அறிமுகம்
தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் (ஆராட்சி நூல்)
முதற் பதிப்பு : 1969
இரண்டாம் பதிப்பு: டிசம்பர், 1978
மூன்றாம் பதிப்பு: ஆகஸ்ட் 1985
விலை ரூ.14-00
TAMIL ILAKKIYATHIL KALAMUM
KARUTHUM
A study and criticism on tamil literature
By Dr. A. VELUPPILLAI
( C ) Dr.A. Veluppillai
Third Edition : August, 1985
216 pages
10.9 Kg. white printing
10 pt. Letters
18 x 12.5 Cms.
Box Board Binding
B.R.V . Press, Madras – 5
Price Rs.14.00
PAARI PUTHAKAP PANNAI
58, T.P. Koil Street
Triplicane, Madras – 600005.
அச்சிட்டோர்:-
பி. ஆர்.வி. பிறஸ்,
11,சிங்கப் பெருமாள் கோயில் தெரு
திருவல்லிக்கேணி, சென்னை- 5.
முகவுரை
“காலத்திற் கேற்ற வகையில் – அவ்வக்
காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாழும் நிலைத்திடும் நூலொன்று மில்லை”
-சுப்பிரமணிய பாரதியார்
வெவ்வேறு காலத்திற்கேற்ப, வெவ்வேறு நாட்டுக்கேற்ப வெவ்வேறு சமூகத்திற்கேற்ப, வாழ்கையை பற்றிய கருத்துக்கள் வெவ்வேறாக அமைகின்றன. வாழ்க்கை நெறி ஒவ்வொன்றிலும் சிறப்புக்கள் சிறப்புக்ளுண்டு; குறைபாடுகளுமுண்டு. வாழ்கை நெறியை ஒருவர் எவ்வாறு நோக்குகிறார் என்பதைப் பொறுத்தது, அவ்வாழ்க்கை நெறியிற் காணப்படுவனவாகச் சுட்டப்படும் குறைபாடுகள். வெவ்வேறு வாழ்க்கை முறைகள் சந்திக்கும் போது, அவைகளை ஒப்பிட்டு நோக்கும் இயல்பு தோன்றுகிறது. வாழ்கை நெறி ஒன்றிற்குரியவர்கள் முன்னேற்ற மடைந்த மக்களாகக் காணப்பட்டால், மற்ற வாழ்கை நெறிக்குரியவர்கள் முன்னவர் வாழ்க்கை நெறியை பின்பற்ற முயலும் இயல்பு. இரண்டு வாழ்கை நெறிகளும் வெவ்வேறு அடிப்படையில் அமைந்து ஒவ்வோன்றிலும் சிநப்பியல்புகள் வெவ்வேறாகக் காணப்பட்டால் வாழ்கை நெறி சிறிது சிறிதாகவே மாற்றமுறும். ஆனால், வாழ்கைநெறியும் வாழ்கை பற்றிய கருத்துக்களும் மாறிக் கொண்டே யிருக்கின்றன. மாறிக் கொண்டிருப்பதையே தன் இயல்பாகக் கொண்ட உலகத்தில் இத்தகய மாற்றம் தவிர்க்க இயலாதது. உலகப் பொது நியதிக்குத் தமிழ்ச் சமுதாயம் விதி விலக்கல்ல.
காலத்திற்கேற்ற முறையில், தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கை முறையும் மாறிமாறி வந்திருக்க வேண்டும் என்ற கருத்துத் தமிழிலக்கிய வரலாற்றை நான் பல்கலைக்கழகத்தில் படிக்க நேர்ந்த காலத்தும் படிப்பிக்க நேர்ந்த காலத்தும் உறுதிப்பட்டு வந்திருக்கிறது. அல்பேர்ட் சுவெயிற்சர் என்ற மேட்டறிஞர் எழுதிய ’இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்’ (Albert Schweitzer : Indin Thought and lts Development: English edition 1936) என்ற ஆங்கில நூல் தமிழுக்கு அதே போல நூல் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குத் தோற்றுவித்தது. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதிய ’இலக்கியச் சிந்தனைகள்’ (1947) என்ற இலக்கியத்தையும் சமுதாயத்தையும் இணைத்து நோக்குவதில், எனக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது மதுரைப் பல்கலைக்கழகத்து துணைவேந்தரான பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரர் எழுதிய. ’தமிழ் சிந்தனை வரலாற்றிற்கு ஒரு வேண்டுதல்’ (A Plea for a History of Tamil Thought, 1951.) என்ற கட்டுரை என்னை இந்நூல் எழுதுவதில் ஊக்கி வந்தது.
தமிழ் சிந்தனையின் வரலாற்றை உணர்ந்து கெள்வதற்குத் ’தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்’ என்ற இந்நூல் ஓரளவு துணைபுரியும் எனக் கருதுகின்றேன். தமிழ் நாட்டார் சங்கதம் முதலிய மொழிகளில் எழுதிய நூல்களும் பிற நாட்டார் தமிழரைப் பற்றிய செய்திகளும் இங்கு உதவக்கூடியன. ஆனால் இந்நூல் இலக்கியங்களிலிருந்து மட்டும் கருத்துக்களை எடுத்து ஆராய்கிறது. இலக்கியம் என்ற சொல் பரந்த பொருளிலும் இந்நூட் கையாளப்படுகிறது. அவ்வாறு கொண்டாலும் தமிழிலக்கியம் மடடும் தமிழர் சிந்தனை வழர்ச்சியை உணர்த்துப் போதியதல்ல கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தோன்றியதமிழிலங்கியங்கள் இன்றுள்ளன. அவ்வக்காலத்திற் சிறப்புற்றிருந்த கருத்துக்கள், அவ்வக்கால இலக்கியங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த அடிப்படையில், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழிலக்கிய வரலாற்றை நோக்கி இயற்கை நெறிக்கால, அறநெறிக்காலம், சமய நெறிக்காலம், தத்துவ நெறிக்காலம், அறிவியல் நெறிக்காலம் என்ற ஐந்து காலப் பிரிவுகள்எனக்கொள்கின்றேன்.
இந் நூலுள் இயந்கை நெறிக்காலம் என்ற பகுதியும் அறிவியல் நெறிக்காலம் என்ற பகுதியும் சுருங்கிய அளவினவாக அமைந்துள்ளன. இயற்கை நெறிக்காலம் என்ற பகுதி சுருங்கிய அளவாக அமைந்ததற்கு இரண்டு காரணங்கள் கூறலாம். இயற்கை நெறிக்கால ஈற்றிலேயே இன்று காணப்படும் சங்க இலக்கியம் தோன்றியிருக்க வேண்டும். சங்க இலக்கியச் செய்யுட்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளைச் சித்தரிக்கும் அகப்பாடல்களாகக் காணப்படுகின்றதால், வாழ்கை நெறி பற்றிய கருத்துக்கள் பல அக்காலச் செய்யுட்களிற் காணப்படவில்லை. அறிவியல் நெறிக்காலம் இன்று நிகழ் காலமாகும். எதிர் காலத்திலேயே, இக்காலத்தைப்பற்றி கருத்துக்கள் பல அக்கால செய்யுட்களிற் காணப்படவில்லை. அறிவியல் நெறிக்காலம் இன்று நிகழ்காலமாகும். எதிர் காலத்திலேயே, அக்காலத்தைப் பற்றிச் சிறப்பாக மதிப்பீடு செய்ய இயலும்.
சமய நெறிக்காலமும் தத்துவ நெறிக்காலமும் நெருங்கிய தொடர்புள்ளன. முந்தியதன் வளர்ச்சியே பிந்தியதாகும். இவ்விரு காலத்திற்குமுரிய இலக்கியங்களும் கருத்துக்களும் விரிவாக ஆராயப்படவில்லை. ஒவ்வொரு காலத்திற்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் செய்யுட்கள் காணப்படுவதால், பொதுக்கருத்துக்கள் சிலவற்றின் வளர்ச்சியே இங்கு சுட்டப்படுகின்றது. தத்துவ கருத்து நுட்பங்களையிட்டு அறிஞர்கள் மட்டுமே விவாதித்திருப்பார்கள். பொது மக்கள் அவற்றை புரிந்து கொண்டிருக்கமாட்டார்கள். அதனால், தத்துவ நெறிக்காலம் என்ற பகுதி விரிவாக எழுதப்படவில்லை.
சமய நெறிக்காலம் என்ற பகுதியும் அறநெறிக்காலம் என்ற பகுதியுமே ஓரளவு இங்கு விரிவாக எழுதப்பட்டுள்ளன. அறநெறிக்காலம் என்ற பகுதிஇயற்கை நெறிக்கால வாழ்க்கையின் விமரிசனமாக அமைகிறது அறநூல்கள் ஒவ்வொன்றும் வாழ்கை நெறி பற்றிய கருத்துக்கதளைத் தொகுத்துதருவனவாக அமைகின்றன. அறநூல்களும் சமண சமயத்தவர் இயற்றின எனவும் இருவகைப்படுகின்றன. இன்றைய தமிழ் மக்களிடையே காணப்படுகின்ற கருத்துக்களிற் சில, அறநெறிக்காலத்திலேயே தோன்றிவிட்டன என்பதைக் காட்டுவதற்காக அறநூற் கருத்துக்களுடன் சில எடுத்துத்தரப் படுகின்றது . இவ்வற நூல்களும் எடுத்துக் கூறுகின்றன. அறக்கருத்துக்களை விளக்க உதவும் கதைகளைக் கொண்டனவாகக் காவியங்கள் முதலிய பிற்கால இலக்கியங்களுடன் அமைந்துள்ளன. எனவே பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள அற நூல்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.
இந்நூல் உருப்பெற்ற வரலாற்றைப் பற்றிச் சிறிது கூற வேண்டியது என் கடமை என்று நினைக்கின்றேன். இந்நூலிலுள்ள கருத்துக்கள் சில இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் இளங்கதிர், இந்து தர்மம், சிந்தனை என்ற இதழ்களில் பத்தாண்டுகளாக வெளிவந்த என்னுடைய கட்டுரைகளிற் காணப்படுபவை.1967ம் ஆண்டு, இந் நூல் ஒருவாறு உருப்பெற்றது.1967 ம் ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து 1968ம் ஆண்டு ஆடி மாதம் வரையில், இலங்கையில் உள்ள தமிழ் தினசரிசரியாகிய வீரகேசரி என்னும் பத்திரிகையின் வாரவெளியீடுகளில், கட்டுரைத் தொடராக, இந்நூல் வெளிவந்து கொண்டிருந்தது. வீரகேசரிப் பத்திராதிபர் திரு. சிவப்பிரகாசம் அவர்களும் அப்பத்திரகை ஆசிரியர் குழுவைச்சேர்ந்த என் நண்பர் திரு. கதிர்காம நாதன் அவர்களும் இந் நூலை வெளியிடுமாறு என்னை உற்சாகப்படுத்தினர்.
இந்நூலைப் பார்வையிட்டுத் திருத்தங்கள் சில கூறியுதவியமைக்காகப் பேராசிரியர் டாக்டர் சு. வித்தியானந்தன் அவர்களுக்கு நன்றியுடையேன். நூலை வெளியிடுமாறு ஊக்கி நூல் நல்ல முறையில் வெளிவருவதற்கேற்ற அறிவுரைகள் கூறிய பேராசியர் வி. செல்வ நாயகம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இப்பொழுது நூலிலே, சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நூல் இத்துறையில் முதன் முயற்சியாகும். இத்துறையில் இன்னும் உழைத்து மறு பதிப்பைச் சிறப்பாக வெளியிடவேண்டுமென்பது என்னுடைய ஆவலாகும். தமிழாரய்ச்சி வளர்ச்சியடைய வேண்டுமென்று விரும்புபவர்கள் இந்நூல் இன்னும் சிறப்பதற்கேற்ற வழிவகைகள் பற்றி என்னுடன் தொடர்பு கொண்டால் நன்றியுடையவனாக இருப்பேன்
ஆ. வேலுப்பிள்ளை
தமிழ்துறை,
இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை, இலங்கை,
1-9-1969
பொருளடக்கம்
இயற்கை நெறிக் காலம்
தமிழிலக்கிய வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு காலங்களை சங்ககாலம் முதலாக வகுத்தல் போல, தமிழ் மக்கள் சிந்தனையை ஆதாரமாகக் கொண்டு காலங்களைச் சங்ககாலம் முதலாக வகுத்தல் போல, தமிழ் மக்கள் சிந்தனையை ஆதாரமாகக் கொண்டு காலத்தை வகுப்போமாயின், சங்க காலம் என வழங்கும் காவப் பிரிவை இயற்கை நெறிக்காலம் எனக் கூறலாம். இயற்கை நெறிக்காலம் என்று குறிக்கும் போது தமிழ் மக்களுடைய வாழ்கை தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்ப அமைந்ததென்று பிற நாட்டினர் செல்வாக்கு தமிழ் மக்கள் வாழ்கையிற் சிறப்பிடம் பெறவில்லை யென்று உலகியல் வாழ்கையிற் பூரண நம்பிக்கை தமிழ் மக்களிடையே நிலவியதென்று கூறலாம். உலகியல் என்பது இவ்வுலக வாழ்கையில் உள்ள ஈடுபாட்டைக் குறிக்கவே இந்நூலில் வழங்கப்படுகிறது. சூழ் நிலைக்கேற்பவே வாழ்கை அமைகிறது என்ற கருத்தைச் சங்ககாலம் நன்கு விளக்குகிறது.
சங்ககாலத் தமிழ் மக்கள் வாழ்கை, தமிழ் நாட்டிற் காணப்பட்ட ஐவகை நிலப்பாகுபாட்டிற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. தமிழ் நாடு மலையும் மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை, கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல், வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், வரண்டபிரதேசமான பாலை என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழநாடு, பாண்டி நாடு, சேர நாடு என்னும் தமிழ் நாடுகள் மூன்றினுள் சோழநாடு வளம் மிகுந்ததாக அக்காலத்தில் காணப்பட்டது.காவிரியின் நீர்பாசனமே அந்த நாட்டின் வளத்திற்கு காரணமாதலால், காவிரியைப் பொன்னியென்று சோழ நாட்டைப் பொன்னி நாடென்றும் வழங்கினர். இயற்கை நெறிக்காலச் செய்யுட்களுள் பல, சோழ நாட்டின் நீர்வளத்தை எடுத்துக்கூறுகின்றது. சோழ நாடு பெரும்பாலும் மருத நிலமாக அமைந்திருந்தது. சேர நாடுபேரியாற்றினால் வளம் படுத்தப்பட்டது. பேரியாற்றின் கரைகளிற் மருத நிலம் காணப்பட்டபோதும் சேர நாடு பெரும்பாலும் குறிஞ்சி நிலமாகவே அமைந்திருந்தது. வைகை, பொருதை என்னும் ஆறுகள் பாண்டி நாட்டிற் பாய்ந்து பயிர்ச் செய்கைக்கு உதவியபோதிலும் அந்நாடு பெரும்பாலும் முல்லை நிலமாகவே விளங்கியது. தமிழ் நாட்டின் கீழ்த்திசை, தென்றிசை, மேற்றிசை ஆகியவற்றில் கடல் காணப்பட்டதால்நெய்தல் நிலமும் தமிழ் நாட்டில் பரந்து கிடந்தது. முல்லை நிலம் குறிஞ்சி நிலம் என்பவற்றை அடுத்துப் பாலை நிலம் காணப்பட்டது. சங்க இலக்கியங்களிலிருந்து தெரியவரும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவோர் தமிழ்நாட்டில் வரட்சி காலப்போக்கில் அதிகரித்து வந்திருக்கின்றதென கூறுவர் இயற்கை நெறிக்காலத்திலேயே, தமிழ்நாட்டுப்பாலை நிலம் மக்கள் குடியிருந்து வாழ முடியாத நிலமாக மாறிவந்திருத்தல் வேண்டும். இதனால் அக்கால மக்கள் குடியிருந்து வாழ்ந்த நிலங்களைக் குறிக்கும்போது பாலையை நீக்கி ஏனைய நான்கு நிலங்களையும் நானிலம் என வழங்கும் வழக்காறும் காணப்பட்டது.
குறிஞ்சி நிலமே மக்கள் ஆதியில் வாழ்ந்த இடமென்றும், குறிஞ்சியிலிருந்து முல்லைக்கு மக்கள் குடிபெயர்ந்த காரணத்தால் பண்பாட்டு வளர்ச்சியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதென்று கூறப்படுகின்றது. முல்லை நிலத்தலைவனாகிய கோ அல்லது கோன் தமிழ் நாட்டு முடிவேந்தரின் முன்னோடியாகலாம் என ஆராட்சியாளர் கருதுகின்றனர். பொதுவாக நோக்குமிடத்து, குறிஞ்சி, முல்லை, நெய்தல் என்பவற்றின் வாழ்கை வசதிகள் நிறையக் கிடைக்கவில்லை :அந்நிலங்களில் அமைதியான ஆறுதலான வாழ்கை நிலவில்லை: ஆனால் நெய்தல் நிலத்திலுள்ள சில பகுதிகள் கடற்றுறைமுக வாணிகத்தாற் பட்டினங்கள் தோன்றின :பல நாட்டு மக்கள் குடியேறினர். பல மொழிகள் பேசப்பட்டன; பல நாட்டுப் பொருள்களும் வந்து சேர்ந்தன; செல்வச் செழிப்புக் காணப்பட்டது. பிற நாட்டு வணிகத்தால் நெய்தல் நிலமக்கள் முன்னேறினர் விவசாயத்தால் மருதநில மக்கள் முன்னேறினர். ஓய்வு அமைதி என்பன அங்குகிடந்தன; செல்வம் பெருகியது; மருத நிலமக்களின் தலைவர்களான வேளிர் தமிழ் நாட்டு மன்னராயினர்.
சங்ககால மக்கட் பாகுபாடும் வாழ்க்கையும் ஒழுக்கமும் நில இயற்கைக்கு ஏற்றவே அமைந்திருந்தன.1. பிற்காலங்களில் யாவற்றிலிலும் முரண்பாடு தோன்றின. சங்ககாலத்தில் மந்தை மேய்த்தலைத் தொழிலாகக் கொண்ட முல்லை நில மக்கள் ஆயர் எனவும் இடையர் எனவும் கோவலர் எனக்கூறப்பட்டனர் முல்லை நில மக்கள் வாழ்ந்த இடங்களில் மான்களும், முயல்களும் காணப்பட்டன. அவற்றைக் கொன்று அவர் உண்டனர்; பால், தயிர் முதலியனவும் பண்டமாற்றினாற் பெறப்படும் தானிய வகைகளும் அவருக்கு உணவாகின. அவர் குடியிருப்பு சேரி என்றும் வழங்கியது. குறிஞ்சி நிலமக்கள் குறவர் ஆவர். அவர் வாழ்ந்த இடங்களில் யானையும், புலியும், கரடியும் திரிந்தன. தினையே குறிஞ்சி நிலத்தில் விளைந்த முக்கியதானியமாகும். இந் நில ஆடவர் வேட்டைக்குச் சென்றபோது பெண்கள் உயர்ந்த பரண்களில் ஏறியிருந்து காட்டு மிருகங்களிடமிருந்து தினைபுனத்தைக் காத்தனர் இறைச்சகள் என்பன இவரின் உணவு வகைகள் இவர் குடியிருப்பு சிறுகுடி எனப்பட்டது. மருத நிலமக்கள் உழவர், உழத்தியர், கடையர் ,கடைசியர் முதலியோராவார். மருத நிலம் பண்ணையெனப் பல இடங்களிற் குடிப்பிடப்படும். நெல் வயலை குறிக்கும் களம் என்ற சொல்லிலிருந்து உழவரைக்குறிக்கும் களமர் என்ற சொல்லிலிருந்து உழவரைக் குறிக்கும் கலமலர் என்ற சொல் தோன்றியது. மருத நிலத்துக்குக் குடியிருப்பு ஊர் எனப்பட்டது. வேளாண்மையே இந் நில மக்களுடைய முக்கியமான தொழிலாக இருந்தது. நெல்லும் கரும்பும் இங்கேயே பயிராகின. நெய்தல் நில மக்கள் மீன் பிடித்தனர். பட்டினம், பாக்கம் என்பன இவர் குடியிருப்புக்கு வழங்கிய பெயர்கள். நெய்தல் நிலத்து மக்களை நுளையர்,பரதவர், வலைஞர் எனப் பலவாறு அழைத்தனர். இவர்களுக்கு மீன், கள், கூழ் என்பன உணவாக இருந்தன பாலை நிலத்து மக்கள் வேட்டையாடுதலையும் வழிப்பறிச்செய்தலையும் தொழிலாகக் கொண்டனர். எயினர், மறவர், வேடர் என்பன இவருக்கு வழங்கிய பெயர்கள். இவர் பன்றியின் இறைச்சி ஆமாவின் இறைச்சிகள் என்பவற்றை உணவாகக் கொண்டனர். இவர் வசித்த குடிசைகுறும்பு எனப் பெயர் பெற்றது.
இயற்கை நெறிக்கால இலக்கியம் மக்கள் ஒழுக்கத்தையே பொருளாகக் கொண்டது. மக்கள் யாவருக்கும் இயல்பாக அமைந்த காதலுணர்ச்சியும் வீர உணர்ச்சியுமே அக்கால இலக்கியங்களிற் சிறப்பிக்கப்பட்டன. வீர உணர்ச்சியுமே அக்கால இலக்கியங்களிற் சிறப்பிக்கப்பட்டன. அக்கால இலக்கியப் பொருள் மரபு முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என வகுக்கப்பட்டது. உரிப் பொருளாகிய ஒழுக்கம் நிகழுதற்கு முதற் பொருள் நிலைக்களமாகவும் கருப்பொருள் அதற்கு உதவுமாறும் செய்யுட்கள் செய்யப்பட்டன. ஐவகை நிலத்திற்கும் முதற் பொருள் ,கருப்பொருள் என்பன தனித்தனியே வகுக்கப்பட்டன. ஒத்த காமமாகிய உயர்ந்த காதலுணர்ச்சி புணர்தல், பிரித்தல், இருத்தல், இரங்கல், ஊடல் என ஐந்தாக வகுக்கப்பட்டு அவ்வந்நிலத்திற்கும் சிறந்த காதலொழுக்கங்களும் பெயராயிற்று ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பாகி உரிய தாவரத்தின் பெயர், அவ் நிலத்துக்குப் பெயராகி, அவ்வந் நிலத்துச் சிறந்த காதலொழுக்கத்துக்கும் பெயராகினமை அக்கால வாழ்கையில் இயற்கை பெற்ற முக்கியத்துவத்துக்கு ஒரு சான்று தமிழ் நாட்டு மக்கள் தத்தம் நிலத்துக்குச் சிறப்பாக உரிய பூக்களையும் தழைகளையும் அணிந்தனர். போருக்குச் செல்லும் போது கூடப் பூச்சூடிச் சென்றனர், அக்காலப் போர் ஒழுக்கமும் வெட்சி, வாகை, வஞ்சி. உழிஞை, தும்பை என ஐந்தாக வகுக்கப்பட்டு அவ்வந்நில இயற்கைக்கேற்பக் குறிஞ்சி,பாலை,முல்லை,நெய்தல்,மருதம் என்ற நிலங்களுக்கு முறையே சிறப்பாக உரியதாகக் கொள்ளப்பட்டது. போர் ஒழுக்கமும் வெட்சி, வாகை,வஞ்சி, உழிஞை, தும்பை என ஐந்தாக வகுக்கப்பட்டு அவ்வந்நில சூடிச் சென்ற பூவின் பெயராகவே அமைந்தது. இயற்கையோடொட்டிய உவமைகள் அக் காலத்தில் பெருந்தொகையாக வழங்கின. இவையாவும் அக்காலத்து மக்கள் இயற்கையோடு ஒன்றினைத்து வாழ்ந்தமையைக் காட்டுவன.
இயற்கையோடியைந்த அக்காலவாழ்வில், பிற நாட்டார் செல்வாக்கு எந்த அளவுக்கு இடம்பெற்றிருக்கலாம் என்பது ஆராயற்பாலது. இந்தியத் தீபகற்பத்தின் தென்கோடியது அமைந்துள்ளது தமிழகத்துக்கு வடக்கில் வேங்கடமும் தெற்கில் குமரியும்,கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லைகளாக இருந்தன. இன்றைய தமிழ் நாடும், கேரளமென்ற மாநிலமும் மைசூர், ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலங்களில் தெற்குப் பகுதிகள் சிலவும், அன்றைய தமிழகத்துள் அடங்கியிருந்தன கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகப் பேரரசர் காலத்திலேயே தமிழகம் சேர, சோழ பாண்டிய நாடுகளாக பிரிந்து விட்டதற்குச் சாசனச் சான்று உண்டு. தமிழ் நாட்டினே் ஒரே நிலை எல்லையாக இருந்த வடக்குப் பகுதியிலும் தமிழருடைய திராவிடச் சகோதரரான தெலுங்கரும், கருநாடகருமே வாழ்ந்தனர் தெலுங்கரும் கருநாடகரும் வாழ்ந்த நாடுகளுக்கு வடக்கிலேயே ஆரிய நாடு இருந்ததால் ஆரியருடைய தாக்கம் தமிழ் நாட்டில் மிக்க வன்மையாக இருக்கவில்லை. அகத்தியரைப்பற்றி வழங்கும் பல வேறுபுராண இதிகாசக் கதைகள், ஆரியர் தென்னிந்தியாவிற்கு வந்ததையும் தமிழ்நாட்டிற்கு குடிபுகுந்ததையும் சுட்டுவன என்பர், தென்னிந்தியா வரலாற்றுப் பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியார. சங்க இலக்கியங்கள் என்று இன்று கொள்ளப்படுபவை தோன்றும் முன்பே, ஆரியர் சிலர் தமிழ் நாட்டிற் குடியேறிவிட்டனர்; சமண பௌத்தத் துறவிகளும் வந்துவிட்டனர் . அசோகன் தன்னுடைய பேரரசின் எல்லையிலிருந்த, தழிழகத்துக்குப் பௌத்தத் துறவிகளை அனுப்பியிருந்தான். மதுரை, திருநெல்வேலி என்னும் மாவட்டங்களிற் பெருந்தொகையாகவும் தமிழ் நாட்டுப் பிற பகுதிகளில் அருகியும் காணப்படும் குகைச் சாசனங்கள் சங்ககாலத்துக்கு முன்பே அப்பகுதிகளிற் சமண பௌத்தத் துறவிகள் வாழ்ந்தமைக்கு சான்று பகிருகின்றன.
தமிழ் நாட்டின் தென்கோடியாகிய திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிய மலையிலே அகத்தியர் நிலையாகத் தங்கிவிட்டதாக கூறப்படுகின்றது. வடக்கே ஆரியர் வாழ்ந்த நாட்டுக்கு அணித்தாய் விளங்கிய சோழர் நாட்டிலும் சேரர் நாட்டிலும், ஆரியர் செல்வாக்குப் பண்டையகாலத்தில் இடம் பெறாமல் தமிழ் நாட்டின் தென்பகுதியாகிய பாண்டி நாட்டில் அதிகமாக அது இடம் பெற்றமைக்கான காரணம் ஆராயப்படவேண்டிதொன்று. பிற்காலத்தில் முகமதியர் மதுரையை மத்திய இடமாகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்டதுபோல, ஆரியர் சங்ககாலத்துக்கு முன்பேதமிழகத்திற் குடிபுக்கு மதுரையை மத்திய இடமாக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்டது போல ஆரியர் சங்ககாலத்திற்கு முன்பே தமிழகத்திற் குடிபுகுக்கு மதுரையை மத்திய இடமாகக் கொண்டு, தமிழ் நாடு முழுவதும் தம் செல்வாக்கைப் பரப்பியிருக்கலாம் எனக் கொள்ளல் தகும்.
தமிழைச் சிறப்பாக வளர்த்த மதுரையை ஆரியச் செல்வாக்குடன் தொடர்புறுவது தகாது என்று சிலர் வாதிக்கலாம். ஆனால் மதுரை என்ற பெயரே வடநாட்டு ஊர் பெயராக இருத்தல் கவனிக்கப்படவேண்டியது. வட இந்திய மதுரை கங்கைக்கரையில் அமைந்திருந்த ஒரு புண்ணிய தலமாகும். கண்ணனவதாரத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட அத்தலம் வைணவரால் பெரிதும் போற்றப்படுவது. கி.மு. நான்காம் நூற்றாண்டிலே, மௌரியரிடம் வந்த கிரேக்க தூதுவனாகிய மெகாஸ்தெனஸ் என்பன் பாண்டிய நாட்டையும் கண்ணனையும் தொடர்புறுத்திக் கூறியுள்ளான்.சங்ககாலத்துக்குப் பிற்பட்ட சிலப்பதிகாரத்தில் பாண்டிய நாட்டு மதுரையிலிருந்து ஆயர் வாழ்கையும் கண்ணனைப்போற்றும் ஆச்சியர் குரவையும் இடம்பெறுகின்றன. பாண்டிய நாட்டுக்கும் வைஸ்ணவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காரணத்தால், மதுரை உன்ற பெயர் தமிழ் நாட்டிலேதோன்றியிருக்கலாம். மேலும் வட நாட்டு மதுரைக்கும் சமணருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வட இந்திய மதுரையிற் சமணசாசனங்கள் பெருந்தொகையாகக் காணப்படுகின்றன.பாண்டியநாட்டு மதுரைக்கு அருகில் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே சமண பௌத்த துறவிகள் தங்கியிருந்ததை நினைவு கூறும்போது, அப்பெயர் சமணர் தொடர்பாலும், பாண்டிய நாட்டு மதுரைக்கு ஏற்பட்டிருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. பாண்டியர் தலைநகரம் கூடல் என்ற தமிழ் பெயரால் வழங்கி மதுரை என்ற வடமொழிப்பெயரை பெற்றது சங்ககாலத்திலேயே ஆகும். ஏனைய தமிழ்நாட்டுத் தலைநகரங்கள் தமிழ் பெயரால் வழங்கியபோதிலும் மதுரை வேற்று நாட்டு ஊர்பெயரை அக்காலத்தில் பெற்றுவிட்டது.
பண்டைக் காலத்தில் மதுரைப்பகுதியிலே தமிழ் வளர்ச்சியுறத் தொடங்கியமைக்கு வட இந்திய அறிஞர் தொடர்பும் ஒரு காரணமாக இருந்திருத்தல் கூடும். ஆரியநாகரிகம் திராவிடர் நாகரிகத்திலும் தொன்மையானது என்ற கூற்றை மறுப்பதற்கு அறிஞர் பொருமபாலோர் ஏற்றுக்கொள்ள கூடிய சான்றுகள் இன்று இல்லை ஆரியருடைய வேதம் கி.மு. ஆயிரம் ஆண்டுக்கு முன் இயற்றப்பட்டுவிட்டது என்பதை மறுக்கும் அறிஞர் இக்காலத்து மிகச் சிலர். இந்துநதிச் சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம் என்பன திராவிட நாகரீகமே எனக் காட்ட முயன்றோர் இதுவரை அம்முயற்சிகளில் வெற்றி பெறவில்லை ஆரியர் இந்தியாவிற்கு வந்த போது திராவிடர் இந்தியாவிலே வாழ்ந்தனர் என்ற கூற்றை ஏற்பினும், திராவிட நாகரீகம் வளர்ச்சியுற்றிருந்தது என்னதற்குச் சான்றில்லை. இன்று கிடைக்கும் சங்க இலக்கியம் கிருத்தவ ஆண்டிற்கு முன்பின்னாகவே தோன்றியிருக்க வேண்டும். இவ்விலக்கியத்தின் பண்புகளை நோக்கும்போது, தமிழிலக்கியம் அவ்விலக்கியத்திற்கு முன்பு சில நூற்றாண்டுழுகால வளர்ச்சியுடையதாயிருந்தது என்று கூறமுடியாது. தமக்கென எழுத்து முறைதானும் இல்லாமலிருந்த ஆபிரிக்க மொழிகள் சில ஐரோப்பியர் தொடர்பினால் இன்று வேகமாக வளர்ச்சியடைவதைப் பார்க்கும்போது, தமிழ் மொழியும் சங்ககாலத்திற்கு ஏற்றட்ட ஆரியர் தொடர்பினால் ஒரு புது வேகத்துடன் வளர்ந்திருக்கலாம் என்று எண்ணுவதற்கு இடமேற்படுகின்றது. பிறமொழித்தொடர்பு ஒரு மொழியின் வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவும் என்று கூறமுடியாது.ஒரு மொழியைப்பேசும் சமுதாயம் உயிர்துடிப்பு உடையதாக விழங்கும் போது பிறமொழித் தொடர்பினால் பயன் பெறமுடியும். ஐரோப்பியர் தொடர்பினால் அமெரிக்கா அவுஸ்திரேலியா முதலிய கண்டங்களிளுள்ள மொழிகள் பல அழிந்து போகின்றன. ஆரியர் வட இந்தியாவிற்குள் போயின என்பது வரலாற்றுண்மை. தமிழ் நாட்டில் ஆரியர் செல்வாக்கு ஏற்படுமுன்பே, தெலுங்கர் கருநாடகர் நாடுகளிலும் ஆரியச் செல்வாக்கு இடம் போதும், அம்மொழிகள் திடீர் வளர்ச்சி பெறவில்லை. ஆனால் தமிழ்மொழி அத்தகைய வளர்ச்சியடைந்திருக்கிறது ஆரிய நாகரிகத் தொடர்பு தமிழ் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாகக் கூடிய நிலையில் தமிழ் சமுதாயம் உயிர்துடிப்புடையதாக அக்காலத்தில் இருக்கிறது.
சங்ககாலத் தமிழகத்திலே ஆரியச்செல்வாக்குக் குறைந்த அளவினதென்பது தமிழ் மக்கள் ஆரியர் கோட்பாடுகளை அதிகம் ஏற்கவில்லை என்பது வடசொல் தமிழ்மொழியில் அதிகம் இடம்பெறவில்லை யென்பது பிறவும் சங்க இலக்கியங்களால் தெரியக்கிடக்கின்றன. இவற்றை ஆதாரமாககக் சங்கமருவிய காலத்திலே தான் ஆரியர் செல்வாக்கு தமிழ் நாட்டில் இடம்பெறத் தொடங்கியதென நாம் கொள்ளுதல் பொருந்தாது. அக்காலத் தமிழ் மக்கள் நாகரீகம் ஆரியர் நாகரீகத்தைக்காட்டிலும் வேறுபட்டிருந்தது . ஆகவே, சூழ் நிலையின் பிரதிபலிப்பாக அமையும் இலக்கியத்தில் ஆரியத்துக்கும் தமிழுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவது இயல்பு. கி. மு. ஆறாம் நூற்றாண்டிலே வட இந்தியாவில் வைதிக நெறிக்குப் போட்டியாகக் சமண நெறியும் பௌத்த நெறியும் தோன்றிவிட்டன. வேதநெறியோடு மாறுபட்ட மதங்கள் மௌரிப் பேரரசர் காலத்தில் வேகமாகச் செல்வாக்குப் பெற்றதால் வட இந்தியாவிற் சமயப் போட்டி வலுத்திருந்தது. அதனால், சங்க காலத்துக்குச் சமமான காலத்தில் வட இந்தியாவில் சமய சம்பந்தமான நூல்களே தோன்றின. தமிழ் நாட்டில் இயற்கை நெறிக்காலம் நிலவிய போது, வடஇந்தியாவிற் சமய நெறிக்காலமே நிலவியது. தமிழ் இலக்கியத்தில் இயற்கை நெறிப்போற்றப்பட்டபோது, வடஇந்திய இலக்கியத்திற் சமயமே முக்கியத்துவம் பெற்றிருந்தது. சங்ககாலத் தமிழகத்தில் ஐவகை நிலங்களுக்கு வெவ்வேறு தெய்வங்களுக்கும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளும் வழக்கிலிருந்தன. இலக்கியம் வாழ்கையைச் சித்தரிப்பது என்பதை ஏற்றுச் சங்ககால இலக்கியத்தை ஆராய்ந்தால் அக்காலத்திய மக்கள் வாழ்கையிற் சமயம் முக்கிய இடம் பெறவில்லையென்பது பெறப்படும். தெய்வமும் தெய்வ வழிபாட்டு முறையும் இல்லாத மக்கள் இனம் இல்லை. தமிழரிடையேயும் இவை இருந்தன. ஆனால் வைதிகம், சமணம், பௌத்தம் என்ற வட இந்தியச் சமயங்கள் தமிழ் நாட்டிற்கு வரு முன்பு தமிழ் மக்கள் வாழ்கை ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டிருந்தது என்று கருத அக்கால இலக்கியச் சான்றுகள் இடந்தரவில்லை. இயற்கையான வாழ்கையில் ஈடுபாடு மிகுந்தவர்களாகிய அக்காலத் தமிழர், மக்களுக்குரிய இயல்பான தன்மைகளையே போற்றினர். எனவே, அக்கால தமிழ் இலக்கியம் இயற்கை நெறிக்கால இலக்கியமாக அமைந்தது.
இயற்கை நெறிக்காலத்தில் உலகியல் சிறப்புற்று விளங்கியதற்குத் தமிழருக்கு யவனரோடு இருந்த வாணிகத் தொடர்பும் ஒரு காரணமாகலாம். யவனர் என்ற சொல் கிரேக்கரையும் உரோமரையும் குறித்தது. சங்ககாலத்துக்குச் சமமான காலத்தில் உரோமப் பேரரசின் ஆட்சியில் அடங்கியிருந்த கிரேக்கர் உரோபரின் சார்பிலே தமிழ் நாட்டோடு கடல் மார்க்கமாக வாணிகம் நடத்தினர். சேர நாட்டு மிளகு, பாண்டிய நாட்டு முத்து, சோழநாட்டு ஆடை என்பன யவனர் தமிழ் நாட்டிலிருந்து தம் நாட்டிற்கு எடுத்துச் சென்ற பொருள்களுட் சிலவாகும். யவனர் குடியிருப்புக்கள் தமிழ்நாட்டில் இருந்தது யவனர்மதுவைத் தமிழ்நாட்டார் அருந்தியதும் யவன வீரர் தமிழ்மன்னருக்கு மெய்காப்பாளராக வியங்கியதும் யனவர் காசு தமிழ்நாட்டில் விளங்கியதும் ஆகிய இவையாவும் வரலாற்றுண்மைகள்.யனவர் வாழ்கை முறையுங் கருத்துக்களும் தமிழ் நாட்டிற் செல்வாக்குப் பெற்றனவா, அங்கணம் பெற்றிருந்தால் அச் செல்வாக்கின் அளவு எத்தகையது என்பவற்றைப் பற்றி ஒன்றும் நிச்சயமாக அறிந்து முடியாதிருக்கின்றது. யவனருடைய நாகரிகம் உலகியல் ஈடுபாடு மிக்கது. சங்ககாலத் தமிழகத்திற் சமய நெறியைப் போற்றிய ஆரிய நாகரிகம் மிக்க செல்வாக்குப் பெறமுடியாமற் போனமைக்கு உலகியலைப் போற்றிய யவனர் நாகரீகத்துக்குத் தமிழ் நாட்டில் இருந்த செல்வாக்கும் ஓரு காரணமாகலாம்.
சங்ககாலத் தமிழருக்குவாணிக, பண்பாட்டுத் தொடர்பு வேறுபல நாடுகளுடன் ஏற்பட்டது. தமிழ்நாட்டு வாணிகம் தொலை தூரத்திலுள்ள சீனம் வரையிற் பரவியது. இந்தோசீனம், இந்தோநேசியா என்று இன்று வழங்கும் பிரதேசங்கள் இந்தியச் செல்வாக்கு மிகுந்து முறையே சுவர்ணபூமியென்றும் சுவர்ண தீபம் என்றும் பழைய வட மொழிப் புராணங்களிலே பெயர்பெற்றன. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இந்தியச் சார்பான அரசுகள் இப்பகுதியில் நிலவின என்பது வரலாற்றுண்மை. எனவே அக்காலத்திற்கு முன்பு சில நூற்றாண்டுகளாவது இந்தியாவுக்கும் இப்பகுதிகளுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும். இந்தியச் செல்வாக்கை இப்பிரவேசங்களிற் பரவச் செய்ததில் தமிழரின் பங்கு கணிசமானதாக இருந்திருக்கலாம் என்பர் இந்திய வரலாற்றுப் பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியார். சேர நாட்டுத் துறைமுகங்களான தொண்டி, முசிறி என்பனவற்றினூடகவும் சோழநாட்டுப்புகாரினூடகவும் பாண்டிய நாட்டுக் கொற்கையினூடாகவும் கப்பல்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பிரயாணம் செய்தன. இத்தகைய பிறநாட்டுத் தொடர்புகளால் தமிழ்நாட்டிற் செல்வம் பெருகியது. தமிழ்மக்கள் மனம் விரிவடைந்தது. இவ்வுலக வாழ்விற் சுகங் காணத்தக்க சூழ் நிலை நிலவியது.
தமிழ் மக்கள் இத்தகைய சூழலில்வாழ்ந்தபோது இன்றைய தமிழரும் விதந்து கூறிப் பாராட்டும் உயர்ந்த பண்பாட்டையுணர்த்தும் கருத்துக்கள் சில தோன்றின. கணியன் பூங்குன்றனார் பாடிய ’யாதுமூரே யாவரும் கேளிர்’ என்ற தொடக்கத்தையுடைய பாட்டுப் பிரசித்தமானது . அப்பாட்டு “கேடும் ஆக்கமுந் தானே வரினல்லாற் பிறரால் வருவன அல்ல; நோதலும் அது தீர்த்தலும் அவற்றையொப்பத் தாமே வருவன; சாதலும் புதிதன்று; கருவிற்தோன்றிய நாள் முதலேயுள்ள. வாழ்வதை இனிதென்று மகிழ்வதுமில்லை; இன்னதென்று வெறுப்பதுமில்லை. அரிய உயிர் ஊழின் வழியே படுமென்பது நன்மைகூறுபாடறிவோர் நூலாலே அறிந்தோ மாதலின் நன்மையால் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தலும் இலேம்” என இத்தகைய பண்பாட்டுக் கருவூலங்களைக் கெண்டு விளங்குகின்றது. புறநானூறு 182-ம் செய்யுளும் இது போன்றதே. அச் செய்யுளின் கருத்து வருமாறு:“ இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்ததாயினும் அதனை இனிதென்று கொண்டு தாமே தனித்து உண்ணார்; பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து உண்பர்; யாரோடும் வெறுப்பிலர்; பிறர் அஞ்சத் தகும் முயற்சித் துன்பங்களுக்குத் தாமும் அஞ்சிச் சோம்பியிருத்தலுமிலர்; புகழ் கிடைப்பதாயின் தம்முடைய உயிரையும் கொடுப்பர்; பழியெனில் அதனால் உலகம் முழுவதும் கிடைக்குமாயினுங் கொள்ளார்; மனக்கவலை இல்லார். இத்தகைய யாராகித் தம்முடைய நன்மைக்காக முயலுபவர் இருத்தலாலேயே உலகம் வாழ்கின்றது’ என்பது. இனிப் பாண்டியன் நெடுஞ்செழியன் கல்வியின் அவசியத்தைப் பற்றி பாடிய பாட்டும் எக்காலத்தவரும் ஏற்றுப் போற்றத்தக்கதாக அமைந்திருக்கின்றது.
மக்கள் நலம் பேணும் பண்பு குறிப்பிடத்தக்க அயவில் அக்காலத்தில் விளங்கியதெனலாம். இப்பிறப்பில் அறஞ் செய்தால அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கில் அறஞ் செய்யாது சான்றோர் அறஞ்செய்வதைப் பார்த்து அறஞ்செய்தான் அக்காலத்தில் வாழ்ந்த ஒருவன் என்பதும் இரவலர் பசியோடு திரும்பிச்செல்லக்கூடாதென்பதற்காக விதைக்குரிய தினையையே ஆக்கி உணவிட்டாள் ஒருத்தி எனதும், நள்ளி என்ற வள்ளல் தான் வேட்டையாடிய மானைப் பதப்படுத்திக் காட்டிடைக் கண்ட இரவலரை உண்பித்தும் தன்னிடம் அப்போதிருந்த முத்து மாலை, கடகம் என்ற அணிகலன்கள் யாவற்றையும் அவருக்கு வழங்கியும் தன்னுடைய ஊர் பேர்களையும் அவருக்குத் தெருவியாது சென்றான் 2என்பதும் புறநானூற்றிற் காணப்படும் உதாரணங்களாகும்.
பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு முக்கியமான அமிசம் ஒற்றுமையான குடும்பமாகும். இயற்கை நெறிக்காலத்தில் களவொழுக்கம் மலிந்திருந்தது. களவொழுக்கத்துக்கு தடைகள் பல ஏற்றபட்டன. வரைவு நிகழ்ந்து இல்லறம் தொடங்கிய பின்னரும் தலைவனைப்பிரிந்து செல்லவேண்டிய நிமித்தங்கள் தோன்றின. பரத்தையிற்பிரிவும் இடம்பெற்றது. சோதனைகள் நிறைந்திருந்த காலத்தில் உண்மைக்காதல் பிரகாசிப்பதற்கான சூழ்நிலை தோன்றியது காதலின் ஆழத்தை வற்புறுத்தி கூறும் போக்கும் காணப்படுகிறது. மனைவியே மனைக்கு விளக்கம் ஆனால் 3 எனவும் சூரியன் இருக்கும் திசை நோக்கித் திருப்பிநிற்கும் நெஞ்சுப் பூப்போல கணவன் விருப்பத்தை நோக்கி அதற்கு இசையும் நெறிமுறை பூண்டு மனைவி நின்றாள் 4எனவும் கூறப்படுகின்றன. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பிரிய நேரிட்டு ஒரு சிறு இடைவேளை குறுக்கிட்டாலும் பல ஆண்டுகள் கழிந்தது போன்ற துன்பந்தருவதால் இறக்கும்போது அவ்விருவர் உயிர்களும் ஒருங்கே பிரிந்து திரும்பவும் பிறக்கும்போது அவ்வுயிர்கள் ஒருங்கே பிறக்கவேண்டும்5 எனவும் இப்பிறப்பிறபோல இனிவரும் பிறப்புக்களிலும் தன் கணவனையே தன் நாயகனாகவும் தானே அவன் காதல் மனைவியாகவும் பிறக்க வேண்டும் எனவும் தலைவி வேண்டிக்கொண்டாள் எனப்படுகிறது. அன்பின் மனைவியைப் பிரிய முடியாமற் பிரிந்து சென்று வினை முடித்து மீண்ட கணவன் கண்களில் அவள் அசைந்து கொண்டிருப்பதனாலேயே, காட்டுவழியிலே மயில் ஆடும்போதும் முல்லை மணக்கும் போதும் மான் மருளும் போதும் அவை மனைவியின் சாயல், அவள் கூந்தலில் நறுமணம், மருண்ட நோக்கம் என்பவற்றை அவனுக்கு நினைவூட்டியதாகக் கூறப்படுகிறது. 1கணவனுக்கு அறுசுவையுண்டி அமர்ந்து இல்லவள் ஊட்டச் செய்யும் சமயற்கலைப் பணியில் திறத்தினையும் கணவன் அவ்வுண்டியை இனிது என்று அன்போடு பாராட்டி மகிழ்ந்துண்டலையும் அதுகண்டு அகமும் முகமும் குளிரும் மனைவியின் மகிழ்வினையும் குறிப்பிட்டு, அவ்விருவரினதும் அன்பு கனிந்த குடும்ப வாழ்கை விதந்து கூறப்பட்டுள்ளது2. இல்லற வாழ்வு பற்றியும் அவ்வில்லற வாழ்வு பற்றியும் அவ்வில்லற வாழ்வுக்கு ஏதுவான அன்புப் பிணைப்புப் பற்றியும் கருத்து முரண்பாடுகள் பிற்கால இலக்கியங்களிலே தோன்றுகின்றன.
இல்லற வாழ்வு குழந்தையுடனேயே பூரணத்துவம் பெறுகின்றது. குழந்தைச் செல்வம் இல்லற வாழ்வின் முக்கியம் நோக்கங்களில் ஒன்றாகவும் முக்கிய பயன்களில் ஒன்றாகவும் அமைகிறது. பாணன் முல்லைப் பண்ணைப்பாடக் கணவன் அன்பு மேலீட்டால் மகனை மார்போடணைத்துக் கொள்ள மனைவி அன்பும் காதலும் மிக, அவ்விருவரையும் ஒருங்கு அணைத்து மூவரும் மகிழும் வாழ்கை கூறப்படுகிறது.3கணவன் அன்பு மேலீட்டால் மகனை மார்போடணைத்துக் கொள்ள, மனைவி அன்பும் காதலும் மிக, அவ்விருவரையும் ஒருங்கு அணைத்து மூவரும் மகிழுஞ்செய்தி காணப்படுகிறது4.மகப்பேற்றினால் குடும்ப வாழ்க்கை சிறப்புறுவதைப் பற்றி பாண்டியன் இறிவுடைநம்பி பாடிய செய்யுளின்5 பொருளாவது:“குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, உண்டி படைத்த காலத்திலே கிடந்ததைத் தரையிலேயிட்டும், பிசைந்து தோண்டியெடுத்தும் வாயாற் கவ்வியும் கையால் துழாவியும் சோற்றை உடம்பிலே படச்சிதறியும், அறிவை இன்னபத்தால் மயக்கும் மக்களைப் பெற்றவர், பலருக்குப் பகிர்ந்து ஈந்து மற்றும் பலரோடிருந்துண்ணும் மகிழ்ச்சிப் பெருஞ்செல்வராயிருப்பினும் அவர் குடும்ப வாழ்வு தந்த இந்த இல்லற இன்பம் சிற்றின்பம் எனக் கூறுங்காலம் பிற்காலத்து வந்தது.
இயற்கை நெறிக்காலத்தை அளவிறந்து சிறப்பித்துக் கூறும் பண்பு இன்று கூறப்படுகிறது. அதற்குப் பல காரணங்கள் கூறலாம் திராவிட இன மக்களுக்குள்ளே மிகப்பழைய இலக்கியச் செல்வம் உடையோர் தமிழரே. தமிழரின் மிகப்பழைய இலக்கியம் சங்க இலக்கியமே. சங்க கால வாழ்கை பற்றி ஆராய்வதற்கு விரிவாகவும் தெளிவாகவும் உதவக்கூடிய சாசனம் முதலிய வேறு சான்றுகள் கிடைக்கவில்லை. சங்ககாலத்திற்கு பின்பு தோன்றிய இலக்கியங்களில் வடமொழிச் செல்வாக்கு நிறைய உண்டு. எனவே, இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையுடையதாகவும் ஆரியக்கலப்பு பெரும்பாலும் இடம் பெற்றதாகவும் உள்ள திராவிட நாகரிகம் சங்ககால இலக்கியத்திலிருந்தே அறியப்படுகிறது. தமிழபிமானம் மிக்கவருள் ஒரு சாரார் மிகப் பழைய காலத்திலேயே தமிழர் சீரும் சிறப்பும் உடையவாக வாழ்ந்தனரென்று நிலைநாட்டும் நோக்கத்தை முன்வைத்து, அதற்கு ஏற்ற சான்றுகளைத் சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுகின்றனர். ’வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற குரலைத் தமிழகத்தில் எழுப்புபவர்கள். புறநூற்றில் வடமொழி, வடஇந்திய நாகரிகம் என்பவற்றின் செல்வாக்கு குறைவாக இருத்தலை அவதானித்து, ஆசிரியரின் சூழ்ச்சியிலே தென்னவர் அகப்படுமுன்பு சீருஞ்சிறப்பும்முடையவராக தென்னவர் வாழ்ந்தாரென்று காட்ட சங்கநூல்களிலுள்ள செய்யுட்கள் சிலவற்றைக் தயைகொள்கின்றனர். சங்க காலசெய்யுட்களை அடிப்டையாகக் கொண்டு அக்கால மக்கள் வாழ்கையையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் சித்தரித்துக்காட்டும் நூல்கள் பல இன்று தோன்றியுள்ளன. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அக்கால மக்களின் வாழ்க்கை அக்காலத்திலே தனிக்கவர்ச்சியுடையதாகக் காணப்படுகிறது. இயற்கை நெறிக்காலத்தில் காதலும் வீரமும் சிறப்பிடம் பெற்றமைபோல வேறெக்காலத்திலும் தமிழ்நாட்டு வரலாற்றிலே, அவை சிறப்பிடம் பெறவில்லை பொதுவாக நோக்கின் அக்கால மக்கள் தமக்கு இன்பமும் புகந்தரவல்ல பொருட்களையும் செயல்களையுமே நாடினர். இயல்பான உணர்ச்சிகளை எடுத்துக்கூறும் செய்யுட்கள், கேட்போர் உள்ளத்தை பற்றிக் பிடிக்கும் தன்மை கொண்டவை. காலங்கள் மாற்றமுற்றுச் செல்ல, அவ்வக் காலத்திற்கு சிறப்பாக உரிய கருத்துக்கள் மாற்றமுற்றுச் செல்லினும், மனித மனதில் இயல்பாக எழும் உணர்ச்சிகள் மாறுவதில்லை. இன்றைய நிய வாழ்கையில் இயல்பாக எழும் உணர்ச்சிகளைத் திருப்திப் படுத்தி வாழமுடியாதபோது, தமது வாழ்கை புறநானூற்றுக்கால வாழ்கை போல அமைந்தால் என்ன என்னும் எண்ணம் சாதாரணமாக மக்களிடையே தோன்றுகின்றது. புற நானூற்றுக் கால வாழ்க்கைபோல அமைந்தால் என்ன என்னும் எண்ணம் சாதாரணமாக மக்களிடையே தோன்றுகிறது. புறநானூற்றுகாலம் தோன்றிய காலம் ஒரு வீரயுகம். பல நூற்றாண்டுகளாக அடிமை வாழ்வு வாழ்ந்துவிட்ட தமிழகம் பழைய வீரயுகத்து செய்யுட்களால் கவரப்படுதல் இயற்கையல்லவா? இன்றைய மேநாட்டுப்பண்பாட்டிலும் இவ்வுலகியல் இன்பம் பெறமுயலுதலே சிறப்பிடம் பெறுவதால் மேனாட்டுப் பண்பாட்டின் செல்வாக்கினாலும் இயற்கை நெறிக்கால செய்யுட்கள் இன்று போற்றப் படுகின்றன எனலாம்.
இயற்கை நெறிக்காலத்தின் சிறப்புப் பல காரணங்களிலாலும் இன்று எடுத்துக்கூறப்படுகிறது. அக்காலம் ஒரு பொற்காலம் என்று கருதும் மனப்பான்மை உருவாயிருக்கிறது. அக்காலத்தைப் பொற்காலம் எனக் கொள்ள வேண்டியதில்லை. நாடுகள் சிலவற்றின் வரலாற்றில், அவ்நாட்டு மக்கள் பல துறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்த காலப்பகுதிகளைப் பொற்காலம் என வழங்கும் மரபு வரலாற்றாசிரியர்களிடையே ஒரு காலத்தில் பிரபலமாயிருந்தது. இன்று எழுதப்படும் வரலாற்று நூல்களில் இத் தொடர் வழங்குவது குறைவு. ஒரு சமூகம் ஒரு காலத்திலே பல்வேறு துறைகளிலே சாதித்தவைகளைக் கொண்டு மட்டும் அக்காலம் பொற்காலம் என்று முடிவு கட்டிவிடமுடியாது. வாழ்கையை முழுமையாக நோக்காமல், வாழ்கையிலே ஏற்பட்ட சாதனைகளை மட்டும் நோக்கியதாலேயே, எக்காலத்தையாவது பொற்காலம் என்று வருணிக்கும் இயல்பு தோன்றியது. வாழ்கையை அல்லது வாழ்கையின் ஒருபகுதியைத் தியாகம் செய்தால் சாதனை என்பது ஏற்படுகிறது. அத் தியாகத்தின் பயனாகவே சாதனை நிகழ்கிறது என்பதை உணரும்போது பொற்காலம் என்ற வருணனையின் ஒளி மங்குவதைக் காணலாம்.
மேலும் புற நூற்றுக்கால அரசியல் நிலையும் அமையவில்லை. சங்ககால அரசியல் நிலைபற்றிப் புறநாநூற்றிற் காணப்படும் கருத்துக்களே அக்காலத்குரிய பிறநூற்களில் காணப்படுகின்றன. புறநானூற்று செய்யுளுட் பெரும்பாலான, அக்கால வள்ளல்களைப் பாடிய செய்யுட்களே. அச் செய்யுட்கள் சம்பவ நிகழ்ச்சியோடு ஒட்டியமைந்து மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்த போதிலும், இலக்கியம் வரலாறு அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது. இலக்கியம் ஒருநிகழ்ச்சியை அழகுபடுத்திக்கூறுவது; வரலாறு நிகழ்ச்சியை உள்ளவாறே எடுத்துக் கூறுவது. எனவே, புலவன் கூறும் பொருள் என்ன என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும் இவ்வாறு நோக்கும்போது அக்கால தமிழ் நாட்டு அரசியல் நிலையிற் காணப்பட்ட ’உள்நாட்டுப் போர்கள்’ என்ற குறைபாடு புலப்படும்.
சங்ககலாத் தமிழ் நாட்டில் மன்னர் பலர் இருந்து பல போர்களில் ஈடுபட்டனர். சங்ககாலத்திய வள்ளல்களுட் பெரும்பாலானோர் மன்னராக இருந்தனர். அக்காலத் தமிழகத்திலே சேர, சோழ, பாண்டி மன்னர் குலங்கள் மேம்பட்டிருந்தன. சேர சோழ குலங்களில், ஒரே காலத்திற் பல வேறு மன்னர் பல்வேறு பகுதிகளிலிருந்தாண்டனர். வெவ்வேறு பகுதிகளிருந்தாண்ட சோழ குலத்து மன்னர். இடையிடையே ஒருவரோடொருவர் பகைத்துப் பொருதினர். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்து அரசு புரிந்தனர். இவர்களுட் பலர், முடிவேந்தருக்குப் பணிந்து வாழ்ந்தனர் எனக் கருதுவதற்குப் புறநூற்றுச் செய்யுட்கள் இடமளிக்கவில்லை. மன்னர் பலர் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டமையால் புற நூற்றுக்கால தமிழகத்தை ஆண்டவர்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்களெனலாம். புறநாநூற்றுச் செய்யுட்களுட் பெரும்பாலான போரைப் பற்றிய செய்ட்களைக் கூறுவன. சிறு சிறு நிலப்பரப்புக்களை ஆண்ட மன்னர்களுக்கு உலகம் முழுவதிலும் தம் ஆணையைச் செலுத்த வேண்டும் என்ற ஆசை மட்டும் மிதமிஞ்சி இருக்கிறது. அதனாலேயே, அக்காலத் தமிழகமெங்கும் போர்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. வென்று மேம்படும் ஆசையால் உந்தப்பட்டு மன்னர் மோத, அவராட்சியில் அடங்கிய மக்களும் மோதினர். புறநானூற்றுக் காலத்திற் புகழும் பெருமையும் வீரத்தின் வழிவந்தன. ’வெற்றி அல்லது வீர மரணம்’ என்ற நிலைக்கு ஒரு தனிக்கவர்ச்சி இருந்ததாகத் தெரிகிறது. மன்னர் தலைமையில் ஒன்று கூடி ஒற்றுமையாக நின்று போராடுவதிலும் மன்னனுக்குத் தம் சேவை தேவையென்றுணர்வதிலும் புறநானூற்றுக்கால மக்கள் மகிழ்ந்தனர். தம்முடைய நாட்டை ஆபத்துச் சூழ்ந்துள்ள நிலையிலே தமது தனிப்பட்ட துன்பங்களையும் கோபதாபங்களையும் மறந்து, நாட்டின் நன்மை கருதி ஒன்றுபட்டு உழைக்க ஏற்பட்ட சந்தர்ப்பம், போரால் ஏற்படுகிற நன்மைகளுள் ஒன்று. தம்முடைய மனதிலிருந்த தீய இயல்புகள் யாவும் பொருந்தியவராக எதிரிகளைப் பாவித்து அவரை அழிக்க முயலும்போது, வீரருக்கு சுய திருப்தியும் தம்மவர் மேல் பற்று ஏற்படுகின்றன1. எனவே மன்னருக்கிடையில் ஏற்பட்ட போரில் மக்களும் முழுமனத்தோடு ஈடுபட்டனர்.
போரால் நாடு அடைந்த சீர் கேட்டை வெளிப்படையாகக் கூறும் செய்யுட்கள் சில; மறைமுகமாகச் சுட்டுவன வேறுசில. ’பகைவருடைய நாட்டைச் சுடும் நெருப்பினால் உன்னுடைய தலைமாலை வாடுவதாக’ என்று மன்னன் வாழ்த்தப்பட்டான்2. பகைவர் ஊரைத் தீயிலிட்டு அவ்வெளிச்சத்தில், ஊர்மக்கள் அழுது ஓலமிடக் கொள்ளையடித்துப் பகைவர் நாட்டைச் சிதைத்தான் மன்னன்1. யமன் உயிர்களைக் கவர்வது போல, பகைவரை அழித்தவன் நெடுஞ்செழியன்2. பகைவருடைய அரணை முற்றுகைளிட்டு நீரில்லாமல் மக்கள் வாடவும் பாலில்லாமல் குழந்தையலறவும் கொடுமை செய்யப்பட்டது3. போர்க்களம் நடைபெற்றபோது, பகைவர் ஊர்களுக்கு தீவைக்கப்பட்டது; கொள்ளையிடத்தக்க செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன; எடுத்துச்செல்லமுடியாத பொருட்கள் அழிக்கப்ட்டன; அல்லது வெழியில் வீசப்பட்டன4. தோற்ற பகைவர் அவமானப்படுத்தப்பட்டதைப் பல செய்யுட்கள் எடுத்து மொழிக்கின்றன. பகைவருடைய அரணகத்தேயுள்ள தெருக்களிலே கழுதையை ஏர்பூட்டி உழுது பாழ்படுத்திய பெருமை, பகைவருடைய நீர் நிலைகளில் யானையை விட்டு அவற்றைச் சிதைத்த வீரம், விளைந்த பயிர்களைக் குதிரையை பூட்டி தேரால் உழக்கிக் கெடுத்த சிறப்பு என்பன போற்றப்பட்டது5. புறநூற்றுப் பாடல் ஒன்று வருணிக்கும் களவேள்வி குரூரமானதாகக் காணப்படுகிறது. வெட்டப்பட்ட பகைவர் தலைகளையே அடுப்பாகக் கொண்டு உதிரமே உலைநீராகத் தசை, மூளை முதலாயினவற்றை இட்டுத் தோழ்களைத் தடுப்பாகக் கொண்டு துழாவி அடப்பட்ட உணவால் அடுக்களத்தின் கண்ணே பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அத்தகைய வேள்வியைச் செய்தான். போர் நிகழுங்காலத்தில் அப்போரின் பங்குபற்று வோரின் உணர்ச்சி மரத்துவிடுகிறது என்ற உண்மைக்குச் சங்க காலம் விதிவிலக்கல்ல என்பது தெரிகிறது.
போரால் ஏற்பட்ட அழிவுகளை எடுத்துக் கூறும் புற நானூற்றுச் செய்யுட்கள் இன்னும் பல. புறநானூற்றிற் காணப்படும் போர்களுட் பெரும்பாலன, தமிழ் மன்னர்களிடையே நடைபெற்றவை. கொலையயையும் கொள்ளையையும் உள்ளடக்கியதே போர். போரிற் கொலையையும் கொள்ளையையும் நிறையச்செய்பவனே வீரன் எனப் போற்றபபடக்கூடிய சூழ்நிலை நிலவியது. மன்னராற் போற்றிப் பரிசில் வழங்கப்பட்ட வீரரும் நடு கல்லமைத்து வணங்கப்பட்ட வீரரும் இத்தகையோரே. பிறரெல்லாம் தமக்கு அடிபணிய வேண்டும் என்ற அவாவால் உந்தப் பெற்று அக்கால மன்னர், தழிழ் வாலிபர்களைப் பலியிட்ட கதையே புறநானூற்றிற் பெரும்பான்மையாகக் கூறப்படுகின்றது. வெற்றி தோல்வி எவரையடைந்த போதிலும் இருகட்சியிலும் சிந்தியது தமிழ் இரத்தமே. போர் என்றால் கொலையும் கொள்ளையும் ஒரு புறம், கண்ணீரும் இரத்தமும் மறுபுறம். பகைவருந்தமிழரே என்ற ஈவு இரக்கங்காட்டி நடந்ததர்குப் புறநானூற்றிற் சான்றியது. தமிழரின் ஒரு சாரார் இரத்தஞ் சிந்த, மற்றொரரு சாரார் வெற்றி விழாக்கொண்டாடினர். போர்களங்களில் வீரர் கொல்லப்பட்டு இறந்து கிடப்பதைப் பாடும் செய்யுட்கள் பல. போர் வெறி காரணமாக, மன்னரும் படைவீரரும் மாள, அவருடைய பெண்டிர் அக்களத்தே சென்று மாண்ட கணவரைத் தழுவித் தம்முயிர் நீக்கந் தலைப் புறநானூற்றிச் செய்யுளொன்று குறித்துள்ளது.1 மன்னரும் படை வீரரும் மாண்டு கிடப்பதனால், நாட்டின் கதி என்னவாகுமோ என்று அங்கலாய்க்கிறது அத்த செய்யுள்2 இயற்கை நெறிக்காலத்திலேயே கணவனை இழந்த பெண்கள் கைம்மை நோன்பு நோற்றுத் தன்மைத் துன்புறுத்தியவாற்றைப் புறநானூற்றுச் செய்யுகள் தெளிவாகக் குறிக்கின்றன. கணவனையிழந்த பெண்டிர் அறிவு மயங்கி, அழுகை மிக்குக் கூந்தலைக் கொய்து கைம்மை நோன்பு தொடங்கினர் 3 வீர வாலிபர்களைப் பெருந்தொகையாகப் பலிகொடுக்கும் சமுதாயம் அப்பலியால் இளம் பெண்களைப் பெருந்தொகையாலகப் பலிகொடுக்கும் சமுதாயம் அப்பலியால் இளம் பெண்களைப் பெருந்தொகையாகக் கைம்மை நோன்பிற் புகச் செய்தல் இயல்பாகும். அத்தகைய சமுதாயத்திலுள்ள மக்கள் தம் வாழ்க்கையில் சலிப்படைதல் உண்டு. வாலிபர்களும் இளம் பெண்களும் சமுதாயத்தில் முதியோரையும், குழந்தைகளையும் காப்பாற்றிச் சமுதாய ஒழுங்கை நிலை நாட்டவேண்டியவர்கள். அவர்கள், போரின் காரணமாக அழிவுப் பாதையிற் செல்வது தெரிவருகிறது.
போரால் சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய கேடுகள் பற்றி அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் நன்கு உணர்ந்திருக்கவில்லை என்பது புறநானூற்றுக்கால வீரர்கள் கூற்றுக்கள் சில வற்றினாலும் வீரத்தாய்மார்கள் கூற்றுக்கள் சிலவற்றினாலும் புலப்படுகிறது. சமுதாயம் இடம் கொடுத்திராவிட்டால், மன்னர் போர் செய்தலையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்க முடியாது. ஆனால் மன்னர் ஏவியதினாலேயே போர்கள் பெரும்பாலும் நடைபெற்றன. போரால் ஏற்படும் அழிவு, அதனால் ஏற்படும் நன்மையிலும் அதிகம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. போர் ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, பயனுள்ளதாகத் தெரிவதாற்றான், அது என்னும் உலக வாழ்க்கையிலிருந்து அற்றுப் போகவில்லை. ஆனால் போர் நடக்கும் காலத்திலும் போர்முடிந்த அண்மைக்காலத்திலும் மக்கள் மனம் அமைதியை நாடுகிறது. போரால் ஏற்படும் அழிவு உலகிற் போரேற்படுவதையே இல்லாமற் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கின்றது.
புற நானூற்றுக் காலப் புலவர் வாழ்க்கை நிலையை அறிந்து கொள்வது அக்கால செய்யுட்களிற் பாடப்பட்டபொருளை உணர்ந்து கொள்ள உதவும். பரிசில் பெறுவதை முக்கிய நோக்கமாகக் கொண்ட புலவர்கள் வள்ளல்களைப் பற்றி முகமனாகப் பலவாறு புகழ்ந்து பாடினவே புறநானூற்றுச் செய்யுட்களுட் பெரும்பாலன. புலவர்கள் வள்ளல்களைப் பற்றி முகமனாகப் பலவாறு புகழ்ந்து பாடினவே புறநானூற்றுச் செய்யுட்களுட் பெரும்பாலன. புலவர்கள் வள்ளல்களை முன்னிறுத்தி விளித்துப் புகழ்ந்து பரிசில் கொடுக்கும்படி வேண்டியவனவாக அமைந்தன சில செய்யுட்கள். விதி விலக்குப் போல அமைந்த செய்யுட்களிட் சில புலவர்கள் பரிசில் பெறும் நோக்கத்தை மறைமுகமாக வைத்துப் பாடியனவே என்பது புறநானூற்றுப் பழைய உரையிலிருந்து உய்த்துணர முடிகிறது. மிகச் சில செய்யுடகளில் மன்னர் இழித்துப் பாடப்பட்டனர். பரிசில் வழங்காது காலத் தாழ்த்திய மன்னர் குறை கூறப்பட்டனர்1 பாரியினுடைய மகளிரை ஏற்க மறுத்த குறுநில மன்னனை இருங்கோவேயைக் கபிலர் கண்டித்தார் 2 . முடியுடை மூவேந்தராயிருந்தாலும் அன்னார் பரிசிலராகிய தம்மை நன்கு மதித்து வரவேற்று உபசரித்துத் தம் புலமையைப் பாரட்டி தம் தகுதியளவினை அறிந்து அதற்குத் தக ஈயாமல் அத்தன்மைக்கு மாறுபட ஒழுகுவரேல், அக் கொடைப் பொருளைத் தாம் பெற மறுப்பர் புலவர்.1மன்னர் பலர் அக்காலத்திலிருந்தமையால், புலவர் அம் மன்னர் சிலரை இழித்துக்கூறி, வேறு சிலருடைய ஆதரவுடன் வாழக் கூடியதான சூழ் நிலை அமைந்திருந்தது.
புறநானூற்றுச் செய்யுட்களுள் ஒருசில பரிசில் பெறும் நோக்கத்தோடுபாடப்பட்டன என்பது சிலர் கருத்து. வெளிப்டையாகப் பரிசில் வேண்டி நிற்கும் செய்யுட்கள் – பரிசில் கடாநிலை முதலிய துறைகளாற் குறிக்கப்படும் செய்யுட்கள் எழுந்த நோக்கத்தைப் பற்றி கருத்துவேற்றுமை ஏற்பட இடமில்லை. கொடையால் வரும் சிறப்பை எடுத்தக்கூறும் செய்யுட்கள்2, பரிசில் பெறும் நோக்கத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றன எனலாம். மன்னர்களின் வீரத்தை எடுத்துக்கூறிய செய்யுட்களில், அவர்களின் கொடைச்சிறப்பு, நாட்டுவளம் பற்றிய குறிப்புக்கள் இடையிடையே வந்தன.3இத்தகைய செய்யுட்களில் கொடையை வற்புறுத்த மன்னரைப் புகழ்தல் கருவியாகக் கொள்ளப் பட்டதெனலாம். புற நானூற்றுப்புலவர் மன்னருக்கு அறிவுரை கூறுவனவக அமைந்த செய்யுட்களிற் சிலவும்4 மன்னர் மனதை மகிழ்வித்துக் கொடையைத் தூண்டுவதை நோக்கமாக உடையன எனலாம். செய்யுட்கள் இயற்றிய சங்க காலப்புலவர்களுள் முடிவேந்தரும் குறுநில மன்னரும் இடம் பெற்றனர். கூலவாணிகன் சாத்தனார், அறுவை வணிகன் இளவேட்டனார், மதுரைப் பெருங்கொல்லனார் முதலிய அக்காலப் புலவர் பெயர்கள், புலவர் சிலர் செல்வராக வாழ்ந்திருக்கவேண்டும் என்பதற்குச் சான்றுகள். இவர்கள் பொருளைப் பெறுவதற்காகப் பாடியிருக்கமுடியாது. ஆனால், கொடையை எதிர்பாத்துப் பாடும் மரபு அக்காலத்தில் இருந்திருக்கலாம் அந்த மரபில் கொடையை எதிர்பாராதவரும் பாடியிருக்கலாம்.
சங்ககாலத்துச் சான்றோர் கொடையை எதிர்பாத்துப் பாடினர் என்பது பொருந்தாது என்று ஆட்சேபிக்கலாம். புறநானூற்றுக் காலப் புலவர்கள் பலரின் வாழ்கை நிலையை உணர்ந்து கொண்டால், இந்த ஆட்சேபத்துக்குச் சமாதானம் கிடைத்துவிடும். புறநானூற்றிலும் பத்துப்பாட்டிலும் உள்ள ஆற்றுப்படைகளிலும் வேறு செய்யுட்கள் சிலவற்றிலும் அக்காலப்புலவர் பெரும்பாலோர் நிலை நன்றாகப் புலப்படுத்தப்படுகிறது. வறுமையால் வாடித்தவித்த கலைஞர் நிலை, இச்செய்யுட்களிலிருந்து புலனாகிறது. உண்ண உணவும், உடுக்க உடையும், தங்கிவாழ இடமுமின்றித் தவித்த அக்காலக் கவிஞர் நிலை, இச்செய்யுட்களிலிருந்து புலனாகிறது உண்ண உணவும் உடுக் உடையும், தங்கிவாழ இடமுமின்றி தவித்த அக்கால கவிஞர்களிற் பலர் பழுமரத்தேடிச்செல்லும் பறவை போல வள்ளல் வாழுமிடம் நாடிச்சென்றனர். புலவர் தம்மால் இயன்றபடியெல்லாம் அவனைப்பாட, அவன் பரிசில் வழங்கினான். தாம் பெற்றதை ஓம்பாது உண்டு கூம்பாது வீசினார் புலவர். பெரும் பரிசில்பெற்ற புலவர்கள் தாமே வள்ளலாக மாறினர். அதன் பயனாகப் புலவரைத் திரும்பவும் வறுமை பீடித்தது. எனவே, திரும்பவும் வள்ளலை நாடிச்சென்று பரிசில் பெறவேண்டிய நிலை புலவர்களுக்கு ஏற்பட்டது. ஆற்றுப் படைகளிற் கலைஞரை ’இரவல்’ என்றே பெரும்பாலும் விளிக்கின்றனர். மன்னரைப் புகழ்ந்து பாடி அவர் தயவில் வாழ வேண்டிய நிலையிலிரந்த புலவர் இயற்றிய செய்யுட்களினை நுணுகி ஆராய்ந்தாலே அக்கால அரசியல் நிலை புலப்படும். மன்னருக்கும் புலவருக்கிமிடையிலான தொடர்புக்குப் புலவருடைய பொருளாதார நிலை ஒன்றே காரணம் என நிறுவ முடியாது. வேறுசில காரணங்களும் காட்டலாம். பூர்வீகச் சமுதாயங்களிற் புலவர்களே அறிஞர்களாகவும் விளங்குவதால் அவர்களுக்கும் அவர்கள் வாக்குக்கும் மன்னர்களிடையிலும் மக்களிடையிலும் செல்வாக்குக் காணப்படுவதுண்டு சங்ககாலப் புலவர்களை மன்னரும் மக்களும் மதித்ததற்கு இதுவும் ஒரு காரணமாகலாம். செயற்கரிய செய்த மன்னர் சிலரை புலவர் சிலர் பாடியிருப்பர். புகழை விரும்பிய மன்னர் அப்புலவரை ஆதரித்திருப்பர். இவ்வகையிலும் மன்னர் புலவர் தொடர்பு ஏற்பட்டிருக்கும்.
சங்க இலக்கியத்தில் வட இந்தியச் செல்வாக்கு மிகச் சிறிய அளவிலேயே இடம்பெறுகிறது. அச்செல்வாக்கைச் சுட்டுகிற சங்கப்பாடல்கள் பிற்காலத்தனவாகலாம் என்பர் சிலர். வடநாட்டுப் பண்பாட்டோடு தொடர்புறாத சங்ககாலக் கருத்துக்கள் தமிழருக்கே உரியனவாகவும் தொன்மை உடையனவாகவும் இருந்திருக்கலாம். ஆனால், புற நானூற்றுட் காணப்படும் பாடல்களை, ஆரிய செல்வாக்கு என்ற ஒரு அயவுகோலை மட்டும் வைத்துக் கொண்டு, முற்காலத்தன, பிற்காலத்தன எனப்பிரித்துவிட முடியாது. சங்க இலக்கியங்கள் தொகை நூல்கள் ஆகவும் அவை பல்வேறு சந்தர்ப்பங்களிற் பலர் பாடிய பாடல்களின் தொகுதியாகவும் இருப்பதினால், அப்பாடல்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்ட நீண்ட காலத்துக்குரியன எனவும் அந்நீண்ட காலத்தில் ஒருபகுதி ஆரியர் தமிழ்நாட்டுக்கு வந்ததற்கு முந்தியதாகவும் ஒரு பகுதி பிந்தியதாகவும் இருக்கின்றன எனவும் வாதிக்கலாம். ஆனால் இன்றைய ஆராட்சியாளர் கிறிஸ்தவ ஆண்டுக்கு முன் பின்னாக உள்ள இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளையே சங்ககாலம் என்பர். ஆரியர் அதற்கு முன்பே தமிழ் நாட்டுக்கு வந்து விட்டனர். புறநானூற்றுட் காணப்படும் வடமொழிச் சொற்கள், வைதிக சமயக் கடவுளர் பற்றிய செய்திகள், வேள்வி அறம் பற்றிய குறிப்புக்கள் என்னவற்றை நோக்கும் போது, புற நானூற்றுக் காலத்திலேயே ஆரியர் செல்வாக்கு தமிழ்நாட்டிற் குறிப்பிடத்தக்க அளவு இருந்தமை தெரிகிறது. குறிப்பிடத்தக்க அளவு என்று குறிப்பிடும்போது, ஆரியர் பண்பாட்டுக்குரிய கருத்துக்கள் சில, தமிழ்நாட்டில் அக்காலத்தில், அறியப்பட்டிருந்தன என்ற பொருளில் அச் சொற்தொடர் வழங்குகின்றது புறநானூற்றை முழுவதாக நோக்கம்போது அரசர் சிலர் பிராமணரையும் வைதிக சமயத்தையும் ஆதரித்தது, அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள் மக்ககிடையே பேசப்பட்டதும், ஆரிய மொழிச்சொற்கள், கதைகள் ,கருத்துக்கள் சில, மக்களிடையே வழங்கியதும் தெரியவருகின்றன.
வட இந்தியச் சமயங்கள் யாவும் பொதுவாக நிலைமையை எடுத்துக் கூறுவனவாயினும் சமணத்திலும் பௌத்ததிலும் அந்நிலையாமை சிறப்பிடம் பெறுகிறதெனலாம். சங்ககாலத்துப் பொதுவான வாழ்க்கைப் போக்கோடு நிலையாமையை உடன் வைத்து நோக்கும் போது, நிலையாமை அவ்வாழ்க்கைப் போக்கின் ஒரு அம்சமாக அமைந்திருத்தல் தெளிவாகத் தெரிகிறது. நிலையாமை பற்றிய வெவ்வேறு விளக்கங்கள் தமிழ் நாட்டுக்கு வெளியிலிருந்து வந்திருக்கலாம். ஆனால், புறநானூறு முதலிய சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்திலேயே, நிலையாமை தமிழகத்தில் இடம் பெறத் தொடங்கிவிட்டது. தமிழ் மக்கள் சிலரின் சிந்தனையிலாவது நிலையாமைக் கருத்து இடம் பெறத் தொடங்கிவிட்டது என்பது தெளிவாகிறது. நிலையாமை வற்புத்திய இந்தியச் சமயங்கள் நிலையில்லாத வாழ்க்கையிலிருந்து உலகிலிருந்தும் விடுபடுவதே வாழ்கையின் இலட்சியம் எனப் போதித்தன நிலையாமை கருத்தை ஓரளவு வற்புறுத்திய வைதிக சமத்தினர் வேள்வி முதலியன செய்வதால் நிலையில்லாத வாழ்விலும் நிலைப்பேற்றை அடையலாம் என்ற கொள்கையுடையவராயிருந்தனர். நிலையாமைப் பெரிய அளவில் வற்புறுத்திய சமணரும் பௌத்தரும் அறத்தைப் போதித்து அதிலும் சிறப்பாகத் துறவறத்தைப் பிரசாரஞ் செய்துள்ளனர்.
வட இந்தியச் சமயங்கள் தமிழ்நாட்டிற் புகுந்த போது, தமிழ் மக்கள் இயற்கை வாழ்வில் ஈடுபாடு மிக்கவராயிருந்தனர். அவர் இயற்கை வாழ்வில் ஆர்வம் குறைந்து ஆன்மீகத் துறையில் செல்வதாயின், அவருக்கு இவ்வுலக வாழ்விலுள்ள ஈடுபாடு குறைய வேண்டும். உலக வாழ்க்கையிலுள்ள பற்றைக் குறைப்பதற்கு நிலையாமைக் கருத்து உதவியது. பிராமணர் அக்காலமன்னரிடம் செல்வாக்குப் பெறத் தொடங்கினர். வேள்வி இயற்றக்கூடிய செல்வம் வாய்ந்த மன்னர் பிராமனரைக் கொண்டு வேள்வி செய்வித்தனர். நிலையாமை வட இந்தியருடைய கருத்தாகத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கலாம், என்று கருதுவதற்கு ஒரு முக்கிய சான்று இருக்கிறது புறநானூற்றுள் நிலையாமை வற்புறுத்திப் பாடிய புலவர்களுட் சிலர் சங்க வருணர், வான்மீகியார், கோதமனார் என வடமொழிப் பெயர்களுடையவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் தமிழ்ப்புலமை வாய்க்கப்பெற்ற வடநாட்டவராகவோ அல்லது வட நாட்டவரின் போதனைகளை ஏற்றுத் தம் பெயர்களையும் வட மொழிப் பெயர்களாக மாற்றிக் கொண்ட தமிழராவோ இருந்திருத்தல் வேண்டும். நிலையாமைக்கருத்து சங்ககால மக்கள் சிந்தனையிற் பலவாறு இடம் பெற்றது.
சங்க காலப் புலவர்கள் கொடையை வற்புறுத்துவதற்கு நிலையாமைக் கருத்தைக் கைக் கொண்டனர்1. மன்னனுடைய கொடையை உலகம் புகழ்ந்து கூற அவன் வாழ வேண்டும் என்று கூறினார் ஒரு புலவர்2. வளர் பிறையும் தேய் பிறையும் மாறி மாறி வருவது, வாழ்கை நிலையாமையை எடுத்துக் காட்டுவதால், வருத்தி வருபவருக்கு ஈயவேண்டும்; புலவராற் பாடப்படும் புகளுடையோரே விண்ணுலகம் செல்வர்3 என்பது புலவர் ஒருவர் கூற்று. நாடக மேடையிலே தோன்றிய பலரும் பலவாறு நடித்தபின் வேடத்தைக் களைவதுபோல, உலக வாழ்க்கையும் நிலையற்றதாதலால், மன்னரும் படைவீரரும் கொடையில் வல்லவராக வாழ வேண்டும்4. பொருளை அனுபவிக்கவேண்டும் என்று நினைத்து சேமித்து வைத்தால், அதனை அனுபவிக்க முடியாமலும் போகக் கூடுமாதலால், செல்வத்தின் பயன் கொடையே5 ஈமப் புறங்காட்டை விபரித்து வாழ்க்கை நிலையாமையை வற்புறுத்தி இரவலருக்குக் கொடை வழங்குவது மூலமாகப் பெருமையும் பயனும் பெறுமாறு செல்வரை அறிவுறுத்தின செய்யுட்கள் சில6.
சங்ககாலத்திற் சிறப்புற்றிருந்த உலகியல் வாழ்க்கையைத் தூண்டுவதற்கும் நிலையாமைக் கருத்துப் பயன்பட்டது. நிலையாமைக் கருத்தை எடுத்துக்கூறி, உலக வாழ்க்கையிற் பெறக்கூடிய இன்பங்களை இழந்துவிடக்கூடாது என வள்ளல்களுக்கு அறிவுரை வழங்கினர் புலவர் சிலர். உமார்க் கய்யாம் என்ற பாரசீகப் புலவரின் பாடல்களின் உட்கருத்து என்ன என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடு காணப்பட்ட போதிலும் நிலையாமையை வற்புறுத்தி உலகியல் இன்பங்களைத் துய்க்கும்படி கூறுவனவே அவை என்றும் கீழைத்தேசச் சிந்தனையில் ஒரு புரட்சியை உணர்த்துபவை அவை என்றும் அறிஞர் சிலர் கூறுவர். அது எவ்வாறினும் அத்தகைய சிந்தனைப்புரட்சி புறநானூற்றுப்பாடல்கள் சிலவற்றுட் காணப்படுகிறது1. நிலையாமையை எடுத்துக் கூறிப் பொருண் மொழிக் காஞ்சி என்ற துறையில் வழங்கும் செய்யுளின், புலவர் கூறிய அறிவுரைகளுள் ஒன்று.“மகளிர் மதுவை ஏந்தித்தர அருந்துவாயாக” என்பது2. நிலையாமையை வற்புறுத்திய வேறு செய்யுட்களும் இதே அறிவுரையை வழங்குகின்றன3.மகளிரோடு ஊடல்செய்து, அவர் தரும் மதுவை அருந்தி ஆட்டிறைச்சி முதலியன உண்டு வாழவேண்டும்4.ஈமப் புறங்காடு பற்றிக் கூறி நிலையாமையை வற்புறுத்திய செய்யுள், மது மாமிசம் என்பனவற்றை உண்டு வாழும்படி அறிவுரை கூறுகின்றது5.
புறநானூற்றுப் பாடல்கள் நிலையாமையையும் அறத்தையும் தொடர்புபடுத்திக் கூறியதையும் காணமுடிகிறது. அறத்தை வலியுறுத்திய பாடல்களுட் பல, அதனைப் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்களோடு சேர்த்து, மூன்று உறுதிப்பொருட்களாகக் குறிப்பிட்டதனைப் புறநானூற்றுட் காணலாம். துறவறம், தவம் என்ற கருத்துக்களும் புறநானூற்றுள் உண்டு. அற நூல்கள் காலத்தில் விரிந்துரைக்கப்படும் அறம், பொருள், இன்பம், தவம், துறவு என்ற கருத்துக்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன6. பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதார் என்பவற்றுக்குத் தீங்கு இழையாது அறவழிப்பட்ட போர் நடந்தது7. பிறருடைய குற்றங்களை ஏற்றபடி ஆராய்ந்து, குற்றங்களுக்கேற்ற தண்டனை வழங்க வேண்டும்8. பொருள், இன்பம் என்பவற்றின் முன் சிறப்புப் பற்றி அறம் வரிசைப்படுத்தப்பட்டது1. அரசின் வெற்றி நால்வகைப் படைகளிலே தங்கியிருக்கவில்லை; அறநெறியிலேயே தங்கியிருந்தது2. பசுவைக் கொலை செய்தல், பெண்கள் கருப்பத்தை அழித்தல், அந்தனரைக் கொலைசெய்தல் முதலிய பாதகங்களைச் செய்தோருக்கும் பிராயச் சித்தம் உண்டென்றும், செய்ந்நன்றி கொன்றவர்களுக்குப் பிராயச் சித்தமில்லையென்றும் அறநூல் கூறியது3. இவ்வுலகத்துச் செய்த நல்வினைப் பயன்களைத் தேவலோகத்தில் அனுபவிக்கச்சென்றான் ஒருவன்.4 தயங்காது நன்மை செய்தால், தேவலோகத்தவர் விருப்போடு விருந்தாக வரவேற்பர்5. நல்வினை செய்தால், தேவலோகத்துப்போகம் அல்லது வீட்டின்பம் அல்லது இவ்வுலத்துப் புகழ் கிடைக்கும்6. மரணம் தவிக்க முடியாதலால், துறவு பூணவேண்டும்.7 செய்யுட்கள் சில, நிலையாமையையும் அறத்தையும் பிணைத்துக்கூறிய முறை பதிணென் கீழ்க் கணக்கிலுள்ள அறநூல்கள் சில இவ்வாறு கூறுவதை நினைவூட்டுகின்றன8.
நிலையாமையும் வைதிக சமயமும் தொடர்புறுத்தப்பட்டுள்ளன. நிலையாமையை வற்புறுத்தி அதிலிருந்து ஈடேறும் வழியாகப் பிராமணரை ஆதரித்தலாகிய நல்வினை கூறப்பட்டது9. பிராமணருக்குத் தானம் செய்தாலும் வேறு சில நற்செய்கைகளாலும் வள்ளலொருவன் கூற்றத்துக்கே அஞ்சவில்லை10. புறச்சமயிகள் வேதத்துக்கும் வேதவழிபாட்டுக்கும் எதிராகக் கூறிய பொய்யுரைகளை ஏற்காது, உண்மையுணர்ந்து வேள்விகள் யாவும் செய்தனர், கௌணியன் விண்ணந்தாயனுடைய முன்னோர்11.கௌணிய கோத்திரப் பிராமணர் வைதிக சமயத்தைப் பரப்பும்பணியில் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, தென்கீழ் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் முன்னின்று உழைததிருக்கின்றனர்.12 சைவ சமயயக்குரவராகிய திருஞானசம்பந்தரும் இக்கோத்திரத்திலேயே தோன்றி தமிழ்நாட்டில் வைதிக நெறியை நிலைபெறச்செய்ய உதவினார். சோழமன்னன் ஒருவனது முன்னோர். எவரும் பார்ப்பார் வருந்துப்படியான எவற்றையும் செய்யவில்லை.1 அந்தனர், முத்தி, சிவன், திருமால், பலராமன். வேள்வி பற்றிய குறிப்புக்கள் புறநானூற்றுள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பாண்டின் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியும் சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியும் வைதிக சமயத்துக்குரிய வேள்விகள் செய்து அவற்றினாற் பெயர் பெற்ற புறநானூற்றுக்கால மன்னர்களாவர்.
தனியே நிலையாமையை மட்டும் எடுத்துக்கூறுவனவாக அமைந்த பாடல்களும் புறநானூற்றுள் உண்டு2 பேரரசர்காகத் தோன்றியவர்களெல்லாம் மறைந்து மறைந்து போகத்தான் மட்டும் தொடர்ந்து நிலைபெறுவதையிட்டுப் பூமி கவலைப்பட்டது.3 மணவிழா முரசு ஓரிடத்திற் கேட்க, அயல் வீட்டில் மரணம் நிகழ்ந்து நெய் தற்பறை கேட்கலாமென்றும், காதலனோடு இணைந்திருக்கும் காதலி ஒரு வீட்டில் பூவணிய மற்றொரு வீட்டிற் பிரிந்திருக்குங் காதலி கண்ணிர் விடலாமென்றும் எடுத்துக்காட்டி, “இன்னாதம்ம இவ்வுலகம்” என்றது ஒரு செய்யுள் 4. இப்படிப்பட்ட உலகத்தையும் படைத்தவனையும் பண்பிலான் என்று அப்பாட்டு இகழ்கிறது. நிலையாமையை வெறுத்து நிற்கும் நிலை இப்பாடல்களிற் காணப்படுகிறது.
புறநானூற்றுக்காலத் தமிழகத்தில் உலகியல் வாழ்க்கை அற வாழ்க்கை, வைதிக சமயம் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஒன்றோடொன்று மோதின என்பது தெளிவு. உலகியல் வாழ்கை, ஏனையவற்றிலும் பார்க்கச் சிறப்பிடம் பெற்றிருந்ததெனப் பொதுப்படக் கூறலாம். ஆனால் அறவாழ்க்கை வைதிக சமயம் என்பன பற்றிய கருத்துக்களும் அக்காலச் சமூகத்தில் முட்டிமோதிக் கொண்டிருந்தன. புறநானூற்றுச் செய்யுளொன்று இத்தகைய கருத்து மோதலைச் சிறப்பாக விளக்கியுள்ளது.1 சிறுவெண்டேரையர் என்ற புலவர், அந்தணர்களை விளித்துக் கூறியதாக அமைகிறது அப்பாடல். வீரசுவர்க்கம் அடைவதற்காக் போராடினான் ஒரு வள்ளல் அவன் போராடுவது அருள் சம்பந்தப்பட்டதல்லவாதலால், அருள் மார்க்கத்தை எடுத்துக்கூறும் வேதம் அதனை விளக்க மாட்டாதென்றும் சங்க காலத்துக்குரிய புறப்பொருள் மரபு சம்பந்ப்பட்டதாதலால், சமணர்பௌத்தர் பிரசாரஞ்செய்து வந்த அறம் அதனை விளக்கமாட்டாதென்றும் அவர் கூறினார். இயற்கை நெறிக்கால மக்களின் வாழ்க்கையை இப்பாட்டு மிக அழகாக விளக்கிறதெனலாம். வேதநெறியும் அறநெறியும் தமிழ் நாட்டில் அக்காலத்திலேயே கால்கொண்டு விட்டன. ஆனால், தமிழர் பெரும்பாலோர் இந்தநெறிகளுக்கு முற்பட்ட இயற்கையான வாழ்வுடையோராயிருந்தனர்.
அறநெறிக் காலம்
இயற்கை நெறிக்காலக் கருத்துக்கைளை அறியப் புறநானூறு எவ்வளவுக்கு உதவுகின்றதோ, அவ்வளவுக்கு அறநெறிக்காலக் கருத்துக்களை அறிய திருக்குறள் உதவுகின்றது எனலாம். புறநானூறு பல புலவர் பாடிய செய்யுட்களின்; ஏனையவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு புலவர் இயற்றியது. வாழ்கை பற்றிய கருத்துக்கள் பலவற்றையும் ஒருவர் சிந்தித்து அவற்றை ஒழுங்குபடத் தொகுத்து ஒரு நூல் வடிவத்தில் கூறும் நிலை கூறும் நிலை அறநெறிக்காலத்தில் காணப்பட்டது. இவ்வற நூல்களுள்ளே, திருக்குறள் முதலிலே தோன்ற, ஏனையவை பின் தோன்றின என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. திருக்குறளின் கருத்துக்களையும் திருக்குறளைப் பின்தொடர்ந்து தோன்றிய அறநூல்களின் கருத்துக்களையும் ஒப்பிட்டு நோக்குவது, அறநெறிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற கருத்துக்களை அறியத் துணை செய்கிறது.
புறநானூற்றுள்ளும் ஏனைய சங்க நூல்களுள்ளும் அறக்கருத்துக்கள் சில ஆங்காங்கே காணப்பட்டபோதும், அறக் கருத்துக்களை மட்டும் எடுத்துக்கூறும் நூல்கள் சங்கமருவிய காலத்திலேயே எழுந்தன. சங்ககாலச் சூழல் சங்கமருவிய காலத்திலேயே எழுந்தன. சங்ககாலச் சூழல் சங்கமருவிய காலச் சூழலாக வேறுபட்டபோது, இலக்கியப் போக்கிலும் இத்தகைய வேறுபாடு ஏற்பட்டது. தமிழிலக்கியப் பரப்பில் அறநூல்கள் ஒரு கணிசமான பகுதியாக இருக்கின்றன.சிலப்பதிகாரம் முதலிய நூல்களில், அறங்கள் கதைப்போக்கில் அமைந்து காணப்படுகின்றன. மணிமேகலை முதலிய நூல்களில், அறக் கருத்துக்கள் கதையினிடையே வலிந்து புகுத்தப்பட்டனபோலக் காணப்படுகின்றன. மக்களாற் போற்றப்பட்டு, நீண்ட கால வாழ்வுபெற்றுள்ள இலக்கியங்கள் யாவும் அறத்தை அடிப்படையாகக் கொண்டவையென்றும்,அவ்வாறில்லாதன நிலைபேறில்லாது அழிந் தொழிந்துவிடுமென்றும் கருதும் இலக்கிய விமர்சகர் பலருளர். ஆனால் அறநூல்கள் என்று பொதுவகாக் கொள்ளப்படுவன நீதி முறைகள், ஒழுக்கநெறிகள் என்பவற்றை நேரே எடுத்துக் கூறும் நூல்களே. இவ்வாறு அமையும் நூல்கள் ஏனைய மொழிகளிலும் காணப்பட்டபோதும், இந் நூல்களே இலக்கியங்களெனக் கொண்டு போற்றுவது தமிழுக்கு ஒரு சிறப்பியல்பாகும். இலக்கியம் என்ற தமிழ்சொல் லட்சியம் என்ற வடசொல்லின் திரிபென்பர். அறநூல்கள் போதிக்கும் வாழ்க்கைமுறை உயர்ந்த இலட்சியம் என்று கருதிப்போலும் தமிழர் அறநூல்களே இலக்கியங்களாகப் போற்றினர்.
சங்கமருவிய காலத்திற் களப்பிரராகிய அன்னியர் தமிழ் நாட்டைக் கைப்பற்றியாண்டு கொடுங்கோண்மை செய்ய, அவர்கள் காலத்திலே தமிழ்ச்சமுதாயம் சீர்கேடடைந்ததால், தமிழ் மக்கள் வாழ்க்கையை உயரச் செய்வதற்காகவே திருக்குறள் முதலிய அறநூல்கள் தோன்றின என்று ஒருசாரார் கருதுவர். இக்கருத்து ஓரளவு ஏற்கக் கூடியது. நாட்டில் வெளிநாட்டார் படையெடுப்பு நிகழ்ந்த காரணத்தால், அமைதியின்மை முதலியன நிலவும்போது, மக்கள் ஒழுக்கம் குன்றுவதியல்பு. அக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கமாக, ஒழுக்கத்தை வலியுறுத்தும் நூல்கள் தோன்றுவது எதிர்பாக்கக் கூடியதே. அன்னியரான களப்பிரரின் வாழ்க்கை முறையும் தமிழர் வாழ்கை முறையுங் கலந்தபோது, சிறந்த ஒழுக்கம் எது என்பதுபற்றி மக்களிடையே மயக்கம் ஏற்படுவதும் இயல்பானதே. ஆளப்படுவோருக்கு ஆளுவோரின் வாழ்க்கை முறையிலே தனிக்கவர்ச்சி காணப்படுவது இயல்பு. அந்த மயக்கத்தைத் தீர்த்துவைக்கும் வகையில் அக்காலங்களில் அறநூற்கள் தோன்றின எனக் கொள்ளலாம். சமண பௌத்தர்கள் களப்பிரரின் பேராதரவைப் பெற்றார்களென்றும்,அது காரணமாக, அவர்கள் அறநூல்கள் பல எழுதினார்களென்றும் கூறுவர் சிலர்.
இத்தகைய காரணங்கள் மட்டும் ஒரு சமூகத்தின் வாழ்கை பற்றிய கருத்துக்களை மாற்றியமைக்கக் கூடியன என்று கொள்ளவியலாது. மக்கள் புறநூற்றுக் கால வாழ்க்கை முறையிலே திருப்தியடைந்தவர்களாக இருந்திருந்தாற் புதுமையை ஏற்றிருக்கமாட்டார்கள். தம்முடையவும் தம்முன்னோருடையவும் வாழ்க்கை முறையில் அதிருப்தி ஏற்பட்டிருக்காவிட்டால். புறநானூறு தோன்றிய தமிழ் நாட்டிலே திருக்குறள் தோன்றியிருக்கமுடியாது. அரசாள்வோரில் ஏற்பட்ட மாற்றம் மட்டும் மக்கள் வாழ்க்கையை-அதுவும் நிறுவனங்கள் முதலியன வளர்ச்சியடையாத பூர்வீக சமுதாயத்தில் பெருமாற்றமுறச் செய்திருக்க முடியாது. சங்ககால வாழ்க்கைமுறையிற் காணப்பட்ட குறைபாடுகாளால் மனம் நொந்த மக்களுக்கு வேறு வாழ்கைமுறை தேவைப்பட்டது. பொறியாலும் புலனாலும் கவர்ச்சியுற்று, காதல் வாழ்க்கை, வீரவாழ்க்கைகளில் ஊக்கம் மேலிட்டு நின்று வாழ்ந்து அவ்வாழ்க்கைகளிலே துன்பத்தைக் கண்ட தமிழ் மக்கள் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் அலாவினர். சமண பௌத்தக் கொள்கைகள் செல்வாக்கு பெற்ற நிலை இவ்வாறுதான் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
வைதிக சமயத்தைரைச் சமணபௌத்தரோடு ஒப்பிடும் போது, வைதிக சமயத்தவர், மன அமைதியோடு வாழ்தற்குரிய ஒழுக்கத்துக்கு அடிப்படையான பொதுவகையறத்தாலும், பிராமணரின் நன்மையையே ஏற்றமான அளவிலே கருத்திற் கொண்டிருந்தாலும், சங்கமருவிய காலத் தமிழ் மக்களிடையே அதிக அளவில் செல்வாக்குப் பெறமுடியவில்லை. கட்டுப்பாடான வாழ்கையை வற்புறத்துவதிற்பௌத்தரிலும் கூடிய அளவு சமணர் தீவிரவாதிகளாக இருந்தமையினால் போலும், சமணரே தமிழ்மக்களிடம்மிகுமளவினதாகிய செல்வாக்கைப் பெற்றனர். தமிழ்மக்களிடையே சமண பௌத்தர் பெற்ற செல்வாக்கே களப்பிரரும் சமண பௌத்தரை ஆதரித்து நின்றதற்குக் காரணமாகலாம். தமிழ் நாட்டிலிருந்து களப்பிரராட்சியை ஒழித்தபாண்டியரும் பல்லவரும் கி.பி ஏழாம் நூற்றாண்டிற் சமணத்தை ஏற்றது, தமிழ் மக்கள் மத்தியிற் சமணம் பெற்றிருந்த செல்வாக்கைக் கண்டமையாற்றான் நேர்ந்திருத்தல் வேண்டும். களப்பிரர் காலத்திலும் இதே சூழ்நிலை நிலவியிருக்கலாம்.
வடஇந்தியாவில் வைதிக சமயத்திற்கு எதிராக எழுந்த சமணமும் பௌத்தமும் அக்கால வைதிக சமயத்தைச் சீர் திருத்த எழுந்தவையென்று கருதுவோருமுளர். அது எவ்வாறாயினும், இவ் மூன்று சமயங்களுக்குமிடையே பூசல் நிலவியதும், ஒவ் வொரு சமய வளர்ச்சியும் ஏனைய இரு சமய வளர்ச்சியையும் தீவிரமாகப் பாதித்ததும் வைதிக சமயமே இந்தியாவிற் செல்வாக்குப் பெற்றதும் ஏணைய இருமதங்களும் அங்கு அருகிப் போனதும் வரலாற்றுண்மைகள். பிராமணரின் மதமாக இருந்த வைதிக சமயம் இந்திய மக்களின் இந்து மதமாக மாறுவதற்குச் சமணபௌத்த இயக்கங்கள் பெருந் தொண்டாற்றின. வேள்வியையும் வருணாச்சிரம தருமத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்த வைதிக மதத்திற்கு மகாவீரரும் புத்த பெருமானும் செய்த எதிர்ப்புப் பிரசாரம் வைதிக மதத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது.
வட இந்தியச் சமயங்களாகிய சமணம், பௌத்தம், வைதிகம் என்ற மூன்றும் அறக்கருத்துக்களைப் போற்றும் நிலை சீக்கிரத்தில் உருவாகியது. அசோகன் முதலிய பேரரசரின் ஆதரவு பெற்ற பௌத்தமும், சந்திரகுப்தமோரியன் சம்பிரதி முதலிய பேரரசரின் ஆதரவு பெற்ற சமணமும் பரப்பிய அறக்கருத்துக்கள் இந்தியா எங்கணும் செல்வாக்குப் பெற்றன. புதிய சூழ்நிலைக்கேற்ப வைதிக சமயம் நடந்து கொள்ளத் தொடங்கியது வைதிக சமயத்தினர் ஸ்மிருதி நூல்களை எழுதத் தொடங்கினர். மனு, யாக்ஞவல்க்கியர், நாரதர், போதாயனர் முதலியோர் எழுதிய அற நூல்கள் இந்த வகையில் அடங்கும். வேதங்களிற் கூறப்படும் அறக் கருத்துக்கள் இந்நூல்களிலேயே திரட்டித் தரப்படுகின்றன எனக்கூறி வைதிக சமயத்துக்குப் பெருமை தேடினர் இந்த நூலாசிரியர்கள். இந்த தரும சாத்திரங்களிற் கூறப்படும் அறங்கள் சமண பௌத்தருக்குச் சிறப்பாக உரிய அறங்களல்ல. ஆனால், சமண பௌத்த இயக்கங்களின் தூண்டுதலாலேயே இந்நூல்கள் தொன்றின எனலாம். வருணாச்சிரம தருமம், இத் தரும சாத்திரங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, விவசாயம் சூத்திரங்களுக்கேயுரிய தொழிலென்று வரையறுக்கப்படுகிறது. சமணம், பௌத்தம், வைதிகம் முதலிய வட நாட்டுச் சமயங்கள் இந்நிலையில் இருந்த போதிலேதான், தமிழ் நாட்டில் அற நூல்கள் தோ்னறுவதாயின.
தமிழ் நாட்டிற் சங்கமருவிய காலத்திலேயே தோன்றிய தொடர் நிலைச் செய்யுட்களிற் சிலப்பதிகாரம் சமணராலும் மணிமேகலை பௌத்தாரலும் பாடப்பட்டவை. சிலப்பதிகாரத்தில், கவுந்தடிகள் என்ற சமண சமயக் கொள்கைகள் சிலவற்றை எடுத்துக்கூற இளங்கோவாற் பயன்படுத்தப்படுகின்றன. சமண சமய கருத்துக்களைச் சிறப்பாக எடுத்துக்கூறிய போதிலும், ஆசிரியர் சமயப் பொது நோக்குடையவராகக் காணப்படுகிறார். மணிமேகலை பிற சமயங்களை இகழும் நோக்கமும் கொண்டது. இந் நூல் பௌத்த சமயப் பிரசாரத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதென்பது தெளிவு. பௌத்த சமயக் கருத்துக்கள் நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
அறநெறிக் காலத்திலே தமிழ் நாட்டில் இடம் கொண்ட பல்வேறு சமயங்களைப் பற்றியும் மணிமேகலையிலிருந்து அறிய முடிகிறது. இந்நூலிலுள்ள கடைசி மூன்று காதைகள் அந் நாளிலே தமிழ் நாட்டில் வழங்கிய சமயத்துவங்களை எடுத்துக் கூறுகின்றன. சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதையிற் பத்து வகைக் சமயங்கள் கூறப்படுகிற போதிலும் காதை முடிவில் மணிமேகலை ஐவகைச் சமயம் அறிந்தவள் என்று சாத்தனார் கூறுகிறார்1.இச்சமயக் கொள்கைகள் யாவும் மணிமேகலையால் நிராகரிக்கப்படுகின்றன. வைதிகம் உலோகாயதம், ஆசிவகம், நிகண்டவாதம் (சமணம்), சாங்கியம், நையாயிகம், வைசேடிகம் என்பன விளக்கப் படுகின்றன. வைதிகம் என்பதில் அளவைவாதி, சைவவாதி, வைணவவாதி, பிரமவாதி, வேதவாதி, என்போர் அடக்கப்படுகின்றனர். திரிபீடகத்திலுள்ள புத்தரின் உபதேசம், பவததிறம் அறுகெனப்பாவை தோற்ற காதையில் இடம் பெறுகிறது. வஞ்சிமா நகருள், சமயக் கணக்கர் யாவரும். இருந்ததாகக் கூறப்படுகிறது காவிரிப்பூம் பட்டனத்தில் இந்திரவிழா எடுத்தபோது பட்டி மன்றங்களில் சமயவாதிகள் உறுதிப் பொருள்களையிட்டு வாதம் செய்வது கூறப்படுகிறது. தமிழ் மக்கள் மனதைக் கவர்வதற்காகச் சமயங்கள் யாவும் போட்டியிட்டநிலை சங்கமருவிய காலத்தில் நிலவியது, மணிமேகலையிலிருந்து தெரியவருகிறது. தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களிலாவது சமயத் தத்துவங்கள் தமிழ்மக்கள் மனதில் இடம் பெறத் தொடங்கிவிட்டன எனலாம்.
களப்பிரராட்சிக் காலத்திற் சமணமும் பௌத்தமுமே சக்திவாய்ந்து விளங்கின. இந்தியாவில் இராசஸ்தானம், குசராத்து, மகாராட்டிரம், கருநாடகம், தமிழ் நாடு என்னும் பகுதிகளில் சமணம் செல்வாக்குடன் விளங்கியது. தமிழ் நாட்டுக்கு வட எல்லையில் அமைந்த ஆந்திர நாட்டில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்தது. தொண்டைமண்டலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் தமிழ்நாட்டுப் பௌத்தமதப்பிரசாரத்துக்கு மத்திய இடமாக விளங்கியது. பௌத்தம் தென்கீழ் ஆசியாவின் சமயமாக வளர்ந்துகொண்டிருந்த காலம் அது. ஜப்பானிலிருந்து கேரளம் வரையிலும், ஆப்கானிஸ்தானத்திலிருந்து இந்தோனேசியா வரையிலும், மத்திய ஆசியாவிலிருந்து இலங்கை வரையிலும் பௌத்தத்தின் செல்வாக்கு விசாலித்துக் கொண்டிருந்தது. இந்தப் பௌத்த செல்வாக்குப் பிரதேசத்தின் ஒருபகுதியே தமிழ் நாடு. காஞ்சியைச் சேர்ந்த தருமபாலர் என்ற பிக்கு வரலாற்றுப் பிரசித்திபெற்ற பௌத்தப் பல்கலைக் கழகமான நாலாந்தாப் பல்கலைக் கழகத்தில் தலைமைப்பதவி வகித்திருக்கிறார். பௌத்தரின் புனித நூலான திரிபிடகத்தின் பகுதிகள் சிலவற்றுக்குத் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆச்சாரியார் தருமபாலர் உரைஎழுதியிருக்கிறார். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பௌத்த மதத்தைப் போதிக்கக் காஞ்சியிலிருந்து பிக்குகள் சென்றிருக்கிறார்கள். தின்னாகர் என்பவர் பௌத்த சமய சம்பந்தமான தத்துவ தருக்க நூல்களை வடமொழியில் எழுதியுள்ளார். ஆகவே சங்கமருவிய காலத் தமிழகத்தில் அறக்கருத்துக்கள் செல்வாக்குப் பெற்றதில் வியப்பில்லை.
புறநானூற்றுக் காலமும் அறநூல்கள் காலமும் வேறுவேறாக இருந்திருக்க வேண்டும். சங்ககால நூல்கள்,சங்கமருவிய கால நூல்கள் என இன்று இலக்கிய வரலாற்றிற் கொள்ளப்படும் நூல்கள் யாவும் சங்க காலத்துக்குரியன என்று கூறுவர் சிலர். சங்ககாலம் என்ற பெயரை இயற்கை நெறிக்காலத்துக்கு வழங்குவதிலும் அறநெறிக் காலத்திற்கு வழங்குவது கூடிய அளவு பொருத்தமாகத் தெரிய வருகின்றது. சங்கம் என்ற சொல், சமண பௌத்தருக்குரியதன்றிச் சைவ வைணவருக்கு ஆதியில் உரியதன்று. தமிழ் நாட்டு வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால், களப்பிரரின் படையெடுப்புக்குப் பின்பும் பல்லவர் காலத்திற்கு முன்பும் இடையிலிருந்த சில நூற்றாண்டுகள் சங்ககாலம் எனக் குறிப்பிடப்படுவதற்கு ஒரு வகையிலே தகுதி உள்ளன என்பது தெரியவரும் சமண பௌத்த சங்கங்கள் அக்காலத்திற் போல வேறு எக்காலத்திலும் தமிழ் நாட்டிற் செல்வாக்குப்பெற்றிருக்கவில்லையெனப் பெரியபுராணத்திலிருந்து தெரிய வரும். நாயன்மார் காலச் சமய நிலையாலும் பல்வர் காலத் தொடக்கத்தில் வாழ்ந்த அப்பர், சம்பந்தர் பாடல்களிற் சமண பௌத்தர் பற்றிக் காணப்படும் பெருந்தொகையான குறிப்புக்களாலும் உலோகவிபாகம் என்னும் நூல் கி.பி.470ல் வச்சிரநந்தி என்னும் சமண முனிவர் திராவிடச்சங்கம் மதுரையில் நிறுவியதாய்க் கூறுவதாலும் அறியலாம். அறநெறிக்காலத் தமிழகத்தில், சமண பௌத்த சங்கங்கள் செல்வாக்கு மிக்கு விளங்குகின்றன. சமணபௌத்த சங்கங்கள் அறத்தையே உயிர் நாடியாகவுடையன. பெளத்தமதத்தவர் போற்றும் மும்மணிகளுட் சங்கம், தருமம் என்பன இருமணிகளாகக் கொள்ளப்படுவதால், பௌத்தர் இவற்றுக்குக் கொடுக்கும் சிறப்புப் புலனாகிறது. இவற்றிலிருந்து சங்கத்துக்கும் அறத்துக்குமுள்ள தொடர்பு புலப்படுகிறது.
இயற்கை நெறிக் காலத்துக்குச் சங்ககாலம் என்ற பெயர் ஏற்பட்டமைக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். எட்டுத்தொகை இலக்கியங்கள் தோன்றிய காலம் ஒன்று, தொகுக்கப்பட்ட காலம் இன்னொன்று என்பது இன்றைய அறிஞர் முடிவு. எட்டுத்தொகை நூல்களிலுள் செய்யுட்களுட் பெரும்பாலன களப்பிரர் படையெடுப்புக்கு முந்தியன என்பதற்கு கருத்து வேறுபாடில்லை. அவை களப்பிரர் ஆட்சிக்காலத்திலே தொகுக்கப்பட்டன ஆகலாம். அந்நூல்கள் சமண பௌத்த சங்கத்தராலே தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுவதற்கு இடம் உண்டு. நெடுந்தொகை குறுந்தொகை என்பன எட்டுத்தொகை நூல்களிரண்டுக்குப் பெயர்கள். பௌத்த சமய முதனூலான, பாளிமொழியிலுள்ள திரிபிடத்திலும் இவ்வாறு பிரிவுகள் காணப்படுகின்றமையால், இப் பெயர்கள் திரி பீடகத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டிக்கலாம். எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்பன சங்க இலக்கியங்கள் என்று பெயர் பெற்றது சங்கத்தாராலே தொகுப்பட்டதனாற் போலும். இவற்றிலுள்ள செய்யுட்கள் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டனவென்பது பிற்காலக்கதையாகலாம். பல்லவர் காலத்துச் சைவ வைணவ எழுச்சி ஏற்பட்டபோது, அக்காலத்திற்கு முன்பு தோன்றிய தமிழிலக்கியங்கள் எல்லாம் ஒரு வகையில் இல்லாவிடில் இன்னொருவகையிற் சங்கத்துடன் தொடர்புடையனவாயிருந்தனாற் போலும் சங்கத்தையும் தமிழையும் இணைத்துக் கூறும் போக்கும் காணப்படுகின்றது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் சங்கத் தமிழ், சங்க முத்தமிழ், சங்க மலி தமிழ் முதலிய சொற்றொடர்களைக் கையாளுகின்றனர்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் சமண பௌத்த சங்கங்களைக் குறித்திருக்க முடியாது என்றும் அவர்கள் வைதிகம் தொடர்பான சங்கத்தையே குறித்திருப்பர் என்றும் வாதிக்கலாம். இறையனாரகப் பொருளுரையிற் கூறப்படும் முச்சங்க வரலாறு சமண பௌத்த சங்கங்களிற் வேறுபட்டதாய்த் தமிழ் ஆராய்ந்த வைதிகத் தொடர்புடைய மூன்றுசங்கங்களைக் குறிப்பிடுகின்றது. அவைபற்றி இரையனாரகப் பொருளுரையிற் காணப்படும் குறிப்பு, கட்டுக்கதை என சிவராசபிள்ளை நிறுவியுள்ளார்1. பல்லவர் காலத்திலும் அதற்குப்பின்னரும் தமிழ் நாட்டில் முதன்மை பெற்ற சைவ சமயத்தவர், சமணபௌத்த மதங்களிலும் தோன்றுவதற்கு முன்பே தமிழ்ச்சங்கங்கள் நிலவின எனவும் சைவ சமயக் கடவுளரும் அங்கேயிருந்து தமிழ் வளர்த்தனர் எனவும் கதை கட்டினர் என அவர் மேலுங் கூறுவர். அவர் கூற்றில் உண்மை இருக்கலாம்.
பல்லவர் காலத் தொடக்கத்தில் மதுரையிற் சமணசங்கத்துக்கு இருந்த செல்வாக்குத் திருஞான சம்பந்தர் புராணத்திலிருந்து தெரியவருகிறது. அச்செல்வாக்கு திடீரென ஏற்படத்தக்கதன்று; சில நூற்றாண்டுகளாகவாவது வளர்ச்சி பெற்று வந்ததாக இருக்கவேண்டும். இரையனாரகப் பொருளுரையிற்கூட, தமிழ்ச் சங்கம் மதுரையுடனும் பாண்டிய நாட்டுடனுமே தொடர்புபடுத்துகிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, என்னும் நூல்களிலுள்ள செய்யுட்கள் யாவும், அல்லது அவற்றுட் பெரும்பாலன மதுரையுடன் அல்லது பாண்டிய நாட்டுடன் தொடர்டையன எனக் கொள்வதற்கேற்ற வேறுசான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் அற நூல்கள் காலத்தில்,மதுரைபெற்ற முக்கியத்துவமே, இறையனராகப் பொருளுரைக் கதையிலும் மதுரை முக்கியத்துவம் பெற அடிப்படையாகலாம். திரிகடுகத்தின் பாயிரம். அந் நூல் தமிழ்ச்சங்கம் மருவிய நல்லாதனராற் செய்யப்பட்டது என்று கூறுகிறது. முதுமொழிக்காஞ்சி இடைச்சங்கத்துத் தமிழர் என ஓர் ஏடு கூறும். மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேதனார், மதுரைக் கூடலூர் கிழார், மாறேக்கத்துக்குப் புல்லங்காடனார், மாறன் பொறையனார் எனவும் மதுரைத் தமிழாசிரியர் மாங்காயனார் மாணாக்கராகிய காரியாசான் கணிமேதையார், மதுரைக் கண்ணங்கூத்தனார் எனவும் வரும் பதிணெண் கீழ்க்கணக்கு நூலாசிரியர்கள் மதுரையிலோ பாண்டி நாட்டிலோ வாழ்ந்தவராதல் வேண்டும். திருக்குறள் மதுரைச் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டதெனக் கதை வழங்கி வருகின்றது. இவற்றிலிருந்து பாண்டி நாடும் மதுரையும் தமிழ்ச் சங்கத்தோடும் அறநெறியோடும் நெருங்கிய தொடர்புற்றிருந்தமை புலப்படுகிறது.
பதினெண் கீழ்கணக்கு நூல்களுட் காணப்படும் அற நூல்களுட் காணப்படும் அறநூல்கள் சமணச் சார்புடையன எனக் கூறப்படுகிறது. திருக்குறளே தமிழிலே தோன்றிய முதல் அறநூல். திருவள்ளுவரின் சமயம் என்ன என்பதுபற்றி விவாதம் நடந்து வருகிறது திருக்குறள் சமயக்கணக்கர் வழி செல்லவில்லை என்பதை இதே காட்டுகிறது. திருவள்ளுவர் சமண சமயத்தவராதல் வேண்டும் என்பதற்கு அறிஞர் காட்டும் நியாயங்கள் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றது. கடவுள் வாழ்த்திலே கடவுளைக் குறித்து அவர் வழங்கும் தொடர்களும் கொல்லாமை, புலாலுண்ணாமை என்பன பற்றி அவர் வற்புறுத்திக்கூறும் முறையும், திருவள்ளுவர் தற்காலத்து வைதிகத்தையும் பௌத்தத்தையும் சேர்ந்தவரல்லர் என்பதைக் காட்டுகின்றன. இந்தியச் சமய வரலாற்றில், ஒரு சமயத்துச் சிறப்பிடம் பெறும் கொள்கையை மற்றச் சமயமும் காலப்போக்கில் ஏற்று, அமைதி காண்பது பல முறை நிகழ்ந்ததால், பிற்காலத்திற் பிறசமயங்களிற் காணப்பட்ட கொள்கைகளைக் கொண்டு, வள்ளுவரை அவ்வச்சமயத்தைச் சேர்ந்தவரென நிறுவ முடியாது.
வள்ளுவர் குறள்கள் சிலவற்றைக்கொண்டு அவர் சமணரெனக்கொள்ள இடமுண்டு; எனினும் அவர் நூல் பொதுநோக்குடையது என்பதை ஏற்கத்தான் வேண்டும். நாலடியார், பழமொழி நானூறு,சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் நூல்களும் சமணரால் இயற்றப்பட்டன. திருக்குறள், நாலடியார் முதலியன காலத்தின் தேவைக்கேற்ப எழுத்து மக்களிடம் செல்வாக்குப் பெறுதலைக் கண்ட வைதிய சமயத்தினர். அந்நூல்கள் வழியிற் சென்று தாமும் அறநூல்கள் இயற்றத்தொடங்கினர். நான்மடிக்கணிகை, முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்ன நாற்பது, இனியவை நாற்பது என்னும் அறநூல்கள் வைதிக சமயத்தாரால் இயற்றப்பட்டன. இவை இவ்வாறு வெவ்வேறு சமயத்தாரால் இயற்றப்பட்டனவென்பது இயற்றியுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுட்களிலிருந்தும் பாயிரச் செய்யுட்களிலிருந்தும் தெரியவருகிறது. நான்மணிக்கடிகை, திரிகடுகம் என்பன வைணவராலும், ஆசாரக்கோவை சைவராலும் இயற்றப்பட்டன. நூல்களின் உள்ளடக்கத்தில், சமணர் இயற்றிய நூல்களும் வைதிக சமத்தவர் இயற்றிய நூல்களும் குறிப்பிடத்தக்க வேறுபாடின்மை, இந் நூல்கள், காலத்தின் தேவையை ஒட்டி எழுந்தனவாக இருக்கவேண்டும் எனக் கொள்ள இடந்தருகின்றது.
சமணபௌத்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அவ்வந் நாட்டு மக்கள் பேசும் மொழியைக் கற்றுப் பேணுவதிலும் சமயப் பிரசாரத்துக்கு அவற்றை பயன்படுத்துவதிலும் எப்பொழுதும் முன்நிற்பவர்கள் மகாவீரரும் புத்தரும் சங்கத மொழியைக் கைவிட்டுத் தங்கள் போதனைகளை முறையே, பாகத மொழியிலும் பாளி மொழியிலும் வெளியிட்ந் தங்களைப் பின்பற்றுவோருக்கு இந்த வகையிலும் வழிகாட்டிகளாக விளங்கியுள்ளனர். சமண பௌத்தர், தம்முடைய சமயக் கொள்கை என்னும் நோக்கில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களின் கருத்துக்களிற் காணப்பட்ட குறைகளை எடுத்துக் காட்டுவதற்குத் தமிழில் அறநூல்கள் இயற்றிருக்கலாம்.
சமணம் கடுந்துறவையும் பௌத்தம் கடுந்துறவுக்கும் உலகியலுக்கும் இடையிலான நடுவழியையும் வற்புறுத்துவன. உறுதிப் பொருள் வீடேயெனக் கொண்ட சமணம், கடுந்துறவே அதற்கு வழியெனக் கொண்டு,அந்த வழியையே வற்புறுத்தி வந்தது. காலப்போக்கில், சமண சமயம் இல்லற வாழ்வு வாழ்வோருக்கும் வழிகாட்ட முனைந்தது1. மக்கள் யாவரும் துறவை ஏற்கத்தக்க மனவலிமையுடையவர்களல்ல ரெனவும் சமணத் துறவிகளை ஆதரிக்கச் சமண இல்லறத்தார் வேண்டுமெனவும் உணர்ந்த சமணம் காலப் போக்கிலே, சமண இல்லறத்தாராகிய சாவகருக்கு வேண்டி ஆசாரங்களை வகுக்கத் தொடங்கிற்று. இல்லறம் துறவறத்திலும் ஓரளவு குறைந்தபடி என்ற கருத்து தோன்றியது. கிறிஸ் தவ ஆண்டு முன் பின்னாகவே, சமண நூல்களில், சாவகருக்குரிய ஆசாரங்களை கூறத் தொடங்கின.
சங்கமருவி காலத் தமிழ் மக்கள் அறக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்குச் சிறப்பான காரணங்கள் சில இருந்தன. அறக்கருத்துக்களை தனி மனிதர் ஏற்றுக் கொள்வதற்காக பொதுக்காரணங்களும் சில கூறலாம்2.தன் நய நாட்டம், அறக்கருத்துக்கள் சில ஏற்கப்படுவதற்குக் காரணமாகிறது. ஒருவனுடைய நோக்கம், ஆசை, அல்லது இலட்சியத்தில் முழுக்கவனம் செலுத்தி முன்னேறச் சில அறக்கருத்துக்கள் உதவுகின்றன . சமூகத்தின் நன்மைகருதிச் சில அறங்கள் போற்றப்படுகின்றன. அறங்கள் சில, சமூகத்தில் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வழிசெய்கின்றன. ஒருவருடைய இன்பம் மற்றவர்களுக்குத் துன்பம் பயவாத முறையிற் கிடைக்க வழியமைவதுண்டு. வீரனுடைய ஆற்றலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பலவீனனுக்கும் வாழும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
அறத்தை ஏற்று வாழ்பவன் இவ்வுலக நன்மையடையாமற் போவதுண்டு. அவன் அற வாழ்க்கையிலேயே தொடர்ந்து நிற்க வேண்டுமென அவனை தூண்டுவதற்காக, மறுமையின்பம், மோட்சம் முதலியவற்றை விதந்து கூறி நீதியறங்கள் கற்பிக்கப்பட்டன. மோட்சத்தை நாடாமல் உலகில் இன்பங்களை அதிக அளவில் துய்க்க விரும்புபவர்களுக்காகத் தேவலோகம், போகபூமி என்பன எடுத்துக்கூறப்பட்டன. கற்பகதரு, காமதேனு என்பன தேவலோகத்தில் விரும்பியவர் விரும்பியவனவெல்லாம் கொடுக்கும் கவற்சிப் பொருள்களிற் சில. அறவழியை ஏற்காது தம் ஆற்றலால் உலக இன்பங்களைத் துய்ப்பவர்களுக்கு நரகத்துன்பம் நூல்களிற் கற்றுணர வழிகோலப்பட்டது. அறவாழ்க்கையை மக்கள் ஏற்பதற்கு இபபோதனைகளுக்கும் ஓரளவு காரணமாயிருந்தன. அறக்கருத்துக்களை ஏற்று வாழ்பவரை மக்கள் நம்புதலும் மதித்தலும் உண்டு. அறக்கருத்துக்கள் சில, போற்றப்படுவதற்கு மனச்சாட்சியே காரணம் எனலாம். உள்ளத்திலே தோன்றும் கடமையுணர்வு, அறங்கள் சில, நிலைபெற உதவுகின்றது.
உள்மனத்தூண்டுதலால், மனிதர் பல்வேறு விதமாக நடந்து கொள்கின்றனர் எனலாம். மனிதர் நடத்தைகளிற் சில பாவம் எனவும், வேறுசில புண்ணியயம் எனவும் வகுக்கப்பட்டுள்ளன. மனிதர் புண்ணியங்களைப் போற்றுவதும் பாவங்களை இகழ்வதும் ஏன் என்று வினவலாம். புண்ணியம் எனக் கொள்ளப்படுபவையே மக்கள் விருப்பத்துக்குரியவை யென்றால், புண்ணியத்தில் விருப்பம் எல்லாருக்கும் ஒரே அளவு அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. கல்வி முதலியனவற்றாலும் புண்ணியத்திற் விருப்பம் கூடுவதுண்டு. மற்றவர்கள் தமக்கு நன்மை செய்வதையும் உதவி செய்வதையும் எவரும் விரும்புவர். அதனால், மக்கள் நல்ல காரியங்களைக் காணும் போது, போற்றுகின்றனரெனலாம்.
அறங்கள் சில போற்றப்படுவதற்குக்காரணம், அவ்வாறு அவற்றைப் போற்றுவதது சமூகத்தில் மரபாக இருப்பதனாலாகும். அவற்றை போற்றுபவர், அவ்வாறு போற்றுமாறு பயிற்றப்பட்டிருப்பர். பிறர் கூற்றுக்களையும் செயல்களையும் பின்பற்றியும், சிலர் அறக்கருத்துக்கள் சிலவற்றைப் போற்றுகின்றனர். அறங்கள் சில, சிறந்தவையென மக்கள் யாவராலும் போற்றப்படுகின்றன. அறங்கள் வேறுசில, சமூகப் பொருளாதாரக் காரணங்களால், வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறாக அமைகின்றன.
பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள அறநூல்களை இரண்டாக வகுத்து ஆராயலாம். அறநூல்களுள் திருக்குறளுக்குத் தனியிடம் உண்டு. திருக்குறள் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை திருக்குறளைக் கற்றுப் போற்றாத தமிழறிஞர் இல்லை என்ற கூற்று எழத்தக்க வகையில் இந்நூல் சிறப்புப் பெற்றிருக்கிறது. தமிழ்பெரும் புலவர்கள் திருக்குறளைத் தம் நூல்களில் எடுத்தாண்டு வருகின்றனர் திருக்குறள் தமிழ் மக்களின் உயர்ந்த பண்பாட்டுக்கு விளக்கமாக அமைந்திருக்கிறது. அறநெறிக் காலத்தில் மட்டுமன்றி, அதைத் தொடர்ந்து வரும் காலங்கள் அனைத்திலும் இந்நூலும் இந்நூற் கருத்துக்களும் இங்கே விரிவாக அராயப்படுகின்றன. பிறஅறநூல்கள் யாவும் இரண்டாவது பிரிவில் அடங்குகின்றன.
திருக்குறள்
திருக்குறள் இயற்கை நெறிக்கால வாழ்க்கை முறையைக் கண்டனஞ் செய்ய எழுந்த நூல் என்று கூறலாம் எனத் தெரிகிறது. இயற்கைநெறிக் கால இலக்கியங்களிலிருந்து அக்கால வாழ்க்கை முறையை வகுத்தால், திருக்குறள் அந்த வாழ்க்கை முறையைக் குறை கூறுவதுபோல அமைந்துள்ளது. போர், காதல், ஆறலைத்தல், இறச்சியும் மீனும் உண்ணல், மதுவருந்தல் முதலியன இயற்கை நெறிக்காலச் செய்யுட்களிற் சிறப்பாக பேசப்பட்டன. கொலை, காமம், களவு,புலால்,கள் என்பன குறளுட் கடியப்பட்டன. மீன், இறைச்சி, கள் என்பன ஒரு காலத்தில் மலந்துகிடந்த தமிழகத்தில் குறள் புலாலுண்ணாமையும் கள்ளுண்ணாமையும் வியந்து பேசியுள்ளது. பழைய இந்திய மதங்களுட் புலாலுண்ணலை முற்றாகக் கண்டித்து நின்ற சமயம் சமணம் ஒன்றே. வரைவின் மகளிர், பெண்வழிச் சேறல், பிறனில் விழையாமை என்னும் அதிகாரங்களாற் காமம் கடித்தொதுக்கப்படுகிறது.
புறநானூறு வீரத்தைப்பாட, திருக்குறள் அன்பைப்பாடுகிறதெனலாம். புறநானூற்றுக்காலப் போர்களாலும் களப்பிரர் படையெடுப்பாலும் கலங்கிய தமிழகம் அகிம்சைக் கெள்கையைத் தன் உயிராக உடைய சமணத்திடம் ஆறுதலை நாடியது. போருக்குரிய காரணங்களை இல்லாமல் செய்து விடத் திருக்குறள் முனைந்தது. காமத்தைக் கண்டிப்பதனாலும் வெஃகாமை, அவாவறுத்தல் என்பனவற்றை உபதேசிப்பதாலும், குறள் போருக்குரிய காரணங்களை நீக்கிவிட முயன்றது. பொறையுடைமை, வெகுளாமை என்பன கடைப்பிடிக்கப்பட்டால், போருக்குரிய காரணங்களை நீக்கிவிடமுயன்றது. பொறாமையுடைய வெகுளாமை என்பன கடைப்பிடிக்கப்பட்டல், போருக்கு இடமிராது என வள்ளுவர் கருதியிருக்கிறார். அழுக்காறாமை, கள்ளாமை என்பனவும் போருக்குரிய மனநிலை தோன்றாமற் செய்வதற்காக கூறப்படுகின்றனவையே எனலாம். வள்ளுவர் இகலை நேரடியாகக் கண்டித்துள்ளார். இன்னா செய்யாமை, கொல்லாமை என்பனவற்றை மக்கள் கடைப்பிடித்தாற் போர்க்களங்களில் எதுவுமே நடைபெற முடியாது.இவையாவற்றையும் மீறிப் போர் ஏற்பட்டால், போரை வெற்றிகரமாக நடத்தவேண்டிய வழிகளையும் வள்ளுவர் கூறியுள்ளார். அறநூல்கள் காலத்திற் போரைப்பாட எடுத்துக் கொள்ளும் களவழி நாற்பது போரைப் புகழ்கிறதா அல்லது போர்க்களத்தைக் கண்டு இரங்குறதா என்று கூறமுடியாத முறையில் அமைந்திருக்கிறது.
இயற்கை நெறிக்கால வாழ்ககை முறையில் வேறு சில அம்சங்களும் குறளிற் கண்டுபிடிக்கப்படுகின்றன. புலவர் முதலியோர் வள்ளல்களிடம் இரவலாக ஒழுகியமை இரவச்சம் என்ற பகுதியில் இழித்துக் கூறப்படுகிறது. அற நூல்களில், பெண்ணுக்குக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதையும் காணலாம். சங்ககாலச் சமுதாயத்தில் பெண்களும் ஆண்களோடு சமமாகக் கருதப்பட்னர். ஆண்களும் பெண்களும் கூடிப்பழகியதற்கும் சேர்ந்து நீராடியதற்கும், சேர்ந்து குரவையாடியதற்கும் சான்றுகள் உள. களவொழுக்கம் மலிந்திருந்தது. பெண்களின் நன்மையை முன்னிட்டு அவர்கள் வெளியிற் சென்று பழகுவதற்கு ஓரளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோதிலும், பெண்களை ஆண்களிலும் குறைந்தவர்களாகக் கருதும் நிலை ஏற்படவில்லை. ஆணைத் துறவியாக்க முயன்ற அறநூல்கள் பெண்ணைப் பதிவிரதையாக்க முயன்றன. பெண்ணின் வாழ்வில் நிறையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கண்ணகி போல வாழ்ந்த பெண் போற்றப்பட்டாள். கண்ணகி போல அடங்கி ஒடுங்கி வாழாத பெண்கள் இழத்துக் கூறப்பட்டன. ஆண்கள் துறவு பூண்பதற்குப் பெண்கள் பெரும்பாலும் இடையூறாக இருந்தமையால், பெண்கள் இகழப்பட்டனர். அதனாலேயே பிறர் மனம் புகாத அளவுக்குப் பெண் தன்னைக் காத்துக் கொள்ளுதலே கற்பின் பேரெல்லை என்ற கருத்துத் தோன்றியது.
பெண்ணைப் பற்றி ஒரு முரண்பட்ட நோக்கு அறநெறிக்காலத்திற் காணப்பட்டது. களவொழுக்கத்திற் பொய்யும் வழுவும் தோன்றியதால், சடங்கு மூலம் நடைபெறும் திருமணம் வகுக்கப்பட்டதை, அற நூல்கள் காலத்தெழுந்த தொல்காப்பியம் எடுத்துக்கூறுகிறது. அதே காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திற் கதாநாயகன் கோவலனும் கதாநாயகி கண்ணகியும் பெரியோர்கள் நிச்சயித்த திருமணம் செய்தனர். சமணரது சிலப்பதிகாரக் கண்ணகியும் பௌத்தரது மணிமேகலைக் கதாநாயகியும் பெண்ணின் பெருமையைக்காட்ட உதவினர். கண்ணகி பத்தினித் தெய்வமாகப் படைக்கப்பட்டாள். ஆனால், ஆனால் அதேகால அற நூல்கள் பெண்களை இழித்துக் கூறுவதைக் காணக்கூடியதாயிருக்கிறது. பெண்கைளை அதீதமாகப் பெருமைப்படுத்தும் இழிவுபடுத்துவதும் ஒரே காலத்தில் ஒரே சமய நோக்கினையுடையவற்பாற் காணப்படுகிறன.
சமூகவாழ்வில் ஓர் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, எல்லாச் சமூகங்களும் கற்பை ஒவ்வொரு வகையிற் பேணுகின்றன. இயற்கை நெறிக்காலத்திலும் கற்புக் குறிப்பிடப்பட்டது. ஆனால் அறநூல் காலத்துக் கற்பில், கட்டுப்பாடுகள் கூடியளவில் இருந்தன. வீட்டு வாழ்க்கை புனிதமாக அமையவும் கணவனது உடைமையுணர்வு திருப்தியுறவும் மக்கட்பேறு முறையானாக ஏற்படவும் பெண்ணுக்குக் கற்புவற்புறுத்தப்படுகிறது1. பெண்ணானவள் தெய்வத்தைத் தொழாது கணவனைத் தொழவேண்டும் என்று வள்ளுவரும் கூறியுள்ளார். உலகவாழ்வில், பிரதிதின வாழ்வில், கற்பின் பெயரால் உயிரிழக்கும் பெண்ணுக்குத் தேவருலக்கத்தில் நல்ல வரவேற்புக் கிடைக்கும்மெனவும் மழை பெய்யச் சொன்னால் பெய்யும்மெனவும் ஆசை காட்டப்படுகிறது. பெண்ணின் உரிமை பறிக்கப்படத் தொடங்கிய நாளிலேயே, பெண்ணுக்குப் போலி மரியாதை காட்டும் இயல்பு தோன்றியது.
காதல் ஒழுக்கத்தை அற நூல்கள் நேரடியாகக் கண்டிக்கவில்லை அறநெறிக்காலத்தில் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, கார் நாற்பது முதலிய அகத்திணை நூல்கள் தோன்றுகின்றன. இவை சங்ககால அகத்திணை மரபின் தொர்ச்சி எனலாம். கலித்தொகையில் கைக்கிளை பெருந்திணைச் செய்யுட்களுள் காணப்படுவதால், அது அகத்திணை மரபையும் அம்மரபின் பிற்காலத்திரிபையும் உணர்த்துகிறது. அன்பினைந்திணை மரபைச் சிதைத்தது. களவொழுக்கம் வெறுக்கப்பட்டது, “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப” என்ற தொல்காப்பியச் சூத்திரத்திலிருந்து தெரியவருகிறது. ஆறலைத்தல், சூறையாடுதல் கடியப்பட்டதால் பாலையொழுக்கமும், பரத்தைமை கண்டிக்கப்பட்டதால் மருத ஒழுக்கமும், உயிர் கொலையாகிய மீன் பிடித்தல் விலக்கப்பட்டதால் நெய்தல் ஒழுக்கமும் போர் ஒதுக்கப்பட்டதால் வினைவயிற் பிரிதலுக்கு இடமின்றி முல்லை ஒழுக்கமும் பாதிக்கப்பட்டன. அற கருத்துக்களின் பிரசாரம் சமுதாய வாழ்க்கையை உடனே மாற்ற மாட்டாது. ஆனால், அறக்கருத்துக்கள் சிறிது சிறிதாக வேரூன்றி வன்மைபெறச் சமுதாயம் மாறிக்கொண்டிருந்தது. பழைய அன்பினைந்திணை மரபு சிதைந்து கொண்டிருந்தது.
தமிழிலுள்ள அறநூல்களுள் முதன்மையானதான திருக்குறள் எத்தகைய வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுகிறதென ஆராயவேண்டும். பாரத நாட்டிலே தோன்றிய சமய நெறிகள் ஆறு என்பது மரபு. இவை தத்தமக்குரிய சமய நூல்களும் தத்துவச் சிந்தனைகளும் கொண்டு விளங்குகின்றன வெவ்வேறு கோட்பாடுகளுடையனவாக விளங்கியது இச் சமயங்கள் மக்கள் உள்ளங்களைத் தங்கள் பால் ஈர்ப்பதற்காகப் போட்டியிட்டன. சமயப்பூசல் தோன்றியதால், சமயங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளும் விசாலப்படுத்தப்பட்டன. சமயங்கள் என்றுமே சந்திக்கமுடியாத துருவங்கள் போலக் காட்சி அளித்தன. மணிமேகலை, தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் இத்தகைய சூழ்நிலை இருந்ததை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலையிலே திருக்குறள் தோன்றியது. திருக்குறள் சங்கத்தில் அரங்கேறியபோது, அதற்கு மிக்க எதிர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. இந்திய சிந்தனை வரலாற்றிலும் தமிழ்நாட்டுச் சிந்தனைப் போக்கிலும் பலவழிகளில் புதுமையைப் புகுத்திய திருக்குறள் ஆரம்பத்தில் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியேற்படுதல் இயல்பே.
பாரதநாட்டிலே தோன்றிய சமயங்கள் மட்டுமல்ல; புகுந்த சமயங்களும் தம்முடைய செல்வாக்குத் திருக்குறளிற் காணப்படுவதாகக் கூறுகின்றன. கிறிஸ்தவம் ,இஸ்லாம் முதலிய சமயங்களும் திருக்குறளிலே தம்முடைய கொள்கைகளுக்கு அமைதி காண்கின்றன. திருக்குறள் உலகப் பொதுமறை என்பது யாவருக்கும் உடன்பாடாகிறது. இவற்றிலிருந்து ஒன்று புலப்படுகிறது. ஒவ்வொரு சமயமும் சொல்லும் பொருள் திருக்குறளில் காணப்படுகிறது. அத்தன்மையில்லையாயின் எல்லாச் சமயங்களும், திருக்குறளைப் போற்ற முடியாது. எல்லாச் சமயங்களிலும், திருக்குறளைப் போற்றுவதிலிருந்து பிறிதோர் உண்மை புலப்படுகிறது எந்த ஒரு சமயத்தின் கொள்கையையும் திருக்குறள் அவ்வச்சமயக் கடவுள் முதலிய பொருட் சார்பான சமய சங்கேத வாய்பாட்டுச் சிறப்பு மொழிகளால் முற்றாக எடுத்துக் கூறவில்லையென்பதுதான் அது. அப்படி அது கூறியிருந்தால், குறள் ஒரு சமயத்துக்குரிய நூலாகக் கருதப்பட்டுப் பிற சமயங்களால் ஒதுக்கப்பட்டிருக்கும்
வள்ளுவர் பிறந்த சமயம், பின்பற்றிய சமய அனுட்டானங்கள் என்பனவற்றிக் கருத்து வேறுபாடு காணப்பட்ட போதிலும் வள்ளுவருடைய உள்ளத்தைப்பற்றிக் கருத்து வேறுபாடு ஏற்பட முடியாது. வள்ளுவர் உலகச் சமயத்தின் புறத் தோற்றத்திலே தம்மைப் பறிகொடுத்துவிடவில்லை. சமய வாதிகளின் தருக்கம் அவரை மயக்கிவிடவில்லை சமயத்திலிருந்து வள்ளுவர் ஒதுங்கவும் இல்லை; வள்ளுவர் சமயங்களை நன்கு கற்றிருக்கிறார் சமய உண்மை வள்ளுவருக்கு விளங்கியிருக்கிறது. சமய அடிப்படை வள்ளுவர்க்கு தெரிய வந்திருக்கிறது. வள்ளுவர் சமய சமரச நெறிகளையுங் கடந்து எவ்வளவோ ஆழமாகச் சென்றுவிட்டார். அவர் எந்தச் சமயத்தையும் தமது நூலுள்ளே சிறந்தது இது என விதத்தெடுத்துக் கூறவில்லை. ஆனால், எல்லாச் சமயங்களும் அவர்மேல் உரிமை கொண்டாடுகின்றன.
சமயங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்தியமைக்க முயன்றன எனலாம். வாழ்க்கைச் சுகங்களில், அளவிறந்த பற்று வைப்பதனால், ஏற்படும் அநர்த்தங்களை அவதானித்து வாழ்க்கையில் ஓர் ஒழுங்கை, நீதியை நிலைநாட்டச் சமயங்கள் முயன்றன. ஒழுங்காக வாழ்ந்து உலகில் இன்பங்களைத் துய்க்க வேண்டும் என்றே சமயங்கள் கூற விரும்பின போலத் தெரிகிறது. ஆனால், பிரசார வேகத்தில், ஒழுங்கான வாழ்க்கையை வற்புறத்தும் போக்கு தளர்ந்து விட்டது. குறள் தவிர்ந்த ஏனைய அற நூல்களும் சமய நூல்களும் மக்களை நிரந்தரமாகக் கவந்திழுக்கும் சக்தி பெறவில்லை. ஒழுங்கான வாழ்க்கையைக் கண்டிக்கும் போக்கைக் கருத்திற் கொண்டு உலக நிலையாமை,இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வநிலையாமை, முதலிய வாழ்கை வெறுப்புக்குரிய கருத்துக்களை அளவிறந்து வற்புறுத்தும் இந்த நூல்கள், வாழ்க்கையிற் பெருந் துன்பம் அல்லது ஏமாற்றம் அடைந்தவர்களுக்கே ஒரு விதமான மனச்சாந்தியை அளிக்கின்றன மனிதர்களுக்கு இயல்பாக அமைந்த வாழவேண்டும் என்னும் துடிப்பை உதாசினம் செய்யும் நூல்களாக இவை அமைந்திருக்கின்றன. வள்ளுவர் இந்த நிலையை உணர்ந்திருக்கிறார்.
திருக்குறள் என்னும் நூலின் அமைப்பே, உலக வாழ்வு பற்றிய வள்ளுவரின் பார்வையைத் தெளிவாக்குகிறது. தலைவனும் தலைவியும் கூடிக்களிக்கும் இன்பத்தை வள்ளுவர் காமத்துப்பாலில் , இருபத்தைந்தாவது அதிகாரங்களில் எடுத்துக்கூறியுள்ளார். ஏனைய பல அறநூல்களும் சமய நூல்களும் கூறுவதுபோல, அவர் இத்தகைய இன்பத்தைச் சிற்றின்பம் என இழித்துரைக்கவில்லை. களவொழுக்கத்தைக் கூட, அவர் கடிந்துரைக்கவில்லை. உயர்ந்த குறிக்கோழுடைய காதலின்பத்தை வள்ளுவர் காமத்துப்பாலிற் கூறியுள்ளார் இலட்சிய நோக்குடைய வள்ளுவர் கையில் அகப்பொருள் மரபு இத்தகைய வடிவத்தைப் பெறுகிறது. இயற்கை நெறிக்காலத் தமிழர் வாழ்வில் இடம்பெற்ற பரத்தை வாழ்வில் எழும் பிணக்கிணை மருதமாகக் கூறாமல், வெவ்வேறு வளர்ந்த இரண்டு உள்ளங்கள் படிப்படுயே ஊடாடித் தட்டுத்தடுமாறி ஒன்றாகக் கூறுவதையே மருதமாகக் கூறிப் பெரியதொரு புரட்சி செய்துள்ளார் வள்ளுவர் என எடுத்துக்காட்டுவர்1. புலவி நுணுக்கம் வள்ளுவர் கூறிய புதுவகை மருதமாகும்.
இல்லற வாழ்க்கை திருக்குறளுட் சிறப்பிடம் பெற்றது. குடும்ப வாழ்க்கைச் சிறப்பு இருபது அதிகாரங்களில் எடுத்துக் கூறப்படுகின்றது. திருக்குறள் மனைவியை வாழ்க்கைத் துணையெனக் கூறுதல் மிகவும் சிறப்பானது. குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெண், பெறவேண்டிய முக்கியத்துவத்தையும் ஆணுடைய வாழ்விற் பெண் வகிக்க வேண்டிய பங்கினையும் இது உணர்த்துகிறது. அறவழியில் இல் வாழ்க்கை நடத்திப் பெறமுடியாத ஒன்றையும் துறவறத்திற் சென்று பெற்றுவிடமுடியாது என்ற வள்ளுவரின் துணிகரமா கருத்து இந்தியச் சிந்தனையின்பழைய வரலாற்றின் ஒரு புதுமை1. ஒழுங்கா இல்லறத்தில் நின்று வாழ்பவன், பூவுலகத்திலிருக்கும் பொழுது, தேவன் என்ற நிலையைப் பெற்று விற்று விடுவான் என்று வள்ளுவர் மேலும் கூறியுள்ளார். உலக வாழ்க்கை ஒழுங்காக நடை பெறுவதற்குப் பெருந்துணையாக வேண்டப்படுவதாகிய பொருட்பால் எழுபது அதிகாரங்களிற் பரந்து காணப்படுகிறது. நூற்றுமுப்பத்து மூன்று அதிகாரம் கொண்ட திருக்குறளுள், நூற்றிப்பதினைந்து அதிகாரங்களுக்குக் குறையாமல், ஏட்டில் ஏழு பங்கில் இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டியனவும் கூறப்படுகின்றன.
இவ்வாறு கூறுவதனால், சமயங்கள் பிரத்தியேகமாக எடுத்துக்கூறும் விடயங்ள் திருக்குறளில் இல்லையென்பது கருத்தன்று. துறவறவியலிற் பதின்மூன்று அதிகாரங்கள் காணப்படுகின்றன. திருக்குறள் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது. அறத்துப்பாலின் இறுதியில் ஊழ் அல்லது விதி பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனினும், இந் நூலை முழுவதாகப் பார்க்கும் போது, மக்கள் ஒழுங்காக வாழ்ந்து உலகியல் இன்பத்தைத் துய்த்தல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம் என்பது தெரிகிறது.
சமண சங்கத்தின் பெருமை, நீத்தார் பெருமை என்ற அதிகாரத்திற் கூறப்பட்டதென்றும், சமணரின் சிறப்புடைக் கொள்கையாகிய தருமம், அறன்வலித்துறுத்தல் என்ற அதிகாரத்திற் கூறப்பட்டதென்றும் கூறுவர்2. அறன் வலியுறுத்தலே, திருக்குறளின் பொருள் எனக் கொள்ளலாம். இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்கை வாழ்த்தோடு தொடங்குவது போல, வள்ளுவரும் வான் சிறப்புக் கூறுகிறார். மனத்துக்கண் மாசில்லாமையே அறம் என்கிறார் வள்ளுவர். புற வேடங்களும் வெளி ஆசாரங்களும் மட்டும் பயன் தரா என்பது அவர் கருத்தாகும். இறக்கும்பொழுது துணையாக வரக்கூடியது அறமே என்கிறார். அறவாழ்க்கை தமிழ் நாட்டிலே தழைக்கப்பாயிரத்தில் அவர் அமைக்கும் சூழல் தனிச்சிறப்பு வாய்ந்தது. அருகன் காட்டிய வழியும் சித்தர் சென்ற வழியும் முதலிற் கூறப்பட்டுள்ளன உலகில் தானமும் தவமும் நிலவ, மழை வேண்டும். துறவிகள் பெருமை, தருமத்தின் தேவை என்பன தொடர்ந்து கூறப்படுகின்றன.
அறக்கருத்துக்கள் “அதைச் செய்யாதே” என்ற முறையில் கட்டுப்பாடுகளாக அமைந்திருந்தன என்று அறநூல்களைக் குறை கூறுவோரும் உளர். உளரிய பண்பினையும் உயரிய செலவினையும் எல்லாரும் தெளிந்து உய்வதன் பொருட்டு, பரந்து பட்டுக்கிடக்கும் பண்பு நலன்களையும் கருத்துக்கள் என்ற பெயரால் உணர்த்தப்பட்டன1. உள்ளம் உரை, செயல் என்ற மூன்றையும் வழிநடத்த முயன்றன அற நூல்கள். அறத்துப்பால் பொதுவாக எல்லாருக்கும் உரியது. காமத்துப்பால், பொருட்டுப்பால் என்பன சிலர் சிலருக்குச் சிறப்பாக உரியன எனவே, அறத்துப்பால் மட்டுமே அறக்கருத்துக்களைக் கூறுகிறது எனக் கொள்ள வேண்டியதில்லை குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நாணுடைமை, குடிசெல்வகை, இரவச்சம் என்பன அவை கூறும் உயர் பண்பினை நோக்கி அறத்துப்பாலோடு இணைத்து நோக்குவதற்குரியன. நட்பு, கூடாநட்பு,பேதைமை புல்லறிவாண்மை, இகல், உட்பகை, பெண் வழிச்சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, நன்னெறியியல், செல்வம், நல் குரவு, இரவு, கயமை என்பனவும் அறக்கருத்துக்களையே எதிர்மறையாகக் கூறுகின்றன.
அரசியலிலும் அங்க இயலிலும் கூறப்பட்ட அறங்களிற் பல, அரசருக்கு அமைச்சர் முதலானோருக்கும் சிறப்பாக வேண்டப்படுவனவாயினும், ஏனையோருக்கும் பொதுவாக வேண்டப்பாலனவே. உரையும் செயலும் உள்ளத்தின் வழி எழுவனவாதலின், வள்ளுவர் மனநலத்தையே பெரிதும் போற்றினார். இல்லறத்தார், உள்ளத்திலிருந்து கனவு, வெகுளி, அவா என்பன நீக்கப்படவேண்டும். துறவறத்தார் உள்ளத்தில் அருள் மெய்யுணர்வு, அவாவின்மை, துறவு எனபன இடம் பெற வேண்டும். உரையாற் கொள்ளத்தக்க அறங்கள் வாய்மை, இன் சொற்கூறல் முதலியன. இல்லறத்தார். செய்யக்கூடிய அறங்கள் விருந்தோம்பல் ஒப்புறவறிதல், ஈகை என்பன. துறவறத்தார் தவம்செய்யவேண்டும். செய்யத்தக்க செயல்கள் ஒருவகை; தவிர்க்கத்தக்க செயல்கள் மற்றொருவகையெனலாம் கூடாவொழுக்கம், இன்னா செய்தல், கொல்லுதல், புலாலுண்ணல், முதலியன தவிர்க்க வேண்டிய செயல்கள்.
மனிதரின் குண இயல்புகளை, இராசதம் (முனைப்பு), தாமசம்(சோம்பல்), சாத்துவிகம்(அமைதி) என முற்றாக வகுக்கலாம். உயிர்த்துடிப்புடைய சமுதாயத்தில் மேலோங்கி நிற்கும் இராசதம், வீரயுகமாகிய புறநானூற்றுக் காலத்திற் சிறப்புற்றிருக்கிறது. அறநூல்கள் சிறப்பித்துக் கூறிய குண இயல்பு சாத்துவிகமே. அவை, சாத்துவிகத்தை இலட்சியமாகக் கொண்டு இராசதத்தைக் கண்டிக்கின்றன. வள்ளுவருடைய மடியின்மை, தாமச கண்டனமாக அமைகிறது. ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, வினைத்திட்பம், வினைசெயல்வகை என்பன எதிர்மறையாகத் தாமசத்தை விளக்குகின்றன. வள்ளுவர் கூறிய குடியியல் அதிகாரமான சான்றாண்மை, சாத்வீகத்தைப் போற்றுகிறது. சாத்துவீகக் குணம் பிரகாசிப்பதற்குப் பண்புடைமை, நாணுடைமை, பெருமை முதலிய அதிகாரங்களுட் கூறப்பட்டன உதவுகின்றன. சான்றாண்மை என்பதில் தொடர்புள்ள சான்றோர் என்ற சொல்லுக்கு அக்காலத்தில் பொருள் மாறியதெனலாம். இயற்கை நெறிக்காலத்திற் கல்வி கேள்விகளில் வல்லோராக மன்னரைப் பாடிய புலவர் சான்றோரெனப்பட்டனர். அறநெறிக்காலத்திலிருந்து, அறவழி ஒழுகுபவரே சான்றோரெனப் படுகின்றனர்.
புறநானூற்றுக்காலச் சமூகத்தில் வீரன் பெற்ற இடத்தை அறநூல்கள் காலத்திலே துறவி பெற்றான். சமணர் தம்முடைய சமய முதல்வரை மகாவீரர் என்றே அழைத்தனர். துறவிக்குச் சிறப்பாக உரிய அருள் அறநெறிக்காலத்திற் போற்றப்பட்டது. நெஞ்சில் இருக்கவேண்டியது ஈரமேயன்றி வீரமன்று என்பது வள்ளுவர் கருத்தெனலாம். அறநூல்கள் மனிதர் செயல்கள் சிலவற்றைத் தீயவினைகள் எனக் கொண்டு அவற்றை தவிர்க்கும்படி வற்புறுத்தும். பாவங்களைச்செய்ய மனம் அஞ்ச வேண்டும் எனக் கருதிய வள்ளுவர் தீவினை யச்சம் என்றோர் அதிகாரத்தைக் கூறினர். அறத்தை வற்புறுத்தலின் நோக்கம் ஒழுக்கத்தை, அதாவது நல் ஒழுக்கத்தை ஏற்படுத்தலே. எனவே, ஒழுக்கமுடைய வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை; ஒழுக்கமற்ற வாழ்க்கை இழிவானது என்று அறநூல்கள் கூறுகின்றன. ஒழுக்கம் என்று சொல்லி வந்த வள்ளுவர் ஒரு குறளிலேயே நல்லொழுக்கம் தீயொழுக்கம் எனப் பாகுபாடு செய்தார். ஒழுக்கம் என்ற சொல், நல்லொழுக்கத்தையே பழிந்தமிழ் குறித்து வந்ததெனவும், பின்பு ஒழுக்கம் தவறுதல் தீயொழுக்கம் எனப் பெயர்பெற, ஒழுக்கம் என்ற பழைய சொல்லின் பொருட்டெளிவு கருதி நல் என்ற அடைமொழி வழங்கப்பட்டதெனவும் கொள்ளலாம்.
வறுமையும் அதன் பயனாக ஏற்படும் இரப்பும் அறநூலாருக்கும் பெரிய பிரச்சினையாயிருந்தனவெனலாம். வறுமையின் கொடுமையை வள்ளுவர் நல்குரவு என்ற அதிகாரத்தில் எடுத்துக்கூறினார். வறுமைகாரணமாக வள்ளல்களை நாடிக் கையேந்துவதும் செல்வர் ஈயாமையும் வள்ளுவர் கவனத்துக்குள்ளாயிருந்தனர்: இரவச்சம், நன்றியில் செல்வம் என்ற அதிகாரங்கள் எழுந்தமை அதனாலேயே. வள்ளல்தான் என்று நிச்சயப்படுத்தக் கூடியவருமே இரக்கலாம் எனவும் இரந்து பெறுதல் இழிவு எனவும் வள்ளுவர் கருதினார் நாட்டிற காணப்படும் வறுமையை போக்குவதற்கு கொடையை எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாக வறியவரான சாதாரண மக்களுக்கு வள்ளுவர் காலத்திலே தெரிய வராது. அத்தகையோர் தொழில் செய்து வறுமையை போக்கலாம் என வள்ளுவர் கருதினது உழவு என்ற அதிகாரத்திலே தெரிவிக்கப்பட்டது. ஈதலை வற்புறுத்தியும் ஏற்பதை இழித்துக் கூறியும் வள்ளுவர் இங்கும் சமுதாய ஒழுங்கு காண முயன்றுள்ளார்.
வள்ளுவர் நூல்எழுந்த காலத்தில் மறுகைக் கொள்கையையும் வீட்டுக் கொள்கையையும் ஏற்ததாக மக்கள் இருந்திருப்பர். அறநெறி, உலகியலின்பங்களைத் தேடித்தராவிட்டால், அறவழியாற் பயன் என்ன என அவர்கள் ஆசங்கித்திருத்தல் கூடும். அதனால் வள்ளுவர் புகழ்பற்றிப் பாடுகிறார். புற நானூற்றுக் காலத்தில் வீரம் புகழைத் தந்தது. உலகத்துப் போன்றாது நிற்பது புகழல்லாலில்லை என்ற வள்ளுவர் கருத்து, இயற்கை நெறிக்காலத்திலும் தமிழ் நாட்டில் நிலவியது. புகழ் என்பதை இல்லறவியலில் கூறிய வள்ளுவர், தேவரருளம் கூட ஞானிகளிலும் பார்க்கப் புகழாளரையே போற்றுகிறது என்கிறார்.
<
உலத்திலுள்ள பெரிய அறமுறைகள் யாவும் வாய்மையை அடிப்படையாகக் கொண்டவை. உண்மை பேசுதலை வற்புறுத்தாத அறம் உலகியே இல்லையெனலாம். சத்தியமே கடவுள் என்ற வாக்கு உண்டு. வள்ளுவர் எடுத்துக்கூறிய வாய்மை, சமண சமயம் போற்றும் வாய்மையே அகிம்சையை, முதல் அறமாகக் கொண்டு உருவாகிய சமண தருமம். பிற உயிர்களுக்கு தீங்கு பயவாமையும் உடையதாய் நன்மையும் பயக்கக் கூடுமாயின் நடவாததைக் கூறுவதும் மெய் கூறுவதாகும், அகிம்சைக் கொள்கையால் ஏற்படும் கட்டுப்பாடு போக, குறள், வாய்மையைப் போற்றுவதில், வேறு அறநூல் எதற்கு பின் நற்கவில்லை.
குறளுட் காணப்படும் துறவியல் விரதம், ஞானம் என இரண்டு பிரிவுகள் உடையது. துறவறவிலின்படி, விரதத்தை அனுட்டித்துச் செல்ல, ஞானம் என்ற பகுதியில் அடங்குகின்றன ஞானம் என்ற பகுதியில் அடங்குகின்றன ஞானம் என்ற பகுதியின் முதலதிகாரம் நிலையாமை. நிலையாமையை அடிபடையாகக் கொண்டெழுந்தனவே பல்வேறுஇந்தியச் சமயங்கள் எனப் பரிமேலழகர் நிலையாமையை அறிமுகப்படுத்தும்போது கூறுவது அழகாக அமைந்திருக்கிறது.“நிலையாமையாவது தோற்றமுடையனயாவும் நிலையுதலிலவாந்தன்மை, மயங்கிய வழிப்பேய்த் தேரிற் புனல் போலத்தோன்றி, மெய்யுணர்ந்த வழிக்கயிற்றிலரவுபோலக் கெடுதலிற் பொய்யெண்ணும் அத்துவித சித்தாந்திகளும் நிலை வேறுபட்டுவருதலாற் கணந்தோறும் பிறந்திருக்குமென்னும் பௌத்த சித்தாந்திகளும் ஒருவாற்றல் வேறுபடுதலும் ஒரு வாற்றல் வேறுபடாமையும் உடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கேயுடையனவென்னும் பிற சித்தாந்திகளும் ஆகிய பல திறத்தவராலும் பொருளின் இயல்பு பலவாறு கூறப்படுமாயினும் அவரெல்லார்க்கும் இவற்றது நிலையாமை உடன்பாடு” என்றார் பரிமேழகர். மேலும் அவர், இளமை செல்வம் யாக்கை என்பன நிலைபெற்று நில்லாத பொருள்களென்றார்.
நிலையாமையைத் தொடர்ந்து துறவு கூறப்படுவது, அவைஇரண்டக்குமுள்ளே தொடர்பை்க் காட்டுகிறது. நிலையாமையை உணர்ந்து தெளியும் போது, பற்றுக்களைத் துறத்தலே, உய்திக்கும் வழி என்பது புலப்படும். அத்துறவு துன்பம் நீங்க உதவுகிறது. நிலையாமையுணர்ந்து துறவு நெறியில் நிற்கும் போது மெய்யுணர்தல் ஏற்படுகிறது. மெய்யுணர்தல் என்றால் உண்மைப் பொருளை உணர்தல். உண்மைப் பொருளை உணராமையே பிறவிக்குக் காரணமாகிறது உண்மையுணர்தல் நரகத் துன்பத்திலிருந்து ஒருவரை விடுவித்து அவருக்கு வீட்டின்பம் அளிக்கும் அவாவறுத்தல் என்பதே, ஞானம் என்ற பகுதியிற் கடைசி அதிகாரம். பிறவிக்கு வித்தாகிய அவாவை விடும் நிலையே வீட்டின்பமாகும். ஞானம் என்ற பகுதியின் வள்ளுவர் சமண சித்தாந்தத்தை எடுத்துக் கூறினர் எனலாம்1.
துறவியலில் விரதம் என்ற பகுதியில் தவமும் மிக முக்கிய இடம் பெறுகிறது தவத்தால் வரும் நன்மைகளை வள்ளுவர் பன்னிப் பன்னிக் கூறுவர். வள்ளுவர் கூறும் தவமும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதே. உறுகின்ற துன்பங்களைப் பொறுத்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவம் எனப்படுகின்றன. தவத்திற்கு இவ்வளவு மகிமை உண்டெனச் சமணம் முதலிய சமயங்கள் பிரசாரஞ் செய்தால் தவஞ்செய்பவர் போல நடித்து மற்றோரைச் சுயநலம் காரணமாக ஏமாற்றுவோர் பலர் காணப்பட்டிருப்பார். வள்ளுவர் காலத்திலேயே, இந்த நிலை ஏற்பட்டது. கூடாவொழுக்கம் என்ற பகுதியில் வள்ளுவர் போலி வேடதாரிகளைக் கண்டித்துள்ளார்.
விதிபற்றிய நம்பிக்கை இந்தியச் சமயங்களிற் சிறப்பிடம் பெற்ற போதிலும் சமணம், பௌத்தம், ஆசீவகம் முதலிய சமயங்களில் அது அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. வைதிக சமயங்களின் கடவுட் கொள்கை விதியின் முக்கியத்துவத்தை ஓரளவு குறைத்து விடுகிறது. ஊழ், தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருட் மொழியாக வழங்கப்படுவதுண்டு. விதியே வினைகளின் பயனைச் சம்பாதித்துள்ள ஆண்மாக்களுக்கு கூட்டி வைக்கிறது. நல்லூழ் அறிவை விரிவடையச் செய்து முயற்சியைத் தூண்டுகிறது. தீய ஊழ் சோம்பலையும் மடமையையும் உண்டாக்கிறது.
பிற அறநூல்கள்
திருக்குறள் அமைந்த அறவாழ்வில் அடிப்படையிலே பதிணென் கீழ்க் கணக்கு நூல்களாகவுள்ள ஏனைய அறநூல்கள் எழுந்தன. திருக்குறள் காட்டிய வழியில் திருக்குறள் கூறும் அறங்கள் சிலவற்றுள் கூடி முக்கியத்துவம் வழங்கி, சில சாதாரணமான அறச்செயல்களினையும் கோவைப்படுத்திச் சேர்த்துக் கூறுவனவே பிற அறநூல்கள். ஏணைய அறநூல்களுள்ளே தனிச்சிறப்புப் பெறுவது நாலடியார். இது திருக்குறளோடு ஒப்ப நோக்கிச் சேர்த்து மதிக்கப்பட்டு வருகிறது. திருக்குறள் உலகிலுள்ள பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்ட நாலடியாரும் ஆங்கிலத்தில் போப்பையரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிது. இரு நூல்களையும் மொழிபெயர்த்துப் பிற நாட்டாருக்கு நல்கும் பணியைச் சிறிது காலத்துக்கு முன்புவரை செய்தோர் கிறிஸ்த்துவ மத போதகர் ஆவர். திருக்குறளுள் நாலடியாரும் சமண சமயச் செல்வாக்குடன் காணப்பட்டபோதும், அந் நூல்கள் கூறும் அறங்களில் மிகப் பெரும்பாலன கிறிஸ்தவருக்கும் உடன்பாடகக் காணப்பட்டமையால் அந்நூல்கள் இவ்வாறு பிரபலமெய்தின.
நாலடியார் சமண முனிவராற்றிய பாடல்களின்தொகுதி என்ற கருத்து ஏற்படுகிறது. நாலடியார் வேளாண் மரபுக்கு வேதம் என்றொரு தனிச்செய்யுள் கூறுகிறது. வேளாளர் இராசத குணத்திற்குப் பதிலாகச் சாத்வீக குணத்தைப் போற்றியதை, இதுகுறிக்கப்படுகிறது போலும். போர் முதலியவற்றால் வேளாண்மைக்கும் நாகரிகத்துக்கும் அழிவு ஏற்பட்டதால், அமைதியான வாழ்க்கையை வேளாளர் விரும்பினர் போலும். மருத நிலம் நீர்வளம் நிலவளம் மிக்க உழவுத்தொழில் செழிக்கஇடமளித்தால், புலாலுண்ணாமை முதலிய அறங்களும் போற்றப்படக்கூடிய நிலையிலிருந்தன. குறிஞ்சி முல்லை, பாலை, நெய்தல் நிலங்களில் வாழ்ந்த மக்களுக்கு கொல்லாமை, புலாலுண்ணாமை முதலிய அறங்களை ஏற்பது இயலாத காரியமாக இருந்திருக்கலாம். மருத நிலத்தவர்கள் புறநானூற்றுக்கால முடிவிலாவது, தமிழ் நாட்டில் ஆளுவோராகச் செல்வாக்கு பெற்றுவிட்டனர். அறவாழ்க்கையை ஏற்று அதைப் பிரசாரம் செய்து, தமிழ்சமுதாயத்திலே தமது தலைமையை நிலை நாட்டுவதில் அவர். முன் நின்றிருக்கலாம். நாலடியார் சிறந்த உரிமைகளாலும் ஆற்றலுள்ள சொற்களாலும் உலக நடைமுறையைக் காட்டுவதிலும், பழமொழிகளாலும் பண்டைக் கதைகளாலும் உறுதிப் பொருளை எடுத்து வற்புறுத்தலின் ஈடும் ஏடுப்புமற்று விளங்குகின்றது.1
திருக்குறளிலும் பார்க்க, நாலடியாரில் உலகியலின்ப வாழ்க்கை மீது வெறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நாலடியார் முழுவதிலும் நிலையாமைக்கொள்கை ஊடுருவிச் செல்கிறது. திருக்குறளைப்போலன்றி நாலடியாரிலே துறவறவியலே முதலிற் காணப்படுகிறது நிலையாமையின் மூன்று பகுப்புக்களாகிய செல்வ நிலையாமை என்பன நூலின் தொடக்கதிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து அறன் வலியுறுத்தல் வருகின்றது. துாயதன்மை, என்ற பகுதியில் உடலின் அசுத்தம், சிறப்பாக பெண்ணுடலின் அசுத்தம் பேசப்பட்டு உலகியலின்ப வாழ்க்கைமீது வெறுப்புக்கருத்தே வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்களை இழிவாகக் காட்டினால் ஆண்கள் துறவை நாடுவர் என்று எண்ணிப்போலும் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சினம் இன்மை என்ற பகுதி இராட்சதக் குணத்தைக் கண்டிக்கிறதெனவும், பொறையுடைமை சாத்வீக குணத்தை போக்குறதெனவும் கொள்ளலாம். பழவினை என்ற பகுதி கர்மத்தையும் ஊழையும் சேர்த்துக் கூறுகிறது. மெய்யுணர்தலையொத்திருப்பினும் நாலடியாரில் இல்லறவியலில் இடம்பெறுகிறது.
உலக வாழ்க்கையில் வெறுப்பு, நூல்முழுவதும் தொனிக்கிறது. உலக வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் அழிக்கவல்ல பல நாடுகள் நாலடியாரில் காணப்படுகின்றன. உலக வாழ்க்கையிற் காணக்கூடிய குறைபாடுகளை எடுத்துக்காட்டி, உலக வாழ்விலுள்ள பற்றை அறச்செய்கறது நாலடியார். “மக்கள் மனம் வேறு, செய்கையும் வேறு”, “மனைப்பாசம் கைவிடாய், மட்கட்கு என்றேங்கி எத்தனை காலம் வாழ்வாய்?”, “ நல்வினையே உயிர்க்குப் பயன் தரவல்லது” என்பன உலக வாழ்க்கை பற்றிய நாலடியார் நோக்குக்கு உதாரணங்கள்.
பொதுமகளிர் ஒழுக்கத்தைக் கண்டிப்பதிலும் திருக்குறளுக்கும் நாலடியாருக்கும் வேற்றுமை காணப்படுகிறது. பொது மகளிரிலிருந்து ஒதுங்கி வாழும்படி வள்ளுவர் அறிவுரை வழங்குகிறார். நாலடியாரோ உணர்ச்சியை மூள்விக்கும் ஆற்றல் மிகவுள்ள மொழியிற் பொதுமகளிரைக் குறைகூறுகிறது. பொதுமகளிரோடு அவர்களுடைய பண்புகளுக்கும் தீவிர கண்டனத்துக்கு உள்ளாகின்றன. அவர்களுடைய தொழிலின் தந்திரங்களை எடுத்துக்கூறி, அவர்களின் கூட்டுறவு பற்றிக் கவனமாக இருக்குமாறு நாலடியார் எச்சரிக்கை செய்கிறது.
திருக்குறளைப்போல அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் கூறவேண்டும் என்ற நோக்காற்போலும், காமத்துப்பால் வகுக்கப்பட்டுக் கற்புடை மகளிர், காமம் நுதலியல் என்ற இயல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கற்புடை மகளிரைப்பற்றி வள்ளுவர் இல்லறவியலிற் கூறினார். நாலடியாரிற் களவொழுக்கத்தை ஏற்பதற்குச் சான்றில்லை. திருமணத்தின் பின் மட்டுமே காம இன்பம் நுகரவேண்டும் என்பது நாலடியார் கருத்துப் போலத் தெரியவருகிறது. வாழ்க்கையிலே துன்பமே அதிகம் என்பதை உணர்ந்து உயர்ந்தோர் துறவறத்திலீடுபட, இழிந்தோர் இல்லறத்தில் ஈடுபடுவர்1. இல்லறத்தை அறவே விலக்கிட இளமையிலே துறத்தல் வேண்டும்2 என சமணக் கொள்கை கூறப்பட்டது. இவற்றை நோக்கும் போது குறளைப்போலன்றி, நாலடியார் துறவையே வற்புறுத்த எழுந்த நூல் எனலாம்.
உலக வாழ்க்கையில் அறவழியில் நிற்போர் சிலர் தாழ்வதும் தீயவர் சிலர் வளமுற்று வாழ்வதும் என்றும் காணக்கூடியன. நாலடியாரைப் பாடிய புலவர்களும் இதைக் கவனித்திருக்கின்றனர். கலைமகளின் அருளுக்குப் பாத்திரமானவரைப் பூமகள் சேர விரும்பாததால் கல்வியும் பண்பும் மிக்கோர் வறியோராகின்றனர்3. கல்லாதாரை வெறுங்கோது என்று கூற்றுவன் விட்டுச் சென்று விடுவதால் கற்றவர் இளமையில் இறத்தலும் கல்லாதவர் நீண்டகாலம் வாழ்ந்தலும் உளவாகின்றன4. “நல்லவர்களை நீக்கித் தீயவர்களிடம் சென்று தங்கும் திருமகளே, நீ நீறாய்ப் போவாயாக,” எனச் சாபமிட்டார் புலவர்.5
நாலடியாரிற் குறிப்பிடக்கூடிய வேறு சில கருத்துக்களும் உண்டு. தன்னைத்தானே சான்றோனாகக் கொண்டு புகழ்தல் ஆகாது.6 வினையே ஒருவன் இறக்கும் போது உடன் செல்வது1. ஒரு பாட்டு, கல்வியிற் கற்பவை எவையென வரையறை செய்கிறது2. நிலையாமை, நோய் மூப்பு,சாக்காடு என்பவற்றை பற்றிப் பேசும்மெய்ஞ்ஞான நூல்கள் கற்கப்படவேண்டியன என்றும், சத்தம் சோதிடம் என்பன பயனற்றன என்றும் கூறப்பட்டன.“தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க” என்று ஒரு செய்யுள் கூற“தம்மை இகழ்ந்தமையைப் பொறுத்து, 'தம்மை இகழ்ந்தமையால் இவர் நரகத்தையடையவே' என்று பரிதல் சான்றோர் கடன்” என்று இன்னொரு செய்யுள் கூறுகிறது3.
பழமொழி நானூறு என்ற நூலொன்றும் அறங்களை வலியுறுத்துவதாக முன்றுறையரையனார் என்ற சமணரால் அக் காலத்தில் எழுதப்பட்டது. பழமொழிகள் எனப்படுபவை புதியனவாக அமைக்கப்படாது வழிவழியாக மக்களிடையே வழங்கிவரும் சுருதியுக்தியனுபவங்களுக்கு இயைந்த அறிவுரை வாக்குகளாகும். இவை கருத்துக்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கேட்போர் உளங்கொளும் வகையிலும் தெரிவிக்கின்றன. இவை, பொதுமக்களின் அனுபவம் வாயிலாக அவர்களது உணர்ச்சியினின்றும் வெளிப்படுவன ஆகும்.
பழமொழிகள் சில, குறுந்தொகை, அகநானூறு என்பவற்றிலும் பிற்கால இலக்கியங்களிலும் கையாளப்பட்டுள்ளன. ஆனால், நூல்முழுவதிலுமமையுமாறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஏதுவாசகமாக அமைத்து, அவற்றால் நிலைநாட்டிக் கூறப்படும். நீதிகளையும் அறங்களையும் விதந்து கூறி ஒவ்வொரு செய்யுளிலும் விளக்கிய நூல் இதுவே. நாலடியார், திருக்குறள் என்பவற்றில் வந்துள்ள பல கருத்துக்களைச் சிற்சில இடங்களில் அடியொற்றிச் செல்கிறது பழமொழி நானூறு தூங்கெயிலெறிந்த சோழன், கரிகாலன், பாரி, பேகன் முதலியோரைப்பற்றிய முற்கால நிகழ்ச்சிகளுக்கு பொற்கைப் பாண்டியன், மனுநீதிச் சோழன், முதலியோரைப் பற்றிய பிற்காலக் கதைகளும் பிறகால மொழி வழக்குகளும் இந்நூலிற் காணப்படுகின்றன. இந்நூற்பாடல் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு பொருள்தரும் முறையினது. அதிகார முறைபோன்ற பொருட்தொடர்புடையதாக அமைக்கப்படவில்லை. “நிறைகுடம் நீர்தளும்பலில்” “கதம்பட்டு நாய் கவ்வின் பேர்த்து நாய் கவ்வினாரில்”,“முள்ளினால் முட்களையுமாறு” , ஆயிரம் காக்கைக்கோர் கல்”, “யானையால் யானை யாத்தற்று”, குரங்கின் கையிற் கொள்ளி கொடுத்து விடல்” முதலிய பழமொழிகள் மக்களை நெறிப்படுத்துவதில் ஆற்றல் மிக்கனவாதலால், பழமொழிகளோடு இசைந்து வரும் அறக்கருத்துக்கள் மக்கள் உள்ளத்தை கவ்விப்பிடிக்கத்தக்க ஆற்றல் பெற்றன.
அறக்கருத்துக்களை ஏற்றிராத சமுதாயம் நோய் கொண்டது என நினைத்து அறக்கருத்துக்களை மருந்ததாகக் கொண்டு, மருந்துப் பெயர்களில் அறநூல்களை எழுதி வெளியிடும் முயற்சியும் அறநூல்கள் காலத்தில் நடந்தது. சமண பௌத்த துறவிகள் மக்களுக்கு மருந்து தானம் செய்வதிலும் கவனம் செலுத்தினர். அசோகன் தமிழ் நாட்டுக்குத் தருமப் பிரச்சாரங்களை அனுப்பின பொழுது, தருமம் செய்ய வல்லவர்களையும் அனுப்பினான் என்று அவனுடைய சாசனங்களிலிருந்து தெரியவருகின்றது.திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்ற அறநூல்கள் இவ்வகையில் எழுந்தன. நோய் என்பது தளர்ச்சி, மெலிவு,நொய்மையைச் செய்வது நோய். வந்த நோயை நீக்குவது நோயை வராமல் தடுப்பது மருந்து. திரிகடுகம், சிறு பஞ்சமூலம், ஏலாதி என்ற மருந்துகள் உடல் நோயைத் தீர்ப்பது போல, அதே பெயர்களால் நல்லொழுக்க முறைகளைத் தொகுக்கப்பட்ட அறநூல்கள் உளநோயைத் தீர்க்க உதவின. திரிகடுகம் மூன்று மருந்துச்சரக்குகளையும் சிறுபஞ்சமூலம் ஐந்து மருந்து வேர்களையும் ஏலாதி ஏலம் முதலிய ஐந்துக்குமேற்பட்ட மருந்துச் சரக்குகளையும் கொண்டாக்கப்படுவதால் இப் பெயர்களுடை நூல்களும் முறையே மூன்று, ஐந்து, ஐந்திற்கு மேற்பட்ட ஒழுக்க முறைகளைத் தொகுத்துக் கூறுகின்றன. மேற்கூறிய மருந்துகளிற் சேரும் ஒவ்வொரு மருந்துச் சரக்கும் தனித்தனியே உடலுக்குப் பலப்பல நலங்களைச் செய்யும் ஆற்றல் படைத்தது. அவை ஒன்று சேருமிடத்து மேலும் பல தனி நலங்களை விளைவிக்கிறன. இந் நூல்களிலுள்ள ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படும் அறங்கள்அவ்வாறு பயன்படுமென எதிர்பாக்கப்பட்டது.
திரிகடுகம் பாடியவர் ஒரு வைணவராகலாம் எனக் கடவுள்வாழ்த்திலிருந்து தெரிய வருகிறது. மும்மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இணைத்துக் கூறும் முறை இந்நூலிற் காணப்படுகிறது. துறவறத்திலும் பார்க்க, இல்லறமே சிறப்பிற்றுக் கூறப்படுகிறது. இல்லறம் நல்லறமாக மலர்வதற்கு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவர் முப்பத்தைந்து இடங்களிலே இல்லாளைப் பற்றிக் கூறுவர். நூலிலுள்ள நூறுபாக்களில் நன்மை தருவன எவையென்று கூறுவனவாக முப்பத்திநான்கும் அமைத்திருக்கிறார். வைதிக சமயத்தவர் எழுதிய நூலாதலினாற்போலும் பிராமணரைப்பற்றிய குறிப்பும் பல இடங்களிற் காணப்படுகின்றது. பிராமணர் அறம் நினைத்து வாழ்ந்தால் மழைபெய்யும் என்று கூறுகின்றது ஒரு செய்யுள். மூன்று கடன் கழித்த பார்ப்பான் ஒரு செய்யுளிற் சிறப்பிக்கப்படுகின்றான்2. நல்ல அறிவினையுடைய நான்மறையாளரின் உபதேச வழிச் செல்லுதல் உயர்ந்தோர் இயல்பு3 எனவும்,நெருங்கிப்பழகியவராயிருந்தாலும் நெருப்பைப்போலப் பிராமணரை மதித்து நடத்தல் வேளார்க்குச் சிறப்பு எனவும் கூறப்படுகின்றன. நாவினால் வேதம் கரைகண்ட பார்ப்பான் தனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்வதனாற் பாக்கியசாலி எனப்படுகின்றான்4.
அகிம்சை பற்றிய சமணர்பிராசாரம் நாட்டிற் செல்வாக்குப் பெற்றதனால் ஏனைய சமயத்தினரும் அகிம்சையைப்போற்ற வேண்டிய நிலைக்குள்ளாகிவிட்டனரெனத் தெரியவருகிறது4. கொல்வது எவ்விடத்தும் நிக்கி வாழ்வானின் சிறப்பு ஒரு செய்யுளிற் கூறப்படுகிறது1.“ ஊன் உண்டு உயிர்கட்கு அருளுடையேம்” என்பவனும் கேள்வியில் கொள்வானும் ஒரு செய்யுளிற் கண்டிக்கின்றனர்2. கொலை நின்று தின்று ஒழுகுவான் இழித்துரைக்கப்படுகின்றான்3. கொலையை அஞ்சாதவன் மூடன்4.
கல்வி பற்றிப் பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. கலை பயிலிடத்தைப் பள்ளியென்னும் வழக்கு ஒரு செய்யுளிற் காணப்படுகிறது5. நாட்டிற் பள்ளிகள் பெருகியதனாற் போலும், ஆசிரியன் மாணாக்கன் என்பவர்களைப் பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. சீறியும் வெகுண்டும் உரைக்கின்ற ஆசிரியனது பள்ளிக்கு அறிவுடையார் போகார்6. ஒழுக்கச் சிறப்புடை ஆசான் ஒருசெய்யுளிற் குறிக்கப்படுகின்றான்?. இந்நூலிற் கல்விச் சிறப்பும் விசேடமாக எடுத்துக்கூறப்பட்டது. மறுமைக்கு அணிகலம் கல்வி 8 எனவும் நரகத்தை சேராமைக்கு ஏதுவாகஅறநெறி சேர்ந்து வாழ்தலுக்கு வழிகாட்டும் பெருநூலை இயற்றவேண்டும் எனவும் தேடிப்பயிலவேண்டும்9 எனவும் கூறப்படுகின்றன. அறநெறிப்பிரசாரம் வைதிக சமயத்தினரின் கருத்திலும் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டதென்பதை இது காட்டுகிறது. நன்மொழியை சிற்றினம் அல்லாதாரிடத்துச் சொல்லல் கற்றவர் கடமையாகும்10 எனவும் பிறருடைய கல்வியிற் குறைகாணவேண்டும் என்பதற்காகக் கண்டன நூலுரைகளைக் கேட்டுக் காலம் போக்குபவன் உமிகுத்திக் கைவருந்துபவன்11 எனவுங் கூறப்படுகின்றன.
திருகடுகத்தில் வேறுபல அறக்கருத்துக்களும் உண்டு. அறக்காரியங்களுக்காக விடும் பொருளை அபகரிப்பவரிடம் கற்றறிபவர் உண்ணார்12 எனப்படுகிறது13 . வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்1 எனவும் பதிலுபகாரங் கருதாது கொடையறச் செய்ய வேண்டும்2 எனவும் கூறப்படுகின்றன. அக்கால ஒழுக்கங்கள் சில நல்லன, தீயன என்று வகுக்கப்படுகின்றது. உடுத்தாடையில்லாது நீராடல், பெண்டிற் கணவரோடு பிணக்குற்று மன்றங்களிற் சென்று வழக்குரைத்தல், பிறர் அடைக்கலமாக வைத்த பொருளைக் கவர்ந்து கொள்ளுதல், பொருளை வட்டிக்குக் கொடுத்துப் பெருக்குதல், கற்புடைய காதலியை கைவிடுதல், என்றின்னவை தீயன எனப்படுகின்றன. பூங்கா வைத்தல், அறைக் குளம் தோண்டுதல், உண்ணுநீர்கிணறு தோண்டுதல் முதலியன நல்லன எனப்படுகின்றன. தந்தையையும் தாயையும் வழிபடுதல் வேண்டும் 4 எனவும் இவர்கள் இருவரையும் அரசன், ஆசான், தமையன் என்பவரோடு சேர்த்து ஐங்குரவர் என்று கொண்டு, அவர் ஆணைப்படி நடக்க வேண்டும்5 எனவும் உயர்ந்த குணங்களுடைய தவசிகள் மிகச்சிலராகவே காணப்படுகின்றனர்.
சிறுபஞ்சமூலம் சமணர் இயற்றிய நூலென்பர் கொல்லாமையாகிய அறத்தைச் சமண தத்துவம் கூறுகிற மாதிரி விரித்துக்கூறியுள்ளார். கொன்றானுக்கும் கொலைக்கு உடன்பட்டானுக்கும் கொல்லப்பட்டதன் ஊனைக் கொண்டானுக்கும், கொன்றதனை அட்டானுக்கும் அட்டதனை இட உண்டானுக்கும் பாவம் கிடைக்கும்7 எனவும், கொன்று உண்பான் நாச்செத்துவிடும்8 எனவும், கொல்லுதல் நஞ்சு; ஊனைத் துய்த்தல் கொடு நஞ்சு9 எனவுங் கூறப்பட்டுள்ளன. இவ்வாறே கொல்லாமை புலாலுண்ணாமை ஆகிய இரண்டும் பலபடியாக மீளமீளவற்புறத்தப்பட்டன. இந்நூலாசிரியரும், கல்வியை இரண்டாக வகுப்பர், சத்தம் மெய்ஞானம்,தருக்கம், சமயம், வீடு என்பன பற்றிக் கற்பவன் தலையாய சீடன்1 என்றும், கணிதம், யாழ், சாந்து எழுதல், இலை நறுக்குப்பற்றிக் கற்பவன் இடையாய சீடன்2 என்றும் கூறியுள்ளார் இளமையிலே தவஞ்செய்யத் தொடங்க வேண்டும்3 எனவும் நல்லறத்தாருக்கு அட்டு இட்டு உண்டு ஆற்ற வாழ்ந்தோர்களே, இம்மையில் அட்டு இட்டு உண்டு ஆற்ற வாழ்வார்4 எனவும் பத்தினி, சேவகன், தவசி, சான்றோர் ஆகியோர் செத்தபின்பு இவர்களது செம்மையை அறிக5 எனவுங் கூறப்படுகின்றன.ஒழுக்கம் குறைந்தவர்களைக் கடுமையான வார்த்தைகளாற் கண்டித்தார். பரத்தையர்சேரி சேர்பவன் நாய்6 எனப்படுகிறது. உழவுத்தொழிலின் சிறந்த செய்முறை இந்நூலிலும் கூறப்படுகின்றது.7 பெண்ணைத் தந்தை, உடன்பிறந்தான், மாமன்,கொழுநன், மகன் முதலியோர் காப்பாற்ற வேண்டும் எனவும் நீருதவுந் தருமம், நிழல் மர முதலிய ஆக்கல்,தளிநாட்டல், சாலைநாட்டல் என்பன அறச்செயல்கள்8 எனவும் குளந்தொட்டு, காவு பதித்து வழி சீத்து உழுவயல் ஆக்கி உண்ணீருமாயுதவுங் கிணறு தோண்டுவது சுவர்க்கத்துக்கு வழி9 எனவுங் கூறப்படுகின்றன. துறவறம் இல்லறம் இரண்டும் ஒரு செய்யுளில் இடம்பெறுகிறது10. ஆசான், மாணாக்கன் ஆகிய இருவரைப் பற்றியும் பல ஒழுக்கங்கள் கூறப்பட்டன11, எல்லாம் அறிந்தவர் ஒருவருமில்லை; ஒன்று மறியாதவர் எவருமில்லை 12என்ற உண்மை கூறப்படுகிறது.
பார்ப்பனரைப் பற்றிச் சில செய்திகள் உள. சமூகத்தில் பார்ப்பனரும் குறிப்பிடத்தக்க அளவு தொகையினராக இடம் பெற்றதனாற்போலும், சமண சமய அறநூல்களும் அவர்களைப்பற்றிக் கூறுகின்றன. அறநூல்கள் ஒரு சமயப் பிரிவினரை நோக்கி அன்றிச் சமுதாயம் முழுவதையும் நோக்கி எழுந்தன எனக்கொள்வதற்கு இதுவும் ஒரு சான்று. வேள்வி உணர்ந்து செய்பவன் பார்ப்பான்1எனவும், பகுத்து உண்பவனே பார்ப்பான்2 எனவுங் கூறப்படுகின்றன. பழி களைபவனே சான்றவன்3என்பதில் சான்றோர் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுக்கப்படுகின்றது.
பெண்கள் பற்றிக் கூறும்போது, சமண அறிஞர் நோக்குத் தென்படுகிறது. பெண் விரும்புபவளாய்க் காட்டிலும், அவளை விரும்பாமை4 சிறப்பக்கப்படுகிறது தீய பெண்கள் யார் யார் என்று ஒருபாட்டுக்கூறுகிறது.5 எவ்வெத்தகைய பெண்களைப் பகை போலப் பாவித்து ஆண்கள் ஒதுங்கி நடக்கவேண்டும் என்று ஒரு செய்யுள் கூறுகிறது. 6மக்கள் ஒழுக்கத்தைப் பற்றிய அவநம்பிக்கை நூலில் இழையோடுகிறது. பிறரில்லாளை விரும்பாதார் ஆராய்ந்தால் மிகச் சிலரே7 எனவும், நண்பர் வீட்டில் அவரில்லாதபோது தனியே தங்கித் தூங்காதோரே சான்றோர்8 எனவுங் கூறப்படுகின்றன.
இந்நூலில் வேறுபல அறக்கருத்துக்களும் உண்டு. கன்று உண்டு வளர்தற்குப் போதுமான பாலை அதற்கு விடாமல் சாகும்படி பசுவின் பால்கறத்தலை ஒரு செய்யுளும், கன்று இறந்த பின் தோற்கன்று செய்து பசுவுக்குக் காட்டி அது பால் சுரக்கச் செய்து பால் கறக்கும் செயலை இன்னொரு செய்யுளும் கண்டிக்கின்றன9. இச் சமண நூல் இலாபத்தையே கருத்திற் கொள்ளும் வணிகரைப் பற்றி கூறுகிறது. புகழ் மறுமையின்பம் முதலிய பயன் கருதி ஈவோனை, வட்டி முதலிய இலாபங்கருதித் தன் முற்பொருளைச் செலவிடும் வணிகனோடு ஒப்பக் கருதிக் கூறுகிறது.10 கற்புடைய பெண் அமிர்து எனப்படுகிறது11. “அடியவர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்” என்று தொல்காப்பியம் கூறுவதனோடொப்பச் சமூகத்தில் சேவகர் தோன்றி விட்டனர். சேவகனும் ஆகவே செய்யின் அமிர்து1 என்பர்.
சமூக சேவை இந்நூலிற் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சமூக சேவை செய்வார் பெறும் பயனை உயர்ந்ததாகக் கூறுமுகந்தால், அப்பணி ஊக்கிவிக்கப்படுகிறது.சமண பௌத்தத் துறவிகள் சமூகசேவை மூலமாகவே மக்கள் மனத்தை வசப்படுத்திளர் என்னுங் கருத்து நிலவுகிறது. வலியிழந்தோர், மூத்தார் வடக்கிருந்தோர்,நோயால் நலிவுற்றார் (தேசாந்திரியாகி) நைந்தார்-இவர்களுக்கு ஈபவர் மறுமையில் மன்னராவர்2 எனவுஞ், சிக்கர், சிதடர், சிதலை வாயுடையார், துக்கர், துருநாமர் இவர்களுடைய நோயை முற்பிறவியில் நீக்கியவரே இம்மையில், நோயின்றி வாழ்வார்3 எனவும், புண்பட்டார், போற்றுவார் இல்லாதார், போகுயிரார், கண்கெட்டார், கால் இரண்டும் இல்லாதார், இவர்களுக்கு ஈபவர் தம் வாழ்நாள் முழுவதும் இன்ப வாழ்க்கை பெறுபவராவர்4 எனவுங் கூறப்படுகின்றனர். அற நூல்வழி ஒழுகாதார் இழிசினர் என்ற கருத்திலோ என்னவோ இழிசினர் குறிப்பிடப்படுகின்றனர்5. தானத்தால் பூமியில் இன்பமும், தவத்தாலர் சுவர்க்கமும், ஞானத்தால் வீடும் மறுமையில் ஆகும் என்பது சிறுபஞ்சமூல ஆசிரியர் கருத்து ஆகும்.6 இக் கருத்துச் சமணநூல் வழக்கு.
ஏலாதி இயற்றியவரும் சமணர் ஆவார். நாடகம் காம உணர்ச்சியை வளர்க்கும் என்று கொண்ட சமணர், நாடகத்துக்கு எதிராக பிரசாரம் செய்தனர். நாடகம் சேர்ந்தால்,பகை பழி, தீச் சொல், சாக்காடு முதலியனவரும்7 எனப்படுகிறது. சமூக சேவையை வற்புறுத்தும் சிறுபஞ்ச மூலமாசிரியர் அச்சேவை செய்வதால் ஏற்படும் பயனை வகுத்துக் கூறியதுபோல. ஏலாதியாசிரியரும் வகுத்துக் கூறியுள்ளார். மண்ணாளும் மன்னராதற்கு ஏற்ற ஒழுக்கமுறை இவையென இருபத்தொரு வெண்பாக்களில் ஆசிரியர் வகுத்துக் கூறியுள்ளார். துறவிகள், மாணவர், தென்புலத்தார்,வறியவர், சிறுவர் துணையற்றவர், சான்றோர் இவர்களுக்கு உணவு பகுத்துக் கொடுப்பவர் மறுமையின் மன்னராவர்1 எனப்படுகிறது. பெண்களின் வெறுப்பும் ஒருபடி உயர்ந்து காணப்படுகிறது. பெண்களின் சொற்களை நம்பாமை, தவம் புரிவாருக்கு உணவு, உதவி முதலியன வழங்குதல் அரச வாழ்வு தரும்2 எனவுங் கள்ளுண்ணாமை, கள்ளுண்பவரோடு பழகாமல் இருத்தல் மன்னராக்கும்3 எனவும் கூறப்படுகின்றன. அடிமை வேலை செய்வோர் குறிப்பிடப்படுகின்றனர்4. புறநானூற்றுக்காலத்தில் மகட்பாற் காஞ்சிபோருக்கு வழிவகுத்தலையும் பெண்ணின் பெற்றோர் தலையீடு காதலர் வாழ்வைச்சிதைத்ததையும் கண்டு போலும் கன்னியை இரப்பவர்க்கு இல்லையென்னாது கொடுப்பவர் குபேர வாழ்வு பெறுவர் என்று கூறுகிறார்5. வழியிலே தங்குமிடங்கள், அம்பலங்கள் அமைத்தல்6. தவசிக்கும் பார்ப்பாருக்கும் ஈதல்7.கருவுற்றார், கருவுயிர்க்கும் போது துன்புறுபவர், கருவுபிர்த்தவர் ஆகியோருக்கு உதவுதல்8 நோயாளருக்குத் துன்பம் தீர்த்து உணவளித்தல்9. உணவு, ஆடை, எழுத்தாணி, புத்தகம் மாணவருக்கு வழங்குதல்10 மன்னராக்கும் என்பர்.
விண்ணுலக வாழ்வு அடைபவர் யார்யார் என்று எட்டுப்பாடல்களிற் கூறுகிறார். கொல்லாமை, புலாலுண்ணாமை, பிற உயிர்கட்குத் துன்பஞ்செய்யாமை11.தம்மைப்புகழாமை பிறரை இகழாமை என்பன விண்ணுலக வாழ்வு தரும்12 என்பர். பெண்கள் சொல்லை ஏற்றுக்கொள்ளாதவன், பெண்களை விரும்பாதவன் விண்ணுலகத்திலுமில்லை13 என்று சொல்லித் தம் பெண் வெறுப்பைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். காலனுக்கு அஞ்சி வீடு பெற முயல வேண்டும் என்று ஏலாதியாசிரியர் போதிக்கிறாரெனலாம். காலன் தவிர்க்க முடியாதவன்.அவன் தன் உயிர் கவர்வதற்கு வருகையை ஒழிதலை விரும்புவோன் நல்லொழுக்கம் மேற்கொண்டு வீட்டு நெறி நிற்றல் வேண்டும்1 என்பர் அறநூல் வழி நின்று ஒழுகுதலை, காவலன் வரும் வழியைத் தடுக்கும் அரணாகக் கொள்ளுதல் அழகிதான செயலாம். எனவே, மரணமும் அதனைத் தொடர்ந்து மறுபிறவியும் எய்த ஏதுவான பற்றும் இருவினையும் ஒருவனுக்கு உண்டெனிற்றான், அவனுயிரைக் காலன் வந்து கவர்தலும் புண்ணிய பாவம் பயனுகர்ச்சிக்கு ஏற்ப நரகத்திலோ சுவர்க்கத்திலோ போக பூமியிலோ அவ்வுயிரைக் கொண்டு சென்று வேறு உடலிற் புகச் செய்தலும் இயலும், அதனால், பற்றற்று நன்நெறியினை, விட்டு நெறியொழுக்கத்தினை மேற்கொண்டவன், தேகாந்திய காலத்தில் பிறவாநெறியாகிய வீட்டினை எய்துவான். ஆகவே, அவனிடம் காவலன் செல்வதற்கு உரிய வேலையில்லை2. கூற்றுவன் பயத்தைக் கொண்டு ஆசிரியர் அறத்தை வலியுறுத்துகிறார்.
நான்மணிக்கடிகையின் ஆசிரியர் வைணவரென்பர். இல்லறம் இந்நூலிற் சிறப்பாக கூறப்படுகிறது இல்வாழ்வாரில்லாவழி அரசனுக்கு உயிர் வாழ்தலில்லையெனவும், அரசனில்லாவழித்தவத்தினர் உயிர்வாழ்தல் இல்லையெனவும், தவத்தினர் இல்லாவழி மழையில்லையெனவும், மழையில்லாவழி மாநிலத்தார் உயிர் வாழ்தலில்லை எனவும் இந்நூல் கூறுகிறது4. மனைக்குப் பாழ் மனையின்மை5 எனவும், மனைக்கு விளக்கம் மடவாள்7 எனவுங் கூறப்படுகிறது. ஆனால், மாண்புடைய பெண் பத்தினியாக இருக்கவேண்டும் என்ற இலட்சியம் இங்கும் காணப்படுகிறது. குலமகளுக்கு கணவனிலும் சிறந்த உறவினர் இல்லை8 எனவும் தகையுடைய பெண் இனிது பேணி வழிபடின்1 எனவும் வீட்டிலிருந்து தீயவழியில் ஒழுகுபவள் கூற்றமாவாள்2 எனவங் கூறப்படுகின்றன.
தாமச குணத்தின் ஓர் அம்சமான சினத்தைக்கடிய வேண்டும் என்பதை இந்நூலாசிரியர் பல இடங்களில் வற்புறுத்துகிறார். வெகுண்டவருக்கு எந்த அறிவும் தோன்றுகிறது3 என்றும் வெகுளியை விடவேண்டும்5 என்றும், ஒருவருடைய இளமைப்பருவத்து, அவருடைய உறவினரோடு கோபங் கொள்வது குற்றம் ஆகும்6 என்றுங் கூறியுள்ளார்
கல்வியை வற்புறுத்திக் கூறுவதிலும் இவர் சிறப்பிடம் பெறுகிறார். கல்விப் பயனை எடுத்துக்கூறும்போது,கற்கக் கழிமடம் குறையுமென்றும், கழிமடம் குறைய உலகின்கோள் உணருமென்றும், கோள் உணரத் தத்துவமான நெறிபடரும் என்றும், அவ்வாறுபடர இவ்வுலகிற் புகழும் பின்பு மேலுலகமும் கிடைக்கும்7 மென்று கூறப்பட்டது. இந் நூல் இவ்வுலகப் புகழ் தத்துவ நெறி படர்வதால் ஏற்படும் என்று கூறுவது நோக்கத்தக்கது. கற்றலின் வாய்த்த பிற இல்லை8 என்றும் ஒருவன் மாசறக் கற்பானாயின் அவன் அறிவு நன்றாகும்9 என்றும்,கற்றவன் தளர்ச்சியுற்றால் எழுந்திருப்பான், கல்லாத பேதை வீழ்ந்தால் கால்முறியும்10 என்றும், கல்லாகிவிட்டால், குலமும் குடிமையும் அழிந்துவிடும்11 என்றும், கல்லா ஒருவருக்குத் தம் வாய்ச் சொல்லே கூற்றம்12 என்றும்,ஆசாரம் என்பது கல்வி13 என்றும் கூறப்படுகின்றன.
இது வைதிக சமய நூலாததால், அந்தணர் சிறப்பித்து கூறப்படுகின்றனர். அந்தணரின் மிக்க பிறப்பில்லை14 என்பது பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் நிலை ஏற்பட்டு விட்டதைச் சுட்டுகிறது. அந்தனர் உள்ளம் என்றும் அறத்தைப் போற்றும்1. எனவுங் கூறப்படுகின்றன. வேளாண்மை கேள்வியோடு ஒத்தது3 என்பதில் வேளாளர் சிறப்பிக்கப்படுகின்றனர். எருது உடையவனே வேளான் எனப்படுகிறான்.4
அகிம்சைக் கொள்கை இங்கும் சிறப்பிடம் பெறுகிறது. ஊன்உண்டல் செய்யாமை உயிர் தனக்குப் பற்றுக் கோடாகக் கைக் கொள்ளவேண்டிய நெறியாகும்5 எனவும், உயிர் கொல்லாது உண்பவனே இனிது உண்பவன் எனப்படுவான்6 எனவும், உயிருக்குத் துன்பம் செய்வதை விடவேண்டும்7 எனவும், எல்லா இடத்துங் கொலை தீது8 எனவும், கொல்வதற்காகப் பிறஉயிர்களை வளர்த்தல் குற்றம், விலைக்கு ஊன் வாங்கி உண்ணுதலும் குற்றம்9 எனவும் கூறப்படுகின்றன. பௌத்தம் கூறும் அகிம்சை பூரணமற்றது என்று சமணர் கூறுவதற்கு ஏற்றதாக அமையும் அறக்கருத்துக்களையும் நான்மணிக்கடிகை ஆசிரியர் இங்ஙனம் கூறியுள்ளார்.
இந்நூலில் இடம்பெறும் வேறுகருத்துக்களையும் எடுத்துக்காட்டலாம். தன்னைப் பழிக்கத்தக்காதான நெறிமுறையில் ஒழுகல் பாவம் எனப்படுகிறது10. உயிர் இயல்பு ஒரு செய்யுளிற் கூறப்படுகிறது11. தந்தை, தாய், உவாத்தி என்போர் முன் செய்த வினைக்கேற்பவே அமைகின்றனராம். ஐம் பொறியையுங் கட்டுப்படுத்த வினைகெடும் என்கிறார்12. பொறியடக்கம், புனலடக்கம் எல்லா சமயத்தாரும் ஏற்ற நெறியாகிவிடுகிறது. நற்செய்கைகளால் மனிதர் உயர்ச்சி பெறுவர்13 எனவும் தாயிற் சிறந்த கடவுளில்லை14 எனவும் அறம் அல்லாதவை செய்பவருக்கு அறமே கூற்றமாகவரும்1 எனவும் கூறப்படுகின்றன. கூத்திற் பாடல் பெற்ற முக்கியத்துவம், கூத்து ஒருவன் பாடலாற் சிறப்புப் பெறும்2 என்பதனாலே தெரியவருகின்றது. மக்களைக் கல்லாமல் வளரவிடுதல் தீது3 என்றுங் கல்லாதவர், பேதையர் ஆகிய இடவர்களிடத்திற் கற்றவன் மதிப்புப் பெற்றான் 4 என்றும், கணவனுக்கு வருமானம் குறைவானாற் பெண் அவன் சொல்வழிப் பணிந்து நடவாள் என்றும், முற்பிறப்பிற் தவம் குறைந்தால், அதன் பின்னர்த் தீவினைப்பயன் வந்து சேர்ந்து விடும்5 என்றுங் கூறியுள்ளார்.
முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் வைதிக சமயத்தவர் ஆவர். இன்பம் விரும்புபவர் துன்பத்தை அடைதலும் துன்பத்தை விரும்புபவர் இன்பத்தினை அடைதலும் எளிது என்று எளிய பத்துக் கூறுகிறது. ஒழுக்கமுடைமை கற்றலிலும் சிறந்தது என்பது சிறந்த பத்தின் கூற்று நல்ல குலத்தவளாய் இருப்பதிலும் கற்புடையவளாயிருத்தல் சிறப்பு என்பது அதே பத்திலிருந்து தெரியவருகிறது அறியாததேசத்து ஆசாரத்தை தவறாக மதிப்பிட்டு பழித்தல் தகாது. வறியவன் கொடையாளியாயிராமைப் பழித்தல் தவறு (பழியாப் பத்து). மிக மூத்தோன் காமம் கண்டிக்கப்படுகிறது( நல் கூர்ந்தபத்து) புகழ் விரும்பி முயல்வோர் தேவலோகத்தை அடைதல் எளிது (எளிய பத்து). முறுபிறப்பைப் பற்றியறியாதவர் மூத்தவரெனப்பட்டார் (அல்லபத்து).
இன்னா நாற்பது வைதிக சமயத்தவர் நூல் என்பர் இன்னாதவை என்று ஆசிரியர் கருதும் நன்நான்கு பொருள்கள் நாற்பது பாடல்களில் தொகுத்துக் கூறப்படுகின்றன. அந்தனர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அந்தணர் வீட்டிலிருந்து உண்ணுதல் இன்னார்,6 பார்ப்பார் வீட்டில் கோழியும் நாயும் புகல் இன்னா 7 வேதம் ஓதாத பார்ப்பானுடைய உரை இன்னா8 என்பன உதாரணங்கள். இல்லற வாழ்வு சிறப்பதற்கேற்ற வழிகளும் கூறப்படுகின்றன. ஆரவாக்கும் மனைவி அடங்காமை இன்னா1, அன்பிலா மனைவியின் வனப்பு இன்னா2 உடன்பாடு இல்லாத மனைவியின் தோளைச் சேருதல் இன்னா3 பெண்ணை பிரிதல் இன்னா5 என்பன அவற்றுட் சில.
இயற்கை நெறிக்கால வாழ்கையிற் கூறப்பட்ட சில காரியங்களை இன்னா என்று இந்நூல் எடுத்துக் கூறுகிறதெனலாம். உயிருக்கு ஆபத்தேற்படக்கூடியதாகப் பாலை நிலத்திற் போதல் இன்னா வலைசுமந்து வாழ்பவன் பெருமிதப்படுதல் இன்னா6 முதலியவைகளிற் பாலை நில நெய்தல் நில வாழ்க்கை முறைகள் குறைகூறப்படுகின்றன. சுரம். அரிய கானம் முதலியவற்றிற் செல்லுதல் இன்னா7 என்றார். காமம் முதிரின உயிர்கின்னா8 எனவும், கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா9 எனவுங் கூறியுள்ளார். கள்ளுண்ணாமையோடு, கொல்லாமையும் புலாலுண்ணாமையும் வற்புறுத்தப்படுகின்றன. பெருங்கொலை இன்னா10, ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா11என்பன எடுத்துக்காட்டுக்கள்.
இந்நூலில் இடம் பெறும் வேறு கருத்துக்கள் சிலவற்றையும் எடுத்துக்காட்டலாம்: தாயைப் பாதுகாவாமல் விடுதல் இன்னா12 எனப்படுகிறது. வறுமையுடையவர் கொடையாளியாதல் இன்னா 13 எனவும் நெடுநீரைப் புனையின்றி நீந்துதல் இன்னா14 எனவும் எருதில்லாத உழவருக்கு வயலில் ஈரம் காய்ந்து கொண்டிருத்தல் இன்னா15 எனவுங் கூறுயுள்ளார். உயர் குலம், இழிகுலம் என்று கொள்ளும் சாதிப்பாகுபாடு இடம்பெற்று விட்டமை தெரியவருகிறது. குலமில்லாத இடத்தில் மணவினையால் கலத்தல்இன்னா16 எனவும் குலத்துப் பிறந்தவன் கட்டாயம் கற்கவேண்டும்1 எனவும் மனநிறையில்லாதவன் தவஞ்செய்தல் இன்னா2 எனவும் நண்பர் துன்பப் படுதலைக் காணுதலும் பகைவர் பெருமிதத்தைக் காணுதலும் இன்னா3 எனவும், பண்பில்லாதவர்களுடைய பகை இன்னா4 எனவும் , கூறப்பட்டுள்ளன. தொழிலிலும் உயர்வு தாழ்வு பாராட்டப்படும் நிலை ஏற்பட்டுவிட்டமை தெரியவருகிறது இழிந்த தொழிலாளரோடு நட்புச் செய்தல் இன்னா5 என்பர்.
இனியவை நாற்பது வைதிக சமயத்தது;இன்னா நாற்பதை ஒத்தது. ஆனால், இனியவைகளைத் தொகுத்து கூறுவது. இன்னா நாற்பதில் இன்னா என்று கூறப்படுபவை சிலவற்றின் எதிரிடையான கருத்துக்கள் இனியவை என்று கூறப்படுகின்றன. கொல்லாமை, புலாலுண்ணாமை, அந்தணர் பற்றியகருத்துக்கள் அத்தகையன. பிறர் மனைவியரை நாடாத அறம் இந் நூலிற் பல இடங்களில் எடுத்துக் கூறப்படுகிறது. மனைவி தக்கவளாக இருந்தால் மணவாழ்க்கை இனிதென்றும் மனைவி பொருந்தாளாயின் நிலையாமையைக் கருத்திற் கொண்டு துறத்தல் இனிதென்றும் இரண்டாம் செய்யுள் கூறும். ஏருடையான் வேளாண்மை செய்தல் இனிது6 என்று வேளாண்மை குறிப்பிடுகிறது. தவசிகள் மாண்பு இனிது7, பிராமணருக்கு ஆவோடு பொன் ஈதல் இனிது8, இல்லாதரை விரும்பி இரங்கி இடர்படாது செய்யவேண்டியதைச் செய்தல் இனிது9, கடன் வாங்கியாயினும் செய்வது செய்யவேண்டும்10, விலைமகளிரை விடமெனக் கருதி அணுகாமை இனிது11,வட்டியாற் பொருளீட்டுவான் நீதி தவறி நடவாமை இனிது12, என்பன இந்நூலிலுள்ள கருத்துக்கள் சில. கல்வியும் இந் நூல் சிறப்பித்துக் கூறப்படுகிறது13.
ஆசாரக் கோவை பாடியவர் ஒரு சைவராக இருக்கலாம் என்று அந்நூற் கடவுள் வாழ்த்திலிருந்து தெரியவருகிறது. ஆசாரக்கோவை என்றால் ஒழுக்கங்களின் தொகுதி எனலாம். ஏனைய அறநூல்கள் பெரும்பாலும் பொதுவான ஒழுக்கங்களைக் கூறுவன. இந் நூலாசிரியர் அவற்றை மாத்திரமன்றி நாள் தோறும் வாழ்கையிற் பின்பற்றி நடக்கவேண்டிய கடைமைகளை அல்லது நித்திய ஒழுக்கங்களையும் கூறியுள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களொடு உடல்நலம் பேணும் புறத் தூய்மையை பற்புறுத்திக் கூறும் பகுதிகளும் பலவாகும். வைகறைத் துயிலெழுதல் முதல் காலைக்கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப்பட்டுள்ளன. இந் நூலை உதாரணமாக இலக்கண வரைகூறும். வடமொழி சுகரஸ்மிருதியிலிருந்து தொகுத்தவையே இந்நூலிற் கூறப்பட்டுள்ளன என்று கூறுகிறார் தி.செல்வக்கேசவராய முதலியார். பல வடமொழி நூல்கள் இதன் மூல நூல்களாகலாம் எனப் பேராசிரியர் வையாபுரிப்புள்ளை குறிப்பிட்டுள்ளார். இந் நூற்கருத்துக்கள், பல நூல்களிலிருந்து தொகுத்தனவாதல் வேண்டும் என்று கொள்வதற்கு,அகச் சான்றுகளாக ஆசிரியர் கூற்றுக்களான “யாவருங் கண்ட நெறி”, “மிக்கவர் கண்ட நெறி”, “நல் அறிவாளர் துணிவு”, “பேரறிவாளர் துணிவு”, “நூல் முறையாளர் துணிவு” முதலிய காணப்படுகின்றன1.
ஆசாரக் கோவை சில அமிசங்களிற் பிற அறநூல்களிலிருந்து வேறுபட்டது. முதலாம் செய்யுள் ஆசாரத்தின் வித்துக்களை எடுத்துக்கூறும்பொழுது எவ்வுயிர்க்குந் துன்பந்தருவனவற்றைச் செய்யாமையாகிய அகிம்சையும் அவற்றுள் ஒன்றாக எடுத்துக் கூறுகிறது. சமணபௌத்தரது அகிம்சைப் பிரசாரம் தமிழ் நாட்டிற் பெற்ற வெற்றியை இது காட்டுகிறது. அடுத்த செய்யுள் ஒழுக்கம் பிழையாமையின் பயன் எவையெவையென்று எடுத்துக் கூறுகிறது. சமணபௌத்தரது அகிம்சைப் பிரசாரம் தமிழ் நாட்டிற் பெற்ற வெற்றியை இது காட்டுகிறது. அடுத்த செய்யுள் ஒழுக்கம் பிழையாமையின் பயன் எவையெவையென்று எடுத்துக் கூறுகிறது. தான் பிறந்த குடிக்கு உயர்ச்சி, நீண்ட கால வாழ்கை, செல்வம், அழகு, நிலஉரிமை, புகழ், கல்வி, நோயின்மை என இவ்வுலக வாழ்க்கையிற் சிறப்பாக வாழ்வதற்கேற்ற சாதகைகளின் பேறுகள் இங்கே காணப்படுகின்றன. அறத்தின் அடிப்படை உலக வாழ்க்கையைச் சிறப்பிக்க உதவவேண்டும் என்ற கொள்கை திருக்குறளிற் காணப்படுவதிலும் தெளிவாக இந் நூலிற் காணப்படுகிறது. நூலாசிரியர் வைதிக சமயத்தவராதலால், தவம், கல்வி என்பவற்றுக்கு முன்னேயே தக்கிணை,கேள்வி என்பன கூறி, அவற்றை ஒப்பி நடக்காவிடின் கேடு வரும் என்று கூறியுள்ளார். பார்ப்பார், தேவர் பற்றிய குறிப்புக்கள் பல வருகின்றன. எச்சிலோடு இருப்பவர்கள் பார்ப்பவரையும் தேவரையும் தீண்டக்கூடாதென்பர். பார்ப்பார் தவசிகள், தவசிகள் ,பெண்கள் முதலியோருக்கு வழிவிட்டு விலகி நடக்க வேண்டுமென்பர்1. பசுவைக் கொடையாகப் பார்ப்பாரிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடாது என்பர்2. பார்ப்பார் வேதம் ஓதலாகாத நாள் எவையெவை என்ற விபரம் வருகிறது3. வேள்வி செய்கிற நாளில் கொடையறம் செய்ய வேண்டும்4. வழிப்போக்கின்போது, பார்ப்பார் தவசிகளிற்கிடையே ஊடறுத்து ஒருவர் போகக் கூடாது,5 பிராமணரைத் தம் குரவரைப் போல மதித்து ஒழுகல் வேண்டும்6, நல்ல கரு மங்களம் செய்யும் போது, அந்தணரை நாள் கேட்டு செய்ய வேண்டும்7 என்ற கருத்துக்கள் பாப்பனரை உயர்த்துகின்றது. பார்ப்பனரை இகழ்வது கண்டிக்கப்படுகிறது8.
ஆசாரக் கோவையிற் கூறப்படுகிற தினப்படி நடைமுறையில் இடம்பெற வேண்டிய ஒழுக்கங்கள் சைவத் தமிழர் சிலரிடையே நிலையான வாழ்வு பெற்று விடுகின்றன. ஒருவர் செல்லும்போது, பின் நின்று கூப்பிடார், தவறியும் எங்குச் செல்கிறீர் என்று கேட்கமாட்டார்9, அந்திப் பொழுதுகிடவார்10, வடக்குத்திசையிலும் கோணங்களிலும் தலை வைத்துப் படுக்கமாட்டார்1, அந்தி நேரத்தில் முகங்கழுவித் தெய்வந் தொழ வேண்டும்2 என்பன அவற்றுட் சில. வைகறையாந்துயில் எழுதல் தொடக்கமாக எத்தனையோ ஆசாரவரையறைகளை இந் நூல் எடுத்தியம்புகிறது. நீராடவேண்டிய பத்துச் சந்தர்ப்பங்கள் கூறப்படுகின்றன3. ஐங் குரவர் தேவரைப் போலத் தொழப்படவேண்டும்4 எனவும் குரவர் சொ்லலை தட்டுதல் கூடாது5 எனவுங் கூறப்படுகின்றன நீராடும் முறை பற்றியும் உண்ணும் முறை பற்றியும் விபரங்கள் தரப்படுகின்றன. சமணருடைய நின்றுண்ணும் வழக்கம் தவிர்க்கப்படகின்றன6. பிறர் மனைவியரை விரும்புவோர், களவு, சூது, கொலை இவற்றில் ஈடுபடுவோர் தீயோர் எனப் பிறரால் இகழப்படுவதும் இன்றி நரகத்தையும் அடைவர்7 எனவும், பொய், குறளை, பிறர்பொருளை வௌவல் அழுக்காறு என்பன இரவலராக்கி நரகத்துச் சேர்க்கும்8 எனவுங் கூறப்படுகின்றன. புண்ணியம்9 என்ற சொல் இந் நூலிற் கையாளப்படுகிறது விருந்துபசரித்தலிற் செய்கடைமைகள் விரித்துக் கூறப்படுகின்றன. அடைக்கலப் பொருளைப் பொன்னைப் போலப் பேண வேண்டும் என்று கூறுகிறார்10. துறவிகளைப் பேணுதல் கூறப்படுகிறது11. பால் கவர்ச்சி பற்றிய அச்சம் இந்நூலிலும் இழையோடுகிறது. புகழ் வேண்டுபவர் சேவையர்களது அழகை நோக்க மாட்டார்12. நல்லோர் பரத்தையர் வாழும் சேரியில் அல்லது அவரில்லத்திற்கு அயலிற் குடியிருகக்க மாட்டார்13. தெளிந்த அறிவுடையவர் பெண்களை நிமிர்ந்து பார்க்கமாட்டார்கள்; அவருடைய வீடுகளுக்குப் போகமாட்டார்கள்14. மனம் முதலிய பொறிகளை நம்பமுடியாததால், ஒருவன் தன் தாய், தன் மகள், தன் சகோதரி என்போருடன் கூடத் தனியே தங்கிவாழக் கூடாது1 என்பன எடுத்துக் காட்டுக்களாகும். கடுமையான நிதியுடன் எல்லா ஆசாரங்களையும் எவரெவரிடம் எதிர்பாக்கலாகாது என்பன கடைசி செய்யுளிற் காணப்படுகிறது. அவரவர் ஆற்றலுக்கும் தகுதிக்கும் ஏற்ப ஆசாரங்கள் சிலவற்றை விட்டும் சுருக்கியும் நடக்கும் புற நடை விதிக்கு உரியவராவர் யார் என்பது கடைசிச் செய்யுளிற் காணப்படுகிறது.
அறநூல்களின் காலத்திலே சமயக் கொள்கைகளின் தத்துவக் கருத்துக்கள் எந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளன என்பது ஆராயப்படவேண்டும். மணிமேகலையிலே சமயங்களின் தத்துவக் கருத்துக்கள் சில காணப்படுகின்றன. ஆனால், இக் காலப்பகுதியில் அறநூல்களே சிறப்புற்றிருந்தமையால் அற நூல்கள் மூலமாக எத்தகைய தத்துவக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன எனப் பார்க்க வேண்டும். உலகில், அற வாழ்வும், மறவாழ்வும் என்றும் இடம்பெறுகின்றன.ஒழுங்கில்லாத வாழ்வுடையவர்கள் உலகியலின்பங்களைக் கூடிய அளவு துய்க்கின்றார்கள் போலத் தெரிகிறது. ஒழுகாக வாழ்பவர்கள் துன்பங்களிலிந்து ஒதுங்கிப் போய், இன்பங்களை இழந்துவிடுபவர்கள் போலானார்கள்.ஒழுங்கில்லாத வாழ்வுடையவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கைச் சுகங்களை அனுபவிக்க நிறையச் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. இந் நிலையில் ஒழுங்காக வாழ்ந்தால் என்ன பயன் என்ற வினா நிகழ்வது உலகத்தியற்கை. அதற்குச் சமயங்கள் அளித்த விடை, இ்மையின்பத்தை எதிர்பாராமல், புகழையும் மறுமையின்பத்தையும் நோக்கிய கூற்று எனலாம். ஒழுங்காக வாழ்பவர் இறந்த பின் அடையும்கதி அல்லது மறுபிறப்பு மிகவுஞ் சிறந்திருக்கும் என்று சமயங்கள் கூறுகின்றன. ஒழுங்காக வாழாதவரும் அடையும் இவ்வுலகச் சுகங்கள் நிலையற்றன, பின்னர் வினையுந் துன்பங்களுக்கு ஏதுவாய் வெறுத்ததற்குரியன என்று சமயங்கள் பிரச்சராம் செய்தன. வாழ்கை வெறுப்பும் உலக வைராக்கியமும் முந்தி விரும்பும் ஒழுங்கான வாழ்க்கையை நிலைநாட்டும் நோக்கமாகவே தோன்றின போலக் காணப்படுகின்றன.இத்தகைய தத்துவக் கருத்துக்கள் அறநூல்களிற் பரந்து காணப்படுகின்றன. இம்மை, மறுமை, தேவருலகம், வீடு, நரகம் என்பன இறப்போதனைக்கு வேண்டியிருந்தன. அறம் புண்ணியமென்றும் வழங்கப்படும். அறத்துக்கு மறுதலையானது பாவம் உலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்பதை நிலையாமைக் கொள்கை வற்புறுத்துகிறது. ஆன்மா அநாதியானது; உடம்பு, உலகம் என்பவற்றின் வேறானது. உலகத் துன்பத்திலிருந்து நீங்கப் பிறவி அறவேண்டும். பிறவி அற்ற நிலை வீடு. பிறவியை அறுப்பதில் ஈடுபாடில்லாமல், வாழ்க்கைத் துன்பங்களைத் துய்க்க விரும்புவோருக்கு விண்ணுலம் அல்லது சுவர்க்கம் கிடைக்கும் எனப்படுகிறது. பாவிகள் செல்லவேண்டிய இடம் நரகம். அறம் அளவுகடந்து வற்புறுத்தப்பட்ட சூழலிற் கடவுளுக்கு அதிக முக்கியத்துவம் காணப்படவில்லை. நல்வினை தீவினை என்பன உயிருக்கு எவ்வாறு பயன் தரும் என்பது ஒரு வினா .அதற்கு விடையாக ஊழின வலிமை வற்புறுத்தப்படுகிறது. இந்தியச் சமயங்கள் யாவற்றிலும் ஊழன் வலிமை கூறப்படுகிறபோதிலும், சமணம் பௌத்தம், ஆசீவகம் முதலிய சமயங்களிலேயே அது முக்கியத்துவம் பெறுகிறது.
அறக்கருத்துக்களின் செல்வாக்குத் தமிழர் பண்பாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது. தனி மனிதனது நலன் பற்றிய போக்கு, காலகதியில் விரிவடைந்ததாக, சமூக நலன் பற்றிய போக்கு, உதிர்கிறதெனலாம்1. தன் நலன் பேணும் உளப் பான்மையால் தொடக்கத்தில் நல்வினை நடைபெற, அவ்வறக்கருத்து வளர்ச்சியுற்ற காலத்தில் வெளியுலகினரையும் பேணும் கருத்தோடும் நல்வினையானது நடைபெறுவதாயிற்று. முந்திய ஆக்கிரமிப்பு மனப்பான்மையானது பொறுமையும் அன்புமான மனப்பான்மையாக மாறுவதாயிற்று வாழ்வில் அச்சம் நீங்கிப் பாதுகாப்பு ஏற்படுகிறது.
வடஇந்தியாவிற் சமணபௌத்த மதங்களை எதிர்த்துப் போராடிய வைதிக சமயம் தென்னிந்தியாவிலும் அவ்வாறு வைதிக சமத்தவர் சென்று அறநூல்கள் எழுதியுள்ளனர். சூழலுக்கேற்ற வாழ்வுக்கு அவர் தம்மைத் தாயாராக்கிக் கொள்வதை, இது காட்டுகிறது சமணர் பௌத்தர் புறநானூற்றுக்கால வாழ்க்கைமுறையைக் கண்டனம் செய்திருப்பர். வெறியாட்டு, குரவை, துணங்கை என்ற புறநானூற்றுக்கால வழிபாட்டு முறைகளைச் சமணபௌத்தர் ஏற்றுக்கொண்டிருக்கமுடியாது. மிருகப்பலி, கள்ளுண்ணல் முதலியன இவற்றில் இடம் பெற்றுள்ளன. வைதிக சமயம் இத்தகைய வழிபாட்டு முறைகளையும் அவ் வழிபாட்டு முறைகளுக்குரிய திராவிடத்தெய்வங்களையும் குறை கூறுவதில்லை. வைதிக சமயம் இந்தியா எனப்படும் பாரத கண்டழத்துக்கு பல் வேறு பிரிவுகளுடைய சமயமாக வளர்ந்த வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள், எவ்வாறு பிராமணரின் வைதிக சமயம் பாரத நாட்டுப் பல்வேறு பகுதிகளிலுமிருந்த பல்வேறு மக்கட் குழுவினரின் தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் தமதாக்கி வளர்ச்சியுற்றது என்பதைப் பற்றிக் கூறுவர்1. தென்னிந்தியாவிலிருந்த பிராமணர் வேதங்களிற் கூறப்பட்ட தெய்வங்களையே தமிழி நாட்டிற் காணப்பட்ட தெய்வங்களுக்கும் என்ற கருத்தினால் தமது நம்பிக்கையையும் வடமொழிப் புராணக் கதைகளையும் தமிழ் நாட்டிற் காணப்பட்ட கடவுளர்க்கு அமைத்து வழங்கினர். தமிழ் நாட்டினரால் தமிழில் முருகன். எனவும் வடநாட்டவரால் அவர் மொழியில் சுப்பிரமணியன் எனவும் கூறப்பட்ட தெய்வங்கள் ஒரேதெய்வமாக இணைந்தது, திரு முருகாற்றுப்படையிலிருந்தும் பரிபாடலிலிருந்தும் தெரியவருகிறது. குறிஞ்சிநில முருகனின் வேட்டுவக்குல மனைவியாகிய வள்ளியையும் இந்திரன் மகளும் சுப்பிரமணியனின் மனைவியுமான தெய்வானையையும் ஒன்று படுத்த முடியாததால், முருகனுக்கு இரு மனைவியர் கிடைத்தனர். முல்லை நிலத் தெய்வமான மாயோனும் வடநாட்டுத் தெய்வமான விஷ்ணுவும் ஒரு கடவுளாகி விட்டது பரிபாடலிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் தெரியவருகிறது: சிவ வணக்கம் என்றும் வட நாட்டில் பிரசித்தி பெறாததால், தமிழ் நாட்டிற்கே உரியதாகலாம். வட நூல்களிற் பேசப்படும் உருத்திரனே சிவன் என்ற கருத்து நிலைபெற்று விடுவதற்குக் காரைக்காலம்மையார் பாடல்கள் சான்று. இவ்வாறு வைதிக மதம் அற நூல்கள் காலத்தில் வளர்ந்து வந்ததால், தமிழரின் பழஞ்சமயம் என்ற பெருமை அதற்கு ஏற்பட்டது.
அறநூல்கள் காலத்திலே தொடர் நிலைச் செய்யுட்களும் அகப் பொருள் புறப் பொருள் நூல்களும் எழுந்தன. அறநூல்கள் வாழ்க்கையைச் சீர்திருத்தவே எழுந்தன வாழ்க்கையை முழுமைபெற எடுத்துக்கூறுவதற்கு இயற்கை நெறி நூல்களும் வேண்டும். இயற்கை நெறியை ஒழுங்குபடுத்தவே அறநெறி வகுக்கப்பட்டது. மேலும் இயற்கை நெறிக்காலம் அறநெறிக்காலமாக மாறிய போது, தமிழ்ச் சழுதாயம் முழுவதும் மாறியிருக்கும் என்று கொள்ள முடியாது. சமுதாயத்திற் சில பகுதியினர் பழமை போற்றுபவராகவே இருந்திருப்பர் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக இருந்த அக்காலத் தமிழ் நாட்டிற் சில பகுதிகளிலாவது பழமை நிலைபெற்றிருந்திரக்கும். இயற்கை நெறி வாழ்க்கை தன் பெயருக்கேற்பத் தனிக் கவர்ச்சியுடையது அதை முற்றாக விட்டு நீங்குதல் எல்லாருக்கும் எளிதன்று.
சமயநெறிக் காலம்
தமிழ் நாட்டில் அறநூல்களைத் தொடர்ந்து தோத்திரப்பாடல்கள் தோன்றுகின்றன. தோத்திரப்பாடல்கள் அறநூற் கருத்துக்களை நேரடியாகக் கண்டிருக்கவில்லை. ஆனால், அறநூற் கருத்துக்கள் தமிழ் நாட்டிற் கால்கொள்வதற்குப் பெரிதும் காரணமாக இருந்த சமணபௌத்த மதங்கள் கண்டிருக்கப்படுகின்றன. வாழ்கையில், அறநூற் கருத்துக்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவங்களுட் சிற் சில, குறைய ஏதுவாகிறது. அறநூற் கருத்துக்கள் இரண்டாவது இடம்பெறும் சூழ் நிலையில், இயற்கை நெறிக்காலக் கருத்துக்கள் புத்துயிர் பெற்றனவா என்பது ஆராயப்பட வேண்டியது. கழிந்துவிட்ட காலக்கருத்துக்கள் என்றும் முழுவதாகத் திரும்பி வருவதில்லை. சமணமும் பௌத்தமும் செல்வாக்குப் பெற்று, அற நூற் கருத்துகள் வேரூன்றிவிட்ட தமிழகத்தில், இயற்கை நெறிக்காலக் கருத்துக்கள் முற்றாகத் திரும்பிவிட மாட்டா,
இயற்கை நெறிக்கால மக்கள் மனத்தில் மன்னன் பெற்ற இடத்தைத் தோத்திரப் பாடல்கள் காலத்திற் கடவுள் பெறுகிறரெனலாம். கடவுளை மறந்த சமுதாயம் உலகில் ஏதுவுமேயில்லை, கடவுள் என்றால் என்ன என்பது பற்றிப் பல்வேறு சமுதாயங்களிடையிலும் பல்வேறு சமயங்களிடையிலும் கருத்து வேறுபாடு இருக்கலாம். கடந்த பொருள் அல்லது கடந்த நிலையொன்று இருக்கவேண்டும் என்பதை யாவரும் ஏற்கின்றனர். கடவுள் இல்லையென்று கூறுபவர்கள் கூட, உண்மையில் கடவுளைப்பற்றிய வரைவிலக்கணங்கள் சிலவற்றையே மறுக்கின்றனர். அறவழியில் நிற்கும் சான்றோராகிய சாதுசனங்கள் ஏனைய வலியர் தீயர் என்பார் முன் எளியராகக் காணப்படுகின்றனர். வாழ்க்கை என்ற போராட்டத்தில் நலிவுறும் நல்லோருக்கும் உதவிவேண்டியிருக்கிறது எல்லாம் வல்ல இறைவனை அவர் மனம் நாடுகிறது. இதிகாசப் புராணக்கதைகளாற் சித்தரிக்கப்பட்ட இறைவன் அத்தகையவனே. சமணருடைய அருகன் அல்லது பௌத்தருடைய புத்தபிரான் போல, இராமன் அல்லது கண்ணபிரான் போன்ற பௌராணிக இறைவன் பற்றற்றவனே அல்லது ஏனைய மனித இயல்புகள் குறைந்தனவே அல்லன். பௌராணிக இறைவன் மனித உணர்ச்சிகள் பொருந்தியவனாகக் கற்பிக்கப்பட்டுள்ளான். சாதாரண மனிதர் தம்மை ஓரளவு ஒத்த அவனிடம் நம்பிக்கை வைத்தல் எளிது. அவன் பெருவீரனாகவும் இருந்துள்ளான். அத்தகைய ஒருவனை மக்கள் மனம் நாடியது. புராண இதிகாசக் கதைகள் அத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளன.
வேதம், உபநிசத்துக்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் என்பன வைதிக சமயத்தை விளங்குவனவாக வடமொழியில் அக்காலத்திற் காணப்பட்டுள்ளன. வேதம் பிராமணர் முதலிய உயர்வருணத்தராலும் உபநிசத்துக்கள் அறிஞர் பெருமக்களாலும் கற்கப்பட்டன. பொதுமக்களுக்குரிய வைதீக சமய நூல்களாக விளங்கியவை புராணங்களும் இதிகாசங்களுமே. புராண இதிகாசங்களின் நோக்கம் வரலாறு கூறுவதல்ல; இலட்சியங்களுக்கு உதாரணங்கள் காட்டுவதாகும்1. இந் நூலில்களில், வரலாற்றுச் செய்திகள் நூலாசிரியரின் நோக்கத்திற்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனலாம். இதிகாசங்கள் மனிதரைப்பற்றியும், புராணங்கள் தேவர்களைப்பற்றியும் கூறின. இராமன், இலக்குமணன், கௌசல்யை, சீதை, அனுமான், பரதன், உதிட்டிரன், வீட்டுமன் முதலிய இதிகாசக் கதாபாத்திரங்கள் இலட்சியங்களுக்கு உதாரணமாகச் சிருட்டிக்கப்பட்டிருக்கின்றன. இதிகாசங்கள் இரண்டு திருமாலுடைய கண்ணனவதாரத்தையும் இராமவதாரத்தையும் கூறி வைணவத் தொடர்பு பெறுவனவாகக் காணப்பட்டபோதும், இராமன், இராவணன், வாலி, அரிச்சுனன் என்போர் சிவ வணக்கத்தில் ஈடுபடுவதும் குறிக்கப்பட்டுள்ளது.
புராணங்கள் இலக்கியங்கள், மகாபுராணம் உபபுராணம் என இருவகையின. ஒவ்வொரு வகையிலும், பதினெட்டு நூல்கள் உள்ளனவாகக் கூறுதல் மரபு. உபபுராணங்கள் எவையெவையெனக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. உபபுராணங்கள் பல, காலப் போக்கில் வெவ்வேறு சமயப்பிரிவினரால் தோற்றுவிக்கப் பட்டிருக்க வேண்டும். மகாபுராணங்கள் பதினெட்டு எவையெவையெனக்க கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. உப புராணங்கள் பல காலப் போக்கில் வெவ்வேறு சமயப் பிரிவினரால் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். மகாபுராணங்கள் பதினெட்டு எவையெவையென எடுத்துக் கூறுப்படும்போது, புராணங்களின் பெயர்களில் வேறுபாடு இல்லை. இப் பதினெட்டு மகாபுராணங்களில் வாயுபுராணம், மார்க்கண்டேய புராணம், மார்கண்டேய புராணம், பிமாண்ட புராணம், விஷ்ணுபுராணம், மச்ச புராணம், பாகவத புராணம், கூர்ம புராணம் என்று ஏழு புராணங்கள் பழையவனவாகக் கொள்ளப்படுகின்றன. ஆதிப்புராணங்கள் பிரமவணக்கத்தார், பாஞ்சராத்திர வைணவர், பாகவத வைணவர்,பாசுபத சைவர் என்போரால் இயற்றப்பட்டுள்ளன. புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் காலப் போக்கில் பலவித மாற்றங்களுக்கு உள்ளாகின. மகாபாரதம் ஒரு இலட்சம் செய்யுளுள்ள உலகிலேயே பெரிய நூலாக மாறியுள்ளது. ஒரு சமயத்தார் இயற்றிய ஒரு புராணத்துள் மறு சமயத்தார் தம்முடைய கொள்கையைப் புகுத்திய இடமும் உண்டு1.
புராண இதிகாசங்கள் தோன்றிய காலத்தைப் பற்றிய கருத்து வேறுபாடு உண்டு. காலப் போக்கில் இந்நூல்களில் மாற்றங்ள் ஏற்படுத்தப்பட்டு வந்ததால், கால ஆராய்ச்சி செம்மையாகச் செய்வதும். சுலபமல்ல. வட மொழிப்புராணங்களுள் மிகப் பழையதாகக் கொள்ளப்படுவது வாயுபுராணமாகும். இது சாதவாகன மன்னருடைய கால நிலைபற்றிக் கூறுவதால், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது.வைணவச் சார்பான கருத்துக்களும் பாசுபதச் சைவர் சார்பான கருத்துக்களும் இந்நூலிற் காணப்படுகின்றன. தக்கனது வேள்வியை சிவபெருமான் அழித்த கதை இந் நூலிற் கூறப்படுகின்றது. பிரமாண்ட புராணம் வாயு புராணத்தின் தழுவலாகும் பிரம அண்டத்திலிருந்து உலகம் தோன்றியதாக, இந் நூல் கூறுவதால், இது இவ்வாறு பெயர் பெற்றது குப்தர் காலக் குறிப்புக் காணப்படுவதால்,இது கி.பி நான்காம் நூற்றாண்டுக்குமுன் எழுந்திருக்கமுடியாது. இது வைணவச் சார்பான நூல். இந் நூலில் ஒருபகுதியாக இடம் பெறும் லலிதோபாக்கியானம் சாக்தசமயச் சார்புடையது. மகாபாரதக் கையிலெழுந்த ஐயங்கள் சிலவற்றை திர்த்தவைக்கும் நோக்கோடு மார்க்கண்டேய புராணம் மார்கண்டேய முனிவரால் இயற்றப்பட்டது. இந்நூலில் அரிச்சந்திரன் கதை இடம் பெறுகிறது. இந் நூலிற் காணப்படும் தேவி மகாத்மியம் என்ற பகுதி சாக்த சமயச் சார்பானது. இந்நூல் திருமால், சிவபெருமான் என்போரிலும் கூடிய முக்கியத்துவத்தைப் பிரமனுக்கும் இந்திரனுக்கும் வழங்குகிறது. விஷ்ணுபுராணம் பாஞ்சராத்திர வைணவர்கள் இயற்றிய திருமால் கதையாகும். பிருந்தாவனத்திலும் துவாரகையிலும் நிகழ்ந்த கண்ணனுடைய லீலைகள் இந்நூலிற் கூறப்படுகின்றன. பிரகலாதன் கதை இந்நூலில் இடம் பெறுகிறது திருமால் அரக்கரின் ஆற்றலைச் சிதைப்பதற்காகச் சமணபௌத்தர்களை அவர்களுக்குப் போதித்தார் என்று கூறப்படுகிறது. மச்சபுராணம் வாயு புராணத்திலிருந்தும் விஷ்ணுதர்மோத்திரத்திலிருந்தும் பாசுபதசைவர் சார்பான கருத்துக்களும் இந்நூலிற் காணப்படுகின்றன. சிவபெருமான் திரிபுரமெரித்தது. கார்த்திகேயன் பிறப்பு, தாரகன் வதை என்பன இந்நூலிட் கூறப்படுகின்றன. பாகவதபுராணம் கண்ணனவதாரத்தைப் பொருளாக் கொண்டது. கண்ணன் பகவானின் அமிசாவதாரமாக்க கொள்ளப்படுகின்றான் விஷ்ணுபுராணத்திலும் பார்க்கக் கூடிய அளவு விபரங்கள் கண்ணனவதாரத்தைப்பற்றிக் கூறப்படுகின்றன. திருமாலின் அவதாரங்கள் சுட்டப்பட்டுள்ளன. கூர்மபுராணம் பாஞ்ச ராத்திரர் சார்பான கருத்துக்களும் சாக்தர் சார்பான கருத்துக்களும் பாசுபதர் சார்பான கருத்துக்களும் கொண்டுள்ளது. மச்ச புராணம்ட , ஸ்கந்த புராணம் அக்கினிபுராணம் என்ற பெயர்களில் வெவ்வேறு நூல்கள் காணப்படுகின்றன வாமன புராணம், இவிங்கபுராணம், வராக புராணம், பதுமபுராணம், அக்கினி புராணம், ஸ்கந்தபுராணம், பிரம்மவைவர்த்த புராணம், பவிசிய புராணம் என்பன பிற்காலத்தில் பலவாறு மாற்றப்பட்டன. இன்று வழங்கும் நாரதிய புராணம், கருட புராணம், பிரம்மபுராணம் என்பன பழைய பெயர்களைக் கொண்டெழுந்த பிற்கால நூல்களாகக் காட்சியளிக்கின்றன.
புராண இதிகாசங்களில், வைதிக சமயக்கருத்துக்கள் யாவும் இடம் பெறுகின்றன. சமணபௌத்த சமயங்களின் சாரம்சமான அறத்தை இந் நூல்கள் ஏற்கின்றன வைதிக சமயத் தருமசாத்திரங்களில் இடம் பெற்ற கருத்துக்களையும் பிறவற்றோடு இணைத்து இவை அமைதி காண்கின்றன. புராண இதிகாசங்களிற் கூறப்படும் தருமம் சாதாரண தருமம் எனவும் விசேட தருமம் எனவும் வகுக்கப்பட்டுள்ளது.1 சமணபௌத்தர் போதித்த அறம் சாதாரண தருமத்துள் அடங்குகிறது. அகிம்சை, சாந்தி, தன்னடக்கம், அருள், கொடை, சுத்தம், சத்தியம், தவம், ஞானம், என்பன பதும புராணம், அக்கினிபுராணம், கூர்ம புராணம், கருட புராணம் என்பவற்றில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. விசேட தருமம் சுவதருமம் என்று பெயர் பெறும். வருணத்தையும் ஆசிரமத்தையும் அடிப்படையாகக் கொண்டு வைதிக சமயத்திற்குச் சிறப்பான உரிய தருமம் சுவதருமமாகக் கொள்ளப்பட்டதுபிராமணருக்கும் சிறப்பாக கல்வியும் சத்திரியருக்குச் சிறப்பாக அரசியலும்,வைசியருக்குச் சிறப்பாகப் பொருட்தேடலும், சூத்திரருக்குச் சிறப்பாகத் தொழிலும் கூறப்பட்டுள்ளன. இவ்வுலக மனித வாழ்வு, பிரமச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என நான்குபடிகள் உடையதாக வகுக்கப்பட்டது. சமண பௌத்தர் வியந்து கூறிய துறவு, வாழ்வின் இறுதிப்பகுதியில் ஒருவர் ஏற்கக் கூடிய ஒழுக்கமாக வகுக்கப்பட்டது. துறவுக்குப்பயிற்சி பெறும் மார்க்கமாக வனவாழ்க்கை கூறப்பட்டுள்ளது. இவ்வுலக வாழ்க்கை விருப்புக்கும், இவ்வுலக வாழ்க்கை வெறுப்புக்கும் இடையே கண்ட அமைதி நான்கு ஆச்சிரம வாழ்க்கையெனலாம்.
மனிதர் பெற்றோரை நோக்கும் வகையே, அவன் கடவுளை நோக்கும் வகையாகமாறுகிறது1. பெற்றோர்போலக் கடவுளும் தன்னை அடக்கியாள வல்லர் என்று அவன் கருதுவதுண்டு. குழந்தைப் பருவத்திலே, எல்லாம் அறிந்த நன்மையைச் செய்கின்றவராகப் பெற்றோரைக் கருதும் மனித மனம், பெற்றோரையும் மனிதராகக் கண்டு. மனித பலவீனங்களை உணரத்தொடங்குகிறபொழுது, கடவுளைப் பதிலாளாகக் கொள்கிறது. பெற்றோரைப் பற்றி மனித மனதில் கவர் நோக்குண்டு. அவர்களை நல்லவர்களாய். உதவுபவர்களாய், பாதுகாப்பவர்களாய் கருதுவது ஒன்று; கொடியவர்களாய் தடைசெய்து நிற்பவர்களாய்க் கருதுவது மற்றது. இந்தக் கவர் நோக்கினால், உயர்தெய்வங்கள், துஷ்டதேவதைகள் எனப்பல கடவுள்கொள்கை தோன்றுவதுண்டு. கடவுளிடமிருந்து கோபம், கொடுமை, பொறாமை என்பவைகளை நீக்கமுயன்றால், பயங்கரமான, தண்டிக்கிற, பொறாமை மிக்க கடவுளை நாடிநிற்கும் மனம் திருப்தி அடைவதில்லை கடவுள் கொடியவர் என்ற கருத்தை நீக்கி விட்டாலும், உள்மனம் கடுமையான கட்டுப்பாடுகளையே வேண்டி நிற்கிறது. இவ்வுலக வாழ்விலும் இறந்த பின்னும் கிடைக்கும் வாழ்விலும் கடவுள் நன்மை செய்கிறார், தீமை செய்கிறார் என்ற நம்பிக்கை சில நற்பயன்களைத் தருகிறது. தடை ஏற்பட்டு விட்ட விருப்பங்கள் நிறைவேற இடம் இருக்கிறது என்ற நம்பிக்கை உதிக்கிறது. உண்மையான தடைகளை வெல்லத்தக்க முறையிற் காரியம் ஆற்றும் முயற்சி தூண்டப்படுகிறது.
பல்லவர் காலத் தமிழ் நாட்டில் பரவிய சைவ வைணவ நெறிகளுக்கும் பழைய வைதிக நெறிக்கும் வேறுபாடுகள் சில உள. வேதமும் வேதமோதிகளான பிராமணரும் பழைய படியே முக்கியத்துவம் பெறுகின்றனர். வேதவேள்வியாகிய அக்கினி காரியம் அருகி அழிய,ஆகமத்திற் கூறப்பட்ட விக்கிர வழிபாடு கோவில்களில் இடம்பெறுகிறது. குப்தர் கால வட இந்தியாவிலே சமணபௌத்த சமயங்களின் சாரம்சமான அறத்தை ஏற்றுப் புராண இதிகாசங்களைத் தோற்றுவித்து மறுமலர்ச்சியுற்ற வைதிக நெறி பௌராணிக சமயம் எனப்பட்டது. வைதிக சமயத்தாரின் கடவுள்களைப்பற்றிய கதைகளை விரித்துரைக்கும் புராணங்களை ஆதாரமாகக் கொண்டு தோன்றியது இச்சமயம். இந்து மத வளர்ச்சியிற் குறிப்பிடக் கூடிய ஒன்று யாதெனில், அது பிற மத நம்பிக்கைகளையோ, வழிபாட்டுமுறைகளையோ கண்டனஞ் செய்து முற்றாக ஒதுக்காமையாகும். இயன்றவரையில், பிற மதக் கடவுளரோடும் முறைகளையும் இணைத்துச் சிறிது சிறிதாகத்தன் செல்வாக்கை நிலைநாட்டல் இந்துமத வரலாற்றிற் பன்முறையும் நடந்தது இந்துமதத்திற் புராணக்கதைகளுங் கடவுளருங் கடவுளர் மூர்த்தங்களும் நிறைய இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமென்பர் குப்தர்கால வடஇந்தியாவில் இப்பௌராணிக சமயத்தை மேற்கொண்டு பிராமணர்சமண பௌத்தரை வென்றுகொண்டிருந்தமை, தென்னாட்டுப் பிராமணருக்குப் பல்லவர் கால ஆரம்பத்தில் ஒரு புதிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது போலத் தெரிகிறது. தமிழ்நாட்டில் பல்லவர்காலத்திலே மறுமலர்ச்சியடைந்த சைவ வைணவர்களுக்கும் வட இந்தியாவிலிருந்த பௌராணிக மதத்திற்கும் ஒரு வேற்றுமையுண்டு. சமணபௌத்தங்கள் அறவழியைப்பிரசாரஞ்செய்து பழந்தமிழர் வாழ்க்கை முறையைக் கண்டனஞ் செய்ய, வைதிக சமயத்தினர் தமிழ் நாட்டுப் பழைய தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் என்பவற்றை தங்களுக்கேயுரிய வழிபாட்டு முறைகளோடும் தெய்வங்களோடும் இயன்றவரை ஒன்றுபடுத்தினர். பழைய வைதிக நெறி குப்த காலத்தில் வடஇந்தியாவில் பௌராணிக மதம் தமிழகத்துப் பழைய சமய முறைகளோடம் சேர்ந்து பல்லவர்கால இந்து சமயமாகிய. சைவம் ஆகம நூல்களையும் வைணவம் பாஞ்சராத்திரத்தையும் பிரமாணங்களாகக் கொண்டுள்ளன. இரு சமயப்பிரிவினரும் வேதத்தைப் பொதுநூலாக ஏற்ற போதும் அவ்விரு பிரிவினருக்கிடையேயிருந்த வேறு பாடுகளை எடுத்துக்காட்டுவனவாக இப்பிரமாண நூல்கள் அமைகின்றன.
பல்லவர்காலத்தில் ஏற்பட்டது வைதிக சமய எழுச்சி என்று கூறப்படாமல், வைதிக சமய மறுமலர்ச்சி என்று கூறப்படுவது இத்தகைய வளர்ச்சியினாலேதான். பல்லவர் காலத்திற்கு முன்பு வைதிகநெறி தமிழ்நாட்டிற் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்ததெனக் கொள்வதற்கு வரலாற்றில் இடமில்லை, வைதிக சமயம் பழந்தமிழர் சமயத்தோடு சேர்ந்திருந்ததனால், வைதிக சமயமே மறுமலர்ச்சி பெறுவதாகக் கொள்ள முடிந்தது. எனவே, பல்லவர்காலச் சமய மறு மலர்ச்சியில், பழந்தமிழர் சமயம் வென்றது வைதிக சமயம் வென்றது,பௌராணிக சமயம் வென்றது, எனப் பலவாறு கூறலாம் வைதிக சமயம். பழந்தமிழர் சமயம்-பௌராணிக சமயம் என்ற மூன்றும் கலந்த நிலையில் உருவான பக்தி மார்க்கமே பல்லவர் காலத்தில், சமண பௌத்தங்களை வென்று வாகை சூடியுள்ளது.
அறநூல்களின் காலத்திலே தமிழ் நாட்டில் ஆட்சிசெய்த களப்பிரர், சமணர் அல்லது பௌத்தராகிய புறச்சமயத்தவர் என்பர். களப்பிரராட்சியைத் தமிழ் நாட்டிலிருந்து ஒழித்த பாண்டியரும் பல்லவரும் சமணசமயத்தை ஏற்கச் செய்யக்கூடிய நிலை, தமிழ் நாட்டிற் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கிறது. சமணசமயத்தவர் வைதிகசமயத்தவரானபோது பெரும்பாலும் சைவத்தையும் பௌத்தசமயத்தவர் வைதிகசமயத்தவரானபோது பெரும்பாலும் வைணவத்தையும் ஏற்றுள்ளனர். துறவையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் சிறப்பாகச் சைவம் பேணிவந்தது, சமண சமயத்தவர் சிவ வணக்கத்தைமட்டும் ஏற்றுப் பழையபடி அறநெறியைப் பேணிவர உதவியது. கடுந்துறவை வெறுத்த பௌத்தருக்கு வைணவத்தை ஏற்பது சுலபமாக இருந்திருக்கிறது. சமணமும் பௌத்தமும், சிறப்பாகச் சமணம் தமிழ்நாட்டிற் பெற்றிருந்த செல்வாக்கை மங்கச் செய்தது வைதிகசமயப் பக்தியியக்கம். காரைக்கால் அம்மையாரும் முதலாழ்வாரும் பாடிய பாடல்களை நோக்கும் போது, சிவனையும் திருமாலையும் ஒரே உருவச்சிலையில் அமைக்கும் ஹரிஹரர் என்ற மூர்த்தியை அவர் வணங்கித் துதிப்பது தெரியவருகிறது ஆனால், வெகுவிரைவிலே இவ்வியக்கம் சைவம் வைணவம் என்று இரண்டு தனிச் சமயங்களாகிவிட்டது பல்லவர் காலத்திற் சைவம் வைணவம் ஆகிய இரண்டும் மறுமலர்ச்சி பெற்றன சைவமறுமலர்ச்சிக்குத் திருநாவுக்கரசு நாயனாரும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், வைணவ மறுமலர்ச்சிக்கு ஆழ்வார்களும் காரணமாக இருந்ததால். ஆனால், சைவ பக்தி இயக்கம் வைணவ பக்தியியக்கத்திலும் கூடிய செல்வாக்கு உடையது. பாண்டிய மன்னனையும் பல்லவ மன்னனையும் மதமாற்றஞ் செய்தது சைவமே. எனவே, திருநாவுக்கரசர் –திருஞானசம்பந்தர் காலத்திலிருந்து, தமிழ் நாட்டில், தமிழ் மக்களிடையில், சைவத்தின் அளவுக்குச் செல்வாக்குடையதாக வேறு எச்சமயமும் இருக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியிலுள்ள இந்தியாவில் வைணவமும் சாக்தமுமே பெருஞ் செல்வாக்குடையன. எனவே, தமிழ் நாட்டுக்கு இதிலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.
பல்லவர்கால சமய மறுமலர்ச்சி பத்தியியக்கமாகப் பரிணமித்தது. அது, பக்தி உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. பக்தியியக்கம் புராணக் கதைகளைச் சிறப்பாகப் பயன்படத்தியது. சமணரின் தருக்க அறிவும் ஒழுக்க உயர்வும் பக்தியுணர்ச்சிப் பிரவாகத்தில் தலை தூக்கமாட்டாமல் ஆழ்ந்துவிட்டன. சைவம் வென்றது; ஆனால் சமணம் அழியவில்லை. சிவவணக்கம் இந்துச் சமவெளி நாகரிகத்திலேயே இடம் பெற்றது எனக் கூறப்படுகிறது. வேதங்களிற் காணப்படும் உருத்திர வணக்கம் பிறகாலச் சைவசமயத்தின் முன்னோடியாகக் கொள்ளப்படுகிறது. திரிபுரம் எரித்த கதையும் வேள்வி ஒன்றைச் சிதைத்த கதையும் யசுர்வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. உருத்திரன் சிவனைப்பற்றிய பழைய கதைகள் சதருத்திரியத்திற் கூறப்பட்டன. சுவேதாசுவதரம் என்ற உபநிசத்துச் சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவற்றையும் கூறுகிறது. இங்கு கூறப்பட்டவற்றின் விரிவும் விளக்கமுமே பிற்காலச் சைவ நூல்கள் எனப்படுகிறது1. தமிழ் நாட்டுச் சைவத்தில் இன்னொரு வளர்ச்சி காணப்படுகிறது. சமணரின் அறநெறிகள் தமிழ்ச் சமுதாயத்தில் வேரூன்றிவிட்டன. சமணத்தைவிட்டு சைவத்தை ஏற்ற மக்கள், பொதுவான அறங்கள் பற்றிய நூல்கள் முழுவதையும் கைவிடவில்லை. நாலடியார் முதலிய சமணர் நூல்களைச் சைவர் தம் நூல்களானவே போற்றுகின்றனர். சமணர் போற்றிய புலாலுண்ணாமை, கொல்லாமை முதலிய அறக்கொள்கைகள் பல வட இந்தியாவிற் சிலபகுதிகளில் இந்து சமயத்தினர் கைக் கொள்ளாதவை, தமிழ்ச் சைவர் வாழ்க்கையில் இன்றுவரை இடம் பெற்று வாழ்கின்றன.
பக்தியியக்கம் பக்திப் பாடல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று. சைவ சமய எழுச்சியில் முன் நின்று உழைத்த நாயன்மாரில் ஒரு சிலரே பக்திப்பாடல் பாடியுள்ளார். சுந்தரர் காலத்திலும், சுந்தரர் காலத்திற்கு முன்பும் சுந்தரரும் உட்படத் தமிழ்நாட்டில் வாழ்ந்த அறுபத்துமூன்று தனியடியாரின் பெருமையை எடுத்து, விரிவாக விளக்கிச் செல்கிறது சேக்கிழாரின் பெரியபுராணம், தேவாரம் பாடிய மூவராகிய திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் என்போர் இந்த நாயன்மாருட் சிறப்பிடம் பெறுவோர். பல்லவ காலத்தில் எழுந்த பக்திப் பாடல்களில் இந்த மூவர் பாடியனவே பெரும்பான்மை. அதனால், பல்லவர் காலம் தேவார காலம் எனப்படுதலுமுண்டு. இந்த மூவரோடு மாணிக்கவாசகரையும் சேர்த்துச் சைவ சமயகுரவர் நால்வரென்பர். வைணவசமய எழுச்சியின் தலைவர்களாகிய ஆழ்வார்கள் அனைவரும் பாடியுள்ளனர். பக்தியியக்கத்தின் செல்வாக்குத் தமிழ் நாட்டை மூன்று வழிகளில் ஆக்கிரமித்ததெனலாம். முதலாவது, பக்தர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள். இரண்டாவது இகபரசாதனமாகியுள்ள நெறிமுறைகளுட் கடவுட் பக்தி வழிபாடுகளைத் தூண்டும் தோத்திர ரூபமான பக்திப் பாடல்கள். மூன்றாவது பக்தி நலங்கனிந்த பெரியபுராணம், கம்பராமாயணம் என்ற காவியங்கள்.
பல்லவர் காலம் ஆரம்பிக்கும் முன்பே நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழ்நாட்டிலே தோன்றத் தொடங்கிவிட்டார்கள். வெறும் அறவழியை வாழவேண்டிய நெறியாகக் கருதி வாழ்க்கைப் போரிலே தடுமாறிக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு மத்தியிற் புதிய நெறி, ஒன்று தோன்றியது. வட இந்தியாவில் ஏற்பட்டவைதிக மறுமலர்ச்சியின் செல்வாக்குத் தமிழ் நாட்டிலும் இடம் பெறத் தொடங்கிற்று. சங்கமருவிய காலப் பல்லவமன்னர் சிலர் வேதாகமக் கல்வியை நாட்டில் விருத்தி செய்தனர். சமயங்களில், பிராமணரின் முதன்மை அங்கீகரிக்கப்பட்டது. சைவரின் ஆகமங்கள், வைணவரின் சங்கிதைகள், சாக்தரின் தந்திரங்கள் என்பன சமய வழிபாட்டிற் கிரியைக்கும் பிராமணருக்கும் முக்கியத்துவம் தந்தன. அகரம் அல்லது அக்கிரகாரம் என்ற பிராமணர் குடியிருப்புக்கள் நிறுவப்பட்டன. கோவில்கள் கட்டப்பட்டு விழாக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுத் தானங்கள் வழங்கப்பட்டன. சைவசமயத்தில் காரைக்காலம்மையாரும் வைணவ சமயத்தில் முதலாழ்வார் மூவரும் தோன்றினர். இவர்கள் தோத்திரப்பாடல்கள் பாடியுள்ளனர். காரைக்காலம்மையாரின் குடும்ப வாழ்க்கை சிதைந்துவிட்டது. கணவன் அவரை விட்டு வேறொருத்தியை மணஞ் செய்து கொண்டான். காரைக்காலம்மையார் இருவகைப் பற்றுக்களையும் அறவே துறந்து, சிவபெருமான் வழிபாட்டுத் தவநெறி பூண்டு வாழலாயினர். இந்த நால்வர் பாடல்களிலும் காணப்பட்ட திருப்தி மகிழ்ச்சி- ஆனந்தம்-தமிழினத்தின் வாழ்க்கை முறை திசை திருப்பத் தொடங்குவதற்கு ஓர் அறிகுறியாயுள்ளது.
புறநானூற்றுக் காலத்திலேயே ஈமப்புறங்காட்டைச் சுட்டி வாழ்க்கை நிலையாமை பேசப்பட, மணிமேகலையிலே சக்கர வாழக் கோட்டம் காட்டி அதே பிரசாரம் நடை பெற்றுள்ளது. இவ்வாறு மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தளர்ந்து கொண்டிருந்த சமயம், காரைக்காலம்மையார் பாடல் புதிய வலிமையையும் புதிய நம்பிக்கையையும் தருவதாக அமைந்துள்ளது. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களில் அம்மையார் ஈமப்புறங்காடுபற்றி நிறையப்பாடுகிறார். ஈமப் புறங்காட்டைக் கண்டு அம்மையார் அஞ்சவில்லை. அங்கே, இறைவன் ஓயாது நடனமிடுவதைக் கண்டார். அந்த நடனத்தை விடாது தரிசிக்கும் பேறுதான் அம்மையாரால் வேண்டப்படுகிறது. அங்கே பேய்கள் வசித்தலை அறிந்தமையாற் போலும் அம்மையார் தமக்கும் ஓர் பேய் வடிவம் தரும்படி சிவனை வேண்டிப்பெற்றார். பயந்த சுபாவமுள்ளவர் என்று சாதாரணமாகக் கணிக்கப்படும் தமிழ்நாட்டுப் பெண்மணிகளுள் ஒருவர், தமிழ் மக்களை நீண்டகாலமாகப் பயமுறுத்தி வந்த ஈமப்புறங்காட்டை இறைவனுடைய நடன அரங்காகக் காணத்தொடங்கிவிட்டார். ஈமப்புறங்காடு எல்லாம் வல்லவனும் அடியார்க்கெளியானும் கருணைக்கடலுமான இறைவனுடைய கோவிலாகக் காட்சி தரத்தொடங்கியதும், வாழ்க்கையில் ஓர் ஒளி, நம்பிக்கை சுடர்விட ஆரம்பித்தது. குடும்ப வாழ்க்கை முறிந்து போன காரைக்காலம்மையாருஞ் சிவனுக்கு தம்மை அர்ப்பணித்ததன் மூலம் மகிழ்ச்சியுடன் உலவி வந்ததை மக்கள் பார்த்திருப்பர்.
ஆனால், பல்லவர் கால ஆரம்பத்திலேயே, சமண பௌத்தங்களுக்கும் சைவ வைணவங்களுக்கும் நேரடியான மோதல் ஏற்பட்டது. பக்தியியக்கம் இரண்டும் பரந்துபட்ட மக்கள் இயக்கங்களாக வளர்வனவாயின. தீண்டத்தகாதவர் என்று கருதப்படும் சாதியினருஞ் சிலர் இரண்டு பக்தி இயக்கங்களிலும் காணப்பட்டனர். வைதிக சமய இயக்கங்களானதால், அந்தணரும் முன் நின்றனர். அந்தணரல்லாத தமிழ் மக்களும் சிறப்பிடம் பெற்றனர். சைவபக்தியியக்கம் வைணவ பக்தியியக்கத்திலும் பெரிதாக அமைந்திருந்தது. சைவசமய நாயன்மாரின் சரிதையை நோக்கும்போது, தமிழ் நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு சாதியாருள்ளும் சிலர், சில பக்தர்களாக வாழ்ந்தனர் என்பது அறியக்கிடக்கின்றது. இவ்வாறு மக்கள் இயக்கமாக இவை உருப் பெற்றதானாலேதான், சமண பௌத்த மதங்கள் சார்ந்த மன்னரையும் மக்களையும் மதமாற்றம் செய்யவல்ல ஆற்றல் இவற்றுக்குக் கிடைத்தது. சமண சமயத்தின் மூலபலம் எப்பொழுதும் வணிக சாதியினரிடையே இருந்தது எனச் சமண சமய வரலாற்றையும் தற்கால நிலையையும் ஆராய்ந்த பலர் கூறுவர். சைவ பக்திப் பாடல் இயற்றுவதை ஆரம்பித்து வைத்த காரைக்கால் அம்மையார் வணிக சாதியினர் என்று கூறப்படுகிறார். சமணத்தைத் தமிழ் நாட்டில் நிலைகுலையச் செய்த சைவ பக்தியியக்கத்தைத் தொடங்கிவைத்தவர் வணிக குலத்துப் பெண்மணியொருவராகக் கொள்ளலாம்.
சைவ பக்தியியக்கத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் தமிழ் பெண்கள் முக்கிய பங்கு கொண்டனர். காரைக்காலம்மையார் தொடக்கி வைத்த பணியைத் திலகவதியாரும் மங்கையக்கரசியாரும் தொடர்ந்து செய்தனர். தமது சைவ மதத்தை விட்டுச் சமணமதத்துப்புக்க திருநாவுக்கரசர் பின்பு சைவ மதத்துக்கு மீண்டமைக்குக் காரணமாக இருந்தவர் அவரின் தமக்கையாராகிய திலகவதியார் சமண சமயத்தை அனுசரித்த பாண்டியனும் பாண்டியநாடும் பின்னர்ச் சைவத்துக்கு மதம் மாறக் காரணமாக இருந்தவர் அவரின் தமக்கையாராகிய திலகவதியார். சமண சமயத்தை அனுசரித்த பாண்டியனும் பாண்டிய நாடும் பின்னர்ச் சைவத்துக்கு மதம் மாறக்காரணமாக இருந்தவர் பாண்டிய மாதேவியராகிய மங்கையக்கரசியார். திருநாவுக்கரசரே பல்லவனும் தமிழ்நாட்டுவடபகுதியும் மதம்மாறக் காரணமாயினர். இவர்களுக்குப் பின் வந்த சுந்தரர் தமிழ் நாட்டின் மேற்பகுதி மதம் மாற வழிவகுத்தார். தமிழ்ப்பெண்கள் சைவ மறுமலர்ச்சியில் பெற்ற முக்கியத்துவம் ஆராயப்படவேண்டியது. ஆணைத் துறவியாகவும் பெண்ணைப் பர்தாவிற்கு ஏற்ற பதிவிரதையாகவும் மாற்ற முயன்ற சமணம் பெண்களின் வெறுப்பைத் தேடிக் கொண்டது. பெண்ணானவள் துறவியாக வாழ்ந்தால், உதயகுமாரன் போன்றோரால் துன்பமுறுவதற்கு ஏதுவாகும் என்பது பௌத்த மத மணிமேகலையயிற் தெரியவருகிறது. காதல் வாழ்விற் கண்ட மகிழ்ச்சியும் இல்லற வாழ்விற பெற்ற பாதுகாப்பும் சமண பௌத்த மதங்களின் போதனையினாற் பறிபோவதைக்கண்ட பெண்கள் அச் சமயங்களுக்கு எதிராக நடந்த சைவ மறுமலர்ச்சிக்கு முன் நின்று உழைத்திருக்கலாம்.
கி.பி ஏழாம் நூற்றாண்டில் சமண வீழ்சியுறத் தொடங்கச் சைவம் எழுச்சிபெற்றபோது, அப்பர் சுவாமிகளின் வாழ்க்கை சமணத்துடனும் சைவத்துடனும் பின்னிப்பிணைந்திருப்பது காணலாம். சைவராக பிறந்து வளர்ந்த அப்பர், சமண சமயத்தில் சேர்ந்து, பின்பு சைவராக மாறிச் சைவசமையமறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துக் கைலாசம் சேர்ந்தார் எனப் பெரிய புராணம் கூறும். இங்கணமின்றி, சமணராக பிறந்து வளர்ந்த அப்பர், இடையிலே சைவசமயத்தைச் சேர்ந்த சைவ சமய எழுச்சிக்குக் காரணமாக இருந்தார் எனவும் பின்பு, சமணத்துக்குத் திரும்பினார் எனவும் அதனாற் பொறாமை கொண்ட சைவர் அவரைக் கொன்று விட்டனரெனவும், சமணர் கூறுவார்,” எனத் ‘தென்னிந்தியச் சமண ஆராய்ச்சி’ என்ற ஆங்கில நூல் கூறுகிறது1. இவ்விரு வேறு கூற்றுக்களும் திருநாவுக்கரசர் சமணராகவும் சைவராகவும் இருந்தனரென்பது இருசாரருக்கும் உடன்பாடு. திருநாவுக்கரசர், சைவராகி பக்திப் பாடல்கள் பாடுவதற்கு முன்பு சமணராக இருந்தவரென்பதையும் இருசாரரும் ஏற்றுள்ளமையும் தெளிவாகிறது.
திருநாவுக்கரசர் சமணராக மாறி இருந்த காலத்திலே, சமண சமய வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியதைப் பெரிய புராணமே வியந்து கூறுகிறது. சமணத்துறவியாகிய திருநாவுக்கரசர், தருமசேனர் எனப்பெயர் பூண்டுள்ளார். சமண நூல்கள் பலவற்றையுங் கற்றுப் புறச்சமயத்தினர் பலருடன் வாதம் செய்து அவர்களைத் தோற்கடித்துச் சமணத்துக்கு மதமாற்றஞ் செய்த தருமசேனர் சமணரின் பெருமதிப்புக்குரியவரானார். தமிழ் நாட்டின் வடபகுதியிலே சமணப்பிரச்சாரத்திற்குத் தலைமை பெற்றிருந்ததும் பாடலிபுரம் என வழங்கப்பட்டதுமான திருப்பாதிரிப்புலியூரிலே சமண மடத்தின் தலைவராகத் தருமசேனர் கடமையாற்றியுள்ளார்.
தருமசேனருக்குவந்த சூலை நோயைச் சமணராலே தீர்க்க முடியாமல் போனது, சைவராகிய திலகவதியாராலே பூசப்பெற்ற திருநீறு சகிதம் சூலை தீர்க்க ஆற்றல் பெற்றதும் தமிழர் சமய வரலாற்றில் ஒரு திருப்பத்தின் மையமாக அமைந்துவிட்டன. சமணமும் தருமசேனர் என்ற பெயரும் அழிந்தன. அந்த அழிவிலே சைவமும் திருநாவுக்கரசர் என்ற பெயரும் தோன்றின. திருநாவுக்கரசர் என்ற பெயர் இறைவனாலேயே வழங்கப்பட்டதெனப் பெரிய புராணம் கூறும். அக்கால தமிழ் நாட்டையாண்ட பல்லவ மன்னனும் பாண்டிய மன்னனும் சமணர் ஆகினர். மக்களிற் பெரும் பகுதியினரும் சமணர் ஆகினர். தனிமனிதர் திருநாவுக்கரசர் என்ன சாதித்துவிட முடியும்? சாதாரண மனிதரான திருநாவுக்கரசருக்கு சூலைநோய் தோன்றி மறைந்தால், செல்வாக்கு மிகுந்த சமணத்தை அது எப்படிப் பாதித்திருக்கும்? அகிம்சையின் எல்லையைக் கண்ட சமணத் சமயத்தில் மனதைப் பறிகொடுத்துச் சேர்ந்த அச்சமயத் துறவியாகப் பலகாலம் வாழ்ந்த ஒருவர் மன்னருக்கு எதிராகப் படைதிரட்டிப் போர் செய்ய முடியுமா? அப்பரின் பழைய கூட்டாளிகளாக இருந்த சமணர் அப்பரைத் தண்டிக்க முனையலாயினர். தங்கள் சமயத்தவனான பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் துணையை நாடலாயினர். அப்பரை நசுக்க வலிமை மிக்கப்படை திரண்டு விட்டது. அப்பர் நசிந்திருந்தால், அது அக்காலத் தமிழ் நாட்டிலே ஒரு சிறுபகுதியாக அறியப்பட்டு விரைவில் மறந்த ஒரு சிறு நிகழ்ச்சியாகப் போயிருக்கும். அப்பர் நசியாவிட்டால், தமிழ் நாட்டுச் சமய வரலாற்றையே, மாற்றியமைக்கக்கூடிய வன்மை அப்பருக்குக் கிடைத்துவிடும். பிந்திய காரியந்தான் நடந்தது.
வலிமைமிக்க எதிரிகள், அப்பரை மிக மோசமாக மனித நீதிக்கும் தம் சமண சமயத்தின் உயிர் நாடியான அகிம்சா தர்மத்துக்கும் மாறாகத் துன்புறுத்தினர். திருநீறும் ஐந்தெழுத்துமே துணைகொண்டு அப்பர் எதிர்த்து நின்றனர் அப்பர் பரம சாதுவாக நடந்து சாத்வீகமான எதிர்ப்பைக் கைக் கொண்டார். துன்பங்கள் யாவற்றையும் ஏற்றார்; சகித்தார். சிவன் நினைவில் மகிழ்ந்தார். எதிரிகள் தொடர்ந்து இழைத்து வந்த துன்பங்கள், தனித்தனியே அப்பர் வாழ்வில் நல்ல வளர்ச்சிப்படிகள் ஆகின. தமிழ் மக்களும் மன்னனும் தலை வணங்கத்தக்க பெருமையுடையவராக அப்பரும் கேலி செய்யக்கூடிய சிறியோராகச் சமணரும் மாறிக்கொண்டிருந்தனர். தமிழ்நாட்டின் வடபகுபயிற் சமயப் புரட்சி நடந்த கதை இது.
தமது வாழ்க்கையில் ஒரு பகுதியில், சமண சமயயத்தை மனமாரப் போற்றிய அப்பர், மற்றொரு பகுதியில் சைவத்தை உள்ளம் நிறையப் போற்றுகிறார். சமணசமயக் கொள்கைகள் முழுவதையுமே அப்பர் வெறுத்தாரா? அவருடைய தோத்திரப்பாடல்கள் மூவாயிரம்வரையிலுண்டு. அவற்றைக் கொண்டுதான் மேற்கூறிய வினாவுக்கு விடைகாண முயலவேண்டும். நிலையாமை பற்றிய கருத்துக்கள், உலகவின்ப விருப்பு வாழ்க்கையே சதமென்ற கருத்தை வெறுக்கும் கூற்றுக்கள் என்பவை திருநாவுக்கரசர் தேவாரத்தில் நிறையக் காணப்படுகின்றன. பதிணெண்கீழ்க்கணக்கிலுள்ள அறநூல்களில், இத்தகைய கருத்துக்கள் காணப்படுகின்றன. சமண சமய நூல்களில் இவை சிறப்பிடம் பெறுகின்றன. சமணரது போதனைகளை வாழ்க்கை பற்றிய நோக்கு, வாழ வேண்டிய நெறியெனப் இரண்டாக வகுக்கலாம். வாழவேண்டிய நெறியாக அறநெறியைச் சிறப்பாகத் துறவறத்தைப் போதித்த சமணர், வாழ்க்கை பற்றிய நோக்காக நிலையாமை வாழ்க்கை வெறுப்பு என்பவற்றைக் கொண்டிருந்தனர்.
நிலையாமை, வாழ்க்கைவெறுப்பு, உலக வைராக்கியம் என்ற கொள்கைகள் இந்தியச் சமயங்கள் யாவற்றையும் ஊடுருவிச் செல்கின்றன. ஒரே பிரதேசத்திலே தோன்றய சமயங்களிற் பொதுப்பண்புகள் காணப்படுதல் இயல்பே. மேலும் இந்தியச் சமயங்களில் வரலாற்றை நோக்கினால், காலப்போக்கில் ஒன்றினது கொள்கைகளின் செல்வாக்கு மற்றொன்றில் இடம் பெறுவதைக் காணலாம். இந்தியச் சமயங்களில் அடிப்படைக் கொள்கைகள் பல, எந்தச் சமயப்பிரிவில் முதன் முதலிலே தோன்றின என அறியமுடியாமலுள்ளன. ஆயினும் ஒவ்வொரு சமயத்திலும் அடிப்படையாக விளங்கும் கொள்கை, மற்றச்சமயத்தில் அத்துணை முக்கியமில்லாததாயிருந்தால், அந்தக் கொள்கை எந்தச் சமயத்துக்கு அடிப்படையோ, அத்தச் சமயத்துக்கே சிறப்பாக உரியதெனலாம். பல்லவவர் காலத்து ஏணைய சமயக் குரவரும் நாயன் மாரும் கூறாத அளவுக்கு அப்பர் தேவாரத்திலே, இக் கொள்கைகள் சிறப்பிடம் பெறுதலாலும், அப்பரொருவரே இவ்வாறு சமயம் மாறிப் பாடியவராதலாலும், இக்கொள்கைகள் சமண சமயத்தனவேயெனலாம்.
நிலையாமை பற்றிய கருத்துக்கள், மனதில் ஏற்படுத்திய சஞசலமும் கடுந்துறவறத்தை அனுட்டிக்க இயலாமையும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனின் தேவை மக்களுக்கு உணர்த்தின. வாழ்க்கையை துன்பம் நிறைந்தனவாகக் கண்டு, துன்பங்களை நீக்குவதற்காகக் கணக்கில்லாத கட்டுப்பாடுகளை அமைத்து அந்தக் கட்டுப்பாடுகள் தருந்துன்பத்தைச் சகிக்க முடியாமல் வருந்தும்பொழுது, கருணை வள்ளலான இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அந்த நம்பிக்கையில் வாழ மனம் விழைகிறது அப்பருடைய மதமாற்றம் இத்தகையதொன்றே. வாழவேண்டிய நெறி சமணத்துறவியாயிருப்பதன்று; சிவ பக்தனாயிருப்பது என்பது அவர் மதம் மமறிய பொழுது கண்ட உண்மை. அப்பரின் கழிவிரக்கம் தாம் பேரின்பம் பெறுவதற்குரிய உண்மை நெறியைக் கடைப்பிடிக்காமற் சமணத்துறவியாயிருந்து காலம் போக்கியமை பற்றியதேயாகும்.
ஏனைய நாயன்மார் ஆழ்வார்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, அப்பருடை.ய வாழ்வின் குறிக்கோள் அவர் சைவசமயத்துக்கு மீண்டபின்பும், சமண சமயத்திலே தாம் புக்க காலத்துக்கொண்ட பேரின்பப் பேற்றின் நோக்கமாகவேயிருந்தமை தெரியவருகிறது. சமணருடைய வாழ்கையின் இலட்சியமே அப்பரைச் சமணத்துக்கு முதல் இழுத்திருக்கலாம். அதனாலேயே, அவர் சமணம் கூறும்வாழ்க்கை நெறிமுறையினைப் பின்பற்றியிருக்கலாம். சமணரது வாழ்க்கை நெறிமுறையிலே திருப்திகாணாத அவரது மனம் மீண்டும் சைவத்தை நாடியிருக்கலாம். சமணத்தின் வாழ்க்கை நோக்கும் சைவத்தின் பக்தி நெறியும் பிணையும் அழகு, அப்பருடைய பக்திப் பாடல்களிலேயே தெரிகிறது இந்தப் பிணைப்பு அப்பருடைய பக்திப் பாடல்களுக்குத் தனிக்கவர்ச்சி தருகிறது. பாசுபதம், காபாலிகம். காளாமுகம் எனப் பல்வேறு தீவிரவாதப் பிரிவுகளையுடையதாய். சமண பௌத்த மதங்களின் பலத்த கண்டனத்துக்கு ஆளாகிவந்த சைவத்துக்கு அப்பர் இந்தவகையிற் செய்த தொண்டு தமிழகத்திலே பரவிய பிறசமயங்களை வெல்லவல்ல சமயமாக அதை மாற்றியது. அப்பர் உள்ளத்திலே உருவான சைவ நெறி, சமணம் என்ற தனிச்சமயம் வேண்டியதில்லை என்ற மனநிலையைத் தமிழ்நாட்டு வடபகுதியில் வாழ்ந்த மக்களுட் பெரும்பாலோருக்கு உண்டாக்கியது. அப்பருடைய திருப்பதிகங்களினோலே மனம் இழுப்புண்டு பரவசம் அடைந்த தமிழகம் அவற்றுக்கு மாத்திரமே தேவாரம் என்ற பெயரை முதலில் வழங்கியது.
தமிழ்நாட்டு வடபகுதியிலே நிலைமை இவ்வாறாக,தென்பகுதியாகிய பாண்டிய நாட்டிலே சமணம் இன்னும் கூடிய செல்வாக்குடன் விளங்கியது. பாண்டிய நாடு முழுவதையும் சமண இருள் ஆக்கிரமித்ததென்றும் பாண்டிய மாதேவியாகிய மங்கையக்கரசியாரும் மந்திரியாகிய குலவச்சிறையாருமே சைவத்தின் குன்றிய நிலைகண்டு துடித்து வருந்தினரென்றும் பெரியபுராணம் கூறுகிறது. சோழநாட்டு இளவரசி மங்கையர்க்கரசியார், பாண்டிமாதேவியாகிய வரலாற்று நிகழ்ச்சி, சோழநாட்டுப் பிராமணராகிய சம்பந்தர் பாண்டிநாட்டில் புகுந்து சைவ சமயப் பிரச்சாரஞ் செய்வதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. சம்பந்தர் பதிகத்தின் பொருளமைப்பு தனித்தன்மையுடையதாய், இது சம்பந்தர் பதிகமே என்று எடுத்துக்காட்டும் இயல்புடையதாய் விளங்குகிறது. சம்பந்தர் தமது சைவ சமயப் பிரச்சார நோக்கத்தின் சாதனமாகவே, இவ்வாறு பதிகத்தை அமைத்திருக்கிறார் போலத் தெரிகிறது.
சம்பந்தர் பாடல்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் இரண்டு வரிகள் இறைவனைப் பற்றியதாகவும் அமைகின்றன. அவ்வமைப்பு, சம்பந்தருக்கு இயற்கையழகிலும் இறைவனருளிலும் ஒரே வகையான ஈடுபாடிருந்ததைக் காட்டுகிறதென்பது மரபாக வரும் விளக்கம் ஆகும். இயற்கை வருணனையாக அமையும் இரண்டு வரி, தலம் அமைந்த சூழலைப்பாடுவதாகக் கொள்வது பொருத்தம்போலக் காணப்படுகிறது. ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ஓரளவுதன் மதிப்புணர்ச்சி காணப்படுமென்றும் ஒருவகையில்லாவிட்டால் வேறொருவகையிலாவது முகமனை விரும்பாத மனிதப்பிறவியே இல்லை என்றும் உளநூலாளர் கூறுவர். முகமனிலே தானே புகழ்தல், பிறர் தன்னைப் புகழத் தாம் கேட்டு மகிழ்தலையும் விரும்புவர். தம் பிரதேசத்தைப்பற்றிப் பிறர் புகழத் தாம் கேட்டு மகிழ்தல் என்னும் மனநிலையே பயன்படுத்தித் தம் காரியத்தைச் சாதிக்கச் சம்பந்தர் முயல்கிறார் போலத் தெரிகிறது. பிறபோக்கான பிரதேசங்களிற் போக்கு வரவு வசதிகள் குறைந்த பகுதிகல் ஆங்காங்கு குடியிருக்கும் மக்களிடையிற் பிரதேச உணர்ச்சி மிகுந்து காணப்படும். சம்பந்தர் தமிழ் நாடு முழவதும் சுற்றுப்பிரயாணஞ் செய்தவராதலால், இவ்வாறுள்ள பிரதேசங்கள் பலவற்றைக் கண்டிருப்பார். இவ்வாறாய பிரதேசங்களைக் குறித்து, உள்ளது விரித்தும் இல்லது புணர்த்தியும் அப்பிரதேசங்களைச் சேர்ந்தவரிடம் கூறினால், அவர் அறம் மிக மகிழ்ந்து எப் பெரிய காரியத்தையும் செய்ய முனைந்து நிற்றலை இன்றுங் காணலாம். பிரதேச உணர்ச்சியைப் பயன் படுத்திச் சைவ சமய மறுமலர்ச்சியில் மக்களை முன் நின்று உழைக்கச் செய்யச் சம்பந்தர் இந்த முறையைக் கையாண்டிருக்கிறார் போலத் தெரிகிறது. இவையெல்லாம் அறியச் சம்பந்தர் உளநூல் கற்றவரெனச் சிலர் சந்தேகித்தல் கூடும். ஆயின், பெருங்கவிஞர் மனத்தத்துவ உணர்ச்சிமிக்கவரென்பது இலக்கிய ஆராச்சி வல்லார் கண்ட உண்மையாகும்.
சம்பந்தர் பதிகம் ஒவ்வொன்றிலும் எட்டாம் பாட்டில் இராவணனைப்பற்றிய குறிப்பு வருகிறது. தீயவர் எவரும் இறைவனை நினைத்து வழிபட்டால், அவன் அருளைப் பெறலாம் என்பதே சம்பந்தர் கருத்து என இப்பகுதிக்கு விளக்கம் கூறுதல் மரபு. சம்பந்தர் கருத்து இதுவேயானால், வேறுகதை கூறுவது, இராவணன் கதையைத் தெரிந்தெடுத்ததற்குக் காரணம் என்ன எனச் சிந்திக்கவெண்டும். இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசக்கதைகள் சங்ககாலத்தில் இருந்து வைதிக சமயப்புராணக்கதைகளுட் பல, சங்கமருவிய காலத்திலிருந்தும் வைதிக சமயப் புராணக் கதைகளுட் பல, சங்கமருவிய காலத்திலிருந்தும் தமிழ்நாட்டில் வழங்கிவந்திரக்கின்றனவென அக்கால இலக்கியங்களிலிருந்தும் கூறலாம். இராவணன் வெள்ளியங்கிரியெடுத்து அதன் கீழ் நசியுண்டது தவிர வேறு ஒரு இதிகாசக்கதையை அல்லது புராணக்கதையைச் சம்பந்தர் இவ்விடத்திற் பயன்படுத்தாமை கவனிக்கப்படவேண்டியது. தீயோரும் சிவனை வணங்கி அருள் பெறலாம் என்பதை வேறொரு கதைப்பகுதியும் நன்கு விளக்கமாட்டாது எனச் சிலர் ஒரு சமாதானம் கூறலாம். அப்படியானால் பிற்காலத்திற் வாழ்ந்த சுந்தரர், மாணிக்கவாசகர், குமரகுபரர், இராமலிங்கசுவாமிகள் முதலியவர்கள் இராவணனைப் பற்றிய இக்கதைப் பகுதியைத் தங்கள் பக்திப் பாடல்களில் விசேடமாக குறியாமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தருடைய சமயகாலத்திற் வாழ்ந்த அப்பரும் இராவணனைப் பற்றிய இப்பகுதியைக் குறிக்கிறார் இவர்கள் இருவரும் இச்செய்தியை பயன்படுத்துவதற்கு, இக்காலச் சூழ்நிலை காரணமாக அமைந்திருக்கலாம் போலத்தெரிகிறது, இராவணன் ஒரு பேரரசன்; சிவனை மதியாதவனாய்ச் சிவன் வாழ்விடத்தையே அப்புறப்படுத்தப் பார்த்தான். அதன் பயனாய்ச் சிவனால் நசியுண்டான். சிவனருள் பெற்றமையினாலேயே, அவன் பின்பு உய்வடைந்தான். அப்பரும் சம்பந்தரும் வாழ்ந்த காலப்பகுதி பல்லவர் காலத் தொடக்கமாகும். இக் காலத்திலேதோன், தமிழ் நாட்டில் பல்லவப் பேரரசு, பாண்டியப் பேரரசு என இரு பேரரசுகள் தோன்றுகின்றன புதிதாகப் பேரரசு கண்டு வாழ்பவர்கள் இராவணன் போலச் செருக்குறுவது இயல்பு. மேலும் இரு பேரரசுகளையும் ஆட்சி புரிந்தவர்கள் சமண சமயத்தவர்கள். அப்பர் சம்பந்தர் தொடக்கிய சைவ மறுமலர்ச்சி தொடக்கத்திலாவது அம்மன்னர்களின் எதிர்ப்பை எதிர்பார்க்கவே நேரிடும் இப் பேரரசர் அவ்வாறு எதிர்த்தால் இராவணன் போர்த் துன்பமடைய நேரிடும் என்பதையே சம்பந்தர் இங்கே சுட்டுகிறாரென்று கொள்ளலாம்.
ஆளுடைய பிள்ளையார் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாட்டில், திருமாலும் பிரமனும் சிவனின் அடிமுடியைத் தேடியுங்காண இயலாதவாரயினர் எனவரும் புராணக்கதையைப் பற்றிய குறிப்புத்தருவர். சிவன் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரிலும் உயர்ந்தவரென்பதை, இங்கே சம்பந்தர் காட்டுகிறாரென்று கூறுபவர்கள், சம்பந்தர் அவ்வாறு கூறவேண்டிய அவசியம் யாது என்றால் விளக்க முடியாமல் இருக்கிறார். பிள்ளையார் இவ்வாறு கூறவேண்டிய காரணம், குப்தர் காலத்தில்லுருவாகிய பௌராணிக சமயத்தினியற்கையில் அமைந்திருக்கிறது. இந்திரன், வருணன், சூரியன் முதலிய வேதகாலத் தெய்வங்கள் அக்காலத்திலே தம் சிறப்பை இழக்க, அவற்றிற்குப் பதிலாக, மும்மூர்த்திகளாகக் கடவுளையமைத்து வழிபடும்முறை தேன்றியது பௌராணிக மதத்தின்படி, பிரமன், படைத்தலையும் திருமால் காத்தலையும் சிவன் அழித்தலையும் செய்வர் ஆகவே, இம் மூன்று தெய்வங்களையும் சமமாகக. கருதும் மனப்பான்மை அக்காலத்துப் பலரிடையே காணப்பட்டிருக்கவேண்டும் மேலும் பல்லவர் காலத்தில், வைணவ சமய எழுச்சியும் நடந்தது. திரிமூர்த்தி வழிபாட்டைத் தொடர்ந்து ஹரிஹர மூர்த்தி வழிபாடு ஏற்கப்பட்டது. ஒரே உருவச் சிலையில் சிவனையும் திருமாலையும் அமைத்து இருவரையும் வணங்குதலே இவ்வழிபாடு. எனவே, மக்கள் வைணவத்தை நாடாமற் செய்ய வைணவம் சைவமளவு உயர்ந்ததல்ல என்று காட்டவேண்டிய அவசியம் சைவப் பெரியார்க்கு அக்காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. மண்டகபட்டு என்னும் ஊரில் பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்மன் அமைத்த முதற் குகைக் கோவிவில், மும்மூர்த்திகளுக்கும் சமமான இடம் அளித்திருக்கின்றான். இப்போக்கைத் தடுத்து நிறுத்திச் சைவத்திற்கு ஏற்றம் கொடுப்பதற்காகச் சம்பந்தர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரையும் தாழ்த்திக் கூறுகிறார்.
பிள்ளையாரின் பத்தாம் பாடலில், சமணபௌத்தர் இழித்துக் கூறப்படுவர் அப்பர் பாடல்களிலும் சமண பௌத்தர் இழித்துக் கூறப்படுகின்றனர். அப்பரும் சம்பந்தரும் சமண பௌத்தங்களிலே தங்களுக்குள்ள வெறுப்பையே இப்பாடல்கள் மூலம் காட்டுகிறார்களென்று கூறினால் கூறினால், இப்பகுதிகளுக்குக் கூறப்படும் விளக்கம் போதாது என்றுதான் தெருவிக்க வேண்டும். சமணர் பௌத்தர் பற்றிய சம்பந்தர் குறிப்புக்களில் மிகுந்த காழ்ப்பும் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் வேதாகமங்கள் அனுசரித்துள்ள வைதிக நெறி சைவநெறிகள் செல்வாக்குக் குறைவதற்குச் சமண பௌத்தர் காரணமாக இருந்ததினால், சம்பந்தர் இவ்வாறு பாடியிருக்கலாம். சமணபௌத்தரை இழித்துக் கூறுதல் அவர் போலிவேடம், ஒழுக்கக் கேடு என்பவற்றைப் பொது மக்களிடம் அம்பலப்படுத்தி அப் பொது மக்களை இச்சமயங்களிடமிருந்து விடுவிக்க உதவியாயிருக்கும். இவ்வாறு சமணரை இழித்துக் கூறுதல் சைவரின் ஒரு பகுதியினருக்கு ஒருவிதமான மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்துச் சமய மறுமலர்ச்சி முயற்சியில், அவர்களை ஊக்குவதாகவும் இருந்திருக்கும்.
திருஞானசம்பந்தரின் பதிகத்தின் பயன் முதலிய கூறும் பாயிரச் செய்யுள் எனத்தகும் திருக்கடைக்காப்புச் செய்யுட்கள் பலவற்றின் ‘நற்றமிழ் ஞானசம்பந்தன்’, ‘ தமிழ் ஞான சம்பந்தன்’,‘சம்மந்தன் செய்த தமிழ் மாலை’ யென்றெல்லாம், தமிழுடன் தம்மை ஒன்று சேர்த்துக் கூறும் பண்பு காணப்படுகிறது. வைதிக நெறியை வடமொழியிலிருந்து தமிழ் மொழிக்கும் புலப்படத் தக்கதாக ஆக்கிய பெருமை சம்பந்தருக்குக் கூறப்படுகிறது. வேதாரணியத்திலே, வேதங்களாலே பூட்டப்பட்டதாய் வேதங்களாலேயே திறக்கப்படிவேண்டியதாயிருந்த கோவிற்கதவைக் திருநாவுக்கரசர் திருப்பதிகத்தால் திறக்கும்படி இவர் செய்தமையின் உட்பொருள், வேதப் பொருள் தெரியாமலிருந்த சாதாரணத் தமிழருக்கு வேதப் பொருளைத் தமிழாக்கிக் கொடுக்கும்படி பிராமணர் பிராமணரல்லாதாரை ஏவியதாகும் எனப்படுகிறது1. செந்தமிழ்ப் பாண்டிநாட்டிலே, தமிழ்ச்சங்கமிருந்த மதுரையிலே, குறள், சிலம்பு, தொல்காப்பியம் கொடுத்துத் தமிழ் வளர்த்தசமணரை எதிர்த்துப்போராட வேண்டியிருந்ததனால் போலும், சங்க மொழியைப் போற்றும் பிராமண குலத்துதித்த சம்பந்தர் தமது தமிழார்வத்தை உணர்த்த வேண்டியேற்பட்டது. வைதிக நெறியும் தமிழ் நாட்டிற்கேயுரிய பழைய சமயமும் கலந்தே சம்பந்தர் காலச் சைவம் தோன்றியதால், சம்பந்தர் சமணருக் கெதிரான சைவரினியக்கத்தைத் தமிழின் எழுச்சியாக ஆக்கிச் சுலபமாக வெற்றியீட்ட முயன்றிருக்கிறாரென்று கருதுவதற்கு இடமிருக்கிறது.
இவையெல்லாவற்றையும் நோக்கும் போது, சைவசமய மறுமலர்ச்சிக்குச் சம்பந்தர் செய்த தொண்டைப் பிற்காலத்தில் உணர்ந்தோர், சைவசமய குரவருள் அவரை முதல்வராகக் கொண்டுபோற்றுவது சாலப் பொருத்தமாகவே காணப்படுகிறது. சம்பந்தரைப்பற்றி ஆறு பிரபந்தங்கள் பாடிய நம்பியாண்டார் நம்பி, அப்பரைப் பற்றி ஒன்றே பாடியுள்ளார்; சுந்தரரைப் பற்றி ஒன்றும் பாடவில்லை. பெரிய புரணம் பாடிய சேக்கிழார் அறுபத்து மூன்று தனியடியாரையும், ஒன்பது தொகையடியாரையும் பாட எடுத்துக் கொண்ட போதும், நூலிற் பெரும்பகுதியைச் சம்பந்தருக்கே ஒதுக்கிறார். நூலிற் பாதியை சம்பந்தருக்கும் மற்றப்பாதியைப் பிறருக்கும் ஒதுக்கியுள்ளார் என்ற கூற்று எழத்தக்க விதத்தில் அவர் சம்பந்தருக்கு முக்கியத்துவம் அழித்துள்ளார். சம்பந்தருடைய பாடல், திருஞானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. கடவுட் கொள்கையை நிலைநாட்டவே சம்பந்தர் பிறந்துள்ளார். மூவர் தேவாரமும் வேதசாரமாக அமைகின்றன என்ற கொள்கையும் உண்டாயினும் சம்பந்தர் தேவாரமே வேதத்தின் சாரம் என்று சிறப்பித்துக் கூறுவோரும் உண்டு.
அப்பர், சம்பந்தர் ஆகிய இருவருள் ஒவ்வொருவரும் மூவாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தோன்றய சுந்தரர் ஆயிரம் பாடல்கள் வரையிலேயே பாடியுள்ளார். இவர்கள் பாடிய பல்லாயிரக் கணக்கானவையாயிருந்து அழிந்துவிட்டனவென்றும் எஞ்சியிருப்பவை இன்று காணப்படுவனவென்றும் கொள்ளப்படுவர் உளர். இன்று உள்ளவற்றைக் கொண்டு ஆராய்தல் போதியது. சுந்தரர் அப்பரிலும் சம்பந்தரரிலும் பெருமதிப்பு உள்ளவர். அவர்கள் கூறியவற்றையே தாமும் கூறுவதாகச் சுந்தரர் கூறுவர். சைவ பக்தியியக்கத்தில் சிவபெருமானுடைய திருக் கோலத்தையும் அருட்செயல்களையும் எடுத்துக் காட்டுவது முக்கியத்துவம் பெறுகிறது. வடமொழிப் புராண இதிகசாசங்களிலுள்ள கதைகளும் கருத்துக்களும் இங்கே எடுத்தாளப்படுகின்றன. அப்பரும் சம்பந்தரும் எடுத்தாண்ட கதைகள் யாவும் சுந்தரரால் எடுத்தாளப்படுகிறன. புராணக் கதைகள் பல, சிவனின் எல்லாம் வல்ல தன்மையைக் காட்ட எழுந்தன. அப்பர் சம்பந்தர் தேவாரங்களிற் சிவனின் வீரச் செயல்கள் அருள் காரணமாக நடைபெற்றன என்ற கொள்கை தோன்றுகிறது. சுந்தரருடைய தேவாரத்தில் இக்கொள்கை பூரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறதெனலாம்.
இறைவனுடைய சில வடிவங்கள் அனுக்கிரக மூர்த்திகள் என்றே கூறப்படுகின்றன. சந்திர அனுக்கிரக மூரத்தி, பார்த்த அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, பகீரத அனுக்கிரக மூர்த்தி, விஷாபகரண மூர்த்தி என்பன சாத்துவிக வடிவங்களுடை இறைவன் தோற்றப் பொலிவு என்பது பொதுவாக ஏற்கப்படுகிறது. அப்பருடைய தேவாரத்தில் அட்ட வீரட்டானம் என்பது குறிக்கப்படுகிறது. விரட்டம் என்பது ஆரூரராலும் குறிப்பிடப்படுகிறது. திரிபுராந்தகன், தக்க சாரி, காமந்தகன், கஜாரிக கஜாந்தகன்,ஜலந்தராரி, காலச்சங்காரன், அந்தகாரி, பிரம சிரச்சேதனன் என்று எட்டுக் கோலங்களில், சிவபிரான் எட்டு வீரச்செயல்களைத் தமிழ் நாட்டிலுள்ள அதிகை, பறியலூர், குறுக்கை, வழுவூர், விறகுடி,கடவூர், கோவலூர், கண்டியூர் என்னும் இடங்களில் ஆற்றினார் என்று புராணக்கதைகள் மக்களிடம் பிரசாரம் எய்தின. இப்புராணக்கதைகளிலே தொனித்த வீரம் சுந்தரர் பாடல்களில் அருளாகக் கமழ்கிறது. உலக மாதாவாகிய உமையைச் சிவபெருமான் தம் பக்கத்தில் வைத்திருத்தல் அவரது அருளை உணர்த்துகிறதெனலாம்.
புராணக்கதைகள் அக்காலத் தமிழ்ப் பொது மக்களைக் கவர்ந்திருப்பதைக் கண்ட சமணர் சமயப் பூசலிலே தோல்விகண்ட நிலையில் எவ்வாறு நடந்து கொண்டிருப்பர் என்று ஆராய்வது பயன் உள்ளது. உதீசித் தேவரியற்றிய திருக்கலம்பகம், பல்லவர் புகழுடன் ஆண்ட காலத்திலே தோன்றயது. இப்பிரபந்தத்திற் காணப்படும் கருத்துக்கள் வைதிக சமயப் புராணக்கதைகள் சமணத்தை எவ்வாறு பாதித்தன என எடுத்துக்காட்டுகிறன. வைதிகசமயப்புராணக் கதைகளைச் சமணர் நோக்கில் விமரிசனஞ் செய்து சிந்தனையைத் தூண்டுவதாகத் திருக்கலம்பகம் அமைகிறது. புராணக் கதைகளுக்குப் புது விளக்கங்கள் கொடுக்கப்பட்டு அவை அருகனோடு இணைக்கப்படுகின்றன. புராணக்கதைகளில் இடம் பெறும் செய்திகள் சில இழித்துக் கூறப்படுகின்றன இவற்றில் பல்லவர் காலத்திலேயே புராணக்கதைகளுக்கு உட்பொருள் அல்லது தத்துவார்த்தப் பொருள் கொள்ளாவிட்டால், அவை கடவுளின் பெருமைக்கு அடுக்கா என்ற நிலை தோன்றிவிடுகிறது.
வேதம் என்ற வைதிக சமயம் முதனூலின் பெயரைச் சமணர் தம் மத முதனூலுக்கு வழங்கத் தொடங்குகின்றனர். இறைவனால், முதன் முதல் நூல் வேதம் என்ற கருத்தை சமயத்தினர் மக்கள் மனதில் வேரூன்றச் செய்து விட்டதனால், அருகனால் அருளப்பட்ட முதனூலும் வேதமே என்று கூறவேண்டிய நிலைக்குச் சமணர் வந்து விட்டனர். திருக்கலம்பகம் வேதத்தையும் அருகனையும் தொடர்பு படுத்துவதையும் வேதத்துக்கே சிறப்பாக உரிய பெயராகிய மறையென்பதை வழங்குவதையும் அருகனே அருளிய வேதத்தை ஏனைய சமயத்தவர் புரிந்த கொள்ளமுடியாமையால் மயங்கிப் பூசலிடுகின்றனர் என்பதையும் குறிப்பிடுகிறது. பௌராணிக மதம் போற்றிய மும்மூர்த்திகளாகிய சிவன், திருமால், பிரம்மன் என்பார் பெயர்களை அருகனுக்கு உரியவனாகக் கூறுவதையும் இப்பிரபந்தத்திற் காணலாம்.
சிவபெருமான் மன்மதனையெரித்தவர் என்ற புராணக் கதைக்கும் அருகன் காமத்தைக் கடந்தவர் என்ற சமணர் நம்பிக்கைக்கும் உள்ள ஒற்றுமை சிவன் செயலை அருகன் மேலேற்றிக் கூறச் சமணருக்க வசதியளித்திருக்கிறது. சிவனை உமையொருபாகன் எனச் சைவர் வருணிப்பதனால்,அருகனைக் கேவலஞானம் என்ற பெண்ணைப் பாகமாக உடையவன் எனப்படுகிறது. சிவபெருமானுடைய வீரச் செயல்களிற் கூற்றுவனை வென்றமை, முப்புரம் எரித்தமை முதலியவனவற்றுக்கும் அருகன் செயளென விளக்கம் தந்து அமைதி காண்கின்றனர் சமணர். முக்கண்ணன், தாழ்சடையோன், ஆல் நிழலிலமர்பவன் எனக் திருக்கலம்பகம் அருகனை வருணிப்பது சிவபெருமான் பக்திப் பாடல்களிற் பெரும் வர்ணனை நினைவூட்டுகிறது. சமணர் இயற்றிய தமிழ் நிகண்டாகிய திவாகரமும் அருகனுக்கு உரிய பெயர்களோடு காமர்க்காய்ந்தோன், திரியம்பகன் (முக்கண்ணன்) என்பவற்றைக் கூறுதல் இங்கே ஒப்பிடத்தக்கது. ஆனால் சிவபெருமான் சுடுகாட்டிற் பேயோடு ஆடுதலையும் பிச்சையெடுப்பதையும் இழித்துக்கூறி அருகனை உயர்த்துகிறார் திருக்கலம்பக ஆசிரியர்.
திருமாலின் மிகமுக்கியமான ஆயுதமான சக்கரம் அருகனுடைய ஆணையைக் குறிக்க வழங்கிய சக்கரத்துடன் இணைக்கப்பட்டதனாற் போலும் சக்கராயுதத்தை விதந்து கூறும் பாடற்பகுதிகள் பல இந்நூலிற் காணப்படுகின்றன ஆனால், அருகன் பகைவரில்லாதவன், அகிம்சை கொள்கையன் என்ற கருத்துக்களும் கூறப்படுகின்றன. திருமால் உலகையுண்டது, உலகையளந்தது, கடல்கடைந்தது, சகடம் சாடியது முதலிய புராணங்களும் அருகன் மேலேற்றிக் கூறப்படுகின்றன ஆனால், திருமால் பாம்பின்மிசைப் பள்ளி கொள்வதை இழித்துக் கூறி அருகனை உயர்த்துகிறார்.
வைதிக சமயத்தில் முக்கியத்துவம் பெறும் பிரணவ மந்திரமாகிய ஓம் என்பதும் சைவசமயத்தில் முக்கியத்துவம் பெறும் பஞ்சாட்சரமும் சமணத் தொடர்புடையனவாக உதீசித்தேவராற் கூறப்படுகின்றன. பௌராணிகக் கதைகள் சிலவற்றின் கடவுளர் விலங்கு வடிவங்களையும் இயற்கைக் கொவ்வாத வடிவங்களையும் கொள்வது குறைகூறப்படுகிறது
புராணக் கதைகள் தமிழ் அறிஞர்களின் சிந்தனையை எப்பொதும் ஊக்கி வந்திருக்கின்றன எனலாம் நாயன்மார் கையில் இவை அடைந்த மாற்றம் சுந்தரரையே திருப்திப்படுத்தவில்லை போலத் தெரிகிறது. சுந்தர் பல புராணக்கதைகளைக் கூறி, அவை நிகழ்ந்ததேன் என்று இறைவனை வினாவுகிறார்.‘ புகரேறு உகந்தேறல் புரித்ததென்னே?’, ‘பிறங்கும் சடைமேல் பிறைசூடிற்றென்னே?’ என்பது முதலாகப் பல வினாக்கள் சுந்தர் தேவாரத்திற் காணப்படுகின்றன1. சிவனுடைய தோற்றப் பொலிவுக்கும் அருட் செயல்களுக்கும் உட்பொருள் காணவேண்டும் என்ற தமிழ் மக்களின் முயற்சி, சுந்தரர் காலத்திலேயே தொடங்கியுள்ளது. திருவொற்றியூர் ஒருபாஒருபது என்ற பிரபந்தத்திற் பட்டினத்தார் இத்தகைய வினாக்களுக்கு விடை காணத் தொங்கியுள்ளார். பிறைச் சந்திரனைச் சடையிற் சூடியிருப்பது தூய அறிவைத் தர வல்லவன் தானே என்பதை உணர்த்துவதற்காகவும், மான் ஏந்துதல் வேதத்துக்கு மூலகாரணமாகிய நாதப் பொருள் தானே என்பதை உணர்த்துவதற்காகவும் என்பன முதலான விளக்கங்கள் பட்டினத்தாராலே தரப்படுகின்றன. திருமூலர் சிவனுடைய அருட்செயல்கள் சிலவற்றிற்கு விளக்கங்கள் கூறியுள்ளார். சிவன் நஞ்சு உண்ட கதை, அண்டமொடு எண்திசையும் அவர் பாதுகாத்து நிற்றலைச் சுட்டும் என்றும், சிவன் தக்கனைத் தண்டித்த கதை, வருந்திப் பின் அருள் செய்யும் இறைவனியல்பைச் சுட்டும் என்றும், சிவன் காமனை வென்ற கதை காமம் முதலிய பாசத்தை வெல்வதைச் சுட்டுமென்றும் திருமூலர் திருமந்திரத்திற் கூறியுள்ளார். புராணக் கதைகள் பற்றிய தமிழர் சிந்தனை வளர்ச்சி சென்ற நெறி இது.
அப்பரும் சம்பந்தரும் செய்த சமயத் தொண்டு ஒருவகை; சுந்தரரும் மாணிக்கவாசகரும் செய்த சமயத்தொண்டு வேறொரு வகை அப்பரும் சம்பந்தரரும் தமிழ்நாட்டிற் சைவத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. சுந்தரர், மாணிக்கவாசகர் என்போர் புறங்கையில் தாக்கம் அதிகம் இல்லாததால், அகப்பையை வெல்வதிலேயே கூடிய கவனம் செலுத்தினர். இறைவனுடைய அருட்காட்சியை எப்பொழுதும் பெறத்தக்க முறையில், தம்முடைய உள்ளத்தைச் செம்மைப்படுத்துவதில் அவர் கவனம் சென்றது மாணிக்கவாசகர் தில்லையில் ஈழத்துப் பௌத்தரை வென்றார் என்று ஒரு கதை கூறப்படுகிறது அக்கதையை உண்மையெனக் கொண்டாலும், வெல்லப் பட்டவர்கள் ஈழத்துப் பௌத்தர்களே. மாணிக்கவாசகர் காலத் தமிழ் நாட்டிற் பௌத்தம் செல்வாக்குப் பெற்றதர்க்குச் சான்றாக ஒரு குறிப்புமில்லை. மாணிக்க வாசகர் பாடிய திருச்சாழல் மாணிக்கவாசகருக்கும் பௌத்தருக்கும் நடந்த வாக்குவாதத்தைக் குறிக்குமென்பர். அவ்வாறு கொள்வதற்குத் திருச்சாழலில் அகச்சான்றெதுவும் காணப்படவில்லை. சுந்தரருக்கும் மாணிக்கவாசகருக்கும் புறச்சமயத்தாரோடு மோத வேண்டிய நிலை அநேகமாக ஏற்படவில்லை என்றே கூறலாம். அப்பரும் சம்பந்தரும் எடுத்துக்கூறிய பொருளில் மூழ்கி, வேறு நூல்களையும் கற்றுச் சுந்தரரும். மாணிக்கவாசகரும் தம்முடைய பாடல்களை இயற்றுகின்றனரெனலாம்.
சுந்தரர் செந்தமிழ் திறம் வல்லவரென்றும் மாணிக்கவாசகர் மாணிக்கம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துபவரென்றும் கூறுவர் இவ்விருவருடைய தனித்தன்மையும் சிறப்பும் இந்த வழியில் வெளிப்படுகின்றன. மாணிக்கவாசகர் செந்தமிழ் நாடெனப் போற்றப்பட்ட பாண்டிநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாண்டிநாட்டு அமைச்சராகத் தக்க கல்வியறிவுள்ளவராக இருந்ததனாலும் அவர் சிறந்த மொழியாற்றல் பெறக்கூடிய சூழல் இருந்திருக்கலாம். சுந்தரர் நாட்டுப்பாடல் ஓசைகளைத் தழுவியும் பாடியுள்ளனர். தங்களுடைய பாடல் முன்பு எழுந்த பக்திப்பாடல்களிலும் வேறுபடவேண்டும், சிறப்புறவேண்டும் என்ற எண்ணமே இவர்களை இவ்வாறு செய்வித்திருக்கலாம். பல்லவர் கால ஆரம்பத்தில் வைகையாற்றங்கரையிலே, திருஞான சம்பந்தர் விபரித்த சைவம், பல்லவர் கால முடிவிலே மாணிக்கவாசகர் என்ற மரமாகித் திருவாசகம் என்ற கனியைத் தந்தது.
பக்தியும் காதலும் ஒற்றுமையுடையன. காதல் மனநிலையில் வெவ்வேறுபடிகள் காணப்படுவதுபோல, சமயப்பக்தி நிலையிலும் இத்தகைய வேறுபாடு காணப்படுகிறதென ஓரளவுக்குக் கூறலாம். அப்பர் சம்பந்தர் பாடல்கள் சிவனிடம் அதிகம் மரியாதை செலுத்துகின்றன. அதிக மரியாதை நெருங்கிய உறவைச் சுட்டாது அப்பரின் தாழ்வு மனப்பான்மை அவரைத் தூரத்திலேயே வைத்திருக்கிறது சம்பந்தர் பாடல்கள். சிலவற்றில் ஓரளவு உரிமையுணர்ச்சி காணப்படுகிறது. அதனால், சம்பந்தருக்குள்ள பக்தி அப்பருடைய பக்தியிலும் நெருங்கிய உறவைச் சுட்டுகிறதெனலாம். மாணிக்கவாசகர் பாடல்களில் உறவு பூரணத்துவம் பெறுகிற மனநிலையைக் காணமுடிகிறது மனத்தை முழுக்க முழுக்கப் பறிகொடுத்துத் தவிக்கும் நிலை மாணிக்கவாசகரது மாணிக்கவாசகர் இறைவனைக் காதலனாகவும் தம்மைக் காதலியாகவும் முழுக்க முழுக்கப் பாவித்ததனாலேயே, பெண்கள் விளையாட்டு வகைகளையும் பொழுது போக்கு வகைகளையும் கையாண்டு தோத்திரப் பாடல்கள் பாடுவராயினரென்றும் கூறலாம்.
சைவசமய குரவர் நால்வர் பாடல்களிலே தத்துவக் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. சைவம் வேதத்தையும் ஆகமங்களையும் பிரமாணமாகக் கொள்வது. வேதமும் ஆகமமும் இறைவனால் அருளப்பட்டன என்ற கருத்துக் கொள்ளப்படுகிறது. தேவார ஆசிரியர்களுக்கு முன் பின்னாகவே ஆகமங்கள் பிரசித்தமடைந்தன என்பர் இறைவனுடைய வழிபாட்டு முறைகளை எடுத்துக்கூறும் ஆகமங்கள் தத்துவக் கருத்துக்களையும் கூறுகின்றன. வேதம் வைதிக சமயங்கள் யாவற்றுக்கும் பொதுவானது. சிவகாமம் சைவத்துக்கே உரியது. திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, இறைவன் உயிருக்கு அருள் செய்யும் திறம், கற்றவர்களும் ஞானிகளும் பிறரும் இறைவனுக்கு அடியார்களாய் அன்பு செய்யும் முறை, இறைவன் அவர்களை இன்புறுத்துவது முதலிய பல பொருளை எடுத்துக் கூறுகின்றன. அவர் காலத்தே சமயப் பூசல் நிலவியதால் அதனை விலக்கற்குச் சமரசம் போதிக்கிறார். கோத்திரம், குலம் சாத்திரம் முதலியவற்றால் ஏற்படும் பிளவுகளைக் கண்டித்துச் சிவ பக்தியை வற்புறுத்துகிறார்.
மணிமேகலையிற் சைவவாதி சுடர் இரண்டு, இயமானன் ஒன்று, பூதம் ஐந்து ஆக எட்டு வடிவாக இறைவன் உளன் என்று கூறுவது சம்பந்தருக்கும் உடன் பாடு1. இறைவனே உயிர்கட்கு உடற் கருவிகளைப் படைக்கிறான். அவ்விறைவனே உயிருக்குயிராய் உடனாய் நின்று காண்பன கண்டும் காட்டியும் உதவுகிறான். எல்லாரும் அவன் திருவடிகளை வணங்கி வினை நீக்கமும் பேரின்பமும் ஈந்தருளும்படி அவனை வேண்டுதல் செய்ய வேண்டும். மனதிற் காமம் வெகுளி முதலிய பல்வகை நினைப்புக்களுக்கு இடங்கொடாது மனதைக் கட்டுப்படித்தி வாழவேண்டும். சமணபௌத்த சமயங்கள் வியந்து கூறிப் பிரசாரஞ் செய்த துறவு நன்நெறியே. யாயினும் பக்தி நெறிக்கு ஈடாகாது. மனத்தை ஒரு நிலைப்படுத்தி ஆண்டவனை வழிபடுபவர்களுக்கு இம்மைப் பயன்களேயன்றி வீடுபேற்றுக்கு இன்றியமையாத திருவருள் ஞானமும் இறைவனால் அருளப்படும்.
இன்ப நாட்டமும் இன்பத்தை பெறும் முயற்சியுமேயுடைய உயிர்கட்குத் தடையாக அமைவன அவ்வுயிர்கள் செய்யும் வினைகளே என்பது இந்தியச் சமயத்துவ நூல்கள் பலவற்றுக்கு உடன்பாடான கொள்கையாகும் இவ்வினைகளை உயிர்கள் நுகர்ந்து கழித்தாலன்றி அவை நீங்கா வினையாகிய பகையை வெல்லும் பொருள் யாதுமில்லையென்பது சமணம் பௌத்தம் முதலிய சமயங்களின் முடிபு. ஞானசம்பந்தர் அம்முடிவை மறுத்து இறைவழிபாட்டால், இவ்வினைப் பகை கெடும் என உபதேசிக்கிறார் வினைகள் உளவாதற்குக் காரணம் உயிர்களை அநாதியே பற்றி நிற்கும் பாசமாகும் இறைவனை வளிபடுவதால் பாசத்தை வலி அழிக்கலாம். மணிமேகலையிற் சைவவாதி கூறும் ஏனைய சமயக்கருத்துக்களும் சம்பந்தர் பாடல்களில் இடம் பெறுகின்றன. கலையருளினேன் படைத்து விளையாடும் பண்பினேன் துடைத்துத் துயர் தீர்க்கும் தோற்றத்தோன், தன்னின் வேறு ஒன்றிலோன் என்ற மணிமேகலை வர்ணனைகளின் எதிரொலிகள் சம்பந்தர் பாடல்களிற் கேட்கின்றன.
அப்பர், சம்பந்தர் எடுத்தக் கூறும் கருத்துக்கள், சுந்தரர் தேவாரத்தில் இனிய தமிழ் நடையிற் கூறப்படுகின்றன. உலக வாழ்க்கையால் உய்தி பெறவேண்டிய உயிர்களின் ஞானமார்க்கத்திற்குத் தேவையான கல்வி கற்பித்து ஞானம் நல்குபவன் இறைவனே. இறைவனால் ஆகமம் அருளப்பட்டதென்பதை ஆரூரரே முதன் முறை தமிழிற் குறிக்கிறார். ‘அண்டர் தமக்கு ஆகமநூல் ஆதி’, ‘ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மான்’ என்று ஆகமநூல் பற்றிச் சுந்தரர் எடுத்துக் கூறுதற்கேற்ப பல்லவ வேந்தன் இராசசிம்மன் தன்னைக் கைலாசநாதர் கோவிற் கல்வெட்டில் ‘ஸ்ரீ ஆகமப் பிரியன்’ எனக் கூறிக்கொள்வன். சுந்தரர், ‘இறைவன் உயிரின் உள்ளத்துள்ளே நிற்கும் ஒண்பொருள்; அவனை உள்ளத்துள்ளே ஓர்ந்து உணர்வது யோகம்; அவ்வாறு உணர்வார்க்கு அவன் நாபிக்கு மேலே ஒரு நால்விரல் நடுவிற் காட்சியளிப்பான்; அவ்விடத்தே அவனைச் சிந்தித்து என்றும் துதித் தொழுகும் அன்பர் சிந்தையிலே திகழ்கிறான். அவ்வாறு திகழ்வதால் சிந்திக்கும் அன்பரது சிந்தை திருத்தம் எய்துகின்றது என இவடவாறு யோக நெறியைப்பற்றி எடுத்துக் கூறுவது1, அவர் யோகநெறியில் நின்றவர் என்ற கருத்தப் பிற்காலத்தில் எழ ஒரு காரணமாகலாம்.
சுந்தரரின் மணவாழ்க்கையும் யோகமே என வருணிப்பர் சேக்கிழார். சுந்தரர் இரண்டு பெண்களை மணந்ததும், அவர்களுள் ஒருத்தி தேவரடியாளாக இருந்ததும், மற்றவர்களுக்கு‘உன்னைப்பிரியேன்’ என்று சத்தியம் செய்து கொடுத்து வெகு சீக்கிரத்திலே அவளைப்பிரிந்து சத்தியம் தவறியதும் சுந்தரர் மீது மக்களுக்கு இருந்த மதிப்பைப் பாதிப்பனவாயுள்ளன. சாதாரண மனிதனின் வாழ்விற்போலச் சுந்தரரது வாழ்விற் காணப்பட்ட இம்மறுவிற்குப் பரிகாரமாகவே, சேக்கிழார் பின்வருமாறு விளக்கம் கொடுத்திருக்கலாம். சுந்தரர், பரவையார், சங்கிலியார் என்போர் பூவுலகத்திற் பிறக்கும் முன்பு, கைலாசத்திற் சிவனுக்கும் உமைக்கும் தொண்டென்றும், கைலாசத்திற்லேற்பட்ட காதல் நிறைவேற்றுவதற்காகவே இறைவனானையால், அவர்கள் பூவுலகத்திற் பிறந்தார்களென்றும் பெரியபுராணத்துத் தடுத்தாட் கொண்ட புராணத்திற் காணப்படும் முற்பிறப்புக் கதையை வெளியிட வேண்டிய தேவை இதே நோக்கிலேயே எழுந்திருக்க வேண்டும்.
ஆன்மா அடையக் கூடிய மிக உயர்ந்த நிலை திருவருள் ஞானம் எனப்படும் சிவஞானம் என்பது. சிவ பக்தியாகிய அன்பு சிவஞானத்தால் மேலோங்கும். அவ்வித அன்பே சிவமாவது என்பர். காதன்மை, காதல், நேசம், பித்தம், அன்பு என்ற சொற்கள் அந்நிலையைக் குறிக்கச் சுந்தரரால் வழங்கப்படுகின்றன. இதயம் உருகுவதே அன்பாதலால் நெகுதல், கசிதல், ஈரம். குழைவு என்ற சொற்கள் நாயனாராற் கையாளப்படுகின்றன1.
தேவாரங்களில் வேத வேதாகமங்கள் பற்றிய கூற்றுக்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. திருவாசகத்தில், சிவாகமங்களைப் பற்றிய குறிப்பு மிகுதியாக உள்ளது. மாணிக்கவாசகர் வாழ்வில் நிகழ்ந்த ஞானேபதேச நிகழ்ச்சி ஆகமங்கள் கூறும் முறையைப் பெரிதும் பின்பற்றியுள்ளது.மாணிக்கவாசகர் வாழ்வில் நிகழ்ந்த ஞானேபதேச நிகழ்ச்சி ஆகமங்கள் கூறும்முறையைப் பெரிதும் பின்பற்றியுள்ளது மாணிக்கவாசகர் ஆதிசங்கரர் நிறுவிய மாயாவதத்தைக் கண்டித்துள்ளார். உயிருள்ளவை, உயிரில்லாதவை, மண்ணுலகு, விண்ணுலகு, நரகம் ஆகிய எல்லாம் பிரமத்தின் தோன்றியொடுங்குபவை என்று மாயாவாதம் கூறும். அதன் மாறுபட்டு உலகு, உயிர்கட்கு வேறாகச் சிவம் என்ற பரம் பொருள் ஒன்று உண்டு என்று சிவாகமங்கள் கூறும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலம் மாணிக்கவாசகராலேயே முதன்முறை குறிக்கப்படுகின்றன. ஆன்மாக்களுக்கு இருவினையொப்பும் மல பரிபாகமும் உண்டாகுங்கால் சத்திநிபாதமும் சிவஞானப் பேறும் ஏற்படும் என்று சிவாகமம் கூறும். இருவினையொப்பின் பின் சிவஞானப்பேறு ஏற்படுவது மாணிக்கவாசகராற் குறிக்கப்படுபிறது. ஞானகுரவனாக வந்தாட்கொண்ட இறைவன் பிரிவு மாணிக்கவாசகருக்கு ஆற்றொணாத் துயரந்தந்ததால், பிறவிக் குருடன் இனிய காட்சிக்கமைந்த கண்பெற்றுப்பின் அதனை இழந்தால் எவ்வாறு வருந்துவானே, அவ்வாறே அடிகளும் வருந்திப் புலம்பினார். அவ்வருத்த மிகுதியைத் திருச்சதகம், கோயின் மூத்த திருப்பதிகம், கோயிற்றிருப்பதிகம், செத்திலாப்பத்தி, திருவேசறவு. ஆகிய பதிகங்கள் பலவற்றிலும் காணலாம். இவை சிவத்தியான யோக நிட்டையிலமர்ந்தும் அதின் நீங்கிய காலங்களிற் பாடப்படும் எலும்பெ உருக்கவல்ல ஞானானுபவப் பக்தி பாடல்களாயிருப்பதனால், மாணிக்கவாசகர் ஞான நெறியில் நின்றவர் என்ற கருத்துத் தோன்றியிருக்க வேண்டும்.
சிவனைடைய யோக நெறியை மார்கக்மாகக் கொண்ட சித்தர் கணத்தைச் சேர்ந்த திருமூலர் பாடிய திருமந்திரம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. ஆருரர் திரமூலரை நம்பிரான் என்று குறிப்பர். சைவாகமங்களின் சாரமாக அமைந்த இந்நூல் சித்தாந்த சைவ மார்க்கத்தையும் யோகமார்க்கத்தையும் விளக்கத் தமிழில் எழுந்த முதனூல் போலக் காணப்படுகிறது. இந்நூல் அறநெறியையும். சைவ நெறியையும் இணைக்கிறது. முதலாவது தந்திரம் அறநூல்களின் சாரத்தை எடுத்துக் கூறுவது போல அமைந்திருக்கிறது.யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, பற்றற்ற மனம், பிறருக்கு உதவுதல், கல்விப் பெருமை, புலனடக்கம் என்பன அங்கு கூறப்படகின்றன.
திருமூலர் கைலாசத்திலுள்ள நந்திதேவரின் சீடரான ஒரு முனிவர் எனவும் அவர் தென்னகம் வந்தபோது, பரகாயப்பிரவேசத்துக்குரிய யோக நெறிமுறையினால் அவர் ஆன்மா, மூலன் என்னும் இடையன் பிரேதத்திற் புகுந்ததெனவும், அதன் பின்பு யோக நிலையிலமர்ந்த அப்பெரியார் திருமந்திர நூலினைப் பாடியருளினாரெனவும் சேக்கிழார் குறிப்பிடுவர். கைலாசத்திலிருந்து வந்த கை காணப்படுவதால், இவர் காஷ்மீர் சைவத்தைச் சேர்ந்தவராகலாம் என்பர் சிலர். பல்லவர் காலத்து ஏனைய தமிழ் நூல்களோடு ஒப்பிடும் போது, வடமொழி மூலநூல் அறிவில்லாத ஒருவரால் இவ்வளவு சிறந்த நூல் இயற்றப்பட்டிருக்க முடியாது என்பது புலப்படும். அதனால், இவரை வடநாட்டோடு தொடர்புறுத்தும் கதை தோன்றியிருக்கலாம்.
இந் நூலிற் சிவனுடைய படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களும் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்களும் எடுத்துக் கூறப்படுகின்றன. சைவசமயத்தின் பல்வேறு பிரிவுகளாகச் சுத்த சைவம், அசுத்த சைவம்,மார்க்க சைவம். கடும் சுத்த சைவம் என்பன குறிக்கப்படகின்றன. சரியை ,கிரியை, யோகம் , ஞானம் என்பனவும், சன்மார்க்கம், சகசமமார்க்கம், த்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் என்பனவும் விளக்கப்படுகின்றன. சிவன் குருவடியாக வருவதும் அவன் அருளின் அவசியமும் இடம் பெறுகின்றன. சமாதி நிலை விளக்கப்பட்டு சிவானந்த நடனம், சுந்தர நடனம், பொன்னம்பல நடனம், ஆச்சாரிய நடனம் முதலிய இறைவன் நடனங்கள் விளக்கப்பட்டுள்ளன. திருமந்திரம் நான்காம் தரத்தில் காணப்படும் மந்திரோபாசன முறை சாக்த மதத்தோடு தொடர்புடையது கி.பி.500 அளவில், அம்மன் வணக்கம் தனி வணக்கமாக ஏற்படலாயிற்று. அம்மனை முழு முதற் கடவுளாக வணங்கும் மக்களும் ஏற்பட்டனர். சைவசமயத்தின் ஒரு உபபிரிவாகவே இது தோன்றி வளர்ந்தது. மந்திரம், இயந்திரம், முத்திரை, சக்கரம் என்பன இச்சமயத்திற் சிறப்பாக கூறப்படுவன பைரவி மந்திரம், திரிபுரச் சக்கரம், ஏரொளிச் சக்கரம், புலனாபதிச் சக்கரம் முதலியன திருமூலராற் கூறப்பட்டன. யோகநெறி மூலம் திருமூலர் பெற்ற அனுபவங்களும் புலப்படுத்தப்பட்டன. திருமூலர் குறித்த யோக முறைக்கும் பதஞ்சலி குறித்த யோகமுறைக்கும் வேறுபாடுகள் உள. திருமூலர் விளக்கும் யோக முறை அவர் பெரிய யோகி என்பதை உணர்த்துகிறது. காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்ற ஒன்பது சிவகாமங்கள் திருமூலராற் குறிப்பிடப்படுகின்றன. திவாரகம் வேறுசில ஆகமங்களின் பெயர்களை எடுத்துக் கூறுகின்றது.
தொண்டர்களின் சரித்திரம் பக்தியியக்கத்தை வளர்க்கப் பெரிதும் உதவியது. கோவில் வழிபாட்டின் முக்கியத்துவம் அடியாற் பலரின் வரலாற்றினால் புலனாகிறது. கோவில் கட்டுதல், கோவிலிற் குளங்கள் தோண்டுதல், நைவேத்தியம் வைத்தல், வளக்கேற்றுதல், கற்பூர தீப மேற்றுதல், சந்தனம் வழங்கல், இசைக் கருவிகள் வழங்கல் இலிங்கத்துக்கு அபிடேகஞ் செய்தல், கோவில் விழாக்களை நடத்துதல், விழாக்களிகன் தரிசனத்துக்குப் போதல் என்பன கோலில் வழிபாட்டில் அடங்கும். பிராமணரல்லாதாரும் பூசை செய்தனர். விபூதி தரித்தல், உருத்திராட்சமணிதல். பஞ்சாட்சர ஜெபம் என்பவற்றோடு பூசை வழிபாடுகளைச் செய்தல் ஆகம வழிபாட்டில் அடங்கும். திருப்பதிகம் பாடுதலும், அதனை இசைக் கருவிகளிலிட்டு வாசித்தலும் கோவில் வழிபாட்டில் ஒரு பகுதியாகின்றன. கொவிலிற் புராண நடனம் நடைபெற்றது. கண்ணப்பர், சாக்கியர் என்போர் சரிரத்திரங்களினாற் பக்திவழிபாடே முக்கியம் என்பது தெரியவருகிறது. சிவனடியாரினை வணங்குதலும் தொண்டரிடத்திற் காணப்பட்டது. கணநாதர் சம்ந்தரையும் அப்பூதியடிகள் அப்பரையும் பெருமிழலைக்குறும்பர் ஆரூரரையும் வழிபட்டு வந்துள்ளனர். சிவனடியாரைச் சிவனாகவே மதிக்க வேண்டும் என்ற கருத்துக் காணப்பட்டது. கடவுளை வணங்குவதிலும் பார்க்க, அடியாரை வணங்குவதே முக்கியம் என்று கொண்டார் விறன்மிண்டர்
மனம், வாக்கு, காயம், என்னும் மூன்றாலும் வழிபாடு நடைபெற்றது. வாக்கு ஆகிய மந்திரமும், காயத்தின் ஆகிய கிரியையும் மனதின் சிந்தனையோடு கூட்டியே நிகழ்த்தப்படுவன. மந்ததிரம் கிரியை, பாவனையாகிய மூன்றும் பொருத்திச் செய்யப்படும் பக்தி பூர்வமான பூசை வழிபாடுகளே பயன் கொடுப்பன. அந்தர்யாக பூசை எனப்படும் மனதாற் செய்யப்படும் பூசைசெய்யாமல், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளிற்செய்யப்படும் புறப்பூசை பெரும் பயன் தராது. கிரியாமார்க்கத்தில் நிற்போர் புறப்பூசை செய்ய இயலாத காலத்தும் அகப் பூசை செய்யவேண்டும். ஆகவே, பூசை வழிபாடுகளுக்குக் கருவிகளாகிய மனம் வாக்கு காயங்களுள்ளே மனமே முக்கிய தன்மை வாய்ந்தது. பஞ்சாட்சரசெபத்துள் வாசிகமாகச் செபித்தலிலும் மானதமாகச் செபித்தலே சிறந்தது என்பதும் யோகிகளும் ஞானிகளும் மானச பூசையாகிய அகப்பூசை செய்தற்குரியவர் என்பதும் நோக்கற் பாலன.
சுந்தரருடைய திருத் தொண்டத் தொகை மற்றைத் தேவார திருவாசங்களில்லாத தொண்டர் துதி என்ற புது வகுப்பு ஒன்றைச் சிருட்டி செய்கிறது. தொண்டர் குருலிங்க சங்கமங்களைச் சிவனாகப் பாவித்து வழிபடுதலும், அம்மூன்றிலும் சிவன் வெளிப்பட்டு நின்று பூசை வழிபாடுகளை ஏற்று அவருக்கும் அருள் செய்தலும் சைவ சித்தாந்தக் கருத்துக்களாகும். அவ்வாறு வழிபடும் தொண்டர்களையே திருத்தொண்டத் தொகையில் துதிக்கின்றார் சுந்தரர். தொண்டர்களைத் துதித்தலிற் புதுமையில்லை. சாதி இனம் என்பன கடந்த நிலையிலமைந்த தொண்டர் குலத்தைப் பற்றிப் பெரியாள்வாரும் கூறுவர். பக்தரின் பாதத்திலுள்ள தூசி எனப்பொருள்படும் தொண்டரடிப்பொடி என்ற சொற் தொடர் தனிச்சிறப்பு வாய்ந்தது. கங்கையில் நீராடுவதிலும் பார்க்கத் தொண்டரின் அடிப்பொடி ஆடுதல் தூய்மையானது என்பர் குலசேகர ஆழ்வார். தமிழ் நாட்டில் தமக்கு முன்னிருந்த சிவனடியார்களையெல்லாம் நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில் சேர்த்துக் கூறுகிறார். இப்பிரபந்தத்திலே தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரும் இடம் பெறுகின்றனர். வைதிகப் பேரறிஞர் சோமாசிமாறர், உருத்திர பசுபதி; ஆகம அறிஞர் சிவகோசாரியார்; அறிஞரும் புலவருமாகிய பொய்யடிமையில்லாத புலவர், காரி: பேரரசராகிய நெடுமாறன், கழற்சிங்கன்: சிற்றரசராகிய ஏயர்கோன், கோட்புலி;மீனவராகிய அதிபத்தர், குயவராகிய திருநீலகண்டர்; வண்ணாராகிய திருக்குறிப்புத் தொண்டர், வேடராகிய கண்ணப்பர் இவரெல்லோருஞ் சேர்ந்தே சிவனடியார் கூட்டம் உருவாகுகிறது. சிவபக்தியொன்றே இவர்கள் யாவருக்கும் பொதுவானது. சைவர்கள் யாவராலும் வணங்கப்பட வேண்டியவர்களாக இவர்கள் குறிப்பிடுகின்றனர். சுந்தரர் கூறுகின்ற தனியடியார் யாவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தொகையடியாரில், அப்பாலும் அடிச்சார்ந்தாரைப் போற்றுவதன் மூலம் தம்முடைய பரந்த மனப்பான்மையை வெளியிடுகிறார்.
பல்லவர் காலச் சைவ வைணவ எழுச்சியால், mr குன்றுதலுற்ற சமணபௌத்த மதங்கள், சோழப் பெருமன்னர்களின் பரந்த மனப்பான்மை காரணமாக மீளவும் தலையெடக்கலுற்றன. அவற்றின் வளர்ச்சியைத் தடைசெய்து சைவம் பெற்றுவிட்ட வெற்றியை நிலைநிறுத்த வட இந்தியாவில் முன்பு புராணங்கள் தோன்றியது போலத் தமிழ் நாட்டிலும் சோழர் காலத்திலே, புராணங்கள் சில தோன்றின. சோழர் கால முடிவிலிருந்து பிற்காலத்திலே சமணபௌத்தர் பற்றிய பிரஸ்தாப தமிழிலக்கிய வரலாற்றின் கண்ணும், தமிழ்நாட்டு வரலாறு முதலியவற்றின் கண்ணும் அருகிப் போவதற்குச் சோழர் காலத்துத் தோன்றிய புராணங்கள் ஓரளவு காரணமாக இருந்திருக்கலாம். சோழர் காலப் புராணங்களுள்ளுள்ளே தனிச்சிறப்புக்கள் சிலவற்றை உடையதாகச் சேக்கிழாரின் பெரிய புராணம் விளங்குன்றது.
சேக்கிழாரின் பெரியபுராணம் பல்லவர்காலத் தமிழ் நாட்டின் வரலாறாக அமைந்திருக்கிறது என்று அபிப்பிராயப்படுவர் சிலர். அந்த அபிப்பிராயத்தில் உண்மையில்லாமலில்லை. பல்லவர் காலத் தமிழ் நாட்டு வரலாறுவரைய முற்படுவோருக்கு வேண்டிய பல விடயங்கள் பெரிய புராணத்தில் காணப்படுகின்றன. அக்காலச் சமய வரலாற்றை ஆராய்வதற்கு வேண்டும் விடயங்கள் பலவும் அங்கு விரிவாகப் பேசப்படுகின்றன. பாமர மக்களையும் உள்ளமுதிர்ச்சி பெறாதவர்களையும் கவர்வதற்கு அற்புத சம்பவங்களைக் கோவைப்படுத்திக் கூறுவது சிறந்த வழியாகும். சமய வரலாறு கூறும் பண்டைய நூல்கள் இவ்வாறே பெரும்பாலும் அமைந்தன. பல்லவர் காலத்திற் சைவம் பெற்ற வெற்றியை எடுத்துக் கூறும் பெரிய புராணமும் சிங்கள பௌத்த மக்களின் மகாவிகாரை வரலாறு கூறும் மகாவமிசம் இன்றும் கொள்ளப்படுகிறது அந்நூலிலும் அற்புதக்கதைகள் மலிந்திருக்கின்றன.
பதினோராம் நூற்றாண்டின் பெரும்பகுதிக் காலத்தில் இலங்கை சோழப் பேரரசின் ஒரு மாகாணம் என்ற நிலையில் இருந்தாலும், முதலாம் இராசராசன் முதலிய சோழப் பெருமன்னர் இராசராசேச்சுரம் முதலிய பகுதிகளில் இராசராசப் பெரும்பள்ளி முதலிய விகாரைகளை யெழுப்பியும் நாகப்பட்டினத்துச் சூடாமணி விகாரம் முதலியவற்றிற்குத் தானஞ் செய்தும் இருத்தலாலும், புத்திர மித்திரனார் என்னும் சிற்றரசர் சோழநாட்டில் ஒரு பகுதியை ஆண்டு தம் காலச் சோழப் பெருமன்னனாகிய வீரசோழனைப் போற்றி வீரசோழியம் செய்திருத்தலாலும். சோழப்பெரு மன்னர்கள் பொளத்த சமயத்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனரெனக் கருதலாம். சோழப் பெருமன்னர் காலத் தமிழ்நாட்டுச் சமணர், செல்வாக்குப் பெற்றிருந்த கன்னட நாட்டிலிருந்து ஆக்கமும் ஊக்கமும் பெற்றிருக்கலாம். முதலாம் குலோத்துங்கன் நாகப்பட்டினத்துச் சூடாமணிவிகாரத்திற்குக் கிராம தானம் செய்ததற்குச் சாசனச் சான்றுண்டு. ஆகவே, அக் குலோத்துங்கன் நாகப்பட்டினத்துச் சூடாமணிவிகாரத்திற்குக் கிராம தானஞ் செய்ததற்குச் சாசனச் சான்றுண்டு. ஆகவே,அக்குலோத்துங்கன் பெயரானாகிய இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் பௌத்த பிக்குகள் தம் சமய மொழியாகிய பாளியில் வரைந்த மகாவமிசம் பற்றி அறிந்திருக்கலாம்.
மகாவமிசமே புராண இலக்கியத்தோடொத்ததென்றும், அது வட மொழிப் புராணங்களின் நூற்போக்கைத் தழுவித் தோன்றியிருக்கலாம் என்றுங் கருதுவோருளர். வாயுபுராணம், மச்சபுராணம் முதலிய பழைய வடமொழிப் புராணங்களிலிருந்து வரலாற்றுச் சான்றுகள் ஓரளவு பெறப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால், அந்நூல்கள் கூறும் குலமுறை முதலிய தமிழிலுள்ள வெவ்வேறு திருவிளையாடற் புராணங்களிலும், மூவருலாஒவ்வொன்றிலும் அமைந்துள்ளவைபோல, ஒன்றுடன் ஒன்று முரணுவனவாகவும் சாசனச்சான்றுகளோடு சில இடங்களிற் பொருந்தாதனவாகவும் காணப்படுகின்றன. மகாவம்சம் தற்கால வரலாற்று நூல்களோடு ஒப்பிடுவதற்குத் தகுதியற்றதாயினும் பழைய வடமொழிப் புராணங்களிலும் பார்க்க எவ்வளவோ கூடிய வரலாற்றுணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது. அதேபோலப் பெரியபுராணத்தின் கண்ணே திருவிளையாடற்புராணம் முதலியவற்றிலும் பார்க்க எவ்வளவோ அதிக வரலாற்றுணர்ச்சி காணப்படுகிறது. சோழப் பெருமன்னர் காலப் பொருளியல் மேம்பாடு உலகியல் வாழ்க்கையைப் போற்றும் இலக்கியம் எழ வசதி செய்திருக்கும், வாய்பினை அளித்திரக்கும் என்பதும் ஏற்கக் கூடியனவே. ஆயின் கம்பர், திருத்தக்கதேவர், சேக்கிழார் முதலியோர் பிறமொழியிலக்கியங்கள், கலைகள் முதலியவற்றிகு எவ்வளவு கடைமைப்பட்டிருக்ககூடும் என்பது இலக்கிய வரலாற்றாசிரியர்களால் இன்னும் ஆராயப்படவில்லை. சோழர்கள் கங்கையும் கடாரமும் கொண்டவர்களென்ரால் வேற்றுமொழிகள் பேசப்படும் நாடுகளுக்குச் சோழப் பேரரசு பரந்து சென்றதென்பதே அதன் பொருள். சோழப் பேரரசு இந்த நிலையில் இருந்த போது, அதன் ஆட்சிக்குட்பட்ட வேற்றுநாட்டு இலக்கியங்களின் செல்வாக்குச் சோழநாட்டு இலக்கியத்தில் ஓரளவு இடம் பெற்றிருக்கலாம். சோழநாட்டுக் கலைகளின் செல்வாக்கும் ஏனைய நாட்டுக் கலைகளில் ஓரளவு இடம்பெற்றிருக்கும். சிங்கள சந்தேசியப் பிரபந்தங்களிலே தமிழிலுள்ள தூதுப் பிரபந்தங்களின் செல்வாக்கும் சிதத் சங்கரவ முதலிய இலக்கண நூல்களில் வீரசோழியம் முதலிய தமிழ் இலக்கண நூல்களின் செல்வாக்கும் காணப்படுகின்றன. என அறிஞர் சிலர் கருதுவர். எனவே சிங்கள நாட்டு மகாவம்சத்தின் செல்வாக்குத் தமிழிலுள்ள பெரியபுராணத்திலிருந்தால் அது வியப்பிற்குரியதல்ல. இவையெல்லாவற்றையும் ஆராய்ந்தாற்றான் தமிழிலக்கிய வரலாற்றாராய்ச்சி பூரணமாகும்.
தமிழிலக்கிய வரலாற்றிற் சேக்கிழார் சாதனை என்ன என்பது சுலபமாக முடிவுகட்டக் கூடியதன்று. மகாவம்சத்திற்கு அவர் கடமைப்பட்டுள்ளாரா என்பது நன்கு ஆராய்ந்து தீர்மாணிக்கப்பட வேண்டியதாகும். சீவகசிந்தாமணிக்குப் போட்டியாக எழுந்ததே பெரிய புராணம் என்று கூறப்படுகிறது சீவகசிந்தாமணியைப் பின்பற்றிப் போலும் சேக்கிழாரும் தம்முடைய நூலைப்பதின்மூன்று பகுதிகளாக பிரித்திருக்கிறார். திருத்தக்கதேவர் பயன்படுத்திய யாப்பையே சேக்கிழாரும் கையாண்டார். சிந்தாமணியில் முதன்முதற் கையாளப்படும் சொற்றொடர்கள் பல, சேக்கிழாரால் எடுத்தாளப்படுகின்றன. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பதின்மூன்று பகுதிகளாக அமைத்துத் தமிழ்நாட்டு மன்னன் புகழ்பாடிய கலியத்துப்பரணி பெரிதும் போற்றப்பட்டமை சேக்கிழார் தமிழ்நாட்டுக்கதைகளைப் பொருளாகக் கொண்டு இவ்வாறு காவியஞ் செய்யத்துணிவு கொடுத்திருக்கலாம். கி.பி. 897-ல் சமணரால் மகாபுராணம் எழுதி முடிக்கப்பட்டதென்றும், அதில் அறுபத்துமூன்று அடியார்கள் வரலாறு கூறப்படுகிறதென்றும் பெரிய புராணம் என்பது மகாபுராணம் என்பதின் மொழிபெயர்ப்பு என்றும் அடியார் தொகையை அந்நூலைப் பின்பற்றியே சேக்கிழார் அமைந்திருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். இரண்டு நூல்களிலும் காணப்படும் ஒற்றுமை தற்செயலாக ஏற்பட்டதென்று கூறமுடியவில்லை. சமணரது நூலைப்பின்பற்றியே சைவரது நூல் எழுந்ததென்று கருதுவோர் சிலர், திருத்தொண்டத்தொகை காலத்தாற் முற்பட்ட சுந்தரராற் பாடப்பட்டதாகக் கொண்டால், தம்முடைய கருத்துக்குப் பாதகமான சான்று ஆகிவிடுமாதலால், அத்தொகை சுந்தரருக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் இடையில் வந்த ஒருவராற் பாடப்பட்ட சுந்தரர் பெயரில் வழங்கப்பட்டு வந்திரக்கலாம் என்பர்.
பெரியபுராணம் கூறும் நாயன்மார் வாழ்க்கைச் சம்பவங்கள் பல நாயன்மார் வாழ்க்கையில் நடைபெற்றிருக்கக் கூடுமா என்ற சந்தேகம் எழுவதுண்டு. தேவாரம் பாடிய மூவர் வாழ்க்கைச் சம்பவங்களைப் பொறுத்தவரை, அவற்றுட் சில அவர்கள் பாடல்களிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பர். இவ்வாறு சுட்டிக் காட்டும் இடங்களிற் சில பொருட்டெளிவு அற்றவனாய் வலிந்து பொருள் கொள்ளப்படும் இடங்களாயிருக்கின்றன. முழுக்க முழுக்க இறைவனின் நம்பிக்கை வைத்து நடந்த அவர்களுக்குத் தற்செயலாக நடந்திருக்கூடிய பல காரியங்கள் இறைவன் தம் பொருட்டு செய்த அற்புதங்கள் என்று கருத இடமேற்படுவது புரிந்து கொள்ளக்கூடியது. மேலும், பெரிய புராணத்திற் கூறப்படும் தேவாரம் பாடிய மூவரல்லாத மற்றைய அடியார் வரலாற்று நிகழ்ச்சிகள் யாவற்றிற்கும் நாயன்மார் பாடல்களில் வலிந்து பொருள் கொள்ளக்கூடிய சான்றுகளுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயின் இக்கதைகள் சேக்கிழாரின் கற்பனையிலெழுந்தவை என்பது பொருந்தாது.
சேக்கிழார் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரின் திருத்தொண்டத் தொகையையும் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியையும் பின்பற்றியே தமது நூலையாத்துள்ளதாகக் கூறுவர். சுந்தரரின் திருத்தொண்டத் தொகையில் நாயன்மார் பற்றி வேறு சில குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்ததாதியையும் பின்பற்றியே தமது நூலையாத்துள்ளதாகக் கூறுவர். சுந்தரரின் திருத்தொண்டத் தொகையில் நாயன்மார் பற்றி மிகச் சிறிய குறிப்பே இடம்பெற்றுள்ளது. அவர்களுட் சிலர் எந்த ஊரைச்சேர்ந்தவர்களென்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூவர் தேவாரங்களில். நாயன் மாரைப்பற்றி வேறுசில குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டத் தொகையை விரித்துப்பாடியதாகும். நம்பி, திருத்தொண்டர் திருவந்தாதி தவிர சம்பந்தரைப்பற்றி ஆறு பிரபந்தங்களும் அப்பரைப்பற்றி ஒரு பிரபந்தமும் பாடியுள்ளார். நம்பிமுதல் ஏழு திருமுறைகளை வகுத்து அமைத்ததால், பல்லவர் காலச் சமய வரலாறு பற்றிய அறிவு அவருக்கு ஓரளவு விரிவடைதல் எதிர்பார்க்கக் கூடியதே. இவ்வாறு கூறுவதனாற் சுந்தரராற் கூறப்படாதனவாய், நம்பியாற் கூறப்படும் மூவர் பற்றிய விடயத்திலாவது‘எல்லாம் நிகழ்ந்தனவாகத்தான் இருக்கவேண்டும்’ என்று முடிவு கட்டிவிடக்கூடாது. ஏனெனில், சம்பந்தர் சமணர் எண்ணாயிரவரைக் கழுவேற்றியதாக, நம்பி கூறுஞ்செய்தி பொருத்தமற்றதெனச் சாதிக்கின்றர்1.
சமண பௌத்தங்களின் வீறு அடங்கிச் சைவத்தை மறு மலர்ச்சியுறச் செய்த அடியார்களின் வாழ்க்கை வரலாறு காலப்போக்கில் வளர்ந்து சென்றிருக்கலாம் போலத் தெரிகிறது. அற்புதச் சம்பவங்கள் பிறசமயிகளைத் துன்புறுத்திய செயல்கள், என்பவற்றை மையமாக வைத்து இக்கதைகள் வளர்ந்திருக்கின்றன. சுந்தரர் காலத்தில் நாயன்மார் வாழ்க்கை பற்றிய அற்புதக் கதைகள் சில, மக்களிடையே வழங்கியிருக்கின்றன. சுந்தரர் அவற்றைத் தம் பாடல்களில் அமைத்தார். மூவர் விக்கிரகங்களும் கோவில்களில் அமைத்துப் பூசிக்கப்பட்டு விழா எடுக்கப்பட்ட காலத்தில் நம்பி, சுந்தரர் கூறியதோடு தம் திருமுறை ஆராய்ச்சியிற் புலப்பட்டத்தையும் தம் காலத்துப் பல்கிப் பெருகிய கதைகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இவர்களைப்பற்றியும் சோழப்பேரரசின் அமைச்சராகத் தமிழ்நாடு முழுவதும் சென்று தாம் ஆராய்ந்து கண்ட விடயங்கள் சிலவற்றைச் சேர்த்தும், தம் காலத்திற் புதிதாகக் கிழைத்திருந்த நாயன்மார் பற்றிய புதிய கதைகளைச் சேர்த்தும் சேக்கிழார் காவியம் செய்திருக்கிறார்1. மக்கள் மனதைக் கவர்ந்த கதை கிளைக்கதை பெற்று வளர்வது இலக்கிய வரலாறுகளில் ஒரு புதுமையல்ல. சிலப்பதிகாரக் கதைகளுடன் ஒத்துவராத கண்ணகி கோவலன் கதைகள் பலவும் வான்மீகி இராமாயணத்துடன் வேறுபடும். பல இராமகதைகளும் பாரத நாட்டில் உலவி வருதல் பலரும் அறிந்தது. நாயன்மார் வரலாறு பெரியபுராணம் என்ற காவிய வடிவம் பெற்றதும்; மக்கள் அதனைப் போற்றிக் கற்க, நாயன்மார் வாழ்க்கையைப் பற்றிய புதிய கதைகள் தோன்றும் போக்குத் தடைப்பட்டு விட்டதெனலாம்.
சைவப் பக்தியியக்கம் இவ்வாறாக, வைணவப் பக்தியியக்கம் அதனைப் பல வகைகனினும் ஓத்து விளங்கியது. முல்லை நிலத்துத் தெய்வம் மாயோன் எனத் தொல்காட்பியம் கூறும். மாயோன் அல்லது திரூமாலைப் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களிற் காணப்படுகின்றன. வேதகாலத்துத் தெய்வமான விஷ்ணு, பிராமண காலத்துத் தெய்வமான நாராயணன், பாரத காலத்துத் தெய்வமான வாசுதேவ கிருஷ்ணன் ஆகிய முவரும் ஒன்றுபடுத்தப்பட்டபோது, வைணவம் செல்வாக்கு மிக்க சமணமாக வட இந்தியாவில் உருப்பெற்றது2. தமிழ் நாட்டில் நிகழ்ந்த வைணவ சமய எழுச்சி சைவ சமய எழுச்சியிலும் பார்க்க மறுமலர்ச்சி என்ற பெயருக்கு தகுதி உடைய தெனலாம். சிவபெருமானைப் போலன்றி திருமால் அவதாரங்கள் எடுப்பவர். மச்சாவதாரம், கூர்மாவதாரம், வாமனாவதாரம் என்பன பற்றிய குறிப்புக்கள் சதபத பிராமணத்திற் காணப்படுகின்றன. அவதாரங்களின் தொகை பற்றியும் பெயர் பற்றியும் கருத்து வேறுபாடு காணப்பட்ட போதிலும் அவதாரங்கள் பத்து என்று கூறுவது மரபு. எட்டாம் நூற்றாண்டு மாமல்லபுரச் சாசனம் ஓன்று மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, தசரதராம, பார்க்கவராம, புத்த, கல்கி என்னும் பத்து அவதாரங்களை எடுத்துக் கூறுகின்றது. கண்ணன் திருமாலுடைய பூரண அவதாரமாகக் கொள்ளப்படுவதுண்டு காத்தலுக்குரிய தெய்வமான திருமாலின் அரூட்செயல்களாக இந்த அவதாரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.
வைணவ சமய எழுச்சிக்குக் காரணமான பன்னிரு ஆழ்வார்களும் பாடியுள்ளனர். பல்லவர் காலத்திற்கு முன்பு முதலாழ்வார் மூவரும் வாழ்ந்துள்ளனர். சம காலத்தவராகக் கொள்ளப்படும் மூவரும் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்: பிராமணர்கள். இது பிராமணர்களின் இயக்கமாகத் தோன்றியதனாற் போலும் தமிழ்ப் பொது மக்களிடையே சைவ பக்தி இயக்கமளவு செல்வாக்குப் பெறமுடியவில்லை. முதலாழ்வார் மூவருக்கும் வழங்கிய இயற்பெயர் மறைந்து விடுகிறது. பொய்கை, பூதம், பேய் என்ற பெயர்கள் இவர்களுக்கு அக்காலச் சாதாரண மக்கள் வழங்கிய பெயார்களாக இருக்க வேண்டும். காரைக்காலம்மையாரும் பேய் எனப்படுகிறார். பக்தி இயக்கத்தைத் தொடங்கியவர்கள் பிறர் கண்களில் எவ்வாறு தென்பட்டார்கள் என்பதற்கு இது சான்று. பல்லவர் கால ஆரம்பத்தில் வாழ்ந்தவராகக் கொள்ளப்படும் திருமழிசையாழ்வாரும் தொண்டை மண்டலத்தவராகவே காணப்படுகிறார். வைணவ பக்தி இயக்கம் தொடக்கத்தில் ஒரு மண்டலத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது.
தமிழ் நாட்டின் தென்பகுதி அறநூல்களின் வளர்ப்புப் பண்ணை: வடபகுதி பக்தி இயக்கத்தின் வளர்ப்புப் பண்ணை. பல்லவர் காலத்துத் தமிழ் நாட்டுச் சமய வாழ்வில் வடபகுதி வெற்றி பெற்றது. சோழர் காலத்து அரசியல் வாழ்வினும் வடபகுதியே தமிழ் நாட்டை வென்றது. காவிரியாறு தந்த வளத்துடன் மக்களியக்கமாக விளங்கிய பக்தி இயக்கம் தந்த சக்தியும் கலந்தபோது, சோழ நாடு பேரரசாகியது. .
பக்திப் பாடல்களில் திருமழிசையாழ்வாரின் பாடல்களுக்கும் திருநாவுக்கரசர் பாடல்களுக்கும் ஒற்றுமை காணப்படுகிறது. திருமழி சையாழ்வார் தாம் சமண சமயத்தைக் கற்றதாகக் கூறுகிறார் இவர் வைணவராவதற்கு முன்பு சமணராக இருந்ததாகக் கதையுண்டு இவருடைய பாடல்களில் நிலையாமைக் கொள்கை சிறப்பிடம் பெறுகின்றது. இவர் தாம் பெளத்தத்தையும் கற்றதாகக் கூறியுள்ளார். பெளத்தமும் நிலையாமையைச் சிறப்பாக ,எடுத்தியம்பும் சமயமே. எனவே, அப்பர் சுவாமிகள் சமண - சைவப் பாலமாக அமைந்தது போல, இவர் வைணவத்துக்கும் சமண பெளத்த மதங்களுக்கும் பாலமாக அமைந்துள்ளாரெனலாம். இதுவரை வீரவைணவரென்பவர் பிற மதங்களில் அதிக காழ்ப்புக் கொண்டவராகவும் இவர் காணப்படுகிறார். சமணம், பெளத்தம், சைவம் என்பன இவரால் இழித்துக் கூறப்பட்டுள்ளன.
தொண்டரடிப்பொடியாழ்வார் பாடல்களிலும் சமணமும் பெளத்தமும் இழித்துக் கூறப்பட்டுள்ளன. இவருடைய பாடல்களில், பாகவத பக்தியும் இடம் பெறுகிறது. திருமாலடியாரின் பாத தூசியென இவர் தம்மைக் கருதினாலேயே அந்தனராய் பிறந்து விப்ரநாராயனார் என்று பெயர் பூண்டிருந்த இவர் தம்முடைய .பெயரைத் தொண்டரடிப்பொடி என்று மாற்றினார் திருமாலடியாரல்லாத அந்தணர் நீசரென்றும் திருமாலடியாரான நீசர் வணங்கப்பட வேண்டியவரென்றும் இவர் கொண்டனர். உலகியல் வாழ்க்கையிலே தமக்கிருந்த ஈடுபாட்டைத் தகர்த்து ஆன்மீக வாழ்க்கைக்குத், தம்மை நெறிப்படுத்திய திருமாலின் திறத்தை இவர் எடுத்துக் கூறுகிறார். இவருடைய பாடல்களில் திரூமாலின் உருவத் திருமேனியை, மெய்மறந்து மனத்தைப் பறிகொடுத்துப் பாடும் பண்பு காணப்படுகிறது. வைணவருள் ஒரு சாராரான வைக்கானசர் கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே விக்கிரக வணக்கத்தை வற்புறுத்தி வந்தனர். இந்திய ஆன்மீகவாழ்க்கையில் விக்கிரக வணக்கம் செல்வாக்குப் பெற்றதற்கு இவர்கள் போதனையும் ஒரு காரனாமாகலாம்1.
ஏனைய ஆழ்வார்களும் வைணவ இயக்க வளர்ச்சிக்கு உதவினர். பெரியாழ்வார் பாண்டியன் சபையிலே சமயவாதம் புரிந்து வைணவத்தை வெற்றி பெறச் செய்தார். இறைவன் மேலிருந்த அன்பு மேலிட்டால், இவர் தம்மை மறந்து இறைவன் நீடுவாழ வேண்டுமென இறைவன் மேலேயே திருப்பல்லாண்டு பாடியவர். குலசேகராழ்வார் சேர நாட்டாட்சியைத் துறந்து தொண்டரானார். தமிழ்நாட்டு மேற்குப் பகுதியில் வைணவம் செழிக்க இவர் துறவு உதவியிருக்கும். திருமங்கையாழ்வாரே வைணவப் பக்திப்பாடல்களைப் பெருந் தொகையாகப் பாடியவர். மூவர் தேவாரங்களையும்
இவர் தம்முடைய பக்திப் பாடல்களிற் பயன்டுத்தியுன்ளனர். ஆள்வார் பாடல்களுள், இவருடையனவே, கவிச்சுவை நிரம்பியன என்பர் மறைமலையடிகள். திருப்பாணாழ்வார் தீண்டாதாரெனக் கருதப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வைணவ பக்தியியக்கத்தில் இடம் பெறுகிறாரெனலாம். ஆண்டாள் பெண்ணுள்ளத்தின் காதல் தவிப்பைப் பக்தியோடு கலந்து உணர்ச்சியின் எல்லையைக் காண்கிறாள். நம்மாழ்வார் மாணிக்கவாசகரை ஒத்தவர் இருவரும் ஞானநெறியில் நின்றனர். காதல் மார்க்கத்தில் நின்ற நம்மாழ்வார் இறைவனை எண்ணி உருகுவனவே, அவர் பாடல்களுட் பெரும்பாலன. நம்மாழ்வார் பாடல்களிலே தத்துவக் கருத்துக்களும் அதிகம் காணப்படுகின்றன. சைவப் பக்தியியக்கத்தைப் போல, வைணவப் பக்தியியக்கமும் பாண்டி நாட்டிலேயே மிகச்சிறந்த பாடல்களைத் தோற்றுவித்து உச்சக் கட்டத்தை அடைகிறதெனலாம்.
தொண்டரடிப்பொடியாள்வார் காலத்திலே தோன்றிய திருமாலடியார் பக்தி, பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாள்வார் முதவியோர் காலத்தில் வளர்ந்துள்ளது. மதுரகவியாள்வார் காலத்திலேயே அது புராணத்துவம் .பெறுகிறதெனலாம். மதரகவியாழ்வார், நம்மாழ்வாரையே இறைவனாகக் கொண்டு வணங்கி வந்துள்ளார். இறைவணக்கமும் குருவணக்கமும் ஒரே தரத்தன என அவர் அந்தணராகிய மதுரகவி வேளாளராகிய நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டதும் வைணவத்தைப் பொதுமக்களியக்கமாக்க உதவியது. சோழமண்டலத்துத் திருவரங்கம், தொண்டைமண்டலத்துத் திருவேங்கடம், பாண்டிமண்டலத்து அழகர் கோவில் என்பன ஆழ்வராற் பாடப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள தலைசிறந்த வைணவத் தலங்களாக மாறின. சைவர்களுடைய கோவில்களுள்ளே சிதம்பரம் சிறப்புற்றது போல வைணவர்களுனடய கோவில்களுள்ளே திருவரங்கம் சிறப்புற்றது.
புராண இதிகாசக் கதைகள் சைவ சமய மறுமலர்ச்சிக்கு உதவியதுபோல வைணவ சமய மறுமலர்ச்சிக்கும் உதவின. பாகவத புராணம் என்னும் நூலிலுள்ள கதைகளும் பாரதம், இராமாயணம் என்னும் இதிகாசக் கதைகளும் பகவத்கீதை, நாரத சூத்திரம், சாண்டிவிய சூத்திரம் என்பவற்றிலுள்ள கருத்துக்களும் ஆழ்வார்களாற் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவதாரப் பெருமைகள் ஆழ்வார்கள் பாடல்களிற் பேசப்படுகின்றன. அவதாரங்கள் அருட் செயல்களாகக் கொள்ளப்படுகின்றன. இக்கதைகளில், ஆழ்வார்கள்அழுந்தி அழுந்திப் பாடியுள்ளனர். கண்ணனவதாரமும் இராமாவதாரமுமே ஆழ்வார்கள் மனத்தை விசேடமாக வசீகரித்தன. பெரியாழ்வாரும் ஆண்டாளும் கண்ணனவதணத்திலேயே தம் உள்ளத்தைப் பறிகொடுத்துள்ளனர். பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகவும்ஆண்டாள் கண்ணனைக் காதலனாகவும் கண்டனர். பெரியாழ்வார் இராமாவதாரத்தைப் பற்றிப் பாடிய போதிலும், அது கண்ணன் பெருமை பற்றிப் பாடியது போலவே காணப்படுகிறது. இராமாவதாரத்தில், தம்மை முழுக்க முழுக்கப் பறிகொடுத்தவர் குலசேகராழ்வார் இவர் கண்ணனவதாரத்தைப் பற்றிப் பாடிய போதிலும் இங்கு இராமனுடைய பெருமையையே பாடினார் இவர் தில்லைத் திருச்சித்திர கூடத்திலே திருமாலை வணங்கும் போதும் இராமனனக் காண்பதாகவே பாடியுள்ளார். பெளத்த சமயம் செல்வாக்கு இழந்து வந்த காலத்திலே திருமாலின் அவதாரங்களுள் ஒன்றாகப் புத்தரைக் கூறத் தொடங்கின வைணவர் பெளத்த சமயத்தவர் வைணவர்களுள் ஒரு பகுதியினராகவே மாறிவிடுவதற்கு இக்கூற்றும் உதவியது. பெளத்தப் பள்ளிகள் சில, வைணவக் கோவில்களாக மாறியது, வரலாற்று உண்மையாகும்.
சைவப் பக்திப் பாடல்களிலும் பார்க்க வைணவப் பக்திப் பாடல்கள் உணர்ச்சிகளை ஆழமாகத் தொடுகின்றன. சரணாகதி எனப்படும் பிரபத்தி மார்க்கம் ஒன்றே வவியுறுத்தப்படுகிறது. வேதங்களிற் சிறப்பிடம் பெற்ற கன்ம மார்க்கம் உபநிசத்துக்களிற் சிறப்பிடம் பெற்ற ஞான மார்க்கம் யாவும் பக்தி மார்க்கத்தோடு இணையும்போதே பயனுள்ளவையாகின்றன எனப்படுகிறது. பயனை எதிர்பார்த்தே கடமையைச் செய்யவேண்டும் என்ற பகவத் கீதை உபதேசம் வாழ்விலிருந்து ஒதுங்கிப் போகும் வைராக்கிய மனப்பான்மைக்குத் தடையாக அமைகின்றது. பிறவா யாக்கைப் பெரியானாகிய சிவனினும் பார்க்க அவதாரங்கள் எடுத்துவரும் திருமால், அடியார்கள் அண்மிச் செல்லக்கூடியவராகக் காணப்படுகிறார். சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த இயற்கை நெறியின் ஓர் அமிசமான உலகியற் காதல் பக்திப் போர்வையிலே திரும்பவும் தலைகாட்டுகிறது. சிவனும் திருமாலும் தத்தம் சக்தியோடு இணைத்து வணங்கப்படுகின்றனர். புலவர்கள் தங்கள் இதயங்களைத் திறந்து, இயல்பாக எழும் காதலுணாச்சிகளைக் கடவுள் பேரில் வெளியிடுகின்றனர். கோகுலத்திலே, பிருந்தாவனத்திலே, கண்ணன் கோபிகைகளுடன் செய்த லீலைகள், ஆழ்வார்கள் பக்திக் காதலைப் பாடும்போது, அடிப்படையாக அமைந்து அப்பாடல்களுள் இயற்கைத் தன்மையை அளிக்கின்றன. தாருகாவனத்திலே, பிச்சாடன மூர்த்தியாகச் சென்ற சிவன் இருடிபத்தினிகளை மோகிக்கச் செய்த கதை நாயன்மாரால் எடுத்தாளப் படுகின்றது. ஆனால், முந்திய கதையளவு, இந்தக் கதை அத்துணை வசதியளிக்கவில்லை.
சைவருடைய பக்தியியக்கம் பெரிய புராணத்திற் பூரணத்துவம் பெற்றது போல வைணவருடைய பக்தியியக்கம் கம்பராயணத்திற் பூரணத்துவம் பெற்றது, வைணவர்களின் மனத்தைத் திருமாலடியார் வரலாறுகலினும் பார்க்கத் திரூமால் அவதாரங்களின் வரலாறுகளே கவர்ந்தன. ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்திலேயே பாரதவெண்பா தோன்றிவிட்டது. ஆழ்வார்கள் வரலாறுகளைக் காவிய உருவத்தில் எடுத்துக் கூறும் நிலை ஏற்படவில்லை. இராமானுச நூற்றந்தாதியே ஆழ்வார்களுடைய வாழ்க்கையைக் குறிப்புக்களை முதன் முதல் எடுத்துக் கூறியது. இப்பெரியார்களுடைய வாழ்க்கைச் சரித்திரங்களைக் கூறும் திவ்விய சூரி சரிதமும் குரும்பரம்பரைப் பிரபாவமும் பிற்காலத்தில் எழுந்துள்ளவை. இவையாவும், நாதமுனிகள் நாலாயிரத் திவ்வியபிந்தமாக வைணவ பக்திப் பாடல்களைத் தொகுத்தபின் தோன்றியுன்ளவை. காலப்போக்கில், நாயன்மார் வரலாறுகள் வளர்ந்து சென்றதுபோல, ஆழ்வார்கள் சரித்திரமும் வளர்ந்து சென்றிருக்கிறது.
ஆனால், ஆழ்வார்கள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இராமாவதாரமே சோழப் .பெருமன்னர் காலத்திற் கம்பன் கையிற் காவியமாக மாறுகிறது. வைணவ பக்தியியக்கத்தின் செல்வாக்கு வான்மீகி இராமாயணத்திற் புருடோத்தமனாக இருந்த இராமனைக் கம்பராமாயனத்திலே தெய்வமாக மாற்றி விடுகிறது. இராமாயணக் கதை மிகப் பழைய காலத்திலிருந்து பாரதநாடு முழுவதும் வழங்கி வருகிறது. புறநாறுாறு, அகநானூறு, மதுரைக் காஞ்கி, என்பவற்றிலேயே இராமசரிதைக் குறிப்புக்கள் காணப்படுகின்றன, கம்பரது நூலுக்கு முந்தியதாகப் பஃறொடை வெண்பாவாலமைந்த இராமாயணம் ஒன்று யாப்பருங்கல விருத்தியுரையிற் குறிப்பிடப்படுகிறது.
காதலுணாச்சிகளைக் கடவுள் பேரில் வெளியிடுகின்றனர். கோகுலத் திலே,பிருந்தாவனத்திலே, கண்ணன் கோபிகைகளுடன் செய்த லீலைகள், ஆழ்வார்கள் பக்திக்காதலைப் பாடும்போது, அடிப்படையாக அமைந்து அப்பாடல்களுக்கு இயற்கைத் தன்மையை அளிக்கின்றன. தாருகாவனத்திலே, பிச்சாடன மூர்த்தியாகச் சென்ற சிவன் இருடிபத்தினிகளை மோகிக்கச் செய்த கதை நாயன்மாரால் எடுத்தாளப் படுகின்றது. ஆனால், முந்திய கதையளவு, இந்தக்கதை அத்துணை வசதியனிக்கவில்லை.
சைவருடைய பக்தியியக்கம் பெரிய புராணத்திற் பூரணத்துவம் பெற்றதுபோல வைணவருடைய பக்தியியக்கம் கம்பராயணத்திற் பூரணத்துவம் பெற்றது, வைணவர்களின் மனத்தைத் திருமாலடியார் வரலாறுகலிலும் பார்க்கத் திருமால் அவதாரங்களின் வரலாறுகளே கவர்ந்தன, ,ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்திலேயே பாரதவெண்பா தோன்றிவிட்டது. ஆழ்வாள்கள் வரலாறுகளைக் காவிய உருவத்தில் எடுத்துக் கூறும் நிலை ஏற்படவில்லை. இராமானுச நூற்றந்தாதியே ஆழ்வார்களுடைய வாழ்க்கைக் குறிப்புக்களை முதன் முதல் எடுத்துக் கூறியது. இப்பெரியார்களுடைய வாழ்க்கைச் சரித்திரங்களைக் கூறும் திவ்விய சூரி சரிதமும் குரும்பரம்பரைப் பிரபாவமும் பிற்காலத்தில் எழுந்துள்ளவை. இவையாவும், நாதமுனிகள் நாலாயிரத் திவ்வியபந்தமாக வைணவ பக்திப் பாடல்களைத் தொகுபித்தபின் தோன்றியுள்ளவை. காலப்போக்கில், நாயன்மார் வரலாறுகள் வளர்ந்து சென்றது போல, ஆழ்வார்கள் சரித்திரமும் வளர்ந்து சென்றிருக்கிறது.
ஆனால், ஆழ்வார்கள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இராமாவதாரமே சோழப் பெருமன்னர் காலத்திற் கம்பன் கையிற் காவியமாக மாறுகிறது. வைணவ பக்தியியக்கத்தின் செல்வாக்கு வான்மீகி இராமாயணத்திற் புருடோத்தமனாக இருந்த இராமனைக் கம்பராமாயனத்திலே தெய்வமாக மாற்றி விடுகிறது. இராமாயணக்கதை மிகப் பழைய காலத்திலுருந்து பாரதநாடு முழுவதும் வழங்கி வருகிறது. புறநாறுாறு, அகநானூரறு, மதுரைக் காஞ்சி, என்பவற்றிலேயே இராம சரிதைக் குறிப்புக்கள் காணப்படுகின்றன, கம்பரது நூலுக்கு முந்தியதாகப் பஃறொடை வெண்பாவாலமைந்த இராமாயணம் ஒன்று யாப்பருங்கல விருத்தியுரையிற் குறிப்பிடப்படுதிறது.
சமண சமயக் கொள்கைக்கு இயைபான இராமசரிதம் ஒன்றிலிருந்து செய்யுட்கள் ஸ்ரீ புராணம் என்னும் மணிப்பிரவாள நூலில் உதாரணச் செய்யுட்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வான்மீகி இராமாயணத்தில் இடம் பெறாத தமிழ் வழக்குகள் சில, பண்டைத் தமிழிலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் இடம் பெறுகின்றன. கம்பர் தம்முடைய நூலுக்கு வழங்கிய பெயர் இராமாவதாரம் என்பதாகும். கம்பர் வான்மீகி இராமாயனத்திலேயே முதநூலாகக் கொண்டவரேனும் வடமொழியிலும் தமிழிலும் அமைந்த மற்ற இராமாயணங்களையும் ஆராய்ந்து தழுவிக் கதையமைத்துக் கொண்டிருக்கிறார்1. மிதிலாபுரியில், கன்னிமாடத்திலே இராமன் கீதையைத் தற்செயலாகக் காண அவளும் இராமனைக் கண்டு இருவரும் நோக்கெதிர் நோக்கி உள்ளங்கலந்த நிலையைக் கம்பர் பாடினார். வில்முறிவு நிகழ்ந்த பின்பே இராமன் சீதையைக் கண்டான் என்பர் வான்மீகி. அகலிகை சாபத்தில் அகலிகை கல்லாகியதும், இந்திரன் பூனையா ஓடியதும் பரிபாடலிற் கூறப்பட்டுக் கம்பனாற் பாடப்பட்டது. வான்மீகி இவ்வாறு கூறவில்லை. அணில் சேதுபந்தனஞ் செய்தமை தொண்டரடிப் பொடி யாழ்வாராற் பாடப்பட்டுக் கம்பனாலே தழுவிக் கொள்ளப்பட்டது. வான்மீகியின் இக்கதைக் குறிக்கவில்லை. இராமன் அரக்கர்களிடம் இருந்து நாட்டை மீட்ட ஒரு வீரனாகவே ஆதியிற் கருதப்பட்டான். வான்மீகி நூலிலுள்ள இடைச்செயல்களை நீக்கிவிட்டால் அந்நூல் இராமனை வீரனாக மட்டும் சித்திரிப்பது புலனாகும் என்பர் வடமொழி ஆராய்சியாளர். சமயநெறிக்காலத் தொடக்கத்திலிருந்து பக்தி பெருகுவதற்கு உரிய ஒரு கருவியாக இராம சரிதை கொள்ளப்பட்டது2.
ஓரளவு சைவ வைணவப் பொது நோக்குடைய முதலாழ்வார் பாடல்களில் பாரினைத் திருமால் படைத்திடந்துண்டமிழ்ந்ததும் அவனது அவதார விசேடங்களும் அந்தவந்த அவதாரங்களில் அவன் ஆற்றிய அரிய செயல்கள் பலவுங் குறிப்பிடப்படுகின்றன, பார்த்தன் பொருட்டு ஆழியாற் கதிரவனை மறைத்தது, ஏனமாய் இரணியாட்சன் என்னும் அசுரனைக் கொன்று பூமியைப் பண்டை நிலையின் நிறுத்தியது, மாவலிபால் மூவடி நிலம் இரந்தது, சகடம் சாடியது, விளவெறிந்தது, குன்றைக் குடையாக்கியது, இராவணனைச் செற்றது முதலியன காணப்படுகின்றன1வெகு சீக்கிரத்திலேயே. சைவர்கள் திருமாலை இழித்துக் கூறவும் வைணவர்கள் சிவனை இழித்துக் கூறவும் தொடங்கினர். திரூமால் பன்றியுருவங்கொண்டு உலகங்களைத் தோண்டிச் சென்றும் சிவனின் பாதங்கனளக் காணவில்லையென்றும், திருமாலின் சிறப்பான படைக்கலமான சக்கரம் சிவனாலேயே திருமாலுக்கு அருளப்பட்ட தென்றும் சிவனை ஆயிரம் மலர்களால் அருச்சிக்கும் நியமம்பூண்ட திருமால் ஒருநாள் ஒரு மலர் குறைய, அம்மலரையொத்த தமது கண்களில் ஒன்றையே பிடுங்கி அருச்சித்தாரென்றும், தில்லையிற் சிவனது நடனத்தைக் காணும் ஆவலினால், திரூமால் திருச்சித்திர கூடத்திலே வந்து தங்கினா ரென்றும், சிவபெருமான் மும்மூர்த்திகளுள்ளே முதல்வரென்றும் சைவ சமயத்தவர் கதைகள் கட்டினர். இக்கதைகள் யாவும் மாணிக்கவாசகருடைய பாடல்கலிற் காணப்படுகின்றன வைணவர்கள் சிவனை இழித்துக் கூறப் பயன்படுத்திய கதைகள் திருமங்கை யாழ்வார் பாடல்களில் இடம்பெறுகின்றன. சிவன் திரிபுரம் எரித்த ஞான்று, திருமால் அம்பாக உதவிய வரலாறும் பிரமன் தலையைக் கிள்ளியதாலே சிவனது கரத்தையொட்டிய கபாலத்தை உதிரப்புனலால் நிறைத்துச் சிவனுக்கு உண்டாகிய சாபத்தைத் திரூமால் போக்கிய கதையும் அரிதனது பாதி உடவிற் சிவபிரானைக் கொண்டதும், வாணாசுரன் தன் மகள் உழை காரணமாகச் செய்த போரில் தம்மோடெரித்துப் பொருத அவனுக்குப் பரிந்து உதவியாக வந்த முருகன், சிவன் முதலியவர்களைக் கிரூஷ்ணாவதாரத்தில் நாராயணமுர்த்தி வென்று துரத்தியதும், திருமால் நான்முகனைப் பெற, அந்நான்முகன் சிவபெருமானை ஈன்றதாக விளங்கும் சரிதையும் திருமால் மும்மூர்த்திகளுள்ளே முதல்வர் என்பதும் அக்கதைகளாகும்2.
சமணர்களின் தத்துவமும் பெளத்தாகளின் தத்துவமும் சமண பக்தியியக்கம், பெளத்த பக்தியியக்கம் என ஒவ்வொன்று தோன்ற இடமளிக்கவில்லை, பெளத்த பக்திப் பாடல்கள் சில வீரசோழிய உரையினும் நீலகேசியுரையிலும் காணப்படுகின்றன. இப்பக்திப் பாடல்களின் விளைவே நீலகேசியுரையிற் பெளத்தரியற்றியதாகக் குறிப்பிடப்படும் விம்பசாரக் கதை என்ற காவியமாகலாம். வீரசோழியப்பாயிரத்தில் அகத்தியரைப் பற்றி வரும் குறிப்புச் சமயப்போட்டிக்கு அறிகுறியாகும். தமிழமொழியின் தந்தையும் முதற்றமிழிலக்கன ஆசிரியருமாகிய அகத்தியர் சிவபெருமானிடத்திற்றமிறைக் கேட்டறிந்தவர் என்று சைவர் கூறுவர். சமணரும் பெளத்தரும் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்களை ஏற்கவில்லை. அதனால், பேராசிரியர், அகத்தியருக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பை ஏற்காதவர்களை வேத வழக்கோடு மாறுகொள்வார் எனக் குறிப்பிடுவார். அகத்தியரைப் பற்றிய கதை தமிழ் நாட்டில் நிலைபெற்று விட்டது. அதனால், பெளத்தர்கள் அகத்தியர் கதையை ஏற்று அவர் பெளத்தராகிய அவலோகிதரிடத்திற்றமிழ் கற்றவரெனச் சிறிது மாற்றிக் கூறத் தொடங்கினர். அம்மாற்றம் வீரசோழியப் பாயிரத்திற் காணப்படுகிறது.
வைதிக சமயங்கனின் பக்தியியக்கம் தமிழ்ப் பொது மக்களைக் கவர்ந்திருப்பதைக் கண்ட சமணர், பக்திப்பாடல்கள் இயற்றுவதிலும் புராணங்கள் ஆக்குவதிலும் ஓரளவு கவனஞ் செலுத்தியிருப்பரென்பது எதிர்பாக்கக்கூடியது. சமணர் வடமொழியிலே மகாபுராணம் அல்லது அறுபத்துமமூன்று தொண்டர் சரிதம் இயற்றினர். இப்புராணம் சமண சமயக் குரவர்களினால் கருதப்படும் இருபத்துநான்கு தீர்த்தக்காரர்களின் வரலாற்றையும் உள்ளடங்குகிறது. தமிழிலே, சீவகசிந்தாமணி, சூளாமணி, என்பன சமணரால் இயற்றப்பட்டன. இக்காவியங்கள் மூலம் காமச் சுவையை மிகுத்துக் கூறி மக்களைக் கவர்ந்து சமணக் கருத்துக்களைப் போதனை செய்ய முயன்ற சமணர் பக்திப்பாடல்கள் இயற்றுவதிவிருந்து மட்டும் முற்றாக ஒதுங்கியிருக்க முடியாது. சமண பக்திப்பாடல்கள் சில வெளிவந்துள்ளன. தோத்திரத் திரட்டு என்ற பெயரில் சின்னசாமி நயினார் என்பவர் ஒரு தொகுதி வெளியிட்டுள்ளார். அவிரோதிநாதர் பாடிய திருநூற்றந்தாதி தோத்திரப் பாடல்களையே கொண்டிருக்கிறது. ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும், பின்பற்றி அவிரோதிநாதரும் திருவெம்பாவை பாடியுள்ளார். திரூப்பாமாலை என்ற பெயரில், மேல்மின்னல் சக்கரவாத்தி நயினார் வெளியிட்ட நூலும் சமண தோத்திரப் பாடல்களைக் கொண்டு விளங்குகிறது. தேவராச முனிவர் இயற்றிய ஜினேந்திர ஞானத்திருப்புகழ் அருணகிரிநாதரின் திருப்புகழை அடியொற்றி அமைந்திருக்கிறது.
தோத்திரத்திரட்டு என்ற நூவில், அறத்தைத் தனியே போற்றும்பகுதியும் அரூகக் கடவுளைப் பாடும் பகுதியும் காணப்படுகின்றன. இந்நூல் தசதருமம் என்றொரு பகுதி உண்டு. இதில் சமணருடைய பத்து அறங்கள் கூறப்படுகின்றன, ஒவ்வொரு அறத்தையும் போற்றுவதால் ஏற்படும் நன்மையும் போற்றாமையால் ஏற்படும் இழுக்கையும் ஓவ்வொரு பாடல் எடுத்துக் கூறுகிறது. அறம் ஓவ்வொன்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்ட முயல்வது இப்பகுதியாகும். ‘திருநறுங்கொண்டை மலையின் பேரில் பதிகம்’ என்ற பகுதியில் காணப்படும் பாடல்கள் இரண்டடியில் இறைவன் பெருமை கூறி, இரண்டடியில் இயற்கை அழகு கூறிச் சம்பந்தரின் பாடல்களை நினைவூட்டுகின்றன. திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் பேரில் அப்பர் பாடிய பதிகம்’ என்ற பகுதியில் கழிவிரக்கமும் தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து காணப்படும் பாடல்கள், சைவசமய குரவர்களுள் ஒருவராகிய அப்பர் சுவாமிகளின் பாடல்களை நினைவூட்டுகின்றன. ‘திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் பேரில் சம்பந்தர் பாடிய பதிகம், என்பது தோத்திரத் திரட்டின் இன்னொரு பகுதி. சைவசமய குரவராகிய சம்பந்தருக்கும் இருவருக்கும் ஏதாவது சம்பந்த முண்டா என்பது தெரியவில்லை. இப்பதிகத்திலுள்ள ஒன்பதாம் பாட்டுச் சைவசமய குரவரின் கடைக்காப்புச் செய்யுள் போலச் சம்பந்தரைப் பெயரால் குறிப்பிடுகிறது. சைவசமய குரவர் சிறுவராக இருந்த ஞானம் பெற்றுப் பாடித் திரிந்தனர் என்பது சைவர் கூற்றாகும். இப்பதிகத்தைப் பாடிய சமண சம்பந்தரும் தம்மைக் ‘குறிய சம்பந்தன்’ எனக் குறிப்பிடுகிறார்.
சமண இலக்கிய மரபு அறத்தைப் பாடிவந்து அருகனைப் பாடுவதாக மாறியதை இத்திரட்டிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. சைவ நாயன்மாகளும், வைணவ ஆழ்வார்களும் வீட்டின்பத்தை வேண்டுவதுடன், வேறும் எத்தனையோ காரியங்களைத்தாம் வழிபடும் தெய்வங்களிடம் வேண்டியடைந்துள்ளார். தாம் இறைவனிடம் வைத்திருக்கும் அன்பை, அகப் பொருட்டுறைகளில் அமைத்துப் பாடியுள்ளார் சமணர்களுடைய தத்துவம் அத்தகைய பாடல்களுக்கு இடமளிக்கவில்லை. சமணமும் பெளத்தமும் வீட்டின் பத்தையே இலட்சியமாகக் கொண்டுள்ளன. வைதிக சமயம் இகலோகத்திலும் தேவலோகத்திலும் பெறும் இன்பத்தையே ஆதியில் வற்புறுத்தி வந்து சிறிது பிற்காலத்திலே வீட்டின்பத்தின் முக்கியத்துவத்தை ஏற்றது. சமணா் பக்திப் பாடல்களில் அமைந்திருக்கும் வேண்டுகோள்களாவன:- பிறவிப் பெருங் கடலிலிருந்து நீந்த உதவ வேண்டும், காலன் வரும்பொழுது காப்பாற்ற வேண்டும், பெண்ணாசையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்பனவாம்.
அவிரோதிநாதரின், திருவெம்பாவைப் பாடல்கள் மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களை அடியொற்றிச் செல்கின்றன. சிவனைப் பற்றிய குறிப்புகள் மாணிக்கவாசகர் பிரபந்தத்தில் இடம் பெற, அருகனைப் பற்றிய குறிப்புகள் அவிரோதிநாதர் பிரபந்தத்தில் இடம்பெறுவதே வேறுபாடு. திருநூற்றந்தாதி, நாலாமிரந் திவ்வியப் பிரபந்தத்தில் காணப்படும் அந்தாதிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருக்கலாம். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஈற்றிலுள்ள திருவரங்கத்தமுதனார் இயற்றிய இராமானுச நூற்றந்தாதி திருநூற்றந்தாதிக்கு வழிகாட்டியாக இருந்திருக்கலாம். பக்தியை வெளியிடும் முறையில் வேறுபாடில்லையாயினும் அருகக் கடவுளின் இயல்புகளுக்கேற்பப் பாடல்களிற் காணப்படும் கருத்துக்கள் வைதிகப்பக்திப் பாடல்களிலிருந்தும் வேறுபடுகின்றன. ஆன்மாவிலிருந்து முற்றிலும் புறம்பான கடவுளைச் சமணசமயம் ஏற்கவில்லை. பற்றறுத்து, வினையறுத்து, பிறப்பறுத்த ஆன்மாவே சமணர் வணங்குந் தெய்வம், உள்ளத்தில் அத்தெய்வம் ஒன்றே நிறைந்திருக்க வேண்டும் என்று கோருகிறார் அவிரோதிநாதர். திருநூற்றந்தாதி இருபத்துநான்காம் செய்யுள் பிற மத கண்டனம் செய்கிறது. வைதிக சமயத்திருமூர்த்திகளான பிரமன், திருமால், சிவன் என்போரும் புத்தரும் இப்பாடல்களில் இழித்திடப்பட்டு, அருகன் உயர்த்தப்படுகிறான். பக்தியியக்க காலத்தில், ஓவ்வொரு சமயப் பிரிவினரும் ‘தத்தம் இறைவனுக்கு அடியரானவர் எந்த இழிகுலத்தைச் சேர்ந்தவராயினும் தம்மாற் போற்றப்படத் தக்கவர்’ எனவும் ‘பிராமணர்’ முதலிய உயர்ந்த குலத்தவராயினும் தம் இறைவனைப் பணியாதார் இழிந்திடப்படத்தக்கவ’ ரெனவும் கூறுவதைக் காணலாம். திருநூற்றந்தாதியும் அதே கருத்தை எடுத்துக் காட்டுகிறது.
திருப்பாமாலையென்ற நூலிலுள்ள பாடல்களில் பெரும்பாலன அகவற்பாக்கள். திருவாசகத்திற் போற்றித் திருவகவல் முதலியன காணப்படுகின்றன. திருப்பாமாலையிலுள்ள பாடல்களுட் சில, யாப்பருங்கல விருத்தியுரையிற் காணப்படுதலால், இப்பிரபந்தம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுந்திருக்கவேண்டும் எனக் கொள்ளலாம். திருப்பாமாலையிலுள்ள முதற் செய்யுள் புதுமைக் கருத்துடையதாக விளங்குகின்றது. சமணர் கூறும் அறங்கள் நிரல்படக் கூறப்பட்டு,அவற்றுள் ஒன்றையும் அனுசரியாத ஒருவர் பக்தி மார்க்கத்தால் வீடு பெற முனைவதாக அப்பாட்டு அமைந்திருக்கிறது. அறங்களை வற்புறுத்தாத பக்தியை மட்டும் வற்புறுத்தி வைதிக சமயங்கள் தமிழ்நாட்டில் பெரு வெற்றி பெற்றதைக் கண்ட சமணர் தம் சமயம் வாழவேண்டுமானால், தாமும் அதே வழியைப் பின்பற்ற வேண்டும் என்று நினைத்தனரோ எனத் தோன்றுகிறது. சமணரே அறநெறியிலும் கூடிய முக்தியத்துவம் பக்தி நெறிக்கு வழங்கும் நிலை தோன்றி விட்டது சித்த பக்தி, சைத்திய பக்தி, பஞ்சகுரு பக்தி, ஆரூகத பக்தி, நந்தீசுவர பக்தியென வெவ்வேறு பாடல்கள் இந்நூவிற் காணப்படுகின்றன. அருக சரண அகவல் என்ற பகுதி சமண சமய நெறியில் நின்றாலே தேவரும் வணங்கத்தக்க உயர்கதி கிடைக்கும் என்ற அருகனது உரையை நம்பும் ஒருவர் இறைவனைப்பாடிவணங்கி அக்கதியைப் பெற முயலுவதாயமைந்துள்ளது.
ஜினேந்திர ஞானத் திருப்புகழானது நூறு சந்தப் பாடல்களைக் கொண்டுள்ளது. பெண்ணாசையை எடுத்துக் கூறி அதிலிருந்துவிடுவிக்க வேண்டுமென்று இவர் இறைவனை வேண்டுவது அருனகிரி நாதரை நினைவுறுத்துகிறது.
சமணர் சங்கமருவிய காலத்திலேயே தொடர்நிலைச் செய்யுள் இயற்றத் தொடங்கிவிட்டதற்குச் சிலப்பதிகாரம் சான்று பகிர்கிறது. பல்லவர் காலத்து உதயணன் பெருங்கதையும் சமணர் செய்த இலக்கியமேயாகும். சோழர் கால ஆரம்பத்தில் சிந்தாமணி, சூளா மணியென்பனவற்றை இயற்றித் தமிழில் வடமொழி இலக்கணத்துக்கு அமையக் காவியம் எழ வழிகாட்டிய பெருமை சமணருக்கேயுரியது. ஐஞ்.சிறு காப்பியங்களில் இன்று கிடைப்பன நான்கும் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்றும் சமணர் செய்தனவாயுள்ளன, சமண பக்திப் பாடல்கள் சோழர் காலச் சமண காவியங்கள் தோன்றுவதற்குத் நூண்டுகோலாக இருந்திருக்கலாம். ஆனால், சமண பக்தியியக்கம் வாமனாச்சாரியார் இயற்றிய மேருமந்திர புராணத்திலேயே பூரணத்துவம் பெறுகிறதெனலாம். இந்நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்து விளக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. நூலின் பெயரும் வைதிக சமயத்தாரால் போற்றப்பட்ட புராணம் என்ற பெயராக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
சோழப் பெருமன்னர் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு சிறக்கின்றது. செல்வச் செழிப்பு மிகுகின்றது. இயற்கைநெறி வாழ்விற் கவர்ச்சி காணப்டுகின்றது. அக்காலம் காவிய காலம் எனப்படுகிறது. காவியம் மக்கள் இவ்வுலகிலே வாழ வேண்டிய நெறியை எடுத்துக் கூறுகிறதெனலாம். இயற்கை நெறியும், சமய நெறியும், அறநெறியும் ஒன்றிய வாழ்க்கையே காவியத்திற் பேசப்படுகிறது. காவிய இலக்கணம் சோழர்கால வாழ்க்கை பற்றிய நோக்கைப் புலப்படுத்துகிறது. இலட்சிய வாழ்வுக்கு அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களும் வேண்டப்படுகின்றன. தன்னிகரில்லாத்தலைவனாக வாழ்ந்து, இம்மைப் பயன், மறுமைப் பயன்யாவும் பெறவேண்டும் என்ற கருத்தே காவியங்களின் அடிநாதமாகக் காணப்படுகிறது. இம்மைப் பயன்யாவும் பெறுபவன் அரசனாக அக்காலத்தில் காணப்பட்டமையால் அரசனைத் தலைவனாகக் கொண்டே சோழர் காலக் காப்பியங்களிற் பல தோன்றின. பூரணத்துவம் பெற்ற வாழ்வு எது என்பது பற்றிய சோழர் காலச் சிந்தனை சிந்தாமணி, சூளாமணி, கம்பராமாயணம் என்பன எடுத்துக் கூறும் கதைகளிலிருந்து புலனாகிறது.
தத்துவநெறிக் காலம்
தோத்திரப் பாடல்கள் சமய நம்பிக்கையை வேர்விடச் செய்ய அதனைத் தொடர்ந்து சமய உண்மைகளை ஆராயந்தறியும் தத்துவநெறிக் காலம் தோன்றுகின்றது. மேனாட்டுத் தத்துவம் இடைக்காலத்தில் மட்டுமே சமயத்தோடு நெருங்கிய தொடர்புடையதாய்ச் சமயக் கருத்துக்களை விளக்குவதாய் அமைந்துன்ளது. இந்தியத் தத்துவம் எப்பொழுதும் சமயத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுகிறது. உண்மையை அறிவதே மேனாட்டுத் தத்துவ ஆராய்ச்சியின் நோக்கமென்றும், உண்மையை அறிந்து அடைந்நு அனுபவிப்பதே இந்தியத் தத்துவ ஆராய்ச்சியின் நோக்கமென்றும் கூறுவர்,
சமய நம்பிக்கை சமுதாயத்திலிடம் பெற்ற பின்பே, அச்சமய உண்மைகளை விளக்கும் சமய தத்துவம் தோன்றுவது வரலாற்று நியதியாகும். சமய நம்பிக்கைக்கும் சமய தத்துவத்துக்கும் உள்ள தொடர்பு, இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் உள்ள தொடர்பு எனலாம். சமய நம்பிக்கை உணர்ச்சியை அடிப்படையாகக் கொண் டது. உணர்ச்சிவேகம் என்றும் நிலைத்திராது. உணர்ச்சி குறைய அறிவு முதவிடம் பெறுகிறது. அறிவைத் திருப்திப்படுத்தத் தத்துவம் தோன்றுகிறது. உள்ளத்திலே தோன்றும் விணக்களுக்கும் சந்தேகங் களுக்கும் விடைகள் தரும் பொறுப்புத் தத்துவத்தைச் சார்கிறது. பல்லவர் காலப் பக்தி இயக்கம் உணர்ச்சி சம்பந்தப்பட்டுள்ளது. சோழப் பெருமன்னர் கால நடுப்பகுதி வரை, பக்தியியக்கம் அற்றணலோடு விளங்கிற்றெனலாம். சோழர் காலப் பிற்பகுதியிலிருந்து, தத்துவ நூல்களின் காலம் தோன்றுகிறது. சைவ சித்தாந்த நூல்கள் தோன்றியது அக்காலப் பகுதியிலேயே. .
சோழப் பேரரசு காலப் பிற்பகுதியில் சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. சோழர் வலிமை பெற்றிருந்தபோது, அவர்கீழ் அடங்கி இருந்தவர்கள் அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். முதலில் அவர்களை அடக்குவதற்காகவும், பின்பு தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் சோழ அரசு போராட வேண்டிய சூழ்நிலை நிலவியது. சோழ நாட்டின் புகழும் பெருமையும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்ப் பாண்டியநாடு சோழநாட்டை அடிமை கொள்ளும் நிலையும் வந்தது. சைவ சித்தாந்த நூல்கள் எழுந்த தமிழ் நாட்டு அரசியற் சூழ்நிலை இதுவாகும். காவியக் கற்பனை சிதறித் தத்துவ ஆராய்ச்சி இடம்பெற்றதற்கு, இந்தச் சூழ்நிலையும் ஒரளவு காரணமாக வேண்டும். காவிய மாளிகைகளைக் கட்டியெழுப்பிய கவிஞர்களில் நம்பிக்கையிழந்த தமிழ்ச் சமுதாயம், உலக வாழ்க்கையைத் துச்சமாக மதித்த ஞானிகள் பால் கவனத்தைச் செலுத்துவதாயிற்று. காவிய வடிவில் இலக்கியம் செய்ய முயன்ற கவிஞர், மனிதர் வாழ்க்கை காவியத்திற்கு நுதலிய பொருளாகத் தக்க சிறப்புடையதன்று என்றுகொண்டு கடவுளையும். கடவுளின் அவதாரங்களையும். கடவுளின் திருவிளையாடல்களையும் பொருளாகக் கொண்டு காவியம் செய்யும் மரபு தோன்றுகிறது.
தமிழ் இலக்கியங்களை மட்டும் துணையாகக் கொண்டு, தமிழ்நாட்டுத் தத்துவச் சிந்தனையை முற்றாக உணர்ந்து கொள்ள முடியாது. பல்லவர் காலச் சமய மறுமலாச்சிக்கு முன்பேயே, சமண ரும் பெளத்தரும் தமிழ்நாட்டில் நிலைபெற, வெவ்வேறு வழிகளைக் கையாண்டுள்ளனர் போலத் தெரிகிறது. சமணர் எழுதிய அறநூல் களை நோக்கும்போது, சமணசமயத்தைப் பரப்புவதிலும் பார்க்கச் சமூக வாழ்க்கையைச் சீர்திருத்தத்தையே அவர்கள் நோக்கமாகயிருந்தது போலத் தெரிகிறது. சிலப்பதிகாரத்தைப் பார்க்கும்போது, இயன்றவரை யிற் பிற மதங்களை அவர்கள் நேரே பகைத்துக்கொள்ள விரும்ப வில்லைபோலக் காணப்படுகிறது. இந்த வழியைக் கையாண்டதனாலேயே, அவர்கள் தமிழ்ப்பொதுமக்களிடத்தில், சுலபமாகச் செல்வாக்குப் பெற்றிருத்தல் கூடும். மணிமேகலையைப் பார்க்கும் போது, பல்வேறு மதக் கொள்கைகளை எடுத்துக்காட்டி, அவற்றின் சிறப்பின்மையை விளக்கிப் பெளத்த தத்துவத்தின் உயர்வை எடுத்துக்காட்டுவதே தமிழ்நாட்டுப் பெளத்தர் கையாண்ட வழிபோலத் தெரிகிறது.
பெளத்தர் தமிழ்நாட்டுப் பொதுமக்களிடையே சமணரளவு செல்வாக்குப் பெற்றிராதபோதிலும், தமிழ்நாட்டு அறிஞரிடையே செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம். சைவசமயகுரவர் வரலாறுகளில், பெளத்தர்களைப் பற்றி வரும் குறிப்புக்கள், இக்கருத்தை வலியுறுத்துகின்றன. போதிமங்கை என்ற ஊரினூடாகச் சம்பந்தர் சென்றபொழுது, அங்கிருந்த பெளத்தர் சம்பந்தரை வாதுக்கழைத்தனர். சம்பந்தரோடு உடன் சென்ற சம்பந்தசரணாலயர் என்ற சிவனடியார் பெளத்தர் தலைவனாகிய புத்தநந்தியை இடிவிழுந்து இறக்கச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. மாணிக்கவாசகர், சிதம்பரத்தில் இலங்கைப் பெளத்தகுரு ஒருவருடன் வாதஞ் செய்து, வாதத்தால் அவரை அடக்க முடியாமையால், அவரை ஊமையாக்தினார் என்று திருவாதவூரடிகள் புராணம் நவில்கிறது. பிரபல பெளத்த தத்துவ ஞானியாகிய தின்னாகரும் பெளத்த பேரறிஞராகிய தாமபாலரும் வேறுபலரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களெனப்படுகிறது. தமிழ்நாட்டில் தத்துவ ஆராய்ச்சி மணிமேகலை காலத்திலேயே தோன்றிவிட்டதெனலாம். வட இந்தியச் சமயங்கள் பல, மணிமேகலைக்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி நிலை பெற்றுவிட்டனவாதலால், அவற்றைப் பற்றிய தத்துவ ஆராய்ச்சி மணிமேகலை காலத்திற்கு முன்பே தோன்றிவிட்டது.
ஐம்பெருங்காப்பியங்களென்ற வரிசையிற் பெளத்த நூல்கள் மணிமேகலையும் குண்டலகேசியுமாகும். குண்டலகேசியும் மணிமேகலையின் போக்கைப் பின்பற்றியது. இதுவும் பெளத்த தத்துவத்தைக் தர்க்க வாதங்களால் நிறுவ எழுந்துள்ளது. பெளத்தருடைய வாதத்திற்குப் பதிலளிப்பதற்காகச் சமணர் நீலகேசியை எழுதியுள்ளனர். நீலகேசி சமண தத்துவத்தைக் தாக்க வாதங்களால் நிலைநிறுத்துகிறது. குண்டலகேசியிற் காணப்பட்ட சமண கண்டனங்களுக்கு விடை கூறிப் பெளத்தத்தைக் கண்டிக்கிறது நீலகேசி. குண்டலகேசி, நீலகேசி என்பன சோழப்பெருமன்னர் காலத்திற்குப் பிந்தியனவாகா என்பது அறிஞருக்கு உடன்பாடாகும்.
வட இந்தியாவில் வேதத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த தத்துவ முறைகளும் வேதத்தை ஏற்காத தத்துவமுறைகளும் காணப்பட்டன. உலகாயதம், சமணம், பெளத்தம், ஆசீவகம் என்பன வேதத்தை ஏற்காதன. பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, (வேதாந்தம்) சாங்கியம், யோகம், நையாயிகம், வைசேடிகம் என்பன வேதத்தை, ஏற்றன. இவையாவும் தென்னிந்தியாவிலும் இடம்பெற்றுள்ளன. ஆயின், இவற்றுட் பூர்வமீமாம்சை, வேதாந்தம், என்பன உருவாவதற்கே, தென்னிந்தியா பெருந்தொண்டாற்றியது, பூர்வமீமாம்சை வேதத்திலிருந்தும் பிராமணங்களிலிருந்நும் ஊற்றெடுத்தது. வேதாந்தம் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டது. குமாரில பட்டர், பிரபாகரர் என்னுந் தென்னிந்திய அறிஞா்கள் பூர்வமீமாம்சையைத் தர்க்கமுறையிலமைந்த தத்துவமுறையாக்கினா். இவர்கள் கொண்ட முடிவுகள் இவா்களுக்கு முந்திய நூல்கனினூம் காணப்படுகிறபோதிலும், இவர்கள் தர்க்கமுறையிலமைந்த உருவத்தைக் கொடுத்த பெருமையைப் பெற்றனர். இவர்கள் கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாவார்கள். இவர்களிருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டபோதும், பிரபாகரர் கருத்துகள் சோழப்பேரரசுகால முற்பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்குச் சாசனச் சான்றுண்டு. அக்காலத்தின் பின் குமாரில பட்டரின் கருத்துக்களே தென்னிந்தியாவிற் கூடிய செல்வாக்குப் பெற்றுள்ளன.
இவர்கள் நூல்களிற் குறிப்பிடத்தக்க பண்பு பெளத்தமத கண்டனமாகும். பெளத்தர்கள் தத்துவநெறியை விளக்கிப் பிரசாரஞ் செய்ததனாற்போலும், பெளத்தர்களை வேறு தத்துவ முறைகொண்டு கண்டிக்க வேண்டி ஏற்பட்டது. வேதாந்தத்திற்குத் தர்க்க முறையிலே தெளிவான விளக்கம் கொடுத்தோர் சங்கரர், இராமானுசர், மாத்வர், ஸ்ரீகண்டர் என்னும் தென்னிந்தியர்களாவர். பூர்வமீமாம்சையாளர் வேதம், பிராமணம், ஆரணியகம் என்ற மூன்றையும் போற்றியது போல, வேதாந்திகள் உபநிசத்துகள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் என்ற மூன்றையும் போற்றினர். ஏகான்மவாதம் அல்லது மாயாவாதம் என்ற கொள்கையை நிறுவிய சங்கரரே, கி.பி. எட்டு. ஒன்பதாம் நூற்றாண்டினராய், வேதாந்த தத்துவ பேரறிஞர்களுட் காலத்தால் முந்தியவர். இவர் தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் எல்லையிலுள்ள காலடியைச் சேர்ந்தவர். இவர் அமைத்த தத்துவமுறை பிரச்சன்ன பெளத்தம் என்றும் வழங்கப்படும், பெளத்த தத்துவத்திலிருந்தே இவருடைய தத்துவம் உரூவாக்கப்பட்டது என்று சிலர் கூறுவர். பெளத்த சமயத்தைப் பரப்ப புத்தர் துறவிகளை உருவாக்கியது போலச் சங்கரரும் தம்முடைய கருத்துக்களைப் பரப்பத் துறவிகளை உருவாக்குகிறார். அது எவ்வாறாயினும் பிரபாகரர், குமாரிலப்பட்டர், சங்கரர் என்னும் மூவரும் இந்தியா முழுவதும் திரிந்து பெளத்தர்களை வாதில் வென்று, வைதிக நெறியை நிலைநாட்டினர். பெளத்த சமயக் கொள்கைகன் பலவற்றையும் சிந்தித்து முடிவுக்கு வரும் உரிமை பெளத்த சமயத்தவர்களுக்குப் புத்தரால் வழங்கப்பட்டதால், பெளத்த சிந்தனை செழித்து வளர்ந்துள்ளது. பெளத்த சமயத்தை வெல்வதை நோக்கமாகக் கொண்டே, இம்மூவரும் தம்முடைய தத்துவ நெறிகளை அமைத்துள்ளனரென்பது தெளிவாகத் தெரிகிறது.
பெளத்த சமயம் ஏனைய சமயங்களின் தத்துவ முறைகள் வளர உதவியவாற்றைச் சமணதத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் உணர்ந்து கூறிய வார்த்தைகள் வருமாறு! “தீவிரமான விமர்சனம் செய்யப்படும் போதே சிந்தனை வளர்ச்சி செழிக்கிறது. வைதிக சமயம், சமண சமயம் என்பவற்றுக்கு எதிரான ஆற்றல் மிக்க கண்டனம் பெளத்த சமயத்திடமிருந்தே வந்தது. பெளத்த சமயம் இந்தியாவிலிருந்து மறைந்ததும் வைதிக சமயத் தத்துவ சிந்தனையும் சமண சமயத் தத்துவ சிந்தனையும் வளர்ச்சியுற்று விடுகின்றன.
பக்தி இயக்கத்திற்கும் தத்துவப் பேரறிஞர் சங்கரருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. வடமொழி வேத வேதாகமங்களிலிருந்தே, இவர் கொள்கைகள் தோன்றின. சங்கரரது வாதத்தின் படி, பிரமம் ஒன்றே உண்மையான பொருள், உயிர்கள் பிரமத்தின் அமிசங்கள். தம் உண்மை இயல்பை உணராத உயிர்களை மயக்கும் தோற்றம் உலகம் அல்லது மாயையாகும். உயிர்கள் தம் உண்மை இயல்பை உணரும்போது மாயையிலிருந்து விடுபடுகின்றன. பிரமத்தோடு ஒன்றாகின்றன. இதனாற்றான் இக்கொள்கை ஏகான்மவாதம் அல்லது அத்துவிதம் என்று வழங்கப்படுவது. ஏகான்ம வாதம் என்ற பெயர் பிரமம் ஒன்றே உள் பொருள் என்று வாதிப்பதனாலும், அத்துவிதம் என்ற பெயர் உயிர் பிரமத்தை அடையும்போது இரண்டற்ற தன்மை அடைகின்றதென்பதனாலும் ஏற்பட்டன, அவித்தையால் உயிர்களுக்கேற்படும் மயக்கமே உலகம் என்பதால், மாயாவாதம் என்ற பெயரும் இத்தத்துவ முறைக்கு ஏற்பட்டது, சங்கரருடைய தத்துவ முறையில், உயர்ந்த உண்மை, தாழ்ந்த உண்மை என இரண்டு கூறப்படுகின்றன. ஞானத்தைத் துணைக் கொண்டு, பிரமத்துடன் இரண்டறக் கலத்தல் உயர்ந்த உண்மை யாகும். வேள்விகள் கிரியைகள் செய்து சர்மமார்க்கத்தில் நின்று இறைவனை அடைதல் தாழ்ந்த உண்மையாகும். இவை இரண்டு படிகள் எனலாம். பிந்தியவழி முந்தியவழிக்குச் செல்லும்படி. இந்தசமயத் தத்துவ முறைகளில் இன்று உலகப் புகழ் பெற்று விளங்குவது சங்கரரது தத்துவ முறையே. ஆனால், சங்கரரது தத்துவ முறையே பக்திமார்க்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டுக்கு ஏற்றதாக அமையவில்லை. பெளராணிக மதம் விரும்பிப் போற்றக்கூடியதாக விளங்கவில்லை. பக்தி மார்க்கமும் பெளராணிக மதமும் போதித்த நெறி, சங்கரரால் தாழ்ந்தபடிமயில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கரரது தத்துவம் சைவத்துக்கோ வைணவத்துக்கோ பிரத்தியேகமாக உறியதல்ல. எனவே வைதிக மதத்திலே புதிய தத்துவ முறைகளும் தோன்றியுள்ளன.
தமிழ்நாட்டின் வடபகுதியைச் சேர்ந்த இராமானுசர் கி.பி. 11ம், 12ம் நூற்றாண்டுகனில் வாழ்ந்து, வேதாந்தத்தை வைணவத்தை விளக்கவல்லதாக மாற்றியமைத்தார். இராமானுசர் காலத்திற்கு முன்பே, நாலாயிரத்திவ்விய பிரபந்தம் நாதமுனிகளால் தொகுக்கப் பட்டு விட்டது. திவ்வியப் பிரபந்தங்கள் ஓதுவதற்குக் கோவில்களில் ஒழுங்குகள் செய்யப்பட்டன. இராமானுசர் திவ்வியப் பிரபந்தங்களில் தம் மனத்தைப் பறிகொடுத்தவர். இவரும் தம்முடைய தத்துவ முறையை நிறுவுவதற்காக வேதாந்தத்துக்குப் புத்துரை வகுத்திருக்கிறார். இராமானுசரது தத்துவமுறையிற் பக்தி மார்க்கம் ஞானமார்க்க மளவு உயர்ந்தது எனக் கூறப்படுகிறது. சங்கரரது அத்துவிதமுறையில், இராமானுசர் திருத்தஞ் செய்ததால் அவர் மதம் விசிட்டாத்து விதம் எனப்படுகிறது. கடவுளும் உயிரும் உலகமும் உள்ள பொருள் களெனக் கொள்ளும் இராமானுசர், கடவுள் ஒருவரே சுவதந்திரர், உயிரும் உலகமும் அவரால் இயங்குவன எனக் கொன்கிறார். உயிர் இறைவனை அடையும் பொழுது, இறைவனுடன் நீக்கமற இருந்து பேரின்பம் அனுபவிக்குமேதவிர, இறைவனின் ஓர் அமிசமாக மாறது என்பது கருத்தாகும். ஆன்மா இறைவனுடைய நிலையை அடையுமாயினும், இறைவனுக்குரிய தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தலுக்கு உரியதல்ல எனப்படுகிறது.
மைசூர்ப் பகுதியைச் சேர்ந்தவராகப் பன்னிரண்டாம் நூற்றாண்டு இறுதி, பதின்மூன்றாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த மாத்வரும் இராமானுசர் போல, சங்கரரது அத்துவிதத்தைக் கண்டித்தார், இவர் தம்முடைய கருத்துக்களை நிறுவப் புரானாங்களைத் துணையாகக் கொண்டார். இவரும் வேதாந்தத்துக்குப் புத்துரை வகுப்பது மூலமே தம்முடைய தத்துவ முறையை நிறுவினார். இவருடைய நெறி துவிதம் என்று வழங்கப்படும். கடவுள், உயிர், உலகம் என்பன வேறுவேறு பொருள்கள் என இவர் கொள்கிறார். உயிர்கள் தமக்குள்ளேயே வேறுபாடுள்ளனவென்றும் உலகப்பொருள்கள் தம்முள்ளேயே வேறுபாடுள்ளனவென்றும் இவர் கூறுவர்1. ஆனால், கடவுளின் ஆதரவிலேயே, ஏனையவை இயங்குகின்றன என்பது இவருக்கும் உடன்பாடு. கடவுள் வழிபாட்டினால், இறையருள் தோன்றும்போதே, முத்தி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இவரும் வைணவ சமயத்துக்கே, தத்துவமுறை வகுத்தார். ஸ்ரீகண்டர் இராமானுசரை ஓட்டிச் சைவத்துக்கேற்ற வேதாந்த தத்துவம் எழுதினார். இத்தத்துவ ,ஆராய்ச்சிகள் யாவும் வடமொழியில் நிகழ்ந்த போதிலும், தென்னிந்தியாவிலேயே நடைபெற்றன. இத்தத்துவக் கொள்கைகள் தமிழ்நாட்டை அலைக்கத் தொடங்கும்போதே, தமிழருட் பெரும்பான்மையோரது சமயமாயுள்ளதும், பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதுமாய சைவத்திற்குத் தமிழில் ஒரு தத்துவமுறை வகுக்கப்பட்டது.
இத்தத்துவமுறை, சைவசித்தாந்தக் கொள்கையென வழங்கப்படுகிறது. சித்தாந்தம் என்ற சொல், தர்க்கரீதியாக அடையப்பட்ட முடிவைக் குறிக்கும். சைவசமயத்திலேயே பல பிரிவுகள் உண்டு. இக்காலத் தராதரப்படி, அருவருப்புக்குரியனவும் பயங்கரமானவையுமாய பழக்கவழக்கங்களையுடைய பாசுபதம், கபாலிகம், காளாமுகம் என்னும் சைவப் பிரிவுகளுக்கும் சைவ சித்தாந்தத்திற்கும் இடையே, என்றும் நெருங்கிய தொடர்பு இருந்ததில்லை. அளவை முறைகளால் நிராகரிக்கப்பட்ட தத்துவமுறைகள் பூர்வபக்கமென வழங்கப்பட, நிறுவப்பட்ட நெறி சித்தாந்தமென வழங்கப்பட்டது. சைவ சித்தாந்தத்தை ஏனைய தத்துவ முனறகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, சைவ கித்தாந்திகளுக்கு ஏனைய தத்துவ முறைகள் யாவும் பூர்வபக்கமாகத் தெரிவதால், இது சைவ சித்தாந்த தத்துவமென வழங்கப்படுவதாயிற்று. சைவ சித்தாந்தத்தின் ஊற்றிச் சிவஞானமாகும். வேதங்களும், ஆகமங்களும் தோற்றத்தில் வேறுபட்டாலும், கருத்து முடிவில் ஒன்றே என்பது சைவசித்தாந்தியின் கொள்கையாகும். ஆகமங்கள் என்று சைவ சித்தாந்தம் கொள்வது இருபத்தெட்டுச் சிவாகமங்களையும் இருநூற்றுநாற்பத்தேழு உபாகம ங்களையுமாகும். வேதம் வைதீக சமயங்கள் யாவற்றிற்கும் பொதுவானது. ஆகமம் வைதீகப்பிரிவு ஒவ்வொன்றிற்கும் தனிப்பட வெவ்வேறாக அமைந்துள்ளது. வைணவ ஆகமங்கள் அல்லது சங்கிதைகள் பாஞ்சராத்திரம், வைகாநசம் என்பன. சாக்த ஆகமம் வாம தந்திரம் எனவும் வழங்கப்படும். வேதத்தைப் பொதுநூலாகவும் சைவகாமத்தைச் சிறப்பு நூலாகவும் ஏற்கிறது சைவ சித்தாந்தம். இங்கு வேதம் என்பது நால்வேதங்களையும், வேதாந்தங்கள் எனப்படும் உபநிடதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகும்.
சைவகாமங்கள் வட இந்தியாவிலே தோன்றியனவா அல்லது தென்னிந்தியாவிலே தோன்றியனவா என்று கூற முடியாதுள்ளது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடையில் அவை தோன்றியிருக்கலாம் என்பர் இக்கால ஆராய்ச்சியாளர். ஆகமங்களையும் சிவனே அருளினார் என்ற சைவர்களின் நம்பிக்கை முதன்முதலில், தமிழிலே மாணிக்கவாசகராற் குறிக்கப்பட்டது. வேதங்களையும், ஆகமங்களையும் முதனுாலாகச் சைவ சித்தாந்தம் ஏற்பதனால், அதற்கு வேதாந்தம், வேதசித்தாந்தம், வைதிக சித்தாந் தம் என்ற பெயர்களும் உண்டு. சைவசித்தாந்தம் அத்துவித சைவம் எனவும் தமிழ்நாட்டிற்குச் சிவஞானபோதத்தை அருளிய அறிஞர் அத்துவித மெய்கண்டார் எனவும் வழங்கப்படுவதுண்டு. தமிழில் உள்ள சைவ சித்தாந்த நூல்களுள், முதன்மை நூலாகக் கூறத் தகுந்தது சிவஞானபோதமே. சிவஞான போதத்தைப் பின்பற்றியே, ஏனைய சைவ சித்தாந்த சாத்திரங்களுக்குள்ளே திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் இரண்டுமல்லாத பிற தோன்றின.
பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சித்தாந்தசாத்திரங்களும் சைவ சித்தாந்தத்தின் அடித்தளம், வடமொழியிலே வேதாந்தங்கள் இருப்பதுபோல, தமிழிலே தமிழ் வேதாந்தங்கள் எனப்படும் தேவாரமும் திருவாசகமும் உண்டு. சைவாகமங்களுக்குப் பதிலாக தமிழில் பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் காணப்படுகின்றன. பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட சிவஞானபோதத்தின் முதனூல் வடமொழியிற் காணப்படுகிறதாம். இரெளரவ ஆகமத்தில், பாவவிமோசன படலத்திற் காணப்படும் பன்னிரு சூத்திரங்களே மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பர். இவற்றிற்கு மெய்கண்டதேவர் தம்தமிழ் நூலில், வார்த்திகப் பொழிப்பு எழுதி ஒவ்வொரு சூத்திரத்தையும் அதிகாரங்களாக வகுத்தும் வெண்பா யாப்பில் உதாரணச் செய்யுள்கள் பாடியும் வைத்துள்ளனர் என்பது அவர் கருத்து, சிவாக்கிரயோகிகளும் அவருக்குப் பின்வந்த உரையாசிநியர்களான சிவஞான முனிவர் முதவியோரும் கூறிய செய்திகளையும் கடவுள் மாமுனிவர் திருவாதவூரடிகள் புராணத்தில் மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்ட காலத்துக் குருவாக வந்த சிவன் கையிலே சிவஞானபோதம் இருந்தநது என்று கூறும் செய்தியையும் ஆதாரமாகக் கொண்டு,
மறைமலையடிகள், பாலசுப்பிரமணிய முதலியார், கா. சுப்பிரமணியபிள்ளை முதலியோர் சிவஞானபோதம் தமிழிலேயே முதன் முதலில் எழுந்ததென்றும் அதன்பின்பே வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டதென்றும் வாதிப்பதற்குக் காட்டும் காரணங்கள் அடுத்து வரும் மூன்று பத்திகளுள்ளே தொகுத்துக் கூறப்படுகின்றன.
வடமொழிச் சிவஞானபோதத்தின் இறுதி ‘இங்ஙனமாகச் சிவஞானபோதத்திற் சைவசித்தாந்தப் பொருள் முடிபை அறிந்து கொள்க’ என்பது. மெய்கண்ட தேவரின் சிவஞானபோதப் பன்னிரண்டாம் சூத்திர இறுதி ‘ஆலயந்தானும் அரனெனத் தொழுமே’ என்பது. இவற்றை நோக்கும்போதே முந்திய நூல் பிந்தியதன் மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்று கொள்ள இடமேற்படுகிறது. மெய்கண்டதேவர் சிவஞானபோதம் எழுதுமுன் அப்பெயர் கொண்ட நூல் வடமொழியிலாதல், தமிழ்மொழியிலாதல் இருந்ததென்பதற்குச் சான்று எதுவுமில்லை. மாணிக்கவாசகருக்குச் சிவன் அறிவுறுத்தியது சிவஞானபோதமே என்று பரஞ்சோதி முனிவரது திருவிளையாடற் புராணம் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று. இவர்கள் இருவருக்கும் காலத்தால் முற்பட்ட பெரும்பற்றப் புலியூர் நம்பி தம்முடைய திருவிளையாடற் புராணத்தில், இறைவன் மாணிக்கவாசகருக்கு உணர்த்தியது ஐந்தெழுத்துண்மை என்று கூறியுள்ளாரேயன்றிச் சிவஞானபோதம் என்று கூறாதது வரலாற்று ரீதியிற் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது.
சந்தான குரவர் சரித்திரத்தில் மெய்கண்ட தேவருக்கு ஒரு துறவி மெய்ப்பொருள் உபதேசித்துச் சென்றாரெனக் குறிக்கப்படுகின்ற போதிலும், அம்முனிவர் பெயர் அங்கேயோ அல்லது சிவஞான போதப் பாயிரத்திலோ தரப்படவில்லை. நந்தி, முனிவர் கூட்டத்திற்கு உபதேசித்த சிவஞானபோதத்தை ஓரு நூல்வடிவம் பெறச் செய்தவர் மெய்கண்டதேவர் என்பது மாத்திரமே பாயிரத்திலிருந்து அறியப்படுகிறது. சிவஞானபோதப் பாயிரம் அருணந்தி தேவரால் இயற்றப்பட்ட தென்று சிவஞானபோதநூல் உரையாசிரியராகிய பாண்டிப்பெருமாள் மொழிவர். ஆனால், சிவஞான சித்தியார் பாயிரம் வேறு கதை கூறுகிறது. இறைவன் நந்திக்கு உபதேசிக்க, நந்தி தம் மாணாக்கர் தேவர் சிவஞானபோதம் என நூல் வடிவம் வழங்கினாரெனவும் அதற்கு வழிநூலே சிவஞான சித்தியாரெனவும் கூறப்படுகின்றன. சிவஞானபோதப் பாயிரத்தில் இல்லாத செய்திகள் சிவஞானசித்தியார் பாயிரத்தில் காணப்படுகின்றன. உமாபதி சிவாச்சாரியார் சிவஞான போதநூல் வரலாற்றினுக்கு இன்னும் இரு வடநாட்டு முனிவர்களைக் காரணமாகக் கூறியுள்ளார். இவர் நந்தி தேவரை முதலாசிரியராகவும் நந்திதேவரின் மாணவரில் ஒருவரை இரண்டாம் .ஆசிரியராகவும் அவருக்குப் பின் சத்தியஞான தரிசனிகளை மூன்றாம் ஆசிரியராகவும்கூறி அதன் பின்பே மெய்கண்ட தேவரைக் குறிப்பிடுவர். மெய்கண்ட தேவர் இக்கதைகள் ஒன்றும் கூறவில்லை. முதலாம் சூத்திர இறுதியிலே,‘இசைக்குமன் உலகே’ என்று மாத்திரமே கூறியுள்ளார். எனவே, தமழ்ச் சிவஞானபோதமே முதனூலாகலாம். சிவனோடும், நந்தியோடும், வட இந்திய முனிவரோடு நூலைத் தொடர்பு படுத்துவதனால் நூலுக்கு மதிப்புக்கூடலாம் என்ற நம்பிக்கை இந்நூவில் வடமொழி மூலம் பற்றிய கதைகள் தோன்றக் காரணமாகலாம்.
இரெளரவ ஆகமத்துள், பல சுலோகங்களையுடைய பாவ விமோசனப் படலத்துட் பன்னிரண்டு சுலோகங்கள் மட்டும் சிவஞான போதம் என ஒரு தனித் தத்துவ முறை ஆயிற்று என்று கொள்ளல் பகுத்தறிவுக்கேற்றதன்று. அப்பன்னிரண்டு சுலோகங்கனில் இறுதிச் சுலோகமாக சிவஞானபோதம் என்ற வார்த்தையைக் கொண்டிருக்கிறது. ஒரு நூலில் உள்ள ஒரு படலத்தில் ஒரு சுலோகம் அதற்கு முன்னுள்ள பதினொரு சுலோகங்களையும் ஒரு தத்துவமுறையாகத் தோற்றுவாயின்றிக் கூறல், அப்பகுதி இடைச்செருகலாயிருக்கலாம் என்று சந்தேகப்படுவதற்கே இடமளிக்கிறது.
சிவஞானபோதத்தின் முதனூல் வடமொழிமிலிருந்ததென்று கருதும் நல்ல சுவாமிப்பிள்ளை முதலிய அறிஞரும், சிவஞானபோதத்திற்கும் அதன் வழி நூலாகிய, சிவஞானசித்தியாருக்கும் இணையான நூல்கள் வடமொழியில் இல்லை என்று கருதுவர். தமிழ் இலக்கியக் கருத்தாக்கள் வடமொழியிலிருந்து பெரும்பாலும் பொருளைக் கடன் வாங்கியபோதும், பொருளை அமைப்பதில் தனித்தன்மையும் புதுமையையும் வரலாற்றுப் பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்தொன்று, இச்சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமுள்ளதாகக் காணப்படுகிறது. அது பின்வருமாறு “சமயம் முதலிய ஆன்மீகக் கலாசார விடயங்களில், ஆரம்பத்தில், தென்னிந்தியா வடக்குக்குப் பெரிதும் கடன்பட்டது ஆனால் சில நூற்றாண்டுகள் செல்வதற்கிடையில், தென்னிந்தியா கடனை நன்றாகத் திருப்பிக் கொடுத்தது மன்றிச் சமயக் கொள்கையிலும் தத்துவச் சிந்தனையின் பல அமிசங்களிலும் குறிப்பிடத்தக்க தொண்டுகள் செய்திருக்கின்றது1”
தமிழ்நாட்டிற் சைவ சித்தாந்தம் அடைந்த வளர்ச்சி இக்கருத்துக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. பல்லவர் காலத் தமிழகத்தில் ஏற்பட்ட சைவசமய மறுமலர்ச்சியும், சைவத்தின் பொற்காலமாக விளங்கிய சோழப் பெருமன்னர் காலத்தில் அச்சமய வளர்ச்சியும் சிவஞானபோதம் எழுந்த சூழ்நிலையை அறிய மிக முக்கியமானவை. சமண பெளத்த சமயங்களின் தாக்குதலுக்கு எதிர் நிற்கலாற்றாது ஒடுங்கிவந்த சைவத்திற்குப் புத்துயிரும் புத்துணர்ச்சியும் ஊட்டி, சைவம் தமிழர் பெரும்பாலாணேரின் சமயமாகும்படி நிலை நிறுத்திய சிவஞானபோதம் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதென்ற கொள்கை வழங்கப்படுகிறது. சமயாச்சளியார்களின் வாழ்க்கை வரலாறு, சிவஞானபோதம் எழுதப் படுவதற்குப் பெருந்துணை செய்ததாகத் தெரிகிறது. முதலாம் இராசராசன் காலத்து நம்பியாண்டார் நம்பி, தேவாரங்களைத் தேடித் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தமைத்தார். பண்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சேக்கிழார் தேவாரம் பாடிய மூவர்களின் வரலாற்றை உள்ளடக்கிய பெரியபுராணம் பாடி வைத்தார். ஒன்பதாம் நூற்றாண்டுப் பிற்பகுதியினராகக் கருதப்படும் மாணிவாசகரின் வரலாறும் திருவாசகமும் அக்கால வழக்கில் இருந்திருக்க வேண்டும். ஆகவே, பதின்மூன்றாம் நூற்றாண்டினராகிய மெய்கண்டதேவர் சைவத்திருமுறைகளில் தோய்ந்து சிவஞானபோதம் செய்தாரென்றால், அது பொருத்தமுடையதே. சித்தாந்த நூல்களின் கருவூலமாகத் திருமுறைகள் அமைந்திருக்கின்றன. திருமுறைகளில், ஆங்காங்கு காணப்படும் உண்மைக் கருத்துக்களைத் தொகுத்தும் விரித்தும் விளக்கியும் வெளிப்படுத்துகின்றன. சிவஞானபோதம் முதலிய சித்தாந்த சாத்திரங்கள் சைவ சித்தாந்தத்திற்கு மூலம் என்று கூறக்கூடிய வகையில், தமிழிற் சைவசமயாச்சாரியார் வரலாறும் பக்திப்பாடல்களும் காணப்படுவதுபோல, வடமொழியில் எதுவுமில்லை. சிவஞானபோதத்தைத் தொடர்ந்து தமிழில் வேறு பல நூல்கள் எழுந்துள்ளன. வடமொழியில், அப்படியும் ஏற்படவில்லை. சைவ சித்தாந்தம் வட இந்தியாவிற் செல்வாக்குப் பெறவும் இல்லை. எனவே சைவ சித்தாந்தம் தமிழர் கண்ட நெறியெனலாம்.
காலமுறையில் வைத்துப் பார்க்கும்போது, சிவஞானபோதத்திற்கு முன்பே தமிழிற் சித்தாந்த சாத்திரங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன. திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்பன அவ்வாறு தோன்றியவை, திருவுந்தியார் என்பது திருவியலலூர் உய்யவந்த தேவநாயனாரால் இயற்றப்பட்டது. சைவசித்தாந்தம் வடவர் செல்வாக்கால் ஏற்பட்டது என்று நிறுவ முனைவோர், இவர் திருவியலூரிற் குடியேறிய வடவரென்பர். இவரது நூல், வீடு அடைவதற்குரிய நெறியையும், அடைந்தோர் தன்மையையும் ஆசியருடைய சுய அனுபவத்தையும் எடுத்துக் கூறுவது. திருக்களிற்றுப்படியார் திருக்கடவுர் உய்யவந்த தேவநாயனாரால் அருளிச் செய்யப்பட்டது. இது திருவுந்தியாரின் கருத்தைத் தெளிவாக்க எழுந்தது. இந்நூலின் கண்னே, அறுபத்து மூன்று நாயன்மார் அற்புத நிகழ்ச்சிக்குக் காரணமான வல்லினை மெல்லினையைப் பற்றிய விவரமும் திருவள்ளுவரது குறள்கள் சிலவற்றை மேற்கோள்களாகக் கொண்டு அவற்றின் பொருளை விளக்கும் பகுதியும் பிற அரிய சித்தாந்த முடிபுகளும் கவனிக்கத் தக்கன1. சித்தாந்த சாத்திர ஆராய்ச்சி தமிழ்நாட்டிலே தோன்றியமையும், அது செல்லும் நெறியும் இவ்விரு நூல்களிலிருந்தும் புலனாகின்றன. இந்நூல்களிரண்டும் பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தோன்றிவிட்டன.
மெய்கண்டார் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சைவ சமயம் சமயகுரவர் நால்வரைக் கொண்டிருப்பது போலச் சந்தான குரவர் நால்வரையும் கொண்டிருக்கிறது. திருமுறைகளிற் சமயகுரவர் முக்கியத்துவம் பெறுவதுபோலச் சித்தாந்த சாத்திரங்களிற் சந்தான குரவர் முக்கியத்துவம் பெறுகின்றனர். சமயகுரவருள் முதல்வராகிய அப்பரும் சந்தான குரவருள் முதல்வராகிய மெய்கண்டதேவரும் திருமுனைப்பாடி அல்லது நடுநாடு என்னும் பகுதியைச் சேரந்த வேளாள குலத்தின் தமிழகத்திற் சைவத்தை நிலைநாட்டும் முயற்சியை, இருவேறு காலங்களில், இருவேறு வகைகளில் ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்களே. அப்பரைத் தொடர்ந்து சம்பந்தராகிய பிராமணர் பணிபுரிவது போல மெய்கண்டாரைத் தொடர்ந்து அருணந்தி சிவாச்சாரியாராகிய பிராமணர் பணிபுரிகிறார். பிறமதக்காய்வு சம்பந்தரில் அதிகம் காணப்படுவதுபோல, பிறமதக் கண்டனம் அருணந்தி சிவாச்சாரியாரிற் காணப்படுகிறது. தமிழ்நாட்டுச் சைவ சமய வரலாறு இவ்வாறு அமைந்ததாலேயே அது கன்னட மொழி பேசும் நாட்டில் எழுச்சி பெற்று வீரசைவத்திலிருந்துவேறுபடுகிறது. வீரசைவம் கன்னட நாட்டுச் சமணத்தை வென்றது. வேதத்தையும் வருணாச்சிரம தர்மத்தையும் ஏற்காததாகவும் பிராமணியத்தை ஒதுக்கு வதாகவும் வீரசைவம் அமைந்தது. வீரசைவ எழுச்சியில், பிராமணர் முக்கிய பங்கு வகிக்காததனால் இந்த நிலை உருவாயிற்று.
சிவஞானபோதம் முப்பொருளின் உண்மையையும் இலக்கணத்தையும் கூறும் பொதுப்பகுதியும் வீட்டிற்குரிய ஞானநெறியினையும் அந்நெறி நின்றார் பெறும் பயனையும் கூறும் சிறப்புப் பகுதியையும் உடையது. பன்னிரண்டு சூத்திரங்களையேயுடைய இந்நூலில், ஒவ்வொரு சூத்திரத்திற்கும் கருத்துரை கூறப்பட்டிருப்பதுடன் அச்சூத் திரத்தின் பகுதிகளை மேற்கோள் ஏதுவுதாரண வெண்பாக்களோடு கூடிய அதிகரணங்களாக வகுத்துரைத்து வார்த்திகப் பொழிப்புஞ் சேர்த்து நூல் செய்யப்பட்டுள்ளது. பழைய இந்தியத் தத்துவமுறைகளின் வளர்ச்சிப்படிகளாகக் கூறப்படும் ஞானக்காட்சி கண்டு வெளியிடல், அவ்வெளியீட்டைப் பின்வருவோர் சூத்திரங்களுக்குத் தர்க்க முறையிலமைந்த விளக்கம் கூறல், அத்தத்துவ முறையின் நோக்கிற் பிறதத்துவ முறைகளைக் கண்டித்தல் என்பன1 யாவும் சிவஞானபோதத்தில் இடம் பெறுகின்றன. முதலாவது வளர்ச்சிப் படியாகச் சைவசமய குரவரின் பாடல்களைக் கூறினாலும், ஏனைய படிகள் யாவும் இந்நூலிற் காணப்படுகின்றன எனலாம். முதன் மூன்று சூத்திரங்களும் பிரமாணவியல்; அடுத்த மூன்று சூத்திரங்களும் இலக்கணவியல்; அடுத்த மூன்று சூத்திரங்களும் சாதனவியல்;இறுதி மூன்று சூத்திரங்களும் பயனியல் எனப்படும்.
முதற் சூத்திரம், கண்ணாற் காணப்பட்ட உலகம் தோன்றி நின்று ஒடுங்குதலைக்கொண்டு கண்ணாற் காணப்படாத கடவுள் உண்டென அனுமானப் பிரமாணத்தால் நிறுவுவது. இந்தச் சூத்திரப் பகுதியில் மீமாஞ்சகர், பெளத்தர், சாங்கியர், பாஞ்சாராத்திரிகள், அநேகேசுரவாதிகள் என்போர் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன2. உலகம் முத்தொழிலுடையதெனவும், உள்பொருளாகிய உலகத்திற்கு கருத்தா ஒருவன் உண்டு எனவும், அக்கருத்தா சங்காரக் கடவுளே எனவும், சங்காரக் கடவுள் ஒருவரேயெனவும் படைத்தலையும் காத்தலையும் மீறி அழித்தல் நடைபெறுகிறதெனவும், அழித்தலைத் தொடர்ந்தே மீளவும் படைத்தலும் காத்தலும் நிகழ்கின்றனதெனவும் காட்டப்படுகின்றன. மும்மூர்த்திகளிற் சிவனுக்கு ஏற்றந் தருவதற்காக இவ்வாறு வாதிக்கப்படுகிறது. உலகம் உள்பொருள் என்ற வாதம் இராமானுசரையும் மாதவரையும் நினைவூட்டுகிறது.
இரண்டாஞ் சூத்திரம் சிவன் உலகத்தைப் படைக்குங் காலத்து எவ்வாறு நின்று படைப்பன் என்ற ஆசங்கைக்கு விடைகூறும் முறையில் உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நின்று தனது சக்தியால் அவ்வுயிர்களின் கன்மங்கட்கேற்பப் படைத்தலைச் செய்வன் எனக் கூறி அவ்வுலகப் படைப்பிற்கு முதற்காரனாமாகிய மாயையும் ஏனைக் காரணங்களாகிய ஆணவமலமும், கன்மமுந்திரோ தானசக்தியும் மாயாகாரியமுமாகிய ஐவகைப்பாசமும் உண்டென நிறுவுவது. இந்தச் சூத்திரப்பகுதியில் பரிணாமவாதிகள், கிரிடாப்பிரம வாதிகள், மீமாம்சகர், நையாயிகர், ஏகான்மவாதிகள், பாஞ்சராத்திரிகள் என்போர் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன. உலகத்தைப் படைப்பதற்கு மாயை காரணமாகக் கன்மங்கள் வேண்டப்படுவதால் முதல்வன் பெருமைக்கு இழுக்கில்லையெனவும் சூக்குமதேகம், தூலதேகம் என்பன வெவ்வேறு இயல்பின எனவும், வினைப்பயனை உயிர்ககளுக்குக் கூட்டுவிக்கும் சக்திக்கும் சிவனுக்குமுள்ள இயைபு சூரிய ஒளிக்கும் சூரியனுக்கும் உள்ள இயைபு போல்வது எனவும் உயிர்களும் சிவமும் பேதமாயும் அபேதமாயும் நிற்பனவெனவும் காட்டப்படுகின்றன. சிவனும் ஆன்மாவும் இவ்வாறு நிற்றலே அத்துவிதமெனவும், அத்துவிதமென்பது இருபொருள்களுள் அநந்நியம் எனவும் கூறப்படுகின்றன. சங்கரர் பயன்படுத்திய அத்து விதம் என்ற சொல்லைத் தாமும் பயன்படுத்தும் மெய்கண்டார், அச்சொல்லுக்குப் புதுப்பொருள் கொள்கிறார். காஷ்மீர் சைவத்தில் அத்துவிதம் என்ற சொல், சங்கரர் பயன்படுத்திய பொருளிலேயே வழங்கப்படுகிறது1. இச்சூத்திரப்பகுதியிற் கர்மம், மறுபிறப்பு என்பன ஆராயப்படுகின்றன. இந்தியத் தத்துவமுறைகள் யாவற்றிலும் இவை முக்கிய இடம் பெறுகின்றன. கர்மத்தின்படியே மறுபிறப்பு அமையும் என்பதில் அவற்றுட் பெரும்பாலானவற்றுக்கிடையே ஒற்றுமையுண்டு. பிறவித்துன்பத்தை ஒழிக்கும் வழி, பிறவி ஒழித்தபின் அடையும் நிலை என்பவற்றிலேயே அவற்றிடை வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மூன்றாம் சூத்திரம் உலகம் தோன்றி நின்று ஒடுங்குதல் உயிரின் பொருட்டெனக் கூறும் முறையில், உயிர் உள்பொருளென நிறுவுவது. இச் சூத்திரப்பகுதியிற் சூனியான்மவாதிகள், தேகான்ம வாதிகள், இந்திரியான்மவாதிகள், சூக்கும தேகான்மவாதிகள், பிராணான்மவாதிகள், விஞ்ஞானம்மவாதிகள், சமூகான்மவாதிகள் என்போர் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன. சூனியத்தை அறிதல், உடம்பைத் தனதென வழங்கல், இந்திரியங்கள் ஒன்றறிந்ததை மற்றொன்றறியாமை, சொப்பனத்திற் கண்டவற்றை நனவில் மயங்கி அறிதல், சுழுத்தி துரியங்களில் உலகவிடயங்களிடமாக வரும் இன்ப துன்ப அனுபவம் இல்லாமை, உணர்த்த உணர்தல், கலைமுதற் பிருதிவியீறாகிய தத்துவங்கள் யாவுங் கூடிய சமுதாயம் உடம்பெனப்படுவதேயன்றி உயிரெனப்படாமை இவை உடம்பனுள் உயிர் என்று ஒன்று உண்டு என்பதற்கு ஏதுவாகக் கொள்ளப்படுகின்றன.
நான்காம் சூத்திரம், முன்னரே உண்டென்று நிறுவப்பட்ட உயிருக்கு இலக்கணம் கூறுவது. இச் சூத்திரப் பகுதியில் அந்தக்கரணான்ம வாதிகள் கண்டிக்கப்படுகின்றனர். உயிர் சகசமலத்தோடு மாத்திரம் நிற்குங் கேவலாவத்தையில் உணர்வு நிகழாமையால், மாயையின் காரியங்களாயுள்ள அந்தக்கரணம் முதலாகிய கருவிகளோடு கட்டப்பட்டு அறிவு இச்சை செயல்களைப் பெறுதிறதெனவும், அங்ஙனங் கருவிகளோடு கூடிப் பிரிதலால் உயிர் ஐந்தவத்தைப் படுகிறதெனவும் காட்டப்படுகின்றன.
ஐந்தாம் சூத்திரம், உயிரால் இந்திரியம் விடங்களை அறிவது போலச் சிவனால் உயிர் விடயங்களை அறியும் என்று கூறும்முறையில், பாச இலக்கணம் கூறுவது. இச்சூத்திரப் பகுதியிற் சாங்கியர், ஈசுர அவிகார வாதிகள் என்போர் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன. கன்மத்திற்கு ஏற்றவாறு உயிர்கட்கு அறிவை விளக்கி இச்சைக் கிரியைகளிலே தூண்டுவதே திரோதான சக்தியின் இயல்பு எனவும், கன்மத்திற்கேற்ற விபரீதவுணர்வைப் பயத்தலே ஆணவமலத்தின் இயல்பு எனவும், விருப்பு வெறுப்புக்கள் காரணமாக உயிர்கள் செய்யுந் தொழிலால் விளைந்து இன்ப துன்பப் பயன்களை நுகர்வித்துக் கழிவதாயிருத்தலே மலத்தின் இயல்பு எனவும் ஆணவ இருளிற் கிடக்கும் ஆன்மாவுக்கு மாயை ஒரு விளக்குப் போலச் சிறிது அறிவு விளக்கத்திற்குத் துணை செய்வதே அதனியல்பு எனவும் பாச இலக்கணம் விரித்துக் கூறப்படுகிறது. ஆணவம் என்ற சகசமலம் உண்டு என்னுங் கருத்துச் சைவ சித்தாந்தத்திற்கே சிறப்பாக உரியது. ஏனைய இந்தியத் தத்துவ முறைகள் பலவற்றில், அவத்தை அல்லது அஞ்ஞானம் அல்லது அவிவேகம் என்பது காணப்படுகிறது. சைவசித்தாந்திகள் ஆணவமலம் உண்டு என்பதற்கு கூறும் ஏதுக்கள், அத்துவித வேதாந்திகள் பாவரூப அஞ்ஞானம் உண்டு என்பதற்குக் கூறும் காரணங்களை ஒத்தன1. உலகம் ஒடுங்கி மீளத் தோன்றுவதற்கு ஆணவமலம் நீங்கானமயே காரணமாகச் சைவசித்தாந்தத்திற் கூறப்படுகிறது.
பதி பசு பாசங்களின் உண்மையை ஆணவம் என்பது உயிர்உணரவொட்டாதபடிக்கு உயிரின் அறிவை மறைத்து நிற்குங் காரணத்தால் இருள் மலம் எனப்படும்போது, அங்கு அவித்தைக்குரிய இயல்பு சுட்டப்படுகிறது. சைவசித்தாந்தக் கருத்துப்படி, ஆணவ மலத்தின் செயலால், உயிருக்கு விளையும் காரியம் அவித்தை. அவித்தை தோன்றி மறையும் இயல்பினது. ஆணவமலம் அநாதியானது. ஆணவம் வலி கெடுமேயன்றி அற்றுப்போகாது. ஆணவ மலமும் இராசத குணமும் ஓரளவு தொடர்புள்ளன. இரண்டிலும் முனைப்பும் செருக்கும்காணப்படுகின்றன. ஆணவ மலத்தின் செயலால், உயிருக்கு விளையும் காரியமே இராசத குணம் எனலாம். மெய்கண்டார் அருணந்தி சிவாச்சாரியரை ஆட்கொண்டபோது, முனைப்போடும் செருக்கோடும் நின்ற அருணந்தி சிவாச்சாரியாரே ஆணவ சொரூபம் என்று சுட்டியது., இவற்றுக்கிடையிலான காரண காரியத் தொடர்பு பற்றியேயாம். எனவே, சைவசித்தாந்த நெறி இராசத குணத்தைக் கண்டிக்கின்றதெனலாம்.
ஆறாம் சூத்திரம், பதி சித்தும் சத்துமாகும் எனப் பதி இலக்கணம் கூறுவது. இச் சூத்திரப்பகுதியில் நையாயிகரும் சாங்தியரும் மாயாவாதிகளும் கண்டிக்கப்படுகின்றனர். அளவைகளால் அறியப்படும் பொருள் அசத்தெனவும், சிவன் அவனருளால் அறியப்படுபவன் எனவும் காட்டப்படுகின்றன.
சாதனையியல், ஏழாம் சூத்திரம் பதியை அடைதற்குரிமையுடைய ஆன்மாவின் இயல்பு கூறுவது. இச்சூத்திரப் பகுதியில் சிவாத்துவிதவாதிகள் சிவசங்கிராந்தவாதிகள் என்போர் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன. சத்து அசத்தைச் சுட்டறிவால் அறியாது எனவும் அசத்துச் சத்தை அறியாதெனவும் ஒன்றினையொன்று அறியாத சத்து அசத்து இரண்டினையும் அறிவது சதசத்தாகிய உயிரெனவும் நிறுவப்படுகிறது. எட்டாம் சூத்திரம் பதிப்பொருளை அடைவதற்குரிமையுடைய ஆன்மா செய்யவேண்டிய சாதனமும் அது வரும்வழியும் அதனாற் பெறட்படும் பயனும் இவையெனக் கூறுவது. சிவஞானபோதத்தில் இதுவே மிக முக்கியமான சூத்திரம் எனலாம். இச்சூத்திரத்திற்கு முன்புள்ள ஏழு சூத்திரங்களும் இச்சூத்திரப்பொருள் கூறப்படுவதற்கேற்ற சூழலை அமைத்தனவெனவும் பின்புள்ள நான்கு சூத்திரங்களும் இச்சூத்திரப்பொருளில் ஒரு பகுதியை விரித்துரைப்பனவெனவும் கூறலாம். இச்சூத்திரம் ”பதிஞானமே சிறந்த சாதனம், இது சரியை கிரியை யோகங்களின் முதிர்ச்சியினாலே சாத்தியமாகும்” என்கிறது. சரியாமார்க்கம் முதலிய நான்கு மார்க்கங்களின் பயன்களாகச் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற நான்குவகை முத்திகள் கூறப்படுகின்றன. ஞானமார்க்கத்தில் நிற்பவரே பரமுத்தியாகிய சாயுச்சிய முத்தியை அடைவர். ஏனைய முத்திகள் அபரமுத்திகள் ஆகும். சங்கரர் ஞானமார்க்கத்திற்குச் சிறப்பளித்தது இங்கு ஒப்பிடத்தக்கது. இறையருளையும் பக்தி மார்க்கத்தையும் சிறப்பித்துக் கூறும் தத்துவங்களிலும் பக்திக்கு அடிப்படைத்தேவையாக உண்மையறிவு கொள்ளப்படுகிறது. இச்சூத்திரப்பகுதியில் சாங்கியர், நையாயிகர், சிவசங்கிராந்த வாதிகள், பேதவாத சைவர் என்போர் மறுக்கப்படுகின்றனர். புண்ணியங்கள் பதிபுண்ணியம், பசு புண்ணியம் என வகுக்கப்படுதின்றன. பதி புண்ணியமே இறைவனை அடையும் வழி எனப்படுகிறது. பசு புண்ணியத்தால் விண்னுலகெய்தியவர் திரும்பவும் பூவுலகத்திற் பிறந்து பரிபக்குவத்திற்கு ஏற்பப் பதி புண்ணியங்களைச் செய்தே முத்தியெய்துவரெனப்படுகிறது. சமயங்கள் யாவும் இறைவனை அடைவதற்குச் சோபான முறையிலமைந்த வழிகளென்பதும், சைவ சித்தாந்தமே அவற்றுள் மிக உயர்ந்த படி என்பதும் கூறப்படுகின்றது. ஒன்பதாம் சூத்திரம் பதி ஞானத்தில் உறைந்து நிற்பதற்கு உபாயங் கூறுவது இச்சூத்திரப் பகுதியிற் சிவசமவாத சைவர் மறுக்கப் படுகின்றனர். பிரபஞ்சத்தை அசத்தென்று உணர்ந்து அதிற் பற்று நீங்கி, பதியிடத்தே பற்று வைத்து ஞானயோக சாதனை செய்வதே பதிஞானத்தை அடையும் வழியெனப்படுகின்றது. பதிஞானத்தைப் பெற்ற பின்பும் பஞ்சாட்சரத்தைச் செபித்து வருதல் அவசியமெனப்படுகிறது.
பயனியலில், பத்தாம் சூத்திரம் ஞானசாதனத்தால் ஏற்படும் பாசநீக்கத்தை எடுத்து விளக்குவது. இச்சூத்திரப்பகுதியில் சிவசமவாத சைவர், சுத்த சைவர் என்போர் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன, பதினோராம் சூத்திரம், பாசம் நீங்கிய பின்பும் பாசப்பற்று வாசனாமல நீக்கத்திற்காக இடையறாது இறைவன் திருவடியைப் பற்ற வேண்டும் என்கிறது. பன்னிரண்டாம் சூத்திரம் சீவன் முத்தரியல்பு கூறுவது. சீவன் முத்தர் முதலாவதாகச் செய்ய வேண்டுவது வாசனாமலத்தினைக் களைதல் எனவும், இரண்டாவதாகச் செய்ய வேண்டுவது களைந்த மலங்கள் தம்மை மீளப்பற்றாத வண்ணம் சிவனடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்து வாழ்தல் எனவும், மூன்றாவதாகச் செய்ய வேண்டியது சிவனடியார் இணக்கம் நிலைபெறுதற் பொருட்டுத் திருவேடத்தையும் சிவாலயத்தையும் சிவனெனவே கண்டு வழிபடுதல் எனவுங் கூறுகிறநு. இவ்வாறு செய்தலின் அவசியம் வற்புறுத்தப்படுகிறது.
சைவசித்தாந்தத்தில், ஆன்மாக்கள் ஆணவமலம் மட்டுமேயுள்ள விஞ்ஞானகலரெனவும் ஆணவமலமும் கன்மமுமேயுள்ள பிரளயாகலரெனவும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுமுள்ள சகலரெனவும் வகுக்கப்படுகின்றன. பிறவியெடுத்துள்ள மனிதரும் அவருக்குக் கீழான உயிரினங்களும் சகலரே. சிவன் அருளின்றி, எவ்வகையான ஆன்மாவும் அவனை அடையமுடியாது. சிவன் விஞ்ஞானகலரின் அறிவிற் பொருந்தி நின்று, ஆணவமல வவியையடக்தி, அவரை ஆட்கொள்வன் ‘பிரளயாகலபின் முன் தன் வடிவோடு வெளிப்பட்டு நின்று அவர் இருமலங்களையும் செயலறச் செய்து அவரை ஆட்கொள்வன் சகலரை ஆட்கொள்ளும்போது, சிவன் குரு வடிவில் வந்து ஆட்கெள்வன்‘ என்று கூறப்படுகிறது.
சிவஞானத்தை உணர்த்த வல்லவன் சிவனே என்று கொள்வதனால், சகலர் ஆட்கொள்ளப்படும்போது, மனிதனாகிய குருவில் இறைவனே அதிட்டித்து நிற்கிறான் எனப்படுகிறது. குரு சகலருக்குத் தீட்சை செய்து ஆட்கொள்ளுகிறார், தீட்சைகளின் பட்டியல் தரப்படுகிறது, வெவ்வேறு தரத்தினருக்கு வெவ்வேறு தீட்சை விதிக்கப்படுகிறது. உலகிலேயே சிறந்து வாழ விரும்புபவர்கள் உபாய மார்க்கத்தினராகவும்! முத்தியடைய விரும்புபவர்கள் உண்மை மார்க்கத்தினராகவும் வகுக்கப்படுகிறார்கள். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன இரு மார்க்கத்தினருக்கும் வேறு வேறாக விதிக்கப்படுகின்றன. குரு பக்குவமடைந்த ஆன்மாக்களையே ஆட்கொள்ளுவர்.
கன்மம் பிறவிக்கு வித்தாதலால், நல்வினை, தீவினை இரண்டுமே ஒதுக்கப்பட வேண்டியனவாகின்றன. அவ்விதமாக நல்வினை தீவினை இரண்டும் சமமாகிற நிலை இருவினையொப்பு எனப்படுகிறது. இருவினையொப்பு ஏற்படும்போது மலபரிபாகமும் சத்திநிபாதமும் ஏற்படுகின்றன. இறைவனுடைய திருவருட்சக்தி ஆன்மாவிற் பதியப் பதிய, மலம் வரி கெடுகிறது. மலம் வலிகெட, ஆன்மா திருவருட்சக்தியினாலே தனக்கும் சிவனுக்குமுள்ள உ.றவை உணர்ந்து, சிவனுடன் இரண்டறக் கலக்கிறது. கன்மம் சங்கிலித் தொடர் போன்றது. அதை அறுந்தாலே ஆன்மாவுக்கு உய்தியுண்டாகும். கன்மம், ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என மூன்று வகைப்படுகிறது. பிராரத்தம் முற்பிறவிகளிற் செய்யப்பட்டு இப்பொழுது பயன் தரும் கன்மம். சஞ்சிதம், முற்பிறவிகளிற் செய்யப்பட்டனவாய் அனுபவித்தற்குறிய பக்குவமுறாமல் எஞ்சியிருக்கும் கன்மம். ஆகாமியம் இப்பிறவியிற் செய்யப்படும் புதிய கன்மம்.
பிராரத்த வினைப் பயனாகிய இன்பதுன்பங்கள், இப்பிறவிக் கண்ணே எடுத்த உ.டல் நீங்கும் எல்லைக்குள்ளாக அனுபவத்துக்கு வந்தே கழியும். ஆனால், மெய்ஞானிகளுக்கு அவை உயிரைத் தாக்காமல் உடலைச் சார்ந்து நிகழ்ந்த கழிவதாகும். திருநாவுக்கரசு நாயனாருக்குச் சமணர் நஞ்சூட்டியமை, நீரற்றறையிலிட்டமை, யானையை ஏவிக் கொல்ல முயன்றமை, போன்ற செயல்களால் நிகழ்ந்த பிராரத்த வினைப்பயன்கள் அனுபவத்துக்கு வந்து உடலோடு கழிந்தமையை உதாரணமாகக் கூறலாம். சஞ்சிதவினை நிர்வாண தீட்சையின் கண்ணே குருவின் கிரியையினாலே ஒழிக்கப்பட்டுத் தீரும். இப்பிறவியில் ஈட்டப்படும் புதிய வினையாகிய ஆகாமியம் உண்டாகாதபடி ஒழுகுவதனாலேயே, இனிவரும் பிறவி ஏற்படாதொழியும். எப்படியெனில், பிராரத்தத்தை ஆன்மா அனுபவிக்கும் போது அதிலே விருப்பு வெறுப்பற்றதாய், ‘யான் எனது, என்றெழுந்ததன் செயல் முனைப்பு அற்று எல்லாம் இறைவன் செயல் என்ற நோக்கோடு இறைவனது திருவருட்டுணையைப் பற்றி நடந்தால் ஆகாமியவினை உண்டாகாது என்பது.
சமணம், பெளத்தம் என்பவற்றோடு சைவசித்தாந்தத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சைவ சித்தாந்தம் உலக வாழ்வில் கூடியளவு நம்பிக்கை உடையதாகக் காணப்படுகிறது, இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றும் அவன் கருணைக்கடல் என்றும், அவன் உயிர்களுக்கு உய்யும் வழி வகுக்கிறான் என்றும் சைவ சித்தாந்தம் கூறும். உலகில் பிரத்தியட்சமாகக் காணக்கூடிய தோற்றம், நிலை பேறு, ஒடுக்கம் யாவும் இறைவன் திருவிளையாடல்கள் ஆகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றோடு அருளலும் மறைத்தலும் சேரவரும். இவை இறைவனுக்குரிய ஐந்தொழிலாகக் கூறப்படுகின்றன. ஆன்மாக்களின் மலநீக்கத்தையும் பேரின்பப் பேற்றையும் குறிக்கோளாகக் கொண்டே, இறைவன் இவ்வைந்து தொழில்களையும் செய்கிறான். இறைவன் ஆன்மாக்களுக்கு மலமாகிய நோயை நீக்கிப் பேரின்பமாகிய சுகத்தை அடைவித்தற் பொருட்டு, தன் கருணையினால் பிறவித் துன்பமாகிய மருந்தைக் கொடுத்து உ.தவி செய்தலால் வைத்தியன் எனப்படுகிறான். உலகவாழ்வில் ஏற்படுந் துன்பத்தையிட்டு மனங்கலங்காமல் வாழ இத்தகைய தத்துவ நோக்கு உதவுகிறதெனலாம்.
உலகில் வெறுப்பு உடம்பில் வெறுப்பு, வாழ்க்கையில் வெறுப்பு என்பன குறைவதற்கும் சைவ சித்தாந்தம் வழி வகுக்கிறது. இறைவன் மாயையிலிருந்து தனுகரணபுவனபோகங்களை உண்டாக்குகிறான் எனப்படுகிறது. ஆன்மாவைப் பிடித்துள்ள ஆணவமலம் வலி குறைவதற்கும், ஆன்மாவுக்கு இறைவனில் ஈடுபாடு மிகுவதற்கும் மாயை கருவியாகப் பயன்படுகிறது. எனவே சைவ சித்தாந்தத்தில் உலக வாழ்க்கையை முற்றாக வெறுக்கும் தன்மையில்லை. முத்தியே ஆன்மாவின் இலட்சியம் என்று கொள்ளும் சைவ சித்தாந்தம், உலக வாழ்க்கை முத்திக்கு தகுதி பெற ஆன்மா தன்னைத் ஆயத்தப்படுத்திக் கொள்ளக் கிடைக்கும் சந்தர்ப்பம் என்று கொள்கிறது. மாயையைச் சுத்த மாயை, அசுத்தமாயை என்று வகுக்கும் சைவசித்தாந்தம் சுத்தமாயையை ஆன்மாவின் அறிவு விளங்க உதவுவதாகக் கூறுகிறது.
அறநெறிக் காலத்தில் நியதி அல்லது விதிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சைவசித்தாந்தத்திற் கொடுபடவில்லை. நியதியை அளவிறந்து வற்புறுத்திய சமயம் ஆசீவகமாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இச்சமயம் ஒரு காலத்தில் இடம் பெற்ற போதிலும் தமிழ்நட்டிலேயே கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் நிலவியதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. ‘இல்லது வாராது உள்ளது போகாது, ‘ஊசிமுளையில் தவம் செய்தாலும் உள்ளது தான் கிடைக்கும்‘, ‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும், முதலிய பழமொழிகள் ஆசீவகம் முதலிய சமயங்களின் செல்வாக்காலே தமிழிலே தோன்றியிருக்கலாம் என்பர்1.
அறநூல்களிலே திருக்குறள் சிறந்து விளங்குவது போல, சித்தாந்த சாத்திரங்களிற் சிவஞானபோதம் சிறந்து விளங்குகின்றது. திருக்குறளுக்குப் பின்னெழுந்த அறநூல்கள் யாவற்றிற்கும் திருக்குறள் வழிகாட்டியாகவும் அடிப்படையாகவும் அமைந்தது போலச் சிவஞானபோதத்திற்குப் பின்னெழுந்த சித்தாந்த நூல்கள் யாவற்றுக்கும் சிவஞானபோதம் வழிகாட்டியாகவும் அடிப்படையாகவும் அமைந்தது. மெய்கண்டாரது முதன் மாணவராகிய அருணந்தி சிவாச்சாரியார் சிவஞானபோதத்தின் வழிநூலாகச் சிவஞானசித்தியாரை இயற்றினார். சைவசித்தாந்த நோக்கிற் புறச்சமயங்களை அளவிடும் பரபக்கமும் சைவசித்தாந்தப் பொருளை விளக்கும் சுபக்கமும் இந்நூலின் இரு பாகங்கள் ஆகும். பரபக்கத்தில் உலகாயதமும் (புத்தசமயப் பிரிவுகள் நான்கான) செளத்திராந்திக மதம், யோகசாரன் மதம், மாத்தியமிகள் மதம், வைபாடிகன் மதம் என்பனவும். (ஏகான்மவாதப் பிகிவுகளில் இரண்டான) பாற்கரியன் மதம், சத்தப்பிரமவாதி மதம் என்பனவும், நிகண்டவாதி மதமும், ஆசீவகன் மதமும் பட்டாச்சாரியன் மதமும் மிரபாகரன் மதமும் பாஞ்சராத்திரி மதமும் மறுக்கப்படுகின்றன. சிவாகமப் பிரமாணங்களை ஏற்றுக் கொள்ளாதவையான புறச்சமயங்களும் புறபுறச்சமயங்களுமே இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. வைதிக நெறியை ஏற்காத சமயங்களைப் புறபுறமெனவும் வைதிக நெறியை ஏற்றுச் சைவாகம நெறியை ஏற்காத சமயங்களைப் புறமெனவும் கொண்டுள்ளார். சிவஞானசித்தியார் சுபக்கம், சிவஞானபோதத்திலுள்ள ஒவ்வொரு சூத்திரப் பொருளையும் ஒவ்வொரு அதிகாரத்தில் அமைத்து விளக்குகின்றது, அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய இருபா இருபஃது என்னும் ஆணவத்தின் எட்டு இயல்புகள், மாயையின் ஏழு இயல்புகள், கன்மத்தின் ஆறு இயல்புகள் என்பவற்றை விளக்குகிறது.
மெய்கண்ட தேவரது மற்றொரு மாணவராகிய மனவாசகங்கடந்தார். இயற்றிய உண்மை விளக்கம் முப்பத்தாறு தத்துவங்களையும் ஆணவம் இருவினை என்பவற்றிவியல்பையும் ஆன்மாவினியல்பைபும் கடவுளினியல்பையும் ஐந்தெழுத்தின் உண்மையையும் கூறுகிறது.
சைவசித்தாந்த சாத்திரங்களில் ஏனையவை எட்டையும் இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார். இவை சித்தாந்த அட்டகம் எனவும் வழங்கப்படும். சிவஞானபோதத்திற்குச் சார்பு நூலாக இயற்றப்பட்டது சிவப்பிரகாசமாகும். அதன் பாயிரத்தில், தீட்சை வகைகள் கூறப்படுகின்றன. இந்நூலிற் பொதுவென்றும் சிறப்பென்றும் இரு பகுதிகள் காணப்படுகின்றன. சைவசித்தாந்த முத்தியும் பல்வேறு சமயங்கள் கூறும் முத்திகளும் ஓப்பிட்டு ஆராயப்பட்டுள்ளன. இந்நூல் சைவசித்தாந்த அத்துவித நிலையைத் தெளிவாக விளக்குகிறதென்பர். திருவருட்பயன் பதிமுதுநிலை, உயிரவைநிலை, இருண்மலநிலை, அருளதுநிலை, அருஞருநிலை, அறியுநெறி, உயிர்விளக்கம், இன்புறுநிலை, ஐந்தெழுத்தருணிநிலை, அணைந்தோர் தன்மை என்பவற்றை ஒவ்வோர் அதிகாரத்தால் விளக்குவது. காண்பவன், காட்சி, காட்சிப் பொருள் என்வற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டையறியாத மனநிலையே முத்தியென வினாவெண்பா கூறும். பஞ்சாட்சரம் முதலிய சிவமந்திரங்களின் முக்கியத்துவத்தைக் கொடிக்கவி விளம்பும். போற்றிப் பஃறொடை உயிர் தொழிற்படும் முறைமையை உணர்த்துவது. நெஞ்கவிடுதூது சித்தாந்தப் பொருள் முடிபுகளை விளக்குவது. உண்மை நெறி விளக்கம் என்பது தத்துவரூபம், தத்துவக்காட்சி, தத்துவசத்தி, ஆன்மவடிவம், ஆன்மதபிசனம், சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் தசகாரியங்களை முத்திக்கு வழியாகக் காட்டுகிறது. அகச் சமயங்களை மறுத்துச் சைவசித்தாந்தத்தை நிலைநிறுத்த எழுந்தது சங்கற்பநிராகரணம். இந்நூலில் மாயாவாதம், ஐக்கியவாதம், ஈசுவரவிகாரவாதம், நிமித்த காரண பரிணாமவாதம், சைவவாதம் என்ற சமயங்கள் மறுக்கப்பட்டுச் சிவப்பிரகாசங் கற்று உண்மை உணரலாமென்று கூறப்படுகிறது.
சைவசித்தாந்த சாத்திரங்களில் ஆகமக் கருத்துகள் காணப்படுகின்றன என்பதையும் சைவசித்தாந்தத்திற்கு முன்பு தோன்றிய இந்தியத் தத்துவமுறைகள் யாவும் ஆராயப்படுகின்றன என்தையும் உடன்படுவதனால் சைவசித்தாந்தத் தத்துவமுறை ஆக்கத்திற் சமய குரவர் வரலாறு பெறும் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. சமய குரவர் நால்வரும் பக்தி மார்க்கத்தில் நின்று இறைவனைப் பாடிய போதிலும், அவருள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படியில் நின்று இறைவனை ஏத்தினராகத் தெரிகின்றது.
சைவசித்தாந்தங் கூறும் நால்நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன முறையே தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவும் படும். சரியை என்பது சமய தீட்சை பெற்று நாள்தோறும் சந்தியாவந்தனமும் பஞ்சாட்சர செபமும் உடையராய், இறைவனது விக்கிரக வடிவங்களைப் பொருளென்று கொண்டு திருப்பணி முதலியன செய்து ஆகமத்தில் விதித்தவாறு வழிபடுவது. இது கோவில் வழிபாட்டையும் இறைவனுக்குச் செய்யும் திருத்தொண்டுகளையும் உள்ளடக்கும். உழவாரப்பணி முதலியன செய்து திரிந்த அப்பா சுவாமிகளைத் தாசமார்க்கப்பணிகளை விடாது கைக்கொண்டு ஒழுகிக் காட்டியவர் எனக் குறிப்பிடல் மிகவும் பொருந்தும். சரியை நிலையில் நின்று முதிர்ச்சி பெற்றபின் நிகழும் பக்குவ விசேடத்தால் நுண்ணுணர்வு பெற்றுச் சூக்கும வடிவமே பொருள், சூக்கும வடிவம் அதனை வழிபடுதற்கமைந்த திருமேனியென்று கொண்டுவிசேட தீட்சை பெற்றுப் புறத் தொழிலாலும் அகத் தொழிலாலும் விதித்தவாறு நாடோறும் பூசை செய்து வழிபடுவது கிரியாமார்க்கம் என விளக்கப்படுகிறது. மந்திரம், பூக்கள் முதலியன கொண்டு ஆன்மார்த்தமாகப் பூசை செய்தலைக் கிரியை உள்ளடக்குகிறது. அந்தணராய் பிறந்து வளர்ந்த சம்பந்தர் கிரியா மார்க்க நெறி முறையை விடாது நின்றொழுகி உலகிற்கு வழிகாட்டினார். பொற்றாளம், முத்துப் பல்லக்கு, முதலியவற்றைத் தந்தை மகனுக்கு வழங்குமாறு போல வழங்கி, சம்பந்தர் சற்புத்திர மார்க்கத்தில் நிற்பதை இறைவனும், உணாத்தினர்.
யோகம் என்பது கிரியை நிலையில் நின்று முதிர்ச்சிபெற்ற பின் நிகழும் பக்குவ விசேடத்தால் அதிநுட்ப உணர்வு பெற்ற சிவபிரானது அதிசூக்கும வடிவமே பொருள். தூலமும் சூக்குமமும் அதனை வழிபடுவதற்கமைந்த திருமேனிகள் என்று கொண்டு அகத் தொழில் மாத்திரையால் விதித்தவாறு அவ்விறைவனை வழிபடுவது எனப்படும். மனத்தையும் ஐம்பொறிகளையும் அடக்கிப் புறவிடயங்களிற் செல்லாதபடி நிட்டையிலிருப்பதும் தியான விடயத்தில் உள்முகப்படுத்தி இறைவனை உள்ளத்துள் வணங்குவதும் இச்சகமார்க்கத்துக்குரியனவாம். இறைவனைத் தோழனாக பாவித்து ஒழுகிய சுந்தரர் யோகநிலையில் நின்றவராகக் கொள்ளப்படுகிறார். சங்கிலி யாரைச் சுந்தரர் மணந்ததனாற் பரவையாருக்கு ஏற்பட்ட ஊடலைத் தீர்க்கச் சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதும் சுந்தரர் தேவாரங்களிற் பரிகாச வார்த்தைகள் மிகுந்திருப்பதும் அவர் இறைவனைத் தோழனாகப் பாவித்து ஒழுகியதற்குச் சான்றுகள் ஆகின்றன. ஞானம் என்பது மூன்று மார்க்கங்களிலும் முறையே நின்று முதிர்ச்சி பெற்ற பின்பு நிகழும் பக்குவ விசேடத்தால் உணர்வு பூரண விளக்கம் பெற்று, அகண்டாகார நித்த வியாபகச் சச்சிதானந்தப் பிழம்பே இறைவன் சொரூபம், ஏனைத் தூலம் முதலிய மூன்றும் அதனை உணர்த்தற்பொருட்டுக் கொண்ட திருமேனியென அறிந்து புறத்தொழில், அகத்தொழில் இரண்டையுங் கைவிட்டு அறிவுத்தொழிலால் வழிபடுவது எனப்படுகிறது. கடவுளை உணர்வதில் முடியும் அறிவுப்பாதையே சன்மார்க்கமாம். இப்பாதையில் ஆன்மா ஞான குருவால் நிர்வாண தீட்சை செய்யப்பட்டு ஆட்கொள்ளப்படும். திருபெருந்துறையிற் குருந்த மரத்தின் கீழ் இறைவனே ஞான குருவாய் வந்து தீட்சை செய்து மாணிக்கவாசகரை ,ஆட்கொண்ட கதை ஞானமார்க்க விளக்கத்திற்கு ஓர் உதாரணமாகலாம்.
சைவசித்தாந்தத்தில் முப்பத்தாறு தத்துவங்கள் கூறப்படுகின்றன. சாங்கிய யோகத்தில் இருபத்தைந்து தத்துவங்களே கூறப்படுகின்றன. . பாஞ்சராத்திரிகளும் இருபத்துநான்கு தத்துவங்களையே கொள்வதாக சைவர் கூறுகின்றனர். அத்துவித வேதாந்தத்தில் முப்பத்தாறு தத்துவங்கள் கூறப்படுகின்ற போதிலும், அவற்றுட் சில வாயு என்பதன் விகாரங்களாகக் காணப்படுகின்றன. ஆனால், சைவசித்தாந்தத்தில், முப்பத்தாறு தத்துவங்களுக்கும் தனித்துவம் உண்டு. பிற தத்துவ முறைகள் குறிப்பிடாத தத்துவங்கள் சிலவற்றை அறிந்து கூறுவது சைவ சித்தாந்தத்தின் சிறப்பாகக் கணிக்கப்படுகிறது.1
விசய நகர நாயக்கர் காலத்திலும் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்புங் கூட, சைவ சித்தாந்த நூல்கள் பல தோன்றியுள்ளன. ஆனால், அவற்றுட் புதுமையான சிந்தனை வளர்ச்சி காணப்படுகின்றதெனச் சொல்ல முடியாது. சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கிலும் காணப்படுவனவற்றையே, பிற்கால நூல்கள் வெவ்வேறு ஒழுங்கு முறைகளிற் சுருக்கியும் விரித்தும் விளக்கியும் கூறுகின்றன, வேதாந்தத்துக்குப் பாடியம் என்னும் பேருரை எழுந்ததை நோக்கிச் சிவஞானமுனிவர் சிவஞானபோதத்திற்குப் பாடியம் எழுதினார், தமிழிலே தோன்றிய பாடியம் இதுவொன்றேயாதலால், இதற்குத் திராவிடமாபாடியம் என்றும் பெயருண்டு. ‘வடநூற் கடலும் தென்னுாற் கடலும் நிலைகண்டுணர்ந்த‘ சிவஞான முனிவர் தருக்கம், தத்துவம், இலக்கணம், இலக்கியம் என்பவற்றிலே தமக்குள்ள பேரறிவை இந்நூலிற் புலப்படுத்துகிறார். சைவசித்தாந்தத்தின் விரிவான விளக்கம் இந்நுாலிற் காணப்படுதிறதெனலாம். பதினான்காம் நூற்றாண்டில் இறுதியில் எழுந்ததாகக் கருதப்படும் கந்தபுராணம், ஒருவகையில் பல்லவ காலப் பக்தியியக்கத்தின் விளைவு எனலாம். சைவத் தோத்திரப் பாடல்களிற் காணப்படும் புராணக் கதைகள் பல இந்நூலில் இடம் பெறுகின்றன. கம்பராமாயணாத்திற்குப் போட்டியாக எழுந்தது என ஒரு கதையுண்டு. கதையமைப்பு, கதைப்போக்கு என்பவற்றில் இரண்டு நூல்களுக்கும் ஓரளவு கந்தபுராணம் ஒரு வகையிற் சைவ சித்தாந்தத்தின் விளக்கமாகும். கதையிடையிலே சைவ சித்தாந்தக கருத்துக்கள் நிறையக் காணப்படுகின்றன. குமர குருபரருடைய கந்தர்கலி வெண்பாவும் சைவசிந்தாந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறி முருகக்கடவுளைத் துதி செய்வதாக அமைந்துள்ளது.
விசயநகர நாயக்கர் காலத்தில், தமிழிலே தலபுராணங்கன் பல தோன்றின. இஸ்லாமியர் படையெடுப்பினாலே, கோயில்கள் அழியும் நிலை தோன்றியதால், கோயில்களின் பெருமைகளை எடுத்துக்கூறி கோயில்களுக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட வேண்டிய தேவை, அக்காலத்தில் நிலவியது. இறைவனடியார்களின் வரம்பு கடந்த கற்பனையில், தலபுராணக் கதைகள் தோன்றின. விண்ணுலகிலும் மண்ணுலகிலும் கைலாசத்திலும் நடந்த .சம்பவங்கள் பலவற்றைக் கண்டவர்கள் போல, இந்நூாலாசிரியர்கள் பாடிச் சென்றனர். பெரியபுராணத்திலே, சிவன் அருளால் நடக்கும் அற்புதச் சம்பவங்களே பலவாகக் கூறப்படுகின்றன. திருவிளையாடற் புராணத்தில் சிவன் பல வேறு வடிவங்கள் கொண்டு நடத்தும் அற்புதச் செயல்கள் பலவாகக் கூறப்படுகின்றன. கந்தபுராணத்திலோ சிவன், தேவர் முதலியோர் பொருட்டாக நிகழ்த்திய திருவிளையாடல்கள் இடம் பெறுகின்றன. தமிழ்ச் சைவர்களுடைய மனம் எத்தகைய கதைகளை நாடிச் சென்றது என்பதற்கு விடை புராணங்களையும் காலமுறையில் வைத்து நோக்கும்போது புலப்படுகிறது. எனவே விசய நகர நாயக்கர் காலத்திலே தலபுராணங்களுக்கான தேவை ஏற்பட்டபோது, கதைப்பொருளுக்காகப் பிரமன், இந்திரன், திருமால் முதலியோர் பொருட்டாக சிவன் நிகழ்த்திய அருட் செயல்கள் இடம் பெற்றுள்ளன.
சைவசித்தாந்த நூல்கள் பதினான்கில் கடைசியாக எழுந்நவை பதினான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் எழுந்தன. பதினான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தின் பின், தென்னிந்தியாவிலே தமிழ் சைவராட்சி மங்கி மடிந்துவிட்டது. உலக வாழ்விலிருந்து விடுபடும் நெறி தமிழ் சைவருக்குத் தெளிவானதும், உலக வாழ்விற் பெருமை பெறுந் தன்மை அவரை விட்டகன்றது போலத் தெரிகின்றது. இஸ்லாமியா் படையெடுப்பு மட்டும் தமிழ் சைவர் வாழ்வைச் சீர்குலைத்துவிட்டது என்று கூறுவதற்கில்லை. இஸ்லாமியா் படையெடுப்பு பற்றிய குறிப்பு எதுவும் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறவில்லை. இஸ்லாமிய ஆட்சி முடிந்து விசயநகர நாயக்க மன்னர் ஆட்சி ஏற்பட்டபோது கூடத் தமிழ்ப் புலவர்கள் இஸ்லாமியர் படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிடவில்லை. தமிழ்ப் புலவர்களின் உள்ளம் இவ்வுலக உண்மைகளிலிருந்து தூரத்தூர விலகிச் செல்லத் தொடங்கிவிட்டது போலக் காணப்படுகிறது. தமிழ்ச் சமூகம் துயில்கொள்ளத் தொடங்கிவிட்ட தெனலாம்.
இஸ்லாமியர் படையெடுப்பின் தாக்கம் மறைமுகமாகத் தமிழிலக்கியத்தில் இடம்பெறுகிறது. கந்தபுராணம் இஸ்லாமியர் படையெடுப்பின் பின்னே இயற்றப்பட்டது எனப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முதலிய தமிழறிஞர் கருதுவர். அது அவ்வாறாயின் சிவன் அருளினாலே முருகன் தோன்றி அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றியதுபோல, இறைவனே இஸ்லாமிய படையெடுப்பை முறியடித்துத் தம்மைக் காப்பாற்றவேண்டுமென்று அக்கால மக்கள் விரும்பியதை, இந்நுாலின் தோற்றம் சுட்டுகிறதென்று கொள்ள வேண்டும். கந்தபுராணத்தின் காலத்தைப்பற்றி அபிப்பிராயபேதம் காணப்படும்போதிலும் அருணகிரிநாதர், இஸ்லாமியர் ஆட்சி தமிழ் நாட்டில் முடிவடைந்து விசயநகர ஆட்சி ஏற்பட்டபோது வாழ்ந்தவரென்பதிற் கருத்து வேறுபாடில்லை. அருணகிரிநாதர் முருகனைப் பற்றிப் பக்திப் பாடல்கள் பல பாடியுள்ளார். அக்காலச் சூழ்நிலையில் தமிழ்ச் சைவர் முருகப் பெருமானின் வீரச் செயல்களை நினைவு கூர்ந்தனரெனலாம். தமிழ் வைணவர் கண்ணன் பாரதப்போரிலே தருமத்தை நிலை நாட்டுவதற்காகச் செய்த திருவிளையாடல்களை நினைவு கூர்ந்தனரென அருணகிரிநாதரோடு சம காலத்தவராக வாழ்ந்த வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய பாரதத்திலிருந்து கொள்ளலாம். அதிதீவிர சைவப் பற்றுடையோரியக்கமாகக் கன்னடநாட்டிலே வளர்ந்த வீர சைவத்தையும் தமிழ் மக்களிற் சிலர் தழுவத்தொடங்கினர். துறைசைச் சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு வீரசைவர். சமய வணக்கத்தில் ஒரு வீரயுகம் தோன்றியது போலக் காணப்படுகிறது.
ஆனால், உலகியற் பார்வையில், தமிழர் வாழ்விற் தாமசகுணம் ஆட்சி பெறுகிறதெனலாம். தமிழ்ச் சைவப் பெரியாராகிய அருணகிரிநாதர், தாயுமானவர் முதலியோர் பாடல்களை நோக்கும் போது, தத்துவநெறி அவர்கள் வாழ்க்கை பற்றிய நோக்கை எவ்வாறு பாதிக்கிறதெனத் தெரிய வருகிறது. நல்வினை தீவினை என்ற நளைகளைக் கடந்து இருவினையொப்பு ஏற்படும் போது மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிற்கின்றன என்கிறது சைவசித்தாந்தம். இந்நிகழ்ச்சிகளின் பின்னர் ஞானகுருவால் உபதேசம் பெற்று நிட்டைகூடு, ஆன்மா தான் தற்போதச் செயலற்றுத் தியானத்தில் இருக்க வேண்டும் தன்மையினையும் வலியுறுத்துகின்றது சைவசித்தாந்தம். இந்தக் கொள்கை செயலற்ற நிலையை ஒரு இலட்சியமாக உயர்த்தி விடுகிறது. அருணகிரிநாதர் தமக்கு இறைவன் போதித்த நிட்டையுபாயங்களுள் ஒன்று “சும்மா இரு” என்பது என்றுள்ளார். தாயுமானவரின் அவ்விதமான இலட்சியங்களுள் ஒன்று “மனதற்ற நிலை” ஆகும். இது ஞானயோகிகள் ஞான நிட்டை கூடுங்காலையில் தியானத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒரு விடயம் மற்றைய உலகியல் சம்பந்தமான சோம்பலாகிய சும்மா இருத்தலும் மனதற்ற நிலையும் வேறு என்பது மரபான விளக்கம். எனினும் சமய வாழ்வில் அதிகம் முன்னேறாத மிகப் பெரும்பாலோரான பொதுமக்களுக்கு இது சோம்பலைப் போதிப்பதாகவே புலப்பட்டிருக்கும். விசயநகர நாயக்கர் காலத்தினும் ஐரோப்பியர் கால முற்பகுதியலும் செல்வாக்கு மிக்கு விளங்கிய பெரும் புலவர்கள் இவர்கள். இவர்கள் பாடல்கள் பொது மக்களிடையிற் பெருஞ் செல்வாக்குப் பெற்றன. தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனை சென்ற நெறியை, இவர்கள் பாடல்கள் ஓரளவு உணர்த்துதின்றன.
தாயுமானவருடை மனதற்ற நிலை ஈண்டுச் சிறிது விளக்கப்பட வேண்டியது. தாயுமானவர் தம் கால இந்துமதப் பிரிவுகளுட் சமரச நிலைகாண முயன்றவராதலால், மனதற்றநிலை ஏனைய இந்துமதப் பிரிவுகளுக்கும் பொதுவானதென்றே கொள்ளலாம். “பாழான என் மனங்குவிய அருள் செய்” என்று இறைவனை இன்னொரு பாடலில் வேண்டியுளளார் “உள்ளமென்பது ஊக்கமுடைமை” என்பது வாக்கு மனம் என்ற வடசொல்லுக்கு நேரிடையான தமிழ்ப்பதம் உள்ளம். பற்று காணப்படுபோதுதான் ஆர்வம் அல்லது ஊக்கமுடைமை தோன்றுகிறது எனவே, பற்றற்ற நிலைதான் மனதற்ற நிலையாகிறது.
மனதற்ற நிலையை வேண்டுவதற்கான காரணம் தாயுமானவர் பாடலயே காணப்படுகிறது. மனம் எதை விரும்பும் எதை விரும்பாது என்று வரையறை செய்ய முடியாது. கிடையாத அல்லது அடையாத பொருளை அது நாடிக்கொண்டே இருக்கிறது. அந்த நாட்டமெல்லாம், அந்தப் பொருள் கிடைக்கும் வரைதான் நிற்கும். நாடிய பொருள் வரையில், அந்தப் பொருள் கிடைத்ததும், மனம் பேரானந்தம் அடையும் போலத் தோன்றும். ஆனால் அப்படி அந்தப் பொருள் கிடைத்துவிட்டால், பின்னரும் மனம் வேறெதையாவது நாடத் தொடங்கிவிடும். வெவ்வேறு கிளைகளிலே தத்தித்திரியும் குரங்கிற்கு ஞானிகள் மனத்தை உவமிப்பது அதனாலேதான் அந்த உண்மையைத்தான் தாயுமானவர் எடுத்துக் கூறுகிறார்.
பூமி முழுவதிலும் தம் ஆணை செலுத்த உரிமை பெற்றவர், கடல் மீதிலும் தம் ஆணையைச் செலுத்த முயலுவர். குபேரனுக்கு நிகரான செல்வம் படைத்தவரும் இரசவாத வித்தை செய்து செல்வத்தைப் பெருக்குவதிலேயே கண்ணாயிருப்பர். நீண்டகாலம் உலகில் வாழக் கிடைத்தவரும், இன்னுந் தொடர்!ந்து வாழ்வதற்காகக் காயகற்பந் தேடி அலைந்து, அது கிடைக்காவிட்டால் மனம் வருந்துவர். ஆனால், உலக வாழ்க்கை, பசியைத்திய்பதற்காக உண்பதும் உறங்குவதுமாகவே கழிதிறது. எனவே உள்ளது போதும், அவர் வினை இல்லாமற் செய்துவிடு என ஓடுகிறது தாயுமானர் சிந்தனை. ‘போதுமென்னும் மனமே பொன் செயுமருந்து‘ என்ற கொள்கை ஒருவித மன ஆறுதலைக் கொடுக்கவல்லதே பசிபூரணானந்தத்தை தாயுமான அடிகள் திருப்பாடல்கள் பரிபூரணானத்தை விழையும் தாயுமானவர், அளவிலா ஆசையை அறுக்க முயல்வது புரிந்து கொள்ளக்கூடியதே.
ஆனால், தாயுமானவர் உலகப் பற்றில்லாமையைத்தான் நாடுகிறார். பற்றுத் துன்பந் தருமென்பது சமண பெளத்த மதங்களின் அடிப்படைக் கொள்கையாகவும் இந்துசமயத்தில் ஒரு முக்கிய கொள்கையாகவும் இருக்கிறது. பற்றற்றானிடம் மனதற்ற நிலையிலும் பற்று வைத்தால் மட்டும் பற்று இன்பத்தைத் தந்துவிடாது. பக்திப் பாடல்களைச் சிறிது ஊன்றிக் கவனித்தால் அவற்றைப் பாடியவர்கள் துன்பமில்லாதவர்கள் என்று எவ்வகையினும் கூறிவிட முடியாது. பிரிந்திருக்கும் காதலர்களின் வேதனை பக்திப் பாடல்கள் பலவற்றில் காணப்படுகிறது. உலகப் பொருள்களில் பற்று வைப்பவருக்கும் மனதற்ற நிலையை நாடுபவருக்கும் வேறுபாடு, வெவ்வேறு பொருள்களுக்காக ஏங்குவதே போலப்படுகிறது.
‘சும்மா இரு’ என்பதும் ‘பற்றற்ற நிலை’, என்பதும் நெருங்கிய தொடர்புள்ளன. ‘சும்மா இரு’ என்பது மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றுக்கும் உரியதனால், பற்றற்றநிலை சும்மா இரு என்பதன் ஒரு அம்சமாகும். சும்மா இரு என்பது செயலற்ற நிலையையும் சொல்லற்ற நிலையையும் குறிக்குமெனக் கொண்டால், பற்றற்ற நிலையின் காரியமே சும்மா இருத்தலாக முடியும். ‘மனம் போல வாழ்வு’, என்பது ஒரு முதுமொழி. இது ஓரளவு உண்மை என்பதை இன்றைய உளநூலாரும் உறுதி செய்கின்றனர். ‘ஓடும் செம்பொனும் ஒக்க’ நோக்குபவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளை இலட்சிய புருஷர்களாகவும் அவர்கள் கருத்துக்களை இலட்சியங்களாகவும் கருதுவது இந்து சமுதாயம் தமது சொந்த உடலில் வெறுப்பு- சூழவுள்ள உலகில் வெறுப்பு- இளமைத் துடிப்பில் வெறுப்பு- தம்முடைய உள்ளத்தைப் பற்றியே அவநம்பிக்கை இவை முதலாகிய காரணங்களால், உலக வாழ்க்கையை நரகமெனக் கொண்டு அங்கிருந்து வெளியேறிப் பரமுத்தியாகிய சாயுச்சிய முத்தியைப் பெறுவதற்குத் துடிக்கும் ஞானிகளுள் ஒருவராயுள்ளவர் தாயுமானவர். வேண்டாத வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் யமபயம் தடையாக அமைகின்றது. அருணகிரிநாதரிடத்து இந்த நிலையே காணப்படுகிறது. யமனுக்கு எச்சரிக்கை செய்வனவாக அமைந்துள்ளன. அவர் பாடல்களிற் பல.1 ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இதற்கு மரபான விளக்கம் உண்டு. ஞானநிட்டை கைவரப் பெற்ற ஞானிகள் தமது ஆயுள் முடிவிலே முத்தியடையப் பெறுவராதலின், உயிர்களை மரணத்தின் பின்பு மறுபிறவிக்குக் கொண்டு செலுத்தும் யமன் தம்மை அணுகப்பெறார் என்பதனை வவியுறுத்துங் கருத்தில் அப்பாடல்கள் இத்தகைய ஞானிகளுக்கு இவ்வுடலுள்ள வரையிலும் பிராரத்த கன்மப் பயனாகிய இன்பதுன்பங்கள் அனுபவத்துக்கு நேரிடுங் காலங்களில், அவர் அவற்றிலே மனம் ஈடுபட்டு அவற்றை ஏற்கமாட்டார். அவை அவருயிரைத் தாங்குதலின்றி உடலளவிலே எதிர்பட்டுக் கழியும் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை.
ஆனால் உலகியல் நோக்கில் யமபயமே அவரை அவ்வாறு சொல்லச் செய்கிறது போலத் தெரியவருகிறது. இத்தகைய நோக்கோடு வாழ்பவர்களுக்கு இவ்வுலக இன்பம் எதுவும் கிடைக்க முடியாது. கிடைத்தாலும் இன்பமும் துன்பமாகத் தெரியும்படி இவர்கள் தங்கள் மனங்களைப் பக்குவப்படுத்தி வைத்திருப்பார்கள். இந்த இயல்பை உணர்ந்ததனாலேதான் பாரதி ‘துன்பமே இயற்கையெனுஞ் சொல்லை மறந்திடுவோம், இன்பமே வேண்டி நிற்போம், யாவுமவள்தருவாள்’ என்று பாடினார்.
வாழ்க்கை நிலையாமை, வாழ்க்கை வெறுப்பு ஆகியவற்றை இந்தியச் சமயங்கள் வற்புறுத்துமளவு, வேறு முக்கிய சமயங்களில் அவை வற்புறுத்தப்படவில்லை. உலகியல் வாழ்வு என்ற கோணத்தில் நின்று பார்க்கும்போது, இந்தியச் சமுதாயம், வறுமை நோய், பிணி ஆகியன மிஞ்சிப் பிறரால் எள்ளப்படத்தக்க அளவுக்கு இருப்பதற்கு அடிப்படைக் காரணங்கள் உலகியற் காரியங்களிற் சம்பந்தப்பட்ட ”மனதற்ற நிலையாக” அல்லது ”சும்மா இருத்தலாக” இருக்கக்கூடு மென்று மேனாட்டறிஞர் சிலர் கருதுவர். மனமிருந்தாற்றான் முயற்சி தோன்றும், முயற்சி தோன்றினாற்றான் முன்னேற்றம் நிகழும், முயற்சியுள்ள சமுதாயந்தான் உயிர்த்துடிப்புடையதாக விளங்க முடியும் என அவர் வாதிப்பர்.
துறவுநிலை மிக உயர்ந்த நிலையென்று சமுதாயம் மதித்தால் அந்தச் சமுதாயத்தவர்கள் துறவிகள் நிலைக்கு வந்து விடுவார்கள். பாசபந்தம் எதுவுமில்லாமல் வெறுமையாக இருப்பதே சிறந்த இலட்சியமென்று கருதும் மக்கட் கூட்டம் எல்லாத் துறைகளிலும் வறுமையடைவதைத் தவிர்க்க முடியாது. நல்லதை நாடாதவர்கள், அதை அடைவது அரிது.
பற்றற்ற நிலையினை வற்புறுத்திய ஞானிகள் வாழ்க்கையை ஒரு கோணத்திலிருந்து நோக்கியிருக்கிறார்கள். உலக வாழ்க்கையைச் சோகநாடகமாக நோக்கிய ஞானிகள், பற்று, பிறவித்துன்பத்துள் அகப்பட்டு வாழ மனிதரை உந்துஞ்சக்தியாக இருப்பதை அவதானித்துப் பற்றையறுக்க வழி தேடுகிறார்கள். இந்த ஞானிகள் காட்டிய வழியில் வாழத் தமிழர்கள் முயன்றிருக்கிறார்கள்.
சைவர்கள், சைவசித்தாந்தம் முதலில், வடமொழியிலே தோன்றியதா அல்லது தமிழிலே தோன்றியதா என்ற பிரச்சனையிற் கருத்து வேறுபட்ட போதிலும் அவ்வேறுபாடு அவர்களை இருவேறு சமயப் பிரிவினராக்கத் தக்க அளவுக்கு வலுப் பெறவில்லை, நாலாயிரத் திவ்விய பிரபந்தத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்குவது என்று எழுந்த பிரச்சினை வைணவர்களுட் பிளவை ஏற்படுத்தி விட்டது. வைணவர்களுள் வடகலையார், தென்கலையார் என்று இரு பிரிவினர் காணப்படுகின்றனர். சமயகாரியங்களில் தமிழின் அந்தஸ்து என்ன என்று வினாவும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற வினாவுமே பிரிவினையை ஆரம்பித்தன. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தை
நாதமுனிகள், தொகுத்ததுமே, பிரிவினை ஆரம்பமானது என்பர் சிலர். இராமானுசர் காலத்திற்குப் பின்பே பிரிவினை தோன்றியதென்பர். வேறு சிலர். தென்கலையார் கோவில் வழிபாட்டில் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திற்கும் தமிழ் மொழிக்கும் வடகலையாரிலும் கூடிய அளவு முக்கியத்துவம் வழங்குதின்றனர். இருசமயப் பிரிவுகளும் ஆன்மா கடவுளிடம் சரண்புக வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், வடகலையாரின் தத்துவநிலை குரங்குக்குட்டி சம்பந்த நியாயமெனவும் தென்கலையாரின் தத்துவநிலை பூனைக்குட்டி சம்பந்த நியாயமெனவும் கூறுவர். தாய்க்குரங்கு தாவித்திரியும் போது, அதன் குட்டி தாயை எப்படித்தானே இறுகப் பற்றிக்கொண்டு நிற்குமோ, அதைப்போல, சரண்புக்க ஆன்மா தன் முயற்சியால்
இறைவனது அருளைப் பெறவேண்டும் என்பர் வடகலையார். ஈன்றண்மிய காலத்துத் தாய்ப்பூனை ஓடித்திரியும் பொழுது எப்படித் தன் குட்டியைத் தன் வாயில் வைத்துத் தாவித் திரியுமோ அதைப் போல, சரண்புக்க ஆன்மாவின் முயற்சியின்றி, இறைவன் அதற்கு அருளுவன் எனக் கூறுவர் தென்கலையார்.
”சமய தத்துவம் சமய நம்பிக்கைக்குக் காரண காரியத் தொடர்பினை விளக்கிக் கற்பிக்கிறது. சமய நம்பிக்கை என்ற அத்திவாரத்திலேயே சமய தத்துவம் கட்டி எழுப்பப்படுகிறது. எனவே, சமய நம்பிக்கை இல்லாதவர்கள் சமய தத்துவத்தைக் கற்றும் மதம் மாறியதற்குச் சான்று காண்பது அரிது. அந்த அந்தச் சமயத்தில் நம்பிக்கையுள்ளவர்களின் மனங்களில் வாழும் ஆசங்கைகளுக்கு அந்த அந்தச் சமயத்தத்துவம் திருப்தியளிக்கிறதெனலாம். சமயதத்துவம் சமயம் நிலைபெற உதவுகிறதேயன்றிச் சமயம் பரவ உதவுவதில்லை1 சைவசித்தாந்த நூல்கள் தோன்றிய பின்பு தமிழ்நாட்டிற் காணப்பட்ட சூழ்நிலை இக்கருத்துக்களை உறுதிப்படுத்துகிறது. சைவ சித்தாந்தம் சைவ சித்தாந்திகளுக்கு மட்டுந்தான் முடிந்த முடிபாகக் காணப்பட்டது. ஏனைய சமயப் பிரிவுகளில் நம்பிக்கையுள்ளவர்கள் தொடர்ந்தும் தங்கள் சமயத்தத்துவங்களுக்காக வாதித்துக் கொண்டிருந்தார்கள். வேதாந்தத் தத்துவங்களுக்குத் தமிழ்நாட்டிற் செல்வாக்குத் தொடர்ந்திருந்தது.
தமிழ்நாட்டை ஆண்ட விசயநகர மன்னரும் நாயக்க மன்னரும் வைணவர் அல்லது வீரசைவராக இருந்ததால் சைவ சித்தாந்தத்தற்கு விசேட அரசியல் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டில் முடிவில்லாமல் சமய வாதங்கள் நடைபெற்றன. சமய பக்தியுள்ளவர்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்படத்தக்க அளவுக்கு இந்த வீண்வாதங்கள் வளர்ந்து வந்தன. சமய வாழ்க்கைக்குச் சமயத்தத்துவத்தைக் காட்டிலும் சமய அனுபவமே முக்கியம் என்றுணர்ந்த சைவப் பெரியார்கள் சமரசம் போதிக்கத் தொடங்குதலைக் காணலாம். தாயுமானவர் வேதாந்த-சித்தாந்த சமரச நன்னிலை கண்ட வித்தகச் சித்தர் மரபினைப் போற்றியுள்ளார். சமயத் தத்துவங்களில் ஒருமைப்பாடு காணும் முயற்சியை இவருடைய பாடல்களிற் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க சுவாமிகள் சுத்த சமரச சன்மார்க்கம் காண்பதையே தம் இலட்சியமாகக் கொள்கிறார். தத்துவக் கொள்கைகளை முன்னிட்டு நடந்த முடிவில்லாத வாதங்கள் சமயப் பெரியார்களின் வெறுப்புக்குரியனவாகி விட்டதை இவை சுட்டுகின்றன.
தத்துவக் கொள்கைகளைப் பற்றி அதி நுட்பமாக வாதங்கள் ஒரு புறம் நடக்க, மக்களிற் பெரும்பகுதியினர் மனம் அவற்றில் ஈடுபடாது அலையத் தொடங்கியது. மரணத்தின் பின் அடையுங்கதியிலும் பார்க்க, இவ்வுலக வாழ்க்கையை ஒழுங்குபடுத்தத்தக்க அறநெறியை மக்கள் அவாவி நின்றிருக்கின்றனர். அதனாலே தத்துவநெறிக் காலத்திலே நன்னெறி, நீதிநெறி விளக்கம், வெற்றி வேற்கை, கொன்றைவேந்தன், ஆத்திசூடி, மூதுரை, நல்வழி என்னும் ஏழு நூல்கள் எழுந்தன. இந்த அறநூல்களிற் காணப்படும் போதனை, இயற்கை நெறி வாழ்க்கையை ஒழுங்குபடுத்தத் தோன்றியதே என்ற உணர்வு சிலரிடம் விளங்கியது. பள்ளு, குறவஞ்சி என்ற பிரபந்தங்கள், மக்கள் இயற்கை நெறி வாழ்க்கையைத் திரும்பவும் நாடத் தொடங்கியமைக்குச் சான்றுகளாகின்றன.
இதே காலத்திலேயே, பதினெண் சித்தர் பாடல்களும் தோன்றுகின்றன. பதினெண் சித்தர் பாடல்கள் சில, வைதிகச்சமயத் தத்துவங்களைக் கண்டிப்பனவாக அமைகின்றன. பதினெண் சித்தர் யார் யார் என்று கூறுவதிற் கருத்து வேற்றுமை காணப்படுகிறது. திருவள்ளுவர், ஒளவையார் முதலிய பெயர்களும் சித்தர் பட்டியலிற்
சேர்க்கப்படுகின்றன. அகத்தியர், தன்வந்திரி, வான்மீகி முதலிய வடநாட்டவரும் போகர், புலிப்பாணி முதலிய சீன தேசத்தினரும் பதினெண் சித்தர் பட்டியலில் இடம் பெறுகின்றனர். ஆனால், மொழி நடை கொண்டு நோக்கும்போது, சித்தர் பாடல்களுட் பெரும்பாலன, தத்துவநெறிக் காலத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. தமிழ் நாட்டுச் சித்தர் குழுவிற்கு திருமூலர் முதல்வராகலாம் என்பது தாயுமானவர் பாடல்களிலிருந்து தெரியவருகிறது, சித்தர்கள் நோயின்றி மாறா இளமையுடன் நல்வாழ்வு வாழ்வதற்காக யோகப்பயிற்சியை வலியுறுத்துகின்றனர்1. யோகப்பயிற்சியை மீறி நோய் ஏற்படின், அதைத் தீர்ப்பதற்குச் சித்த வைத்தியத்தை விருத்தி செய்துள்ளனர். உடம்பும் உயிரும் கூடி இருக்கும் நிலை ஞானம் பெற உதவும் என்பதை ஏற்கிற வைதிக சமயம் பொதுவாக உடம்பை இகழ்ந்து கூறி வந்தது. உடம்பைப் பேணவேண்டியதன் அவசியத்தை திருமூலரின் திருமந்திரம் எடுத்துக் கூறியுள்ளது. கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை, கடவுளைத் தேடி அலைய வேண்டியதில்லை, உடம்பிலேயே கடவுளைக் காணலாம் என்று ஒளவையின் ஞானக்குறள் கூறுகிறது. மனிதகுலம் அனைத்தும் ஒரே இனம் என்ற சித்தர்களின் கொள்கை வைதிகர்களின் வருணாச் சிரமக் கோட்பாட்டுக்கு எதிரிடையாகிறது. சித்தர்கள் பாடல்களிலே சாதி வேற்றுமையைப் பலவாகத் தாக்கிப் பாடியிருக்கின்றனர். சித்தர் களின் பாடல்களில் மதங்களில் ஒன்றை உயர்த்திப் பிறவற்றைத் தாழ்த்திப் பாடும் பண்பும் காணப்படவில்லை. கடவுள் பெயரால் நடக்கும் தேர், திருவிழாக்களையும் உருவ வணக்கத்தையும் சித்தர்கள் கண்டித்துப் பாடியிருக்கின்றனர். தமிழ் மக்கள் சிலரின் சிந்தனை புதுவழியிற் செல்வதனை சித்தர் பாடல்கள் உணர்த்துகின்றன. சித்தர் பெயர்களை நோக்கும்போது, சித்தர் மரபு நீண்ட காலமாக நாட்டில் இருந்து வந்திருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. தத்துவ நெறிக் கால இறுதியிற் சித்தர் மரபுவழிக் கருத்துக்கள், காலத்தின் தேவையை ஒட்டி இலக்கிய வடிவம் பெற்றிருக்கலாம்.
தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனை இவ்வாறு தடுமாறிக் கொண்டிருந்தபோது, மேனாட்டுச் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம் பெறத் தொடங்குகிறது.
அறிவியல் நெறிக் காலம்
தத்துவநெறிக் காலத்தைத் தொடர்ந்து இக்காலம் வருகிறது. நிகழ்காலத்தின் இயல்பை வரையறை செய்வது இலகுவன்று. எனினும் அறிவியல் நெறிக் காலம் என்ற பெயர் இக்காலத்திற்குப் பொருந்தும் எனத் தெரிகிறது.
நாயக்கர் காலத்திலேயே இஸ்லாமும் கிறிஸ்தவமும் தமிழ் நாட்டிற் புகுந்துவிட்டன. யூதர்கள், சீரியக் கிறித்தவர்கள், இஸ்லாமிய வணிகர்கள் அக்காலத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டின் மேற்குக் கரை அல்லது கேரளத்துக்கு வந்துவிட்டன ரெனினும், அவர்களின் செல்வாக்குத் தமிழ் மக்கள் வாழ்க்கையிலிடம் பெற்றவற்றை இன்று அறியமுடியவில்லை. தமிற்நாட்டில் ஒரு சிறு பகுதியினர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத தமிழ் மக்களை இஸ்லாமியச் சிந்தனை எவ்வாறு பாதித்தது என்பதை மதிப்பிட முடியவில்லை. இந்துமதத்தையோ பழைய தமிழ்ச் சமுதாய அமைப்பையோ இஸ்லாமியர் கண்டித்துப் பிரசாரம் செய்யத் தமிழ் நூல் இயற்றியதற்குச் சான்றில்லை. இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாகவும் தெரிய வரவில்லை. கத்தோலிக்கக் குருமாரும் கிறித்தவப் பாதிரிமாரும் இந்து மதத்தைக் கண்டித்து மதமாற்றத்தை நோக்கமாக வைத்துப் பிரசாரஞ் செய்தனர். மேனாட்டுச் செல்வாக்குக் காலகதியில் அதிகரித்து வந்துள்ளது.
பதினனந்தாம் நூற்றாண்டளவில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஐரோப்பியரின் வாழ்க்கை நோக்கை மாற்றி விட்டது. தமி்ழ்நாட்டுப் பண்பாட்டில், ஐரோப்பாவிலிருந்த இடைக்காலப் பண்பாட்டை ஓத்த நெறியே தொடர்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் ஐரோப்பியராட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டதும் மேனாட்டுச் செல்வாக்குத் தமிழ்நாட்டிலே தீவிரமாக. இடம்பெறத் தொடங்கிற்று. ஆங்கிலக் கல்வி விருத்தியும் கிறித்தவ மதப் பிரசாரமும் மேனாட்டுச் செல்வாக்குப் பரவுவதற்குக் கருவிகளாயின. நாயக்கர் காலத் தமிழ் மக்களின் தனிப்பண்பாகப் பழமை போற்றும் இயல்பு நிலவியதால் அக்காலத்தைத் தொடாந்துவரும் காலத்திற் கீழைநாட்டு வாழ்க்கை முறைக்கும் மேலைநாட்டு வாழ்க்கை முறைக்கும் மோதுதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
பதினெட்டாம் நூற்றாண்டிலே இங்கிலாந்திலே தொடங்கிய தொழிற் புரட்சியும் பிரான்சிலே நிகழ்ந்த அரசியற்புரட்சியும் ஐரோப்பியர் வாழ்க்கை முறையிலும் சிந்தனைப் போக்கினும் பாரதூரமான மாற்றங்களைப் புகுத்தியுள்ளன. தனி மனிதனது உரிமையை வற்புறுத்தும் மக்களாட்சிவாதம், சமுதாய நலம் பேணும் பொதுவுடைமைவாதம் என்பன ஐரோப்பாவிலே தோன்றிய போதிலும் தமிழ்நாட்டிலும் பிரசாரமெய்தியுள்ளன. மேனாட்டில் வெகுவேகமாக ஏற்பட்டுவருகிற அறிவியல் வளாச்சி மக்கள் வாழ்க்கை நோக்கையும் சிந்தனைப் போக்கையும் தீவிரமாகப் பாதிக்கிறது. இருபதாம். நூற்றாண்டிலே உலகம் மிகவும் சிறுத்துவிட்டதென்பர். இந்த நூற்றாண்டிலே வல்லரசுக்களுக்கிடையே ஏற்பட்ட இரண்டு மோதுதல்கள் உலகப் போர்களெனப் பெயர் பெறுகின்றன. பத்திரிகை வானொலி முதலியன ஊர் தோறும் காணப்படுவதால் உலகின் பல பகுதிகளிலும் நடக்கும் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. மக்கள் மனம் விரிவடைய வசதிகள் காணப்படுகின்றன.
பழமைக்கும் புதுமைக்குமான மோதுதல்கள் பல அரங்குகளில் நடைபெற்று வருகின்றன. சமயத்துறையிலே நடைபெற்ற மோதுதலில் கிறித்தவம் ஓரளவு வெற்றி பெற்றது. தமிழ் மக்களிற் சிறுபான்மையினர் கிறித்தவத்தைத் தழுவினர். ஆனால், கிறித்தவம் பரவுவதைத் தடுப்பதற்காக இந்துமதம் சீர்திருந்த வேண்டியிருந்தது. இந்துமதம் கிறித்தவத்திலிருந்து கடன்பெற்றவை இவையிவையென எவற்றையும் சுட்டிக் காட்ட இயலாது. ஏனெனில் இந்து மதத்தின் நீண்டுபரந்த வரலாற்றில் இடம்பெறாத கருத்துக்கள் எதுவும் பிறமதங்களில் இல்லை. பிறமதச் செல்வாக்கினால், இந்து மதக் கொள்கைகள் சில விளக்கம் பெற்றிருக்கலாம் வேறு சில அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கலாம். அரசியற்றுறையில் நிகழ்ந்த மோதுதலில் மேனாட்டாட்சி ஓழிந்தது மக்கள் சுதந்திரம் பெற்றன. அரசியல் மாற்றத்தினால் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருக்கும் நிலையே ஓழிந்தது. ஆனால் மேனாட்டிலே தோன்றிய அரசியற்கருத்துக்களே தமிழ் நாட்டிற் செல்வாக்குப் பெற்று நிற்கின்றன. கல்வித்துறையில் நிகழும் மோதுதலிலே .ஆங்கிலேயம் ஆங்கிலேயராட்சியிற் பெற்ற இடத்தைச் சிறிது சிறிதாகத் தமிழ் பெறுகிறது. தமிழ்மூலம் கல்வி செல்வாக் கிடைகின்ற போதிலும், கல்வித்திட்டம் முதலியனமேனாட்டு முறையைத் தழுவியே அமைந்துள்ளன. சுருங்கக் கூறினால் பழமையும் புதுமையும் தம்முள் மோதுதலை நீக்கி ஓருவித இணைப்பைப் பெறுகின்றன எனலாம்.
இன்று தமிழில் அறிவியல் இடம் பெற்று வருகின்றது. அறிவியல் தமிழை வளம்படுத்தி வருகிறது. தமிழின் மறுமலர்ச்சியில் அறிவியல் முக்கிய இடம் பெறுகிறது. அறிவியல் என்பது இக்காலத் தமிழில் புதிதாக ஏற்பட்ட சொற்றொடர். தமிழுக்கு அறிவியல் அத்துணை புதியதா, அறிவியல் என்ற சொற்றொடர் தமிழில் வழக்காக வருவதற்கு முன்பு தமிழ் மொழியில் அறிவியல் நூல் எதுவும் தோன்ற வில்லையா என்ற வினாக்கள் எழலாம். அறிவியல் நூல்கள் சில கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாகத் தமிழிலே தோன்றி வருகின்றன எனலாம். அறிவியலானது விஞ்ஞானம் என்ற பெயராலே பெரிதும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது வடமொழிப் பெயர். சாஸ்திரம் என்ற வடமொழிப் பெயரும் விஞ்ஞானத்துக்கு வழங்குவதுண்டு. சாஸ்திரம் அல்லது சாத்திரம் என்பது பாரதநாட்டுப் பழைய அறிவுத் துறைகளாகிய சோதிடம், தத்துவம், வைத்தியம் முதலியவற்றையும் குறித்தது. இலங்கையிலே பேச்சுத் தமிழில் இன்று சாஸ்திரம் என்ற சொல் சோதிடத்தையே பெரும்பாலும் குறிக்திறநு. காலையும் சாஸ்திரமும் வேறு வேறாகக் கணிக்கப்படுவதுண்டு. அழகுணர்ச்சியைத் திருப்திப்படுத்துவது கலையென்றும் அறிவுக்கு விருந்தளிப்பது சாஸ்திரம் என்றும் கூறலாம். தமிழில் இந்த வேறுபாடு அவ்வளவு போற்றப்படவில்லை. பழந்தமிழிலே கலையென்ற சொல் கலை, சாஸ்திரம் யாவற்றையும் உள்ளடக்கப் பயன்பட்டுள்ளது. கலையென்ற சொல்லின் பொருளுள் அறிவியலையும் அடக்குகிறார் பாரதியார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பாக இலக்கிய வளம் பெற்ற மொழியாகத் தமிழ் விளங்குவது தமிழருக்குக் கலையுணர்ச்சி சிறந்திருப்பதற்குச் சான்று. தமிழ் நாட்டில் வடமொழிக் கல்வி போற்றப்பட்டதாலும் தமிழலுடைய இயற்கையான அறிவுத் தூண்டுதலானும் அறிவியற் கருத்துக்கள் சில தமிழ் நாட்டில் நிலவிப் பறந்தமிழ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன, அவை வியப்பையும் மகிழ்ச்சியையும் தமிழருக்குத் தருவதெனினும் அறிவியல் நெறிக்காலம் அக்காலத்திலேயே தோன்றி விட்டதெனக் கூறுதல் முடியாது. அந்தக் கருத்துக்கள் அக்காலச் சிந்தனைப் போக்கை மாற்றியமைத்துவிடவில்லை சமுதாயத்தையும் புதுவழியிலிட்டுச் சொல்லவில்லையென்பதைத் தமிழ்நாட்டு வரலாறு கொண்டுஅறியலாம். மேனாட்டாரின் தொடர்போடுதான் அறிவியல் நெறித் தொடா்பு தமிழருக்குக் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் நடந்த தொழிற் புரட்சியின் பொழுது, நீராவியின் சக்தி உணரப்பட்டு நீராவியந்திரம் அமைக்கப்பட்ட காலம், ‘அறிவியல் நெறிக்காலம் இவ்வுலகில் கால் கொண்ட காலம்‘ எனலாம். அறிவியற் கருவிகளைப் பெருந் தொகையாகக் கையாளும் பழக்கம் மக்களிடையே தொடங்க, அவற்றுக்கான விளக்கத்தை மக்கள் நாடுகின்றண. அறிவியல் என்றால் என்ன என்று அறிஞர் பலர் விளக்க முயன்றுள்ளார்.பொதுவாக நோக்கும்போது அது இப்பிரபஞ்சத்தைப் பற்றியும் அதிலுள்ள பொருள்களைப் பற்றியும் துருவி ஆராய்ந்து அறிவது என்று கூறலாம். பெளதிகவியல், இரசாயனவியல், விலங்கியல், தாவரவியல், கணிதவியல் என்பன அறிவியல் என்ற பெயராற் சுட்டி வழங்குவதற்கு விசேட உரிமையுடையன. மருத்துவஇயல், பொறியியல், தொழில்நுட்பவியல் என்பன பிரயோக அறிவியலைச் சார்ந்துள்ளன. இன்றைய கல்வித்துறைகள் யாவற்றிலும் அறிவியலின் செல்வாக்குக் காணப்படுகிறதெனலாம். அறிவியலிற் சிறப்பிடம் பெறும் உத்தேசம் எனத்தகும் கற்பனையாற்றல், தீா்மானஞ் செய்யும் ஆற்றல்செய்திகளைத் தொடா்புற ஓழுங்குபடுத்துந்திறமை, உ.ற்றுநோக்கும் திறமை என்பன கல்வித்துறைகள் பலவற்றிலும் இன்று காணப்படுகின்றன.
மக்களின் அன்றைய வாழ்க்கைச் செயல்களில் அறிவியல் இன்று மிக்க செல்வாக்குடையதாக விளங்குகிறது. இன்றைய வாணிக உலகம் தொலைபேசி முதலிய கருவிகளினூடாகவே இயங்குகிறது. மின்சாரசக்தி வீடுகள், வீதிகள், கடைகள், சந்தைகள் யாவற்றிலும் பிரகாசிக்கிறது. போக்குவரத்துச் சாதனங்கன் உலகின் பல்வேறு பகுதிகளையும் தரை வழியாயும், கடல்வழியாயும் இணைக்கின்றன. அணுக்குண்டு, நீரகக்குண்டு முதலியன உலகையே அச்சுறுத்தி வருகின்றன. மனிதன் சந்திரனில் காலடி வைத்து நடந்து திரும்பி வந்து விட்டான். இக்கால வாழ்வின் அடிப்படையே அறவியல் என்று கூறத்தக்க நிலை உருவாகி வருகிறது
தத்துவநெறியும் அறவியல் நெறியும் ஒருவகையிலே தொடர்புள்ளன. தத்துவ ஆராய்ச்சி என்பது பழங்காலந் தொட்டே மனிதரைப் பற்றியும், மனிதர் வாழும் உலகத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் நிகழ்ந்துவரும் ஓன்றாகும். இவற்றின் உண்மைகளை ஆராய்ந்தறிவதற்காகப் பிரத்தியட்சம் முதலிய பிரமாணங்களின் கிரமம் இந்தியாவில் விருத்தி செய்யப்பட்டுள்ளது. காணுதல், கருதுதல், அருள்வாக்கு முதலிய அளவைகளுள் கொள்ளத்தக்கன எவை, தள்ளத் தக்கன எவை என்பன ஆராயப்பட்டுள்ளன. தமிழுக்கு மேனாட்டார் தொடர்பு ஏற்பட்டபோது இந்தியத் தத்துவ ஆராய்ச்சி சமய உண்மைகளை நிறுவும் நோக்கில், அச்சமய வழியிற் சென்று கொண்டிருந்தது. கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டளவில், சமயத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட மேனாட்டுத் தத்துவ ஆராய்ச்சியே எல்லா அறிவியல் துறைகளுக்கும் தாயகமாய் அமைந்துள்ளது. முதலிற் புற உலகின் தன்மையைப் பற்றித் தொடங்கிய ஆராய்ச்சி காலப்போக்கில் விரிந்தும் பரந்தும் சென்று கணிதம் பெளதிகம் முதலிய தனித்துறைகளாக அமைந்துள்ளது. பல திறப்பட்ட கேள்விகளுக்கும் பொதுவான விடைகள் தரப்பெறும் வரையில் இவை தத்துவத்துறையிலிருந்தனவென்றும், திட்டமான விடைகள் தரப்பட்டவுடன் வெவ்வேறு அறிவியல் துறைகளாயின என்றுங் கூறப்படுகின்றன.
தமிழ்நாட்டுத் தத்துவநெறிக்கும், அறிவியல் நெறிக்கும் ஒருவகையில் முரண்பாடு காணப்படுகின்றது. இந்தியத் தத்துவநெறி வளா்ச்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நின்று போய்விட்டது. அன்னியர் படையெடுப்பு, அன்னியர் ஆட்சி என்பவற்றால், ஏற்பட்ட சூழ்நிலையில் அறிவுத்துறையில் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி காணப்படவில்லை சிந்தனைத் தேக்கமே காணப்பட்டது. மேனாட்டார் வளர்த்த அறிவியலின் செல்வாக்கினாலேயே இச்சிந்தனைத் தேக்கம் மறைகிறது ஏமப்பெருந்துயில் கொண்ட தமிழகம் விழிக்கிறது. தமிழ் மறுமலர்ச்சிக் கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும் தமிழ்மொழி அறிவியலால் வளம்படுத்தப்பட வேண்டுமென்று பெரிதும் துடித்தனர்.
தமிழர் சிந்தனை வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் ஓர் உண்மை தெற்றென விளங்குதிறது. இயற்கைநெறிக் காலமும் சமயநெறிக் காலமும் தமிழர் வரலாற்றில் எழுச்சியும் முயற்சியும் மிகுந்து உயிர்த்துடிப்புடனிருந்ந காலங்கள் எனலாம். அறநெறிக் காலமும் தத்துவ நெறிக் காலமும் தமிழ் வரலாற்றில் முயற்சி சுருங்கி வாழ்க்கை பற்றி எண்ணிப் பார்த்த காலங்கள் எனலாம். இயற்கைநெறியை எண்ணிப் பார்த்தபோது அறநெறியும், சமய நெறியை எண்ணிப் பார்த்தபோது தத்துவநெறியும் தோன்றியுள்ளன. தமிழர் வாழ்வில் பல்லவர் காலத்தில் சமயங்கள் ஏற்படுத்திய மறு மலர்ச்சியை ஒத்ததே இக்காலத்தில் அறிவியல் ஏற்படுத்தும் மறுமலர்ச்சியாகும். தமிழர் வாழ்க்கையில் சமயநெறிக் காலத்தில் புத்துணர்வும் புத்துயிரும் ஏற்பட்டமைபோல, அறிவியல் நெறிக் காலத்திலும் அவை ஏற்படுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை சமயப்பூசல் தமிழர் உள்ளத்தை ஆக்கிரமித்து வந்ததெனக் கூறலாம். மேனாட்டார் ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படும்வரையில் மேனாட்டு வணிகரும் மதபோதகருமே தமிழ்நாட்டோடு பெரிதும் தொடர்பு கொண்டணர். வணிகா் செல்வஞ் சேர்ப்பதிலேயே கருத்தைச் செலுத்தினர். கிறித்தவமதத்தைப் பரப்புவதே மத போதகரின் முக்கிய குறிக்கோளாகும். இந்து மதம் குறை கூறப்பட்டதும், இந்துக்கள் பலர் மதமாற்றம் செய்யப்பட்டதும் இந்நுக்களை விழிப்படையச் செய்தன. ஏசுமத நிராகரணம் என்ற நூல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. கிறித்தவ மதத்திலும் உட்பிரிவுகள் இருந்ததனால் அவர்களுக்குள் இருந்த பிணக்குகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் முதலியன வெளியாயின. யாழ்ப்பாணத்தில் கிறித்தவர்களின் நெருங்குதல் அதிக மாயிற்று. பதினேழாம் நுாற்றாண்டு முற்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் கிறித்தவாகளாகிய போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயா் என்ற இவர்களின் ஆட்சிகளே முறையே நடைபெற்று வந்துள்ளன. பொருளாதாரக் காரணங்களினால் யாழ்ப்பாணத்தவர் ஆங்கிலக் கல்வியை விரும்பிக் கற்றனர். ஆங்கிலக் கல்வி கற்க விரும்பியவர்கள் அக்காலத்திற் கிறித்தவ மதபோதகரிடமே கற்கவேண்டியிருந்ததால், இவர்கள் கிறித்துவத்தை ஏற்கவேண்டிய நிலை காணப்பட்டது. கிறித்துவத்தை தழுவியர்களுக்குப் பல உதவிகள், உபகாரங்கள் கிடைத்தன, கிறித்தவ மதபோதகர் சமூக சேவைகள் பலவற்றை முன்னின்று நடத்தியதால், மக்களிடம் குறிப்பாக வறிய மக்களிடம் சுலபமாகச் செல்வாக்குப் பெற்று மத மாற்றம் செய்தனர். கிறித்தவர் அச்சுக்கூடங்களை நிறுவி மக்களுக்கு விளங்கத்தக்க எளிய உரைநடையில் துண்டுப்பிரசுரங்களையும் நூல்களையும் வெளியிட்டுத் தம் கருத்துக்களைப் பரப்பியதால் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்தச் சூழ்நிலையில் இந்துமதம் நிலைதடுமாறியபொழுது தமிழ்நாட்டுப் பழமையின் பாதுகாவலாராக ஆறுமுகநாவலர் தோன்றினார். ஆறுமுகநாவலர் பழைமை காக்கப் போராடும்பொழுது புதிய போராட்ட முறைகளைக் கையாண்டார். கிறித்தவக் கல்லூரியொன்றிலே தாம் ஆங்கிலம் பயின்றும், கல்வி பயிற்றியும் கிறித்தவ மதபோதகரோடு நெருங்கிப் பழகியும் விவிலியத்தைக் கிறித்தவர்களுக்குத் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்தும் வாழ நேர்ந்த காலத்து, அவர்களின் செயல்முறைகளைக் கண்டு கொதித்தெழுந்த உணர்ச்சியால், ஆறுமுகநாவலர் சைவப் பணி ஆற்றிவந்த முறைகள் புதியன. முள்ளை முள்ளால் களைவது போல, கிறித்தவர்கள் கையாண்ட முறைகளைத் தாமும் கையாண்டே கிறித்தவமத ஆக்கிரமிப்பைத் தடுத்து சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்தார். ஆறுமுகநாவலருக்குக் கிறித்தவர்களோடு இருந்த. தொடர்பு ஓரளவுக்குத் திருநாவுக்கரசருக்குச் சமணரோடு இருந்த தொடர்பை ஓத்துள்ளது. திருநாவுக்கரசர் செய்த தொண்டினால், தமிழ்நாட்டில் சமய நெறிக் காலம் உதயமாயிற்று. ஆறுமுகநாவலர் ஆற்றிய தொண்டினால் அவ்வாறு நிகழவில்லை. காரணம் தமிழ் நாட்டுச்சூழ் நிலை மாறிவிட்டமையேயாகும்.
ஆறுமுகநாவலரும் அவருக்குப் பின் வந்தவர்களும் ஆற்றிய சமயத் தொண்டுகளால் தமிழ்ச் சைவருக்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உண்டாயின. சைவம் அழியக்கூடும் என்ற நிலை நீங்கிவிட்டது. இந்திய வரலாற்றையும் இந்து மதத்தையும் மேனாட்டு அறிஞரும் மற்றோரும் ஆராயத்தொடங்கினார். இந்தியா பழம்பெரும் நாககிகமுடையதென்பதும், இந்துமதத்தத்துவங்களிலே தனிச்சிறப்புக்கள் பல உள்ளன என்பதும் புலனாயின. விவேகானந்தார் முதலியோர் இந்துமதத்தின் சிறப்புக்களை மேனாட்டிலும் விளக்கின. விவேகானந்தார் சீடராகவும்கிடைத்தனர். அன்னிபெசன்ட் அம்மையார் முதலிய மேனாட்டார் இந்துமதத்தின் சிறப்புக்களை எடுத்தோதும் நூல்கள் பல எழுதிப்பலஉரைகளும் ஆற்றினா். இந்துக்கள் விழித்துக்கொண்டனா்.
இருபதாம்நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியவிடுதலையியக்கம் தமிழ்நாட்டைப் பாதிக்கத்தொடங்குவதாயிற்று. ஆங்கிலக்கல்விகற்ற தமிழர் இங்கிலாந்து நாட்டினதும் ஏனைய மேனாடுகளினதும் ஆட்சிமுறைகளை உணர்ந்து அடிமை வாழ்வினை வெறுத்துத்தாமும் ஆட்சியிற்பங்குகோர முற்படலாயினர், தமிழ்நாடு இந்தியாவின் ஒருபகுதியாக ஆங்கிலேயரால் ஆக்கப்பட்டதால், வடஇந்தியாவில் வளர்ந்து வந்த விடுதலையியக்கத்தின் தாக்குதலும் தெற்கைப்பாதிக்கத்தொடங்கிற்று. தமிழ்நாட்டில் பாரதியுகம் தோன்றுகிறது. பாரதியார் மறுமலர்ச்சிக் கவிஞர் ஆவார்,“என்று தணியும் இந்த சுகந்திரதாகம்” என்ற ஏக்கம் பாரதியார் கவிதைகள் பலவற்றில் ஊறித்துடிப்புடன் விளங்குகிறது. விடுதலை அல்லது சுதந்திரம் என்பது பாரதியாரின் மூச்சு எனலாம். தமிழ்ச் சமுதாய இயக்க அலுவல்களிலும் தமிழ்இலக்கியத்திலும் விடுதலை வேண்டிமுற்ட்டுறின்றவர் பாரதியார். நாட்டு விடுதலைக்குச் சமூக முன்னேற்றம் அவசியம் என்று கொண்ட பாரதியார் மேனாட்டுச் சமூகத்தோடு தமிழ்ச்சமூகத்தை ஒப்பிட்டுத்தமிழ்ச்சமூகத்தில் அன்று காணப்பட்ட குறைகளைச்சாடினார். தமிழ்ச்சமூக ஒற்றுமையை சர்வசமயசமரசத்திலேயே கட்டியெழுப்பலாமென்று உணர்ந்தபாரதியார் சைவம், சாக்தம், வைணவம், வேதாந்தம் என்ற இந்து சமயபிரிவுகளைப்பாடுவதில் தாயுமானவர், இராமலிங்கசுவாமிகள் முதலியோர் விளம்பிய சமரசசன் மார்க்கத்தை வலியுறுத்துகிறாரெனலாம். பாரதியார் இன்னும் ஒரு படிமேலேசென்று கிறித்தவ இஸ்லாமியக் கடவுளரையும் பாடியுள்ளார், அவர் சாதாரணமக்கள் வாழ்க்கையையே தம் கவிதைகளுக்குப் பொருளாகக் கொண்டார்.
பாரதியார் புதுமைக்கவிஞர், புதுயுகக்கவிஞர் என்றெல்லாம் உரிமை பெறுகிறார்.‘புதியன கண்டபோது விடுவாரோ புதுமைபார்ப்பார்‘,என்பதற்கு இணங்கப் பாரதியார் புதியனவாகக் காணப்படுவன யாவற்றையும் போற்றினாரா? புதுமையின் மோகத்தில் அடிமைப்பட்டிருக்கும் தமிழரை மயக்கத்திலிருந்து விடுவித்துத்து தமிழராக வாழச்செய்வர் பாரதியார் என்கின்றனர்சிலர். இரண்டு நிலைகளிலும் உண்மைகாணப்படுகின்றது. ஆறுமுகநாவலர் பழந்தமிழ்ச் சைவத்தின் பாதுகாவலராக விளங்கியபோது, கோவில்களில் மிருகபலியிடுதல் முதலிய பழையவழக்கங்களைக் கண்டிக்கத்தயங்கவில்லை சைவசமய குரவர்மரபில் வந்தவராக ஒரு சாராரால் கருதப்பட்ட இராமலிங்க சுவாமிகளுக்கு எதிராக அருட்பாமருட் பாவிவகாரத்தைத் தொடங்காமல் விடவில்லை. ஆறுமுகநாவலர் பழைமையை எதிர்த்து நின்ற சில நேர்ந்துள்ளன. பாரதியார் தமிழருக்குப் புதுவழிகாட்டினார் புதுமையை உணர்த்தினார். தமிழர்தன்மானத்தோடு வாழ்ந்து சிறக்கவேண்டுமென்று விரும்பினார் தமிழரின் தன்மான உணாச்சியை கவணிப்பதற்காகப் பறைமையைப்பாடினார். பழைமைச்சிறப்புப் பெற்ற தமிழர் புதுமைச்சிறப்பும் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
பாரதியார் பழைமைச் சிறப்பை எடுத்துப்பாடிய அளவுவேறு எந்தத்தமிழ்ப்புலவரும் தமிழரினஇந்தியரின் பழைமைச்சிறப்பை எடுத்தய்பாடவில்லை. பாரதியார் பழைமையைப்பாடினார் என்று கூறும்பொழுது ஒன்று கவனத்தில் வைத்திருக்கவேண்டும். பழைமை எந்த ஒருதனிக்காலத்தையும் குறிப்பதாகாது ஐம்பதுஆண்டுகளுக்கு முன்பும் பழைமைதான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் பழைமைதான். இந்தியாவும் தமிழகமும் தமதுநீண்டகாலவரலாற்றில் ஓங்யிருந்த காலங்களும் உண்டு. பாரதியார் அவ்வக்காலச் சிறப்புக்களையே பாடுகிறார். தாம்வாழ்ந்த காலத்துத் தமிழகத்தைச் சிறப்பித்துப் பாடவில்லை. காரணம்,“நெஞ்சுபொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என்ற அடிகளிற் காணப்படுகிறது. பாரதியார் கவிதைகள் பலவற்றின் திறவுகோல் இந்த அடிகளே. தமிழ்மொழி, தமிழ்இனம், பாரதநாடு ஆகிய யாவற்றிற்கும் விடுதலைவேண்டி உழைத்தார் பாரதியார். பெண்ணுரிமை, சாதி பற்றிய ஏற்றத்தாழ்வு முரண்பாடுகளின் ஒழிப்பு, வறுமைசாடுதல் என்றிவைபற்றிய பாரதியார் கவிதைகளும் கட்டுரைகளும் இந்தவிடுதலை நோக்கின் பல்வேறு அம்சங்களே.
இந்தியப் பழைமையிற் காணப்படும் சீர்கேடுகள் பலவற்றைப் பாரதியார் ஆணித்தரமாகக் கண்டிக்கிறார். உலகநிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிய கரூத்துக்கள் இந்திய தத்துவங்கள் யாவற்றிலும் திரும்பத்திரும்ப எடுத்துக்கூறப்படுகின்றன. உலகம்மாயை எனப்படுகிறது. உலகைவெறுப்பது- நம்பமறுப்பது- உயர்ந்த ஞானமாகக் கருதப்படுகிறது. உலகவாழ்க்கையில் ஈடுபாடின்மை யாவரும் முயலவேண்டிய இலட்சியம் எனப்படுகிறது. உலகம் பொய்யென்ற ஆன்மீகத்தத்துவக் கருத்து இந்துக்களின் உலகியல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத், தடையாக இருப்பதைப் பாரதியார் உணருகிறார்.“காண்பதேஉறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம்- இந்தக்காட்சி நித்தியமாம்” என்று பாரதியார் பாடுகிறார்.
பாரத நாட்டுப் பழைய நாகரிகமும் மேனாட்டுப் புதிய நாகரிகமும் இந்தியாவிற் கலந்து கொண்டிருந்த வேளையிலே தோன்றிய பாரதியார், மேனாட்டு நாகரிகத்திற் காணப்பட்ட சில சிறப்புடைப் பண்புகளைத் தமிழ் மக்கள் ஏற்க வேண்டு மென்று விரும்பினார். தீண்டாமை, பெண்ணடிமை முதலியன சமூகத்திலிருந்து ஒழிய வேண்டுமென்று பாரதியார் விரும்பினார். இக் குறைபாடுகளில்லாத மேனாட்டுச் சமூக வாழ்வு பலவகையிற் சிறந்திருக்கக்கண்டார்,“மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை” என்று பாரதியார் பாடினார்.“நந்தனைப் போலொருபார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை” என்று நந்தனாரின் பக்தியை வியந்து பாராட்டி அதே வேளையிற் சாதிவேறுபாடு பாராட்டுபவர்களைக் கண்டித்தார்.
மரபு வழியில் வந்த தமிழ்ப்பெண், சமூகத்தில் அடிமையாக வாழுதலைக் காணும் பாரதியார் தம்முடைய கற்பனையில் புதுமைப் பெண்ணை வகுத்துக்கொள்கிறார், “நாணும், அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” என்று கர்ச்சிப்பவள் பாரதியாரின் புதுமைப்பெண். நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன நற்பெண்டிர்க்குரிய சிறப்பியல்புகளென இடைக்காலத்திற் கருதப்பட்டதனைப் பாரதியார் இங்குச் சாடுகிறார். அறநெறிக்காலத்திற் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நன்மைக்குரியவை எல்லை கடந்து பழக்கவழக்கத்திற் கொண்டு வரப்பட்ட காரணத்தால் அப்படிப்பட்டவை இங்கு அறுக்கப்படுகின்றன. புதுமைப்பெண் “நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” என்ற இலக்கணத்திற்கு அமைந்தவள். பெண்ணை வீட்டிற்குள்ளே பூட்டிவைப்பதைக் கடிந்து பெண்கல்வி முதலிவற்றை வற்புறுத்தி விதவை மறுமணத்தை வேண்டி நின்றவர் பாரதியார். பெண்ணைத் தெய்வம் எனக் கொண்டு பெண்ணுக்குப் பாரதியாரளவு ஏற்றம் வழங்கும் தமிழ்ப்புலவர் வேறொருவருமிலர்.
பாரதியார் சமூகச் சீர்திருத்தத்தில் முனைந்து நின்ற பொழுது பாரதியை எதிர்த்து நின்றவர்கள் தாங்கள் சாத்திரம் கூறியபடி செய்வதாகவும் பழைய வழிநிற்பதாகவும் சமாதானம் கூறினர். சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்பவர்களும் புதுமை புகுவதை விரும்பாதவா்களும் இவ்வாறு கூறியதனால் பாரதி பழைய சாத்திரங்களைப் பல இடங்களிற் கண்டித்தாள், சாத்திரங்கள் ஒன்றுங்கல்லாத பாமரர்களும் தாங்கள் சாத்திர வழியிற் நிற்பதாகக் கூறுவது பாரதியாருக்குக் கோபமூட்டுகிறது.“சாத்திரங்கள் ஒன்றுங்காணார் பொய்ச் சாத்திரப்பேய்கள், சொல்லும் வார்த்தையை நம்பியே” என்கிறார்.“கண்ணன் என்தந்தை” என்ற பாடற் பகுதியில் “உங்கள் சூன்யப் பொய்ச்சாத்திரங்கள் கண்டு நகைப்பான்” என்கிறார். மேலவர் கிழவரென்றே வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச்சுவடியை யெல்லாம் இன்று பொசுக்கி விட்டாலெவர்க்கும் நன்மையுண்டாம்” என்று சாத்திரங்களிற் சிலவற்றைத் தீயிலிடும்படி முதன் முதலிற் கூறியவர் பாரதியார். பாஞ்சாலி சபதத்திற் பாஞ்சாலி மூலமாகவும் சாத்திரங்களைச் சாடுகிறார் அவர். இராவணன் சீதையைக் கவர்ந்து வந்தபோது, அவன் செய்கை தருமத்துக்கு ஒத்தது என்று இராவணன் அழைத்த சாத்திரிமார் கூறினரென நையாண்டி செய்து “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்கிறாள் பாஞ்சாலி.“சூத்திரனுக்கொரு நீதி தொண்டச் சோற்றுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம். என்று சாதிப்பிரிவினைக்கு ஆதாரமாயமைந்த சாத்திரத்தைச் சதியென்று கண்டிக்கிறார்.“கண்ணன்- என் சற்குரு” என்ற பாடற் பகுதியில், “சாத்திரங்கன் பல தேடினேன் . அங்குச் சங்கையில்லாதன சங்கை யாம்- பழங் கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் பொய்மைக் கூடையில் உண்மை மிடைக்குமே எனச்சாத்திரத்தைப் பொய்மைக் கூடையெனக் கூறுகிறார். வடவர் செல்வாக்கினாலே தமிழ் நாட்டிற் காலூன்றி வேருன்றி விட்டசாதிப்பாகுபாடு கல்வியெறியட்பட வேண்டும் என்பது பாரதியார் கருத்தாகும்.‘செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே எண்ணியிரூப்பார் பித்தமனிதர். அவர் சொல்லுஞ் சாத்திரம் பேயுரையாமென்றிங் கூதேடா சங்கம்” என்னும் பொழுது சமயநெறிக்காலத்தினும் தத்துவநெறிக்காலத்தினும் போற்றப்பட்ட கருத்துக்கள் சில பேயின் உரைகளென்றே கூறிவிடுகிறார்.“பழமை பழமையென்று பாவனை பேசலன்றிப் பழைமையிருந்த நிலை- கிளியே பாமரரேதறிவார்” என்ற கூற்றிவிருந்து பழைமையை ஆராய்ந்தறியாத பாமரரெல்லாம் பழைமையைப் பற்றிப் பேசித் தம்முடைய மூடக்கொள்கையை நிலை நாட்டப் பழைமை வாதத்தைத் துணைகொள்வது பாரதியாருக்குச் சினத்தை உண்டாக்குவது தெரியவருகிறது.
பாரதியாரின் புதுமைக் கருத்துக்கள் சில, அவருடைய“உயிர்பெற்றதமிழர்பாட்டு” என்ற பகுதியிற் காணப்படுகின்றன. தமிழ் இந்துக்களுக்கு வேதம், தெய்வம், புராணம் என்பன இரத்தத்தோடு ஊறியவையாக இருக்கின்றன. பாரதியார் அச்சொற்களின் பழைய பொருள்களைக் கடிந்து அவற்றிற்குப்புதிய பொரூள்கள் வழங்குகிறார். உண்மையின்பேர் தெய்வமென்போம். அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக்கண்டோம், உண்மைகள், வேதங்கள் என்போம்பிறிது உள்ளமறைகள் கதையெனக்கண்டோம், புராணங்கள்பற்றி, “கவிதை மிக நல்லதேனும் அக்கதைகள் பொய்யென்று தெளிவுறக்கண்டோம்.0 புவிதனில் வாழ்நெறிகாட்டி நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்” என்கிறார்.
“உயிர்பெற்றதமிழர்பாட்டு” என்றபகுதியும் “போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்” என்றபகுதியும் பாரதியார் எத்தகைய சமுதாயமாற்றத்தை விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டுவன.“சென்று போன பொய்யெல்லாம் மெய்யாகச் சிந்தை கொண்டு போற்றுவாய் போபோபோ, வென்றுநிற்கும் மெய்யெல்லாம் பொய்யாக விழிமயங்கி நோக்குவாய் போபோபோல,என்ற பகுதி பாரதியார் தம்காலப் பாரத சமுதாயத்தைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் பாடியது. பாரதியார் பாடல்களிலே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்துக்கள் தமிழ்ச்சமூகத்திற்கு புத்துணர்ச்சியை வேண்டி, சமூக ஊழல்களைத் தாக்கித் தூண்டுகிற வடிவம் பெறுகின்றன. பாரதியார் தம்காலத்தில் ரஷ்யாவில் நிகழ்ந்த பொதுவுடைமைப் புரட்சியையும் வியந்து பாடியுள்ளார். பாரதநாட்டிலும் பொதுவுடைமைச் சமூதாய அமைப்பு ஏற்படவேண்டுமென்று விரும்பினார்அவர்.
பாரதியார் கடவுளர் பலரையும் பாடியுள்ளார் கண்ணனைப்பற்றி ஒரு காவியம் பாடியிருக்கிறார். பராசக்தி அவரது உபாசனாதெய்வமாகத் தெரிகிறது ஞானப்பாடல்கள், தோத்திரப்பாடல்கள், பல அவர் பாடியதைக்கொண்டு. “பாரதியார் பாரத நாட்டுப்பழைய மரபில் நிறையைப்பாடியிருக்கிறார். அவர் ஒரு வேதாந்தி, என்று சிலா் கூறுவர். ஆனால் பாரதியார் இத்துறைகளிற் பாடிய பாடல்களைக் கவனித்தால் அங்குள்ள புதுமை புலப்படும். பாரதியார் சிவலோகம், வைகுந்தம் போக விரும்பிப்பாடவில்லை. இந்த உலகில்வாழவேண்டுமென்றே பாரதியார் வரம் கேட்கிறார் .நாமும் உலகமும் நன்கு வாழ வழிசெய்யும்படியே அவர் கடவுளரை வணங்குகிறார். தமிழிலக்கியத்தில் பாரதியாருக்கு முன்பு தோன்றிய பக்திப்பாடல்களில் இத்தகைய சில கருத்துக்கள் அருகியே காணப்படுகின்றன. பாரதியார் பாடல்களில் இந்தக் கருத்துக்களே செறிந்து முதன்மையாகக் காணப்படுகின்றனர்‘நாட்டு மக்கள் நல முற்று வாழவும் நானிலத்தார் மேனிலை எய்தவும்‘தாம் பாடவிரும்புவதாகப் பாரதியாரே கூறுகிறார்..‘ தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும், என்ற அடிகள் பாரதியாருக்கு உலகவாழ்விலிருந்த ஈடுபாட்டைக்காட்டுகின்றன. செல்வம், இன்பம், புகழ் என்பவற்றையே இவர் பராசக்தியிடம்வேண்டுகிறார்.‘எண்ணில்லாத பொருட்குவைதானும் ஏற்றமும் புவியாட்சியும் தருவள் இன்றெனதன்னையென் காளிமண்ணில் யார்க்குந் துயரின்றிச் செய்வேன் வறுமையென்பதை மண்மிசைமாய்ப்பேன்‘என்றஅடிகளில் தாம் உலகில் நன்றாக வாழ்ந்து மற்றவர்களை நன்றாக வாழச்செய்ய வேண்டுமென்று பாரதியார் காளியைப் பாடி வேண்டுகிறார்.
இந்தியத் தத்துவங்கள் சிறப்பாகச் சமணம், பெளத்தம் என்பன துன்பமே இவ்வுலக இயற்கையென்றும் இவ்வுலக வாழ்விலிருந்து விடுபட்டாலே இன்பமென்றும் கூறிவந்தன. வாழ்வுதுன்பமென்று எப்பொழுதும் நினைத்து, அதனால் வாழ்வைத் துன்பமாக்கும் போக்குப் பாரதியாருக்குப் பிடிக்கவில்லை. இன்பத்தை நினைத்து. அதனால் வாழ்வை இன்பமயமாகச் செய்யவேண்டுமென்று பாரதியார் விர்ம்பினார். துன்பமே இயற்கையென்னும் சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம் யாவுமவள்தருவாள்‘ என்று பாரதியார் பாடுகிறார். அவன் என்று அவா் இங்கே கூறுவது பராசக்தியினையாகும். இன்பத்தை நினைக்கும் பொழுது உலகில் நிறைய இன்பங்கள் இருப்பது தெரியவருகிறது.‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா இறைவா‘என்று வியக்கிறார். இவ்வுலக வாழ்க்கை சிறப்பதற்குப் பொருள் வேண்டும். பொருட் செல்வத்திற்குத் தெய்வமான திருமகளைப் பாரதியார் சிறப்பாகப் பாடியிருக்கிறார். திருக்காதல், திருவேட்கை, திருமகள்துதி, திருமகளைச்சரண்புகுதல் என்ற பகுதிகளிலெல்லாம் இவ்வுலக வாழ்வு சிறத்தற்கு வேண்டும் பொருட்செல்வத்தைப் பாரதியார் விரும்பிப்பாடுகிறார்.
பாரதியார் பாடிய ஆத்திசூடியை ஒளவையார் பாடிய ஆத்திசூடியுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், பாரதியார் புதுயுகக்கவிஞர் என்பது புலப்படும்,எழுச்சியுற்று அல்லலுற்ற தமிழகத்துக்கு அமைதியைப் போதிக்க எழுந்தது ஒளவையாரின் ஆத்திசூடி. உறங்கிநிலை தடுமாறிய தமிழகத்துக்குப் பள்ளியெழுச்சி பாட எழுந்தது பாரதியாரின் ஆத்திசூடி,“ஆறுவதுசினம்” என ஒளவையார் கூற“ ரெளத்திரம்பழகு”என்பர் பாரதியார். “தையல் சொற்கேளேல்” என்று ஒளவையர் கூறுவதற்கு நேர் எதிரானது பாரதியாரின் “தையலை உயர்வுசெயல் என்பது. “தொன்மை மறவேல்” என ஒளவையார் விளம்பப் பாரதியார் “தொன்மைக்கு அஞ்சேல்” என அறிவுறுத்துவார்.“போர்த்தொழில் புரியேல்” ”துாண்விரும்பேல்” “முனைமுகத்து” “வெட்டெனப்பேசேல்”,என்ற ஒளவையாரின் அறிவுரைகளை “போர்த்தொழில்பழகு” “ஊண்மிகவிரும்பி” “முனையிலேமுகத்துநில்,“நேர்படப்பேசு” “வெடிப்புறப்பேசுடு” என்ற பாரதியாரின் அறிவுரைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒளவையார் சாத்துவிககுணத்தை இலட்சியமாகக் கொள்வதும், பாரதியார் இராசத குணத்தை இலட்சியமாகக் கொள்வதும் தெளிவாகின்றன. சமய நெறிக்காலத்தினும் தமிழ்நாட்டில் ஒருவித எழுச்சி காணப்பட்டபோதிலும், அது நேரடியாக உலகியல் சம்பந்தப்பட்டதாக அமையவில்லை. இயற்கை நெறிக்காலத் தமிழர் வாழ்க்கையிற் போற்றப்பட்ட சில பண்புகள் அக்காலத்தின் பின்பு அறிவியல் நெறிக்காலத்தினும் வேண்டப்பட்டு நிற்பதைக் காணலாம். தமிழ்ச்சமூகம் இவ்வுலக வாழ்விலே சிறப்புற்றுத் தன்மானத்தோடுதலை நிமிர்ந்து வாழ வேண்டுமானால் உலகியல் ஈடுபாடும் இராசதகுணமும் ஓரளவது வேண்டும் என்ற உணர்வு பாரதியாருக்கு இருந்துள்ளது.
தமிழரின் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியல் தமிழ்மொழியில் வந்து சேர்வதிலேயே தங்கியிருக்கிறதென்பதைப் பாரதியார் உணர்ந்தவா். அறிவியற்கலை யாகிய காலத்திற்கேற்ற உரத்தினையிட்டு வளர்க்கப் பெறாவிட்டால் தமிழ் அழியக்கூடும் என்பதும், தமிழ் அழிந்தால் தமிழர் வீழ்வர் என்பதும் பாரதியாருக்குப் புலப்பட்டிருக்கின்றன.‘புத்தம்புதிய கலைகள் பஞ்சபூதச்செயல்களின் நுட்பங்கள்கூறும், மெத்தவளருதுமேற்கே அந்தமேன்மைகள் கலைகள் தமிழினில் இல்லை, என்றுகுறையைச் சுட்டிக்காட்டியபாரதியார் ”சென்றிடுவீ-ரெட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள்யாவும். கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” எனத் தமிழ்த்தாய் மூலம் தமிழர்களுக்கு ஆணையிடுகிறார் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாதபுகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும், என்ற பகுதியிலும் பாரதியார் அறிவியல் நெறிக்காலத்தை வரவேற்கிறார் என்றுகூறலாம்.
திலகர் தூவிய விடுதலை விதைதமிழ் நாட்டிற்பாரதியாக முளைத்தது என்பர். மகாராட்டிரத்தைச் சேர்ந்த திலகர் பாரதி காலப்பாரத நாட்டில் விடுதலைக்காக உழைத்த தீவிரவாதியாவர். பாரதியாரின் அரசியற்குரு அவரெனலாம். பாரதியார் காலத்திலேயே, வ.உ.சி.யும் தேசியக் கப்பலைத்தூத்துக்குடியிலிருந்து ஒட்டித் தமிழ்மக்களுக்குப் புதிய உணர்ச்சியை ஊட்டினார். ஆனால், பாரதியார் மறையுமுன்பே, காந்தி இந்தியத் தேசிய இயக்கத்தில் புகுந்துவிட்டார். திலகரின் தீவிரவாதமும் கோகலேயின் மிதவாதமும் காந்தியத்தின் தலைமயை ஏற்றுக்கொள்ளூம் நிலைபாரதியார் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. நாட்டு அரசியல் விடுதலை, அதைஅடைவதற்கு வேண்டிய சிர்திருத்தம், இவைஇரண்டும் அகிம்சை முறையில் அமைவனவாக வேண்டும் என்பது காந்தீயத்தத்துவம் ஆகும். இந்துமதத்தின் சாராம்சம் என்று ஏற்றுக்கொள்ளப்படத்தக்க முறையில் காந்தீயம்விளங்குதிறது. காந்தி மானிடர்க்குள் ஒரு தெய்வமாகமாறிக்கொண்டிருந்தார். பாரதகாலத்திலிருந்த தருமரின் மறு அவதாரம் அவர் என்று வருணிக்கப்படத்தக்க நிலை உருவாகிக்கொண்டிருந்தது. பாரதியார் காந்தீயத்தை ஏற்கிறார் காந்தீயம் நாட்டிற் செல்வாக்கடையமுன்பாக காந்தீயத்தை வெகுவாகப்புகழ்ந்து. காந்தியே விடுதலை இயக்கவழிகாட்டி யெனப் பாராட்டியுள்ளார். இது கவிஞரின் தீர்க்கதரிசனமாகலாம். பாரதியாரின் பின்பு இந்தியவிடுதலைமியக்கமும் காந்தீயமும் இரண்டறப்பிணைந்து விடுகின்றன எனலாம்.
பாரதியாருக்குப் பின்பு, தமிழ்நாட்டுஅறிஞர்கள், பெருமக்கள், தம்மைப்பாரதிபரம்பரையிண்என்றுகூறுவதிற்பெருமைகாணத்தொடங்கிவிடுகிறார்கள்.பாரதியார்பாடல்களிலிருந்நு, எல்லாரும், தத்தமக்குச்சார்பான ஆதாரங்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். தமிழருக்குள்ளே பிரிவுகளும் பிளவுகளும் ஏற்பட்டபோதிலும் பாரதியார் இன்று எல்லாருடைய மதிப்புக்கும் பாத்திரராகிவிட்டார் என்று கூறலாம்.
தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் இந்திய விடுதலை இயக்கமும் சமூகச் சீர்திருத்த இயக்கமும் பிரிந்தியங்க வேண்டியநிலை வெகு சீக்கிரத்திலேயே ஏற்பட்டது. இந்தியாவின் ஏனையபகுதிகளில் அவற்றுக்கிடையே தோன்றிய ஒருமைப்பாடு தமிழ்நாட்டிலே தோன்றவில்லை. இஸ்லாமியர் பெரும்பான்மையினர் இந்தியவிடுதலையியக்கத்திற் சேராதது போலத்தமிழ்நாட்டினும் ஒருசாரார் விடுதலையியக்கத்துக்கு ஒத்துழைப்பு அத்தகையநிலைக்கு வரலாற்றுக்காரணங்கள் சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத்தினும்கூட, அந்தணர் செல்வாக்குத் தமிழ்நாட்டில் இருந்ததற்குச்சான்று உண்டு. சமயநெறிக்காலத்திலும் தத்துவநெறிக்காலத்திலும் அந்தணர் தமிழ்நாட்டிற் குடியேறியதற்கும் நிலக்கிழார்களாக வளர்ந்ததற்கும் சாசனச்சான்றுகளும் பிறசான்றுகளும் நிறையஉண்டு. ஆந்திரப்பிரதேசம் மைசூர்கேரளம் என்னும் மாநிலங்களிலும் வரலாற்றின் போக்கு இவ்வாறே இருந்த போதிலும் தமிழ்நாட்டிற் போல அந்தணர் அல்லாதவாபிளவு, பிறமாநிலங்களில், ஆழமாக ஏற்படவில்லை மாநில மொழிகள் வடமொழிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளன, வடமொழிச்செல்வாக்குக்கு அப்பாற்பட்ட தனித்தஇலக்கண இலக்கியப்பாரம் பரியம் தொல்காப்பியம் சங்கஇலக்கியங்கள் போன்றவை பிறதிராவிட மொழிகளில் இல்லை. ஏனைய திராவிட மொழிகள் சங்கதநெடுங்கணக்கினுள்ள ஒலிகள் யாவற்றையும் தாம் உடையனவாயிருப்பதால், வடமொழிச்சொற்கள், சொற்றொடர்களை உபயோகிப்பதில் அவற்றுக்கு இடர்ப்பாடு இருப்பதில்லை. தமிழ்மொழிக்கு இலக்கிய இலக்கணங்களிலே தனித்தன்மை இருந்ததால் வடமொழியோடு தமிழை ஒப்பிட்டுத்தமிழின் பெருமைபேசும் இயல்பு என்றும் இருந்துவந்திருக்கிறது. அந்தணர்பலர்தாம் ஆரியர்என்றும், தமதுமொழிசங்கதமொழியென்றும், தாம்தமிழர்யாவரிலும் உயர்ந்தோர் என்றும் கூறித்தமிழ்மக்களிலிருந்து தம்மைப் பிரித்துவைத்திருந்தனர்.
ஆங்கிலக் கல்வி தமிழ்நாட்டில் இடம் பெற்றதும் ஆங்கிலங் கற்று உத்தியோகங்கள் பெற்றுக் கொணடவரூள்மிகப் பெரும்பாலோர் அந்தணர்களே யாவார்கள். சங்கத மொழிப்பயிற்சியில் சந்ததிசந்ததியாக ஈடுபட்டு வந்த அந்தணருக்கு ஆங்கிலமொழிப்பயிற்சியில் ஈடுபடுவது சுலபமாக இருந்துள்ளது. சமயக்கொள்கையைக் காட்டிச்சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்று அதன் மூலம்பொருளாதாரத்துறையில் தம்முடைய நிலையை வலுப்படுத்திய அந்தணர் இக்காலத்தில் அரசியற்றுறையிலும் உயர்ந்தன. இந்தியவிடுதலை இயக்கத்தினும் தமிழ்நாட்டு அந்தணர் பலர் தலைவராயின். அவ்வியக்கம் அகில இந்திய இயக்கமாக இருந்ததால் அந்தணருக்கு எதிரான இயக்கமாக அதுமாறமுடியாது. எனவே அந்தணரல்லாதவருக்கு நீதிகோரும் நீதிக்கட்சி தமிழ்நாட்டிலே தோன்றியது. நீதிக்கட்சி சமூகச்சீர்திருத்தத்திலே முழுக்கவனஞ் செலுத்திற்று. அந்தணரல்லாதாருக்கு இழைக்கப்பட்ட அநீதியைத்துடைப்பதே அதன்நோக்கம்.
இந்திய விடுதலை இயக்கத்திலே தமிழ்நாட்டு அந்தணரும் நாட்டு விடுதலையிற் பேரார்வமுள்ள பிறரும் சேர்ந்தனர். இராஐாஜி, கல்கி, திரு.வி.க. சத்தியமூர்த்தி என்போர் இந்தியவிடுதலை இயக்கத்தில் முன்னின்றனர். பெரியார் ஈ.வே,ரா. காங்கிரஸில் சேர்ந்து உழைத்து மனம் வெறுத்து நீதிக் கட்சியிற் சேர்ந்தார்.
அவர், இராஜாஜி சென்னை முதன் மந்திரியாக வந்து இந்தியைப் பாடசாலைகளிற் புகுத்த போது இந்திக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர். நீதிக் கட்சியில் இருந்தவர்களில் ஒரு பகுதியினரே திராவிடக்கழகத்தைத் தோற்றுவித்தனர். பெரியார் இக்கழகத்தின் ஆயுட்காலத் தலைவராவார். வடவரிலும் அந்தணரிலும் எல்லையற்ற வெறுப்பைக் காட்டியது கழகம். முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிய தைக் கண்டு பெரியாரும் திராவிட நாடு வேண்டுமென்றார். இந்தியா விடுதலை பெறமுன்பு, அது இந்துஸ்தான், பாகிஸ்தான், திராவிடநாடு என மூன்றாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று பெரியார் கருதினார். ஆனல், பெரியாரின் கேளிக்கைக்குத் தமிழ்நாட்டிலேயும் அதிகம் ஆதரவு இருக்கவில்லை. இந்திய விடுதலை இயக்கத்தை நேரடியா மிக்கக் கண்டிக்குமளவிலேயும் பெரியார் சென்றார். வடவர் ஆதிக்கம் மிக்க சுகந்திர இந்தியாவிலும் பார்க்க ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தும் அடிமை இந்தியா சிறந்ததெனப் பெரியார் பிரசாரஞ்செய்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது அத்தினத்தைத் துக்கதினமாகக் கொண்டாட வேண்டுமென்று பெரியார் விரும்பினர்.
பாரதியாருக்குப் பின்வந்த கவிஞர்களுள் ஈடிணையற்றவரான பாரதிதாசன் திராவிடக் கழகத்தின் கவிஞர் எனலாம். பாரதிதாசன் சீர்திருத்த இயக்கம், திராவிட இயக்கம், நாத்தீக இயக்கம், பொது வுடமை இயக்கம் என்பவற்றோடு தொடர்புடையவர். ஆனால், தமிழியக்கத்துக்குட்பட்டதே அவர் மற்றைய இயக்கங்கள். அவர் உயிரியக்கமே தமிழால் நிகழ்ந்ததெனலாம். அவரது இசை, காவியம், கவிதையெங்கும் தமிழியக்கம் பரந்து நிற்கிறது. மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் பாரதியார் காலத்திலேயே தோன்றிவிட்டது. மறை மலையடிகளுக்கு முன்பே தமிழுக்கு வடமொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் வன்மையுண்டெனக் கால்டுவெல் கூறிச் சென்றார். மறைமலையடிகளின் இயக்கம் மொழித்தாய்மை பேணும் இயக்கமாக இருந்தபோதிலும், அது அந்தணரல்லாதார், சங்கதமொழியைப் போற்றிய அந்தணருக்கெதிராக நடத்திய இயக்கமாகவும் ஒருவகையில் இருந்தது. தமிழ் சைவசமயிகளுக்கு சங்கதம் வேண்டியதில்லை யென அவர் காட்ட முனைந்தார். அவர் சங்கதமொழித் தொடர்பு வேண்டாத தமிழ்ச் சைவத்தைப் பிரசாரஞ் செய்தார்.
ஆனால், பாரதிதாசனில் அந்தணர் எதிர்ப்பு இந்து சமய எதிர்ப் பாகவும் காணப்பட்டது. அவர் கோவிலையும் உருவவழிபாட்டையும் கண்டித்துப் பாடியுள்ளார். பாரத நாட்டையும் இந்திய விடுதலையையும் அவர் பாடவில்லை. பாரதியனிடம் இருந்த பழைமைப் பற்றுப் பாரதிதாசனிடம் காணப்படவில்லை. அந்தணர் தமிழ்நாட்டில் செல்வாக்குப்பெற உதவிய சமயநெறியையும் பாரதிதாசன் முற்றாக வெறுத்தார். அந்தணரையும் அவர்கள் செல்வாக்குக்குக் காரணமான, இந்து சமயத்தையும் பல சந்தர்ப்பங்களிலே சமயக் கொள்கைகள் பல, அவருக்கு மூடக் கொள்கைகளாகத் தெரிந்தன. இயற்கை நெறிக் காலத்திலிருந்தது போலக் காதலும் வீரமுமே தமிழ்ச் சமூக வாழ்வில் சிறப்பிடம் பெற வேண்டுமென்று விரும்பினார். அவர் வள்ளுவர் காட்டிய அறநெறியிலும் மதிப்பு வைத்திருந்தார்.
பாரதியாரைப் புதுமைக் கவிஞர் என்று கூறுபவர்கள், பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞர் என்று கூறுவார்கள். சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை வற்புறுத்தி உணர்ச்சி வேகத்தோடு கூறும் போக்கில், பாரதியனின் வளர்ச்சி பாரதிதாசனில் காணப்படுகிறதெனலாம். தீண்டாமை, பெண்ணுரிமை என்பவைகளைப் பற்றி இவர் பாடியவை பாரதியார் பாடியவற்றிலும் பார்க்க உணர்ச்சி கூடியனவாகக் காணப்படுகின்றன. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பவற்றைப் பற்றி இவரளவு பொங்கி வழியும் ஆர்வத்தோடு பாடிய தமிழ்ப் புலவர் வேறு ஒருவருமிலர். தமிழை அறிவியலால் வளம்படுத்த வேண்டுமென்பதனை இவர், ‘வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு தெளிவுறுத் தும் படங்களோடு சுவடியெல்லாம் செய்து செந்தமிழை செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்‘ என்று கூறுவர்.
அறிவியல் நெறிக்காலம் என்பதற்கேற்ப இக்காலத்தில் ஆராய்ச்சி முறை வளர்ந்து வருகிறது. தமிழ் இலக்கியம், தமிழர்சமயம், தமிழ் நாட்டு வரலாறு என்பவற்றில் ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. துரதிட்டவசமாக, ஆராய்ச்சி முடிவுகளும் அந்தணர் சார்பானவரின் ஆராய்ச்சி முடிவுகள் அந்தணரல்லாதார் சார்பானவரின் ஆராய்ச்சி முடிவுகள் என வகுக்கப்படுகின்றன. தமழர் வடவருக்குக் கடமைப்பட்டவர் என்று கூறினால் அது அந்தணர் சார்பானவர் ஆராய்ச்சி முடிபென்றும், தமிழர் வடவருக்கு முன்பு சீருஞ்சிறப்பும் பெற்றிருத்தனரென்றால் அது சார்பானவர் அல்லது தமிழர்சார்பானவர் ஆராய்ச்சி முடிபென்றும் கொள்ளப்படுவின்றன. நடுவு நிலைமையின்றி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி கள் என்ற பெயருக்கே இழிவைக் கொண்டு வருபவை. தமிழ்நாட்டில் இந்நிலை நீங்க வேண்டும். உண்மையை அறிதலே ஆராய்ச்சியின் நோக்கமாக வேண்டும். கருத்துவேறுபாடுகளைக் கண்டு சீறுதல் கூடாது. அவை மதிக்கப்படவேண்டும். உலகில் முடிந்த முடிபாக எதுவுமில்லை.
சாதாரண மக்கள் வாழ்க்கையை முழுவதும் பொருளாகக் கொண்டு இலக்கியஞ் செய்யும் போக்குச் சென்ற நூற்றாண்டு முடிவிலிருந்து காணப்படுகிறதெனலாம். ஆரம்பத்தில் அத்தகைய இலக்கியங்களில் அறக்கருத்துக்கள், போதனைகள், பழமொழிகள் இடம் பெற்றன. இவை கதையோடு இயைந்து வரலாமே தவிரத் தனியே வரக்கூடாது என்ற மரபு காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நாஞ்சில் நாட்டுச் சமூகச் சீர் திருத்தத்தை. முன்னிட்டு நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்னும் அங்கத இலக்கியத்தை எழுதினார். தீண்டாமை, மதுபானக் கேடு என்பவற்றை விலக்குவதற்கான கருத்துக்களை அமைத்து இராஐாஜி கதைகள் எழுதினார்.
அரசியல், சமூகச் சீர்திருத்தம் என்பவற்றின் இயக்கங்களோடு நேரடியாகச் சம்பந்தப்படாது சமூகவாழ்வில் தம் சிந்தனையைச் செலுத்திய எழுத்தாளர் பலர்“மணிக்கொடிக் குழுவினர்” எனப்படுகின்றனர். இக்குழுவினருள் வ. ரா, தலைசிறந்த சீர்திரூத்தவாதி என்றும், புதுமைப்பித்தன் தலைசிறந்த இலக்கிய கர்த்தா என்றும் கொள்ளப்படுகின்றனர். வ.ரா.வின் படைப்புக்களிற் சீர்திருத்தக் கருத்துக்களே விஞ்சி நிற்கின்றன. சமூகச் சீர்திருத்தத்தை நேரடியாகக் கூறாமல் சமூக வாழ்க்கையைத் தாம் கண்டமாதிரியும் கேட்ட மாதிரியும் சித்திரிக்க முனைந்தவர் புதுமைப்பித்தன் எல்லாம். இவர் கதைகள் சமூக ஊழல்களை எடுத்துக் காட்டுவன. தம் காலத் தமிழ்மக்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கிறதெனக் காட்ட முனைந்தவர் புதுமைப் பித்தன் எனலாம். இவர் கதைகளைப் பற்றி விமர்சகர் ரகுநாதன் கூறுவது“அவருடைய கதைகள் சமூகத்தின் பச்சையுண்மைகளைப் பிளந்து காட்டும். சமூகத்தின் நாசகாரக் கும்பலுக்குச் சுரங்கவெடி வைக்கும். அவருடைய குத்தலான நையாண்டி எதிரிகளை இடுப்பில் குத்திவாங்கும். ஆகவேதான் அவருடைய கதைகள் பலருக்குப் புகைச்சலைத் தந்தன”என்பது. புதுமைப்பித்தனே தம்முடைய கதைகளைப்பற்றிக் கூறியவை. “சுமார் இரு நூறு வருஷங்களாக ஒரு விதமான சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம், சில விஷயங்களை நேர் நோக்கிப் பார்க்கவும் கசுகிறோம். குரூரமே அவதாரமான இராவணனையும் ரத்தக் காளியையும் மனக் குரூபங்களையும் விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப் போகப் போகிறது? நாலு திசைகளினும் ஸ்டோர்க் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீ தாம்மாள், பேரம்பேசும் பிரமநாயகம்- இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல் காதல் கத்தரிக்காய் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்று மில்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவுமில்லை”, என்பன. புதுமைப்பித்தன் “யதார்த்த இலக்கிய” வழிகாட்டியாகக் கொள்ளப்படுகிறார். இவா் திருநெல்வேலி மாவட்ட வேளாளர் வாழ்க்கையைத் தம்முடைய கதைகளில் நன்கு கையாண்டுள்ளார். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் சிற்சில பிரதேசங்கனிலே வாழ்கின்ற எழுத்தாளர்களும் தத்தம் பிரதேச ‘வாழ்க்கைகளை நுதலிய பொருளாகக் கொண்டு சிறுகதைகளும் நாவல்களும் எழுதி வருகிறார்கள்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு தமிழ்மக்களின் எதிர்கால வாழ்வு எப்படி அமையவேண்டுமென்ற நோக்கில் ஏற்பட்ட வேறுபாடு கள் அரசியற் கட்சிகள் தோன்றி இயங்கக் காரணமாயின. இந்திய விடுதலை இயக்கமான காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. விடுதலையை இலக்காக வைத்து வளர்ந்து வந்த காங்கிரஸிக்கு விடுதலைக்குப் பின் இலட்சியம் இல்லானு போயிற்று. ஆளும் கட்சி பழம்பெருமை பேசுவதாகவும் பழைமையைப் போற்றுவதாகவும் மாறியது; ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்துப் பெருந்தொகையான வெளிநாட்டுக் கடனும் உள்நாட்டு வரியும் கொண்டு நாட்டுப் பொருளாதார வளா்ச்சி கருதிச் செயற்படுகிறது. செல்வர் சிலர், பெருஞ் செல்வராகின்றனர். சமூகத்திலுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் முன்னிலும் பார்க்க அதிகமாக வளர்கின்றன. பொதுவுடைமைக் கட்சியானது சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு வர்க்கபேதங்களைக் காரணங்களாகக் காட்டிப் புரட்சியைப் போதிக்கிறது. திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு வடவரின் சுரண்டுதலே காரணம் எனப் போதித்தது. அது பார்ப்பனீயத்தை எதிர்ப்பதையும் திராவிட நாடு நிறுவுவதையும் இலட்சியங்களாகக் கொண்டு பணியாற்றியது. அண்ணாத்துரை, கருணாநிதி முதலியோன் பேச்சும் எழுத்தும் தமிழ்நாட்டில் ஒருவித விழிப்பை ஏற்படுத்தின. தமிழ்நாட்டு வாசகர் தொகை பெருகுகிறது. மத்தியதர வகுப்பினரையே சித்திரித்துக் கொண்டு வந்த தமிழ் இலக்கியம் தொழிலாள வகுப்பினரதும் பாட்டாளிகளதும் வாழ்க்கையைச் சித்திரிக்கத் தொடங்குகிறது. பொதுத் தேர்தல்களில் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வளர்ந்து வருகிறது. ஆந்திரப்பிரதேசம், கேரளம், முதலிய மாநிலங்களில் பொதுவுடைமைக் கட்சி செல்வாக்கு பெறுகிறது. மக்கள் வறுமையை நீக்க முயலாத ஆட்சி நிலைக்கமுடியாதென்ற நிலை ஏற்படுகிறது, காங்கிரஸ் மக்கள் ஆதரவைப் பெறுவதற்காகச் சோசலிஸ்ட் சமூக அமைப்புக்குப் போராடப் போவதாகக் கூறத் தொடங்குகிறது. இந்திய அரசு ஆக்கிய சட்டம் ஒன்றிற்கிணங்கத் தி.மு.க.பிரிவினைக் கொள்கையைக் கைவிடுகிறது. தேர்தலில் பொதுமக்கள் ஆதரவை நாடத் தொடங்கிய தி.மு.க. பார்ப்பனீய எதிர்ப்பையும் கைகழுவுகிறது. இன்று கழகம் தீவிர தமிழ்பற்றுள்ளதாக இந்தி எதிர்ப்பை முன்னின்று நடத்துகிறது. சென்னை அரசைத் தமிழக அரசாக மாற்றியுள்ளது.
இருபதாண்டுகளாகத் தொடர்ந்த காங்கிரஸ் ஆட்சியிற் பெருகி வந்த ஊழல்கள், மத்தியதர வகுப்பினரையும் தொழிலாளரையும் விவசாயிகளையும் கலக்கிய வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி ஏற்றம், வாழ்க்கைச் செலவேற்றம், உணவுத்தட்டுப்பாடு முதலிய பொருளாதாரப் பிரச்சனைகள், உணர்ச்சியைத் தூண்டும் மொழிப்பிரச்சனை இவை யாவும் மக்கள் மனத்தில் ஆட்சி மாற்றத் தின் தேவையை உணர்த்தின. 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க. பெருவெற்றி பெற்றுப் பதவியேற்றிருக்கிறது. அது சோசலிஸ்ட் சமூக அமைப்பையே வற்புறுத்தி வருகிறது. பகுத்தறிவைப் போற்றி வருகிறது. அறிவியல் உணர்வின் ஓர் அம்சமே பகுத்தறிவுப் பாதை எனலாம். தி.மு.க. அறிவியல் நெறியில் விரைந்து சென்றாலே புதிய உலகம் காண ஆசைப்படும் தம்முடைய ஆதரவாளர்களாகிய இளைஞர்களையும், மாணவர்களையும் திருப்திப்படுத்தலாம்.
உலகில் இப்பொழுது நடப்பது அறிவியல் யுகம். தமிழகம் உலகில் ஒரு சிறு பகுதி. தமிழகம் உலகிலிருந்து ஒதுங்கி வாழ முடியாது. ஈழத்தில் அறிவியல் நூற் கல்வி தமிழிலும் நடைபெறுகிறது. அறிவியல் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அறிவியற் சஞ்சிகைகள் பல தோன்றுகின்றன. அறிவியற் கருவிகள் கிராமப் புறங்களிலும் பரவுகின்றன. அறிவியல் நோக்க வளர்ச்சி பெறுகின்றது. அறிவியலின் தாக்கம் மக்கள் சிந்தனையை வெகுவாகப் பாதிக்கிறது. பகுத்தறிவானது முன் எக்காலத்திலும் பெறாத முக்கியத்துவத்தை இன்றைய மக்கள் வாழ்க்கையிற் பெறுகிறது. இவ்வுலக வாழ்க்கையிற் சிறப்புறும் வழி. இவ்வுலக வாழ்க்கையில் இன்பம் பெறும் வழி . இவற்றையே மக்கள் நாடுகின்றனா், அறிவியலை வேகமாக வளர்த்து அதன்மூலம் அடையக்கூடிய நன்மைகளை அடைவதே இன்றைய மனிதனின் குறிக்கோள் எனலாம். அறிவியல் நெறிக்காலம் தொடர்கிறது.
Copyright © 2013 - All Rights Reserved - Department of Computer Science, Faculty of Science, University of Jaffna