திட்டம் பற்றி ...
தமிழ் எண்ணிமத் திட்டமானது அச்சு வடிவிலுள்ள தமிழ் ஆவணங்களை எண்ணிம வடிவில் மாற்றுவதற்கான ஒரு கணிமத்தினை (மென்பொருளினை) உருவாக்குவதனையும் தமிழிலுள்ள சிறப்பு மிக்க நூல்களின் தொகுப்பு ஒன்றினை இணையத்தினூடு வெளியிடுவதனையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்பாடாகும்.
தமிழ் ஆவணங்களினை எண்ணிமப் படுத்தும் முயற்சியானது பல நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. “நூலகம்” நிறுவகம், “மதுரை திட்டம்" என்பன
இச்செயற்பாட்டில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றன.
தமிழ் எண்ணிம முயற்சிகளின் பிரதான வழிமுறையாக ஆவணங்கள் வருடிகள் மூலம் படங்களாக மாற்றப்பட்டு சேமிக்கபடுகின்றன.
இம் முறைமூலம் சேமிக்கப்படும் ஆவணங்களில் சொற்களினையோ சொற்தொடர்களினையோ தேடுதல், மொழிபெயர்த்தல் மற்றும் மொழியியல் ஆய்வுகளினை மேற்கொள்ள முடியாது.
தமிழ் எண்ணிமத் திட்டமானது தமிழ் எழுத்துருக்களினை அடையாளம்கண்டு தேடல், மொழிபெயர்த்தல் மற்றும் மொழியியல் ஆராய்ச்சிகளிற்கு பயன்படும் வகையில் எழுத்துக்களின் எண்ணிம வடிவில் ஆவணங்களினை சேமிக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த வகையில் இத் திட்டமானது தமிழ் ஆவணங்களினை எண்ணிமப்படுத்தும் முயற்சிகளிற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தின் பிரதான பங்காளர்களாக கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கணனி விஞ்ஞானத்துறையும் இணைந்துள்ளனர். இக்ரா இத்திட்டத்திற்கான நிதிப்பங்காளராக விளங்குகிறது.
இலங்கையின் இரு அந்தங்களில் அமைந்துள்ளன யாழ்ப்பாணத்தினையும் கொழும்பினையும் இயங்குமிடமாகக் கொண்ட பல வகையில் வேறுபட்ட இரு அமைபுக்களினால் ஒரு திட்டத்தினை முன்னெடுத்து வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான வழிவகைகளினை ஆராய்வதும் இத்திட்டத்தின் ஒரு உப நோக்கமாக அமைந்துள்ளது.
மேலும்...