மயங்கா எழுத்துக்கள்
- உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிhPற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.
- உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும்.
- மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.
- மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :-
- லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர னகரங்களழன் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே தகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா.
- தேர்வு வினாக்கள் -
- உயீறிற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்?
- உடம்படுமெய்யாவது யாது? உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ?
- மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின் எப்படியாகும்?
- லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
- ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
- மகரமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
- ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
- நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
- வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்
- தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.
உ-ம்.
ஆண் + அழகு = ஆணழகு
மரம் + உண்டு = மரமுண்டு
- தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும்.
உ-ம்.
கல் + எறிந்தான் = கல்லெறிந்தான்
பொன் + அழகியது = பொன்னழகியது
- தேர்வு வினாக்கள்-
- தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?
- தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?
உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்
- இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.
உ-ம்.
கிளி + அழகு = கிளியழகு
தீ + எரிந்தது = தீயெரிந்தது
பனை + ஓலை = பனையோலை
- அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.
உ-ம்.
பல + அணி = பலவணி
பலா + இலை = பலாவிலை
திரு + அடி = திருவடி
பூ + அரும்பு = பூவரும்பு
நொ + அழகா = நொவ்வழகா
கோ + அழகு = கோவழகு
கௌ + அழகு = கௌவழகு
- கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.
உ-ம்.
கோ + இல் = கோயில்
ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.
- ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.
உ-ம்.
அவனே + அழகன் = அவனேயழகன்
சே + உழுதது = சேவுழுதது
- தேர்வு வினாக்கள்-
- தஇ, ஈ, ஐ எ;ஏம் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?
- தஅ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?
- தகோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ?
- தஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன்மொழி வந்தால் எப்படி புணரும்?
குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்
- குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்: யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.
உ-ம்.
ஆடு + அரிது = ஆடரிது
நாகு + யாது = நாகியாது
- குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும்.
உ-ம்.
சம்பு + அருளினான் = சம்புவருளினான்
இந்து +உதித்தது = இந்துவுதித்தது
- தேர்வு வினாக்கள்-
- குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால் எப்படியாம்?
- குற்றியலுகரத்தின் முன் யகரம் வந்தால் எப்படியாம்?
- குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் உண்டா இல்லையா?
- வட மொழிகளின் ஈற்றுகரத்தின் முன் உயிர் வரின் எப்படியாம்?
சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்
- சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.
உ-ம்.
கதவு + அழகு = கதவழகு
கதவு + யாது = கதவியாது
- தேர்வு வினா --
- முற்றியலுகரங் குற்றியலுகரவீற்று விதி பெறாதா?
எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்
- உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்: ஆயினும் இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்;
- வின, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கௌ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, என்னும் வருமொழிகளையும் கூட்டிக்கண்டு கொள்க.
உ-ம்.
விள + ஞான்றது = விளஞான்றது
உரிஞ் + ஞான்றது = உரிஞஞான்றது
விள + ஞாற்சி = விளஞாற்சி
உரிஞ் + ஞாற்சி = உரிஞஞாற்சி
- நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அல்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும்.
- தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்ஃ
உ-ம்.
மெய் + ஞானம்= மெய்ஞ்ஞானம்
செய் + நன்றி = செய்ந்நன்றி
கை + மாறு = கைம்மாறு
- நொ, து என்னும் இவ்விரண்டும் முன் வரும் ந ம ய வக்கள் மிகும்.
உ-ம்.
நொ + ஞெள்ளா = நொஞ்ஞள்ளா
நொ + யவனா = நொய்யவனா
து + ஞெள்ளா = துஞ்ஞெள்ளா
து + யவனா = துய்யவனா
- நோ - துன்பப்படு, து- உண்
- தேர்வு வினாக்கள்-
- எல்லாவீற்றின் முன்னும் ஞ ந ம ய வக்கள் வந்தால் எப்படிப் புணரும்?
- ஞ ந ம ய வக்கள் எந்த மொழி முன்னும் மிகவோ?
- நொ, து என்னும் இவ்விரண்டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல.பேயாமோ?
மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல்
- யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு.
உ-ம்.
வேள் + யாவன் = வேளியாவன்
மண் + யானை = மண்ணியானை
- வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.
- தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும்.
உ-ம்.
வேய் + யாது = வேயாது
- தேர்வு வினாக்கள் --
- யகரமல்லாத மெய்களின் முன் யகரம் வந்தால் எப்படி புணரும்?
- தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்?
மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் நாற்கணமும் புணர்தல்
- அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.
உ-ம்.
அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை
அம்மலை அம்மலை உம்மலை எம்மலை
அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி
அவ்யபனை இவ்யானை உவ்யானை எவ்யானை
அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர்
- அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.
உ-ம்.
அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்
- தேர்வு வினாக்கள்-
- அ, இ, உ என்னும் மூன்று கட்டின் முன்னும், எகரவினா முன்னும் யகரமொழிந்த மெய்கள் வந்தால், எப்படி புணரும்? இந்நான்கன் முன்னும் யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புணரும்? 99. அந்த, இந்த, உந்த, எந்த என்னும் மரூஉமொழிகளின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
உயர்தினைப் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல்
- உயர்தினைப் பெயாப் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
உயர்தினைப் பெயர்
நம்பிக்குறியன் நம்பிக்கை
விடலைசிறியன் விடலை செவி
செய்பெரியன் சேய்படை
அவர் தீயர் அவர்தலை
பொதுப்பெயர்
- சாத்திகால்
சாத்திகுறியள்
சாத்திகுறிது
- தந்நைசெவி
தந்தைசிறியன்
தந்தைசிறிது
- தாய்கை
தாய்பொடியாள்
தாய்கொடிது
- ரகரமெய் பொதுப்பெயர்க்கு ஈறாகாது
- நும்பிக்கொற்றான், சாத்திப் பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் கண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும் வல்லின மிகுமெனக்கௌ;க.
- மகப்பிறந்தது, மகப்பெற்றாள், எ-ம். பிதாக்கொடியன்.பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர, ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகுமெனக் கொள்க.
- உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால் இருவழியினுந் திரியாதியல்பாம்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
உயர்தினைப் பெயர்
தேன்றல்குறியன் தோன்றல்கை
அவள்சிறியள் அவள்செவி
அவன்பெரியான் அவன்பொருள்
- ணகரமெய் உயர்திணைப்பெயர்க்கு ஈறாகாது.
பொதுப் பெயர்
- தூங்கல் கை
தூங்கல் குறியன்
தூங்கல் குறிது
- மக்கள் செவி
மகக்கள் சிறியர்
மக்கள் சிறிய
- ஆண்புறம்
ஆண் பெரியன்
ஆண் பெரிது
- சாத்தன் செவி
சாத்தன் சிறியன்
சாத்தன் சிறிது
- உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.
- லகர ளகரங்களின் முன்னும், ணகர னகரங்களின் முன்னும், தகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற்கூறப்படும்.
- தேர்வு வினாக்கள் -
- உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வல்லினம் வரின் எப்படிப் புணரும்?
- இவைகளின் முன் வரும் வல்லினம் எந்தவிடத்தும் மிகவோ?
- உணர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்று லபர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்?
- இவைகள் வல்லினம், வந்தால் எவ்விமத்துந் திரியாவோ?
சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல்
- னகலர லகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும் ஆறாம் வேற்றமைத் தொகையினும், நிலைமொழியேனும், இவ்விரு nhழியுமெனும், விகாரப்படும்.
உ-ம்.
- உம்மைத் தொகை
கபிலன் + பரணன் = கபிலபரணர்
- இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிவன் + பெருமான் = சிவபெருமான்
முருகன் + கடவுள் = முரகக்கடவுள்
சதாசிவன் + நாவலன் = சதாசிவ நாவலன்
கந்தன் + வேள் = கந்தவேள்
வேலாயுதன் + உபாத்தியாயன் = வேலாயுதவுபாத்தியாயன்
தியாகராசர் + செட்டியர் = தியாகராசச் செட்டியர்
விநாயகர் + முதலியார் =விநாயகமுதலியார்
- வேற்றுமைத் தொகை
குமரன் + கோட்டம் =குமரகோட்டம், குமரக்கோட்டம்
வாணியர் + தெரு = வாணியத்தெரு
வேளாளர் + வீதி = வேளாளவீதி
- தேர்வு வினாக்கள்-
- எல்லாவுயர்தியைப் பெயரும், நாற்கணங்களோடு புணருமிடத்து, இயல்பாகவே புணருமொ?
விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்
- விளிப்பெயரீற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆப் பெயாPற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.
உ-ம்.
புலவபாடு சாத்தா கேள்
நம்பிசெல் தம்பீ தா
வேந்து கூறு மகனே படி
விடலை போ நங்காய் பார்
நாய்கீர் சென்மின் குறும்பூழ் போ
தோன்றல் உறாய் மக்கள் சொல்லீர்
ஆண் கேளாய் கோன் பேசாய்
- விளக்கொடியை, பிதாகடகூறாய், ஆடூச் சொல்லாய், சேச்சொல்லாய், கோப்பேசாய், என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.
- தேர்வு வினாக்கள்-
- விளிப் பெயரீற்று உயிர் முன்னும், யரழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?
- விளிப் பெயரீற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
- விளிப்பெயர் முன் வரும் வல்லினம் எவ்விடத்தும் மிகவோ?
ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்
- ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யபவினா முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.
உ-ம்.
அவனா கொண்டான் அவனே சென்றான்
அவனோ தந்தான் யா பெரிய
- தேர்வு வினாக்கள்
- ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?
வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
- வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம்.
உ-ம்.
- தெரிநிலை வினைமுற்று
உண்டன குதிரைகள்   உண்ணா குதிரைகள்
வருதி சாத்தா   வந்தனை சாத்தா
வந்தது புலி   வந்தாய் பூதா
உண்டீர் தேவரே   உண்டான் தேவர்
உண்பல் சிறியேன்   உண்டாள் சாத்தி
வந்தேக் சிறியேன்   வந்தான் சாத்தன்
- குறிப்பு வினைமுற்று
கரியன குதிரைகள்   வில்லி சாத்தா
கரியது தகர்   கரியை தேவா
கரியாய் சாத்தா   கரியீர் சாத்தரே
- கூயிற்றுக் குயில், குநற்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வனை முற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.
- ஏவலொருமை வினைமுற்று
நட கொற்றா வா சாத்தா
எறி தேவா கொடு பூதா
ஓடு கொற்றா வெஃகு சாத்தா
பரசு தேவா நடத்து பு_தா
அஞ்சு கொற்றா எய்து சாத்தா
வனை தேவா செய்கொற்றா
சேர் சாத்தா வாழ் பூதா
நில் கொற்றா கேள் சாத்தா
உண் கொற்றா தின் சாத்தா
- நொ, து என்னும் ஏவலொருமை வினைமுற்றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
உ-ம். நொக்கொற்றா துச்சாத்தா
- வினைத்தொகை
விரிகதிர் ஈபொருள்
அடுகளிறு வனைகலம்
ஆடு பாம்பு அஃகுபிணி
பெருகுபுனல் ஈட்டுதனம்
விஞ்சுபுகழ் மல்கு சுடர்
உண்கலம் தின்பண்டம்
கொல்களிறு கொள்கலம்
செய்கடன் தேர்ப்பொருள்
வீழ்புனல்
- ஏவலொருமை வினைமுற்றும் வினைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிபாமை காண்க.
- ணகர ழகரவீறுகள், வினைத் தொகைக்கும் ஏவன் முற்றுக்குமன்றி, மற்றை வினை முற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்பு வினை முற்றுக்கு இல்லை.
- தேர்வு வினாக்கள்-
- வினைமுற்று வினைத் தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? ஆச் சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகலங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்?
- வல்லினம், எந்த வினை முற்றின் முன்னும் மிகவோ?
- வன்றொடர்க் குற்றியலுகரவீற்று ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகுமோ?
- ஏந்த ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகவோ?
பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்
- அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா. ஈற்றுயிர் மெய் கெட்டு ஈகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.
உ-ம்.
உண்ட கொற்றன் கரிய டிகாற்றன்
உண்ணாத குதிரை இல்லாத குதிரை
உண்ணாக் குதிரை இல்லாக் குதிரை
- தேர்வு வினாக்கள்-
- அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
- ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகார விறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
வினைடியச்சத்தின் முன்வல்லினம் புணர்தல்
- இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
உ-ம்.
தேடிக்கொண்டான் போய்க்கொண்டான்
உண்ணாச்சென்றான் உண்ணுhச் சென்றான்
உண்டெனப்பசஜ தீர்ந்தது உண்ணப் போனான்
மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான்
உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான்
அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செண்வான்
- இய, இயர், Nமு, டை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உ-ம்.
உண்ணிய சென்றான் உண்ணியா சென்றான்
உண்ணாமே போனான் உண்ணாமை போனான்
- வன்றொடர்க்குற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்: மற்றைக் குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உ-ம்.
அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான்
பொருது சென்றான் நடந்து போனான்
எய்து கொன்றான் அவனல்லது பேசுவார் யார்
- துவ்விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும்.
உ-ம்
உண்ணாப் போனான்
- வினையெச்சத்தீற்று னகர லகரங்கள், வல்லினம் வந்தால், றகரமாகத் திரியும்: வான் பான் இரண்டுந் திரியா.
உ-ம்.
வரிற்கொள்ளும் உண்டாற்கொடுப்பேன்
அறிவான்சென்றான் உண்பான் போனான்
- தேர்வு வினாக்கள்-
- எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்?
- எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா?
- வன்றொடர்க் குனுற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
- வன்றொடரழிந்த குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
- துவ் விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
- வினையெச்சத் தீற்று னகர லகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்?
- எல்லா வினையெச்சத் தீற்று னகரமும் வல்லினம் வந்தாற்றிரியுமொ?
இ உ ஐ யொழிந்த உயிரீற்றஃறிணைப் பெணர் முன் வல்லினம் புணர்தல்
- அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, என்னும் ஆறயிரீற்றஃறிணைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
விளக்குறிது விளக்கோடு
தாராச்சிறிது தாராச்சிறை
தீச்சுடும் தீச்சுவாலை
கொண்மூக்கரிது கொண்மூக்கருமை
சேப்பெரிது சேப்பெருமை
கோச்சிறிது கோச்செவி
- அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும்: வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகா.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
பல போயின பல படைத்தான்
சில சென்றன சில சொற்றான்
உள்ளன குறைந்தன உள்ளன கொடுத்தான்
உள்ளவை தகர்ந்தன உள்ளவை தந்தான்
- பல சில என்னும் இரு பெயருந் தம் முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும், நிலைமொழியீற்றின் அகரங்கெட லகரம் றகரமாகத் திரிந்துந் தியாதும், வரும்.
உ-ம்.
பலபல பலப்பல பற்பல பல்பல
சிலசில சிலசில சிற்சில சில்சில
- பல, சல என்னும் இரு பெயர் முன்னும் பண்புத் தொகையிற் பிற பெயர் வரின், நிலை மொழியீற்றின் அகரங்கெடாதுங் கெட்டும் வரும்.
உ-ம்.
பல்கலை பல்கலை சிலகலை சில்கலை
பலமலை பனடமலை சிலமலை சின்மலை
பலயானை பல்யானை சிலயானை வில்யானை
பலவணி பல்லணி சிலவணி சில்லணி
- ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன்வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்.
உ-ம்.
ஆ தீண்டிற்று மா சிறிது ஆமா பெரிது பீ கிடந்தது நீ பெரியை
- மா - இங்கே வலங்கு. ஆமா - காட்டுப்பசு
- பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும்.
உ-ம்.
பூங்கொடி பூங்கரும்பு
- பூ என்பது மலருக்கும் பொலிவுக்கும் பெயர். முலர்ப்பொருளில் வேற்றுமை: பொலிவுப் பொருளில் அல்வழி.
- தேர்வு வினாக்கள்
- அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஒ என்னும் ஆறயிரீற்று அஃறிணைப் பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?
- அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர், வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப்பெயர் என்மும் இவைகளின் முன் வரும் வல்லினமும் மிகுமோ?
- புல, சில என்னும் இரு பெயருந் தம்முன்னே தாம் வரின் எப்படி புணரும்?
- இவ்விரண்டின் முன்னும் பண்புத்தொகையிற் பிறபெயர் வரின் எப்படி புணரும்?
- ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
- பூ என்னும் பெயர் முன் வல்லினம் மிகுதலேயன்றி வேறு விதுயும் பெறுமோ?
முற்றியலுகர வீற்றுப் பெயர் முன் வல்லினம் புணர்தல்
- முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
பசுக்குறிது பசுக்கோடு
- முற்றியலுகர வீற்று அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்பெயர் முன்னும், எது என்னும் வினாப் பெயர் முன்னும், ஒரு, இரு, அறு, எழு என்னும் விகாரவெண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
அது குறிது அது கண்டான்
இது சிறிது இது சொற்றான்
உது தீது உது தந்தான்
எது பெரிது எது பெற்றான்
அல்வழி
ஒருகை, இருசெவி, அறுகுணம், எழுகடல்
- தேர்வு வினாக்கள்-
- முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வல்லினம் வரின் எப்படி புணரும்?
- முற்றியலுகரவீற்றுச் சுட்டுப்பெயர் முன்னும், வினாப்பெயர் முன்னும், விகார வெண்ணுப்பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படி புணரும்?
இ ஐ ர ழ வீற்றஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல்
- இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ வொற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும், மிகும் எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகவாம்.
உ-ம்.
- வேற்றுமை
கரிக்கோடு
நாய்க்கால் யானைச்செவி
தேர்த்தலை பூழ்ச்செவி
- பண்புத்தொகை
மாசித்திங்கள்
மெய்க்கீர்த்தி சாரைப்பாம்பு
கார்ப்பருவம் பூழ்ப்பறவை
- உவமைத்தொகை
காவிக்கண்
வேய்த்தோள் குவளைக்கண்
கார்க்குழ் காழ்ப்படிவம்
- எழுவாய்
பருத்திகுறிது
நாய்தீது யானைகரிது
வேர்சிறிது யாழ்பெரிது
- உம்மைத்தொகை
பரணிகார்த்திகை
பேய்பூதம் யானைகுதிரை
நீர்கனல் இகழ்புகழ்
- இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, வல்லினம் மிகா.
உ-ம்.
இரண்டாம் வேற்றுமை ஏழாம்வேற்றுமை
புளி தின்றான் அடவிபுக்கான்
குவளை கொய்தான் வரைபாய்ந்தான்
வேய் பிளந்தான் வாய்புகுந்தது
தேர் செய்தான் ஊர் சென்றான்
தமிழ் கற்றான் அகழ் குதித்தான்
- காவித்தடம், மனைத்தூண் என உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், வல்லினம் மிகுமெனக் கொள்க. புளி தின்றான், அடவி, புக்கம் என்பன, குளியைத் தின்றான், அடவியின் கட்புக்கான் என விரிதலின், உருபு மாத்திரந்தொக்க தொகை. காவித்தடம், மனைத்தூண் என்பன, காவியையுடைய தடம், மனையின் கண்ணதாகிய தூண் என விரிதலின் உருபும் பயனும் உடன்றொக்க தொகை.
- ஏரிகடை, குழவிகை, மலைகிழவோன். எனச் சிறுபான்மை அஃறிணைப் பெயரிடத்து வேற்றுமையில் வல்லினம் மிகாமை காண்க.
- ஒரோவிடத்து, வேய்ங்குழல், ஆர்ங்கோடு என வேற்றுமையில் யகர ரகரங்களின் முன்னும், பாழ்ங்கிணறு எனப் பண்புத் தொகையில் ழகரத்தின் முன்னும், இனமெல்லெழுத்து மிகுமெனக் கொள்க.
- பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான். எ-ம். சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான். எ-ம். ஒரோ வழிச் செயப்பாட்டுவினை முடிக்குஞ்சொல்லாக வருமிடத்து, யகர ரகரங்களின் முன் வரும் வல்லினம், ஒரு கால் இயல்பாயும், ஒரு காற்றிரிந்தும் வரும்.
- தேர்வு வினாக்கள்-
- இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ மெய்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம் எந்தெந்த விடங்களின் மிகும்: எந்தெந்தவிடங்களின் மிகா?
- இரண்டாம் வேற்றுமைத் தொகையும், ஏழாம்வேற்றுமைத் தொகையும், உருபு மாத்திரந் தொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
- உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? இகர ஐகாரவீற்றஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், ஆறாம் வேற்றுமைத் தொகையில், மிகுதலன்றி வேறு விதி பெறாதோ?
- ய ர ழ வீற்றின் முன் வரும் வல்லினம், வேற்றுமைத் தொகையிலும், பண்புத் தொகையிலும், ஒரோவிடத்து வேறு விதி பெறவோ? மூன்றாம் வேற்றுமைத் தொகையிலே முடிக்குஞ் சொற் செயற்பாட்டு வினையாகுமிடத்து, ய ர க்களின் முன் வரும் வல்லினம் எப்படிப் புணரும்?
சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்
- உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும்.
உ-ம்.
மா + காய் = மாங்காய்
விள + காய் = விளாங்காய்
- இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம்முச்சாரியை தோன்றும்.
உ-ம்.
புளி + காய் = புளியங்காய்
புன்கு + காய் = புன்கங்காய்
ஆல் + காய் = ஆலங்காய்
- ஐ காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்றை காரங் கெட்டு அம்முச்சாரியை தோன்றும்.
உ-ம்.
எலுமிச்சை + காய் = எலுமிச்சங்காய்
மாதுளை + காய் = மாதுளங்காய்
- தேர்வு வினாக்கள்-
- உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
- இகர உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
- ஐகாரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
சில வேற்றுமையுருபின் முன் வல்லினம் புணர்தல்
- ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு களின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகா.
உ-ம்.
மகனொடு போனான், மகனோடு போனான்,
தனது கை, தனாது கை, தன கைகள்
- தேர்வு வினா-
- ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?
குற்றியலுகரவீறு
- வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
கொக்குக்கடிது கொக்குச்சிறை
சுக்குத்திப்பிலி சுக்குக்கொடு
- மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்: வேற்றுமையிலே மிகும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
குரங்கு கடிது குரங்குக்கால்
அம்பு தீது அம்புத்தலை
- குரங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத் தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க.
- ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து, என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உ-ம்.
அன்று கண்டான், பண்டு பெற்றான்
இங்குச்சென்றான், ஈங்குச்சென்றான்
உங்குத்தந்தான், ஊங்குத்தந்தான்
எங்குப்பெற்றான், யாங்குப்பெற்றான்
யாண்டுப் பெற்றான்
- நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இரு வழியினும் இயல்பாம்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
நாகு கடிது. நாகு கால்
எஃகு கொடிது எஃகு கூர்மை
வரகு சிறிது வரகு சோறு
தெள்கு பெரிது தெள்கு பெருமை
- டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும்.
நெடிற்றொடர்
ஆட்டுக்கால்
ஆட்டுமயிர்
ஆட்டுவால்
ஆட்டதர் ஆற்றுக்கால்
ஆற்றுமணல்
ஆற்றுவழி
ஆற்றூறல்
உயிர்த்தொடர்
பகட்டுக்கால்
பகட்டுமார்பு
பகட்டு வால்
பகட்டடி வயிற்றுக்கொடல்
வயிற்றுமயிர்
வயிற்றுவலி
வயிற்றணி
- காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப்பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க.
- ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தன், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க.
- மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.
உ-ம்.
- வேற்றுமை
மருந்து + பை = மருந்துப்பை
கரும்பு + நாண் = கருப்புநாண்
கரும்பு + வில் = கருப்புவில்
கன்று + ஆ = கற்றா
- பண்புத்தொகை
அன்பு + தளை = அற்புத்தளை
என்பு + உடம்பு = எறபுடம்பு
- உவமைத்தொகை
குரங்கு + மனம் = குரக்குமனம்
இரும்பு + நெஞ்சம் = இருப்புநெஞ்சம்
- சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள் இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று வரும்.
உ-ம்
- அல்வழி
பண்டு + காலம் = பண்டைக்காலம்
இன்று + நாள் = இற்றைநாள்
- வேற்றுமை
அன்று + கூலி = அன்றைக்கூலி
இன்று + நலம் = இற்றை நலம்
- சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத்தொடர் மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.
- நேற்று + பொழுது = நேற்றைப்பொழுது. எ-ம்.
நேற்று + கூலி = நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.
- தேர்வு வினாக்கள்-
- வன்றொடர்க்குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
- மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
- இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம்வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து வல்லினம் எப்படியாம்?
- ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அன்று முதலிய இடைச்சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அங்கு முதலிய இடைச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
- நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர், என்னும் இந்நான்கு தொடர்க்குற்றியலுகர வீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
- டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் நாற்கணமும் வரின் எப்படியாம்?
- அல்வழியில் எங்கும் இப்படி இரட்டுதலில்லையோ?
- மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளுட் சில, இருவழியினும் நாற்கணமும் வரின், வன்றொடராகத் திரிதலும் உண்டோ?
- மென்றொடர்க் குற்றியலுகரம் .ன்னும் எவ்வாறாகும்?
- வன்றொடர்க் குற்றியலுகரம் ஐகாரச்சாரியை பெறுதலில்லையோ?
குற்றியலுகரவீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிற பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல்
- வடக்கு, குணக்கு, குடக்கு, என்னுஞ் செற்களின் ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றுங் கெடும்.
உ-ம்.
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + திசை = வடதிசை
வடக்கு + மலை = வடமலை
வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்
குணக்கு + திசை = குணதிசை
குணக்கு + கடல் = குணகடல்
குடக்கு + திசை = கடதிசை
குடக்கு + நாடு = குடநாடு
- கிழக்கு என்பது, ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றும் ழகரமெய்யின் மேனின்ற அகரவுயிருங்கெட்டு, முதனீண்டு வரும்: அங்கணம் வருமிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும் ஓரோவிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும், ஓரோவிடத்து மிகுந்தும் புணரும்.
உ-ம்
கிழக்கு + பால் = கீழ்பால்
கிழக்கு + திசை = கீழ்த்திசை
- கீழைச்சேரி, கீழைவீதி, என ஐகாரம் பெறுதலுமுண்டு.
- தெற்கு என்பது, ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் னகரமாகத்திரிந்து வரும்.
உ-ம்.
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
தெற்கு + மலை = தென்மலை
- மேற்கு என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகரமாகத் திரிந்து வரும். தகரம் வரிற் றிரியாது.
உ-ம்.
மேற்கு + கடல் = மேல்கடல்
மேற்கு + வீதி = மேல்வீதி
மேற்கு + திசை = மேற்றிசை
- மேலைச்சேரி, மேலைவீதி என ஐகாரம் பெறுதலுமுண்டு.
- இத்திசைப் பெயர்கள், வடக்கூர், தெற்கூர், கிழக்கூர், மேற்கூர், வடக்குவாயில், தெற்கு மலை, கிழக்குத் திசை, மேற்கு மலை, என இங்ஙனங் காட்டிய விகாரமின்றியும் வரும்.
- வடகிழக்கு என்பது, வடக்குங் கிழக்குமாயதொரு கோணம் என, உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. வடதிசை என்பது, வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை, வடமலை என்பது வடக்கின் கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை.
- தேர்வு வினாக்கள்-
- திசைப்பெயர் முதலிய பெயர்கள் வந்து புணரின், வடக்கு, குணக்கு, குடக்கு என்னுஞ் சொற்கள் எப்படியாம்?
- கிழக்கு என்பது எப்படியாம்?
- தெற்கு என்பது எப்படியாம்?
- மேற்கு என்பது எப்படியாம்?
- இத்திசைப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ?
- வடகிழக்கென்பது என்ன தொகை?
- வடதிசை என்பது என்ன தொகை?
- வட மலை என்பது என்ன தொகை?
உகரவீற்றெண்ணுப் பெயர்ப் புணர்ச்சி
- ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.
உ-ம்.
ஒன்று + கோடி =ஒருகோடி
ஒன்று + கழஞ்சு = ஒருகழஞ்சு
ஒன்று + நாழி = ஒருநாழி
ஒன்று + வாழை = ஒருவாழை
ஒன்று + ஆயிரம் = ஓராயிரம்
- இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்யும், ணகரவொற்றும், ரகரத்தின் மேனின்ற அகரவுயிருங் கெடும். வந்தது மெய்யாயின், ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.
உ-ம்.
இரண்டு + கோடி = இருகோடி
இரண்டு + கழஞ்சு = இருகழஞ்சு
இரண்டு + யானை = இருயானை
இரண்டு + வாழை = இருவாழை
இரண்டு +ஆயிரம் = ஈராயிரம்
- மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரமெய் வந்தது உயிராயிற்றானும் உடன் கெடும். மெய்யாயின் முதல் குறுகி, னகரமெய் வருமெய்யாகத் திரியும்.
உ-ம்.
மூன்று + ஆயிரம் = மூவாயிரம்
மூன்று +கழஞ்சு = முக்கழஞ்சு
மூன்று +நாழி = முந்நாழி
- நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரம், வந்தவை. உயிரும் இடையெழுத்துமாயின், லகரமாகத்திரியும்: வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்: மெல்லெழுத்தாயின் இயல்பாம்.
உ-ம்.
நான்கு + ஆயிரம் = நாலாயிரம்
நான்கு + யானை = நால்யானை
நான்கு + கழஞ்சு = நாற்கழஞ்சு
நான்கு + மணி = நான்மணி
- ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெகுடும். நின்ற நகர மெய் வந்தவை உயிராயிற் றானும் உடன் கெடும். வல்லெழுத்தாயின், இனமெல்லெழுத்தாகத் திரியும். மெல்லெழுத்தும் இடையெழுத்துமாயின் அவ் வந்த வெழத்தாகத் திரியும்.
உ-ம்.
ஐந்து + ஆயிரம் = ஐயாயிரம்
ஐந்து + கழஞ்சு =ஐங்கழஞ்சு
ஐந்து + மூன்று = ஐம்மூன்று
ஐந்து + வட்டி = ஐவ்வட்டி
- நகரமுந் தகரமும் வரின், ஐந்நூறு, ஐந்தூணி, என ஈற்றுயிர் மெய் மாத்திரங் கெடும்.
- ஆறென்னும் எண் உயிர் வரிற் பொதுவிதியான் முடியும்: மெய்வரின் முதல் குறுகும்.
உ-ம்.
ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்
ஆறு + கழஞ்சு = அறுகழஞ்சு
ஆறு + மணி = அறுமணி
ஆறு + வழி = அறுவழி
- ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற்றுகரங் கெடும்: மெய்வரின் முதல் குறுகும்.
உ-ம்.
ஏழு + ஆயிரம் = ஏழாயிரம்
ஏழு + கழஞ்சு = எழுகழஞ்சு
ஏழு + மணி = எழுமணி
ஏழு + வகை = எழுவகை
- ஏழ்கடல், ஏழ்பரி என வருதலுமுண்டு.
- எடடென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும்: நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத்திரியும்.
உ-ம்.
எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்
எட்டு + கழஞ்சு = எண்கழஞ்சு
எட்டு + மணி = எண்மணி
எட்டு + வளை = எண்வளை
- இவ் விகாரங்களின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க.
- ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண்வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும். வருமொழியாகிய நூறு ஆயிரமாவுந் திரியும்.
உ-ம்.
ஒன்பது + பத்து = தொண்ணூறு
- ஒன்பது என்னும் எண்முன் நூறு என்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய்சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும், வருமொழியாகிய நூறு ஆயிரமாகவுந் திரியும்.
உ-ம்.
ஒன்பது + நூறு = தொள்ளாயிரம்
- இது இக்காலத்துத் தொளாயிரம் என வழங்கும்.
- ஒன்று முதல் எடடீறாக நின்ற எண்ணுப் பெயர் கண்முன் பத்தென்னும் எண்ணுப் பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய், கெட்டாயினும், ஈய்தமாகத் திரிந்தாயினும் புணரும்.
உ-ம்.
ஒன்று + பத்து = ஒருபது, இருபஃது
இரண்டு + பத்து = இருபது, இருபஃது
மூன்று + பத்து = முப்பது, முப்பஃது
நான்கு + பத்து = நாற்பது, நாற்பஃது
ஐந்து + பத்து = ஐம்பது, ஐம்பஃது
ஆறு + பத்து = அறுபது, அறுபஃது
ஏழு + பத்து = எழுபது, எழுபஃது
எட்டு + பத்து = எண்பது, எண்பஃது
- ஒருபது முதல் எண்பது ஈறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின், நிலைமொழியீற்றுக்கு அயலிலே தகரவொற்றுத் தோன்றும்.
உ-ம்.
ஒருபது + ஒன்று = ஒருபத்தொன்று
இருபது + இரண்டு = இருபத்திரண்டு
முப்பது + மூன்று கழஞ்சு = முப்பத்துமூன்று கழஞ்சு
மற்றவைகளு மிப்படியே
- பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத்திரியும்.
உ-ம்.
பத்து + இரண்டு = பன்னிரண்டு
- பத்தின் முன் இரண்டொழிந்த ஒனிறு முதல் எட்டீறாகிய எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும்.
உ-ம். பத்து + ஒன்று = பதினொன்று
பத்து + மூன்று = பதின்மூன்று
பத்து + நான்கு = பதினான்கு
பத்து + ஐந்து = பதினைந்து
பத்து + ஆறு = பதினாறு
பத்து + ஏழு = பதினேழு
பத்து + எட்டு = பதினெட்டு
- பத்தின் முன்னும், ஒன்று முதலிய எண்ணுப் பெயரும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிறபெயரும், வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியை தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர் மெய் கெடும்..
உ-ம்.
பத்து + ஒன்று = பதிற்றொன்று
பத்து + இரண்டு = பதிற்றிரண்டு
பத்து + மூன்று = பதிற்றுமூன்று
பத்து + பத்து = பதிற்றுப்பத்து
பத்து + நூறு =பதிற்றுநூறு
பத்து + ஆயிரம் = பதிற்றாயிரம்
பத்து + கோடி = பதிற்றுக்கோடி
பத்து + கழஞ்சு = பதிற்றுக்கழஞ்சு
பத்து + கலம் = பதிற்றுக்கலம்
பத்து + மடங்கு = பதிற்றுமடங்கு
ஒன்பது + ஒன்று = ஒன்பதிற்றொன்று
ஒன்பது + இரண்டு = ஒன்பதிற்றிரண்டு
ஒன்பது + மூன்று = ஒன்பதிற்றுமூன்று
ஒன்பது + பத்து = ஒன்பதிற்றுப்பத்து
ஒன்பது + நூறு = ஒன்பதிற்றுநூறு
ஒன்பது + ஆயிரம் = ஒன்பதிற்றாயிரம்
ஒன்பது + கோடி = ஒன்பதிற்றுக்கோடி
ஒன்பது + கழஞ்சு = ஒன்பதிற்றுக்கழஞ்சு
ஒன்பது + கலம் = ஒன்பதிற்றுக்கலம்
ஒன்பது + மடங்கு = ஒன்பதிற்றுமடங்கு
- பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன் சாரியையும் தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும்.
உ-ம்.
பத்து + ஆயிரம் = பதினாயிரம்
பத்து + கழஞ்சு = பதின்கழஞ்சு
பத்து + கலம் = பதின்கலம்
பத்து + மடங்கு = பதின்மடங்கு
ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம்
ஒன்பது + கழஞ்சு = ஒன்பதின்கழஞ்சு
ஒன்பது + கலம் = ஒன்பதின்கலம்
ஒன்பது + மடங்கு = ஒன்பதின்மடங்கு
- ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, அல.லென் வெல்லாங் கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும் பெறும்.
உ-ம்.
ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று
இரண்டு + இரண்டு = இவ்விரண்டு
மூன்று + மூன்று = மும்மூன்று
நான்கு + நான்கு = நந்நான்கு
ஐந்து + ஐந்து = ஐவைந்து
ஆறு + ஆறு = அவ்வாறு
ஏழு + ஏழு = எவ்வேழு
எட்டு + எட்டு = எவ்வெட்டு
பத்து + பத்து = பப்பத்து
- சிறு பான்மை ஒரோவொன்று, ஒன்றொன்று என வருதலு முண்டு.
- தேர்வு வினாக்கள்-
- ஒன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
- இரண்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
- மூன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
- நான்கு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
- ஐந்து என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
- ஆறு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
- ஏழு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
- எட்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
- இவ் வெண்ணுப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ?
- ஒன்பது என்பதன் முன் பத்து வரின் எப்படி புணரும்?
- ஒன்று முதல் எட்டீறாக நின்ற எண்ணுப் பெயர்கண் முன் பத்து வரின் எப்படி புணரும்?
- ஒருபது முதல் எண்பதீறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின் எப்படி புணரும்?
- பத்தின் முன் இரண்டு வரின் உம்மைத்தொகையில் எப்படிப் புணரும்?
- பத்தின் முன் இரண்டொழிந்த ஒன்று முதல் எட்டீறாகிய எண்கள் வரின் உம்மைத்தொகையில் எப்படி புணரும்?
- பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஒன்று முதலிய எண்ணுப் பெயரும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின், பண்புத்தொகையில் எப்படி புணரும்?
- பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஆயிரமும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி வேறு சாரியையுந் தோன்றுமோ?
- ஒனபதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, எப்படி புணரும்?
மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர் முன்னும் ஏவல் வினை முன்னும் மெய் புணர்தல்
- ஞ், ண், ந், ம், ல், வ், ள், ன் என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல் வினை முற்றும், தம்முன் யகரமல்லாத மெய்கள் வரின், உகரச் சாரியை பெறும். தொழிற்பெயரின் சாரியைக்கு முன் வரும் வல்லினம் மிகும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
உரிஞஞக்கடிது உரிஞஞக்கடுமை
உண்ணுஞான்றது உண்ணுஞாற்சி
பொருநுவலிது பொருநுவன்மை
உரிஞகொற்றா
உண்ணுநாகா
பொருநுவளவா
- திரும், செல், வவ், துள், தின் முதலியனவற்றோடும் இவ்வாறே யொட்டிக்கொள்க.
- முதனிலைத் தொழிற்பெயராவது தொழிற்பெயர் விகுதி குறைந்தது. முதனிலை மாந்திர நின்று தொழிப்பெயர்ப் பொருளைத் தருவதாம்.
- இவ்வொட்டீற்று ஏவல் வினைகளுள்ளே, உண்கொற்றா, தின் சாத்தா, வெல்பூதா, தூள் வளவா என, ண, ன, ல, ள, என்னும் இந்நான்கீறும், உகரச்சாரியை பெறாதும் நிற்கும்.
- பொருநூதல் - மற்றொருவர்போல வேடங்கொள்ளுதல் பொருந் என்பது தொழிற்பெயராவதன்றிஅ த்தொழிலினரை உணர்த்துஞ் சாதிப்பெயருமாம்.
- பொருநூக்கடிது என நகரவீற்றுச் சாதிப்பெயரும் வெரிநுக்கடிது என நகரவீற்றுச் சினைப்பெயரும், உகரச்சாரியை பெறுமெனவுங்கொள்க. வெரிந் - முதுகு.
- தேர்வு வினாக்கள்-
- ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற் பெயரும், ஏவல் வினை முற்றும், தம் முன் யகர மல்லாத மெய்கள் வரின், எப்படிப் புணரும்?
- முதனிலைத் தொழிற் பெயராவது யாது?
- இவ் வொட்டீற்றேவல் வினைகளுள்ளே, உகரச் சாரியை பெறாதும் நிற்பன உளவோ?
- பொருநுதல் என்பதற்குப் பொருள் என்ன?
- பொருந் என்பது தொழிற்பெயராவதன்றி, வேறு பெயரும் ஆமோ?
- நகரவீற்றுப் பெயர் பொருந் அன்றி வேறும் உண்டோ?
- வெரிந் என்பதற்குப் பொருள் என்னை?
- பொருந் என்னுஞ் சாதிப் பெயரும், வெரிந் என்னுஞ் சினைப் பெயரும், உகரச்சாரியை பெறவோ?
ணகர னகர வீற்றுப் புணர்ச்சி
- ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயலபாம். வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும். அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும்.
உ-ம்.
அல்வழி   வேற்றுமை
மண்சிறிது  மட்சாடி
மண்டீது   மட்டூண்
பொன் குறிது  பொற்கலம்
பொன்றீது   பொற்றூண்
- கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.
- மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம். மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.
- ணகர, னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இரு வழியினும் இயல்பாம். அவ்விரு வழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்: னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும்.
உ-ம்.
அல்வழி   வேற்றுமை
மண்ஞான்றது  மண்ஞாற்சி
மண்ணீன்டது  மண்ணீட்சி
மண்வலிது  மண்வன்மை
பொன்ஞான்றது   பொன்ஞாற்சி
பொன்னீண்டது  பொன்னீட்சி
பொன்வலிது  பொன்வன்மை
- தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்த விடத்து, இரு வழியினுங் கெடும்.
உ-ம்.
அல்வழி  வேற்றுமை
தூணன்று  தூணன்மை
அரணன்று  அரணன்மை
வானன்று  வானன்மை
செம்பொனன்று  செம்பொனன்மை
- பாண், உமண், அமண், பரண், கவண், என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
உ-ம்.
பாண்குடி, உமண்சேரி, அமண்பாடி,
பரண்கால், கவண்கால்
- பாண் - பாடுதற்றொழிலுடையதொரு சாதி. உமண் - உப்பமைதற்றொழிலுடையதொரு சாதி. அமண் - அருகனை வழிபடுவதொரு கூட்டம்.
- தன், என், என்னும் விகார மொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும். நின் என்னும் விகாரமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாகும்.
உ-ம்.
தன்பகை, தற்பகை
என்பகை, எற்பகை
நின்பகை
- தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற் றிரிந்தே நிற்கும்.
- குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான், மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
உ-ம்.
குயின்கடுமை - தேன்பெருமை
ஊன்சிறுமை - மீன்கண்
எயின்குடி - மான்செவி
எகின்சிறுமை - மின்கடுமை
- குயின் - மேகம், எயின் - வேட்டுவச்சாதி, எகின் - அன்னப்புள்
- தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு.
- தேர்வு வினாக்கள் -
- ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், இரு வழியும் எப்படிப் புணரும்?
- அல்வழியில் எவ்விடத்துந் திரியாவோ?
- வேற்றுமையில் எவ்விடத்தும் இயல்பாகவோ?
- ண ன வீறு இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையில் எவ்விடத்துந் திரிந்தே வருமோ?
- ணகர னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இரு வழியிலும் எப்படி புணரும்?
- தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்களின் முன் நகரம் வந்தால், ணகர னகரம் இயல்பாகவே நிற்குமோ?
- எந்த மொழியினும் ணகரம் வேற்றுமையிற்றிரிந்தே வருமோ? பாண் என்பதற்கு பொருள் என்னை?
- உமண் என்பதற்கு பொருள் என்னை? அமண் என்பதற்கு பொருள் என்னை?
- தன், என் என்பவற்றின் னகரம், வல்லினம் வரின் எப்படியாம்?
- நின் என்பது இப்படி வராதோ?
- இம் மூன்றிடத்து னகரமும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் இவ்விதியே பெறுமோ?
- எந்த மொழியினும் னகரம், வவேற்றுமையிற்றிரிந்தே வருமொ?
- தேன் என்பதன் னகரம்,இயல்பாதலன்றி, வேறு விதி பெறாதோஃ மெல்லெழுத்து வரின், விகாரமடைதல் இல்லையோ?
மகரவீற்றுப் புணர்ச்சிமகரவீற்றுப் புணர்ச்சி
- மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும். அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லினமிகும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உ-ம்.
- வேற்றுமை
மரக்கோடு
நிலப்பரப்பு
- பண்புத்தொகை
வட்டக்கடல்
சதுரப்பலகை
- உவமைத்தொகை
கமலக்கண்
- எழுவாய்த்தொடர்
மரங்குறிது
யபங்கொடியேம்
- உம்மைத்தொகை
நிலந்தீ
பயங்காக
- பெயரெச்சத்தொடர்
செய்யுங்காரியம்
உண்ணுஞ்சோறு
- வினைமுற்றுத்தொடர்
உண்டனஞ்சிறியேம்
தின்றனங்குறியேம்
- இடைச்சொற்றொடர்
சாத்தானுங்கொற்றனும்
பூதனுந் தேவனும்
- மரம் பெரிது எனப் பகரம் வருமிடத்து இறுதி மகரம் இயல்பாம்.
- தவஞ்செய்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், நிலங்கிடந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, இறுதி மகரங்கெடாது. வரும் வல்லெழுத்திற்கு இனமாகத்திரியும்.
- தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
கங்குறிது கங்குறுமை
அஞ்சிறிது அச்சிறுமை
செங்கோழி நங்கை
தஞ்செவி
எந்தலை
- மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
மரஞான்றது மரஞாற்சி
மரநீண்டது மரமாட்சி
- தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும்.
உ-ம்.
அஞ்ஞானம், நுஞ்ஞானம்
எந்நூல், தந்நூல், நந்நூல்
- மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரங்கெடாது நிற்கும்.
உ-ம்.
- வேற்றுமை
மரவடி
மரவேர்
- பண்புத்தொகை
வட்டவாழி
வட்டவடிவம்
- உவமைத்தொகை
பவளவிதழ்
பவளவாய்
- எழுவாய்த்தொடர்
மரமரிது
மரம்வலிது
- உம்மைத்தொகை
வலமிடம்
நிலம்வானம்
- பெயரெச்சத்தொடர்
உண்ணுமுணவு
ஆளும்வளவன்
- வினைமுற்றுத்தொடர்
உண்டனமடியேம்
உண்டனம்யாம்
- இடைச்சொற்றொடர்
அரசனுமமைச்சனும்
புலியும் யானையும்
- செயமடைந்தான், மரம் வெட்டினான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மாயூரமேகினான். சிதம்பரம் வாழ்ந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழிவினையாய விடத்து, இறுதிமகரங்கெடாது நிற்கும்.
- வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும், உயிரும் இடையினமும் வரின் சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக் கெடாது நிற்கும் வல்லினம் வரின், சிறியேங்கை என இனமெல்லெழுத்தாகத் திரியும்.
- தேர்வு வினாக்கள் -
- மகரத்தின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படி புணரும்?
- இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும் வருமொழி வினையாயவிடத்து எப்படிப் புணரும்?
- தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம் இரு வழியினும் வல்லெழுத்து வரின் எப்படியாம்?
- மகரத்தின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படிப் புணரும்?
- தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின் எப்படியாம்?
- மகரத்தின் முன் இரு வழியினும் உயிரும்; இடையினமும் வரின் எப்படிப் புணரும்?
- இரண்டாம் வேற்றுமைத் தொகையினும் எழாம் வேற்றுமை தொகையினும், வருமொழி வினையாயவிடத்து எப்படியாம்?
- வினையாலனையும் பெயரின் ஈற்று மகரம் வேற்றுமையில் உருபும் இடையினமும் வாரிக்கொட்டே புணருமோ?
- வல்லினம் வரின் எப்படியாம்?
லகர ளகர வீற்றுப் புணர்ச்சி
- லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.
உ-ம்.
பாற்குடம்   அருட்பெருமை - வேற்றுமை
வேற்படை   அருட்செல்வம் - பண்புத்தொகை
வேற்கண்   வாட்கண் - உவமைத் தொகை
குயில்கரிது   பொருள் பெரிது - எழுவாய்
கால்கை  பொருள்புகழ் - உம்மைத்தொகை
- பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.
- தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைதொகையிலும், ஒரு கால் இயல்பாகவும், ஒரு காற்திரியவும் பெறும்.
உ-ம்.
- எழுவாய்த்தொடர்
கல் குறிது,
முள் சிறிது ,கற்குறிது
முட்சிறிது,
- உம்மைத்தொகை
அல் பகல்,
உள் புறம், அட்பகல்,
உட்புறம்
- நொல், செல், கொள், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நெற்கடிது, செற்கடிது, கெற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த்தெர்டரிலும் உறழாது திரிதே வரும்.
- செல் - மேகம், கொல் - கொல்லன்
- உறழ்ச்சியாவது ஒரு கால் இயல்பாகியும், ஒரு கால் விகாரப்பட்டும் வருதல். உறாழ்ச்சி எனினும், விகற்ப்ப வினுமெனினும் ஓங்கும்.
- கற்கரித்தான், கட்குடித்தான் எனத்தனிக் கூற்றெழுத்தை சார்ந்h ல ள க்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது. திரிந்தே நிற்கும்.
- அல்வழி வேற்றுமை இரண்டினும் லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
கற்றீது கற்றீமை
முட்டீது முட்டீமை
- தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும்.
உ-ம்.
கற்றீது, கஃறீது
முட்டீது, முஃடீது
- தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுந் கெடும்.
உ-ம்.
   எழுவாய்த் தொடர்
 வேறீது வாடீது
 தோன்றறீயன் வேடீயன்
 தோன்றாறொடராய் வேடீயை - விளித்தொடர்
 காறலை தாடலை - உம்மைத்தொகை
 உண்பறமியேன் வந்தாடேவி - வினைமுற்றுத் தொடர்
 பயிறோகை அருடேவன் - வினைத்தொகை
- குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் - மலை, தாரை - கண்
- வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.
- நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.
- லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
கல் - கன்ஞெரிந்தது கன்ஞெரி
வில் - வின்னீண்டது வின்னீட்சி
புல் - புன்டாண்டது புன்மாட்சி
முள் - முன்ஞெரிந்நது முண்ஞெரி
புள் - புண்ணீண்டது புண்ணீட்சி
கள் - கண்மாண்டது கண்மாட்சி
- தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
வேனன்று வேனன்மை
பொருணன்று பொருணன்மை
- லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம்
உ-ம்.
அல்வழி வேற்றுமை
கல்யாது கலயாப்பு
விரல்வலிது விரல்வன்மை
முள்யாது முள்யாப்பு
வாள்வலிது வாள்வன்மை
- தேர்வு வினாக்கள் -
- லகர ளகரங்களின் முன் இரு வழியினும் வல்லினம் வரின், எப்படிப் புணரும்?
- இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, எப்படியாம்?
- தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வல்லினம் வரின், எவ்விடங்களில் ஒரு கால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும்?
- எச் சொற்களின் ஈற்று லகரவொற்று, வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிற்றிரிந்தே வரும்?
- உறழ்ச்சியாவது யாது?
- தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்து இயல்பேயாமோ?
- இரு வழியினும் லகரத்தின் முன் வருந் தகரம் எப்படியாம்?
- தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்துக் றடக்களாதலன்றி வேறு திரிபு பெறுமோ?
- தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, கெடுதல் எங்கும் இல்லையோ?
- தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, எங்கே கெடாது திரிந்து நிற்கும்?
- லளக்கள் வேற்றுமையிற் கெடுதல் எங்கும் இல்லையோ?
- உயர்திணைப்பெயாPற்று லளக்கள் வேற்றுமையில் வருந் தகரந் திரிந்த விடத்து எப்படியாம்?
- லளக்களின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படியாம்?
- தனிக்குற்றெழுத்தைச் சாராத லளக்கள் இரு வழியினும் வரும் நகரந் திரிந்த விடத்து, எப்படியாம்?
- லளக்களின் முன் இரு வழியினும் இடையினம் வரின் எப்படியாம்?
வகரவீற்றுப் புணர்ச்சி
- அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வரும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம், அல்வழியில், வல்லினம் வரின் ஆயுதமாகத் திரியும்: மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்: இடையினம் வரின் இயல்பாகும்.
உ-ம்.
அஃகடியன, இஃசிறியன, உஃபெரியன
அஞ்ஞான்றன, இந்நீண்டன, உம்மாண்டன
அவ்யாத்தன, இவ்வளைந்தன, உவ்வாழ்ந்தன
- தெவ் என்னும் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், உகரச்சாரியை பெறும்: மகரம் வருமிடத்து, ஒரோவழி மகரமாகத் திரியவும் பெறும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை
தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை
தெவ்வுமாண்டது தெவ்வுமாட்சி
தெவ்வுவந்தது தெவ்வுவன்மை
தெவ்வுமன்னர் தெவ்வுமுனை
தெம்மன்னர் தெம்முனை
- தேர்வு வினாக்கள் -
- சுட்டுப்பெயர்களின் ஈற்று வகரம் அல்வழியில் மூவின மெய்களும் வரின், டிப்படியாம்?
- தெவ்வென்னுஞ் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், எப்படியாம்?
- மகரம் வரின் வேறு விதியும் பெறுமோ?
எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்கள் சாரியை பெறுதல்
- உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய எண்ணும் பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும்பாலும் ஏ என்னுஞ் சாரியை இடையில் வரும்.
உ-ம்.
ஒன்றேகால், காலேகாணி
தொடியேகஃக, கழஞ்சேகுன்றி
கலனேபதக்கு, உழக்கேயாழாக்கு
- ஒன்றரை, கழஞ்சரை, குறுணிநானாழி எனச் சிறுபான்மை ஏகாரச் சாரியை வராதொழியுமெனக் கொள்க.
- தேர்வு வினாக்கள் -
- எண்ணுப் பெயர் நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின் எப்படியாம்?
குற்றியலுகரவீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிற பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல்
இடைச் சொற்களின் முன் வல்லினம் புணர்தல்
- உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும்.
உ-ம்.
அம்ம - அம்மகொற்றா
அம்மா - அம்மாசாத்தா
மியா - கேண்மியாபூதா
மதி - னெ;மதிபெரும
என - பொள்ளெனப்புறம்வேரார்
இனி - இனிச்செய்வேன்
ஏ - அவனே கண்டான்
ஒ - அவனோ போனான்
- வினையை அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் மிகா. சுட்டையும் வினாவையும் அடுத்த படி என்னும் இடைச் nசொல்லின் முன் வரும் வல்லினம் ஒரு கால் மிக்கும், ஒரு கால் மிகாதும், வரும்.
உ-ம்.
வரும்படி சொன்னான்,
அப்படிசெய்தான், அப்படிச்செய்தான்
எப்படிபேசினான், எப்படிப்பேசினான்
- வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகரந் திரியாதியல்பாம்.
உ-ம்.
ஆன்கூற்று வண்டின்கால்
- தேர்வு வினாக்கள் -
உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரம் வல்லினம் எப்படியாம்?
- படி என்னம் இடைச் சொல்லின் மன் வரம் வல்லினம் எப்படியாம்?
- வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியையிடைச் சொல்லின் இறுதி னகரம் டிப்படியாம்?
உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல்
- உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும் புணரும்.
உ-ம்.
தவ - தவப்பெரியான்
குழ - குழக்கன்று
கடி - கடிக்கமலம்
கடி - கடிகா
தட - தடக்கை
கம - கமஞ்சூல்
நனி - நனிபேதை
கழி - கழிகண்ணோட்டம்
- தேர்வு வினா-
- உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
உருபு புணர்ச்சி
- வேற்றுமையுருபுகள், நிலைமொழியோடும் வருமொழியோடும் புணருமிடத்து, அவ்வுருபின் பொருட்புணர்ச்சிக்கு முற் கூறிய விதிகளைப் பெரும்பான்மை பெறும்: சிறுபான்மை வேறுபட்டும் வரும்.
உ-ம்.
நம்பிக்கண் வாழ்வு: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினமிகா, என்றும், ணகரம் இடையினம் வரின் இறுவழியினும் இயல்பாம், என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின.
உறிக்கட்டயிர்: இங்கே இகரவீற்றஃறிணைப் பெயர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், ணகரம் வேற்றுமைப் பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின.
நம்பிக்குப் பிள்ளை: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர் முன் வேற்றுமை பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்தபடி இயல்பாகாது குவ்வுருபு மிகுந்தது.
- இங்ஙனம் உருபு புணர்ச்சியானது பொருட்புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், சான்றோராட்சியால் அறிந்து கொள்க.
- உறித்தயிர் என்பது, கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையுருபின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப்பெயரும் நிலைமொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சி யாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது. உறிக்கட்டயிர் என்பது, அவ்வேழனுருபு வெளிப்படட்டு நின்று நிலைமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சியாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது.
- தேர்வு வினாக்கள் -
- வேற்றுவமயுருபுகள், நிலைமொழியோடும், வருமொழியோடும், எடிப்படிப் புணரும்?
- வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாவது யாது?
- உருபு புணர்ச்சியாவது யாது?
விதியில்லா விகாரங்கள்
- விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும்.
- அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும்.
- மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல்.
உ-ம்.
அருமந்தன்னபிள்ளை - அருமருந்தபிள்ளை
பாண்டியனாடு - பாண்டி நாடு
சோழநாடு - சோணாடு
மலையமானாடு - மலாடு
தொண்டைமானாடு - தொண்டைநாடு
தஞ்சாவூர் - தஞ்சை
சென்னபுரி - சென்னை
குணக்குள்ளது - குணாது
தெற்குள்ளது - தெனாது
வடக்குள்ளது - வடாது
என்றந்தை - எந்தை
நுன்றந்தை - நுந்தை
- ஒத்து நடத்தலாவது, ஒரேழுத்து நின்றவிடத்து அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வறுமாறு :-
- அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உ-ம்-
அகம் - அகன்
முகம் - முகன்
நிலம் - நிலன்
நலம் - நலன்
- மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உ-ம்.
- மொழி முதலில் ஒத்து நடந்தது
பசல் --- பைசல்
மஞ்சு --- மைஞ்சு
மயல் --- மையல்
- அரையர் மொழியிடையில் ஒத்து நடந்தது
அமச்சு --- அமைச்சு
இலஞ்சி --- இலைஞ்சி
அரயர் --- அரையர்
- ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உ-ம்.
- மொழி முதலில் ஒத்து நடந்தது
நணடு --- ஞண்டு
நெண்டு --- ஞெண்டு
நமன் --- ஞமன்
- ஐகாரத்தின் பின் ஒத்து நடந்தது
ஐந்நூறு --- ஐஞ்ஞ10று
மைந்நின்ற கண் --- மைஞ்ஞின்ற கண்
- யகரத்தின் பின் ஒத்து நடந்தது
சேய்நலூர் --- சேய்ஞலூர்
செய்நின்ற நரீலம்--- செய்ஞ்ஞின்ற நீலம்
- ஒரொவிடத்து அஃறிணைப் பெயாPற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உ-ம்.
சாம்பல் - சாம்பர்
பந்தல் - பந்தர்
குடல் - குடர்
- அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உ-ம்.
அரும்பு - அரும்பர்
கரும்பு - கரும்பர்
கொம்பு - கொம்பர்
வண்டு - வண்டர்
- ஒரோவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உ-ம்.
அலமருகுயிலினம் - அளமருகுயிலினம்
பொள்ளாமணி - பொல்லாமணி
- தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.
உ-ம்.
யாது - யாவது
குன்றி - குன்றம்
செல் உழி - செல்வுழி
விண் அத்து - விண்வத்து
- திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம்.
உ-ம்.
மாகி - மாசி
மழைபெயின் விளையும் - மழைபெயில் வியையும்
கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு
உயர்திணைமேலே - உயர்திணை மேன
- கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம்.
உ-ம்.
யாவர் - யார்
யார் - ஆர்
யானை - ஆனை
யாடு - ஆடு
யாறு - ஆறு
- எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.
- நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம்.
உ-ம்.
பொழுது - போழ்து
பெயர் - பேர்
- நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம்.
உ-ம்.
வைசாகி - வைகாசி
நாளிகேரம் - நாரிகேளம்
மிஞிறு - ஞிமிறு
சிவிறி - விசிறி
தசை - சதை
- இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும்.
உ-ம்.
கண்மீ - மீகண்
நகர்ப்புறம் - புறநகர்
புறவுலா - உலாப்புறம்
இன்முன் - முன்றில்
பொதுவில் - பொதியில்
- முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின.
- தேர்வு வினாக்கள் -
- இப்படி விதியினால் விகாரப்பட்டு வருவனவன்றி, விதியின்றி விகாரப்படுவனவும் உளவோ?
- அவை எத்தனை வகைப்படும்?
- மருவி வழங்குதலாவது யாது?
- ஒத்து நடத்தலாவது யாது?
- தோன்றலாவது யாது?
- திரிதலாவது யாது?
- கெடுதலாவது யாது?
- நீளலாவது யாது?
- நிலை மாறுதலாவது யாது?
- இந்நிலை மாறுதல் எழுத்துக்கே யன்றிச் சொற்களுக்கும் உண்டோ?
- சொன்னிலை மாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்?
புணரியல் முற்றிற்று
தொடர்மொழிப் பாகுபாடு.
- தொடர் மொழி,முற்றுத் தொடர் மொழியும் எச்சத்தொடர் மொழியும் என இருவகைப்படும்.
- முற்றுத் தொடர் மொழியாவது, எழுவாயுஞ் செயப்படுபொருண் முதலிவைகளோடு கூடாதாயினுங் கூடியாயினும் முடிபு பெற்று நிற்குந் தொடர் மொழியாம். வடநூலார் இம்முற்றுத் தொடர் மொழியை வாக்கிய மென்பார்.
உ-ம்
சர்தன் வந்தான்
சாத்தன் சோற்றையுண்டான்
- எச்சத் தொடர்மொழியாவது, முடிவு பெறாது அம்முற்றுத் தொடர் மொழிக்கு உறுப்பாக வருந் தொடர் மொழியாம்.
உ-ம்.
யானைக் கோடு
யானையாவது கோடு
- தேர்வு வினாக்கள் -
- தொடர்மொழி எத்தனை வகைப்படும்?
- முற்றுத் தொடர் மொழியாவது யாது?
- எச்சத் தொடர்மொழியாவது யாது?
வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணம்
- வாக்கியத்தின் பொருளை உணர்த்தற்குக் காரணம், அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்னு நான்குமாம.
- அவாய் நிலையாவது, ஒரு சொற் றனக்கு எச்சொல் இல்லாவிடின் வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி நிற்றலாம்.
உ-ம் :-
ஆவைக்கொணா என்னுமிடத்து, ஆவை என்பது மாத்திரஞ் சொல்லிக் கொணாவெண்பது சொல்லாவிடினும், கொணாவெண்பதுமாத்திரஞ் சொல்லி ஆவை என்பது சொல்லாவிடினும், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாதல அறிக.
- தகுதியாவது, பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமையாம்.
உ-ம்.
நெருப்பானனை என்னுமிடத்து நனைலின் நெருப்புக் கருவியன்று என்கிற உணர்ச்சி தடையுணர்ச்சி. அவ்வுணர்ச்சி இருத்தலால், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது.
நீலானனை என்னுமிடத்து நனைலின் நீர் கருவியாதலாற் றடையுணர்ச்சி யில்லை: ஆகவே தகுதி காரணமக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
- அண்மையாது, காலம் இடையின்றியும் வாக்கயப் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத சொல் இடையீடின்றியுஞ் சொல்லப்படுதலாம்.
உ-ம்.
ஆவைக்கொணா என்பது யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாக சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. ஒரு தொடராக விரையச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
மலையுண்டானெருப்புடையது தேவதத்தன் என்னுமிடத்து, மலை நெருப்புடையது என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத உண்டாக் என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது: உண்டான் றேவதத்தன் என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத நெருப்புடையது என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது. இப்படி இடையிட்டுச் சொல்லாது, மலை நெருப்புடையது: உண்டான் றேவதத்தன் எனச் சொல்லின, அண்மை காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
- கருத்துணர்ச்சியாவது, ஒரு சொல் எப்பொருளைத் தரல் வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப்பட்டதோ அக்கருத்தைச் சமயவிசேடத்தால் அறிதலாம்.
உ-ம்.
மாவைக் கொண்டுவா என்னுமிடத்து மாவெண்பது பல பொருளொரு சொல்லாததால் வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. இது பசித்தோனாற் சொல்லப்படிற் றின்னுமாவெனவும், கவசம் பூண்டு நிற்பானாற் சொல்லப்படிற் குதிரை யெனவும், சொல்லுவான் கருத்துச் சமயவிசேடத்தால் அறியப்படும். அப்போது அக்கருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
- தேர்வு வினாக்கள் -
- வாக்கியத்தின் பொருளை உணர்த்தற் காரணம் என்ன?
- அவாய்நிலையாவது யாது?
- தகுதியாவது யாது?
- அண்மையாவது யாது?
- கருத்துணர்ச்சியாவது யாது?
உருபும் வினையும் அடுக்கி முடிதல்
- வேற்றுமையுருபுகள் விரிந்தாயினும் மறைந்தாயினும் ஒன் பல வடுக்கி வரினும், கலந்து பல வடுக்கி வரினும், வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பரவுந் தம்மை முடித்தற் குறிய ஒரு சொல்லைக் கொண்டு முடியும்.
உ-ம்.
- உருபுகள் விரிந்தும் மறைந்தும் ஒன்று பல வடுக்கல்
சாத்தனையுங் கொற்றனையும் வாழ்த்தினான்.
சாத்தனுக்குங் கொற்றனுக்குந் தந்தை.
அருளற முடையன்.
- உருபுகள் விரிந்தும் மறைந்தும் கலந்து பல வடுக்கல்
அரசன் பகைவனை வாளால் வெட்டினான்.
அரசன் வாள் கைக் கொண்டான்.
- வினைமுற்று ஒன்று பல வடுக்கல்
ஆடினான் பாடினான் சாத்தன்
இளையண் மெல்லியன் மடத்தை
- பெயரெச்சம் ஒன்று பல வடுக்கல் வினையெச்சம் ஒன்று பல வடுக்கல்
கற்ற கேட்ட பெரியோர்
நெடிய கரிய மனிதன்
கற்றுக் கேட்டறிந்தார்
விருப்பின்றி வெறுப்பின்றியிருந்தார்.
- வேற்றுமையுருபு, ஒன்று பல வடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றைப் பெயர்களெல்லா வற்றினுந் தொக்கு வருதலு முண்டு.
உ-ம்.
பொருளின் பங்களைப் பெற்றான்
சேரசோழபாண்டியர்க்கு நண்பன்
தந்தை தாயி னீங்கினான்
- ஒரு தொடரினுள் ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப்பெயர் தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவாம். வரினும், பொருலொன்றே யாதலால் எண்ணும்மை பெறுதலில்லை.
உ-ம்.
சங்கரனை யென்குணனைச் சம்புவைநால் வேதனொரு
கங்கரனை நெஞ்சே கருது.
- தேர்வு வினாக்கள் -
- வேற்றுமையுருபுகள் ஒன்று பல வடுக்கி வரினும், கலந்து பலவடுக்கி வரினும், வினைமுற்றம் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பலவும் எப்படி முடியும்?
- வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றப் பெயர்களௌ;லாவற்றிலுந் தொக்க வருதலும் உண்டோ?
- ஒரு தொடரினுள்ளே ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப் பெயர்தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவோ?
திணைபாலிட முடிபு
- முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது, திணைபால் இடங்களின் மாறு படாது இயைந்து நிற்றல் வேண்டும். இயைந்து நில்லாதாயின் வழுவாம்.
உ-ம்.
வழாநிழை
நம்பி வந்தான்
நங்கை வந்தான்
அந்தனர் வந்தார்
நான்வந்தேன்
நீ வந்தாய்
நம்பி வந்தது ...... திணைவழு
நங்கை வந்தான் ....... பால்வழு
அவன்வந்தான் ........ இடவழு
- இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கை எழுவாய் அடுக்கி வரின், பலர்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும். இரணடு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், பலர்பாலின்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும்.
உ-ம்.
நம்பியு நங்கையும் வந்தார்
யானையுங் குதிரையும் வந்தன
- முன்னிலையெழுவாயோடு படர்க்கை எழுவாய் அடுக்கிவரின், முன்னிலைப் பன்மைப்பயனிலை கொண்டு முடியும். அது உளப்பாட்டு முன்னிலைப்பன்மை எனப்படும்.
உ-ம்.
நீயு மவனும் போயினீர்.
- தன்மையெழுவாயோடு முன்னிலையெழுவாயேனும் படர்க்கை யெழுவாயுமேனும் இவ்விரண்டெழுவாயு மேனும் அடுக்கி வரின், தன்மைப்பன்மைப் பயனிலை கொண்டு முடியும். இது உளப்பாட்டுத் தன்மைப்பன்மை எனப்படும்.
உ-ம்.
யானு நீயும் போயினோம்,
யானு மவனும் போயினோம்,
யானு நீயு மவனும் போயினோம்.
- திணையைந் தோன்றிய விடத்து உருபு வடிவு என்னும் பொதுச் சொற்களாலும், உயர்திணைப் பாலையந் தோன்றியவிடத்து அத்திணைப் பண்மைச் சொல்லாலும், அஃறிணைப்பாலையந் தோன்றியவிடத்துப் பால்பகாவஃறிணைச் சொல்லாலுங் கூறல் வேண்டும்.
உ-ம்.
1. குற்றியோ மனுடனோ அங்கு தோன்றுகிற உரு? ...... திணையையம்
2. ஆண்மகனோ பெண்மகளோ அங்கே தோன்றுகிறவர்? ...... உயர்திணைப்பாலையம்
3. ஒன்றோ பலவோ அங்கு வந்த குதிரை? ...... அஃறிணைப்பாலையம்
- இரு திணையில் உருதிணை துணிந்தவிடத்தும், இருபாலில் ஒரு பால் துணிந்தவிடத்தும், மற்றொன்றல்லாத தன்மையைத் துணிந்த பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும். இது சுரங்கள் சொல்லல் என்னும் அழகைப் பயப்பித்தலாற் சிறப்புடையதாம்.
உ-ம்.
1. (குற்றியெனின்) மனுடனன்று எ-ம்.
(மனுடனெனின்) குற்றியல்லன் எ-ம்.
2. (ஆண்மகனெனின்) பெண்மகளல்லன் எ-ம்.
(
பெண்மகனெனின்) ஆண்மகனல்லன் எ-ம்.
3. (ஒற்றெனின்) பலவன்று எ-ம்.
(
பலவெனின்) ஒன்றல்ல எ-ம். கூறுக.
- தேர்வு வினாக்கள் -
- முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது எப்படி இயைந்து நிற்றல் வேண்டும்?
- இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
- இரண்டு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கிவரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
- முன்னிலையெழுவாயோடு படர்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
- தன்மையெழுவாயோடு, முன்னிலையெழுவாயேனும், படர்க்கையெழுவாயேனும் இவ்விரண்டெழுவாயேனும் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
- திணையையத்தையும் பாலையத்தையும் எந்தெந்த சொல்லாற் கூறல் வேண்டும்? 383. இருதிணையில் ஒரு திணை துணிந்த விடத்தும், மற்றொன்றல்லாத தன்மையை எப்பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும்?
திணைபாலிடப் பொதுமை நீங்குநெறி
- திணை பாலிடங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருஞ் சிறப்புப் பெயருஞ் சிறப்பு விணையும், அவற்றின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை யுணர்த்தும்.
உ-ம்.
சாத்தனிநன்: சாத்தனிது,. எ-ம். சாத்தன் வந்தான்: சாத்தன் வந்தது, எ-ம். பெயர்திணைப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி உரு திணையை யுணர்த்தின.
ஒருவரென்னையர்: ஒருவரென்றாயர். எ-ம். மரம் வளர்ந்தது: மரம் வளர்ந்தன,எ-ம். பெயர்ப்பாற் பொதுமைப் பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும் நீக்கி ஒரு பாலையுணர்த்தின.
யாமெல்லாம் வருவோம்: நீயிரெல்லாம் போமின்: அவரெல்லாமிருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன்வந்த சிறப்புப் பெயரும் பின் வந்த சிறப்பு வினையும் நீக்கி ஒவ்வோரிடத்தை யுணர்த்தின.
வாழ்க அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத்திணை பாலிடப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி ஒரு திணையையும் பாலையும் இடத்தையும் உணர்த்தின.
- பெயர் வினையிரண்டும் உயர்திணை யாண் பெணிரண்டற்கும் பொதுவாகவேணும், அஃறிணை யாண்பெணிரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒருபாற்கே யுரிய தொழின் முதலிய குறிப்பினால், அப்பாலானது துணியப்படும்.
உ-ம்.
ஆயிரமக்கள் போர் செய்யப் போயினார் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் போயினரென்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், போர் செயலென்னுந் nhழிற்குறிப்பினால் ஆண்பால் துணியப்பட்டது.
பெருந்தேவி மகவீன்ற கட்டிலினருகே நால்வர் மக்களுளர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பால் துணியப்பட்டது.
இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுந் தொழிற்குறிப்பினால் எருது துணியப்பட்டது.
இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், கறத்தலென்னுந் தொழிற்குறிப்பினால் பெண்பசு துணியப்பட்டது.
- தேர்வு வினாக்கள் -
- திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய பெயர் விணைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை உணர்த்துவன யாவை?
- பெயர் வினை இரண்டும் உயர்திணை யாண், பெண் இரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒன்று எதனாலே துணியப்படும்?
உயர்திணை தொடர்ந்த அஃறிணை
- உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக நிற்கும் அஃறினைப் பொருளாதியாறும், உயர்திணை விணையான் முடியும்.
உ-ம் நம்பி பொன்பெரியன்
இங்கேஉயர்திணையெழுவாயின் பயனிலையோடு அஃறிணை யெழுவாயும் முடிந்தறிக
நம்பி நாடு பெரியன்
நம்பி வாழ்நாள் பெரியன்
நம்பி மூக்குக் கூரியன்
நம்பி குடிமை நல்லன்
நம்பி நடை கடியன்
- மாடு கோடு கூரிது என்னுமிடத்தும், மாடு என்னும் அஃறிணையெழுவாயின் பயனிலையாகிய கூரிது என்னும் வினையோடு அதன்கிழமைப் பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிதறிக.
- தேர்வு வினா -
- உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து, எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதியாறும் எத்திணை வினையான் முடியும்?
கலந்த திணை பால்களுக்கு ஒரு முடிபு
- இரு திணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்து, ஆண், பெண், என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வலுமிடத்தும், சிறப்பினாலும், ஒரு முடிபைப் பெறும்.
உ-ம்.
“திங்களுஞ் சான்றோரு மொப்பர்” என் இருதிணைப் பொருள்கள் கலந்துசிறப்பினால் உயர்திணைமுடிபைப் பெற்றன. சான்நோர் திங்கள் போல மறுத் தாங்கமாட்டாமை இங்கே சிறப்பு.
“பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தோர் குழவியெனு மிவர்கள்” என இரு திணைப் பொருள்கள் கலந்து மிகுதியால் உயர்திணை முடிபைப் பெற்றன. அஃறிணைப் பொருள் ஒன்றேயாகா உயர்திணைப் பொருள் ஐந்தால் இங்கே மிகுதி.
“மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா” என இருதிணைப்பொருள்கள் கலந்து இழிவினால் அஃறிணை முடிபைப் பெற்றன. மூர்க்க குணமுடை இங்கே இழிவு.
தேவதத்தன் மனைவியுந் தானும் வந்தான் எனப்பாற் பொருள்கள் கலந்து சிறப்பினால் ஆண்பான் முடிவிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு.
- தேர்வு வினா-
- இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இரு பாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி முடியும்?
திணை பால் வழுவமைதி
- மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால், ஒரு திணைப்பொருள் வேறுதிணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் றேறுபாற் சொல்லாகவுஞ் சொல்லப்படும்.
உ-ம்.
ஒராவினை என்னமை வந்தாள் என்றவிடத்து, உவப்பினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.
பசுங்கிளியார் தூது சென்றார் என்ற விடத்து, உயர்வினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.
“தம்பொருளெம்ப தம்மக்கள்” என்ற விடத்துச் சிறப்பினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.
பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவனை இந்நாய் குரைக்கின்றது என்றவிடத்து, கோபத்தினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.
நாங்களுடமை என்றவிடத்து இழிவினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.
தன்புதல்வனை என்னம்மை வந்தாள் என்றவிடத்து, மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.
ஒருவனை அவர் வந்தார் என்ற விடத்து, உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது.
தேவன் மூவுலகிற்குந் தாய் என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.
“எனைத்துணைய ராயினு மென்னாந் திணைத்துணையுந் தேரான் பிறனில் புகல்” என்றவிடத்துக் போடத்தினாற் பன்மைப்பால் ஒரமைப்பாலாக சொல்லப்பட்டது.
பெண்வழிச் செல்வானை இவன் பெண் என்ற விடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலகச் சொல்லப்பட்டது.
- தேர்வு வினா -
- ஒரு திணைப்பொருள் வேறு திணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் வெறுபாற் பொருளாகவுஞ் சொல்லப்படுமோ?
ஒருமை பன்மை மயக்கம்
- ஒருமைப்பாலிற் பன்மைச்சொல்லையும், பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துச் தழுவிச் சொல்லுதலும் உண்டு.
உ-ம்.
வெயிலெல்லா மறைத்தது மேகம். என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைப்பாலில் எலலாமென்னும் பன்மைச் சொற்சேர்த்து சொல்லப்பட்டது.
இரண்டு கண்ணும் சிவந்நது என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைச் சொற்சேர்த்து ச் சொல்லப்பட்டது.
- தேர்வு வினா -
- ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லையும் பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையுஞ் சொல்லதல் உண்டோ?
இடவழுவமைதி
- ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டு.
உ-ம்.
சாத்தன்றா யிவை செய்வேனோ என்னுமடத்து, யானெனச் சொல்லல் வேண்டுந் தன்மையிலே சாத்தன்றாயெனப் படர்க்கைச் சொற் சேர்த்து சொல்லப்பட்டது. சாத்தன்றாயாகிய யான் என்பது பொருள்.
“எம்பியை யீங்கப் பெற்றே னென்னெனக் கரிய தென்றான்” என்னுமிடத்து, நின்னையெனச் சொல்லல்வேண்டு முன்னிலையிலே எம்பியையெனப் படர்க்கைச் சொற் சோர்த்துச் சொல்லப்பட்டது. எம்பியாகிய உன்னை என்பது பொருள்.
யானோ வவனோ யாரிது செய்தார்;
நீயோ வவனோ யாரிது செய்தார்;
நீயோ யானோ யாரிது செய்தார்;
நீயோ வவனோ யானோ யாரிது செய்தார்;
என ஒரிடத்திற் பிறவிடம் விரவி வருதலும் உண்டெனக் கொள்க.
- தேர்வு வினா -
- ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டோ?
காலவழுவமைதி
- முக்காலத்தினுந் தந்தொழில் இடையறாமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையை நிகழ்காலத்தாற் சொல்லத் தகும்.
உ-ம்.
மலை நிற்கின்றது
தெய்வமிருக்கின்றது
கடவு ளளிக்கின்றார்
- மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், கடவுட்கு அளித்தலும் முக்காலத்திலும் உள்ளனவாதல் காண்க.
- விரைவு, மிகுதி, தெளிவு, என்னும் இம்மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும், ஒருகாலம் வேறொருகாலமாகச் சொல்லவும் படும்.
உ-ம்.
உண்பதற்கிருப்பவனும் உண்கின்றவனும் விரைவிலே தம்மை உடன்கொண்டு போக அழைப்பவனுக்கு, உண்டேன்
உண்டேன்; வந்தேன் வந்தேன் என்ற விடத்து, விரைவு பற்றி எதிர்காலமும் நஜகழ்காலமும், இறந்தகாலமாகச் சொல்லப்பட்டன.
களவு செய்ய நினைப்போன் கையறுப்புண்டான் என்ற விடத்துக், களவு செய்யிற் கையறுப்புண்ணல் மிகுதியாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கையறுப்புண்ணல் தவறிறுந் தவறுமாதலால் மிகுதிணெனப்பட்டது.
எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் மழைபெய்தது என்ற விடத்து, எறும்பு முட்டையெடுத்து மேட்டிலேறினால் மழைபெய்தல் தெளிவாதலால், nதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.
யாம் பண்டு விளையாடுவ திச்சோலை; யாம் பண்டு விளையாடுகிறதிச் சோலை இவைகளில், அக்காரணங்கள் இல்லாமலே, இறந்தகாலம், எதிர்காலம் நிகழ்காலம், சொல்லப்பட்டன.
- தேர்வு வினாக்கள் -
- முக்காலத்தினுந் தந்தொழில் இடையறமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொரள்களின் வினையை எக்காலத்தாற் சொல்லத் தகும்?
- ஒரு காலம் வேறொரு காலமாகச் சொல்லப்படுமோ?
வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல்
- செயப்படுபொருளையும், கருவியையும், இடத்தையும், செயலையும், காலத்தையும், வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டு.
உ-ம்.
இம்மாடியான் கொண்டது ----- செயப்படுபொருள்
இவ்வெழுத்தாணியானெழுதியது ----- கருவி
இவ்வீடியானிருநடதது ------ இடம்
இத்தொழில் யான் செய்தது ------ செயல்
இந்நாள் யான் பிறந்தது ----- காலம்
- தேர்வு வினா -
- செயப்படுபொருளையுங் கருவியையும் இடத்தையும் செயலையுங் காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டோ?
அடைமொழி
- பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும், அடைமொழிகளாய் வரும்.
- அடையினால் அடுக்கப்பட்டது அடைகொளி எனப்படும். அடையெனினும் விசேடணமெனினும் பொருந்தும். அடைகொளியெனினும் விசேடியமெனினும் பொருந்தும்.
(உதாரணம்)
இனமுள்ளன இனமில்லா
நெய்க்குடம் உப்பளம் பொருள்
குளநெல் ஊர்மன்று இடம்
கார்த்திகைவிளக்கு நாளரும்பு காலம்
பூமரம் இலைமரம் சினை
செந்தாமரை செம்போத்து குணம்
ஆடுபாம்பு தோய்தயிர் தொழில்
- தேர்வு வினா -
- பொருளாதியாறும், இனமுள்ள பொரள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும் அடைமொழிகளாய் வருமோ?
சிறப்புப் பெயர் இயற்பெயர்
- ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப்பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற் பெயரினாலும், ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், சிறப்புப் பெயரை முன்வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல் சிறப்பாம்.
உ-ம்.
சோழியன் கொற்றன்,
பாண்டியன் குழசேகரன்,
தமிழ்ப்புலவன் கம்பன்
- இனிக் கொற்றன் சோழியன் என இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன் வருமிடத்து, வைத்தியநாத நாவலன் கச்சியப்பப்புலவன் என இறுதி விகாரமாக வருதலுங் காண்க.
- தேர்வு வினாக்கள் -
- ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப் பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற்பெணரினாலும் ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், எதை முன்வைத்து எதைப் பின் வைத்தல் சிறப்பாம்?
- இயற்பெயர் சிறப்புப் பெயருக்கு முன் வருதல் இல்லையோ?
- இயற்பெயர் முன் வருமிடத்து, அதனிறுதி விகாரமாக வருதலும் உண்டோ?
வினாவிடை
- வினாவாவது, அறியக்கருதியதை வெளிப்படுத்துவதாம். விடையாவது, வினாவாகிய பொருளை அறிவிப்பதாம்.
- வினா, உசா, சுடா, என்பன ஒரு பொருட்சொற்கள். விடை, செப்பு, உத்தரம், இறை என்பன ஒரு பொருட்சொற்கள்.
- வினாவையும் விடையையும் வழுவாமற் காத்தல் வேண்டும்.
உ-ம்.
உயிரெத்தன்மைத்து வினாவழாநிலை
உயிருணர்தற்றன்மைத்து விடைவழாநிலை
கறக்கின்ற வெருமை பாலோ சினையோ? வினாவழு
தில்லைக்கு வழியாது? எனின் விடைவழு
சிவப்புக்காளை முப்பது பணம் என்பது விடைவழு
- வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.
உ-ம்.
1. ஆசிரியரே இப்பாட்டிற்கு பொருள் யாது? ...... அறியாமை வினா
2. குற்றியோ மகனோ? ..... ஐயவினா
3. மாணாக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் யாது? ...... அறிவினா
4. பயறுண்டோ செட்டியாரே? ...... கொளல்வினா
5. தம்பிக்காடையில்லையா? ....... கொடைவினா
6. தம்பீ யுண்டாயா? ....... ஏவல்வினா
- விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினாவெதிர்வினாதல், உற்றுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும். இவற்றுள் முன்னைய மூன்றுஞ் செவ்வனிறை: பின்னைய ஐந்தும் பயப்பன.
(உதாரணம்)
வினா விடை
1. தில்லைக்கு வழி யாது? இது சுட்டு
2. இது செய்யவா? செய்யேன் எதிர்மறை
3. இது செய்யவா? செய்வேன் உடன்பாடு
4. இது செய்யவா? நீ செய் ஏவல்
5. இது செய்யவா? செய்யேனோ வினாவெதிர் வினாதல்
6. இது செய்யவா? உடம்பு நொந்தது உற்றுரைத்தல்
7. இது செய்யவா? உடம்பு நோம் உறுவது கூறல்
8. இது செய்யவா? மற்றையது செய்வேன் இனமொழி
- தேர்வு வினாக்கள் -
- வினாவாவது யாது? விடையாவது யாது?
- வினாவையும் விடையையும் எவ்வாறு காத்தல் வேண்டும்?
- வினா எத்தனை வகைப்படும்? 399. விடை எத்தனை வகைப்படும்?
சுட்டு
- படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளுமிடத்து அதற்குப்பின் வரும்: முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து அதற்றுப் பின்னு முன்னும் வரும்.
உ-ம்.
(1) நம்பி சந்தான்; அவனுக்குச் சோறிடுக
எருது வந்த் அதற்குப் புல்லிடுக
(2) நம்பியவன்; அவனம்பி
- தேர்வு வினா -
- படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அச் சுட்டுப்பெயர் அப்படர்க்கைப் பெயர்க்கு எவ்விடத்து வரும்?
<மரபு
- மரபாவது, உலக வலக்கிலுஞ் செய்யுள் வழக்கிலுஞ் எப்பொருட்கு எப்பெயர் வழங்கி வருமோ, அப்பொருளை அச் கொல்லாற் கூறுதலாம்.
உ-ம்.
ஆணைமேய்ப்பான் பாகன், குதிரைக்குட்டி,
ஆடுமேய்ப்பான் இடையன், பசுக்கன்று,
ஆனையிலண்டம், கீரிப்பிள்ளை,
ஆட்டுப்புழுக்கை, கோழிக்குஞ்சு,
யானைக்குட்டி, தென்னம்பிள்ளை,
யானைக்கன்று, மாங்கன்று
- தேர்வு வினா -
- மரபாவது யாது?
முற்றும்மை
- இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மைபெற்று வரும்.
உ-ம்.
(1) தமழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்
(2) ஒளிமுன்னிருள் எங்குமில்லை
- தேர்வு வினா -
- இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?
ஒரு பொருட் பன்மொழி
- சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டு.
உ-ம்.
நாகிளங்கமுகு மீமிசைஞாயிறு
புனிற்றிளங்கன்று உயர்ந்தோங்கு பெரு வரை
- தேர்வு வினா -
- ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டோ?
அடுக்குச் சொல்
- ஒரு சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம் முதலிய காரணம்பற்றி இரண்டு முதல் மூன்றளவு அடுக்கிக் கூறப்படும்.
உ-ம்.
1. உண்டேனுண்டேன்; போ போ போ விரைவு
2. எய்யெய்; எறி எறி எறி கோபம்
3. வருக வருக் பொலிக பொலிக பொலிக உவகை
4. பாம்பு பகம்பு; தீத் தீத் தீ அச்சம்
5. உய்யேனுய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் துன்பம்
- அசைநிலைக்கு இரண்டளவும், இசைறிறைக்கு இரண்டு முதல் நான்களவும் அடுக்கிக் கூறப்படும்.
உ-ம்.
1. அன்றேயன்றே ...... அசைநிலை
2. ஏயெயம்பன் மொழிந்தனன் யாயே நல்குமே நல்குமே நல்குமே நாமகள் பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ ....... இசைநிலை
- சலசல, கலகல, என்பவை முதலியன பிரியாது இரட்டைச் சொல்லாகவே நின்று பொருள் படுதலால், அடுக்கிய சொல்லல்ல.
- தேர்வு வினாக்கள் -
- அடுக்குத் தொடருள், ஒரு சொல்லே அடுக்கிக் கூறப்படும் போது, எவ்வௌ; விடத்தில் எத்தனை எத்தனை அடுக்கிக் கூறப்படும்?
- இக்காரணங்களின்றி ஒரு சொல் இங்ஙனம் அடுக்கிக் கூறப்படுதல் இல்லையோ?
- சலசல, கலகல என்பவை முதலியன அடுக்கிய சொல்லல்லவோ?
சொல்லெச்சம்
- சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒரு சொல் எஞ்சி நின்று வருவித் துரைக்கப்படுவதாம்.
உ-ம்.
"பிறவிப் பொருங்கட னீந்நுவர் நீத்தா ரிறைவ னடிசேரா தார்"
இதிலே சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்படுதலாற் சொல்லெச்சம்.
- தேர்வு வினா -
- சொல்லெச்சமாவது யாது?
இசையெச்சம்
- இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் இடத்திற்கேற்ப் இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி என்று வருவித்துரைக்கப்படுவதாம்.
உ-ம்.
'அந்தாமரையன்னமே நின்னையானகன்றாற்றுவனோ"
இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சம்.
- தேர்வு வினா -
- இசையெச்சமாவது யாது?
ஒழியியல் முற்றிற்று