நின்றவிடத்து உருபேற்குமென்பதும் நன்கு புலப்படும். ஆறாம்வேற்றுமையுருபேற்று நின்ற சாத்தனது என்னும் சொல் ஆடையென்னும் சொல்லோடு சேருமிடத்து, சாத்தனது ஆடையென! ஆறாம்வேற்றுமை உடைமைப் பொருளில் வருகின்றது. ஆடை சாத்தனது  என்புழி அவ்வுருபேற்றுநின்ற சொல்லேஅப்பொருளில் வினைக்குறிப்பு முற்றாகின்றது, அச்சொல் வினைக்குறிப்பு முற்றாயவிடத்துப் பாலுணர்த்தும் ஈறுநோக்கி அவ்வுருபே துவ்விகுதியும் அகாச் சாரியையுமாகப் பிரிக்கப்படுகின்றது. பிரிக்கப்படினும் சாதனுடையது என உடைமைப் பொருளில் வருதலானே ஆறனுருபு என்றார்.ஆறனுருபென்பதற்கு ஆறனுருபேற்று நின்ற கொல்லென்பதே யீண்டுப் பொரு ளாகும். இதுபற்றியேசேனாவரையரும் சொல்லதிகாரத்து “இறுதியுமிடையும்” என்னும் க0ங-ம் சூத்திரத்துவிரிவுரையின்கண்ஆறனுருபேற்ற பெயர் உருபோடுகூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்றலுடைமையான் .அந்நிலைமைக்கண் ஆடை சாத்தனது என இறுதிக்கண்ணும் நிற்குமென்றும்,
 
“ஆடூஉ வறிசொல்மகடுஉ வறிசொல்
பல்லோ ரறியும் சொல்லொடு சிவணி
யம்முப் பாற்சொல் லுயர்திணையவ்வே”
 
என்னும் உ-ம் சூத்திரவுரையின்கண் சிவணியென்னும் வினையெச்சம் உயர்திணையவென்னும் வினைமுற்றுக்கொண்டது ஆறாம் வேற்றுமையுருபேற்று கின்ற சொல் பெயராயும்வினைக்குறிப்பாயும் நிற்குமாதலால் என்றும் உரைத்தனர். இவ்வுரையைநுணுகிநோக்குமிடத்து உருபு இடையில்வரின் உருபாகவும் இறுதியில்வரின் வினைக்குறிப்பு முற்முகவும் கொள்ளப்படும் என்பதுநன்கு புலப்படுகின்ற. புலப்படுதலினால் சாத்தனது என்பது வினைக்குறிப்பு முற்றாய்நின்று உருபேற்குங்கால் குறிப்பு முற்றாலணையும் பெயராய்நின்று பிறிதுருபுகளை யேற்குமென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கக்கிடக்கின்றது.
 
    “இன்னும் மயிலைநாதர் சாத்தனது என்னும் ஆறாம் வேற்றுமையுருபேற்றுகின்ற சொல் எழுவாயுருபுமேற்கு மென்றும், அது சாத்தனதுவந்தது சாத்தன வந்தன எனவும், சாத்தனது நன்று சாத்தன நல்லன எனவும் வினையும் வினைரக்குறிப்பும் கொண்டு முடியும் என்றும் உரைத்தமையை யாம் உற்றுநோக்கும் போது ஆமும்லேற்.றுமையுரூபேற்று கின்ற சொல்லே வினைக்குறிப்புப் பெயயரய் நின்று பிறிதுருபேற்குமென்பறூஉம், ஏற்குங்காலும் தன் உடைமைப் பொருளிற் றீராமையின் ஆறனுரு பென்றே வழங்கிவந்தனரென்பதூஉம் நன்கறியக்கிடக்கின்றன.
 
    “இவ்வாறு சாத்தனது என்னும் ஆறாம்வேற்றுமையுருபேற்று நின்ற சொல் வினையாலணையும் பெயராய் நின்று பிறிதுருபை யேற்குமென்பது பற்றியே சேனாவரையரும்,
 
“பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமரூங் கென்ப”
 
என்னுஞ் சூத்திரத்தில், ‘பிறிது பிாமிதேற்றறும்! என்பதற்குப் பிறிதோருருபு பிறிதோருருபை யேற்றலும் என்று பொருள் கூறிச் சாத்தனதை என்பது முதலிய உதாரணங்களுங் காட்டிப் பெயரிறுதிநின்றஉருபு தன்பொருளோடு தொடராது பிறிதுருபையேற்றல் இலக்கணமன்மையின் வழுவமைதியென்றுங் கூறினார். உரையாசிரியர் முதலியோர்க்கும் இதுவே கருத்தாதல் அவரவருரைநோக்கித் தெளிக.
 
    “முனிவர் இவ்வுரைய மறுத்து இச்சூத்திரத்திற்கு இடையினும் இறுதியினும் உருபேற்றலும் இடையிற்றொக இறுதியினுருபு வருதலும் நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்துவருதலான் வழுவாகா என்றுரைத்த இதற்கு இடையினும் இறுதியினும் விரித்துவருமென்றும் அதுவடறீசலணி மதம் என்றும் பொருளுரைத்தனர்.தமிழ்மொழியிலக்கணம் கூறவந்த ஆசிரியர் அதன்கண் வடமொழியிலக்கணங் கூறினாரென்றல் பொருத்தமில் கூற்றாமாதலானும், கூறினும் “அளபிற் கோடலந்தணர் மறைத்தே” என்புழிப்போல இங்ஙனம் கூறுவர் வடநூலார் என விளங்கச் சூத்திரிப்பார்மன் அங்ஙனம் குத்திதிரியாமையானும், பிறாண்டும் வடநூலார்மதம் இஃதிஃதென எடுத்துக் காட்டும் வழக்கு இந்நூலகத்தின்மை யானும், “எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே-உடம்படு மெய்யினுருபுகொளல் வரையார்” எனவும், “உரைப்பொருட் கிளவிநீட்டமும் வரையார்” எனவும், “குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார்” எனவும், “பொருடெரி மருங்கின்....தோற்றமும் வரையா ரடிமறி யான” எனவும் வருமிட.ங்கடோறும் வரையாரென்பதற்குத் தமிழாசிரியர் என்பதே பொருளாக அமைதலின்ஈண்டும் அதுவே வினைமுதலாகக் கோடல் பொருந்துமன்றி, வடநூலார் எனக் கோடல் பொருந்தாதாதலானும், வடநூலார்மத மிதுவெனின், அறி வேண்டாக்கூற்முய் முடிதலனனும் வே.றயாடறிதற்குக் கூறினாரெனின் அதனாற் போந்தபயன் ஈண்டு யாது மின்றாதலானும் அவ்வுரைபொருந்தாதென்பது.
 
    “இன்னும்,
“ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபுதொகா விறுகி யான”
என்னுஞ் சூத்திரத்தின்கண்வரும் ‘தொகாவிறுதியான‘ என்னும் மறைப்பொருள் வேற்றுமைத்தொடரில் வருதலின், அத்தொடரிலேயே அப்பொருளிள் உடன்பாட்டுப் பொருளும் வருதல்வேண்டும்அவ்வாறு வருதல் முனிவருரைக்கின்மையானும் அவருரை பொருந்தாதாதென்பது.
 
    “இன்னும், ‘பிறிதுபிறிதேற்றலும் உருபுதொகவருதலும்! என்னுஞ் சூத்திரத்து, சூத்திரவிருத்தியுட் காட்டிய காரணங்களுள் உருபிடைச் சொல் வேற்றுமை யுருபேலாதென்பநூஉம், சாத்தனது என்பது துவ்விகுதியும் அகரச்சாரியையும்பெற்ற வினைக்குறிப்பாகுமன்றி உருபேற்ற பெயர்ச்சொல்லாகா தென்பதூஉம் முன்னே மறுக்கப்பட்டனவாதலானும், மறுக்கப்பட வேண்டியதாய் நின்ற “இனமல்லவற்றை உடனெண்ணுதல் மரபன்” றென்பது, சேனாவரையர் இச்சூத்திரம் வழுவமைதியென்றுகூறுதலின், வழுவமைத்தற்கண் வழுவாவனவற்னறயெல்லாம் வழுவாதலாகிய இனம்பற்றி உடன் எண்ணுதல் பொருந்துமென்பது அறியக்கிடத்தலான் அது மரபேயென மறக்கப்படுதலினாலும், அன்றியும், இருவழுவும் உருபுபற்றிய வழுவாதலானும் இனமாதல் பொருத்தமெனவும் மறுக்கப்படுதலி னாலும் சேனாவரையருரையே பொருத்தமென்பதுதுணிபாம். துணிபாகவே அவருரைக்குக் காரணமாய் கின்ற உரையாசிரியர் முதலியோருரையும் பொருத்தமுடைத்தென்பதூஉம், அவை பொருத்தமுடையவாகவே, அவ்வழியெழுந்த பின்னோருரைகளும் பொருத்தமுடையடுவன்பநூஉந் ,தென்றெனப்படும்.
 
    “அங்ஙனேல் உருபுபிறிதேற்றலும் என விளங்கச் சூத்திரியாது “பிறிது பிறிதேற்றலும்” எனச் சூத்திரித்ததென்னையெனின், அதனானும் ஒர்நயந்தோன்றற்கேயாம்.என்னைநயமோவெனின்?உருபு இடைச்சொல்லாதலின் பிறிதுருபை ஏற்க மாட்டாதாதலின், உருபு தன்னையேற்ற சொல்லோடுகூடிப் பெயர்த் தன்மை யெய்திநின்ற என்னும் வேற்றுமைநயமேயாம். அங்நூனேல், பெயர்த்தன்மையெய்தியதை உருபென்ற ,தென்னையெனின், தன்பொருளிற் றீராமையானென முன்னரே உரைத்தாம் ஆண்டுக் காண்க. நச்சினார்க்கினியரும் இச் சூத்திரவுரையில், பெயர்க்குப் பிறிதாய்நிற்றலின் பிறிதென்றார் என உரைத்தனர். அவர்ஈண்டுப் பெயரென்றதுசாத்தனது என்பதுபோல , ஆறாம் வேற்றுமை யுருபின் பொருளையுடைத்தாய் நின்ற பெயரல்லாதவைகளை.
 
    “இன்னும் சாத்தனது ஆடை.நல்லது என்றவிடத்து!ச் சாத்தனது ஆடை என்னுந் தொடர் சம்பந்தப்பொருளுணர்த்தி ஒரு சொல்லாய்நின்று பின் வினைகொண்டு முடிந்தாற்போலவே, சாத்தனது நல்வது என்றவிடத்து!ம் சாத்தனது என்பதுசாத்தனுடையதாயிருந்தாகிய ஆடை எனவிரிந்துநின்று பின் வினைகொண்டு முடிதலினாலும் ஆறாம் வேற்றுமையுருபே தன்னை யேற்றுநின்ற சொல்லோடு கூடித் தன் உடைமைப் பொருளிற்றீர்ந்துவினைக்குறிப்புப் பெயராயிற்று என்பதுநுணுகி நோக்குவார்க்கு நன்கு புலனாம்.
 
    “இனிச் ,சாத்தனது என்பதுபோல வேற்றுமைப் பொருள் பற்றிக்குறிப்பு வினைமுற்றுப் பிறத்தல் உண்டென்பது “அதுச் சொல் வேற்றுனம யுடைமை யானும்-கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும்” எனத் தொல்காப்பியனார் விதந்து கூறுதலானறியப்படுதலின், சாத்தனது என்பது ‘அதுச்சொல்‘ வேற்றுமைப் பொருளில்வந்து உடைமைப்பொருள் முன்னும் உடையது பின்னுமாக வரும் கேட்டது குழையது என்பது போலாது உடையது முன்னும் உடைமைப்பொருள் பின்னுமாக வந்த குறிப்புவினை முற்றாகிச் சர.க்த.னு!டையதாயிற்.று எனப் பொருள் தந்து உருபேற்ற சாத்தனதுபோல நிற்குமென்பதுநூஉம், பின் அதுபெயராய்நின்று உருபேற்குமென்பதூஉம் அக்காலத்துரையாசிரியர்களுக்கன்றி நூலாசிரியர்களுக்குங் கருத்தாதல் துணி யப்படும்.
 
    “இதுபற்றியே ஆடை சாத்தனது என்பது சாத்தனது ஆடை என நின்றாற்போல “பூருஷோராஜ்ஞ ராஜ்ஞ புரூஷ என நிற்கும் என்றார் பிரயோக விவேக நூலாகும்
 
    “இன்னும், சாத்தனது, சாத்தன என்னும் வினைக்குறிப்பு முற்றுக்களை ஒருமையீறும் பன்மையீறுமாகக் கொள்ளுதல் போலவே அது உருபையும் அகரவுருபையும் முறையே ஒருமையுருபும் பன்மையுருபுமாகக் கோடலானும் இரண்டற்குமுள்ளஒற்றுமை நன்கு புலப்படும். ஏனைவேற்றுமைகட் கங்ஙனங்கூறாமையும் ஈண்டு நோக்கத்தக்கது. அங்ஙனேல் வினையாலணையும் பெயரும் பெயருளடங்குதலின் வேறுகூறல் வேண்டாவெனின், அங்ஙனங் கூறினு மமையுமெனினும், உடைமைப்பொருளில் வரும் இதற்கும் ஏனைய பெயர்களுக்குமுள்ள வேறுபாடறிவித்தற்கு வேறு கூறினாரென்பது வினாவெதிர்வரும் வினாவும் செப்பாயடங்குமெனினும் வினாச் செப்பாதலாகிய வேறுபாடறிவித்தற்கு “வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே” எனவிதந்து கூறினாற்போல வென்பது.
 
    “இனி “ஆற னுருபு மேற்குமவ் வுருபே” என்பதற்கு முனிவருரைத்த உரையை ஆராய்வோம். அவருரைவருமாறு
 
    “அவ்வுருபு - எழுவாயாய்நின்ற அவ்வுருபே ஆறனுருபுமேற்கும்-ஐ முதலிய ஆறுருபுகளையும் ஏற்றுவரும் என்பது.
 
    “இவ்வுரையுள்  அவ்வுருபே என்பதற்குஅவ்வெழுவர யுருபென்று பொருள்கோடல் பொருந்தாதுஏனெனின், மேற்கூறிய“பெயரே ஐ ஆல் குஇன் அது கண்-விளியென் றாகு மவற்றின்பெயர்முறை” என்னுஞ் சூத்திரத்துஎட்டுருபு மொருங்குகூறப்பட்டிருத்தலின் அகரம் எட்டையுஞ் சுட்டுமேயன்றிப்பெயரைவேறுபிரித்துச் சுட்டுத லதற்குக் கூடாமையின். இனிஎழுவாயுருபு பிறிதுருபேற்குமென்றலும் பொருந்தாது.ஏனெனின் எழுவாயுருபு பெயர்தோன்று மாத்திரையேயாகலின்அதுதன்பொருளிற்றீராதுநின்று பிறிதுருபேற்கமாட்டாமையின்.பெயராய் நின்றேற்குமெனின்  பெயர் உருபேற்றல், “ஏற்குமெவ்வகைப் பெயர்க்கு மீறாய்” எனவும், பெயர்வழித் தம்பொருடாவரு முருபே” எனவும் மேற்கூறப்பட்ட சூத்திரங்களாற்கூ.றப்பட்டனவாதலின் ஈண்டுக் கூறல் கூறியது கூறலாமாதலின்அதுவும் பொருந்தாது.
 
    “இனி ஆறனுருபென்பதுஆறாம்வேற்றுமையுருபென்றுபொருள் படுவதன்றி ஆறுருபு என்ற பொருள்படாது.ஏனெனின்அன்சாயியை நிற்றலின்தவிர்வழி வந்த சாரியையெனின், அதுவும் பொருந்தாது.ஏனெனில், அங்ஙனமாளுதற் கருத்து, ஆசிரியர்கட்கின்றாமாதலின் நன்னூலார், “ஆறனொருனமக்கு”எனவும், “ஏழனுருபு” எனவும், “எட்டனுருபே” எனவும், தொல்காப்பியனார் “ஆறனுருபி னகரக்ளெவி” எனவும்,ஆறன் மருங்கின்” எனவும் “இரண்டன் மருங்கின்” எனவும் “ஆறனுருபினும்” இவ்வாறே பிறவுங் கூறுதலினானும் அவர்கட்கவ்வாறு ஆளுதற் கருத்தின்றென்பது பெறப்படும்.நன்னூலார் ஆறுருபுகள் என பொருள் கொள்ளவேண்டியவிடத்தெல்லாம் “இரண்டு முதலா விடையா றுருபும் – வெளிப்படலில்லது” எனவும் ஆறுருபு என்றே ஆளுமாற்றனும் அது பொருந்தாமை யறியப்படும்
 
    “இங்ஙனமே “ஆறு னுருபு மேற்குமவ் வுருபே” என்னஞ் சூத்திரத்திற்கு மயிலைநாதருரைத்தவுரைக்கு முனிவருரைத்த மறுப்பும் அச்சூத்திரத்திற்கு அவருரைத்தவுரையும் பொருத்தி லுரைகளாதல் தெளியப்படுதலின் மயிலைநாதருரையே பொருத்தமாதல் தெளிக.
 
-“செந்தமிழ்” தொகுதி-உரு பகுதி-கூ

இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும்

    இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும்ஓன்றென்பாரும் வேறென்பாருமாக உரையாசிரியர்கள் பலதிறப்பட உரைக்கின்றனர்.அவைஒன்யா?வேறா?என்பதைக்கற்போர்க்கு உணர்ச்சி பெருகும்படி ஆராய்ந்துகாட்டுவதும்.
 
    உரையாசிரியர்கள் கருத்துக்களை முன்னர்த் தருதும்.
 
“முதலிற் கூறும் சினையறி கிளவியும்
சினையிற் கடறும் முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும்
வினைமுத லுநைூக்குங் கிளவியொடு தொகைஇ
அனையமர பினவே ஆகுபெயர்க் கிளவி”
 
என்னுந் தொல்காப்பியச்  வரும் ‘இருபெயரொட்டு‘என்பதற்கு இளம்பூரணர் இரண்டுபெயரொட்டி நிற்பது அதுசொல்லப் பிறிதுபொருள் விளக்கும். அது வருமாறு பொற்றொடி‘ என்பது இருபெயர் நின்று ஒட்டிற்,று. அது சொல்லப்பொற்றொடிதொட்டாளை விளக்கும்.எனஉரைத்தனர்.
 
    சேனாவரையர், ‘பொற்றோடி வந்தாள் என இருபெயரொட்டுஅன்மொழிப்பொருள்மேலும்.......வந்தவாறு கண்டுகொள்க‘ எனஉரைத்து, அகலவுரையுள், “அன்மொழித்தொகை எச்சவியலுள்உணர்த்தப்படுதலின், ஈண்டுக்கூறல் வேண்டாவெனின், அன்மொழித்தொகைதொகையாகலுடைமையின் ஆண்டுக் கூறினார்இயற்பெயர் ஆகுபெயரெனப், பெயரிரண்டாய் அடங்கும்வழிஆகுபெயர்ப் பட்டதன் மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன்மொழித்தொகைஎச்சவியலுளுணர்த்தப்படும். அதனால் அவ்வாகுபெயராதலுடைமைபறி ஈண்டுக் கூறினார்.எச்சவியலுட் கூறப்பட்டவாயினும் வினையெச்ச முதலாயின வினைச்சொல்லாகலும் இடைச்சொல்லாகலுமுடைமையான் அவற்னற வினையியலுள்ளூம் இடையியலுள்ளும் கூறியவாறுபோல என்பது”என உரைத்தனர்.
 
    நச்சினார்க்கிளெியர்“அன்மொழிப்பொருண்மேனில்லாத இருபெயரொட்டும்” என்றுரைத்து, மக்கட்சுட்டென இரண்டுமில்லாததேணி பொருளையுணர்த்தாது மக்களையுணர்த்திற்று.‘பொற்றொடி‘ அன்மொழி ஆகுபெயர் அண்மையுணர்க என உரைத்தனர்
 
    தெய்வச்சிலையார் இருபெயர் தொக்கு ஒருசொன்னீர்மைப்பட்டு, மற்றொருபொருள்தருபெயராகி வருவது.அது துடியிடையென்பது துடிபோன்ற இடையினையுடையாளத் துடியிடை என்பவாகலின் .ஆகுபெயராயிறு. இஃ,தூ உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோவெனின், ஒட்டுப்பட்ட. பெயரோடு ஒற்றுமைப்பட்ட உருபுத் அன்மொழித்தொகையாவதுஅப்பொருளிள் வேறுபட்டுவரும். அன்னதாதல், அன்மொழி என்பதனானும் விளங்கும். அதனானன்றே “பண்புதொகவரூஉங் கிளவியானும்........ஈற்றுநின்றியலுமன்மொழித்தொகையே” என ஒதுவாராயிற்று,
 
    அனைபமரபினென்றதனால் ஈண்டு ஒதுப்பட்டனவற்றுள், அடை அடுத்து வருவனவுங் கொள்க, ‘தாழ்குழல்‘ என்றவழிஅதனையுடையாட்குப் பெயராகி வருதலின் ஆகுபெயராயிற்று. இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையன்றோவெனின், ஆண்டு எடுத்தோதாமையானும், பொருள்ஒற்றுமைப் படுதலானும் ஆகாதென்க.
 
    இனி தெய்வச்சிலையார் அன்மொழித்தொகைச் சூத்திரத்திற்குரைத்த உரையும், இதற்கு வேண்டுமாகலின் அதனையும்ஈண்டுத் தருதும்.
 
“பண்பு தொகவரூஉங் கிளவி யானும்
உம்மை தொக்க பெயர்வயினானும்
வேற்றுமை தொக்க பெயர்வயினானும்
ஈற்றுநின் றியலுமன்மொழித்தொகையே”
என்பது சூத்திரம். இதற்கு அவருரை வருமாறு:-
 
    டு-ள் பண்புதொகவரும் பெயர்க்கண்ணும் உம்தொக்க பெயர்க்கண்ணும் , வேற்றுமைதொக்க பெயர்க்கண்ணும்இறுதி.....அன்மொழித்தொகை. எ-று.
 
    அல்லாதமொழி தொகுதலின் அன்மொழித்தொகையாயீற்று.இம்மூவகைச் தொகையிலும் ஈற்று நின்றியலும் என்றதனாள்முன்னும் பின்னும் என்னும் இரண்டினும் உணரப்படுபொருண்மையுடைத்து அன்மொழித்தொகை என்ற கொள்க.
 
    உதாரணம்-கடுங்கோல் பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.கடுமையும் கோலும் அரசன்மேல் நிற்றலின் அன்மொழி.
 
    ‘தகரஞாழல்‘ உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்தது. தகரமும் ஞாழலும் சாந்தின்மேன் நிற்றலின் அன்மொழி. ‘தூணிப்பதக்கு‘ இரண்டும் பொருண்மேனிற்றலின் அன்மொழி.
 
    ‘பொற்றொடி‘ பொன் தொடிக்கு விசேடணமரயினும்உடையாளது செல்வத்தைக் காட்டலின் அன்மொழி.
 
    இனித், துடியிடையும், தாழ்குழலும் என்பவற்றில் முன்மொழி அடையாய் வருவதல்லது அன்மொழியை விசேடியாமையின் ஆகுபெயரன்றி அன்மொழி ஆகாஎன்றார்.
 
    இனிச் சிவஞானமுனிவர், ஆகுபெயர்க்கும் அன்மொழித்தொகைக்கும் வேறுபாடு கூறுவதும் ஈண்டுக் காட்டவேண்டுதலின் அதனையும் காட்டுவதும்-
 
    அற்றேல், ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் தம்பொருளுணர்த்தாதுபிறிதுபொருளுணர்த்துதலான் ஒக்குமாகலின், அவை தம்முள் வேற்றுமை யாதாவெனின், ஆகுபெயர்ஒன்றன்பெயரானதனோடியைபுபற்றிய பிறிதொன்றனையுணாத்திஒருமொழிக்கன்ணதாம். அன்மொழித்தொகை இயைபுவேண்டாதுஇருமொழியும் தொக்க தொகையாற்றலாற் பிறிதுபொருளுணர்த்து இருமொழிக்கன்ணதாம்.இவை தம்முள் வேற்றுமைஎன்க.
 
    இருபெயரொட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்தன்றோலெனின், அன்று.என்னை?வகரக்ளவி, அதுவாகுகிளவிமக்கட் சுட்டு என்னும் இருபெயரொட்டாகுபெயருள், வகரமும், அதுவாதலும், மக்களுமாகிய அடைமொழிகள், கிளவி, சுட்டு என்னும் ஆகுபெயர்ப்பொருளை விசேடித்துநிற்பக், கிளவி, சுட்டு என்பனவே, ஆகுபெயராய் அப்பொருளை யுணர்த்த இருபெயரொட்டி நிற்குமாகலின். இனிப் ‘பொற்றொடி‘ என்னும் அன்மொழித்தொகையில்‘பொன்‘ என்பது அவ்வாறு அன் மொழிந்தொகையைவிசேடித்து நில்லாது, தொடியினையேவிசேடித்து நிற்ப, அவ்விரண்டன் தொகையாற்றலான் அன்மொழித்தொகைப் பொருளை யுணர்த்துமாறறிக.
 
    இங்கே காட்டியஉரைகளும், உரையாசிரியாருரையும், சேனாவரையருரையும், தம்முள் ஒத்தகருத்தினவாயும், மற்றைய மூவருரையும் ஒத்தகருதினவாயும் காணப்படுன்றன.எனினும், தெய்வச்சிலையாருயினும் சிவஞானமுனிவ ருரையினும் ஒருவேறுபாடு காணப்படுகின்றது. அது, தெய்வச்சிலையார் இருபெயரொட்டு ஆகுபெயர்க்குச் சொன்ன இலக்கணம், சிவஞானமுனிவர்அன்மொழித்தொகைக்குச் சொன்ன இலக்கணமாயும், தெய்வச்சிலையார்அன்மொழித்தொகைக்குச் சொன்ன இலக்கணம்சிவஞானமுனிவர் இருபெயரொட்டாகுபெயர்க்குச் சொன்னஇலக்கணமாயும் மாறிநிற்றலே. இவ்வேறுபாட்டை நோக்கும் போது இவர்கள், இருபெயராட்டாகுபெயர்க்கும் அன்மொழித்தொகைக்கும்ஏதோ வேறுபாடு கூறிவிடவேண்டுமென்று கருதத்தங் கருத்திற் பட்டதைச் கூறிவிட்டதே அன்றி, உண்மைநோக்கிக் கூற்றிலர் என்பதுபுலன்கின்றது. இவ்விருவருரையையும் நோக்கும்போது பெரிய நகைக்கிடமாகின்றது.தெய்வச்சிலையாரும் சிவஞானமுனிவரும் தாங்காட்டியஉதாரணங்களையும் நுனித்து நோக்காது, ஆகுபெயர், பொருளோடு ஒற்றுமையுடையதாய் வரும்.அன்மொழி அங்ஙனமின்றிவரும் என்று கூறினார்.
 
    தெய்வச்சிலையார், தகரஞாழல் என்பதில் தகரமுஞாழலுமாகியஇரண்டும் சாந்தின்மேனிற்றலின் அன்மொழித்தொகையென்றார்.அங்ஙனமாயின், தகரமும் ஞாழலும் கூடியதே சாந்தாதலின் அம்மொழிப்பொருளோடு இயையுடையதன்றெனக் கூறல் எவ்வாறுபொருந்தும்? ‘கடுங்கோல்‘ என்னும் பண்புத்தொகையில் வரும் அன்மொழியில், கோலுக்கும் அரசனுச்கும்ஒற்றுமையின்றேனும் ‘கருங்குழல்‘ முதலிய பண்புத்தொகையில் வரும் அன்மொழியில் ஒற்றுமை காணப்படுகின்றதே? அங்ஙனமன்று ‘கருமை குழலுக்கன்றிப் பொருளுக்கு விசேடணமன்மையின், இன்னோரன்ன அன்மொழியாகாது இருபெயரொட்டாகுமெனின் ‘பண்பு தொகவருஉம் கிளவி யானும்‘எனஆசிரியர் கூறிய நியதி தப்புகின்றதே? இவற்றிற்கெல்லாம் தக்கசமாதானம் ஒன்றுமில்லைபாகும். இன்னும் பொற்றொடி என்பதில், பொன்தொடியைவிசேடித்துநின்றதென்பது வெள்ளிடைவிலங்கல்போல் தெரிந்ததொன்முகவும், தெய்வச்சிலையார் இருமொழியும் அன்மொழிப்பொருளைவிசேடித்து வருவதே அன்மொழித்தொகையெனத் தாம்கொண்டதற்கேற்பப் பொன் தொடியையேயன்றி உடையாளையும் விசேடித்துச் செல்வமுடையாள்என்பதைச் காட்டி நின்றதென வலிந்து பொருள்கொள்கின்றனர்.அங்ஙனேல், துடியிடை தாழ்குழல் என்பனவும் உடையாளதுஇலக்கணச்சிறப்பைக் காட்டி கின்றதெனக் கூறலாமாதலின் அதுபொருந்தாதென்பது. இவற்றால்  அன்மொழிக்கும் ஆகுபெயர்க்கும் தெய்வச்சிலையார்காட்டிய வேறுபாடு பொருந்தாமை யுணரப்படும்.
 
    இனிச் சிவஞானமுனிவரும், இயைபுவேண்டாது பிறிதுபொருளுணர்த்தினவருவது அன்மொழித்தொகையென்றனர். இவர்இங்ஙனமுரைத்ததற்குக் காரணம் வடமொழியில் அன்மொழித்தொகைகள் எல்லாம் சக்கியசம்பந்தமின்றியே தொகையாற்றலால் அன்மொழிப்பொருளைஉணர்த்துமென்றும், இலக்கணக்குச் சக்கியசம்பந்தம் வேண்டுமென்றும் பிரயோகவிவேகநூலர்கூறியதை நோக்கிப்போலும். நுணுகிநோக்குவோர்க்குத்தொகையாற்றலாற் பெறப்படும் அன்மொழிப் பொருளும் சம்பந்தம்பெற்று வருகின்றது என்பது பெறப்படும். .தொகையாற்றலாற் பெறப்படும் என்றுகூறிய பிரயோகவிவேக நூலாரே“தொல்காப்பியர் கூ.றிய ஆகுபெயரிலக்கணத்தைப் பாணினிமுனினர், தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி, அதற்குகுணசம்விஞ்ஞான வெகுவிரிகி, எனச் கூறுவர்” எனச் கூறுவதாலும்உணரப்படும்.
 
    தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி, அதற்குணசம்விஞ்ஞானவெகுவிரிகி என்பவற்றிற்கு பாணினி சூத்தீர உரையில் வருவதையும் இங்கே தருகினறோம். (சர்வாதீநிசர்வநாமாநி என்சூத்திரவுரையில் வருவது) தத்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி அன்மொழியின் விசேடண மொழிக்குத் தொழிலோடு சம்பந்தமுள்ளதாக அறிதல் எந்த அன்மொழியில் உண்டோ அதுதத்குண ............விரீகி. அச்சம்பந்தம் சமவாயம் சம்யோகம்என்ற இரண்டானும் கொள்ளப்படும். இங்ஙனமன்றி, உடைமைமுதலிய பிறசம்மந்தமுறுவது அதத்குணசம்விஞ்ஞானவெகுவிரீகிஅவற்றிற்குதாரணம் முறையே லம்பகர்ணோபும்க்தே....,தூங்குசெவியன் உண்கின்றான். இங்கே உண்பவனிடத்தில் தூங்குசெவிகள் சம்பந்தப்படுகின்றன. இது சமவாயசம்பந்தம், துவிவாசா  பும்க்தெஇரு ஆடை யுடையவன் உண்கின்றான்.  உண்பவனிடத்தில் இரு ஆடையும் சம்பந்தப்படுகின்றன.சையோக சம்பந்தம் சித்திரகும்ஆநயதிபலநிறம் பொருந்திய பசுச்களையுடையவனைஅழைக்கிறேன்.இங்கேஅழைத்துக்கொண்டு வருதலில் சம்பந்தப்படுதல் உடையவன்.பசுக்கள் அவனுடைய பொருள்.அவை அவனோடு வருதலின்மைபின் வினையோடு சம்பாத்தப்படுதலில்லை.செவிஆடைகளுக்குஉண்ணுந் தொழிலில் சம்பந்தமில்லையேனும் உண்பவனோடு குறித்த சம்பந்தங்களினாலே சம்பந்தப்படுதல் பற்றித்தற்குண சம்விக்ஞான வெகுவிரீகி எனப்படும் என்பது.
 
    இங்ஙனங் கூறிய அன்மொழிப் பொருட் சம்பந்தத்தைநோக்கும்போது, அன்மொழிப்பொருள் தொகையாற்றலாற்பெறப்படுமேனு!ம், ஆண்டு மியைபுடையதோர் மொழியைப்பற்றியே பெறப்படும் என்பது பெறப்படும். அன்மொழிப்பொருட்கு இயைபுவேண்டாமென்ற சிவஞானமுனிவரும், சூத்திரவிருத்தியில், “ஆற்றேல் ஆகுபெயர் விட்ட ஆகுபெயரும்விடாதஆகுபெயரும் என இருவகையாயாறுபோல, அன்மொழித்தொகையும் விட்ட அன்மொழித்தொகையும் விடாதஅன்மொழித்தொகையும் என இருவகைப்படும்…….......வட.நூலார்விடாதஅன்மொழித்தொகையைத் தற்குண சம்விஞ்ஞானவெகுவிருகி என்றும் விட்டஅன்மொழித்தொகையை அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி என்றும் கூறுவர்” எனச் கூறதலானும் அவ்வியைபும் ஆண்டுளதாதல் பெறப்படும். சிவஞானமுனிவர் தற்குண...,,.......வெகுவிரீகிக்குக்காட்டிய உதாரணம்!‘அகரமுதல்‘…………‘னகரவீறு‘, அகரவீறு, புள்ளியீறு என்பன. அதற்குண........... வெகுவிரீகிக்குக் காட்டிய உதராணம்‘பொற்றொடி வந்தாள்‘ ‘ஒண்ணுதல் கண்டாள்‘ என்பன.இவற்றுள் பின்னுள்ள இரண்டும் முறையே சமயோகசம்பந்தமும், சமவாயசம்பந்தமுமுடையவாய் வருதலின் தற்குணசம்விஞ்ஞான வெகுவிரீகி ஆகின்றன. சிவஞானமுனிவர் தொழிற்சம்பந்ததமாத்திரம் நோக்கிக் கூறினார்போலும். அது பாணினிசூத்திர உரையோடு மாறுபடுதல் நோக்குக. இம் மாறுபாட்டைநோக்கும்போதுவடமொழியிற் சம்பந்தங்கொள்வாரும் தத்தங்கருத்துக்கேற்பக் கொண்டு உரைக்கின்றனர் என்பது புலனாகின்றது.
 
    இனிதொல்காப்பியர் ஆகுபெயர்ச்சம்பந்தங் கூறிய “தத்தம் பொருள்வயி றம்மொடு சிவணலும்-ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலும்” என் சூத்திரத்தை நோக்கும்போதுஅவர் தொழிலியைபை , நோக்காது, ஆகுபெயர்க்கும் பொருளுக்குமே சம்பந்ச்தங்கூறியதாகத் தெரிகின்றது. எங்ஙனமெனில்,‘ஆகுபெயர், தம்பொருளோடியைபுடைய பொருளோடு பொருந்துதலும், தம்பொருட்கியைபில்லாத பிறிதுபொருள் சுட்டலும்என இயைபைப் பொருளோடியைபு படுத்திக் கூறினமையின்,அன்றி வினையோடு இயைபுபடுத்திக்கொள்ளப்படுமெனின் அதற்கேற்றசொற்களான்விளங்கக்கூறியிருப்பர் .அங்ஙனங் கூறாமையிற் பொருட்சம்பந்தமே கூறினார்என்பது ,துணிபு. இதனைநோக்காது ,தொல்-சொல்-குறிப்பாசிரியரவர்கள் ‘செந்தமிழ்‘தொகுதி-உகூ பகுதி-கூ, பக்கம்-சஉச-ல் சேனாவரையர் ஆகு பெயர்க்கு இயைபு கூறிய “தத்தம் சுட்டலும்” என்னுஞ் சூத்திரத்துக்கு இலக்கணையை நோக்காது பொருள் கூறியது பொருத்தமன்றென்றது பொருந்தாது குறிப்பாசிரியாவர்கள் கிரியைச் சம்பந்தமே நோக்கிக் கூறலின்.
 
    இனிச் சேனாவரையர், “ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றெனவும், இயற்பெயர், ஆகுபெயர் எனப் பெயர் இரண்டாயங்கும் வழிப்பொற்றொடி என்பது ஒருபெயர்ப்பட்டது அதுவே .அன்மொழித் தெகையாதலுமுடைமை எச்சவியலுள்ளுங் கூறப்பட்டது” எனவுங் கூறினார்..அது வடநூல் விதியோடு மாறுபடுதலானும், வடநூல்விதியோடு, மாறுகொள்ளாமற் கூறலே, ஆசிரியர்.மேற்கோளென ‘ஆதனினியறல்‘என்னுஞ்  சூத்திரத்துத் தாமும் கூறினாராதலானும், அவர்க்கது கருத்தன்றென்க. எனச் சிவஞானமுனிவருரைத்தமையையும் ஆராய்வாம்.
 
    முனிவர், வடமொழியோடு மாறுபடுதலானும் எனக் கூறிய தற்குக் காரணம் அன்மொழி ,தொகையாற்றலா பெறப்படும். சக்கிய சம்பந்தம் வேண்டாமென்பது நோக்கியே. தொகை யாற்றலாற் பெறப்படும் அன் மொழிப் பொருளும் சம்பந்தமுடைய மொழிகளிடத்தேயே பெறப்படும் என்பது யாமுன்னுரைத்தவாற்றாற் பெறப்படுதலினானும், வடமொழியோடு மாறு படாமற் கூறல், வடமொழிக்குந் தமிழ்மொழிக்கும் ஒத்தவழி யன்றிப் பிறவழிக்கூறல் பொருந்தாமையானு!ம், ,அவர்கருத்துப் பொருந்தாமையுணர்க. வடமொழியில்வரும் அன்மொழிதொகை தமிழில் வரும் அன்மொழித் தொகைபோலன்றித் தாம் எந்த எந்தப் பொருண்மேல்வருகின்றதோ? அந்த அந்தப் பொருட் குரிய லிங்கவிகுதியைப் பெற்றுவருதலினாலே தமிழில் வரும் அன்மொழித்தொகையோடு வேறுபாடுடையது.எங்ஙனம் பெற்று வருகின்றதெனின், வடமொழியிலே நீலகண்ட (நீலகண்டன்), என்பது, நீலகண்டத்தையுடையவன் என விரிந்து அன் மொழிப்பொருளையுணர்த்துகின்றது. இங்கே நீலகண்ட நீல(நீலம்) கண்ட (கண்டம்) என்னும் இருசொல்லும் தொக்குநின்று தொகையாற்றலினாலே, அன்மொழிப்பொருளை யுணர்த்தி, அதன் மேல் தான்உணர்த்தும் அப்பொருட்குரிய .ஆண்பால் (பும்லிங்க) விகுதியைப்பெற்று நீலகண்ட என வருகின்றது. ஆண்பாலில் வரும் பீதாம்பா! என்பது! பெண்பாலில் பீதாம்பரா என வரும்.தமிழில் வரும் பொற்மெுடி என்னும் அன்மொழித்தொகை, தானுணர்த்தும் பொருட்குரிய விகுதியின்றியே நிற்கின்றது.விகுதிபெற்று பொற்றொடியாள் எனநிற்பின், அது பெயராகுமன்றி, அன்மொழித் தொகையாகாது.ஆதலின், இரண்டிடத்தும் வரும் அன்மொழித் தொகைகளும் சிறிது வேறுபாடுடையன. ஆதலின் இரண்டையும் ஒப்புக்கொண்டு இலக்கணங்கூறல் பொருந்தாது என்பதூஉம், வடமொழியோடு ஒப்பக்கோடல் ஒத்தவிடத்தன்றி, ஒவ்வாதவிடத்தன்று என்பதூஉம் உணர்ந்துகொள்க. இரண்டிடத்தும் வரும் அன்மொழித் தொகைகளும் சிறிதுவேறுபாடுடையவெனத் தொல்-சொல்-.குறிப்பாசிரியர் ,அவர்களும் தமது குறிப்புள் எழுதியிருக்கிறார்கள். அதனைச் ‘செந்தமிழ்‘ த்தொகுதி- உகூ, பகுதி-கூ பக்க- சஉச-ல் காண்க
 
    இன்னும் இவ்விகுதி வேறுபாடு குறியாதே, சேனாவரையார் தொகையைநோக்கும்போது அன்மொழித் தொகை என்றும், பெயரைநோக்கும்போது ஆகுபெயரென்றும், கூறியிருப்பதே தக்க சமாதானமாதலின், அதனையும் ஈண்டு விளக்குவாம். ‘பொற் றொடி‘ என்புழி, பொன், தொடி என்னும் அவ்விருமொழியும் தொக்கதொகையாற்றலினாலே, அன்மொழிப் பொருள் பெறப்படும் என்றும், அது இறுதிமொழியைப் படுத்துக் கூறப் பெறப் படும் என்றும், சேனாவரையர் கூறுதலினாலே பொற்றொடி என்பது ‘வந்தாள்‘ என்பதோடு தொடர்ப்பட்டு நிற்குமிடத்து, ‘வந்தாள்‘ என்னும்வினைக்கும், ‘தொடி‘ என்னும் பெயர்க்கும் இயைபின்மையின்,  அத் ‘தொடி‘, என்பது, அவ்வினையோடியை புடைய ‘அணிந்தாள்‘ என்னும் வேறுபொருளையுணர்த்தி நிற்கின்றது என்பது பெறப்படும். அப்பொருள் அன்மெரழிப் பொருளாதலின்‘பொற்றொடி‘ அன்மொழிப்பொருளுயுணர்தி வந்த தொகைமொழி எனப்படும். அவ்வன்மொழிப்பொருள் ‘தொடி‘ என்னும் இயற் பெயரினின்றும் ஆகிய பொருளாதலின் ‘பொற்றொடி, இருபெயரொட்டாகுபெயரெனவும்பட்டது சுருங்கக் கூறில், ‘பொற்றொடி‘யென்னுந் தொகை யாற்றலாற் பெறப்பட்ட. அன்மொழிப் பொருளே, ‘பொற்றொடி‘ என்னும் இருபெயரொட்டில் வந்த ஆகுபெயர்ப்பொருளுமாதலின் இரண்டுமொன்றென்பதே சேனாவரையர் கருத்தாம். ஆதலாற்றன் தொகையை நோக்கும்போது அன்மொழித்தொகையென்றும், பெயரைநோக்கும்போது ஆகுபெயரென்றுங் கூறினார்.இதில் வரும் வழு யாது என்பதை யாம் அறியேம்.தமிழில் வரும் அன்மொழித்தொகைக்கும், இருபெயரொட்டுக்கும் சிறிதும் வேறுபாடு காணப்படாமையின் இங்ஙனம் கூறலே பொருத்த மாம். தொல்காப்பியர் ‘இருபெயர்‘ எனக் கூறாது இருபெயரொட்டு எனக்கூறியதை உற்றுநோக்கினார்க்குத் தொகையும், ஒட்டும் ,ஒன்றென்பது பெறப்படும். ஒட்டுதல்-சேர்தல்-தொகுதல், ஒட்டெனக் கூறியது இருமொழியும் பிரிந்து நின்று ஆகு பெயர்ப்பொருளை உணர்த்தமாட்டாமை கருதி, அங்ஙனமே அன்மொழித்தொகையும் பிரிந்துநின்று அன்மொழிப்பொருளை யுணர்த்தா. ஆதலால் இரண்டும் ஒன்றென்றற்கு வருந்தடை யென்னையோ?கிளிமொழி, தகரஞால், வடகிழக்கு என்னும் அன்மொழியுள், மொழி, ஞாழல், கிழக்கு என்பன பிரிந்துநின்று அன்மொழிப்பொருளைபுணர்த்தமாட்டாமையும் அங்ஙனமே, அவ் வாகுபெயர் வேறெனக் கூறுவார் அவ்வாகுபெயர்க்குக் காட்டிய மக்கட்சுட்டு, அறுபதம், வகரக்கிளவிமுதலியனவும், பின்மொழிகள் தனித்துநின்று குறித்த ஆகுபெயர்ப்பொருளையுணர்த்தமாட்டாமையும் அறிந்துகொள்க. இனி, பசுங்கிளி, பூங்கொடி முதலிய அன்மொழிகள் பிரிந்து நின்றும் உணர்த்துமன்றோவெனின், அவைபோன்ற சிலமொழிகள் வழக்காற்றில் இருவேறுவகையால் (அஃதாவது ஓரிடத்துத் தொக்கும், பிறிதோரிடத்துத் தனித்தும்)உணர்த்துமாற்றலுள்ளனவாதலின், அக்காரணம்  தொகை யிலக்கணம் பிறழா தொக்கு வரும்வழி தொகையிலக்கணமமைதலின். இங்ஙனம் களி என்றவிடத்து ஆகுபெயரென்றும், ‘பசுங்கிளி‘ என்றவிடத்து அம்மொழியே தொகையென்றும் கூறப்படுதலும் ஆகுபெயரும் அன்மொழியும் ஒன்றென்பதற்கும் தக்கசான்றாம். பாயினமேகலை, வாரேறுகொங்கை, முற்றுமலை, கைபரந்து வண்டிசைக்குங் கூந்தல், என்பனவற்றை வடமொழி நோக்கிப்பிரயோகவிவேக நூலார் அன்மொழி என்பர்.தமிழில் இவை அன்மொழியாகா. ஏனெனில், தொகைமொழியில் அன்மொழிப்பொருள் வருதல் நோக்கி, அத்தொகைமொழிகளைஅன்மொழித்தொகையெனத் ,தொகைகளோடு ஒருங்குவைத்து, எல்லா ..ஆசிரியரும் ஒதுதலின்.‘பாயினமேகலை‘ முதலாயின தொகையன்றித் தொடர் ஆதலின், இவற்றை அடையடுத்துகின்ற ஒருமொழியாகக்கொண்டு ஆகுபெயரென்றலே பொருத்தமாம். பேராசிரியரும், “பாயினமேகலை‘ஒருசொல்லாதலின் ஆகுபெயரென்றதும் இக்கரூத்து நோக்கியே என்க.
 
    தமிழ்மொழி இலக்கணத்தையும் வடமொழி யிலக்கணத்தையுஒப்புநோக்காது வடமொழி இலக்கணங்களையும் தமிழிலும் புகுத்திவிட. வேண்டுமென்றும், அப்படிச்கூறினால் வட மொழியிலக்கணமுணர்ந்தவர் எனத் தம்மை மதிப்பார் என்றுங் கருதியே, இவ்வாறு அன்மொழித் ,தொகைக்கும் ஆகுபெயருக்கும் வடமொழிநோக்கி வேறுபாடுகூறித் தமிழிலக்கணத்தைப் பிறழச்செய்தனர் என்பதும், சேனாவரையர் இரண்டையும் நன்கு ஆராய்ந்துஒப்பனவற்றை ஒப்பக்கூறியும், ,ஒவ்வாதவற்றைவிடுத்தும் கூறலீன் அவருரையே கொள்ளத்தக்கன என்பதும் எமது கருத்தாகும். இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழியும் ஒன்றென்பதில்ஒத்தசகருத்துடையார், உரையாசிரியர் சேனாவரைய மாத்திரமன்று. பரிமேலழகர் திஹு.யணிச்கு டூல்!ணைி முதலியோருமாம். “கனங்குழை” ஆகுபெயர் என்பர் பரிமேலழகர்.‘அருந்திறல்‘-இராமன் அது அன்மொழித்தொகை ஆகுபெயர் (சிலப்பதிகராம்! புறஞ்சேரி-ங0கூ-ம் பக்க உ.ரை என்பர் அடியார்க்கு நல்லார்.‘மகாப்பகுவாய்‘ முதலியவற்றை (திருமுரு-உரு-.ம் அடி உரை)நச்சினார்க்கினியரும் மயங்கி ஆகு பெயரென்பர்.
 
    இதுகாறும் கூறியவாற்றால், ஆகுபெயரன்றி, அன்மொழித்தொகையும் உற்றுநோக்குவோர்க்குச் சக்கியசம்பந்தம் பெற்றேவருகின்ற தென்பதூஉம், வடமொழியில்வரும் அன்மொழித்தொகைக்கும், தமிழில் வரும் அன்மொழித்தொகைக்கும் சிறிது வேறுபாடு உண்டென்பதூஉம், வடமொழியில்வரும் அன்மொழித் தொகைக்கும், இலக்கணைக்கும் வேறுபாடு இருத்தல்போலச் தமிழில்வரும் அன்மொழித்தொகைக்கும் ஆகுபெயர்க்கும் வேறுபாடின்மையிற் சேனாவரையார் ஒன்றெனக் கூறியதேபொருத்த முடையதென்பதூஉம், சேனாவாரையர்க்கன்றி உரையாசிரியர், பரிமேலழகர், .அடியார்க்குநல்லார் முதலியோர்க்கும் ஒன்றென் பது கருத்தென்பதூஉம் பெறப்படுதல் காண்க.
 
“செந்தமிழ்” தொகுதி-உஅ; பகுதி-கஉ

தொகைநிலை

    தொகைநிலையாவது வேற்றுமை முதலிய பொருண்மேல் இரண்டும் பலவுமாயெ சொற்கள் பிளவுபடாது ஒன்றுபடத் தம்முளியைந்துநிற்றல் என்றும், தொகுங்காற் பெயரும் பெயரும், பெயரும் வினையும் தொகுமென்றும் சேனாவரையர் கூறுவர். உரையாசிரியர் முதலியோர் பெயரும் பெயருமே தொகு மென்றும் பிளவுபட்டிசைத்தலானே பெயரும் வினையும் ,தொகாவென்றுங் கூறுவார்கள். இவ்விருகூற்றினுள் எது பொருத்தமுடைத்தென்பதே ஈண்டு நாம் ஆராய்தற்பாலது.(ஈண்டு நாம் ஆராய்வது மாணாக்கருக்கு உணர்வுபெருகலாகிய பயன்குறித்தே யாகலின், பெரியோருரைக்கண்ஆராய்ச்சி நிகழ்த்தி அவர்களைஅவமதித்தான்! இவள் என்னுங் குற்றம் நம்மேல் அணுகாதென்பதே துணிபு)
 
    உரையாசிரியருக்குப் பெயரும் பெயருமே தொகுமென்பதும் பெயரும் வினையுந் தொகாவென்பதும் கருத்தாதல்,
 
“பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந்
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்”
 
என்னுஞ் சூத்திரத்திற்கு அவர் பெயர்ச்சொல்லும் வினைச்சொல் லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க் கூடியுமிசைப்ப வேற்றுமையுருபு தொகாது நிலைபெற்றவிடத்தும் அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக்கண்ணும் எனவுரைத்தவுரையானும், விளவினைக் குறைத்தான் விளவினைக்குறைத்தவன் எனவும், நிலாத்துக்கொண்டான் நிலாத்துக்கொண்டவன் எனவும் காட்டியவுதாரணத்தானு மறியப்படும்.
 
    இவர் இங்ஙனங்கூறியது பெயரும் பெயருமே ,தொகுமென்னும் வடநூல்விதியை மேற்கொண்டேயாம். வடநூலில் வினை கொண்டுமுடிவதெல்லாங் காரகமெனப்படுமாயினும், வினைகொண்டு முடிதற்கண் உருபு விரிந்தல்லது ,தொக்குவாரா. தமிழ் .நூலில் விரிந்தன்றித் தொக்கும் வருதலின் தொகையெனவேபடும்.வடநூல்விதியையுந் தமிழ்நூல்விதியையும் ஒப்பக்காண்பது இரண் டற்கும் மாறுபாடில்லாதவிடத்தேயாம்.உள்ளவிடத்திலே ஒப்பக்காணில் ஒன்றேடொன்று முரணும்.இத்தொகையில் இரண்டற்கும் மாறுபாடுண்மையின் ஈண்டு வடநூல்விதியை மேற்கோடல் பொருந்தாது.மேற்கொள்ளின், தமிழ் வழக்கழியும்.ஆதலால், தமிழ்நூல் வழக்கையுணர்ந்து உரைசெய்தலே முறையாம்.இம்முறையைப் பெரிதும் அங்கீகரித்து உரைசெய்தவர் சேனாவரையரொருவரே.ஆதலின், தமிழ்வழக்கறிந்து பெயரும் வினையுந்தொகுடுமெனக்கொண்ட சேனாவரையருரையே யீண்டுப் பொருத்தமாம்.அங்ஙனமாயின், மேற்கூறிய சூத்திரம் அவருரையோடு மாறுபடுமேயெனின் மாறுபடாது.என்னை?அதற்கு அது பொருளன்றாதலின்.அங்ஙனேல், அதன்பொருள் என்னை யெனிற் கூறுதும்.அதன்பொருள், “பெயரும் பெயரும், பெயரும் தொழிலும் பிரிந்திசைப்ப வேற்றுமையுருபுநிலைபெறுவழி யும் அவை .ஒருங்கிசைப்ப அவ்வுருபுகள் நிலைபெறுதல்வேண்டாத தொகைச் சொற்கண்ணும்” என்பதே. ஆசிரியருக்குமிதுவே கருத்தாதல் பிரிந்தொருங்கிசைத்தலைப் பெயருக்கும் வினைக்கும் பொதுவாகக் கூறினமையினானும் பின் விரிதலையும் தொகுதலையும் முறை நிரனிறைவகையானே விளங்கவைத்தமையினானும் அறியப்படும். அன்றி, உரையாசிரியர் முதலியோர் கூறியதே கருத்தாயின் “பெயரும் தொழிலும் பெயரும் பிரிந்தொருங்கிசைப்ப”என விளங்கச் சூத்திரிப்பார்.அங்ஙனஞ் சூத்திரியாமையினானும், பெயருந் தொழிலும் என்பதிற் பெயரைமுற்கூறினமையினானே பெயரும் பெயரும், பெயரும் தொழிலும் என்று பொருள்கோட.ல் முறையாகுமன்றிப் பெயரும் தொழிலும் பெயரும் பெயருமெனப் பொருள்கோடல் முறையன்றமாகலானும், பிறாண்டும் “பெயரினாகிய தொகை” எனப் பெயரும் பெயரும் இயையுந் தொகையையே முன்வைத்து உம்மையாற்றழுவிய பெயருந் தொழிலுமியையும் வினாயினாய தொகையைப் பின்வைத்தமையினானும், அம்முறையே பெயரும் பெயரும் பெயருந் தொழிலும் எனப் பொருள்கொள்ளுமிடத்துப் பிரிந்திசைதல் பெயருக்கோயாய்க் குறித்த பொருளோடு மாறுபடுதலினாலும், ஒருங்கிசைத்தலை எதிர்நிரனிறையாகக்கொண்டு பெயரொடு முடிக்கலாமெனின் அதுமயங்கவைத்தலாய் முடிதலாலும், சேனாவரையார்கருத்தேபொருத்தமாதல் காண்க.
 
    இன்னும், தோற்றம் வேண்டாத்தொகுதியென இருசொற்றொகுதலேதொகையென்பதூஉம்பட ஆசிரியர்கூறினமையானும்சேனாவரையர் கருத்தே ஆசிரியருக்கும் கருத்தாதல் தெளியப்படும்.இனிஉரையாசிரியருக்கு மிதுவே கருத்தாதல்.
 
“நிறுத்தசொல்லுங்குறித்துவருகிளவியு
மடையொடுதோன்றினும்புணர்நிலைக்குரிய”
 
என்னுஞ் சூத்திரத்துத்து உரையின்கண்‘இனி ஒழிந்த வேற்றுமைத்தொகையும்உவமைத்தொகையும் தன்னினமுடித்ததலென்பதனால் ஈண்டு ஓரு சொல்லெனப்படும்‘ எனஅவர்கூறியமையினாலும்அறியப்படும். சாத்தனிலங்கடந்தான் என்புழிநிலங்சகடந்தான்என்பது ஒருசொல்லாய்வைத்துநிலைமொழியோடு புணர்க்கப்படுதல் காண்க.
 
    இன்னும், ஆசிரியர் “பெயரினாகியதொகையுமாருளவே,அவ்வுமுரியவப்பாலான” என்னுஞ் சூத்திரத்தானும் இக்கருத்தேயமையக்கூ,றுதல் சுாண்க. எங்னனமெனில், உம்மையால், பெயரும் வினையினாகிய தொக்க தொகையுமுள என்னும் பொருளை எளிதிற்பெறவைத்தமையான் என்பது, இனி, இவ்வுவம்மைப் பொருளைச்சிவஞானமுனிவர் மறுத்து வினையினாகிய பெயரும் உள எனஅதற்கு வேறுபபொருள் கூறுவர். உம்மைக்கு அவ்வாறு பொருள்கோடல் வழக்கின்மையின் அது பொருந்தாதென்க. .அன்றியும்,அவ்வினையினாகிய பெயரும் பெயரினாகிய தொகையுள் அடங்குமாதலினாலும் அது பொருளன்மையுணர்க.
 
    இனி, தொல்காப்பியத்தின் வழிநூல்செய்தநன்நுாலாருக்குமிதுவே கருத்தாதல்,
“பெயரொடுபெயரும்வினையும்வேற்றுமை
முதலியபொருளிளவற்றினுருபிடை
யொழியலிரன்டுமுதலாத்தொடர்ந்தொரு
    மொழிபோனடப்பனதொகைநிலைத்தொடர்ச்சொல்” என்பதனானும்,
 
”முற்றீரெச்சமெழுவாய்விளிப்பொரு
    ளாறுபிடையுரியடுக்கிவை தொகாநிலை” என்பதனானும் அறியப்படும்.
 
    இன்னும் ஆசிரியர் தொல்காப்பியருக்கும் உருபு விரிந்துநிற்றல் தொகையென்பது கருத்தன்றல்,
”உருபுதொடர்ந்தடுதடுக்கியவேற்றுமைக்கிளவி
    ஒருசொன்னடையபொருள்சென்மருங்கே” என விரியை வேறாகவும்,
 
    “எல்லாத்தொகையுமொருசொன்னடைய” எனத் தொகையை வேறாகவும் பிரித்துக் கூறினமையானும் அறியப்படும்.
 
    இனி, சிவஞானமுனிவர் நிலங்கடந்தான், நாய்கோட்பட்டான்,அறங்கறக்கும், வரைபாய்ந்தான், குன்றத்திருந்தான் என்பவற்றுள்உருபுதொக்கனவாயினும் வினையொடுமுடிதலின், ”எல்லாத்தொயுமொருசொன்னடைய”என்னுந்தொகையிலக்கணம் பெறாதுபக்கிசைத்தலான்இவைதொகாநிலையேயாம்என்கஎன்றார்.இதனால் முனிவர் இருசொற் பிளவுபடாதுநிற்றல் தொகையென்னுங் கருத்தளவிற் சேனாவரையரோடொப்பினும், பெயரும் வினையும் இயைவது பிளந்திசைத்தலின் அதுதொகாநிலையெனக் கோடலினாலே பெயரும் வினையும் இயைவதுந் தொகையெனச் கொள்ளும் சேனாவரையரோடு மாறுபடுகின்றனரென்பது அறியக்கிடக்கிறது.ஆதலின் அதனையும் ஈண்டு ஆராய்வாம்.
 
    நிலங்கடந்தான் என்பது வினையொடு முடிதலினாலே பிளந்திசைத்தலின்று.ஏனெனில் நிலத்தைக்கடந்தான் என்பது போலாது ஒருசொற்பட நிற்றலின் என்பது.அங்ஙனேல் நிலத்தைக்கடந்தான் என்பது உருபு விரியாமையினாலே இருசொல்லும் பிளவுபடாது.ஒட்டிநிற்றலினால் ஒருசொல்லேயாம் என்பது. இரு சொல் ஒட்டி நிற்றலே தொகையென்பது வடநுாலாருக்கும் கருத்தாதலினால் நிலங்கடந்தான்என்பது தொகைப்பதமெனவேபடும்.அங்ஙனேல் வடநுாலார்வினையொடு முடிதலை தொகைப்பதமென விதித்திலரெனின் அவருக்குப்பெயரும் வினையும் ஒட்டிமுடிதலின்றாதலின் அவ்வாறு கூற்றிலரென்பது. ஒட்டிமுடியாததற்கு காரணமென்னையெனின் வினையொடு முடியுங்கால் நிலத்தைக்கடந்தான்(ப (பூமிம் அலங்கயது)என ஆண்டு உருபுவிரிந்தே நிற்குமன்றி தொக்கு நில்லாமையென்பது. ஈண்டு நிலங்கடந்தான் என்பது தொக்கு நிற்றலின் தொகையெனவேபடும். அவ்வாறாதல் முன்னருங் கூறினாம். அறிந்துகொள்க.
 
    இங்னனம் பெயரும் வினையும்  பிளவுபடாதிசைத்தல்பற்றியே‘‘எல்லாத் தொகையுமொருசொன்னடைய” என ஆசிரியரி கூறினார். ‘‘ஒரு சொன்னடைய” என்பதற்கும் பிளவு படாது ஒரு சொல்லாய் நடத்தலையுடைய எனப் பொருள் கோடலே முனிவருக்குக் கருத்தாம். அதுவே சேனாவரையர் கருத்துமாம்.அதனை அச்சூத்திரத்திற்கு ‘‘ அறுவகைத்தொகைசொல்லும் ஒரு சொல்லாய் நடத்தலையுடைய”  எனக் கூறிய உரையாலும் அதற்கு ‘‘ஒரு சொன்னடையவெனப் பொதுப்படக்கூறியவதனால் யானைக்கோடு கொல்யானை உன முன்மொழிப்பெயராகிய வழி ஒரு பெயர்சொன்னவடையவாதலும் நிலங்கடந்தான் குறைத்திருந்தான் என முன் மொழி வினையாயவழி ஓரு வினைச்சொல் நடையவாதலுங் கொள்க. அவை உருபேற்றலும் பெயர் கோடலும் முதலாகிய பெயர்த்தன்மையும் பயனிலையாதலும் பெயர்கோடலும் முதலாகிய வினைத்தன்மையுடையவாதல் அவ்வச்சொல்லொடு கூட்டிக்கண்டுகொள்க.” எனும் விரிவுரையானும் அறியப்படும்.
 
    ஈண்டு உருபும் பயனிலையுங் கொள்ளுங்காற்கோடுகோடு என்பது போலவே யானைக்கோடு என்பதும் ஒருமொழியாக நிற்குமென்பதும் இ பயனிலையாதலையும் பெயர்கோடலையு மடையுங்கால் நடந்தான் என்பது போலவே நிலங்கடந்தான் என்பதும் நிற்குமென்பதுமே ஒரு பெயர்ச்சொல் நடையவாதல் ஒருவினைச்சொல் நடையவாதல் என்பவற்றின் கருத்தாதலின் ‘‘அவற்றை அவ்வச்சொல்லொடு கூட்டிக்கண்டுகொள்க” என்றார் எனவே அவை ஒரு சொல்லாதலை முடிவுகோடலில் வைத்தறிந்து கொள்க என்பதே கருத்தாம். அன்றி ஒரு சொல்லாய் நின்று முடிபுகொள்ளும் என்பது அவர் கருத்தன்று. இன்னும் ஒரு சொல்லாய் நிற்குமென்பதே அவர் கருத்தாதல் ‘‘ஒரு சொன்னடைய ” என்பதற்கு ஒரு சொன்னடையவா மென்பதல்லது எழுவாய் வேற்றுமையாமென்னும் கருத்தின்மையானும் அறியப்படும் (சொல்-கூஎ-உரை) ஆதலின் வினையொடுமுடிவது தொகையன்றென்னும்முனிவர் கருத்து நிரம்பாதென்க. அற்றேல் நிலங்கடந்தான் நாய்கோட்பட்டான் என்பன போலவே நிலத்தைக்கடந்தான் நாயாற்கோட்பட்டான் என்பனவும் ஒரு சொன்னீர் மையனவாக நின்று பயனிலையாகுமென்றால் என்னையெனின் அவை ஒரு சொன்னீர் மையனவாக நின்று பயனிலையாகாவாதலின் அது பொருந்தாதென்பது. எங்ஙனமெனிற் காட்டுதும்.
 
    சாத்தன் நிலங்கடந்தான் என்புழிச் சாத்தன் என்ன செய்தான் எனும் வினாவுக்கு நிலங்கடந்தான் என்பது விடையாதலினாலே ஆண்டு நிலங்கடந்தான் என்பது ஒரு வினைச்சொல்லாய் நின்று பயனிலையாதலானும் சாத்தன் நிலத்தை கடந்தானென் புழிச்சாத்தன் சாத்தன் என்ன செய்தான் என்ற வினாவுக்கு கடந்தான் என்பதே விடையாதலின் ஆண்டு நிலத்தைக்கடந்தான் என்பது ஒரு சொல்லாகாது  வேறு பிரிந்து எதை என்னும் வினாவுக்கு விடையாதலானும் என்பது.
 
    அற்றேல் நிலங்கடந்தவன் வந்தான் என்புழி வந்தான் என்னும் பயனிலைக்கு நிலங்கடந்தவன் என்பது ஒரு சொன்னிர்மைப்பட்டுஎழுவாயாய் நின்றாற் போல நிலத்தைக்கடந்தவன் வந்தான் என்புழியும் நிலத்தைக்கடந்தவன் என்பதும் ஒரு சொல்லாய் நின்றதன்றோவெனின் ஆண்டு நிலத்தைக்கடந்தவன் என்பது பொருள் பற்றி ஒருசொல்லாய் நின்றதன்றி தொகையால் ஒருசொல்லாய் நின்றதன்றாம். அதனை ‘‘எவன் வந்தான்” என்னும் வினாவுக்கு நிலங்கடந்தவன் என்பது விடையாதலானும் நிலத்தைக்கடந்தவன் என்பது விடையாகாமையானும் அறிந்து கொள்க.
 
    இன்னும் குன்றக்கூகை பறந்தது என்புழி குன்றக்கூகை என்பது பறந்தது என்னும் வினைக்கு எழுவாய் நின்றாற்போல குன்றத்தின்  கட்கூகை பறந்தது என்புழியும் குன்றத்தின்  கட்கூகை  என்பது ஒரு சொல்லாய் பறந்தது என்னும் பயனிலை கொண்டு நில்லாதோவெனின் நில்லாது. என்னை ஆண்டுக்குன்றத்தின் கண் என்பது பறந்தது என்பதனோடு முடிந்து குன்றத்தின் கட் பறந்தது எனவும் பொருள்பட்டு மயங்கிநிற்றலின்  என்பது. குன்றத்தின் கட்கூகை என்பதைக்  குன்றத்தின் கண்ணுள்ள கூகை என விரித்து முடித்தல் அமையுமன்றோவெனின் அமையுமேனும் ஆண்டு உட்டொடர் பலவாய விரியாகுமன்றித் தொகையாதல் நிரம்பாதென்க. ஆதலின் உருபு தொகப் பெயரும் பெயரும் பெயரும் வினையும் இயைவதே தொகைச்சொல் என்பதற்கிழுக்கின்மையறிக.
 
    இனி செய்தான் பொருள் இருந்தான் மாடத்து என்பவற்றைத் தொகாநிலைச்சொல்லென  கொன்டமையாற் பெயரும்  வினையும் இயைவது தொகையன்றென்பது  சேனாவரையருக்கும் கருத்துப்போலும் என்று முனிவர் கூறினார். சேனாவரையார் அவற்றை தொகாநிலையெனக்கொண்டது  வினை  முன்னும் பெயர் பின்னுமாக மாறிப்பிளவு பட்டு நிற்றலானன்றி  வினையொடு முடிதல் பற்றியன்று அதனை முனிவா் ‘‘ எல்லாத்தொகையும் ” என்னுஞ் சூத்திரத்துரையானும்  ‘‘வேற்றுமைத்தொகை ” என்னுஞ் சூத்திரத்துச் செய்தான் பொருள் இருந்தான் மாடத்து என உருபுத்தொக்கு ஒருசொன்னீா்மைப்படாதனவும் தொகையாவான் சேறலின்  அவற்றை நீக்குதற்கும் என்றமையானும் நன்கறிந்தும்  தாம் பிடித்ததையே சாதிக்குமாறு சேனாவரையருக்கும் அதுவே கருத்துப்போலுமென்றொழிந்தார். கருத்துப்போலும் என்றதனால் அவர்க்கது கருத்தன்னம தெரிந்தாச்தாரென்பதே துணிபு.
 
    இன்னும், நச்சினார்ச்கினியர் செய்தான்பொருள், இருந்தான் மாடத்து என்பன பிளவுபட்டிசைத்தலின் இருசொற்றொகுதல்தொகையெனக்கொண்ட சேனாவரையர் கருத்து நிரம்பாதுஉருபுதொகுதலே தொகையென்றாராலெனின், .அது பொருந்தாது. என்னை?அவை ஒட்டி ஒருசொல்லாய் நில்லாமையின்.தொகைச்சொல்லாவதுஒட்டி ஒருசொல்லாய்வர வேண்டுமென்பதே .ஆசிரியர் கருத்தாமென முன்னருமோதினும். அதுபற்றியே சேனாவனரயரும் செய்தான்பொருள் இருந்தான்மாடத்து என்பனஒட்டி ஒருசொல்லாய்வாரானமயின் அவைதொகையன் றென்றார். அங்ஙனேல் அவற்றையும் உருபுதொகுதலிற் றொகையெனல் வேண்டுமன்றே வெனின், தொகையே மாறிப் பிளவுபட்டு நின்றதெனப்படுமாதலின்அதன்கண் ஆராய்ச்சியின்றென்பது.தொகை மாறிநின்றதென்பதேசங்சரநமச்சிவாயர் கருத்தும்.அதனைபொதுவியல் கஉ-ம் சூத்திரவுரையிற் காண்க.
 
    இன்னும், சேனாவரையர், 
“உயர்திணைமருங்கினும்மைத்தொகையே 
பலர்சொன்னடைத்தெனமொழிமனார்புலவர்”
 
என்னுஞ் சூத்திரவுரையின்கண், உயர்திணைக்கண்வரும் உம்மைத் தொகை பலர்க்குரிய வீற்றாண் நடக்கும் என்றதனானும் தொகை யொருசொல்லாதல்பெற்றாம். ஒருசொன்னீர்மைபெற்றின்றாயின், கபிலன் பாணன் எனஒருமைச்சொல் ஒருமையீற்றான்நடத்தற்கட்படும் .இழுக்கென்னை யென்பதுஎனவுனரத்தமையானும் இருசொற் பிளவுபடாது நடத்தலே தொகையிலக்கணம் என்பதை வலியுறுத்துதல் காண்க. இதனால், பெயரும் பெயரும் கூடிப் பிளவுபடாதினசத்திற்கு உருபுத்தொகல்வேண்டுமென்பது ஆசிரியருக்கும் சேனாவரையருக்குங் கருந்தாதல் தெளிக.
 
    இனி நச்சினார்க்கினியர், “எல்லாத்தொகையு மொருசொன்னடைய” என ஆசிரியர் கூறிய சூத்திரக் கருத்தை நுணுகிநோக்காது பெயரும் வினையும் பிரிந்திசைத்தவழியும் வேற்றுமையுருபு தொகுதலின் தொகையென தாங்கொண்ட பொருளைச் சாதிக்கமாறு, அச்சூத்திரதிற்கு எல்லாத்தொகைச் சொற்களும் ஒருசொல்நின்று தன்னைமுடிக்குஞ் சொற்களோடு முடியுமாறு போலத் ,தாமுந்தம்மைமுடிக்குஞ் சொற்களோடு முடிதலையுடை்ய என்று பொருள்  ஆசிரியருக்கு இச்சூத்திரத்தால் முடிபு கோடல் கருத்தாயீன்,
“பெயரினாகியதொகையுணருஎவே் 
யல்வுமுரியவப்பாலான”
 
எனத்தொகைகொண்டு முடிவுகூறார், என்னை!அதுகூறியது கூறிற்முமாகலின், அன்றியும், “பெயகினாகியதொகை”என ஆசிரியர் கூறினமையினானே! உருபு மறையச் சொற்றொகுதலையே தொகையென. ஆசிரியர் வேண்டினாரென்பதுநன்கு தெளியப்படும். உம்மையினாலே உருபு மறையப் பெயரும் வினையுந் தொகுதலை யும் தொகையென்றே .ஆசிரியர் கொண்டாரென்பதும் நன்கு தெளியப்படும். அங்ஙனமாகச் சொற் பிளவுபடினும், உருபு தொகுதலே தொகையென்றேநச்சினார்க்கினியர் கருத்துஆசிரியர்ண!டு முரணுதல் காண்க. அன்றியும் ஒருசொல்லாய் கிற்றல் என்பதன்கண் இவர்கொண்ட கருத்து ஒருசொல்லாய் நின்று உருபேற்றலும் பயனிலைகோடலுமேயாகலின் அதுஉருபு விரிந்து! நிற்குந்தொகாநிலைச் சொற்கண்ணும் வருதலின் அதுபொருந்தாதெனவுட்கொண்டே சக்கரசமச்சிவாயரும் “பெயரொடு பெயரும்“(பொ-க0) என்னும் நன்னுாற் சூத்திரவுரையின்கன் “ஒருமொழிபோடைத்தலாவதுகொல்யானை வந்தது, நிலங்கடந்தான் சாத்தன் என இரண்டு முதலிய பலசொற் றொடர்ந்துஒருபெயராயும் வினையாயும் நின்று தம்முடிபேற்றலெனப் பொருள்கூறின், அவ்வாறு தொகாநிலைத்தொடருங் கொன்ற யானைவந்ததுநிலத்தைக் கடந்தான் சாத்தன் என நடக்குமாதலின் அதுபொருந்தாதென்க”என மறுத்தார்.
 
    இன்னும், நச்சினார்க்கினியர், சேனாவரையர் கருத்தை மறுக்கு மாறு 
“அதுவெனவேற்றுமையுயர்திணைத்தொகைவயின் 
அதுவெனுருபுகெடக்குகரம்வருமே”
என ஆசிரியர் கூறிய சூத்திரத்திற்குநேரே பொருள் கொள்ளாது, “உயர்திணைதொகையிற்குகரம்வரும் அதுவென்வேற்றுமை “அதுவெனுருபு கெடவரும்” எனஇயையின்றி மாற்றியும், “ உடைமைப்பொருள்வரு” மென இல்லாதபொருளைவருவித்தும் ஆசிரியர் கருத்தாடுமுரணப் பொருள்கொண்டு, ‘நம்பிமகன்.என்னுந் ,தொகை நம்பிக்கு மகன் என விரியும் இஃது உருபு மயக்கம்‘என்றும், ‘நின்மகன் பாலுமுண்ணாள்‘‘யா மெம்மகனைப் பாராட்ட‘ என்பவற்றுள் அதுவெனுருபுகெட அதனுடைமைப்பொருள் விரிந்தவாறு காண்க இவை உருபுநிலைக்களத்துப்பொருண் மயங்கின என்றும்,  இவற்றிற்கு நான்கனுருபு விரிப்பின் நினக்குமகளாகியவள் எமக்கு மகனாகியவனைஎன ஆக்கங்கொடுத்துக் கூறல்வேண்டும் ஆண்டுஅம்முறைமை செயற்கையாமாதலின் அது பொருளன்மையுணர்க என்றும் உதாரணங்காட்டினர். ஆசிரியர் அதுவெனுருபுகெட வுடைனமப்!பொருள்வரும் என்று கூறிளூால்லரரதலரனும், உ.டையன்பது சொல்லுருபன்றிப் பொருளன்றாதலானும், நின்மகன் என்பதும் நம்பிமகன் என்பதுபோலப் பயனிலைகொள்ளராது நின்றவழி நினக்குமகள் என விரியுமாதலானும், நம்பிமகன் என்பதும் பயனிலைகொள்ளுங்கால் நம்பிக்குமகன் வந்தான் என முடியாமையின்நம்பியுடையமகன் வந்தாள் என்றாதல் நம்பிக்குப் பிறந்தமகன்வந்தான் என்றாதல் விரித்தல் வேண்டுமாதலானும், நின்மகன்என்பதையும் நினக்குப் பிறந்தமகள் என விரிக்கலாமாதலானும்அது பொருந்தாதென மறுக்க. அன்றியும், நினக்குமகனாயுள்ளவன் என்பது ஆக்கமெனின் இயற்கையைச். செயற்கையாகக்கூறியதோர் இலக்கணையெனினுமாம். ஆதலின், அதுவும் பொருந்துமாறறிக.
 
    இன்னும் நச்சினார்க்கினியர் சாரைப்பாம்பு முதலியவற்றினும் ஆகிய என்னுஞ் சொல்லுருபு தொக்கதென்றாராலெனின், அதுஐம்பாலறியும் பண்புதொகுமொழி என்பதற் கேலாமையின் அதுபொருந்தாதென்க. வட்டப்பலகையில் மகரங்குன்றலும் தொகுதலெனின் அது புணர்ச்சிபற்றிவந்ததன்றித் தொக்கதன்றாமாதலின்அவர்கருத்து நிரம்பாதென்க. ஆதலீன், சேனாவரையர்கருத்தேவலியுறுதல் காண்க.
 
    இன்னும், சேனாவரையர் கருத்தே இலக்கணவிளக்க நூலாருக்குத்கருத்தாதல், 
“பெயரொடுபெயரும்வினைபும்வேற்றுமை 
முதலியபொருளின்முட்டுங்காலை
வேற்றுமையுருபுமுவமவுருபு 
மும்மையுந்தம்மிடையொழியவொட்டியு
மொழிவதொன்றின்றியொன்றெடொன்றெட்டியு 
மிரண்டும்பலவுமாகவொற்றுமைப்பட் 
டொருசொவினியல்வனதொகைநிலைத்தொடர்ச்சொல்”
 
என்னுஞ் சூத்தீரதானும் அதனுரையானும் அறியப்படும்.அவர் கருத்தே பிரயோக விவேக .நூலாருக்குங் கருத்தாதல்“தனிநிலைச்சொற்கள் தகுதிமுதலாகிய மூன்றுந் தோன்ற அவ்வழியாக வேற்றுமையாகஅவ்வப்பொருண்மேற் பிளவுபட்டிசையாது தம்முட்கூடுவதுதொகைநிலையாம். பிளவுபட்டு விரிந்ததுதொகாநிலை” (சமாசம்-உ) எனக் கூறியதனால் அறியப்படும்.
 
-“செந்தமிழ் தொகுதி-உகூபகுதி-க, 

பொருளுதவியதமிழ்பிமானிகள்

ஸ்ரீமார் S.கந்தையாஅவர்கள், பிறக்ரர், சுளிபுரம் 20-00
ஸ்ரீமார் ச. குழந்தைவேல் அவர்கள், ஆசிரியர், தாவடி 20-00
ஸ்ரீமார்க. மயில்வாகனம் அவர்கள், தலைமையாசிரியர், அரசினர் பரிபாலன பாடசாலை, புத்தூர் 10-00
ஸ்ரீமார் கு.சு.கனகராயர் அவர்கள், பிறக்ரர், தெல்லிப்பழை 10-00
ஸ்ரீமார் S. கனகசபை அவர்கள் பிறக்ரர் காரைநகர் 10-00
ஸ்ரீமார் S.முருகேசபிள்ளை அவர்கள் தலைமையாசிரியர் 10-00
ஸ்ரீமார் சி.சுவாமிநாதன் B.A அவர்கள், சைவாசிரியகலாசாலை அதிபர், திருநெல்வேலி 10-00
ஸ்ரீமார் S. சண்முகரத்தினம்அவர்கள், அரசினர் ஆசிரியகலாசலை அதிபர் கோப்பாய் 10-00
ஸ்ரீமார் சி.இராசையா அவர்கள், ஆசிரியர், சிவியாதெரு 10-00
சதானந்த, வித்தியாசாலை ஆசிரியர்கள், (அளவெட்டி) 10-00
பண்டிதகலாசாலை மாணவர், திருநெல்வேலி 11-00
ஸ்ரீமார் கா. கந்தசாமி ஆசிரியர் அவர்கள், வட்டுக்கோட்டை (சேகரி்த்தபணம்) 11-00
பண்டிதர் க.தம்பாபிள்ளை அவர்கள், மட்டுவில் (சேகரி்த்தபணம்) 11-00
செந்தமிழ்ச் தேர்ச்சிச்கழகம், மயிலிட்டி தெற்கு 10-00
ஸ்ரீமாந் மு.கதிரவேலு அவர்கள் ஆசிரியர், சிவன்கோவலடி, வட்டுக்கோட்டை 8-00
கொட்டடி வித்தியாசாலை ஸ்ரீமாந் க. குமாரசுவாமி அவர்கள் ஆசிரியர் (சேர்த்தபணம்) 7-00
டாக்டர் கு.சிவப்பிரகாசம் அவர்கள் பண்டிதகலாசாலை அதிபர்,திருநெல்வேலி 5-00
ஸ்ரீமாந் வி.செல்வநாயகம் M.A அவர்கள், அரசினர் ஆசிரிய கலாசலை கோப்பாய் 5-00
ஸ்ரீமாந்.கைலாசபதி அவர்கள் உபஅதிபர்,சைவாசிரியகலாசாலை திருநெல்வேலி 5-00
பண்டிதர்சி.கணபதிப்பிள்ளை அவர்கள், ஆசிரியர்,சைவாசிரியகலாசாலை திருநெல்வேலி 5-00
ஸ்ரீமாந் இ. நடராசாஅவர்கள், சைவாசிரியகலாசாலை திருநெல்வேலி 5-00
ஸ்ரீமாந் வ. நடராசா அவர்கள், தலைமையாசிரியர், முத்துத்தம்பி வித்தியாசாலை திருநெல்வேலி 5-00
ஸ்ரீமாந்ச, சுப்பையா அவர்கள் ஆசிரியர், முத்துத்தம்பி வித்தியாசாலை திருநெல்வேலி 5-00
பண்டிதர் செ.துரைசிங்கம் அவர்கள் ஆசிரியர்,முத்துத்தம்பி வித்தியாசாலை திருநெல்வேலி 5-00
பண்டிதர் சு.செல்லையாஅவர்கள், ஆசிரியர்,முத்துத்தம்பி வித்தியாசாலை திருநெல்வேலி 5-00
பண்டிதர் கா.தம்பையாஅவர்கள், ஆசிரியர், முத்துத்தம்பி வித்தியாசாலை திருநெல்வேலி 5-00
ஸ்ரீமாந் ச.நடராசா அவர்கள் ஆசிரியர், சைவ வித்தியாசாலை கல்வியங்காடு 5-00
ஸ்ரீமாந் சி.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆசிரியர், சைவ வித்தியாசாலை கல்வியங்காடு 5-00
ஸ்ரீமாந்.K.Sஆனந்தர் அவர்கள், ஆசிரியர்,துவிபாஷபாடசாலைதிருநெல்வேலி 5-00
ஸ்ரீமாந் த.சின்னத்தம்பி அவர்கள் ஆசிரியர், அளவெட்டி 5-00
ஸ்ரீமாந் ச. சிதம்பரப்பிள்ளை அவர்கள் ஆசிரியர், அளவெட்டி 5-00
ஸ்ரீமாந்.வை. நடராசா அவர்கள், தலைமையாசிரியர், ஞானோதியவித்திதியாசாலை, அளவெட்டி. 5-00
ஸ்ரீமாந் மு.சின்னப்பு அவர்கள், ஆசிரியர், ஞானோதியவித்திதியாசாலை, அளவெட்டி. 5-00
ஸ்ரீமாந் வ. வைத்தியலிங்கம் அவர்கள், ஆசிரியர், ஞானோதியவித்திதியாசாலை, அளவெட்டி 5-00
ஸ்ரீமாந் த.சிவலிங்கம் அவர்கள்,ஆசிரியர், 5-00
ஸ்ரீமாந் பி.அருணாசலம் அவர்கள், மானேஜர், இந்துக்கல்லூரி, நீர்வேலி 5-00
ஸ்ரீமாந் S.நடராசா அவர்கள், தலைமையாசிரியர், இந்துக்கல்லூரி, நீர்வேலி 5-00
ஸ்ரீமாந் P.இராமுப்பிள்ளை அவர்கள், ஆசிரியர், இந்துக்கல்லூரி, நீர்வேலி 5-00
ஸ்ரீமாந் கை.செல்லமுத்து அவர்கள் தலைமையாசிரியர் கொழும்புத்துறை, 5-00
ஸ்ரீமதி க.இராசம்மா அவர்கள் ஆசிரியர் 5-00
ஸ்ரீமாந் கோ.நமசிவாயம் அவர்கள், தலைமையாசிரியர் விக்கிநேசுவாவித்தியாசாலை குப்பிளான் 5-00
ஸ்ரீமாந் சி.வேலுப்பிள்ளைஅவர்கள், ஆசிரியர்,விக்கிநேசுவா வித்தியாசாலை குப்பிளான் 5-00
விக்கிநேசுவா வித்தியாசாலை ஆசிரியர் பலாலி 5-00
பாலர் ஞானோதயசங்கம், மயிலிட்டி தெற்கு 5-00
ஸ்ரீமாந் ச. பொன்னையா அவர்கள் ஆசிரியர், அளவெட்டி 5-00
பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அவர்கள் தலைமையாசிரியர் பன்னாலை 5-00
ஸ்ரீமாந் வே.சங்கரப்பிள்ளைஅவர்கள், ஆசிரியர் பன்னாலை 5-00
ஸ்ரீமாந் இ.நமசிவாயம்அவர்கள் ஆசிரியர் பன்னாலை 5-00
ஸ்ரீமாந் சி.செல்லாச்சி அவர்கள் ஆசிரியர் பன்னாலை 5-00
ஸ்ரீமாந் கந்தையா அவர்கள் ஆசிரியர், அரசினர் பாடசாலை கோப்பாய் 5-00
ஸ்ரீமாந் கந்தையா அவர்கள், ஆசிரியர், மாவிட்டபுரம் 5-00
ஸ்ரீமாந். T சின்னத்தம்பி அவர்கள், தலைமையாசிரியர், ஆங்கிலவித்தியாசாலை, அளவெட்டி 5-00
ஸ்ரீமாந். A.குமாரசுவாமி M.A அவர்கள், அதிபர், இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் 5-00
ஸ்ரீமாந் S.V.சுப்பிரமணியம் அவர்கள், ஆசிரியர், இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் 5-00
ஸ்ரீமாந் K.S சுப்பிரமணியம் அவர்கள் ஆசிரியர், இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் 5-00
ஸ்ரீமாந் N.நாராயணசாஸ்திரிகள் அவர்கள், ஆசிரியர், இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் 5-00
ஸ்ரீமாந் அ.பாமசாமி அவர்கள்.தலைமையாசிரியர்,சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை 5-00
ஸ்ரீமாந் செ.சிவசுப்பிரமணியம் அவர்கள், ஆசிரியர், சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை 5-00
ஸ்ரீமாந் சி.வள்ளியம்மை அவர்கள், ஆசிரியர் சைவவித்தியாசாலை, தெல்லிப்பழை 5-00
ஸ்ரீமாந் ச.சுப்பிரமணியம் அவர்கள் ஆசிரியர், புத்தூர் 4-00
ஸ்ரீமாந் வே.சுப்பிரமணியம் அவர்கள், தலைமையாசிரியர்,வைத்தீஸ்வர வித்தியாசாலை, யாழ்ப்பாணம் 4-00
ஸ்ரீமாந் ச.கோபாலபிள்ளை அவர்கள் ஆசிரியர், வைத்தீஸ்வர வித்தியாசாலை, யாழ்ப்பாணம் 4-00
வாலிபர்சங்கம், வயாவிளான் 3-00
3-00
பிரம்மஸ்ரீ ந, கந்தசாமி ஐயர் அவர்கள் ஆசிரியர், சைவாசிரியகலாசாலை, திருநெல்வேலி 3-00
ஸ்ரீமாந் தி.செல்லத்துரை அவர்கள் ஆசிரியர், அளவெட்டி 3-00
ஸ்ரீமாந் சி.மயில்வாகனம்அவர்கள் ஆசிரியர் அளவெட்டி 3-00
ஸ்ரீமாந் லீ.சின்னத்தம்பி அவர்கள் ஆசிரியர் அளவெட்டி 3-00
ஸ்ரீமாந் ந.வல்லிபுரம்அவர்கள் ஆசிரியர் அளவெட்டி 3-00
பண்டிதர் செ.நடராசா அவர்கள் ஆசிரியர்,வட்டு .திருஞானசம்பந்தர் வித்தியாசாலை 3-00
ஸ்ரீமாந் ந.செல்லத்தரை அவர்கள் ஆசிரியர், ஆங்கிலவித்தியாசாலை அளவெட்டி 3-00
ஸ்ரீமாந் தி.சுந்திரமூர்த்தி அவர்கள், ஆசிரியர், சைவ வித்தியாசாலை தெல்லிப்பழை 3-00
ஸ்ரீமாந் சி.முருகேசு அவர்கள் ஆசிரியர் முத்துத்தம்பி வித்தியாசாலை திருநெல்வேலி 2-50
ஸ்ரீமாந் சீ.தம்பிப்பிள்ளை அவர்கள், ஆசிரியர், முத்துத்தம்பி வித்தியாசாலை திருநெல்வேலி 2-50
ஸ்ரீமாந் ஞ.தியாகராசாஅவர்கள் ஆசிரியர் முத்துத்தம்பி வித்தியாசாலை திருநெல்வேலி 2-00
அளவெட்டி ஆங்கில வித்தியாசாலை 2-00
அளவெட்டி நாகபூஷணி வித்தியாசாலை 2-00
ஸ்ரீமதி க.செல்லம்மா அவர்கள் ஆசிரியர் ஏழாலை வடக்கு 2-00
ஸ்ரீமாந் வீ.அரியநாயகம் அவர்கள் தலைமையாசிரியர். ஞானோதய வித்தியாசாலை மயிலிட்டி தெற்கு 2-00
ஸ்ரீமாந் சீ.கந்தையா அவர்கள் ஆசிரியர் ஞானோதய வித்தியாசாலை மயிலிட்டி தெற்கு 2-00
ஸ்ரீமாந் சு.நாகலிங்கம் அவர்கள், ஆசிரியர், ஞானோதய வித்தியாசாலை மயிலிட்டி தெற்கு 2-00
ஸ்ரீமாந் ச.பொன்னம்பலம் அவர்கள், கிளாக்கர் மயிலிட்டி தெற்கு. 2-00
ஸ்ரீமாந் இ தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆசிரியர் மயிலிட்டி தெற்கு 2-00
ஸ்ரீமாந் க.சுப்பிரமணியம் அவர்கள் ஆசிரியர் வட்டுக்கோட்டை 2-00
ஸ்ரீமாந் ஜ. முருகுப்பிள்ளை அவர்கள், வட்டுசிவன் கோவிலடி 2-00
ஸ்ரீமாந் வே.சுப்பிரமணியம்அவர்கள் ஆசிரியர்புத்தூர் 2-00
ஸ்ரீமாந் சிதணிகாசலம் அவர்கள் ஆசிரியர் புத்தூர் 2-00
ஸ்ரீமதி சி.அன்னப்பிள்ளை அவர்கள் ஆசிரியர் புத்தூர் 2-00
ஸ்ரீமாந் து, செல்லையா அவர்கள், ஆசிரியர் சைவ வித்தியாசாலை தெல்லிப்பழை 2-00
ஸ்ரீமாந் அ. தியாகராஜர் அவர்கள் ஆசிரியர் சைவ வித்தியாசாலை தெல்லிப்பழை 2-00
ஸ்ரீமதி மு.அன்னப்பிள்ளை அவர்கள் வட்டு சிவன்கோவிலடி 1-50
ஸ்ரீமதி.க.காங்கேசு அவர்கள், ஆசிரியர்,விக்கிநேசுவர வித்தியாசாலை குப்பிளான் 1-00
ஸ்ரீமதி மு.வைத்தியலிங்கம் அவர்கள், ஆசிரியர், விக்கிநேசுவர வித்தியாசாலை குப்பிளான் 1-00
ஸ்ரீமதி ச. தம்பிராசா அவர்கள் ஆசிரியர் குப்பிளான் 1-00
ஸ்ரீமதி சீ. சுப்பர் அவர்கள் ஆசிரியர் குப்பிளான் 1-00
ஸ்ரீமதி வே. கனகசபை அவர்கள், ஆசிரியர், புத்தூர். 1-00
ஸஸ்ரீமதி சி.கந்தவனம் அவர்கள், ஆசிரியர், மயிலிட்டி தெற்கு 1-00