வினைப்பகுபத விளக்கம்
வினைப்பகுதியும் விகுதியும் பிறவுந் தம்முள் அணுகி ஒன்றி இறுகி நிற்குஞ் சொல் வினைப்பகுபதம் எனப்படும். வினைப்பகுதி வினைச்சொற்கு மூலமாய் நிற்கும் நட, வா முதலியன. விகுதி இறுதியினிற்கும் அன், ஆன் முதலியன. பிறவாவன இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன. இவையே வினைப் பகுபதங்கட்கு உறுப்புக்கள். இவையெல்லாம் ஈண்டுக் கூற விரியும்É நன்னூல் சின்னூல் முதலிய இலக்கணங்களிற் காண்க.
இவ்வுறுப்புக்களை வௌ;வேறு பிரித்துணர்தலும் இவற்றின் புணர்ச்சிவிதி காண்டலும் இலகுவல்ல. சிலர் செய்யுள் விகார விதியே இவற்றின் புணர்ச்சிக்கும் விதி என்பர். வேறு சிலர். 'விளம்பிய பகுதி வேறாதலும் விதியே' என்பதே இவற்றிற்கும் விதி என்பர். எவ்விதியாயினும் ஆகட்டும். நாமுஞ் சிலசிலவற்றை முடித்துக் காட்டுதும்.
வினைப்பகுதி
நடவா மடிசீ விடுகூ வேவை
நொப்போ வெளவுரி ...ண்பொருந் திருந்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென்
றெய்திய விருபான் மூன்றா மீற்றவுஞ்
செய்யென் னேவல் வினைப்பகாப் பதமே.
- நன்னூல்
இங்கே கூறிய நட, வா முதலிய வாய்பாடுகளுள்ளே வினைப் பகுதிகளனைத்தும் அடங்கி முடியும். இவற்றினின்றும் பலவகைத் தொழிற் பெயர்களும், பலவகை வினையெச்சங்களும், பலவகைப் பெயரெச்சங்களும், பலவகை முற்றுக்களும், பலவகைப் பெயர்களும் பிறக்கும். தொழிற்பெயர் செய்பவன் தன்மை மாத்திரம் உணர்த்துஞ் சொல்.
நட முதலியன
நட இக கச சும நிர இழ கற
இட உக பச நய பர உழ துற
கட முக மித இர அல அள பற
கிட அச அம கர கல இற வற
இவையும் இவைபோன்ற அகரவீறுகளும் நட என்னும் வாய்பாட்டுள் அடங்கும். இவை தொழிற்பெயரில் நடத்தல். நடக்கை, நடப்பு முதலியனவாய் வரும். எதிர்மறையில் நடவாமை, கடவாமை முதலியனவாய் வரும். பிறவினையில் நடத்துதல், நடாத்தல், நடவுதல் முதலியனவாய் வரும். வினையெச்சத்தில் நடந்து, நடக்க, நடப்ப, நடக்கின், நடப்பின் முதலியனவாய் வரும். சில்லுழி இறந்த காலத்திலே நடைஇ, கடைஇ என்பன போலவும் வரும். பெயரெச்சத்திலே நடந்த, நடக்கின்ற முதலியனவாய் வரும். முற்றிலே நடந்;தான், நடக்கின்றான் முதலியனவாய் வரும். நடக்க, நடப்ப என்பனபோல வருங்காலத்திலே குகரமாவது புகரமாவது விரிதலைப் பெறுதல் பெரும்பான்மை.
இனி இவற்றுள்ளே சிலவற்றினின்று தோற்றிய பெயர்களையுங் காட்டுதும். பெயர்களுக்கு ஐ, டு, பு, வி, வு, வை முதலியன விகுதிகளாய் வரும். இவற்றுட் சில தொழிற்பெயர் விகுதிகளாயும் நிற்கும். ஐகார விகுதி புணரும்போது இறுதியிலுள்ள அகரங் கெடும்.
ஐ
நட - நடை பச-பசை கர-கரை இற-இறை
இட-இடை அம-அமை புல-புலை கற-கறை
கட-கடை சும-சுமை வல-வலை பற-பறை
கிட-கிடை இர-இரை உழ-உழை வற-வறை
இங்கே ஐகார விகுதிக்குரிய வினைமுதற் பொருள், கருவிப்பொருள், செயப்படுபொருள் என்னும் முப்பொருள்களுள்ளே எப்பொருள் எதற்குப் பொருந்துமோ அப்பொருளை அதற்குக் கொள்க. நடை - வழி, இடை - நடு, கடை - வாயில், இரை - உணவு, புலை - வெறுப்பது, வலை - வலைப்பது, வலத்தல் - தெற்றல், இறை - கடவுள், கறை - கறப்பது, வரி, பறை - இறகு. இவற்றுள் அமை, பசை. பறை முதலியன சில அமைந்தான், பசைந்தான் முதலியனவாக நடத்தலுமுண்டு.
டு பு வி
அம - அமடு நட - நடப்பு புல - புலவி
சும - சுமடு இட - இடப்பு கல - கலவி
கச - கசடு கட - கடப்பு அள- அளவி
அச - அசடு கச - கசப்பு துற - துறவி
அமடு- உளுக்குவதுஈ சுமடு- சும்மாடு, கசடு-வெறுக்கற்பாலது, குற்றம், அசடு- சோர்வு, வழு, கடப்பு- கவரிறுக்கி, புலவி- வெறுப்பு, அளவி- அளவு, துறவி-சந்நியாசி.
வு வை பிற
பிற - பிறவு நட - நடவை கிட - கிடக்கை
இற - இறவு இட - இடவை புல - புலவல்
துற - துறவு இற - இறலை நட - நடவல்
கர - கரவு கற - கறவை இற - இறடி
பிறவு- பிறப்பு, நடவை- வழி, இடவை- வழி, இறவை-ஏணி, கடப்பது என்னும் பொருட்டு. கறவை- கறக்கும் பசு, கிடக்கை- பூமி, புலவல்- புலவி, இறடி- தினைத்தாள்É கடக்கற்பாலது.
வா முதலியன
வா, ஆ, கா, சா, தா, பா முதலியன வா என்னும் வாய்பாட்டுப் பகுதிகளாகும். இவற்றுள் வா, தா என்பன இரண்டும் பெரும்பாலுங் குறுகி முடிதலிலன்றி ரகரமும் பிறவும் விரிதலையும் பெற்று முடியும். இவை தொழிற்பெயரில் வருதல், தருதல், வருகை, தருகை, வரல், தரல் முதலியனவாய் வரும். எதிர்மறையிலே குறுகாமல் வாராமை, தாராமை என வரும். வினையெச்சத்தில் வந்து, தந்து, வர, தர, வரின், தரின் முதலியனவாகி வரும். முன்னிலையில் வம்மோ, தம்மோ, வம்மின், தம்மின் எனவும் வரும்.
இவை தனி நின்று விகுதி முதலியவற்றோடு கூடி முடிந்ததுபோலச் சில வினைப்பகுதிகளுக்குப் பின்னே துணை வினையாய் நின்று அவைகளை முடித்தலும் உண்டு. துணை வினையாங்கால் தொழிற்பெயரில் உலைவரல், உலைதரல், பைவரல், சைவரல் முதலியனவாய் வரும். உலைதரல் - உலைதல், பைவரல் - துயருறல், 'பைவராவருங்கான்' என்பது பாரதம். சைவரல் - இழிதல், 'சைவந்தவனீ' என்பது சங்கற்பநிராகரணம். வினையெச்சம் முதலியவைகளிலே உலைவந்து, உலைதந்து, பைவந்த, உலை வந்த, உலை வந்தான் முதலியனவாய் வரும்.
இவற்றுள் வா என்பது உடன்பாட்டுத் தொழிற்பெயராய் வாரானை எனவும் வரும். வாரானை- வருகை கொண்டு என்பதன் பின்சேர்ந்து, கொண்டுவா என்று நின்று பகுதியீற்றோடு தானும் குறைந்து கொணர்தல், கொணர்;ந்தான் முதலியனவாகி முடிதலும் உண்டு. வா என்பது ஒற்றுமை பற்றி மா எனத் திரிந்து சில பெயர்களுக்குப் பின் அணுகி அவைகளை வினையாக்குதலும் உண்டு. வினையாக்குங்காற் பெயர்களுட் சில இறுதி கெடும். அவை அலமரல், ஏமரல், உலமரல் முதலியனவாய் வரும். அலமரல் - சுழலல், ஏமரல்- மயங்கல், மகிழல், காப்புறல். 'ஏமராமன்னன்' என்பது வள்ளுவம். இது ஏமம் வரல் என விரியும். அருமந்த என்பதற்கும். இவைபோல அருமரல் எனத் தொழிற்பெயர் கொள்ளல் நன்று.
அருப்பம் - வரல் ® அருமரல், அருப்பம் - அருமை. 'காமருகழனி' என்புழிக் 'காமரு' என்பதனையும் காமம் வரு என முடிக்கலாம். காமம் - விருப்பு.
மரல் என்பது மருவுதல் என்பதன் விகாரம் என்பாருமுளர். அதனினும் இதுவே அணுக்கு. பிங்கல நிகண்டுகாரர் 'வாவெனல்' என்பதன்றி 'மாவெனல்' என்பதும் அழைத்தலின் பெயர் என்பதும் அறிக. அன்றி மிஞ்சுதல், வேய்தல் என்பன விஞ்சுதல், மேய்தல் எனவரும் வழக்கும் நோக்குக. இங்கே தோன்றும் பெயர்களையுங் காட்டுதும்.
பெயர்
வா - வந்து, வருவாய், வாரி, வரவு
தா - தந்தை, தாய், தம்மான், தரவு
வந்து - காற்று,'வந்துறாமுன் வந்தென' (கந்தபு.): வருவாய் - வரும்பொருள், வருவது. வாரி என்பதும் அப்பொருட்டு. வரவு - வருதற்குரியது. தந்தை - தந்தவன் (சங்கற்பநி.). தம்மான் என்பதற்குத் தக்கோன் எனலும் அமையும். தரவு - 'தந்துரைத்தலிற்றரவே' என்ற அது. வாய், வாயில் என்பவற்றிற்கும் வா என்பதே மூலம். வாய் - வருதற்கருவி. வாயில் என்பதும் அது.
ஆ என்பது சம்பவம், தகுதி, வளர்ச்சி முதலிய பொருள்களைக் காட்டி நிற்கும். புணருங்கால் கு, து, ய முதலிய பலவும் விரிதலைப்பெறும். தொழிற்பெயரிலே ஆகுதல், ஆதல், ஆகை எனவும் ஆக்குதல், ஆத்தல், ஆப்பு எனவும் வருதலன்றி வேறும் பலவிதமாய் வரும்.'செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து' என்பதில் ஏமாப்பு என்புழியுள்ள ஆப்பு என்பதனையும் நோக்குக. இன்றி என்னும் எச்சம் அதனோடு முடிகின்றது. பரிமேலழகர் வலியாதல் என்பர்.
வினையெச்சத்திலே ஆகி, ஆய், ஆக, ஆ, ஆகின், ஆக்கி முதலியனவாய் வரும். பெயரெச்சத்திலே ஆகிய, ஆய, ஆத்த, ஆக்கிய முதலியனவாய் வரும். இவைகட்குத் தோன்றிய, வளர்ந்த, தக்க முதலிய பொருள் கூறப்படும். 'ஆத்தவறிவினர்' என்புழி ஆத்த என்பது தக்க எனப் பொருள்படுமாறும் அறிக. வினைமுற்றிலே ஆயினான், ஆனான், ஆயிற்று, ஆயிட்டு, ஆகட்டு முதலியனவாய் வரும். ஆ என்பது பெயர்களுக்குப் பின்னே நின்று அவைகளை வினையாக்குதல் பெரும்பான்மை. 'உவப்பாய்', 'ஆவதாகிய' முதலியவைகளை நோக்குக. ஆவதாகிய - வந்த. வினையாக்குங்காற் சில பெயர்களின் இறுதி கெடுதலும் உண்டு.
வரலாறு
சோகம் ñ ஆ ñ தல் ® சோகத்தல் - துயருறல்
அல்லல் ñ ஆ ñ தல் ® அல்லாத்தல் - துயருறல்
விம்மல் ñ ஆ ñ பு ® விம்மாப்பு - பொருமுதல்
ஏமம் ñ ஆ ñ பு ® ஏமாப்பு - மகிழ்ச்சியாதல்
ஆக்கம், ஆத்தன், ஆய் முதலியன ஆ என்பதிலிருந்து தோன்றிய பெயராகும். ஆக்கம் - செல்வம், ஆத்தன் - தக்கவன், ஆய் - தாய்.
கா என்பது வருங்கால வினையிலே குகரமாவது புகரமாவது விரியப் பெற்றுக் காக்க, காப்ப, காக்கின், காப்பின் முதலியனவாய் வரும். வருங்காலத்திலே குகரமாவது புகரமாவது விரிதலைப் பெரும்பாலும் எல்லாப் பகுதிகட்குங் கொள்க. காப்பு, காவல் முதலியன கா என்பதினின்று தோன்றிய பெயர்கள்.
சா என்பது இறந்தகாலத்திலே செது எனநின்று செத்து, செத்த, செத்தான் முதலியனவாய் முடியும். 'செதுமகவு' என்று சிந்தாமணிக்காரர் கூறுதலையும் நோக்குக. செதுமகவு - சாகும் பிள்ளை. இது நுதலற்பாற்று.
பா என்பது பரம்புதல். ஊர்தல் முதலிய பொருள்பட்டு வகரம் யகரம் முதலிய விரியப்பெற்று முடியும். தொழிற்பெயரிலே பாவுதல். பாய்தல் முதலியனவாய் வரும். மற்று எச்ச முற்றுக்களிலே பாய், பாய, பாயின், பாயிற்று முதலியனவாய் வரும். பாயல், பாய், பாம்பு, பாந்தன் முதலியன பா என்பதினின்று தோன்றிய பெயர்கள். பாம்பு - ஊர்வது. சர்ப்பம் என்னும் வடமொழியும் இப்பொருட்டாதல் அறிக.
யா என்பது கட்டுதல் என்னும் பொருள்பட்டு யாக்கை, யாப்பு எனவும், யாத்து, யாக்க எனவும், யாத்தான் எனவும், யாக்கை. யாப்பு, ஆக்கை, ஆப்பு எனவும் வரும். விரித்து விதித்துப் பொருத்தி நோக்குக. யாக்கை - உடம்பு, யாப்பு - பாட்டு, இயை என்பதே யா என மருவொடு திரிந்ததென்பாருமுளர்.
மடி முதலியன
மடி அணி பரி கவி அளி
அடி பண பிரி குவி தறி
கசி பதி நலி கழி குறி
விசி துமி பொலி பழி இனி
இவையும் இவைபோன்ற இகார வீறுகளும் மடி என்னும் வாய்பாட்டுடன் அடங்கும். இவ்வீறுகளுள்ளே பல பொருள் பயக்கும் பகுதிகளும் உள. இவை விகுதி வேறுபடுத்தலால் வேறாகப் புலப்படும். அவற்றுள்ளும் சில காட்டுதும்.
விகுதி வேறுபடுத்து
மடி - மடிதல், மடித்தல் பரி - பரிதல், பரித்தல்
ஷ படி - படிதல், படித்தல் அரி - அரிதல். அரித்தல்
பணி - பணிதல், பணித்தல் வழி - வழிதல், வழித்தல்
துணி - துணிதல், துணித்தல் விளி - விளிதல், விளித்தல்
இவை பகுதியில் ஒன்றேயாயினும் விகுதியிரட்டலால் வேறுபாடு தோற்றின. பணித்தல் - சொல்லல், பரிதல் - அறல், பரித்தல் - தாங்குதல், அரித்தல் - ஈட்டுதல், வழித்தல் - மெழுகுதல், விளித்தல் - அழைத்தல். இவற்றுட் சில பிறவினைப் பொருளனவாயும் நிற்கும். இவை வினையெச்சம் முதலியவைகளிலே மடிந்து, மடித்து, மடிய, மடிக்க, மடிப்ப, மடிந்த, மடித்த, மடிந்தான், மடித்தான் முதலியனவாய் வரும். பிறவினையில் மடிவி, மடிப்பி, படிவி, படிப்பி முதலியனவாய் வரும். சில விகுதியிரட்டலாற் பிறவினையாகும்É அவை பிரிதல் - பிரித்தல். கவிதல் - கவித்தல் முதலியன. இவ்வீற்றினின்று தோற்றும் பெயர்களுக்கு அல், கை, சை, பு முதலியன விகுதிகளாகும்.
அல் கை சை பு
அரியல் தெரியல் கவிகை பழிசை படிப்பு
அணியல் துணியல் தறிகை பொலிசை கவிப்பு
நெரியல் விரியல் திரிகை வரிசை குறிப்பு
ஒலியல் குவியல் விசிகை பரிசை பொடிப்பு
அரியல் - மது, அணியல் - மாலை, நெரியல் - மிளகு, ஒலியல் - யாறு, தெரியல் - மாலை, விரியல் - ஒளி, கவிகை - குடை, தறிகை - உளி, விசிகை - கச்சு, பழிசை - இகழ்வு, பொலிசை - இலாபம், வரிசை - உயர்வு, பட்டம். பரிசை - படைதாங்கும் பலகை. கவிப்பு - குடை. இவற்றுட் சில வலிமெலி மிகுத்தலாலும், மிகுத்து விகுதி பெறலாலும் வேறுபடலுமுள. மடி என்பதினின்று மட்டி, மட்டு, மண்டி என்பவையும், இடி என்பதினின்று இட்டி என்பதுந் தோன்றும். மட்டி - மடிக்கும் வாள், மட்டு என்பதும் அது. மண்டி - காலை மடித்திருக்கும் நிலை. அன்றி இவைகளே பெயராயும் நிற்கும். மடி - சோம்பு, சீலை. அடி - கால், விசி - கச்சு, துமி - துளி, இனி - இனியது.
சீ முதலியன
சீ, ஈ, தீ, நீ முதலியன சீ என்னும் வாய்பாட்டுப் பகுதிகளாகும். இவற்றுள்ளே சீ என்பது குறிப்பாய் நின்று இகழ்ச்சி, வெறுப்பு என்னும் பொருள்களையும், வினையாய் நின்று செப்பமிடு, நீக்கு என்னும் பொருள்களையும் பயக்கும். இகழ்ச்சிப் பொருளிலும் வெறுப்புப் பொருளிலும் என் என்பதனோடு சேர்ந்து சீயெனல், சீயென்று, சீயென்ற முதலியனவாய் வரும். ரகரம் விரிந்து சீர்த்தல் எனவும் வரும். 'தூர்த்ததொரு காலையினிற் சுந்தரி பொருளாய்ச் சீர்த்திடலும்' என்ற கந்தபுராண கவியையும் நோக்குக. சீர்த்தல் - வெறுத்தல். சீத்தை, சீத்தையர் முதலியன இதினின்றுந் தோன்றிய பெயர்கள். சீத்தை - கீழ்மகன். மற்றைப்பொருளிலே சீத்து, சீத்த, சீக்க முதலியனவாய் வரும். சீப்பு, சீக்கு முதலியன ஆண்டுப் பெயராகும். ஈ, தீ முதலியன ஈதல், தீது, வீவு முதலியன ஆண்டுப் பெயராகும்É ஈகை - பொன், வீவு - மரணம், தீ என்பது தீந்து. தீதர, தீய, தீந்த, தீந்தது முதலியனவாய் இராமாயணத்திலே அடிக்கடி வரும்.
விடு முதலியன
விட கொடு இகு வகு தபு கறு
அடு சுடு தகு நது அறு குறு
இடு தடு பகு பொது இறு துறு
உடு பட புகு நொது உறு மறு
இவையும், இவைபோன்ற உகரவீறுகளும், மற்றைய மெல்லின விடையின் மெய்களில் வரும் உகரவீறுகளும், விடு என்னும் வாய்பாட்டுள் அடங்குவனவாம். இவற்றின்; முடிபு கூறுதல் எம்போலியர் தரத்தன்று. ஆயினுஞ் சில கூறுதும். இவ்வீறுகளுள்ளும் பலபொருள் பயப்பன பல. அவையெல்லாம் விகுதியால் வேறுபடும்.
விகுதி வேறுபடுப்பு
அடு - அடுதல், அடு;த்தல் விடு - விடுதல், விடுத்தல்
தொடு - தொடுதல், தொடுத்தல் இறு - இறுதல், இறுத்தல்
இவை பகுதியில் ஒன்றேயாயினும் விகுதியிரட்டலால் வேறுபாடு தோற்றின. அடுத்தல் - அணுகல், தொடுத்தல் - கட்டல், விடுத்தல் - விடைகுகூறல், இறுத்தல் - வரி கொடுத்தல், புகுதல் - புகுத்தல், அறுதல் - அறுத்தல் முதலியனவாகப் பிறவினை நோக்கி இரட்டுவனவற்றையும் அறிக. இவை தொழிற்பெயரும் எச்சமுற்றுக்களுமாதல் பல்வேறு வகை. இயைவு பற்றியன்றி விகுதிகளையும் பெறா.
இவற்றுள்ளே சில, தொழிற்பெயரிலே இறுதி கெட்டு அல், ஐ என்னும் விகுதிகளைப் பெற்று விடல். விடை, அடல், அடை, இடல், இடை எனவும் முதனீண்டு வீடு, ஆடு, ஈடு எனவும் வரும். இந்நிலையையே பெயராதற்கும் கொள்ளும். விடல் - குற்றம், விடை - மறுமொழி, அடல் - வெற்றி, அடை - விசேடனம், ஆடு - வெற்றி, ஈடு - சமம்.
இவையும் இவை போல்வனவும் இறந்த காலத்திலே எச்ச முற்றுக்களிலே விடு, விட்டு, விட, விட்ட, வி;ட்டான், தகு, தக்கு, தக, தக்க, தக்கான், அறு, அற்று, அற, அற்றான் முதலியனவாய் வரும். சில உடு, உடுத்து, உடுக்க, உடுத்தான், கொடு, கொடுத்து, கொடுக்க, கொடுத்தான் முதலியனவாய் இடைநிலைபெற்றே வரும். சில தபுத்து, தப்பி, தபுக்க, தப, தபுத்த. தப்பிய, தபுத்தான், பொது, பொதுத்து, பொத்தி, பொதுக்க, பொதுத்தான் முதலியனவாய் வரும். தபுதல் - சாதல், பொதுத்தல் - துளைத்தல், இவற்றின் வரன்முறைகளை முடிவு செய்தல் அரிது. சான்றோர் கவிகளிலே வரன்முறை நோக்கித் தழுவற்பாலன.
பெயர்
தகுதி அடுப்பு தகவு தக்கு
தொகுதி வகுப்பு நடவு மிக்கு
அறுதி உறுப்பு மிகவு பொத்து
உறுதி மறுப்பு இறவு தப்பு
தகுதி - பொருத்தம், நடுநிலை, அறுதி - முடிவு, தகவு - நடுநிலை, நடவு - நடுகை (இரகுவ.) தக்கு - தகுதி, பொத்து - துளை, இவற்றுள்ளே சில வலித்தல், மெலித்தல்களாலும் பெயராகும். வலித்தலால் வந்தன மேற்காட்டிய தக்கு முதலியன. மெலித்தலால் வந்தன தகு - தங்கம், பகு - பங்கம், நகு- நங்கு, தடு - தண்டு முதலியன. தங்கம் - தக்கது, நங்கு - இகழ்ச்சி (பழமலை).
மெலியிடையீறு
மண்ணு இரு கதுவு பரவு இழு
இருமு பொரு ஒருவு விரவு அழு
பொருமு உதவு முழுவு துருவு உழு
விம்மு கழுவு வழுவு வெருவு எழு
இவையும் இவைபோன்ற உகரவீறுகளும் ஒருவகையாகக் கொள்ளப்படும். இவற்றுள் இரு என்பது இருத்தல் இருந்து முதலியனவாய் வரும். பொரு என்பது பொருதல் பொருது முதலியனவாய் வரும். அலு, இழ முதலியன அலுத்தல், அலுத்து, இழுத்தல் முதலியனவாய் வரும். மண்ணு முதலியன மண்ணல், மண்ணி முதலியனவாய வரும். ஒருவு, முழுவு, உழு முதலியன இறுதிபோய் அல் என்பதனோடு சேர்ந்து அளபெடை பெற்றும் பெறாமலும் ஒராஅல், ஒரால் முதலியனவாயும் வரும். ஒராஅல் - விடுதல்.
தணிகைப்புராணம்
உழாஅலிற் பொலிவண் டிவர்பூந் தொடைநான் றொளிர்பந்தர்
எழாஅலிற் பொலிமெல் விசையுங் குரலு மெறிசெங்கை
முழாஅலிற் பொலிவண் முழவும் பாத முறையோடுந்
தழாஅலிற் பொலிநா டகவெள் ளமிழ்துந் தழைவுற்ற.
உழாஅல் - உழுதல், எழாஅல் - எழுதல், யாழ். முழாஅல் - தழுவல், தழாஅல் - தழுவல், இரு, வழு முதலியன. சில இரீஇ, வழீஇ முதலியனவாயும் வரும். இரீஇ - இருந்து, இருத்தி. இங்கே தழூஉ, ஒரூஉ, வெரூஉ முதலிய பெயர்களும் பிறக்கும். தழூஉ - குரவைக்கூத்து, ஒரூஉ - ஒருதொடை.
கூ முதலியன
கூ, பூ முதலியவற்றுள்ளே கூ என்பது கூவுதல், கூப்பிடல், கூவி, கூய், கூப்பிட்டு முதலியனவாய் வரும். இதினின்னு தோன்றும் பெயர்கள் கூகை, கூத்து, கூப்பிடு, கூவிடை முதலியன. கூவிடை - கூப்பீடு (இரா.) மற்றைய பூத்தல். மூத்தல், பூத்து, மூத்து முதலியனவாய் வரும்.
வே முதலியன
வே என்பது குகரம் விரியப்பெற்று வேகுதல், வேகுகை, வேக்காடு எனத் தொழிற் பெயராகும். இறந்தகாலத்திலே முதல் குறுகி வெந்து, வெந்த, வெந்தான் என வரும். மற்றைக் காலங்களிலே வேக, வேவ, வேகின்ற, வேகும் முதலியனவாய் வரும். இதினின்று தோன்றும் பெயர்கள் வேங்கை, வெந்தை, வெப்பு, வேனில், வெயில் முதலியன. வேங்கை- பொன், தபனீயம் என்பதும் இப்பொருட்டு. வெந்தை - பிட்டு.
மே என்பது வுகரம் விரியப்பெற்று மேவுதல், மேவல், மேவி, மேவிய முதலியனவாயும், மேய, மேயின, மேன முதலியனவாயும் வரும். மேவினர், மேவார் முதலியன பெயர். மேவு என்பாருமுளர். நச்சினார்க்கினியர் மே என்றே கூறுவர். (தொல்.)
வை முதலியன
வை திகை அசை துடை அமை உரை களை
கை நகை மிசை புடை சமை வரை தளை
சை பகை அடை விதை அலை அவை வளை
நை புகை குடை துதை மிலை தழை இனை
இவையும் இவைபோன்ற ஐகாரவீறுகளும் வை என்னும் வாய்பாட்டுப் பகுதிகளாம். இவற்றுள்ளும் பல பொருள் பயக்கும் பகுதிகளுள. அவைகளையும் விகுதி வேறுபடுக்கும்.
விகுதி வேறுபடுப்பு
வை - வைதல், வைத்தல் கரை - கரைதல், கரைத்தல்
அசை - அசைதல், அசைத்தல் அமை - அமைதல், அமைத்தல்
களை - களைதல், களைத்தல் விரை - விரைதல், விரைத்தல்
வைதல் - இகழ்தல், அசைத்தல் - கட்டல். 'புலித்தோலை யரைக்கசைத்து' (தேவார.) அமைதல் - அடங்குதல். இவை வினையெச்சம் முதலியவற்றிலே வைது (இகழ்ந்து), வைத்து, வைய (இகழ), வைக்க, வைத (இகழ்ந்த), வைத்த. வைதான், வைத்தான் முதலியனவாய் வரும். பிற வினையிலே வைவி, வைப்பி முதலியனவாய் வரும். இவை மூலமாகத் தோன்றும் பெயர்கள் வைவு, வைப்பு, அசைவு, அசைப்பு முதலியனவாய் வரும். வைவு - நிந்தை, சாபம், வைப்பு - புதையல், அசைவு - இளைப்பு (சிந்தா.) அசைப்பு - சொல் (திவாகர.).
இங்ஙனமன்றிப் பிறவினை நோக்கியுஞ் சில இரட்டி வரும். அவை அணைதல், அணைத்தல். இசைதல், இசைத்தல், வளைதல், வளைத்தல், முதலியன. சில இரட்டுதலே இயற்கையாய் நிற்கும். அவை கைத்தல், தைத்தல முதலியன. சில இரட்டாமையே இயற்கையாய் நிற்கும். அவை மிசைதல், வரைதல், மிடைதல் முதலியன. சில இருவகையும் பெற்று நிற்கும். அவை உதைதல், உதைத்தல், இரைதல், இரைத்தல் முதலியன. இரட்டாதனவெல்லாம் பிறவினையிலே வி என்பது பெற்று அணைவி, மிசைவி முதலியனவாய் வரும். இரட்டுவன வெல்லாம் பி என்பது பெற்று அணைப்பி, கைப்பி முதலியனவாய் வரும்.
சில அளபெடை பெற்று எச்சங்களும் முற்றுமாய் வரும். அவை அசைஇ, அசைஇய, அசைஇயது. தலைஇ, தலைஇய, நிலைஇ, நிலைஇய முதலியன. இவற்றுட் சில பிறவினையாயுங் கொள்ளப்படும். அசைஇ - இருந்து, வருத்தி. தலைஇ - மழைபெய்து, நிலைஇ - நின்று, நிறுத்தி.
சை என்பது என், வா என்பவற்றுள் ஒன்று பெற்றுச் சையெனல், சைவரல் முதலியனவாய் வரும். அதுபோன்று பை என்பதும் பையெனல், பைவரல் முதலியனவாய் வரும். பையெனல் - மெலிதல், துயருறல், இனிப் பெயர்களையுங் கூறுதும்.
பெயர்
வளையல் இமைப்பு விளையுள் அடைவு
அவையல் வரைப்பு உறையுள் நினைவு
புதையல் படைப்பு பையுள் சிதைவு
தலையல் வளைப்பு புரையுள் மறைவு
அவையல் - குத்தலரிசி, 'ஆய்தினையரிசியவையலன்ன' (பொருந.). தலையல் - முதன்மழை. இமைப்பு - இமைப்பொழுது. வரைப்பு - எல்லை, மதில், படைப்பு - செல்வம். விளையுள் - வயல். பையுள் - நோய். புரையுள் - பன்னசாலை. அடைவு - முறை, நினைவு - கருத்து. சிதைவு - வழு.
களை, தளை முதலிய சில பகுதிகள் இறுதியைகாரங்கெடப் பெற்று கள், தள் முதலியனவாய் நின்று பின் தொழிற்பெயராயும் எச்சங்களாயும் முற்றாயும் வரும்.
வரலாறு
களை - கள் - கட்டல், கட்டு, கட்ப, கட்கும்
தளை- தள் - தட்டல், தட்டு, தட்ப, தட்கும்
விதை - வித் - வித்தல்,வித்தி, வித்திய, வித்தும்
கனை - கன் - கன்றல், கன்றி, கன்ற, கன்றும்
கட்டல் -கட்டல், கள் ñ து ñ ® கட்டல், இறந்த கால முற்றிலே கட்டனர் முதலியனவாய் வரும். 'அடாத வான்களை கட்டனர்' (கந்தபு.) 'கட்பச்சொல்' (தணிகை.) கட்கும் - களையும் (புறநா.). சேது புராணகாரர் 'மைந் நீலங் கடுமடவார்' என்பர். கடும் - களைகின்ற. கள் ñ து ñ உம் ® கடும். தட்டல் ® பிணைதல், ஒன்றல், 'வான்றளை தட்டு' (யாப்பருங்கலக்காரிகை.), தட்பின் - ஒன்றின் (தொல்.) 'தட்டோ ரம்ம விவட்டட் டோரே' தட்டோர், தள்ளதோர் என்பனவற்றிற்குத் தளைத்தோர் எனவுந் தளையாதோர் எனவும் உரை கூறுவர். (புறநா.) தட்கும் - தளையா நிற்கும் (புறநா.). கட்கும் முதலிய பெயரெச்சமுமாம். கன்றல் - மிகுத்தல் (வள்.). இவை இலக்கணச் சந்திரிகையில் வழியிஇன, வளை, இனை முதலிய பகுதிகளிலிருந்து முறையே வள்ளம், வள்ளல், வள்ளி, இனைகூஉ, இன்னல், இன்னாங்கு, இன்னா முதலிய பெயர்கள் பிறக்கும். வள்ளம் - கிண்ணம். வள்ளல் - பாம்பு. 'வள்ளற் சேக்கைக் கரியவன் வைகுறும்' (இராமா.) இனைகூ - வருந்திக் கூப்பிடல்(புறநா.). இன்னாங்கு - துன்பம். இன்னும் இங்ஙனம் வருபவைகளை ஆங்காங்கு நாடி அறிக.
நொ, போ, வெள, உரிஞ்
நொ என்பது நொவ்வு, நொந்து, நொந்த முதலியனவாயும்É நீண்டு, நோகுதல், நோதல், நோக நோகின், நோவல், நோவற்க முதலியனவாயும் வரும். நொவ்வு - வருந்தல். நோவல் - நோவேன் (வள்.) நோவு என்னும் பெயரும் வரும்.
போ என்பது போகுதல், போதல், போந்து போய், போத, போக, போந்த, போன போயின, போந்தான், போனான், போயினான் முதலியனவாய் வரும். பிறவினையிலே போக்கு, போக்கி முதலியனவாய் வரும். போக்கு, போகல் முதலியன பெயர். போக்கு - போக்கப்படுவதுÉ குற்றம். போகல் - நீளம்.
கோ என்பது கோத்து, கோக்க, கோத்த முதலியனவாய் வரும். கோதை, கோவை முதலியன பெயர். கோதை - பூமாலை.
வெள என்பது வெளவு, வெளவுதல், வெளவி, வெளவ, வெளவிய, வெளவினான் முதலியனவாய் வரும். வெளவால், வாவல், வாரி முதலியன பெயர். வாரி - யானையை வெளவுமிடம். வெளவுதல் - வாருதல், அகப்படுத்தல். கௌ என்பதும் இதுபோன்று முடியும். கௌவுதல் - பற்றல், கொள்கை. கௌவை பெயர். ஒள என்பதற்குச் சமமாய் அவ் என்பதனோடு சேர்ந்து வெளவுதல், வவ்வுதல் எனவும் நிற்கும்.
உரிஞ் என்பது உகரம் விரியப்பெற்று உரி... தல், உரிஞி, உரிஞ, உரிஞின, உரிஞினான், முதலியனவாய் வரும். பெயர் உரிஞ்சி என வரும்.
உண் முதலியன
உண், காண், பூண் முதலியன தொழிற்பெயரிலே உண்ணல், உண்டல். காணல், காண்டல், பூணல் முதலியனவாய் வரும். எச்சங்களிலும் முற்றிலும் உண்டு, உண்ண, உண்ட, உண்டான். கண்டு, காண, கண்டான், பூண்டு, பூண முதலியனவாய் வரும். காண் என்பது இறந்த காலத்திற் குறுகிற்று. வருங்காலத்திலே வகர விடைநிலை பெறுங்கால் உண்குவம், காண்குவும், பூண்குவம் எனக் ககரவுகரம் விரியப்பெறும். பிறவினையில் ஊட்டு, காட்டு, பூட்டு எனவும் வரும். இவையே பெயராயும் நிற்கும். ஊட்டு - உணவு, காட்டு - உதாரணம்.
உண் என்பது மூலமாக உண்டி, உணவு, ஊண், ஊட்டி, என்பவைகளும் பிறவும் பெயராய் வரும். பூண் என்பது பூணி என நின்று பூணித்தல். பூணித்தாய், பூணிப்பு முதலியனவாயும் வரும். பூணித்தாய் - பூண்டாய் (கந்.) பூணிப்பு - கொள்கை (இரா.) பூணித்தாய் என்பதற்குப் புதியை என்பாருமுளர்.
மற்றைய அண், எண் முதலியன உகரம் விரியப்பெற்று அண்ணு, எண்ணு, கண்ணு முதலியனவாய் நின்று தொழிற் பெயரிலே அண்ணல், அண்ணுதல் முதலியனவாய் வரும். இறந்தகால இடைநிலைகளுள் இன் என்னும் இடைநிலையையே இவைக்ள பெயும். அண்ணிய, எண்ணிய, கண்ணிய முதலிய செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்கும், இறந்தகாலப் பெயரெச்சத்திற்கும் பொதுவாய் நிற்கும். நண்ணிய நின்றான் என்பது வினையெச்சம். நண்ணிய பொருள் என்பது பெயரெச்சம். அண் என்பது மகரம் விரியப்பெற்று அண்மு, அண்ம முதலியனவாயும் வரம். பூணித்தல் போலச் சில எண்ணித்தல், அண்ணித்தல் முதலியனவாய் வருதலுமுண்டு. இங்கே அவணன், அண்மை, எண்ணம், எண்ணர் முதலியன பெயராய் வரும். அணவன் - அடுத்தவன் (தேவார.). எண்ணர் - அமைச்சர்.
பொருந், திரும், தின்
பொருந், திரும் என்பன உகரம் பெற்றுப் பொருது, திருமு. பொருநி, திருமி, பொருந, திரும, பொருநின, திருமின, பொரு, பொருந்து எனவும், திரும் என்பது திருந்து எனவும் வருதலும் உண்டு. பொருந் - ஒத்தல். திரம் - திரும்பல். இங்கெ பொரநர், திருத்தம் என்பன பெயராகும்.
தின், உன், துன், பன் முதலியனவும் உகரம் பெற்று தின்னு, உன்னு முதலியனவாய் நின்று தின்னுதல்,உன்னுதல், துன்னுதல், பன்னுதல் முதலியனவாய்த் தொழிற்பெயரில் வரும். தின், என் முதலிய இறந்தகாலத்திலே தின்று என்று, தின்ற என்ற, தின்றான் என்றான் முதலியனவாய் வரும். இவை தின்றல், என்றல் எனவுந் தொழிற்பெயராகும். மற்றைய இறந்தகாலத்திலே தின்ன, உன்ன. என்ன, தின்கின்றான், தின்குவான் முதலியனவாய் வரும். இங்கே திற்றி. உன்னி, துன்ன், பின்னல் முதலிய பெயராய் வரும். திற்றி - தின்பது. உன்னி - குதிரை. உன்னல் - மேலெழல். துன்னர்- தையல்வேலை செய்பவர். பின்னல் - சடை.
தேய் முதலியன
தேய் காய் உய் செய்
ஆய் சாய் எய் தொய்
ஏய் மாய் பொய் புய்
ஓய் வாய் கொய் பெய்
இவையும் இவைபோன்ற பிறவுந் தேய் என்னும் வாய்பாட்டுப் பகுதிகள். இவற்றுள்ளுஞ் சில பொருணோக்கி விகதியிரட்டும். அவை காய்தல் - காய்த்தல், உய்தல் - உய்த்தல். எய்தல் - எய்த்தல், பொய்தல் - பொய்த்தல் முதலியன. காய்தல் - சினத்தல், உய்தல் - செலுத்தல், எய்த்தல் - இளைத்தல். அறிதல். பொய்தல் - பொள்ளலாக்கல், பொடியாக்கல். 'பார்சோராப்பொய்தான்' (இரா.) சில பிறவினைநோக்கி இரட்டும். அவை தேய்தல்- தேய்த்தல், சாய்தல்- சாய்த்தல் முதலியன. சில இரட்டலே இயற்கையாய் வரும். புய்த்தல் - பிடுங்கல்(பிங்க.) சில இரட்டா. அவை ஓய்தல், செய்தல் முதலியன. ஓய்தல் - உள்ளதனிற் குறைதல்.
இவை தேய்ந்து, தேய்த்து, தேய, தேய்க்க, தேய்ந்த, தேய்த்த, தேய்ந்தான் முதலியனவாய் வந்து எச்சங்களும் முற்றுமாகும். பிறவினையிலே தேய்பித்தல் முதலியனவாயும் வரும். இங்கே வரும் பெயர்களும் பல. அவை தேய்வை, ஆய்வு, கன்மேய்வு, ஏய்ப்பு, வாய்ப்பு, பெயல், செயல், வேயுள், செய்யுள் முதலியன. தேய்வை - சந்தனக்குழம்பு, ஆய்வு - நுட்பம். கன்மேய்வு- புறா. ஏய்ப்பு - வஞ்சகம், 'ஏய்ப்புண் டவனும் மெனவெண்ணினையோ' (இரா.) வாய்ப்பு - சிறப்பு, பெயல் - மழை. செயல் - செய்தி. வேயுள் - மேயப்படும் வீடு. செய்யுள் - செய்யப்படுவதÉ பாட்டு.
பார் முதலியன
பார் சார் நிமிர் பவர் விளர்
ஆர் சேர் புலர் பகர் தளர்
ஊர் நேர் புணர் உவர் தளர்
கூர் அதிர் மதர் தொடர் அமர்
இவையும் இவைபோல்வன பிறவும் பார் என்னும் வாய்பாட்டுப் பகுதிகள். இவற்றுள்ளுஞ் சில பொருணோக்கி விகுதி இரட்டும். அவை ஆர்தல், ஆர்த்தல், கவர்தல், கவர்த்தல், அமர்தல், அமர்த்தல் முதலியன. ஆர்தல் - உண்ணல், கவர்;த்தல் - கவராதல். அமர்த்தல் - பொருதல். சில பிறவினைநோக்கி இரட்டும். அவை சார்தல், சார்த்தல், சேர்தல், சேர்;த்தல் முதலியன. சில இயற்கையிலிரட்டி நிற்கும். அவை பார்;த்தல், மத்ர்த்தல், விளர்;த்தல் முதலியன. சில இயற்கையி லிரட்டாது நிற்கும். அவை ஊர்தல்,நேர்தல், பகர்தல் முதலியன.சில இரு நிலைமையும் பெற்று நிற்கும். அவை கூர்தல் கூர்;த்தல், அதிர்தல், அதிர்த்தல் முதலியன.
இவை பார்த்து, பார்க்க, பார்த்த, பார்த்தான் முதலியனவாயும், விகுதியிரட்டாதவை ஆர்ந்து, ஆர ஆர்ந்த, ஆர்ந்தான் முதலியனவாயும் வரும். பிறவினையிற் பார்ப்பி முதலியனவாய் வரும். பவர்தல் - படர்தல், பரத்தல். 'பவர்ந்த வாணுதலினாள்', 'பவர்சடையந்தணன்'(இரா.).இங்கே தோன்றும் பெயர்களும் பல.
பெயர்
புலரி சேர்ப்பு தளர்வு பார்வை ஊர்தி
அலரி எதிர்ப்பு சார்வு போர்வை நிமிரல்
உவரி ஓர்ப்பு சேர்வு மதர்வை பகர்நர்
சேரி கப்பு சோர்வு வேர்வை நேர்மை
புலரி - விடியல். உவரி- கடல். சேரி - ஊர், தெரு. சேர்ப்பு - கடற்கரை. எதிர்ப்பு - சொல். ஓர்ப்பு - தேற்றம்.கப்பு - பிரிவு, பிளவு. 'கப்புடைநாவினாகருலகில்' (இரா.) தளர்வு - வருத்தம். சார்வு - சாருமிடம். சேர்வு- ஊர். சோர்வு - மறவி. பார்வை - கண். போர்வை - தோல். மதர்வை - மயக்கம். ஊர்தி - செலுத்தப்படுவதுÉ வாகனம். நிமிரல் - சோறு. பகர்நகர் - விற்பவர்.
செல் முதலியன
செல் அகல் கால் கவல் கல்
வெல் அமல் நால் குயில் புல்
கொல் துயில் சால் சுழல் நில்
சொல் அயில் தோல் நுவல் வில்
இவையும் இவைபோல்வன பிறவும் செல் என்னம் வாய்பாட்டுப் பகுதிகள். இவற்றுள் செல், வெல். கொல். நுவல் முதலியன செல்லல், சென்று, செல்ல, சென்ற, சென்றான், வெல்லல், வென்று, வெல்ல. வென்றான் முதலியனவாய் வரும். பிறவினையிற் செலுத்து, செலீஇ, செலீஇய, வெல்வித்து, வெல்வித்த, வெலீஇய, கொலைஇய முதலியனவாயும் வரும். செலீஇய -போக்கி (வள்.)ஃ தொழிற்பெயரில் சேறல், வேறல், கோறல் முதலியனவாயும், வருங்காலத் தன்மைப் பன்மையிலே சேறும், வேறும், சோறும், நுவறும் முதலியனவாயும் வருதலுமுண்டு. சேறல் - செல்லல். சேறும் - செல்லுவொம். சோறும் - சொல்லுவாம். 'ஐம்மகஞ் சோறும்' (தணிகை.)
இங்கே தோன்றும் பெயர்களும் பல. அவை செல்வு,செல்வம், செலவு, செல்வி. வெலவு, வென்றி, வெற்றி, கொன்று, கொற்றி, கொல்வி முதலியன. செல்வு - செல்வம். 'செல்வையாயிற் செல்வை' (புறநா.). செலவு- வழி. வெலவு - வெற்றி(இரா.). கொன்று - கொலை. 'கொன்று செய்த கொடுமையினால்' (தேவார.) கொற்றி - காடுகிழாஅள். காட கிழாஅட்குரிய மாரி என்றும் பெயரும் கொல்பவள் என்னும் பொருட்டு.
சொல் என்பது சொல்லல், சொற்றல், சொல்லி. சொற்று, சொல்ல, சொல்லின, சொல்லிய, சொன்ன, சொற்ற, சொல்லினான், சொன்னான், சொற்றான் முதலியனவாய் வரும். சொல்லி முதலியனவாகப் பெயராகும்.
அகல், அமல், துயில், அயில் முதலியன அகலல், அகறல். அமலல், அமறல், அகன்று, அமல, அகன்ற, அமன்ற முதலியனவாய் வரும். பிறவினையில் அகற்றி. அமல்வித்து, துயிற்றி முதலியனவாயும் வரும். இங்கே வரும் பெயர்களும் பல. அவை அகலம், அமலை, அயினி, கவலை, குயினர், நரலை முதலியன. அகலம் - மார்பு. அமலை - திரளை. அயினி - சோறு. கவலை- துயர். குயினர் - துளைப்பவர். நரலை - ஒலியுடையதுÉ கடல்.
கால், கால். சால் முதலியன பெரும்பாலும் தொழிற்பெயர் முதலியவற்றில் ஒருவகையாய் வரும்.
வரலாறு
கால் - காலுத்ல, கான்று, கால, கான்ற, கான்றான்
நால் - நாலுதல், நான்று, நால, நான்ற, நான்றான்.
சால் - சாலுதல், சான்று, சால, சான்ற, சான்றான்
கான்றல், நாலுகை. சால்பு முதலியனவாயுந் தொழிற் பெயரில் வரும். இவை பிறவினையிற் காற்றல், நாற்றல், சாற்றல். காற்றி, நாற்றி. சாற்றி முதலியனவாய் வரும். காற்றல் - கக்குவித்தல். காற்றி - கக்குவித்து. நாற்றல் - தொங்கவிடல். நாற்றி - தூக்கி(கந்த.). எதிர்மறையிற் காலாமை, காலா, சாலாமை, சாலா முதலியனவாய் வரும். ஈண்டுத் தோன்றும் பெயர்களும் பல. அவை கானல், காற்று, நால்வாய். சாலம், சால்பு, சான்று, சான்றவர் முதலியன. கானல் - ஒளி, கிரணம். கால் ñ நல் ® கானல். காற்று - உயிர்ப்பது. காற்றின் பெயராகிய உயிர்ப்பு என்பதும் இப்பொருட்டு. நால்வாய் - யானை. சாலம் - கல்வி. சால்பு - மேன்மை. சான்று - சாட்சி. சான்றவர் - நிறைந்த குணமுடையவர்.
கல், வில், நோல். தோல் என்பன பெரும்பாலும் ஒரு வகையாய் முடியும்.
வரலாறு
கல் - கற்றல்,கற்று, கற்க, கற்ப, கற்ற, கற்றான்
வில் - விற்றல்,விற்று, விற்க,விற்ப,விற்ற, விற்றான்
நோல் - நோற்றல், நோற்று, நோற்க, நோற்;ப, நோற்ற, நோற்றான்
ஏல் - ஏற்றல், ஏற்று, ஏற்க, ஏற்ப, ஏற்ற, ஏற்றான்
தொழிற்பெயரிலே கற்பு, கற்கை, விற்பு, விற்கை, நோற்பு, நோற்கை, ஏற்பு, ஏற்கை முதலியனவாயும் வரும்.
பிறவினையிலே கற்பி, விற்பி முதலியனவாய் வரும். எதிர் மறையிலே கல்லாமை, வில்லாமை, நோலாமை, ஏலாமை முதலியனவாய் வரும். பெயரிலே கலை, கல்வி. விலை, விலைஞர், நோன்பு, நோன்மை,ஏற்பு முதலியனவாய் வரும். கலை - சாஸ்திரம், இதனை வட சொல்லாயுங் கொள்ப. கல்வி என்பது தொழிற் பெயராயும் நிற்கும். விலை - விற்று வாங்கும் பொருள். நோன்பு - தவம். ஏற்பு - தகுதி. தோல் என்பது தோல்வி, தோற்று முதலியனவாய் வரும்.
தோண்டற் பொருளிற் கல் என்பதும் புல் என்பதும் கல்லுதல், கல்லி, கல்ல, கல்லின, கல்லிய. கல்லினான் எனவும், புல்லுதல்,புல்லி, புல்ல,புல்லின, புல்லிய, புல்லினான் எனவும் வரும். பெயரிற் கன்னம், புல்லுநர்; என வரும். கன்னம் - சுவர் அகழும் கருவி. கல் ñ நம் ® கன்னம். புல்லுநர் - நண்பர், உறவர்.இவைகளைக் கல்லு, நில்லு என உகர வீறாகக் கொள்வாருமுளர்.
நில் என்பது நிற்றல்É நின்று, நிற்க, நிற்ப, நின்ற, நின்றான் முதலியனவாயும் வரும். நிலம், நிலை என்பன பெயர். நிலை - பூமி.
வவ் வென்பது
வவ்வென்பது வவ்வல்,வவ்வி, வவ்வ,வவ்வின. வவ்விய, வவ்வினான் முதலியனவாய் வரும். தவ்வு என்பது தவல், தவ்வி, தவ, தவ்விய, தவ்விற்று முதலியனவாய் வரும். வவ்வல் - பற்றுதல். 'கேண்மைவவ்விய' (தணி.). தவல் - கருங்கல், கெடல் (தொல்.) 'தவலருங் கற்பின் மிக்க' (கந்த.). 'தவ்விக்கொண்டெடுத்த' (இரகு.). தவ்வி - வலிசுருக்கி 'தவ்வாதிரவும் பொலிதாமரையின்' (இரா.) 'பொய்தவமாயத்தன் முல்லையுள்ளாய்' (முல்லை.). பொய் தவ - பொய்கெட 'தாவிய வண்ணம்' (தணிகை. ) தாவிய - ஒழிந்த. என என்பதனோடு சேர்ந்து தவ்வெனல் எனவும் வரும். 'தவ்வென்னுந் தன்மையிழந்து' (வள்ளு.). 'பொதுதவ்வெனக் கேண்மையர் தவ்வெனப் புல்லுமாதர் தவ்வென' (தணிகை.) தவ்வெனல் என்பதற்குச் சுருங்கல் என்பதன்றிப் பொலிவழிதல் என்று கூறுலும் இங்கே பொருந்தும்.இதினின்றுந் தோன்றும் பெயர்கள் தவறு, தவ்வை, சவலை முதலியன. தவறு- கேடு. தவ்வை- கேடு. கேடு செய்பவள்É மூதேவி. 'ஆயநல்லார் தவ்வையளாவிய வானனத்தார்' (தணிகை.). கெடலணங்கு, கேட்டை என்னும் மூதேவியின் பெயர்களும் கேடு செய்பவள் என்னும் பொருளன. சவலை தகரவொற்றுமை பற்றியது.
இனித் தெவ்வு என்பது தெவ்வல் தெவ்வி. தெவ்விய, தெவ்வினன் முதலியனவாய் வரும். 'பிறர் சீர் தெவ்வல்', ' சிலையலங்கணிச்சிதெவ்வி', 'தெவ்வியவவுணர்க்காய்ந்து' (தணிகை.). தெவ்வல் - கொள்ளல், கவர்தல். 'தெவுக்கொளங் பொருட்டே' என்பது தொல்காப்பியம். வவ்வு, தவ்வு, தெவ்வு என உகரவீறென்பாருமுளர்.
வாழ் முதலியன
வாழ் அகழ் போழ் திகழ் காழ்
ஆழ் அவிழ் பிறழ் வீழ் சிமிழ்
சூழ் இகழ் சீழ் இமிழ் குமிழ்
தாழ் உறழ் நிகழ் தவழ் ஊழ்
இவையம் இவைபோல்வன பிறவும் வாழ் என்னும் வாய்பாட்டுப் பகுதிகள். இவற்றுள்ளுஞ் சில பொருணோக்கி இரட்டும். அவை அவிழ்தல் - அவிழ்த்தல், வாழ்தல் - வாழ்த்தல் முதலியன. அவிழ்தல் - விரிதல், வாழ்த்தல் - ஆசி கூறல். சில பிறவினை நோக்கி இரட்டும். அவை தாழ்தல் - தாழ்த்தல், நிகழ்தல் - நிகழ்த்தல், வீழ்தல் - வீழ்த்தல் முதலியன. அவிழ்;;த்தல் வாழ்த்தல் என்பவைகளும் பிறவினை நோக்கி இரட்டடின என்பதும் பொருந்தும். அப்பொருளில் வாழ்தல் என்பதற்கு வாழுமாறு கூறல் என விற்பத்தி செய்க. வாழ் ஆழ் முதலியன ஒருவகையாயும், காழ், சிமிழ் முதலியன மற்றொரு வகையாயும் வரும்.
வாழ் - வாழ்தல், வாழ்ந்து, வாழ, வாழ்ந்த
ஆழ் - ஆழ்தல், ஆழ்ந்து, ஆழ, ஆழ்ந்த
அகழ் - அகழ்தல். அகழ்ந்து, அகழ, அகழ்ந்த
அவிழ் - அவிழ்தல், அவிழ்ந்துஈ அவிழ, அவிழ்ந்த
விகுதி யிரட்டி நின்றனவெல்லாம் பிறவினையிலே வாழ்;;த்தி, வாழ்த்தின முதலியனவாயும் வாழ்வித்து, வாழ்விக்க, வாழ்வித்த முதலியனவாயும், இரட்டாதன அகழ்வித்து, அகழ்விக்க முதலியனவாயும் வரும். முற்றிலே வாழ்ந்தான், வாழ்த்தினான், அகழ்ந்தான், அகழ்வித்தான் முதலியனவாய் வரும். வியங்கோளிலே வாழ்க, வாழிய, ஆழ்க, ஆழிய முதலியனவாயும், வருங்கால எதிர்மறைத்தன்மை முற்றிலே வாழம். ஆழம் முதலியனவாயும் வரும். 'வேழங்கடந்தவர்க்கல்லாது வேறோர்க்கென விதிக்கின் - வாழங்கடலிடத்து' (தணிகை.). வாழம் ® வாழமாட்டோம். வாழிய ஆழிய மதலியன வியங்கோளன்றிச் செய்யிய என்னம் வாய்பாட்டு வினையயெச்சமாயும் செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமாயுஞ் சிலவிடங்களில் வருதலுமுண்டு.
இவற்றுட் சில, வலி, மெலி நோக்கி ளகரவீறு போல முடிந்து நிற்றலுமுண்டு. அவை, 'திகட சக்கரம்', 'கடல் சென்றுழி யதன்பா லாண்டசில மாதர்க ரளத்தவுடை கொண்டார் - மீண்டெழலும்' (கந்தபு.இல.). 'ஈண்டாருங் காண வெரியிடைத் தம்பமிசை - வீண்டா யுயிர்போய் விளிந்தாய்' (கந்தபு. அசுரர்). 'பல்கல் - வாட்கையின்றி' (கந்தபு.குமார.). என்புழி வருந் திகழ், ஆழ் முதலியன. ஆண்ட - அழ்ந்தஇ வீண்டாய் - வீழ்ந்தாய். வாட்கை - வாழ்க்கை. வாழ் ñ நர் ® வாணர் என வருதலும் அறிக. இனிக் காழ் முதலியவற்றையுங் கூறுதும்.
வரலாறு
காழ் - காழ்த்தல், காழ்ந்து, காழ்ப்ப, காழ்ந்த
சிமிழ் - சிமிழ்த்தல், சிமிழ்ந்து, சிமிழ்ப்ப, சிமிழ்ந்த
குமிழ் - குமிழ்த்தல், குமிழ்ந்து, குமிழ்ப்ப, குமிழ்ந்த
ஊழ் - ஊழ்த்தல், ஊழ்ந்து, ஊழ்ப்ப, ஊழ்ந்த
முற்றிலே காழ்ந்தன, காழ்க்கும், சிமிழ்த்தன, சிமிழ்க்கும் முதலியனவாய் வரும். காழ்த்தல் - முதிர்தல், உறைத்தல் . 'ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க்கு' (வள்ளு.) 'காழ்க்கும் வெள்ளிலை' (சிந்தா.) சிமிழ்த்தல் - கட்டுதல், அகப்படுத்தல். 'சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட' (சிந்தா.) குமிழ்த்தல் - திரண்டெழல். ஊழ்த்தல் - உதிர்தல், பதனழிதல். மலர்தல். 'மரங்களிலையூழ்ந்து', 'மதுக்கலந்தூழ்த்து' (சிந்தா.) 'இணரூழ்ந்து நாறாமலர்' (வள்ளு.)( 'அலரூழ்க்கும்' (தணிகை.) இயைபின்படி விகுதிகள் சேர்தலாற் பலவிதமாகிய பெயர்களும் இங்கே தோன்றும்.
பெயர்
வாழ் அகழி வாழ்வு ஆழல் ஆழம்
ஆழி குமிழ் ஆழ்வு சூழல் தாழம்
சூழி ஊழி சூழ்வு ஊழல் வாழ்க்கை
தாழி சிமிலி தாழ்வு மோழல் போழ்வு
வாழி - வாழ்த்து, 'வாழிபாடினர்'(பாரா.) ஆழி - கடல். சூழி - சூழ்ந்திருப்பது, முகபடாம், கடல். தாழி - மிடா, ஊழி - உகமுடிவு. சிமிலி - உறி. வாழ்வு - செல்வம். 'வாழ்வெனு மையல்விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பி' (சித்.) ஆழ்வு- ஆழம். 'பாகமிட மாழ்வினிற் பதிந்த தாயினும்' (இரகு.). சூழ்வு - ஆராய்வு. தாழ்வு - பள்ளம். ஆழல் - கறையான் (பிங்கல.) அகழ்வது என்பது பொருள். சூழல் - கருத்து, இடம், ஊழல் - நரகம். மோழல் - பன்றிÉ நிலத்தைப் போழ்வது எனப் பொருள்படும். போ என்புழிப் பகரம் இனமாகிய மகரமாயிற்று. பன்றியின் பெயராகிய போழ்முகம் (பிங்கல.) என்பதன் பொருளையும் ஆராய்க. தாழம் - தாமதம். 'தாழமீங் கொழிக' (சூளாமணி.) வாழ்க்கை - ஊர், செல்வம். போழ்வு - பிளப்பு (மலைபடு.)
இன்னுஞ் சூறை, போறை, அவடி, தாடி, சூது, அழுந்து, அழுவம், காழ்வை முதலிய பெயர்களையும் ஆராய்க. சூழ் ñ தை ® சூறை. சுழல்காற்று. சூறையைப் புறநானூறு 'சூழ்கோடை' என்னும். போழ் ñ தை ® போறை - பொந்து. தாழ் ñ தி ® தாடி. அவிழ்தி ñ தி ® அவடி - திரைச்சீலைÉ சுருங்கியிருந்து விரிவது என்னும் பொருட்டு. சூழ் ñ து ® சூதுÉ சூழ்ந்து செய்வது என்பதுமது. காழ்வை - அகில்.
இன்னும் வாழ்,ஆழ், காழ், வீழ் என்பனபோல் முதனிலைகளே பெயராய் நிற்பனவுஞ் சிலவுள. காழ் - தறி. வீழ் - விழுது. போழ் - துண்டம்.
கேள் முதலியன
கேள் ஆள் உள் விள் உருள்
வேள் நீள் எள் மொள் தெருள்
தோள் மூள் துள் கொள் வெருள்
நள் மாள் தள் கீள் இருள்
இவையும் இவைபோல்வருன பிறவும் கேள் என்னும் வாய்பாட்டுப் பகுதிகளாகும். இவையும் பலவகையாய் முடியும். கேள், வேள் முதலியன ஒருவகையாயும் ஆள், நீள் முதலியன மற்றொரு வகையாயும் முடியும். உள், எள் முதலியன வேறொரு வகையாய் முடியும். விள், உருள் முதலியன பெரும்பாலும் ஒருவகையாய் முடியும்.
கேள் - கேட்டல், கேட்டு, கேட்க, கேட்ட
வேள், வேட்டல், வேட்டு, வேட்க, வேட்ட
தோள் - தோட்டல், தோட்டு, தோட்க, தோட்ட
நள் - நட்டல், நட்டு, நட்க, நட்ட
முற்றிலே கேட்டான், வேட்டான் முதலியனவாய் வரும். வேட்டல் - விரும்பல், யாகஞ் செய்தல், விவாகஞ் செய்தல். தோட்டல் - தோண்டல். 'மண்ணினின்றுந் தோட்;டன னனுமன்' (இராமா. மருத்து). 'தோட்டநுங்கினர்' (இரா.) தோட்டல் என்பது துளைத்தல் எனவும் பொருள்படும். 'தோட்கப்படாத செவி' (வள்.). 'உட்றோட்ட நெடுவேலாய்' (இராமா.) நட்டல் - சிநேகமாதல். 'உறினட்டு' , 'நட்டபின்' (வள்.). 'நண்பாற்றி நட்கப்பெறின்' (நாலடி.)செய என்னும் வாய்பாட்டிலே கேட்க,வேட்க எனவன்றிக் கேட்ப, வேட்ப எனவும் வரும். 'கேளாரும்வேட்ப' (வள்.)
சிந்தாமணியிலே 'தோணீர்க்கடல்' என்பதற்கு நச்சினார்கினியர் 'தோணீர்க்கடல் - தோண்டின கடல்É வினைத்தொகைÉ தோள், முதனிலைÉ நீர், இடைக்கிடைப்பு' என உரை கூறுவர். தோள் என்னும் முதனிலை மூலமாகத் தோன்றிய தோட்டு என்பது, தோண்டு என்றாய்த் தோண்டி, தோண்ட, தோண்டிய, தோண்டினான் முதலியனவாயும், தொடு என்றாய்த் தொடுகடல், தொட்டல், தொட்டு, தொட்டான் முதலியனவாயும் வரும். 'தொடுகடற் குணக்கு'(புறநா.) 'காவோ டறக்குளந் தொட்டல்' (இனிய.). 'கற்குழிதொட்டு' (இரகு.). தோள் என்பதும் வேறே இவையும் வேறே என்பாருமுளர். அங்ஙனமாயினம் ஆக. இவற்றின் எதிர்மறைகளாகிய கேளாமை, வேளாமை, தோளாமை, நள்ளாமைமுதலியன போலத் தோண்டு, தொடு என்பபவற்றின் எதிர்மறைகள் நன்கு புலப்பட்டில. 'தோளாமணிகுவி' (சிந்தா.)
இவை பிறவினைகளிலே கேட்பி, கேட்பித்தல், வேட்பி. வேட்பித்தல், தோண்டுவி, தோண்டுவித்தல், நள்ளுவி, நள்ளுவித்தல் முதலியனவாய் வரும்.கேள், கேட்டிசின், கேட்கின் முதலியனவாயும் வரும். கேட்டிசின் - கேட்டேன். (புறநா.) இனி, ஆள் முதலியவற்றையும் கூறுதும்.
வரலாறு
ஆள் - ஆளல், ஆண்டு, ஆள, ஆண்ட
நீள் - நீளல்,நீண்டு, நீள, நீண்ட
மாள் - மாளல், மாண்டு, மாள,மாண்ட
மூள் - மூளல், மூண்டு, மூள, மூண்ட
இவை முற்றிலே ஆண்டனன், நீண்டனன் முதலியனவாய் வரும். அன்றி. ஆள் - கடல். ஆடÉ நீள் - நீடல், நீடÉ மாள் - மாடல். மாட முதலயனவாய் வரலும் இயையும். 'குன்றமாடக் கோவினளிக்கும்' என்பது இராமாணயம். குன்றமாட - மந்தரமலைமாள. மாள் ñ து ñ அ ® மாட. பிற வினையிலே மாள் என்பது மாட்டல், மாட்டி, மாட்டிய எனவும் மூள் என்பது மூட்டல், மூட்டி,மூட்டிய எனவும் மீட்டல், மீட்டு, மீண்டு எனவும் வருதல் அராய்க. 'மதுவைமாட்டிய வானவ னேமியை' (தணிகை.) மாட்டிய - மாளிவித்த. 'மாட்டியன்றே யெம்வயிற் பெருநாணினி' (திருக்கோவை 284). 'மூளவ்pத்தற்கண் மூட்டி என நின்றவாறுபோல மாளிவித்தற்கண் மாட்டி என நின்றது' என்பது அதன் விசேடவுரை. 'மெய்ம்மைகண் டுள்ள மீட்டான்' (இராமா.)
செலுத்தல். மூட்டல் என்னும் பொருள்களிலே மாட்டல் என்பதன் முதனிலை மடு என்பது மூலமாக வந்த மாட்டு என்பது. 'வள்ளறான் வல்லவெல்லா மாட்டினன்' (சிந்தா.) 'அந்திமாட்டிய நந்தாவிளக்கின்' (பட்டின.) இங்ஙனமே கட்டல் என்பதன் முதனிலையும் பலவாகும். கட்டல் என்பது பறித்தல் என்னும் பொருள் படுங்கால் முதனிலை களை என்பது எனவும், களவு என்னம் பொருள்படுங்கால் முதனிலை கட்டு எனவுங் கொள்ளல் வேண்டும். இனி உள் முதலியவற்றையுங் கூறுதும்.
வரலாறு
உள் - உள்ளல், உள்ளி, உள்ள, உள்ளிய
எள் - எள்ளல், எள்ளி, எள்ள, எள்ளிய
துள் - துள்ளல், துள்ளி, துள்ள, துள்ளிய
தள் - தள்ளல், தள்ளி, தள்ள, தள்ளிய
இவை முற்றிலே உள்ளினன், எள்ளினன் முதலியனவாய் வரும். உள்ளல் - நினைத்தல். எள்ளல் - இகழ்தல். இங்ஙனமே பொதுள், அருள், கிள் முதலியவைகளும் பொதுளல், பொதுளி,பொதுள, பொதுளிய, அருளல், அருளி, அருள, அருளிய,கிள்ளல், கிள்ளி, கிள்ள, கிள்ளிய முதலியனவாய் வரும். பொதளல் - தழைத்தல். இவைகளை உள்ளு, எள்ளு என்பன முதலியனவாகக் கொண்டு உகரவீறு என்போருமுளர். இனி விள் முதலியவைகளையுங் கூறுதும்.
வரலாறு
விள்- விள்ளல், விண்டு, விள்ள, விண்ட
மொள் - மொள்ளல், மொண்டு, மொள்ள, மொண்ட
கொள் - கொள்ளல்,கொண்டு, கொள்ள, கொண்ட
கீள் - கீளல், கீண்டு, கீள, கீண்ட
இவை ஆள், நீள் முதலியன போன்று முடிவனவாயினும் இவற்றுள்ளே விள். கொள், கீள் என்பன தொழிற்பெயரிலே விண்டல், கொண்டல். கோள். கீண்டல் எனவும், வினையெச்சத்திலே விள், கொள் என்பன விட்டு, கொடு எனவும் வரலால் வேறொரு வகை ஆக்கினாம். 'விண்டலுற்று'(தணிகை.) 'திரியவே கொண்ட றிரிவாம்' (சித்.) 'மோடுவிட்டலர்ச்த' (சூளா.) மோடு- மொட்டு. மோடு, மொட்டு என்பன இரண்டும் மொள் என்பதிலிருந்து வந்த பெயர்கள். மொள்ளல் - முகத்தல். விள்ளல் - அலர்தல். கீளல் - கிள்ளல், கீண்டல். இதனைக் கிள் என்பதன் விகாரம் என்ப.'கீள்கொடு நகங்கொடு' என்பது கந்தபுராணம். கொள் என்பது முதனீண்டு கோள் எனத் தொழிற்பெயராய் நிற்றலன்றிப் பெயராய் நிற்றலும், பிறசொற்களின் பின்சேர்ந்து பெயராய் நிற்றலும் உண்டு. கோள்- கொள்வது, கிரகம், கொலை, குலை.
மீக்கோள் உட்கோள் குறைகோள் கார்கோள்
மேற்கோள் ஏறுகோள் குறிக்கோள் கடைக்கோள்
ஆகோள் கால்கோள் மாறுகோள் எடுத்துக்கோள்
அதர்கோள் வியங்கோள் உறுகோள் ஊர்கோள்
மீக்கோள்; - போர்வை, ஏறுதல். மேற்கோள் - உதாரணம்.ஆகோள் - நிரைமீட்டல். அதர்கோள் - வழிப்பறித்தல்.உட்கோள் - கருத்து. ஏறுகோள் - முல்லைப்பறை. கால்கோள் - தொடக்கம். வியங்கோள் - ஏவல் கொள்ளல். குறைகோள் - இரத்தல். குறிக்கோள் - தேற்றம். மாறுகோள் - எதிர்மறை. உறுகோள் - நிகழ்ச்சி. கார்கோள் - கடல். கடைக்கோள் - இழிவு. எடுத்துக்கோள் - திருட்டாந்தம் (ஞானா.) ஊர்கோள் - பரிவேடம்.
இனி உருள், தெருள் முதலியனவும், ஆள், நீள் முதலியன போன்று முடியும். உருளி, தெருளி என வரனோக்கி வேறுபடுத்தினாம்.
வரலாறு
உருள் - உருளல், உருண்டு, உருள, உருண்ட
தெருள் - தெருளல், தெருண்டு, தெருள, தெருண்ட
வெருள் - வெருளல், வெருண்டு, வெருள, வெருண்ட
இருள் - இருளல், இருண்டு, இருள, இருண்ட
இவையும் முற்றிலே உருண்டனன், தெருண்டனன் முதலியனவாய் வரும். தொழிற்பெயரிலே உருட்டு, தெருட்டு முதலியனவாயும் வரும். 'குறுகார் மனம்போன் றிருட்டிற் புரிகுழல்' (திருக்கோ.) இருட்டு - இருட்டுதல். இவை பிறவினையிலே உருட்டு,உருட்டல், உருட்டி தெருட்டு, தெருட்டல், தெருட்டி முதலியனவாய் வரும்.
கள், அள்,தௌ; முதலிய சில கட்டல், அட்டல், தெட்டல். அள்ளல், தௌ;ளல் எனத் தொழிற் பெயராகும். கள், அள் என்பன கட்டி,அட்டி எனவும் வரும். 'மூவுலகத்தை முதலோடுங் கட்டிச் சீறும்' (இராமா.ஊர்.) 'குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றே - னாளிலை யெம்பெருமான வையட்டித் தரப்பணியே' (தேவார.) இங்கே தோன்றும் பெயர்களும் பல. சில சில கூறுதும்.
கேள்வி நள்ளி விளவு கள்ளம் விள்ளல் அள்ளல்
வேள்வி வேள்வு களவு தோட்டம் தள்ளல் திரட்டு
கோளி மூள்வு உள்ளம் வேட்டம் துள்ளல் மூட்டு
கேள்வி - காது, கல்வி. வேள்வி -யாகம். கோளி - கொள்வது. நள்ளி - சுற்றம். வேள்வு - யாகம். 'விழவும் வேள்வும் விடுத்தலொன் றின்மையால்' (சிந்தா.) விளவு - நிலப்பிளப்பு. தோட்டம் - தோண்டியவிடம், பள்ளம். 'திடறோட்ட மெனக்கிடக்கும் வகையிரங்கி' (இராமா.) வேட்டம் -விருப்பம்.(புறநா.) விள்ளல் - வேறுபாடு. தள்ளல் - பொய். துள்ளல் - கூத்து. அள்ளல் - சேறு. மூட்டு - பொருத்து.
தோள் என்பதினின்று தோன்றும் பெயர்களும் பல.அவைÉ தோணி, தொள்ளம், தொள்ளி என்னும் சேற்றின் பெயர்களும் தோட்டி என்பதும் பிறவுமாம். தோணி முதலிய சேற்றின் பெயர், தோண்டப்படுவது எனப்பொருள்படும். துளையாகி இடங்கொடுப்பது எனலுமாம். தோட்டி - காதினைத் தோண்டுவது.
கொள் என்பதினின்று கொண்டோன், கொண்கன், கொண்டி, கொள்ளை, கொளு, கொள்ளி முதலிய பெயர்கள் பிறக்கும். கொண்கன் - நாயகன். கொண்டி - கொள்ளை. கொளு - கருத்து.
இன்னும் ஆண்மை, ஆணை, தண்மை, உருளி, உருடை, வேடை, வெருட்டி. விண்டாண்டு, ஆளி, மூட்டை முதலிய பெயர்களையும் ஆராய்க. தண்மை - எளிமை. தள் ñ மை ® தண்மை. உருளி - சில்லு. உருடை - வண்டி. வேடை - விருப்பம். வேள் ñ தை ® வேடை. வெருட்டி - வெருட்டுவது. 'வேழவெண் டிரட்டக் கைவெருட்டி' (சிந்தா.) விண்டாண்ட- ஊஞ்சல்É விண்டு ஆடுவது என்னும் பொருட்டு. மூட்டை - கோணி. மூள் ñ தை ® மூட்டை. பிறவும் இன்ன.
அஃகு முதலியன
அஃகு ஒது கீறு கட்ட எய்து
வெஃகு கோது அணுகு அஞ்சு பில்கு
ஆடு ஆறு அருகு அணங்கு மாழ்கு
ஓடு ஏறு ஆற்று அலங்கு வெள்கு
இவையும் இவைபோல்வன பிறவும் அஃகு என்னும் குற்றுகரவீற்று வாய்பாட்டுப் பகுதிகளாம். இவை இறந்த காலத்தில் வருங்கால் இன்னிடை நிலையும் வருங்காலத்தில் வருங்கால் வகரவிடைநிலையும் பெறும். இவற்றுள்ளே செயற்கைப் பகுதிகளுஞ் சில உள. அவை மூழ்கு, மாழ்கு முதலியன. இவை முழுகு, மழுகு முதலியவவற்றினின்று தோன்றலாற் செயற்கப் பகுதி என்றாம். 'புலவோர் துணியுளமு மழுகும்' (தணிகை.) மழுகல் - மழுங்கல். இவையுஹ் குற்றுகரம்போலத் தொடரால் அறுவகையாகும். அஃகு என்றதற்கேற்ப ஆய்தத் தொடரை முன்வைத்து முறையெ கூறுவாம்.
ஆய்தத் தொடர்
அஃகு எஃகு ஒஃகு வெஃகு
இவை அஃகுதல், அஃகல், அஃகி, அஃக, அஃகிய, அஃகின, அஃகினான், அஃகா நின்ற, அஃகுவன் முதலியனவாயும், எஃகுதல், எஃகல், எஃகி முதலியனவாயும் வரும். அஃகுதல் - சுருங்கல், குறைதல், நுணுகல். 'அல்லாயிரமாயிர மஃகினவால்' (இராமா.) 'அஃகாநின்ற பெருநதிகள்' (இரகு.) 'அஃகியகன்ற வறிவென்னாம்' (வள்.) அஃகு என்பதினின் அஃகம், அஃகல், அஃகு என்னும் பெயர்கள் பிறக்கும். அஃகம் - ஊறுபுனல்É சுருங்கிச் சுருங்கி வருவது என்னும் பொருட்டு. அஃகு என்பதும் அது. அஃகல் - வறுமை (திவாகர.). எஃகுதல் - கூர்மையாதல். இதினின்று எஃகம் என்னும் பெயர் பிறக்கும். எஃகம் - ஈட்டி, வாள். வேல்.
ஒஃகுதல் - குறைவுறல். 'எஃகெறி செருமுகத்தேற்ற தெவ்வருக் - கொஃகினன்' (இராமக.) இது ஒல்கல் என்பதன் விகாரம். வெஃகுதல் - பிறர்பொருள் விரும்பல். 'வெஃகிவெறிய செயின்' (வள்.) எதிர்மறையில் அஃகாமை, வெஃகாமை முதலியனவாய் வரும்.
நெடிற்றொடர்
ஏகு ஆடு கோடு காது ஆறு
ஊசு ஊடு சூடு கோது ஏறு
ஏசு ஓடு தேடு மோது கூறு
பூசு ஊடு ஊது கீறு மாறு
இவையும், இவைபோல்வன பிறவும் நெடிற்றொடர்க் குற்றியலுகரவீற்றுப் பகுதிகள். இவை ஏகுதல். ஏகல், ஏகி,ஏக, ஏகிய, ஏகின, ஏகினன், ஆடு- ஆடுதல், ஆடல், ஆடி, ஆடிய ஆடின, ஆடினன் முதலியனவாய் வரும். இவற்றுட் சிலஇறுதி வலியிரட்டன் மாதத்pரையால் தொழிற் பெயராகும். அவை பூசு - பூச்சு, ஆடு - ஆட்டு, ஓடு- ஓட்டு, கூறு - கூற்று முதலியன.பூச்சு - பூசுதல். ஆட்டு - ஆடுதல். ஓட்டு- ஓடுதல். 'ஓட்டற்ற சிந்தை' (நெஞ்சு.) கூற்று - சொல்லல். வலியிரட்டப் பெற்றவற்றுள்ளே சில பிற வினையாயுங் கொள்ளப்படும். அவை ஆட்டு, கூட்டு, ஆற்று, ஏற்று முதலியனÉ ஆடச்செய், கூடச்செய் முதலியனவாகப் பொருள்படும்.
வலியிரட்டி நிற்பவற்றுட் சில,சிலவிடத்துப் பெயராயும் நிற்கும். ஆட்டு - கூத்து. 'உரையும் பாட்டு மாட்டும்'(மதுரை.) கூட்டு - நண்பு. 'குன்றோங்கு தோளார் குணங்கூட்டிசைக்குப் பையென்ன' (இராமா.) ஒத்து - வேதம், ஓதப்படுவது என்னும் பொருட்டு. 'ஒத்தில்லாப் பார்ப்பானுரை' (இன்னா.) கூற்று -வார்த்தை. கீற்று - பாதி. 'எழின்மறைக் கீற்றொளி சென்ற செஞ்சடைக் கூத்தப்பிரான்' (திருக்கோ.) மாற்று - உவமை. 'மாற்றிலாத மலைமகள்' (கந்தபு.) இங்கே ஆடு, கூடு, ஓது முதலியன இறுதிவலியிரட்டிப் பெயராயினவாறறிக.
வலியிரட்டலோடு சில இறுதியில் அல், அம் என்பன பெற்றுத் தொழிற்பெயராயும்,பெயராயும் வரும். தொழிற்பெயர் ஆட்டல், ஆட்டுதல்,கூட்டல்,கூட்டம், தேட்டம், மாற்றம் மதலியன. கூட்டம் - கூடுதல். 'அறிஞர் சூழ்விலைக் கோல்வளை மகளிர்பாற் கூட்டமொத்ததே' (கந்தபு.) மாற்றம் - மறைத்தல். 'நாற்றமுந் தோற்றமு நவிலொழுக்கமு மாற்றமும்' (கந்தபு.) இங்கே மாற்றம் என்பது சொல் என்னும் பெயராயும் நிற்கும். 'மாற்றானுதவான் கடுவச்சையன் போலொர் மன்னன்', 'மாற்றம் என்பது எதிர்மொழி என்னும் பொருளிலும் வரும். 'மாற்றங் கொடுத்தற் பொரட்டு' (வள்.) மற்றும் பெயர்கள் ஓட்டம், கோட்டம். ஏற்றம். தேற்றம் முதலியனவாய் வரும். ஓட்டம் - தோல்வி. (சூ.நிக) கோட்டம் -வணக்கம். கோட்டந்தரு நங்குருமுடி' (திருக்கோவை.) கோடுதல் - வளைதல், ஏற்றம் - துலாமரம். தேற்றம் - தெளிவு.
இவற்றுட் சில இனம் மிகுந்து வருதலுமுண்டு. அவை தேடு, கூடு, ஆறு, கீறு முதலியன. 'தேண்டிநேர்கண்டேன் வாழி' (இராமா. உருக்காட்.). 'தேண்டினன் மும்மையுலகிலுங் காணேன்' (நடைத.) 'ஓர்வயிற்கூண்டவே' (இரகு.) 'புள்ளின மிரைமாந்திப் புகல்சேர வோலியான்று' (கலித்.) 'புவிகீன்ற தும்பித்து' (மறைசை.) தேண்டி- தேடி. கூண்ட - கூட. ஆன்று - ஆறி. ஆறு என்பது எதிர் மறையிலே ஆனாமை, ஆனாது, ஆனார் முதலியனவாய் வரலுமுண்டு. 'ஆனாப்பேரன்புமிக' (பெரிய.) 'கடுமொழியானார்' (இனியா.)
ஊசு, ஊடு, ஊது, காது, கோது முதலியன ஊசி, ஊடி, ஊதி முதலியனவாய் வரும். ?ஊசுதல் - சீவுதல். 'கணிச்சி போற்கோடூசி' (கலித்.) காதுதல் - கொல்லல். ஆட்டு, மாற்று முதலியன சிலவற்றின் பின்மொழியாய் நிற்றலுமுள. அவை: கள்ளாட்டு, வெறியாட்டு, உண்டாட்டு, பண்டமாற்று, வினைமாற்று, முக்கூட்டு முதலியன. கள்ளாட்டு- மதுக்கடை. 'கறுத்த முனையகத்துற் கள்ளாட்டுக் கண்ணும்' (ஆசார.) உண்டாட்டு- கள்ளுண்டாடல். வினைமாற்று - வினைவேறாதல். அல் விகுதி பெற்றுப் பிறக்கும் பெயர்களுஞ் சிலவுள. அவை: ஆடல், கூடல், மூடல், தேறல், ஏகல் முதலியன. ஆடல் - வெற்றி. கூடல் - கூடுமிடம். மூடல் - போர்வை. (தேவார.) தேறல்- கள்ளு.
உயிர்த்தொடர்
அணுகு இலகு ஒழுகு கொடுகு நலிகு
அருகு இழுகு கடுகு சிதகு திருகு
அலசு இளகு கருகு செருகு பெருகு
அழுகு உருகு குறுகு தறுகு மறுகு
இவையும் இவைபோல்வன பிறவும் உயிர்த்தொடர்க் குற்றுகரவீற்றுப் பகுதிகளாகும். இவை தொழிற் பெயரிலும் எச்சங்களிலும் முற்றுக்களிலும் அஃகு முதலிய முன்னையனபோல அணுகுதல், அருகுதல், அணுகல், அருகல், அணுகி, அருகி, அணுக, அருக முதலியனவாய் வரும்.
இவற்றுள்ளே இறுதி வலியிரட்டலாகிய விகாரம் பெற்றுப் பிறவினையாயும், தொழிற்பெயராயும், பெயராயும் நிற்பவைகளும் பலவாகும். வலியிரட்டலுடன் இறுதியில் அம் என்னும் விகுதி பெற்று நிற்பனவுமுள.
வரலாறு
அணுக்கு இழுக்கு கருக்கு இடுக்கு கருத்து
அருக்கு இளக்கு குறுக்கு முடுக்கு எழுத்து
அழுக்கு உருக்கு திருக்க மறுக்கு செதுக்கு
இலக்கு ஒழுக்கு பெருக்கு இறுக்கு திருட்டு
இவற்றின் பகுதிகள் அணுகு,அருகு முதலியன என்க. அருக்கல், அருக்கி, அருக்கிய, இழுக்கல், இழுக்கி, இழுக்கிய முதலியனவாய் வருங்கால் அருக்கு. இழுக்கு முதலியவைகளபை; பிறவினை என்று கொள்க. அருக்கல் - சுருங்கல். 'மழயருக்டகுங்கோள்' (திரிகடு.) இழுக்கல் - வழுக்குதல். பிறவினைபோல் அணுக்கு, அழுக்கு முதலியன வரல் கண்டிலம். அணுக்குதல், அருகுதல், இழுகுதல் முதலிய பொருள் படுங்கால் அணுக்கு, அருக்கு, இழுக்கு முதலியவைகளைத் தன்வினைத் தொழிற்பெயர் என்று கொள்க.
அணுக்கு - சமீபம். 'பேரணுக்குப்பெற்ற' (திருக்கோ.) அருக்கு - அருமை. 'நிதியனருக்குமுன்னி' (திருக்கோ.) அழுக்கு - அசுசி. இலக்கு - விளங்குவதுÉ குறி. 'நிலையிலா விலக்கு மஃதே' (பார.) இழுக்கு - தவறு. திருக்கு - மாறுபாடு, வளைவு. பெருக்கு - வெள்ளம். இடுக்கு - சுருங்கிய இடம், ஒடுக்கம். 'மாரிதுளிக்குந் தாரையிடுக்கும் வரவல்லீர்' (இராமா.) முடுக்கு - குறுந்தெரு. மறுக்கு - மயக்கம். 'மறுக்குறுகின்ற நெஞ்சின்' (இரா.) என்னும் இவைபோலப் படுங்கால் அணுக்கு, அருக்கு முதலியன பெயராகும்.
அணுக்கம் - சமீபம். அருக்கம். - சுருக்கம். 'ஆவியயவியுமாகி யருக்கமாய்ப் பெருக்கமாகி' (தேவார.) இலக்கம் - இலக்கு. இழுக்கம் - தவறு. இளக்கம் - இறுக்கமின்மை. 'இளக்கமில் கடற்படை'(இராமா.) குறுக்கம் - குறுக்கியது. திருக்கம் - கோட்டம், முரண். 'சிந்தையிற்றிருக்க மின்மை' (இராமா.) இவை அம் என்னும் விகுதியுடன் நின்ற பெயர்கள்.
கொடுகு, பொலிகு என்பன இறுதியிலுள்ள உயிர் மெய்யும் உயிரும் போகப் பெற்றுக் கொட்பு, கொட்க, கொட்கும், பொற்ப, பொற்ற என வரலுமுள. 'காலுணவாகச் சுடரொட கொட்கும்' (புறநா.) கொட்;பு - சுழற்சி, சூழவருதல். 'பொற்பநட்டெழிஇ' (தணிகை.) பொற்ப - பொலிய. பொற்றி - பொலிந்த. (தணிகை.) 'கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்' என்பது தேவாரம்.
சிதகல் - உருவுதல் (பிங்கல.) செருகு என்பது செரீஇய எனப் பெயரெச்சமாயும் வரும். 'வகைபெறச் செரீஇய வயந்தகம் பேரல் (கலி.) தறுகு என்பது இறுதிபோகப் பெற்றுத் தறு, தற்று எனவும் வரும். 'மடிதற்றுத்தான் முந்துறும்' (வள்.) தறுகுதல் - இறுகுதல், கலங்காநிலை. தற்று- இறுக்கி. தறுகு என்பதினின்று தறுகண் என்னும் பெயரும் பிறக்கும். தறுண் - அஞ்சுதக்கனவற்றிற்கும் அஞ்சாமை.
நலிகு என்பது உரவு என்னுந் துணைவினையுறுங்கால் இகரங் கெட்டு நல்குரவு எனப் புணர்ந்து நிற்கும். உரவு- பரத்தல். பின் நல்கூர்ந்து , நல்கூர. நல்கூர்த்த முதலியனவாய் வரும். நல்குரவு- வறுமை.
அலசு, அளறு, உதறு, சிதறு, முதலிய பகுதிகள் வலியிரட்டலின்றி அலசி, அளறி, உதறி முதலியனவாய் வரும். அலசுதல் - சோம்புதல், 'வேந்தனீயலசினாய்' (இராமா.).
வன்றொடர்
நோக்கு தருக்கு கட்டு குத்து சுற்று
தாக்கு ஓச்சு சுட்டு தொத்து பற்று
எருக்கு நச்சு கிட்டு செப்பு முற்று
விக்கு ஒட்டு கத்து எற்று வற்று
இவையும் இவைபோல்வன பிறவும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுப் பகுதிகளாம். இவைகளும் முன்னைய போல நோக்குதல், நோக்கல், நோக்கி,நோக்க, நோக்கின, நோக்கிய, நோக்கினன் முதலியனவாய் வரும். இவைகளிற் பெரும்பாலும் விகாரம் இல்லை. இங்கே தோன்றும் பெயர்களையுங் கூறுதும்.
பெயர்
நோக்கம் தட்டு தட்டை முற்றில்
ஓட்டம் கட்டி பற்றை பற்றார்
சுற்றம் குத்தி நசை ஒற்றர்
வற்றல் ஒட்டி கட்டில் முட்டர்
நோக்கம் - கண். ஓட்டம்- உடன்பட்டது. பந்தயப் பொருள். சுற்றம் - சூழ்ந்திருப்பது.தட்டு - தட்டுவதுÉ பரிசை. தட்டை - ஒரு கிளிகடிகருவிÉ அது மூங்கிலைப் பிளந்து வேறொன்றில் ஒலி பிறக்கத் தட்டுவது. பற்றை - ஒன்றையொன்று பற்றி நெருங்கியிருப்பது. நசை- விருப்பம். முற்றில் - வளைவுடையது, சுளகு. பற்றார் - பகைவர். ஒற்றர் - ஆராய்வோர்.
வெட்டு என்பதினின்று வெட்டல், வேட்டம் என்னுந் தொழிற் பெயர்களும், வேட்டை, வேட்டுவர், வேடர், வேடு, வெட்டியர் என்னும் பெயர்களும் பிறக்கும். வெட்டல் - கொலை (திவாகர.) வேட்டம் - கொலை. (பிங்கல.) வேட்டம் என்பது பெயராய் வேட்டை என்னும் பொருளும்படும். வேட்டை - வெட்டலையுடைய தொழில். இது மிகுதி பற்றியகுறி. வேட்டைத் தொழிலில் ஆயுதப் பயிற்சி, சரீரப் பயிற்சி முதலிய பல பயிற்சிகளும் அமைந்திருத்தமலைப் பின்வருஞ் செய்யுளால் அறிக.
இரகுவமிசம்
சரிப்புடை யிலக்கு வீட்டுஞ் சரத்தொழி றணவா வச்சம்
விருப்புடை வெகுளித் தன்மை விலங்கிடை விளக்கும் வேர்விற்
பரிப்புடை யுடற்கு முண்டே குணமெனிற் பரந்து நோக்கின்
தெரிப்புடை வேட்டத் துண்டே சிலகுணஞ் சிறப்பின் மிக்காய்.
வேட்டுவர் - வேட்டையாளர். வெட்டியர் - கொலைஞர். (சிவதருமோ.) வெட்டல் என்பது அம்பு,வாள் முதலிய ஆயுதங்களால் அறுத்தல் பற்றிக் கொலைக்குப் பெயராயிற்று. வெட்டெனல். வெட்டெனவு முதலியவற்றுக்கம் இதுவே மூலம் எனக் கொள்க.
மென்றொடர்
அடங்கு நங்கு தண்டு நந்து நிரம்பு
அணங்கு பொங்கு மண்டு முந்து சாம்பு
இணங்கு அஞ்சு ஈண்டு சீந்து ஒன்று
இயங்கு மிஞ்சு தீண்டு ஏந்து கன்று
இவையும் இவைபோல்வன பிறவும் மென்றொடர்க் குற்றியலுகரவீற்றுப் பகுதிகளாம். இவைகளும் முன்னையன போல அடங்குதல், அடங்கல். அடங்கி. அடங்க, அடங்கின, அடங்கிய முதலியனவாய் வரும்.
இவற்றுள்ளும் வலிமிகுத்தலாகிய விகாரம் பெற்றுப் பிற வினையாயும் தொழிற் பெயராயும் பெயராயும் நிற்பவைகளும் பலவாகும். இறுதியிலே அம் என்னும் விகுதி பெற்று நிற்பனவுமுள.
வரலாறு
அடக்கு புழுக்கு துலக்கு பொருத்து வருத்து
இயக்க மடக்கு ஒதுக்கு ஏத்து நிரப்பு
பிணக்கு வழக்கு அச்சு பரப்பு ஒற்று
நடுக்கு விளக்கு தீட்டு ஊற்று தூக்கு
இவற்றின் பகுதிகள் அடங்கு, இயங்கு, பிணங்கு முதலியன. அடக்கல், அடக்கி, அடக்க, அடக்கின, அடக்கிய, அடக்கினான் முதலியனவாய் வருங்கால் அடக்கு, இயக்கு, நடுக்கு முதலியனபிறவினைகளாகும். அச்சு, தீட்டு முதலிய சில பிறவினையாதல் கண்டிலம். அடக்கல் - தணித்தல். இயக்கல் - நடத்துதல். புழுக்கல் - வேகவைத்தல்.
அடங்குதல், இயங்குதல், பிணங்குதல் முதலியனவாய் பொருள்படுங்கால் அடக்கு, பிணக்க முதலியன தன்வினைத் தொழிற்பெயர் என்று கொள்க. இயக்கு- செலவு. விளக்கு - விளக்கல். ஏத்து - உயர்தல். ஒற்று - ஒன்றல். வழக்கு - போதல்.
பெயராய் நிற்குங்கால் அடக்கு - அடக்கம்.பிணக்கு - வெறுப்பு. புழுக்கு - இறைச்சி. (புறநா.) மடக்கு - மயகம். வழக்கு - நெறி.விளக்கு - தீபம். ஒதுக்கு - மறைவிடம். அச்சு - பயம். 'சவரனச்சொடுசகத்திரானீகளைத்தாழா' (சேதுபு). தீட்டு - தீண்டுவதுÉ அசுசி. ஏத்து - துதி. பரப்பு - பரந்தவிடம். ஊற்று - ஊன்றுகோல். 'அசைவிடத்தூற்றாவர்' (நாலடி.) வருத்து - வருத்தம். 'கதிர்வாங்காது வருத்தொடுமாய்வதேமேல்' (கந்தபு.) ஒற்று- மெய்யெழுத்துÉ உயிரெழுத்தை ஒன்றி நிற்பது என்னும் பொருட்டு. தூக்கு - பாட்டு என வரும். சிலவற்றிலே சில வாராமை வழக்கு நோக்கி அறிக.
இங்ஙனம் விகாரம் பெறுதலன்றி அடங்கு, இயங்கு, பிணங்கு முதலியனவாய்த் தாமே நின்று தொழிற்பெயர்பொருளைத் தருதலுமுள. 'அடங்கரும் பெருமகிழ்வு' (தணிகை.) 'இயங்குறுபுலன்'(இராமா.)
அம் பெறல்
அடக்கம் எச்சம் விளக்கம் சுருக்கம்
அழுத்தம் ஒக்கம் வீக்கம் வணக்கம்
அச்சம் பொக்கம் ஒடுக்கம் உறக்கம்
இயக்கம் பிறக்கம் நத்தம் தோற்றம்
அடக்கம் - அடங்கல். அழுத்தம் - அழுந்துதல். அச்சம் - அஞ்சுதல். எச்சம் - எஞ்சுதல். ஒக்கம் - ஓங்குதல். நத்தம் - நந்துதல். 'நத்தம்போற்கேடும்' (வள்.) வணக்கம் - வளைதல். தோற்றம் - தோன்றுதல். இவற்றுட் பல பெயராயும் வரும். அச்சம் - பயம். இயக்கம் - வழி. 'வெயிற் புறந்தருஉரூமின்ன லியக்கத்து' (மலைபடு.) எச்சம் - சந்ததி. 'எச்சத்தாற் காணப்படும்' (வள்.) ஒக்கம் - உயர்;ந்தது. நீண்டது. 'ஒக்கமிரட்டி' (யா-காரிகை)பொக்கம் - பாங்கியது. பொலிவு, பிறக்கம் - மலை. 'பிறக்கமும்வனமுமொழித்து' (பார.) விளக்கம் - ஒளி. வீக்கம் - பெருமை. ஒடுக்கம் - ஒடுங்கியவிடம். சருக்கம் - சுருங்கியது. வணக்கம் - நமஸ்காரம். உறக்கம் - நித்திரை. தோற்றம் - வலிமை.
ஒன்று என்பது ஒன்றுதல், ஒன்றல், ஒன்ற ஒன்றின, ஒன்றிய,ஒன்றினன் முதலியனவாய் வரலன்றி ஒத்தல், ஒத்து, ஒக்க, ஒப்ப, ஒத்த, ஒத்தான், ஒக்கிறான். ஒப்பான முதலியனவாயும் வரும். ஒன்றுதல் - பொருந்துதல், இயைதல். ஒப்பாதல். 'ஒன்றின வொன்றிள வல்லேயொன்று செய்க.' (நாலடி) ஒன்றின - இயைந்தன. 'சிலையொன்றுவாணுதல்' (திருக்கோ.) சிலையொன்று - வில்லினையொத்த. ஏய்ப்ப, ஒப்ப, ஒன்ற, ஓட்ட. தகைய, புல்ல, இயைய என்பன உவமவுருபகளாய் வந்ததும் இப்பொருணோக்கி என்க.
மேலும் ஒன்று என்பது உடன்பாட்டிலே ஒவ்வு, ஒல்லும்,ஒண்ணும் முதலியனவாயும் எதிர்மறையிலே ஒவ்வாமை, ஒல்லாமை, ஒவ்வாது, ஒவ்வாத, ஒண்ணாது, ஒண்ணாத, ஒண்கிலை முதலியனவாயும் வரும். 'ஒவ்வரும்பரன்' (தணிகை.)'ஒல்லும் வகை' (வள்.) 'ஒண்ணுமோவவர்தஞ் செயலோதவே' (கந்தபு.) ஒண்ணுமோ - இயையுமோ. 'ஒழுக்ககுடையவர்க் கொல்லாவே' (வள்.) 'அறிதற்கொவ்வா நன்னுதல்' (இராமா.) ஒவ்வா - இசையாத. 'கூறொணா தாகிநின்ற' (சித்.) 'யாவர்க்கு மெழுதொணாத' (இராமா.) 'மதிப்பவொண்கிலை' (கந்தபு.) ஒண்கிலை - இயைகின்றிலை. பிறவினையிலே ஒற்றல், ஒற்றி முதலியவாயும் வரும். ஒற்றல் - ஒன்றச் செய்தல். தீண்டுதல். 'ஒற்றும் மூக்கினை' (இராமா.) 'நாவிளிம்பு வீங்கி யொற்ற' (நன்.)
ஒன்றுநர், ஒல்லுநர், ஒன்னார், ஒல்லார், ஒக்கல், ஒப்பனை, ஒப்புரவு, ஒற்றுமை முதலிய பெயர்களெல்லாம் ஒன்று என்பது மூலமாக வந்த பெயர்கள் என்க.. ஒன்றுநர் - நண்பர். ஒக்கல் - சுற்றம். மென்றொடருள்றே அல் என்னும் விகுதிபெற்றுப் பெயராவனவும் பல.
அல்
அலங்கல் சாம்பல் புழுக்கல் தோன்றல்
அஞ்சல் தாங்கல் பொங்கல் அழுங்கல்
ஏந்தல் தூங்கல் மடங்கல் பிறங்கல்
ஓங்கல் தொங்கல் முடங்கல் விலங்கல்
அலங்கல் - மாலை. அஞ்சல் - தோல்வி. ஏந்தல் - அரசன். ஓங்கல் - மலை. சாம்பல் - பழம்பூ. தாங்கல் - பூமி. 'தாங்கலிற் கவிழ்வான் றன்னை' (இராமா.) தூங்கல் - யானை. தொங்கல் - தொங்குவது, மாலை. புழுக்கல் - சோறு. பொங்கல் - கள்ளு. மடங்கல் - மடங்குதலைச் செய்வது, சிங்கம். முடங்கல் - ஓலை. தோன்றல் - மகன். அழுங்கல் - வருத்தம். பிறங்கல் -மலை.விலங்கல் - மலைÉ விளங்குவதென்னும் பொருட்டு. ல ள வொற்றுமை பற்றி விலங்கல் என நின்றது. பிறங்கல் என்பதும் இப்பொருட்டு. ஐ என்னும் விகுதி பெற்றுப் பெயராவனவுஞ் சில.
ஐ
கற்றை கொச்சை முத்தை
பதுக்கை பிற்றை சுருங்கை
கற்றை - மயிர்த்தொகுதி போல நெருங்கிய கூட்டம். கன்றல் - நெருங்கல். பதுக்கை - பதுங்குதலுடையது. மறைவிடம். பதுங்கல் - ஒடுங்கல். கொச்சை - எழுத்து நிரம்பா வார்த்தை. கொஞ்சல் - மழலை. பிற்றை - பின்னைநாள். முத்தை - முன்னையது. 'முத்தையொடியலும்' (தண்டி.) சுருங்கை - சுருங்குதலுடையது, மாலை.
இல் என்னும் விகுதி பெற்றும் சில பெயராகும். அவை மிச்சில், எச்சில், துச்சில், தூண்டில் முதலியன. மிச்சில் - மிஞ்சியிருக்கும் பொருள். எச்சில் - எஞ்சியிருக்கும் பொருள். துச்சில் - ஒதுக்கிடம். துஞ்சியிருப்பது என்னும் பொருட்டு.
அரும்பு என்பது மூலமா அம்பல், ஆம்பல், ஆம்பி முதலிய பெயர்களும் பிறக்கும். அம்பல் சிலரறிந்து கூறும் பழிமொழி. இது அலர் என்பதற்கு எதிர். ஆம்பல் - அரும்பலுடையது. கொம்பு, ஆம்பற்பூ. ஆம்பி - காளான். பிறவுமின்ன.
இடைத்தொடர்
அல்கு பில்கு உள்கு
ஒல்கு மல்கு வெள்கு
நல்கு மாழ்கு ஞொள்கு
பல்கு மூழ்கு எய்து
இவையும் இவைபோல்வன பிறவும் இடைத்தொடர்க் குற்றியலுகரவீற்றுக் பகுதிகளாம். இவையும் முன்னையன போல அல்குதல். அல்கல், அல்கி. அல்க, அல்கின முதலியனவாய் வரும். அல்குதல் - தங்குதல், சுருங்குதல்.
மழுகு என்பதன் விகாரமாய் வந்த மாழ்கு என்பது மாழாத்தல், மாழாத்து முதலியனவாயும் வரும். 'மனங்கவல்பின்றி மாழாந்தெழுந்து' (பொருந.) மாழாத்தல் - மயங்கல். முழுகு என்பதன் விகாரமாய் வந்த மூழ்கு என்பது மூழ்குதல், மூழ்க, மூழ்கின முதலியனவாயும் வரும். முழுகுதல் என்பது முழுமையுமாதல் எனவும் பொருள்படும். 'கோளிபங்கய மூழ்க.' (இராமா.) மூழ்க - முழுமையாக. முழுக்க என்னுஞ் செயவென்னெச்சத்துக்கும், முழுத்த என்னும் பெயரெச்சத்துக்கும் முழுகு என்பதே பகுதி என்க.
உள்குதல் - அஞ்சுதல். மடிதல், வெள்குதல்- நாணுதல். 'உள்கு சாபத் துரங்கெடு மிந்திரன் - வெள்க.' (இரகு.) இவை உட்கு, உட்கி, உட்க, வெட்கம், வெட்கி. வெட்க முதலியனவாயும் வரும். 'உட்கப்படார்' (வள்.)உட்கு என்பது பெயராயும் நிற்கும்É அச்சம் எனப் பொருள்படும். அல்கு, ஒல்கு, நல்கு என்பவைகளினின்று முறையே அல்கல், ஒற்கம், நற்கு என்னும் பெயர்கள் பிறக்கும். அல்கல் - குறைவது. தினம். ஒற்கம் - வறுமை, தளர்ச்சி. நற்கு - நல்கியது. 'நற்கமிழ்து துய்த்தல்' (தணிகை.) நிற்க.
இன்னும் சில கூறுதும். து என்னும் பகுதி யரகம் விரியப் பெற்றுத் துய்த்தல், துய்த்;து,துய்க்க, துய்த்தான் முதலியனவாய் வரும். இங்ஙனமின்றித் துவ்வல். துற்றல், துறுவல், (பிங்கல.) துற்று, துற்றிய, துற்றும், துற்றுவர். துப்பார் முதலியனவாயும் வரும். எதிர்மறையிலே துவ்வாமை, துவ்வார், துவ்வாதார் முதலியனவாய் வரும். துற்று - உண்ணப்படுகின்ற. 'துற்றவிழுமீயார்' (சிந்.) துற்றிய - தின்ற. 'தூராய் துற்றிய துருவையும்' (பொருந.) துற்றம் - உண்கின்ற. 'முற்றுற்றுந்துற்றினை நாளுமறஞ்செய்து - பிற்றுற்றுந்துற்றுவர்;' (நாலடி.) துப்பார் - உண்பார். 'துப்பார்க்குத் துப்பாய' (வள்.)இதினின்றுந் தோன்றும் பெயர் துப்பு. துப்புரவு, துவ்வு, துற்றி துற்று முதலியன. துப்புரவு -ஐம்பொறி நுகர்வு. துவ்வு என்பதுமது. 'அடுத்த துப்புரவுந் துவ்வுமைம்பொறி நுகர்வாகும்' (சூ.நிக.) துற்றி - உண்பன. 'அலைவுறு துற்றியுண்பவாம்' (சூ.நிக.) துற்று - சோறு.
வா, தா என்பனபோலத் துணைவினையாய் நிற்கும் பகுதிகள் வேறும் பலவுள. அவை தகு, உறு, இடு முதலியன. 'தேமலரங்கட்டிருவே புகுதக' (சிந்தா.) 'உட்கப்படார்'(வள்.) 'எண்ணுற்றசூரன் (பார.) 'நில்லிடு' (திருமந்.) முதலியவைகளை நோக்குக. புகுதக - புகுக. உட்கப்படார் - உட்கார். எண்ணுற்ற - எண்ணிய. நில்லிட - நில்.
சில சில பெயரோடு கூடி ஒன்றி நின்று தொழிற்பெயரும் பிறவுமாய் முடியும் பகுதிகளும் பல. அவை மேகதவு, மேம்படல், கைக்கொள்ளல், கடைக்கூட்டல் முதலியன. இவை மேதக்கு, மேதக்க, மேம்படு, மேம்பட்ட முதலியனவாய் வரும்.
முற்றிற்று.