முன்னுரை
சங்கிலி என்னும் பெயருடன் யாழ்ப்பாணத்னத அரசாண்ட மன்னர் இருவராவர். அவருள் செகராசேகரன் என்னும் சிங்காசனப் பெயருடன் நாட்டை ஆண்ட முதற் சங்கிலி கி.பி. 1519 முதல் கி.பி. 1565 வரை ஆட்சி புரிந்தான். சங்கிலிகுமாரன் என அழைக்கப்பட்ட இரண்டாம் சங்கிலி கி.பி 1616-1619 வரை ஆண்டான். இவனே யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன். இவ்விருவருள் முதற் சங்கிலியே இந்நாடகத்தின் தலைவனாவான். மயில்வாகனப் புலவர் தாம் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலையில் இவன் வரலாற்னற இரண்டாம் சங்கிலியின் வரலாற்றோடு மயங்க வைத்து இவன் போர்த்துக்கேயர் கையில் கொலையுண்டதாகக் கூறுவர்.
இந்நாடகம் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவில் சங்கத்து ஆடவரும் அரிவையரும் அரங்கில் ஆடியது.
நிற்க தமிழ்நாட்டின் வடபாகத்திலிருந்து செங்கோலோச்சிய அரசரின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றது. அந்நூலின் முற்பகுதியில் வரும் இலங்கை வாழ் தமிழர் வரலாறு. ஈழத்தத் தமிழ் மக்கள் வரலாற்றைப் பற்றிய விரிவான நூல் ஒன்று மிக விரைவில் வெளிவரும்.
இந்நூலை ஆக்குங்கால் உடனிருந்துதவிய நண்பர்க்கும் ஆயோலை தூக்கி ஆராய்ந்த அன்பர்க்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நூலினை நல்ல முறையில் அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத்தார்க்கும் எம் நன்றி உரியது. குற்றம் களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவிக்குமாறு பெரியோரை வேண்டுகின்றோம்.
க.கணபதிப்பிள்ளை
பல்கழைக்கழகம்,
பேராதனை.
1-12-56
பொருளடக்கம்
இலங்கை வாழ் தமிழர் வரலாறு
சரித்திரகாலத்துக்கு முந்திய யாழ்ப்பாணம்
இராமாயணத்தினின்று இலங்கை இராவணனால் ஆளப்பட்டு வந்த நாடு என அறிகின்றோம். இராவணன் அசுரவமிசத்தைச் சேர்ந்தவன். ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது தாசர் என்னுஞ் சாதியாரோடு போராடினார் என இருக்கு வேதம் முதலியவற்றால் அறிகின்றோம். அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நாகசாதியினரையே ஆரியர், "அசுரர்" என்னும் 'தாசர்' என்றும் அழைத்தனர் என்பது அறிஞர் கருத்து1. நாகர் என்னும் பெயர் தங்களில் வழங்கப்படவில்லை. எனினும், இருக்கு வேதத்தில் அசுரர் அல்லது தாசரைப்பற்றிப் பேசுமிடத்து ‘அஹி' (பாம்பு) என்ற சொல் வருகின்றது2.
“விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தினால் அடித்போது, வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் போல் அஹி என்பான் கிடந்தான்3".
இதினின்றும், பிறசான்றுகளினின்றும், நாகரை அசுரரென அழைத்தல் வழக்கமாய் இருந்ததெனத் தெரிகின்றது. அடுத்து, புராண காலத்தில் நாக அரசர்கள் கடலுக்குக் கீழேயுள்ள பாதாளத்திலிருந்து அரசாண்டவர் எனப் புராணங்கள் கடறும்.இக்குவாகுவின் மகனான அரியாசவன் என்பான் மகள் யாதுவை, தூயவர்மன் எனும் நாக அரசன்கடலுக்குக் கீழேயுள்ள நாட்டிற்குக் கொண்டுசென்றான் எனவும், அந்நாட்டின் பெயர் “இரத்தினத்துவீபம்” எனவும், அந்நாட்டிலுள்ளோர் நாவாய் பல வைத்திருந்தனர் எனவும், அவர் கடல் வணிகஞ் செய்தனர் எனவும், முத்துக் குளித்தனர் எனவும் அரிவமிசம் என்னும் புராண நூல் நவிலும் 4.
அசுரர் என்பார் திராவிடரென ஆராய்ச்சியாளர் முடிபுக்கு வந்திருக்கின்றனர் 5.
கெளதம புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்ததாக மகாவமிசம் கூறும். முதன் முறை மகியங்கனை என்னும் இடத்திற்கும், இரண்டாம் முறை நாகதீபத்துக்கும், மூன்றாம் முறை கலியாணி என்ற பெயருனடய களனி என்னும் இடத்துக்கும் வந்தார் எனவும், நாகதீபத்திலும் கலியாணியிலும் நாகர் வசித்தனர் எனவும், நாகதீபத்திலுள்ள அரச குடும்பத்தில் அரசு கட்டில் ஒன்றன் பொருட்டாக ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வந்தார் எனவும். அந்நூல் நவிலும். மேலும் நாகதீபத்தில் உள்ள அரச குடும்பத்தின் உறவினர் கலியாணியில் இருந்தனரெனவும் அப்பாளி நூல் கூறும் 6.
இதனின்றும், இலங்கையின் ஒரு பெரும் பிரிவில், பண்டைக்காலத்தில் நாகர் குடி பரவியிருந்ததெனத் தெரிகின்றது. இக்கருத்தினை, கி.பி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டளவில் எழுந்த மணிமேகலையும் வலியுறுத்தும். வட இலங்கையிலுள்ள நாகர் குடியிருப்பிற்குப் பண்டைய நாட்களில் தலைநகராய் இருந்தது கந்தரோடை என்னும் நகர் என ஆராய்ச்சியாளர் கருதுவர். மேலும் இந்தியாவிலிருந்து சங்கமித்தை புத்தகாயாவிலிருந்த புனித வெள்ளரசுக் கிளையை இலங்கைக்குக் கொண்டு வந்தபோது, இலங்கையின் வடபகுதியிலுள்ள சம்புகோளம் என்னுந் துறையில் வந்திறங்கினள் என மகாவமிசம் கூறும் 7.
பண்டைக்காலத்தில் வட இலங்கை கிரேக்க உரோமர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. .உண்மை அங்கு கண்டைடுத்த, கிரேக்க உரோம நாணயங்களினால் தெரிகின்றது 8.
நாகதீபமெனும் பகுதி எங்குள்னதெனச்சரித்திர ஆராய்ச்சியாளர் தடுமாறியிருக்கையில் வல்லிபுரக்கோயிலிலே செப்பேட்டுச்சாசனம், ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன்படி வட இலங்கையையே பண்டைக்காலத்தில் நாகதீபமெனக் 9 குறித்தனர் எனத் தெரிந்தது. விசயன் பிறப்பதற்கு,முன்னரேயே நாகதீபம் (வடஇலங்கை) மிகவும்செழிப்புள்ள பெரிய வணிகத்தலமாக விளங்கியது. பின்னர் இவ்வடபகுதியில் வாழ்ந்த நாக சாதியினர் காலத்துக்கு காலம் தமிழரோடு கலப்பாராயினர்.
அதனால் அண்மையிலிருக்கும் தமிழகத்திலிருந்து பல குடிகள் வந்திறங்கின. காலப் போக்கில் வட இலங்கை தமிழர் குடியிருப்பாக மாறியது. பல்லவ காலத்தில் வாழ்ந்த சைவ நாயன்மார் இலங்கையின் வடபகுதியிலுள்ள திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய தலங்.களைப் பாடியிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது. சைவசமயத்தை மேற்கொண்டொழுகிய தமிழர் இப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்பது இதனால் அறியப்படுமன்றே!
இதுவரை பெரும்பாலும் புராண வரலாறுகளைக் கொண்டும் மகாவமிசத்தில் சொல்லப்பட்டவற்றைக் கொண்டும் கர்ண பரம்பரைக் கதைகளைச் சேர்த்தும் ஒருவாறு இப்பகுதியின் பழைய வரலாற்னறத் தொகுத்துக் கூறினோம். இனி, பிறசரித்திரச் சான்றுகளின் துணைக்கொண்டு பிற்கால வரலாற்றினை ஒருவாறு ஆராய்வோம்.
உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை
பண்டைக்காலத்திலே, வட இலங்கை நாகசாதியினர் குடியிருப்பாக இருந்த காலத்து, சிங்கைபுரம் அல்லது சிங்கைநகர் என்று பெயர் கொண்டு விளங்கிய நகரத்திலே கலிங்கதேசத்திலிருந்து வந்து குடியேறிய குடும்பங்கள் சில வாழ்ந்து வந்தன. உத்தரப் பிரதேசமென்று மகாவம்சம் குறிப்பிடும் இப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ்க் குடும்பங்கள் பல வாழ்ந்து வந்தன 1. இக்காலப்பகுதியில் சிங்கள அரசர்கள் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையின் பிற பகுதிகளை ஆண்டு வந்தனர்.
மகாவமிசம் எடுத்து மொழிந்த அரச பரம்பரையின் வரலாற்னறத் தொடர்ந்து கூறும் சூளவமிசம் மேலும் 'ஆறு இராசாக்கள் காலம்' என்னும் பிரிவில் இவ்வுத்தரப் பிரதேசத்தில் கலகங்கள் முறைக்கு முறை யெழுந்தனவெனவும், அவற்றை அனுராதபுரத்திலிருந் தரசாண்ட அரசரின் சேனைகள் அங்கு போய் அடக்கி வந்தனவெனவும் இயம்பும் 2. சீலமேகன் என்னும் சிங்கள அரசன் மகன் மகிந்தன் என்பான் மாதோட்டத்தில் எழுந்த புரட்சியை அடக்கி, உத்தரதேசத்தைத் தனது ஆணைக்குள் ஆக்கினான் என அந்நூல் கூறும்.
ஈண்டுக் குறிப்பிடுங் காலத்திலே கலிங்க தேசத்தினின்று வந்து வட இலங்கையிற் குடியேறிய குடும்பங்களுக்கு உக்கிரசிங்கனென்பான் தலைவனாக இருந்தான் என ஊகிக்கக் கிடக்கின்றது. இவனைக் யாழ்ப்பாண வைபவமாலையும் கைலாய மாலையும் எடுத்து மொழியுமேயன்றித் தென்னிந்திய வரலாறே சூளவமிசமோ, கல்வெட்டுக்களோ யாதுங் கூறா குறித்த உக்கிரசிங்கன் தன் காலத்து வாழ்ந்த, ஏனைய உத்தரதேசத் தலைவரோடு சேர்ந்து அனுராதபுரத்திலிருந்தஈண்ட சிங்கள அரசருக்கெதிராகக் கலகங்கள் விளைத்துத் திரிந்தான் என எண்ண இடமுண்டு. சூளவமிசம் உத்தரப்பிரதேசத்னதப் பற்றியும் தமிழரைப் பற்றியும் தருங் குறிப்புக்களைப் பார்க்கும்பொழுது வட இலங்கைக்கும் தனியரசொன்று இருந்ததென நாம் ஊகிக்க கிடக்கின்றது.
அக்காலத்திலும் தமிழ்த் தலைவர்கள் அனுராதபுர அரசின்கீழ் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பிரதானிகளாயிருந்து ஆட்சி செலுத்தினரென்பது சூளவமிசத்திற் காணப்படும்பொத்தக் குட்டன் 4 என்பான் வரலாற்றினின்றும் தெரிகின்றது 5.
அன்றியும் அனுராதபுரம் சிங்கள நாட்டுத் தலைநகராய் விளங்கிய காலத்துத் தமிழ் அரசரும் காலத்துக்குக் காலம் அங்கு ஆண்டு வந்தனர் என்பது 6 இங்கு குறிக்கப்படத்தக்கது.
இன்னும் சிங்கள அரசர் சிலர் அரசியற்றொல்லைகள் ஏற்படுங்காலத்து வட இலங்கைக் குச் சென்று அங்கு தங்காலத்தை அமைதியாக்க் கழித்தனர் என்றும் தெரியவருகின்றது 7.
பின்னர் மகிந்தன் அனுராதபுரத்து அரசு பீடத்தேறி இரண்டாம் மகிந்தன் என்னும் பேரு.டன் ஆண்டு வருங்காலத்தில் அவ்வரசினுக்கு- உரினம கோரித் தப்புளன் முதலியோர் அவ்வரசினைக் கவரும் பொருட்டு மகிந்தனோடு போர் புரிந்து கலகம் விளைத்து வந்தனர் 8. அக்காரணத்தால் நாட்டில் அமைதி குன்றியது. அந்நிலையைப் பயன்படுத்தி வட பகுதியில் “வலிமையோடு விளங்கிய உக்கிரசிங்கன், வட பகுதியிலுள்ள தலைவர்களையெல்லாம் அடக்கியபின், மாற்றார் கைக்கு இலகுவில் படக்கூடிய கடற்கரைப் பட்டினமாகிய சிங்கைநகரைத் தன் தலைநகராகக் கொள்ளாது அங்கிருந்து வெளியேறிப் பாதுகாக்கக் கூடியதும், மாற்றார் கைக்கு எளிதில் அகப்பட முடியாததும், நிலப்பரப்பினால் சூழப்பட்டதும், பழைய நாகர் தலைநகராயிருந்ததுமான கந்தரோடை என்னும் நகரத்தினைத் தன் தலைநகராக்கினான். ஆளும் அரசனைத் தொலைத்து நாட்டிற் கலகங்கள் ஏற்படுங் காலங்களில் வலினமயுள்ளான் ஒருவன், தன் வலிமையினால் ஆங்குத் தன் ஆட்சியை நிறுவித் தானே அரசனாதல் சரித்திரங் காணாத தொன்றன்று.
இவ்வாறு அரசுகட்டிலேறிய .உக்கிரசிங்கன் “மாவிட்டபுரம்” என இப்பொழுது வழங்கும் ஊரில், தென்னிந்தியாவிலிருந்து உடல் நலங் காரணமாக வந்திருந்த “மாருதப்புரவீகவல்லி” என்னும் அரச கன்னிகையைக் கண்டு அவளைத். தன் வாழ்க்கைக் துணையாக ஆக்கிக் கொண்டான் என்று கூறும் வரலாறு 9. இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுள் ஒருவனாகிய சயதுங்கவரராசசிங்கன் தந்தையின் பின் செங்கோலோச்சினான்.
இஃது நிகழுங்காலையில் அனுராதபுரத் தினை முதலாஞ்சேன்ன் (கி. பி. 831-851) ஆண்டு கொண்டிருந்தான். இதே காலத்தில் தென்னிந்தியாவில் வலிமையோடிருந்த பல்லவ அரசு வலி குன்றியது. முதலாம் பாண்டியப் பேரரசு தலைதூக்கத் தொடங்கியது 10.
முதலாஞ்சேனன் காலத்துப் பாண்டிய அரசனொருவன் இலங்கை அரசினைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வட இலங்கையில் வந்திறங்கினானெனச் சூளவமிசமெனும் பாளிநூல் கூறும் 11. இப்பாண்டிய அரசன், வரகுணபாண்டிய பின்னும் பராந்தக நெடுஞ்சடையன் மகன் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் பாண்டியன் வந்திறங்கியதை அறிந்த சிங்கள அரசன் அவனுக்கெதிராகப் படையொன்றினை யனுப்பினான். இச்சிங்களப்படையைப் பாண்டியமன்னன் எளிதிற் தோற்கடித்து உத்தரதேசத்தைக் கைப்பற்றி “மகாதாலித்த காமம்” 12 என்னும் ஊரில் பாடி வீடமைத்துத் தன்படையுடன் இருந்தான். உத்தரப்பிரதேசம் தமிழ்க்குடியிருப்பாக இருந்ததனால் அங்கு வாழ்ந்தோர் பாண்டியன் பக்கஞ் சேர்ந்தனர். அதனால் பாண்டியப்படை இரு மடங்கு வலியுற்றது. இவ்வாறு தன்னொடு. சேர்ந்த இலங்கைத் தமிழ்ப்படையின் உதவி கொண்டு, தட்டுத் தடக்கின்றி அனுராதபுரததேகி அந்நகரைக் கைப்பற்றினான்.
எனினும் பாண்டியப்படை வட இலங்கைக்கரையில் இறங்கியபோது, அக்காலத்து அங்கிருந்து ஆணை செலுத்திய தலைவனாகிய செயதுங்க வரராசசிங்கன் அவனை எதிர்த்தான் போலும். அதனால் போர் மூண்டது. அப்போரில் செயதுங்க வரராசசிங்கன் மடிந்திருக்க வேண்டும். பின்பு பாண்டியன் நாட்டை விட்டுச் சென்ற போது கலகங்களும் குழப்பங்களும் இருந்து வந்தன. இதனைக் கண்ணுற்ற சூழ்ச்சித்திறனும் வலிமையும்படைத்த பாணன் ஒருவன் தருணத்தைத் தப்பவிடாது குடிகளையடக்கித் தானே அரசனானான்.
செயதுங்கவரராசசிங்கன் வழித்தொன்றல்கள் விசயகூழங்கைச் சக்கரவர்த்தி காலம், வரை நாட்டையாண்டு வந்ததாக யாழ்ப்பாண வைபவமாவே ஒன்றே கூறும்; பாணணைப் பற்றிய பரம்பரைக்கதைகளை நவிலும் பிறசான்றுகள் எவையும் இதைப்பற்றி கூறிற்றில 18. சரித்திரத்தில் சடுதியில் பதவி பெற்று உயர்ந்தோர் போலவே இவனும் பெருமிதமுற்றுத் தன் பெயரையும் புகழையும் நிறுத்தும் வண்ணம், தன் பெயரினால் ஒரு சிறு பட்டினத்தை நிறுவி அதனை யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டனன் போலும், இதுவே பரம்பரைக் கதைகளினின்றும் நாம் எடுக்கக் கூடிய வரலாற்றுக்கிடக்கை.
பாணன் தொடக்கம் ஆரியச்சக்கரவர்த்தி வரை
ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் சோழப் பேரரசின் காலம் தொடங்கு கிறது. இது ஏறத்தாழ கி. பி. 840க்குப் பின்னாக இருக்கலாம். இக்காலத்துப் பராந்தக சோழன் (கி. பி. 907-956) இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அப்பொழுது அனுராதபுரத்திலிருந்து ஆண்டு வந்தவன் உதயன் (கி. பி. 945-953) ஆவன். இச்சிங்கள அரசன் வடஇலங்கையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினானே தெரியவில்லை. இதைப்பற்றிய குறிப்பேதும் சூளவமிசத்தில் இலது.
பாணனும் அவன் பரம்பரையினரும் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு பாகத்தையே ஆண்டிருத்தல் வேண்டும். ஏனைய பகுதிகளை வேறு வேறு தமிழ்த்தலைவர்கள் ஆண்டவர்கள் போலும். ஒரு குடைக்கீழ் தனியரசன் யாழ்ப்பாணம் முழுவதையும் ஆண்டான் எனபதற்கு ஆதாரமெதுவும் இல்லை.
நிலைமை இவ்வாறிருக்க யாழ்ப்பாணக் கடலெங்கணும் சோழக்கடற்படை உலாவித் திரிந்தது. யாழ்ப்பாணத்து நாகர் கோயிலுக்கு அண்மையிலுள்ள நெய்தற் கிராம்ம் ஒன்றிற்குச் “செம்பியன் பற்று” என்ற பெயர் இன்றும் உள்ளது. சோழப்படைகள் இப்பகுதியில் வந்திறங்கின என்பதை இது வலியுறுத்தும். கி. பி. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் சிங்கள மன்னர் அனுராதபுரத்தை விடுத்து புலத்திநகர் எனப்படு பொலநறுவையைத் தமது தலைநகராகக்கொண்டனர் 1. செம்பியன் பற்றிலிருந்து பொலநறுவைக்கு நேராகச் செல்லப் பெருந்தெரு ஒன்று_ அமைந்திருத்தது. .ஆகையால் சோழர் தமது சேனைகளைச் செம்பியன்பற்றில் இறக்கி அத்தெருவினூடாகப் பொலநறுவைக்கு: நடத்திச் செனறனர் போலும் 2. அன்றியும் மாவிட்டபுரப்பகுதியில் ஒரிடம் 'வளவர் கோன் பள்ளம்” என்னும் பெயரால் இன்றும் வழங்குகிறது. சோழர் இப்பகுதியில் இங்கு பெரிதும் நடமாடினர் என்பதற்கு இதுவும் சான்று பகரும்.
இஃதிங்ஙனமிருக்க, இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருட்டினன் (கி. பி. 940-967) என்பவன் தக்கோலம் என்னும் ஊரில் நடந்த போரில் பராந்தக சோழனை முறியடித்தான். அதனால் இதுகாறும் முன்னேறி வந்த சோழவரசு சிறுகாலந் தடையுற்றது 3. தக்கோலத்தில் வெற்றியீட்டிய கிருட்டினன் வெற்றி விருதுடன் தன் புகழை நிலைநாட்டிப் பெருமிதத்துடன் எங்கணுந் திரிந்தான் என்பதை இராமேச்சரத்தில் அவன் நாட்டிய கல்வெட்டுச் சான்று பகரும். அவன் இராமேச்சரம் வந்த நாட்களில் இலங்கையின் வடகோடியிலுள்ள நாகதீபத்திற்கும் (நயினாதீவு) வந்தனனெனச் சூளவமிசம் கூறும் 4. இவ்வரசன் வெற்றி வருகையைக் கேள்வியுற்ற சிங்களவரசன் நான்காம் மகிந்தன் (கி.பி. 956-972) தனது சேனாதிபதி சேனன் என்பானை யனுப்பி அவனைத் தோற்கடித்தான் என்றும், பின்னர் குறிப்பிட்ட இராட்டிரகூட அரசனுடன் நட்புறவு ஆண்டு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான் என்றும், சரித்திரத்தை ஒரு முகமாய்க் கூறிச் செல்லும் தன்இயல்புக் கிணங்க மெழுகிக் கூறும் அந்நூல். இதுகாறும் பாண்டிய சோழ நெருக்கங்களினால் மிகத் தளர்ந்திருந்த சிங்கள அரசு இக்காலத்துச் சிறிது தழைக்கத் தொடங்கியது. அதனால் பழையபடி சிங்களவருனடய ஆதிக்கம் யாழ்ப்பாணத்திலும் ஒரு சிறிது பரவிற்று எனக் கொள்ளலாம்.
தக்கோலப் பெரும் போரின் விளைவாகச் சில காலம் அடங்கிக் கிடந்த சோழப் பேரரசு, பின்பு சுந்தரச்சோழன் பட்டத்துக்கு வந்ததும் முன்னேறத் தொடங்கியது. கி. பி. 1001-ம் ஆண்டிற்கும் 1004-ம் ஆண்டிற்கும் இடையில் முதலாவது இராசராசன் (கி. பி. 985, 1016) இலங்கைக்குப் படையெடுத்து வந்து வடபகுதியையும் தனதாட்சிக் குள்ளாக்கினான் 5. இதனால் இதுகாறுஞ் சிறிது சிறிதாக முன்னேறி வந்த யாழ்ப்பாண அரசு கி.பி. 1070 வரை, இலங்கையின் ஏனைய பாகங்களைப் போலவே சோழப் பெரு,மன்னன் ஆட்சிக்குக்கீழ் இருந்தது வந்தது. சோழப்படைவீரர் பேய் பிசாசுகள் போல இரத்த வெறிகொண்டு எங்குந் திரிந்து நாட்டிலுள்ள புத்தபள்ளிகளையும் தவச்சாலைகளையும் சூறையாடிப்பாழ்படுத்தினரெனச் சூளவமிசம் புலம்பும் 5. ஆனால் அண்மையில் திருக்கோணமலையில் கண்டெடுத்த கல்வெட்டொன்றில் இராசராசச் சோழன் காலத்து ‘இராசராசச் பெரும் பள்ளி‘ என்னும் பெயருடன் ஒரு புத்த பள்ளியமைத்து அதற்கு மானியமும் வழங்கப்பட்டது என அறிகிறோம். பின் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070-1120.) ஆட்சிக்கு வந்த காலத்து அவன் தளபதி கருணாகரத் தொண்டைமான் கலிங்கமெறிந்ததோடு அமையாது இலங்கையையும் கைப்பற்றினானெனக் கலிங்கத்துப் பரணி என்னும் நூல் இயம்பும் 7. கருணாகரத் தொண்டைமானே தொண்டைமானாற்றை. வெட்டியவனாவான். கரணவாய் வெள்ளைப் பரவை ஆகிய இடங்களில் விளையும் உப்பை இவ்வாற்றின் ஊடாகக் கொண்டு சென்று கப்பல்களில் ஏற்றிச் சோழநாட்டுக்கு அனுப்பினானென இராசநாயக முதலியார் கூறுவர் 8.
குலோத்துங்க சோழனுக்குப்பின் சிங்கள மன்னர்களாகிய முதலாம் விசயவாகு, முதலாம் பராக்கிரமவாகு ஆகியோர் காலத்தில் யாழ்ப்பாண அரசின் நிலையைப்பற்றிய செய்தி எதுவும் நன்கு தெரியவில்லை. இவ்விரு மன்னர் காலத்தும், இலங்கை முழுவதும், ஒரு முடிக்கீழ் இருந்து 8 வந்தது. எனினும் வட இலங்கையில், பராக்கிரமவாகுவின் ஆட்சிக் காலத்திலும் உரிமைப் போர் நடைபெறாமலில்லை. பராக்கிரமவாகு அரசுகட்டிலேறிய பதினாறாமாண்டிலே (கி. பி 1168-1169) மாதோட்டப்பகுதியில் வாழ்ந்த தமிழர் இவ்வரசனின் ஆட்சிக்குக்கீழ் அடங்கி வாழ்வதிலும் இறந்துபடுதலே நன்றெனத் துணிந்து புரட்சிக்கொடியை உயர்த்தினர். இப்புரட்சியினை யடக்க, வலிமிக்க மன்னனாகிய முதலாம் பராக்கிரமவாகு தன் ஆணைக்குட்பட்ட நாற்பெரும்படைகளையும் மாதோட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு சூளவமிசம் கூறும் 9. அஃதவ்வாறாயின் அப்புரட்சி எத்துணை வலி படைத்ததாய் இருந்திருத்தல் வேண்டும்?
முதலாம் பராக்கிரமவாகுவிற்குப் பின் இலங்கையில் அரசுரினம பற்றிய குழப்பங்கள் இருந்தமையால் அங்கு நிலையான ஆட்சி இருக்கவில்லை. அவனுக்குப்பின் தளபதிகள் பலர் நாட்டை ஆண்டு வந்தனர். இதற்கிடையின் பாண்டிய பரம்பனரயில் இருந்து வந்த சிங்கள அரச குடும்பத்தோடு தொடர்பு ஆண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்பானும் சில காலம் ஆண்டான் இவ்வாறு பராக்கிரம பாண்டியன்-அரசாளுகையில் கலிங்க தேசத்திலிருந்து கேரளப் படையுடன் மாகன் என்பான் சிங்கள அரசுக்கு உரிமை கோரி வட இலங்கையில் வந்து இறங்கினான். இவன் செயவாகு என்பவனோடு சேர்ந்து முதல் வடஇலங்கை முழுவதையும் தன்ஆணைக்குள் அடக்கிக் கோட்டை கொத்தளங்கள் அமைத்தனன். “கொட்டசார” 10, கங்காதளாக 11, காகாலய 12, பதீ 18, குறுந்தி, மனாமத்த, மாகிந்த 14, -மன்னார் 15, ,பலச்சேரித்துறை, வாலிகாகம 16, கோன 17, கோனுசுமதுபாதவதித்த 18, சூகரதித்த 19 ஆகிய இடங்களில் அரண்கள் அமைத்து வட இலங்கை முழுவதையும் பல்லாண்டுகள் ஆண்டு வந்தனன் 20. அதன் பின் புலத்திநகர் என்ற பொல்லநறுவையைக் கைப்பற்றி அதனைத் தனது தலைநகராக்கினான், இவன் காலம் கி.பி. 1215-1235 ஆகும்.
இவனது ஆட்சிக்கஈலம் தொடக்கம் இலங்கையில் தமிழரசு வலியுறத் தொடங்கியது. புத்தளத்திலிருந்து திருக்கோணமலை வரைக்கும் ஒரு கோடு கிழித்தஈல் அக்கோட்டின் வடக்குப்பாகம் முழுவதும் தமிழ் இராச்சியமாக அமைந்திருந்ததென்பது மேற்கூறியவற்றால் விளங்கும். அன்றியும் தமிழர் ஆதிக்கமும் அவர் தம் அரசியற் செல்வாக்கும் "மாயரட்டை” எனப்படும் நீர்கொழும்பு சிலாபப் பகுதி வரையும்பரந்தது 21.
அதன்பின் பண்டித பராக்கிரமவாகு என்னும் இரண்டாம் பராக்கிரமவாகு (கி.பி.1236-1271) அரசினைக் கைப்பற்றினான், எனினும் வட இலங்கையில் நிறுவப்பட்ட தமிழரசினை அவனால் அடக்க முடியாது போயிற்று. இப்பராக்கிரமவாகு காலத்தில் (கி.பி.1244) மலாய தீபகற்பத்துத் தாம் பிறலிங்கம் என்னும் பகுதியை ஆண்ட புத்த அரசன் சந்திரபானு என்பான் அற்புதங்கள் நிகழ்த்தக் கூடிய புத்த சிலை ஒன்று இலங்கையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதனைக் கைப்பற்றும் நோக்கமாக இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அப்பொழுது சிங்களப் படை இவரோ முறியடித்தது. இவன் மீண்டும் நான்காம் விசயவாகு (கி.பி. 1271-1273) காலத்தில் படையெடுத்து வந்து வட இலங்கையிலுள்ள மாதோட்டத்தில் இறங்கினான். அங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்று சில இடங்களில் பாடி போட்டிருந்தான். அவனுடைய சாவகப்படை தங்கியிருந்தபடியாலேயே சாவகச்சேரி, நாவற்குழியிலுள்ள சாவகன்கோட்டை ஆகிய இடங்கள் இப்பெயர்களைப் பெற்றன என்பர் 22.
இக்கலகம் .அடங்கிய பின்னர் யாப்பகுவையிலிருந்து அரசோச்சிய நான்காம் விசயவாகு காடடர்ந்து கிடந்த அனுராதபுரத்துக்கு வந்து அந்நகரிலுள்ள புத்த கோயில்களைத் திருத்துவித்தான்.
இக்காலத்தில் வன்னிப்பகுதி தமிழ்ச் சிற்றரசரின் கீழ் இருந்து வந்தது. குறிப்பிட்ட சிங்கள அரசன், இச்சிற்றரசர் கையில், அனுராதபுரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தான்.
இஃதிவ்வாறிருக்க கி.பி. 1216ம் ஆண்டுக்குப் பின்னர் தென்னிந்தியாவில் இரண்டாம் பாண்டியப்பேரரசு உருப்பெறத் தொடங்கியது.
ஆரியச் சக்கரவர்த்திகள் முதலாம் பரம்பரை
வலிமிக்க தளபதிகள் தாஞ் சென்ற சென்ற இடங்களில் தருணம் வாய்க்கும் போது தம்மை அரசராக்கிக் கொள்ளும் வழக்கம் சரித்திரத்திற்குப் புதியதொன்றல்ல 1.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திலும், பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென்னிந்தியாவில் நிகழ்ந்த இசிலாமியப் படையெடுப்பால் பாண்டி நாட்டில் கலகங்கள் மலிந்து கிடந்தன. அதனோடு அங்கு உள்நாட்டுக் கலகங்களும் இருந்து வந்தன. மேலும் இந்நாட்களில் சிங்கள இராச்சியம் வலிகுன்றியிருந்தது- இவற்றினைப் பாண்டியத்தளபதியாகிய ஆரியச்சக்கரவர்த்தி பெரிதும் பயன்படுத்தித் தன்னைய வட இலங்கைத் தமிழ்ப் பகுதிக்கு அரசனாக்கிக் கொண்டான் எனக் கருத இடமுண்டு.
இத்தொடர்பில் யாழ்ப்பாண வைபவமாலை கூறுவதையும் சிறிது நோக்குவோம். மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலையைப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதினார். இவர் தமது நூலுக்குக் கையாண்ட முதனூல்கள் யாவும் புராண முறையில் அமைந்துள்ளனவேயன்றி மகாவமிசம், சூளவமிசம், இராசதரங்கிணி, கொங்குதேச இராசாக்கள், இராசாவளி (மைசூர்) ஆகிய நூல்களைப் போல ஓரளவிற்க்காவது சரித்திர ஒழுங்கில் எழுதப்பட்டனவல்ல. மயில்வாகனப்புலவர் தமது நூலைக் கைலாயமாலை வையாபாடல், பரராசசேகரனுலா, இராசமுனற முதலிய நூல்களைக்கொண்டு எழுதியதோடமையாது தாம் கர்ண பரம்பரையாகக் கேட்ட கதைகளையும் கூட்டிப் புனைந்துள்ளார் எனத் தெரிகிறது.காலம் பொருந்தாமை தலை தடுமாற்றம் ஆகியவை நூலில் மலிந்து கிடக்கின்றன.
சாசனச் சான்றுகளும், பிறசான்றுகளும் யாழ்ப்பாணச் சரித்திரத்துக்கு இதுகாறும் இல்லாமையினால் இவர் சுடறும் உண்மையான சரித்திர சம்பவங்களைக்கூட வரலாற்று முறையில் வைத்து யாழ்ப்பாணச் சரித்திரத்தினை ஆராய்ந்து கொள்ள இயலவில்லை. யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் “யாழ்ப்பாணம் கொஞ்சக்காலம் தளம்பிக்கொண்டிருக்கையில் பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவனென்னும் பிரபு மதுரைக்குப்போய் அவ்விடத்திலே, சோழநாட்டிலிருந்து வந்து இராச உத்தியோகத்துக்கேற்ற கல்வி கற்றுக் கொண்டிருந்த சிங்கையாரியன் என்னுஞ் சூரியவமிசத்து இராசகுமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்ய வரவேண்டுமென்று கேட்க அவன் தன் பரிவாரங்களுடன் பிரயாணப்பட்டு, பாண்டியராசன் வழிவிட்டனுப்பிவைக்க யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி நல்லுரைத் தனது இராசதானியாக்கி யாழ்ப்பாணத்னத ஆண்டு வந்தான் என்பர்.
மதுரைக்குச் சென்ற பாண்டிமழவன் சோழநாட்டிலிருத்து அங்கு வந்திருந்த சிங்கையாரியனைக் கொண்டுவ ந்தான் எனவும், அவனைப் பாண்டிய மன்னன் வழியனுப்பி வைத்தானெனவும் ஆசிரியர் பெறுகின்றார். அவனைப் பரிவாரங்களுடன் அனுப்பி வைத்தானெனவும் அங்கு கூறுகின்றார். இஃது பாண்டியமன்னன் தன் சேனையோடு தளபதியைப் போருக்கு அனுப்பினான் என்னும் வரலாற்றுச் செய்தியைத் திரித்துக் கூறியதாய் இருத்தல் வேண்டும்.
இவ்வாரியச் சக்கரவர்த்தியைக் கூழங்கையாரியன், விசயகூழங்கைச் சக்கரவர்த்தி,சிங்கையாரிய மகாராசன் என்னும் பெயர்களாலும் வைபவமாலை அழைக்கும். இஃது தமிழ் நாட்டிலே பலப்பல காலங்களிலே, உருப்பெற்ற அரசபரம்பரைக் கதைகளை இவ்வாரியச் சக்கரவர்த்தி மேலேற்றும் எண்ணத்தால் ஏற்பட்ட மயக்கம் 2 எனக் கருதுதல் பிழையன்று.
பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் அரசு கட்டிலேறிய முப்பத்தேழாவது ஆண்டு (கி. பி.1805) குறித்த இவ்வாரியச் சக்கரவர்த்தி இலங்கை மேற்படையெடுத்தான் 3. சூளவமிசத்தின்படி 4, இவன்.தான் குறையாடிய பொருட்களுடன் பாண்டி நாட்டிற்குத் திரும்பினான்.
ஆரியச் சக்கரவர்த்தி என்னும் இத்தண்டநாயகன் கீழ் வந்த பாண்டியப் படையெடுப்பின் பின் யாழ்ப்பாணத்தினையாண்ட ஒவ்வோர் அரசனும் தனக்கு ஆரியச் சக்கரவர்த்தி யென்னும் பட்டப் பெயரைச் சூட்டிக் கொள்வது வழக்கமாயிற்று. தண்டநாயகன் ஆரியச்சக்கரவர்த்தி பாண்டியநாடு திரும்பினானெனச் சூளவமிசம் கூறும். ஆனால் ஆரியச்சக்கரவர்த்தி என்ற பட்
டப் பெயருடன் அரச பரம்பரையொன்று யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தது என்பது வெளிப்படை. எனவே, இவ்வாரியச்சக்கரவர்த்தி பரம்பரை இக்காலத்திலே தொடங்கியதென்பது சரித்திர உண்னம.
கி. பி. 1844-ல் இலங்கைக்கு வந்த புகழ் பெற்ற இசிலாமியப் பிரயாணியான இபுன்பத்தூத்தா வட இலங்கையில் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் அரசன் ஆண்டதாகக் கூறுவான். இவன் வந்தபோது வடஇலங்கை அரசனும் ஆரியச்சக்கரவர்த்தி மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கினானெனவும் கூறுகின்றார்கள். இத்தகைய வளமும் வலியும் ஓர் இராச்சியத்தில் ஏற்படுதற்குப் போதுமான ,தலைந்தேவை. ஆகையால் இந்த அரசபரம்பரை கி. பி. 1305-1344 க்கு இடையில் தொடங்கியிருத்தல் வேண்டும். இப்பரம்பரை அரசரின் தலைநகர் சிங்க நகர்' என்பர். இதனைக் கோட்டகமக் கல்வெட்டிலும், அரசகேசரி பராக்கிரம பாண்டியனின் தென்காசிக்கோயிற் கல்வெட்டிலும் காணலாம்.
இவ்வரசபரம்பரை யாழ்ப்பாணத்தை ஆளும் பொழுது (கி. பி. 1450) கோட்டை இராச்சியத்தை ஆறாம் பராக்கிரமவாகு ஆண்டான். அவன் காலத்திருல அவன் வளர்ப்புப் பிள்ளையாகிய சப்புமால் குமாரையா 5 யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்துக் கோட்டை கொத்தளங்களையழித்துத் தமிழ்ப் பகுதியை ஆண்ட மன்னனைத் துரத்தி தானே அரசாண்டான். சப்புமால் குமரையா தொடுத்து வெற்றி கண்ட போரைத் தமிழ் மன்னருக்கெதிரான சிங்களக்கலகமென வைபவமாலை கூறும். மேலும் இப்போர் நடந்தது கனகசூரியன் என்னும் அரசன் காலத்திலே என்றும் அது நவிலும். ஆரியச்சக்கரவர்த்தியென்னும் பட்டப் பெயர் கொண்`ட அரசபரம்பரையைத் தொடங்கியவனுக்கும் குமரையன் முறியடித்த கனக்சூரியனுக்குமிடையில் ஒன்பது அரசர்கள் சிங்கை, நகரிலிருந்து ஆண்டதாக வைபவமாலை கூறும். வரசர்களைப் பற்றிய செய்திகளொன்றும் தெளிவாகத் தெரியவில்லை. இவர் ஆண்ட ஒழுங்கு முறைகளைக் கால வரிசைப்படுத்திக் கூறவும் முடியவில்லை. வைபவமாலையின்படி குறித்த அரசபரம்பரை மேல் வருமாறு:
1. விசயகூழங்கைச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி
2. குலசேகர சிங்கையாரியச் சக்கரவர்த்தி
3. குலோத்துங்க சிங்கையாரியச் சக்கரவர்த்தி
4. விக்கிரம சிங்கையாரியச் சக்கரவர்த்தி
5. வரோதய சிங்கையாரியச் சக்கரவர்த்தி
6. மார்த்தாண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்தி
7. குணஆசலா சிங்கையாரியச் சக்கரவர்த்தி
8. வீரோதய சிங்கையாரியச் சக்கரவர்த்தி
9. செயவீர சிங்கையாரியச் சக்கரவர்த்தி
10. குணவீர சிங்கையாரியச் சக்கரவர்த்தி
11. கனகசூரிய சிங்கையாரியச் சக்கரவர்த்தி
இக்காலப்பகுதியில் தமிழ் இராச்சியம் மிகுந்த வலியோடு செல்வமும் செழிப்புமோங்கிக் கீர்த்தியோடு விளங்கியது. மன்னார் சிலாபத்துறை முதலிய இடங்சுளில் நடந்த முத்துக்குளிப்பினால் செல்வங்கொழித்தது, பெரிய கடற்படை யொன்று ஆரியச்சக்கரவர்த்தி கையில் இருந்தது அதனால் ஈழத்தமிழர் மலையாளம் முதலிய இ,டங்களுக்குச் சென்று வாணிகம் வளர்த்து வந்தனர். இத்தகைய செவ்வி வாய்ந்த ஈழத்தமிழ் நாட்டிற்குப் பலர் பிற நாடுகளிலிருந்து வந்தனர். அவருள் இபுன்பத்தாத்தா, மார்க்கோப்போலோ என்போர் குறிப்பிடத்தக்கவர். இவ்வரசனையும் அரசியையும் பற்றி இபுன்பத்துத்தா கூறுஞ் செய்திகள் கவர்ச்சிகரமானவை. "இவ்வரசரின் பெயர் ஆரியச்சக்கரவர்த்தி கடற்படை வலி கொண்டவன்; மலையாளத்திலே யான் தங்கியிருந்த போது இவன் நாவாய்கள் சிறியவும் பெரியவுமாக நூறுகப் பல்கள் நங்கூரமிட்டு கெம்பீரமாய் அங்கு நின்றன; அதிதிகளை உபசரிக்கும் அன்பு சார்ந்த நெஞ்சினன்; பாரசீக மொழியிலே வல்லுனன்; அம்மொழியில்' என்னுடன் உரையாடினான்; எனக்கு நல்ல பரிசில்களை வாரிவாரியிறைத்தான். அவை மட்டுமோ, தன் இராச்சியத்தில் கிடைக்கும் திறமான முத்துக்களையும் பரிசாக ஈந்தான். அன்றியும் யான் விரும்பிய வண்ணம் ஆதாம் மலைக்கு யாத்தினர செய்ய உதவியுஞ் செய்தான்". இபுன்பத்தூத்தாவின் கூற்றின்படி ஆரியச்சக்கரவர்த்தியின் தலைநகரம் "புத்தல" என்பதாகும். சரித்திர ஆசிரியர் பலர் இதனைப் புத்தளம் எனக் குறிப்பர். ஆனால், இவன் ஆதாம் மலைக்குப் போகும் பிரயாணத்தை விரித்துக் கூறுமிடத்து, “புத்தல” என்னுமிடத்திலிருந்து பாதை மூலம் ஆற்றைக்கடந்து மன்னாருக்குச் சென்றதாகவும் அதன் பின் சிலாபத்னத அடைந்ததாகவும் கூறுவான். ஆகவே, "புத்தல" வென்பது புத்தளமாக இருக்க முடியாது. "சிங்கை நகர்” எனக்கூறப்படும் வல்லிபுரக் குறிச்சிக்கு அணித்தாயுள்ள “புட்டளை” என இப்போது வழங்கும் கிராமமே இப் "புத்தல" வாகவிருக்கலாம். மேலும் இவ்வரசபரம்பரையினரைச் சிங்கையாரியச்சக்கரவர்த்திகள் என்றும் குறிப்பான். புட்டரோ சிங்கையின் ஒரு பகுதி சிங்கையென்னும் பகுதி கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் கீர்த்தி வாய்ந்த இடமாயிருந்தது. இதற்குச் சான்று வல்லிபுரத்திற் கண்டெடுக்கப்பட்ட பொன்னேட்டுச்சாசனம். அன்றியும் அங்கு பல கட்டிடங்களும், கோட்டை கொத்தளங்களும் அழிந்தொழிந்த மண்ணால் மூடப்பெற்றிருப்பதை இன்றும் அங்குச் செல்வோர் காணலாம். அத்துடன் இதனருகே ஒரு பெருந்துறையுமுளது. அங்கிருந்து கப்பல்கள் அக்காலத்தில் போக்குவரத்துச் செய்தன. இப்பொழுதும் அத்துறையைக் கப்பற்றுறையென அழைப்பர்.
பதினாலாம் நூற்றாண்டு முற்பகுதி தொடக்கம் பதினைந்தஈம் நூற்றாண்டின் முற்குதி வரை சிங்கள அரசின் நிலை தலைகீழாயிருந்தது. இக்காலப்பகுதியில் சிங்கள அரசின் தலைநகரம் அடிக்கடி இடத்துக்கிடம் மாற்றப்பட்டு வந்தது.
தென்னிந்தியப் படையெடுப்புக்குப் பயந்து சிங்கள அரசர் அனுராதபுரப் பகுதியைக் கைவிட்டனர். அதனால் பொருள் வருவாயைக் கொடுத்த அப்பகுதியிலுள்ள நெல்வயல் முதலியன பாழடைந்தன. இதேகாலத்து அராபியவணிகர், காலி தொடக்கம் புத்தளம் வரையுள்ள சில இடங்களைத் தமது வணிகத்திற்கு நிலைக்களனாக ஆக்கிக் கொண்டனர். காலி, வெருவலை கொழும்பு ஆகிய இடங்கள் அராபியர் வணிகத்திற்கு மிக முக்கிய இடங்களாக விளங்கின. அதனால் விவசாயத் துறையில் போதிய வருவாய் அற்றிருந்த சிங்கள அரசர் இவ்வணிகத்தைப் பயன்படுத்தி – அராபிய வணிகருக்கு வேண்டிய கறுவா முதலிய பொருட்களை விற்பதற்காகத் தலைநகரைத் பின் மேற்குக் கனரயோரமாக நிறுவினர். இதன் பயனாகப் பானாந்துறை, கொறனைப் பெருந்தெருவிலுள்ள இழுகம் கோறளை ஆகியவற்றிலிருந்து அரசர் சிலர் செங்கோலோச்சினர், இதன் பின் மூன்றாம் விக்கிரமவாகு காலத்தில் (கி. பி. 1357-1374) பேராதனையிலிருந்து அளகக்கோனார் என்னும் பெயருடைய சிங்களத் தலைவன் ஒருவன் செயவர்த்தனபுரத்தில்' கோட்டை கொத்தளம் எழுப்பி ஓர் அழகிய நகரைக் கட்டினான். கி. பி.1348 ல் பாப்பரசரின் தூதன் மரிக்கு நெல்லி 6 என்பான் சீனத்துக்குச் சென்று இலங்கை வழியாக உரோமாபுரிக்குத் திரும்புகையில்' கொழும்பில் வந்திறங்கினான். அப்பொழுது அளகக்கோனார் கட்டியெழுப்பிய மாளிகையைக் கண்டு அதன் அமைப்புச்சிறப்பினை வியந்தான்.
அப்போது இலங்கையின் அரசியலமைப்பில் இருந்த தலைதடுமாற்றம் அக்கால வரலாற்றைக் கூறும் சிங்கள சரித்திரநூல்களிலும் பிரதிபலிக்கின்றது. எந்தச்சரித்திர நூலாவது இக்கால வரலாற்றைத் தெளிவாகக் கூறுவதாகத் தெரியவில்லை. அன்றியும் ஆரியச்சக்கரவர்த்தி பரம்பரையினரின் ஆட்சியில், இக்காலப்பகுதியிலே, தமிழரசு மிகுந்த உச்சநிலையை அடைகின்றது. படிப்படியாகத் தமிழரசர் தங்கள் நாட்டெல்லையைப் பெருப்பித்து இலங்கையின் பெரும்பாலான பகுதியை ஆளத் தொடங்குகின்றனர் அன்றியும், தங்கள் ஆதிக்கத்தை சிங்கள ஆட்சிக்குக் கீழிருந்த பகுதிகளிலும் செலுத்தக்சுகூடியதாயிருந்தது. சிங்கள அரசனிடமிருந்து திறை பெறவுந் தொடங்கிவிட்டனர், அராபிய வணிகருடன் நடக்கும் கறுவா வணிகத்தில் பங்கெடுத்துக் கொள்ள நீர்கொழும்பு, வத்தளை முதலிய ஊர்களைப் பிடித்து அவற்றைச் சிலகாலம் தமது ஆதிக்கத்தில் னவத்திருந்தனர்.
ஒருமுறை தமிழரசின் வரி வாங்குவோர் சிலர் வரி வாங்கிய போது சிங்களச் சிங்காசனத்தில் கண்வைத்திருந்த அளகக்கோனார், இத்தருணத்தை பயன்படுத்தி இவ்வரிவாங்குவோரைப் பிடித்துத் தாக்கில் இடுவித்துக் கொன்றான். இதையறிந்த ஆரியச்சக்கரவர்த்தி சீற்றங்கொண்டு இரு பெருஞ் சேனைகளைச் சிங்கள அரசிற் கெதிராய் அனுப்பினான். ஒருபடை கரையோரமாக வந்து பாணந்துறையிற் பாடிபோட்டது. மற்றது பன்னாகம் (மாத்தளை) வழியாகக் கோட்டை நகர் நோக்கிச் சென்றது. கொழும்புக்கண்மையிலுள்ள கோட்டை, பாணந்துறை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தமிழ்ப்படைக்கும் சிங்களப் படைக்குமிடையில் பெரும் போர் நிகழ்ந்தது, கேகாலைக் 7 கண்மையிலுள்ள கோட்டகமக் கல்வெட்டு இப்போரை மேல்வருமாறு குறிக்கும்.
கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக் கைமேற் றிலதம் பாரித்தார்-பொங்கொலிநீர்ச் சிங்கைநக ராரியனைச்சேரா வனுரேசர் 8, தங்கள் மடமாதர் தாம்,
இதன்படி இங்கு நடந்த போரில் தமிழ்ப்படையே வெற்றி கண்டதெனத் தெரிகின்றது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தரசு வெற்றியோடு விளங்கியகாலத்து அதற்கும் விசயநகரப்பேரரசுக்குமிடையில் நல்லுறவு இருந்து வந்தது. இந்நிலையில் ஆறாம் பராக்கிரமவாகு என்பான் (கி. பி. 1412-1418) சிங்கள அரசு சுட்டிலேறியதும் நிலைமை ஒருவாறு மாறத்தொடங்கியது. மங்கு திசையிலிருந்த சிங்களவரசு இவ்வரசன் கீழ்த் தலைத்தொடங்கியது, இலங்கை முழுவதையும் தனிச்சிங்கள இராச்சியமாக்க விரும்பினான். இக்குறிக்கோளோடு வேண்டிய ஏற்பாடுகளைப் படிப்படியாகச் செய்து கொண்டு வந்தான், தமிழரசன் வலியையுந் தனது வலியையும் செவ்வனே நோக்கித் தகுந்த தருணத்போர் தொடுக்க வேண்மெனக் காத்திருந்தான். தன் வளர்ப்பு மகனாகிய செண்பகப்பெருமாள் என்னும் சப்புமால்குமரையனைப் படையொன்றுடன் தருணம் பார்த்து யாழ்ப்பாணத்தரசனுக் கெதிராக அனுப்பினான். நடந்த போரில் அவன் தமிழரசனால் முறியடிக்கப்பட்டால் இதனால் பராக்கிரமவாகுவின் எண்ணம் கைகூடாது போயிற்று. சிறிது காலத்தில் இரண்டாம் முறையும், குமரையன் தமிழரசன் மீது படையெடுத்துச் சென்றான். இப்போரில் யாழ்ப்பாணத்தரசன் தோற்றான். அவன் தோற்றதற்கு, அவனுக்குதவக்கூடிய விசயநகர மன்னன் வராததும் ஒரு காரணமாகும். வெற்றி கொண்ட மரையன் அக்காலத்து யாழ்ப்பாணத் தலைநகராகிய சிங்கைநகரைக் கைப்பற்றி அதைக் கொள்ளையடித்து அழித்தான். அன்று சிங்கைநகரிலிருந்து அரசாண்டவன் கனகசூரிய சிங்கையாரியனென யாழ்ப்பாண வைபவமாலை சுடறும். கனகசூரியன் தென்னிந்தியாவிற்கு ஒளித்தோடினான்,
இவ்வாறு வெற்றிக்கொடி. நாட்டிய குமரையன் பழைய இராசதானியாகிய சிங்கை நகரை விடுத்து, பாணன் கட்டிய யாழ்ப்பாணத்திற்கு அணித்தாயுள்ள நல்லூரிலே புதுநகர் ஒன்று கட்டினான். அங்குக் சுகந்தவேளுக்கு ஒரு கோயிலும் கட்டியெழுப்பினான் 9. இன்றும் நல்லூர்க்கந்தசாமிகோயிற் திருவிழாநாளில் உற்சவமூர்த்தி வீதிவலம் வரும்போதும், திரும்பிக் கோயிலினுட் புகும்போதும் கூறப்படும் கட்டியங்களில் இவனுடைய பட்டத்துப் பெயராகிய "ஸ்ரீ சங்கபோதி புவனேகவாகு" என்பதும் கூறப்படுகிறது.
பிற்கால யாழ்ப்பாணத்தரசர்
குமரையன் யாழ்ப்பாணத் தமிழரசை ஆண்டுவந்தகாலத்தில் கோட்டை இராச்சியத்தின் நிலைமை மாறிக்கொண்டு வந்தது. ஆறாம் பராக்கிரமவாகு இறந்ததும் அவனுடைய பேரப்பிள்ளையாகிய சயவாகு பட்டத்திற்கு வந்தான். அவன் ஒன்றனர ஆண்டுகள் ஆண்டபின் இறந்தான். அப்பொழுது அவன் உடன் பிறந்தாளாகிய மாணிக்கம் என்பாள் அரைப்பித்தனாகிய தன் மருகனை அரசுகட்டிலேற்றினளென டீ.கூட்டோ என்னும் போர்த்துக்கேயச் சரித்திராசிரியன் கூறுவான் 1. ஆனால் இவன்- அரசாளுந்திறன் அற்றவனெனக்கண்டு பெரிதுங்கவலையுற்று, அந்நாட்களில் வாழ்ந்த அரசகுமாரருட் பெருவலி செறிந்தவனாகிய குமரையனை உடனே வந்து அரசபொறுப்பை ஏற்கும் வண்ணம். வேண்டினான் இதை யறிந்ததும் குமரையன் யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டை நகர் நோக்கிப் புறப்பட்டான் .அங்குச் சென்றதும் புவனேகவாகு என்னும் பட்டப்பெயருடன் அரசுகட்டிலேறினான். எனினும் இவன் கோட்டைக்குச் சென்ற பிறகும் சிங்களப்பகுதியில் உள்நாட்டுக்கலகம் மலிந்து கிடந்தது.
யாழ்ப்பாணத்தில் அடங்கிக்கிடந்த தமிழரசு இக்குழப்பங்களைப் பயன்படுத்தியது குமரையனால் கி.பி. 1450-ல் முறியடிக்கப்பட்ட மன்னன் மகனாகிய பரராச சேகரன் (கி.பி. 1478-1519) யாழ்ப்பாண அரசைத் திரும்பப் பிடித்துத் தனிச் செங்கோலோச்சினான். இவனுக்குப்பின் சங்கிலி செகராசசேகரன் (கி. பி. 1519-1561) அரசனான்.
அக்காலத்திலே யாழ்ப்பாணம் மன்னார்க் கரைகளில் வந்து கரையேறிய கப்பல்களையும் அவற்றிலுள்ள பொருட்களையும், உரிமைப்படி யாழ்ப்பாண அரசர் எடுத்துக் கொள்வர். இவ் வழக்கத்தை யொட்டி அங்கு வந்தடைந்த.பல போர்த்துக்கேயக் கப்பல்களைச் சங்கிலி கைப்பற்றினான்.
சங்கிலியன் இச்செயலைத் தடுப்பதற்காகக் கி. பி. 1543 ல் மாட்டின் அல்பொன்சோ த சூசா என்பவன் போர்த்துக்கேய அரசின் கீழ் அடங்கியிருக்கும் வண்ணம் அவனைப் பணித்தான். கி.பி.1544ம் ஆண்டிற்கு முற்பட்ட சில காலங்களில் போர்த்துக்கேயரின் முயற்சியினால் மன்னாரில் வாழ்ந்த மக்களிற் சிலர் கத்தோலிக்கராய் மத மாறி வாழ்ந்தனர். கி.பி.1544 ம் ஆண்டு மட்டில் அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தூண்டுதலினால் மன்னார் மக்களுட் பெருந்தொகையானோர் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்டனர். இதையறிந்த சங்கிலி மன்னருக்குப் படையனுப்பி மதம் மாறிய யாவரையும் தண்டித்தான். இக்காலந்தொடக்கம் யாழ்ப்பாணத்தரசு போர்த்,துக்கேயருக்கு எதிராகவே இருந்துவந்தது. சிங்கள நாட்டில் போர்த்துக்கேயருக்கு மாறான எழுச்சிகளின் முன்னணியில் நின்றவன் மாயாதுன்னை என்னும் சிங்கள அரசகுமாரன். இவனும் சங்கிலியும் போர்த்துக்கேயரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து கொண்டனர். 1547 ல் சங்கிலி மாயாதுன்னையுடன் சேர்ந்து போர்த்துக் கேயருக்கெதிராகப் போர்புரிந்ததாகத் தெரிகிறது. இதற்கு இவரிருவரும் தஞ்சை அரசனான சேவப்பநாயக்கன் (கி. பி. 1582-1580) உதவியைப் பெற்றதாகவுந் தெரிகிறது.
கோட்டை அரசினை ஆண்ட எட்டாம் புவனேகவாகுவின் (கி.பி. 1521-1551) மருகனான வீதியபண்டாரமென்பான் கோட்னட இராச்சியத்திற்கு அரசனாக ஆசைகொண்டான். ஆனால் தன்னெண்ணங் கைசுகூடாதது கண்டு பலப்பல இடங்சுள் தோறும் சென்று உதவி கோரினான். எங்கணும் அவன் எண்ணங் கைகூடவில்லை இறுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண்டிருந்த சங்கிலி 'செகராச்சேகரனிடம் வந்து சேர்ந்தஈன்.
சங்கிலி போர்த்துக்கேயருக்கு மாறாகப் பொருதுகொண்டு நின்றானகயால் வீதியபண்டாரத்தின் கோரிக்கைக்கு உடன்பட்டான். வீதியபண்டாரத்தின் தீடீர்மரணத்தினால் போர்த்துகேயருக்கு மாறான இவ்வுடன்படிக்கை சிறிதும் பயன்படாது போயிற்று.
சங்கிலியைத் தண்டிக்கும் வகைதேடிக் காலம் பார்த்திருந்த போர்த்துக்கேயர் கி.பி 1560ல் கொன்ஸ்தாந்தின் த பிறகன்சாவின் கீழ் கடல்வழியாக ஒரு பெரும் படையினை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினர். பிறகன்சா கொழும்புத்துறையில் இறங்கி நல்லூரையடைந்து சங்கிலியின் கோட்டை கொத்தளங்களை அழித்தான். இதைக்கண்ட சங்கிலி தன் மாளிகையைத் தீக்கிரையாக்கிவிட்டுக் கோப்பாய்க்கு ஓடினான். அங்கும் போர்த்துக்கேயர் அவனைப் பின் தொடரவே வன்னிப்பகுதியில் போய் ஒளித்தான், அப்பொழுது தாம் புதிதாகக் கைப்பற்றிய யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேயர் தலைவரும் அவர் சேனையும் வேட்டையாடு தன் விருந்தயருதல் முதலிய ஏகபோக சுகங்களை அனுபவித்துக்கொண்டிருந்தனர், அவற்றைக் கண்டு மனம் பொறாத நாட்டுமக்கள் அவருக்கு மாறாகப் புரண்டெழுந்து அங்கிருந்த போர்த்துக்கேயரை வெட்டி வீழ்த்திக் கலகம் விளைத்தனர். அத்தருணத்தை பயன்படுத்திச் சங்கிலி மன்ன்னை நல்லூர் வந்து சிதறுண்ட தன் படைகளைச் சேர்த்துப் போர்த்துக்கேயருக்கெதிராகப் பெரும் போர் நிகழ்த்தினார். இவ்வெதிர்ப்புக்கு நின்று பிடிக்க ஏலாது போர்த்துக்கேயர் கப்பபிலறினர்.
சங்கிலிக்குப் பின் புவிராசபண்டார மென்பான், பரராசசேகரன் என்னும் பட்டப்பெயரோடு அரசுகட்டிலேறினான். அவனைப் போர்த்துக்கேயர் போரிலே கொன்று பெரியபிள்ளை என்பானை அரசுகட்டிலேற்றினர். அவன் பரராச சேகரன் என்னும் பெயருடன் கி. பி, 1570 ம் ஆண்டிலே போர்த்துக்கேயர் உதவியுடன் அரசு கட்டிலேறினானாயினும் அவனுக்கு அவர் மேல் அடங்கிக் கிடந்த வெறுப்புணர்ச்சி சிலவாண்டில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. தஞ்சை மன்னனான அச்சுதப்ப நாயக்கன் .உதவியுடன் மன்னாரில் நிலைத்திருந்த போர்த்துக்கேயருக்கு எதிராகப் போர் தொடங்கினான். இப்போரில் இவன் வென்றதாகத் தெரியவில்லை.
இவனுக்குப்பின் புவிராசபண்டாரமென்பான் பரராசசேகரன் என்னும் பட்டப்பெயருடன் கி. பி. 1582 ல் அரசனானான். இவனும் தன் முன்னோர் போலப் போர்த்துக்கேயரை எதிர்த்தான். மன்னரை அவர் கையினின்று விடுவிக்க இருமுறை முயற்சித்துப் போர் நடத்தினான். இரண்டாம் முறையாகக் கி.பி. 1519-ம் ஆண்டு மன்னரைத் தாக்கியபோது போர்த்துக்கேயர் இவன் தாக்குதலைப் பொறுக்க முடியாது அந்திரே போர்த்தாருடோ த மென்டோன்சா 4 என்னும், தளபதியை யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டனர். நடந்த போரில் பரராசசேகரன் இறந்து பட்டான். அப்பொழுது போர்த்துக்கேயர் பெரியபிள்ளை செகராசசேகரனின் மகனாம் எதிர்மன்ன சிங்கனை அரசனாக்கினார். இவன் பரராசசேகரன் என்னும் பட்டப்பெயருடன் (கி.பி. 1519-1615) ஆட்சி செலுத்தினான்.
இவ்வரசன் போர்த்துக்கேயர் கைப்பொம்மையாக விளங்கினமை கண்டும், யாழ்ப்பாண அரசியல் அலுவல்களில் அவர் பெரும் பங்கெடுக்க விட்டமை கண்டும், மனம் பொறாத தமிழ்த்தலைவர்களான முதலிமாரும் தலைமைக்காரரும் மேற்படி நிலைமையை மாற்ற வழிவகை தேடினர். இந் நோக்கத்தைக் கொண்டு சோனகர், வடுகர், மறவர், ஆகியோர் உட்பட ஒரு சேனையைத் திரட்டிக் கொண்டு, தஞ்சை மன்னனாகிய அச்சுதப்பநாயக்கன் கண்டி மன்னனாகிய விமலதரும குரியன் ஆகியோரின் படையுதவியை நாடி நிற்றனர். இத்திட்டங்களை ஏதோ ஒரு வகையாக அறிந்த எதிர்மன்னசிங்கன் மன்னாரிலுள்ள போர்த்துக்கேயத் தலைவனுக்கு அறிவித்தான். தஞ்சை நாயக்கன் கடற்படை மன்னாருக் கணித்தாய் வருகையில் போர்த்துக்கேயர் அதனை முறியடித்தனர். இதனோடு கலகம், அடங்கி எதிர்மன்னசிங்சுன் கி. பி 1615 ல் இறக்கும் வரை அமைதி நிலவிற்று. அவன் இறக்குந் தறுவாயில இருக்கும் போது மூன்று வயதுள்ள தன் மகனே அரசனாக்கி அவனுக்கு வயது வரும் வரையும் தன்தம்பியாம் அரசகேசரி பண்டாரத்தை அரசபாதுகாவலனாய் நியமித்தான்.
எதிர்மன்ன சிங்கன் இறந்தபின்பு அரச குடும்புத்தினருள் ஒருவனை சங்கிலிகுமாரன் என்பான் அரசகேசரி பண்டாரத்தைக் கொன்று தானே அரசபாதுகாவலனானான். இச்செயலைக் குறித்துப் போர்த்துக்கேயர் எதிர்ப்புக் கிளப்பிய பொழுது, அவருக்கு வேண்டிய திறையைக்கொடுத்து நாட்டை ஆள்வதாக வாக்குறுதி செய்தான், ஆனாஸ் சிறிது காலத்தின் பின்னர் கண்டிக்குச் செல்லும் வடுகப்படையைத் தன் இராச்சியத்துக் கூடாகப் போக விடுத்ததாலும் தன் எண்ணப்படியே தன் மருமகனைத் தனக்குப்பின் அரசாள நியமித்ததாலும் போர்த்துக்கேயருக்கு முறைப்படி திறையைச் செலுத்தாததாலும், முன்கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் விட்டானெனத் தெரிகிறது. இதையறிந்த போர்த்துக்கேயர் அவனை நெருக்கினர், அதனால் சிலகாலம் ஊராத்துறையில் ஒளித்தி(நந்தான்.நெருக்கடியான இந்நிலையைக் கண்டு அவன் தேவியர் தஞ்சைப் பெருமன்னன் இரகுநாதநாயக்கனிடம் இன்று ழுறையிட்டனர் 5, கேம் நாயக்கன் என்பான் தலைனமயில் இரகுநாதநாயக்கன் அனுப்பிய தஞ்சைப் படையின் உதவிகொண்டு திரும்பவும் அரசைக் கைப்பற்றினான். இரகுநாதநாயக்கனே யாழ்ப்பாணம் வந்து போரிற் பங்கெடுத்துக் கொண்டதாகவும் கருதப்படுகிறது, ஆனால் போர்த்துக்கேயர் வரலாற்று நூல்கள் இரகுநாதன் வருகை எதுவுங் கூறிற்றில.
இன்னும் சங்கிலியின் அரச பரிபாலனத்தில் தமிழ் மக்கள் திருப்தியடைய வில்லை. அதனோடு தஞ்சை நாயக்கனின் :உதவிப் பலத்தினால் போர்த்துக்கேயரை மதியாமலும் நடந்தான். போர்த்துக்கேயருக்கு மாறாகக் கண்டியரசனுக்கு உதவியளித்தான். அதனோடு போர்த்துக்கேயருக்கெதிராய் ஓல்லாந்தருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினான். இதனால் சங்கிலி மீது சீற்றமும் ஆத்திரமும் டுகஈண்ட போர்த்துக்கேயர் அவரை ஒழித்துக் சுட்டப் பிலிப்பு தய்ந்த ஒலிவீரா 6 என்னும் தலைவனின் கீழ் கி.பி 1619 ல் பெரும் படையொன்றை சங்கிலியை சங்கிலியும் படை திரட்டினான். இரு படைகளும் பெரும்போர் நிகழ்த்தின. எனினும் சங்கிலிபடை தோற்கடிக்கப்பட்டது. சங்கிலி பிடிபட்டான். போர்த்துக்கேயர் சங்கிலியைக் கோவாவுக்கு அனுப்பினர். யாழ்ப்பாணத் தமிழரசு ,ஒலிவீராவின் கையிற் சிக்கியது. இதனோடு தமிழரசர் பரம்பரையும் முடிந்தது.
விடுதலை போராட்டம்
அரசபரம்பரை ஒழிந்த்து. தன்மானம் என்னும் பெரிய தன்னத்தை இழந்து விட்டோமேயென்னும் மனப்பாரம் யாழ்ப்பாணத்து மகன் ஒவ்வொருவனது இதயத்தையும் அமுக்கியது மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுகந்திர செல் வத்தை இழந்து விட்டோமே என்ற கவலை மக்களை வாட்டியது. விடுதலை வேட்கை பொங்கியெழுந்தது. நாடு தொலைந்து பிறன் கைப்பட்ட ஈராண்டுக் கிடையில் ஆறுமுறை புரட்சி வெள்ளம் கான்யாறு போல் கரை புரண்டோடியது. இதனைப் போர்த்துக்கேய வரலாற்றாசிரியரே கூறிப்போவார்.
முதல் முறை ‘கரையார்‘ தலைவன் போர்த்துக்கேயருக்கு கெதிராய் படையோயெழும்பினான். நல்லூருக் கருகாமையில் நடந்த போர் ஒன்றில் ஒலிவீராடி இவனை முறியடித்தான்.
அடுத்து அரசகுமாரன் ஒருவனை யாழ்ப்பாணத்தரசனாக்க விரும்பி சின்னமிக்கேல் பிள்ளை என்பவன் தஞ்சைக் சென்று ஆயிரம் போர்வீரரைப் பன்னிரண்டு தோணிகளில் ஏற்றி வந்து தலைமன்னாரை அடைந்து அங்கிருநது போர்த்துக்கேயரை எதிர்த்தான். ஒலிவீர்ர் இம்முயற்சியையும் தோற்கடித்தான். பின்னர் முதலியார் ஒருவர் நடத்திய விடுதலைப்போரும் தோல்வியடைந்தது. சின்ன மிக்கேல்பிள்ளை தஞ்ஞை நாயக்கரிடம் திரும்பவுஞ்சென்று யாழ்ப்பாண அரசிற்குத் தன்னை அரசனாக்கும்படி வேண்டினான். தஞ்சைப் பேரரசின் கீழ் யாழ்ப்பாணத்ததைக் கொண்டுவர ஆண்டு 1620 கார்த்திகைத் திங்கள் முயற்சிகள் தொடங்கின. யாழ்ப்பாணத்தையும் அடுத்துள்ள பகுதிகளையும் கைப்பற்றுவதற்குத் தஞ்சைப் பெரும்படையொன்று வருவதாக ஒரு செய்தி நல்லூரிலிருந்த ஒலிவீராவின் காதுக்கெட்டியது. அந்தோனியோத மாத்தா கல்வாஒ 1 என்பவனின் கீழ் போர்த்துக்கேயப் படையொன்று பருத்தித்துறையில் தஞ்சை நாயக்கரின் படையைக் காத்திருந்தது. நாயக்கரின் படை வந்ததும் பெரும் போர் நிகழ்ந்தது. மீண்டும் போர்த்துக்கேயரால் தமிழர் 68 சேனை முறியடிக்கப்பட்டது, இதுவே இலங்கைத் தமிழரின் கடைசி விடுதலைப் போராட்டம்”
இதுகாறும் ஒருவாறு யாழ்ப்பாணத்தமிழரின் வரலரற்றைக் கூறினோம். இன்னும் திருக்கோணமலை மட்டக்களப்பு, வன்னி, மலை நாடு முதலிய இடங்களில் வாழுந் தமிழர் வரலாற்றையும் இவ்வாறு ஆராய்ந்து வருகின்றோம். இவை யாவற்றையும் இறுதியில் ஒருங்கு சேர்த்து இலங்கைத் தமிழர் வரலாறு என்னும் பெருநூலாக வெளியிடுதல் எமது நோக்கம். நோக்கத்துக்குச் சான்றுகள் தந்து உதவிபுரியும் அன்பர் தமக்கு. ஆசிரியர் என்றும் கடப்பாடுள்ளவராய் இருப்பார்,
BIBILIOGRAPHY
சங்கிலி
நாடகத்தில் வரும் ஆடவர் அரிவையர்
உறுப்பு 1
களம் 1
சங்கிலி
இடம்:
நல்லூர் யாழ்ப்பாணத்து அரசன் அவைக்களம்.
[அரசு கட்டிலில் யாழ்ப்பாணத்தரசன் பரரரசசேகரன் வீற்றிருக்கின்றான். அருகில் சங்கிலி ஓர் இருக்கையில் அம்ர்ந்திருக்கின்றான். தனிந்நாயகமுதலி, அரசகேசரி, முத்துலிங்கமுதலி, அப்பாமுதலி, அடியார்க்குநல்லான், இமையாணன், வீரமாப்பாணன் ஆகியார் அவனைச் சூழ்ந்திருக்கின்றனர்.]
சங்கிலி:
(எழுந்து அரசனே வணங்கிவிட்டுத் தனிநாயகமுதலியை நோக்கி) அமைச்சரவர்களே! என் அண்ணனார் இளவரசர் பண்டாரத்தைக் கொன்றவனைப் பிடித்து விட்டீர்களோ? அப்படுகொலை எவ்வாறு நடந்ததென்று யாமறிய விரிவாய்ச் சொல்லுங்கள்.
தனிநா மு:
(எழுந்து நின்று அரசனை நோக்கி) வேந்தரேறே! ஒம், அவனை எம்முடைய தளபதி இமையாணனார் தம் படைவீரர் சிலரின் உதவியோடு கைப்பற்றிக் கோட்டையில் காவலில் வைத்திருக்கின்றார். யாம் ஆராய்ந்து பார்த்ததில் அவன் எங்கள் பகைவராகிய வன்னியரேவலால் இங்கு வந்து காவலாளருக்குத் தெரியாது அரசமாளிகைப் பூங்காவில் களவாக உட்புகுந்து ஓளித்திருந்தான் எனத் தெரியவந்தது. இளவரசர் மாலைப் பொழுதில் தம்முடைய அரசபணிகளை முடித்து விட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக அங்கு உலாவப் போனார். அப்பொழுது அப்படுபாவி, படைக்கலம் இல்லாது தன்னந்தனியே அமைதியாய் உலாவிக்கொண்டு இளம்பிறையின் அழகில் ஈடுபட்டு நின்ற அவர் பின்புறமாக மெல்லச் சென்று தனது உடைக்குள் ஒளித்து வைத்திருந்த கட்டாரியை எடுத்து அவர் முதுகில் ஒங்கிக் குத்தினான். உடனே எங்கள் இளவரசர் அலறிக்கொண்டு மண்ணிற் சாய்ந்தார். அந்த அலறலைக் கேட்ட காவலாளர் அவ்விடத்துக்கு விரைந்தோடினர். அப்பொழுது இளங்கோ வீழ்ந்து கிடப்பதையும் அவர் அருகிலிருந்து ஒருவன் ஓடுவதையும் கண்டனர், உடனே காவற்காரர். “கொலை! கொலை! இதோ ஓடுகின்றனர் பிடியுங்குள்“ என்று கூச்சலிட்டனர். அதைக் கேட்டுக் கோட்டை வாயிலில் நின்ற தளபதி இமையாணனார் 'இங்கிருந்து ஒருவரும் வெளியேறாமற் பாருங்கள்” என்று படையினருள் ஒரு பகுதியினரை ஏவினர். ஏவிவிட்டு, மற்றொரு பகுதியினரை பூந்தோட்டம் முழுவதும் சல்லடை போட்டுப் பார்க்கும்படி கட்டளையிட்டனர். அவருட் சிலர் அகழியின் ஒரு பக்கத்தில் ஒருவன் பதுங்கியிருக்கக் கண்டனர். அவன் கையிலும் உடையிலும் இரத்தம் தோய்ந்திருந்தது- உடனே அவனைப் பிடித்துத் தளபதியிடம் கொண்டு போய் ஒப்படைத்தனர். அவர் உண்மையைக் கூறுமாறு நெருக்கினர். வன்னியரேவலால் அங்கு வந்ததாக அக்கொலையாளி ஒப்புக் கொண்டான், ஆனால் தன் ஊர் பெயரைத் தெரிவிக்க மறுத்து விட்டான். என்றாலும், அவன் ஒட்டிசுட்டான் காட்டிலிருக்கும் கொள்ளைக் கூட்டத்தலைவன் கரடியன் கந்தன் என்று எம்போர் வீரர் கண்டு பிடித்து விட்டனர்.
சங்கிலி:
(சீறி எழுந்து நின்று தன் வாளை உறையினின்றும் சிறிது உருவிய வண்ணம்) சங்கதி அப்படியும் ஆகிவிட்டதோ? [அப்பொழுது அரசன் சங்கிலியை இருக்கும்படி கையமர்த்துகின் றான். சங்கிலி பொங்கிய சினத்துடன் பல்லை நெறுமிக்கி கொண்டு விருப்பின்றித் தன் இருக்கையில் அமருகின்றான்.]
அரசகேசரி:
அரசிளங்குமரா, ஆத்திரப்பட வேண்டாம். நன்கு விசாரணை செய்து நீதயெனக் கண்டதையே செய்தல் வேண்டும். கோபத்தினால் ஆத்திரப்பட்டு எதையும் செய்தல் கூடாது. அப்பொழுது குற்றமற்றவர்களும் தண்டனையுறுதல் கூடும். அதனால் பெருந்தீங்கு உண்டாகும்.
“மனுமுனற நெறியின் வழக்கிறந் தவர்தா
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி யீர்வதோர் வாளாகும்மே.”
அரசன்:
(பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தனிநாயக முதலியைநோக்கி) புலவர் பெருமான் கூறுவது முற்றிலும் உண்மை.இதுவோ படுகொலை. என்றாலும் நீதிமன்றத் தீர விசாரணை செய்த பின்பு தான் ஒருவனைக் குற்றவாளி என்று முடிவாக்க வேண்டும். ஆகையால் இவனை நீதிமன்றத்திற்கு அனுப்பி விசாரணை தீர்ப்பை எனக்குத் தெரிவியுங்கள். இளவரசரைக் கொன்றது இராசத் துரோகம். என்றாலும் நெறிமுறையிலிருந்து நாம் சற்றேனும் தவறலாகாது. அது நீதி தவறுதலாய் முடியும்,
சங்கிலி:
அரசே! அற்ப பதரைத் தண்டிப்பதோடு மட்டும் நாம் விடக்கூடாது. இக்கொலைகாரனோ ஏவற்பேய். இவனை ஏவிய வன்னியரையும் நாம் கட்டாயம் தண்டிக்க வேண்டும். (ஒரு பக்கம் திரும்பி வாளை உருவிக்கையில் உயர்த்திப்பிடித்துக் கொண்டு) இவர்களுக்குத் ,தக்க பாடம் படிப்பிக்காவிட்டால் நான் சங்கிலியல்லன், என் குலதெய்வத்தின் மேல் ஆணை! [அப்பொழுது பரநிருபசிங்கன் அவைகளத்திற்கு வருகின்றான்.அவன் தாடி வளர்ந்திருக்கின்றது. எங்கேயோ தொலைப் பயணத்திலிருந்து, வந்தவன் போலக் காணப்படுகின்றான். அவனைக் கண்டதும் அரசனைத் தவிர ஏனையோர் எழுந்து நிற்கின்றனர். பரநிருபசிங்கன் ஒர் இருக்கையில் அமருகின்றான். பின் யாவரும் தத்தம் இருக்கைகளில் அமருகின்றனர். சங்கிலி தொடர்ந்து பேசுகிறான்] அண்ணாரும் கண்டியிலிருந்து சரியான தருணத்தில் வந்து சேர்ந்து விட்டார். அண்ணா! எமது தனமயனார் இளவரசர் நயவஞ்சகரால் கொலையுண்டார்......
பரநிருவ:
(இடைமறித்து) தம்பி, அதை நான் வரும் கேள்விப்பட்டேன். இச்செய்தி யைக் கேட்டதும் என்மனம் துடிதுடித்தது. அப்பழிகாரனைப் பிடித்துவிட்டீர்களா? கண்டியரசன் தேவிக்கு மருந்து செய்வதற்கு எமது தந்தையார் என்னை அங்கு அனுப்பியதுதான் வந்த கேடு. நான் அங்கு போனதால் கண்டியரசன் தேவி உயிர் பிழைத்தாள்; இங்கு இல்லாததால் எமது அருமை அண்ணனார் உயிர் இழந்தார். எல்லாம் சரி. மெத்தப்பேசி என்ன? இறப்பும் பிறப்பும் வினைப்பயன். யார் தான் அதனைத் தடுக்க முடியும்? அப்பழிகாரன் எங்கே?
தனிநா மு:
னகயும் பிமய்யுமஈய்ப் பிடித்து பிட்பீடஈம்.
சங்கிலி:
அண்ணா உண்மைக் கொலைகாரன் இவனல்லன். வன்னியரே இக்கொலையைச் செய்தவர், அவரைத் தகுந்த முறையிலே தண்டிப்பது எமது கடன். அப்படிச் செய்தாலன்றி எமது நகரத்தின் காவற் தெய்வமும் எமது அண்ணனாரின் ஆவியும் சாந்தமடையா. ஆகையால் வன்னிநாட்டின் மீது படையெடுக்கத் துணிந்து விட்டோம். நல்ல நேரத்தில் நீங்களும் வந்து விட்டீர்கள், அண்ணனார் பண்டாரம் இறந்தபடியால் நீங்களே இளவரசர். ஆகையால் நான் செய்யும் இம்முயற்சிக்கு உங்கள் அனுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும். அவற்றை அடியேனுக்கு ஈந்தருளும்படி வேண்டுகின்றேன். (சங்கிலி குனிந்து பரநிருபசிங்கனை வணங்குகின்றான்.)
பரநிருப:
(சங்கிலி நிற்கும் இடத்திற்குப் போய் அவனைத் தழுவி) தம்பி, இப்படி இரு. உனக்குச் சில சங்கதிகள் சொல்ல விரும்புகிறேன். ஆறுதலாக இருந்து கேள் .
சங்கிலி:
(தனது இருக்கையில் அமர்ந்த வண்ணம்) உங்கள் கட்டளை எதுவுங் கேட்பேன். ஆனால் வன்னியரோடு சமாதானம் மட்டுங்' கேட்க ஒருப்படேன். (தன் நெஞ்சிலே தட்டி) என்னுடம்பில் ஒரு துளி இரத்தம் இருக்கு மட்டும் வன்னியரை இந்தப் படுகொலைகாரரைக் கொன்றே தீருவேன். கட்டாயம் வெற்றி காணுவேன் இது சத்தியம்,சத்தியம்.
பரநிருப:
(தன் தாடியை உருவிவிட்டு) தம்பி, நான் அதற்குத் தடை சொல்லவில்லை. .உனது வஞ்சினப்படியே செய்துகொள்; ஆனால் உனக்கும் இந்தச் சபையிலுள்ளோருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எமது அண்ணானர் இறந்த செய்தியைக் கண்டியிலிருந்து வரும் வழியிற் கேட்ட நேரந் தொடக்கம் இதைப்பற்றி மிகவும் அலசி ஆலோசித்துள்ளேன்.
அரசன்:
(நிமிர்ந்து பரநிருசிங்கனைப் பார்த்து) எதைப்பற்றி?
பரநிருப:
அரசே, என் மனநிலை வரவர மாறிக்கொண்டு வருகின்றது. ஆன்மா ஈடேற்றத்திற்கு வேண்டிய வழியையே என மனம் நாடுகின்றது. அவ்வழியில் நின்று ஒழுகவே பெரிதும் விரும்புகிறேன். அரசபாரம் அதற்குத்தடையாக இருக்கும். ஆகையால் இந்த இளவரசபாரத்தைத்தம்பி சங்கிலியே ஏற்றுத் தங்களுக்குப்பின் அரசபாரத்தையும் கொண்டு நடத்த வேண்டும் என்பதே என் எண்ணம். [அவைக்களத்திலுள்ளோர் யாவரும் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.]
சங்கிலி:
(எழுந்து நின்று மிகவும் தாழ்மையாக) அண்ணா! தமையன் இருக்கத் தம்பி அரசாள்வது எப்படி? அண்ணன் அரசைத் தம்பி எடுத்தாளுவது தவறு; அது அரச முறையும் அன்று……………..
பரநிருப:
இளவரசுப் பட்டத்திற்கு நீயே தகுந்தவன், ஆண்டில் யான் உனக்கு மூத்தவன்தான் என்றாலும் அரசியல் அறிவிலும் ஆற்றலிலும் நீயே மூத்தவனாகி விட்டாய். இதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் நானே மனம் மகிழ்ந்து தரும பதவியை ஏற்றுக்கொள், நான் உன் அண்ணன் அல்லவோ? உன் அண்ணனார் சொல்லுக்கு அட்டி சொல்லாதே.
சங்கிலி:
(தயக்கத்துடன் கம்மிய குரலில்) அண்ணா………. எ…ன் அண்ணா………. இ……து எங்………
அரசகேசரி:
இளவரசரே, அண்ணன் சொல்லைக் கேட்டு அரசை எற்றுக் கொள்வதிலும் குற்றமில்லை. மூத்தோன் இருக்க இளையோன் ஆட்சி புரிதல் பண்டைக் காலத்திலும் நிகழ்ந்ததுதானே, வீட்டுமன் தன் அரசியலைத் தம்பியார்க்குக் கொடுக்கவில்லையா? இராமன் கானகம் செல்லப் பரதன் அயோத்தியை ஆளவில்லையா?
அப்பா மு:
(செருமிக்கொண்டு அரசனை நோக்கிக்கைகளை விரித்து நீட்டிய வண்ணம்) இது எனக்கு ஒன்றுமாகத் தெரியவில்லை,
அரசன்:
என் புதல்வரின் கருத்து எதுவோ அதுவே என் கருத்தும்; ஆனால் எனக்கோ வயதாகிவிட்டது.அரசபாரத்தைத் தாங்கி நடத்த என்னால் இனிமுடியாது. பரநிருபசிங்கா! உன்னிடமே அதை ஒப்படைததல அரச முறை. இப்பொழுதே ஒப்படைக்கிறேன். ஏற்றுக்கொள்.
பரநிருப:
(வணங்கி அரசனை நோக்கி) ஏற்றுக் கொண்டேன். (திரும்பிச் சங்கிலியை நோக்கி) தந்தேன் உனக்கே.......(தன் இரு கைகளையும் உயர்த்தி) யாழ்ப்பணத்தரசே வாழ்க! சங்கிலி வாழ்க!! (எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்) சட்டநாதர் உனக்குத் திருவருள் புரிவாராக. யாழ்ப்பாணத்தரசரின் புகழும் வீரமும் குறையாத வகையில் பரிபாலிப்பது உன் கடன்.
சங்கிலி:
அண்ணா! இது என்ன, கனவோ நனவோ தெரியவில்லை இந்தப் பதவியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை உங்கள் கட்டளையை மறுக்கவும் முடியாது. சரி, அப்படியானால் நன்மையிலும் தீமையிலும் நீங்களே எனக்கு வழிகாட்டியாய் இருப்பதாக வாக்குறுதி தந்தால் நான் இப்பொறுப்பை ஏற்றுக் கொள்வேன்.
பரநிருப:
துணைவனுக்குத் துணைவனாகவும் மந்திரிக்கு மந்திரியாகவும் இருந்து எல்லாவற்றையும் நானே நடத்துவேன். நீ ஒன்றுக்கும் அஞ்சாதே. தம்பி, என் சொல்லைத் தட்டாதே. அரசை ஏற்றுக்கொள்.
அரசன்:
என் பொறுப்பு நீங்கியது (அரசகட்டிலிலிருந்து இறங்கி இருவருக்கும் நடுவில் நின்று இடதுகையாலே பரநிருபசிங்கனை அணைத்துக்கொண்டு அவனை நோக்கி) உன் அறிவை மெச்சினேன். (வலது கையைச் சங்கிலியின் தலைமேல் உயர்த்தி) உன் ஆண்மையை வாழ்த்தினேன். யாழ்ப்பாணத்தரசனே வாழ்க! தமிழ்க் குடிகளோங்குக (அவைக்களத்திலிருந்தோரை நோக்கி) இத்துடன் அரசசபை கலைந்தது.
திரை
உறுப்பு 1
களம் 2
இடம்:
நல்லூர், அரசன் அவைக்களம்.
[சங்கிலி தனியே கைகட்டிக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ் கியவண்ணம் அங்கும் இங்கும் உலாவுகின்றேன். அவனுடைய நண்பனும் மெய்க்காப்பாளனுமாகிய வீரமாப்பாணன் அவன் அருகே வருகின்றான்.]
வீரமா:
(சற்று நின்று அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு) அரசே! இவ்வளவு யோசனைக்குக் காரணம் என்ன?
சங்கிலி:
ஒன்..று..ம்…..இல்..லை
வீரமா:
என்ன ஒன்றுமில்லை என்கிறீகள்? அகத்தில் நிகழ்வதை முகத்திலே காணலாம். .உங்கள் மனம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது, நீங்கள் யோசிப்பதை எனக்குச் சொன்னால் நானும் அதைப்பற்றி ஆலோசித்து உங்கள் கவலையைப் போக்க வழி தேடுவேன்.
சங்கிலி:
எனது கவலையை ஒருவரும் தீர்க்கமுடியாது. கனவிலும் எதிர்பாராத சுமை இன்று என் தலைமேல் ஏறியிருக்கிறது. அண்ணனார் பரநிருபசிங்கர். அரசபொறுப்பிலிருந்தும் தப்பிவிட்டார். நான் இந்த அரசபாரத்தை எப்படிக் கொண்டு நடத்துவேன்?
வீரமா:
அதற்கு என்ன யோசனை? சிறந்த அறிவாளியான உங்கள் தகப்பனாரும் இருக்கிறார். பரநிருபசிங்கரும் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன் என வாக்குறுதி தந்திருக்கிறார். அல்லாமலும் அரசனுக்கு வேண் டிய இயல்புகளெல்லஈம் உங்களிடத்தே பொருந்தியிருக்கின்றன. ஆகையால் அரச பதவிக்கு நீங்களே தகுந்தவர். இதில் சந்தேகமில்லை. அதைப்பற்றி ஏன் இவ்வளவு யோசனை, குடிசனங்களும் .உங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள். ஏனென்றால் யாழ்ப்பாண அரசன் மேல் பிறநாட்டு அரசர்கள் பலர் இப்போது பொறாமை கொண்டிருக்கிறார்கள். எங்கள் இராச்சியத்தை விழுத்துவதற்குப் பலமுயற்சிகள் செய்கிறார்கள். இதற்கு சிங்கள அரசரும் வன்னியரும் எம்மை அடக்கத் தருணம் பார்த்திருக்கிறார்கள். வடக்கே நாயக்க மன்னர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பறங்கிகளும் யாழ்ப்பாணத்தை மட்டுமல்லாமல் இலங்கை முழுவதையும் கைப்பற்றிக் கொள்ள முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் அறிவும் ஆண்மையும் உடைய அரசனே வேண்டும். ஆகையால் நீங்களே பட்டத்திற்குத் தகுந்தவர்கள்.
சங்கிலி:
அதெல்லாம் சரி, நான் அரசனாக வந்தால் குடிசனங்கள் என்ன நினைப்பார்கள்?
வீரமா:
நீங்சுள் அரசனாகும் செய்தியைக்கேட்டு அவர்கள் அடங்கா மகிழ்ச்சியடைவார்கள். என்பது நிச்சயம். (புன்னனக புரிந்து கொண்டு குரலே மாற்றி) அரச பொறுப்பைப் பற்றியது போதும். உங்கள் வடிவழகியைப் பின்பு கண்டீர்களோ?
சங்கிலி:
இல்லை…. இல்லை…. நான் அவளை ஒரு கிழமையாகக் காணவில்லை.
வீரமா:
(தலையை அசைத்து) ஓகோ! அப்படியோ? ஏன் இன்னும் அவளைப்போய்க் காணவில்லை.
சங்கிலி:
காணவேண்டுந்தான். ஆனால் எப்படிக் காணலாம் என்று தெரியவில்லை. இந்த நாட்களில் அவளைக் காணுவது மிகவும் வில்லங்கமாயிருக்கிறது.
வீரமா:
சரிதான். நான் மறந்துவிட்டேன். உங்கள் நிலையும் மாறிவிட்டதல்லவோ? இப்போது நீங்கள் அரசர். முன்போல நினைத்தபடி நடக்க முடியாது.
சங்கிலி:
சும்மா பகிடிபண்ணுவதை நிறுத்திவிடு. அவளைக் காணுவதற்கு என் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு வழிதேட மாட்டாயோ?
வீரமா:
(தலையைச் சொறிந்துவிட்டுக் கடைக்கண்ணாற் பார்த்துக் கொண்டு) கட்டாயம். எங்கள் அரசர் பெருமானுக்கு இத்தொண்டினைச் செய்யாவிட்டால் நான் இருந்தென்ன? இறந்தென்ன?
திரை
Copyright © 2013 - All Rights Reserved - Department of Computer Science, Faculty of Science, University of Jaffna