தமிழ் எண்ணிமத்திட்டம்

தமிழ் இலக்கிய வரலாறு

முன்னுரை

முதற் பதிப்பின் முன்னுரை

    கலாசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழைக் கற்க விரும்பும் மாணவர்கள் முதலில் தமிழிலக்கிய வரலாற்றினை ஓரளவிற்காயினும் அறிந்திருத்தல்வேண்டும் .அதனைச் சுருக்கமாக அறிந்திருந்தாற்றான் விரிவான நூல்களை அவர்கள் மனங்கொண்டு படிக்க விரும்புவார்கள். மாணவர்களுக்கு உதவும்பொருட்டே இந்நூலை யான் எமுதத் துணிந்தேன் சுருச்சுமான இந்நூலின்கண் தமிழிலக்கிய வரலாற்றிலுள்ள எல்லா விஷயங்களையும் கூறுதல்முடியாது. இலக்கியப் பண்பினை மட்டும் இதன்கண் சுருக்க மாகக் காட்டியுள்ளேன், அதனோடு தொடர்புடைய மக்கள் வாழ்க்கை, நாட்டின் அரசியல் சமயநிலை முதலியவற்றைப் பற்றியும் ஆங்காங்கு சுருக்கமாகக் கூறித்துள்ளேன். புலவர் களுடைய காலம் வாழ்க்கை முதலியவற்றைப் பற்றிக்கூட இந்நூலிற் குறிக்கவில்லை. அவற்றை எல்லாம் குறித்துச் செல்வதாயின் இந்நூல் ஓர் ஆரம்பநூலாகாது என்றஞ்சி அவற்றை குறியாது விட்டேன்.
       
        வாக்கியங்களைச் சந்திகூட்டி எழுதுவதே தமிழ் மரபு எனினும், மாணவர்கள் இலகுவாகப் பொருள் அறிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணியே பிரிக்கக்கூடாத இடங்களிலும் சந்திகளைப் பிரித்து எழுதி உள்ளேன். இந்நூலின் கண் இன்னும்பல குறைகளுள்ளன வாகலாம். அக்குறைகளை விட எனது அறியாமை காரணமாக எழுந்த பிழைகளும் பல உள்ளனவாகும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. இந் நூலினைப் படிக்கும் பெரியோர்கள் அப்பிழைகள் எவையென அறிவித்து உதவுவாராயின் இரண்டாம் பதிப்பில் அவற்றை நீக்குவேன்
       
        இந்நூலினை எழுதுமாறு என்னைப் பலமுறை ஊக்கியும் கையெழுத்துப் பிரதியினைப் பார்வையிட்டுப் பல திருத்தங்களைச் செய்தும் உதவிய பேராசிரியர் டாக்டர் க.கணபதிப்பிள்ளை ph, D, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைசெலுத்துகின்றேன் இந்நூல் பற்றி சிறப்பாக வெளிவர வேண்டுமென்ற நோக்கத்துடன் கையெழுத்துப் பிரதியைப் பல முறை பார்வையிட்டுப் பல அரிய திருத்தங்களைச் செய்து உள்ளன்போடு உதவிபுரிந்த திரு. சு. பெரியதம்பி டீ.யு அவர்களுக்கு நான் பெரிதும் கடைமைப்பட்டுள்ளேன். தேக சுகமில்லாதிருந்தும் என்மேலுள்ள அன்பினால் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டு இலக்கணப்பிழைகள் பலவற்றை நீக்கியுதவிய மாகவித்துவான் பிரம்ம் ஸ்ரீ. சுp. கணேசையர் அவர்களுக்கும் அதனைப் படித்து அரிய பல திருத்தங்களைச் செய்துதவியர்களாகிய பண்டிதர் அ.சிற்றம்பலம் டீ.யு அவர்களுக்கும் அதனைப் படித்து அரிய பல திருத்தங்களைச் செய்துதவியர்வர்களாகிய பண்டிதர் அ. சிற்றம்பலம் டீ.யு அவர்களக்கும் எமது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. தமது நேரத்தைப் பொருட்படுது;தாது பல நாட்களாக என்னுடன் இருந்து இதன் கையெழுத்துப்பிரதியை எழுதியும் அட்டவணை முதலியவற்றைத்தயாரித்தும் அச்சுப்பிழைகளைத்திருத்தியும் பலாறு உதவிய எனது மாணவரன் பண்டிதர் ஆ. சதாசிவம் அவர்களுக்கும் எனது மாணவன் பண்டிதர். ஆ. சதாசிவம் அவர்களுக்கும் எனது நன்றி உரியது. இவ்வாறு உதவிபுரிந்த அனைவரும் பல்லாண்டு வாழ வேண்டுமென்று இறைவனை வழுத்ததுவதன்றி நான் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு வேறுயாதுளது இந்நூலினைத் திருத்தமாக அச்சிட்டுதவிய யாழ்ப்பாணத்து அர். சூசை முனிவர் அச்சியந்திரசாலை அதிகாரிக்கும் நன்றி கூறுகின்றேன். செலுத்துகின்றேன் இந்நூல் பற்றி சிறப்பாக வெளிவர வேண்டுமென்ற நோக்கத்துடன் கையெழுத்துப் பிரதியைப் பல முறை பார்வையிட்டுப் பல அரிய திருத்தங்களைச் செய்து உள்ளன்போடு உதவிபுரிந்த திரு. சு. பெரியதம்பி டீ.யு அவர்களுக்கு நான் பெரிதும் கடைமைப்பட்டுள்ளேன். தேக சுகமில்லாதிருந்தும் என்மேலுள்ள அன்பினால் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டு இலக்கணப்பிழைகள் பலவற்றை நீக்கியுதவிய மாகவித்துவான் பிரம்ம் ஸ்ரீ. சுp. கணேசையர் அவர்களுக்கும் அதனைப் படித்து அரிய பல திருத்தங்களைச் செய்துதவியர்களாகிய பண்டிதர் அ.சிற்றம்பலம் டீ.யு அவர்களுக்கும் அதனைப் படித்து அரிய பல திருத்தங்களைச் செய்துதவியர்வர்களாகிய பண்டிதர் அ. சிற்றம்பலம் டீ.யு அவர்களக்கும் எமது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. தமது நேரத்தைப் பொருட்படுது;தாது பல நாட்களாக என்னுடன் இருந்து இதன் கையெழுத்துப்பிரதியை எழுதியும் அட்டவணை முதலியவற்றைத்தயாரித்தும் அச்சுப்பிழைகளைத்திருத்தியும் பலாறு உதவிய எனது மாணவரன் பண்டிதர் ஆ. சதாசிவம் அவர்களுக்கும் எனது மாணவன் பண்டிதர். ஆ. சதாசிவம் அவர்களுக்கும் எனது நன்றி உரியது. இவ்வாறு உதவிபுரிந்த அனைவரும் பல்லாண்டு வாழ வேண்டுமென்று இறைவனை வழுத்ததுவதன்றி நான் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு வேறுயாதுளது இந்நூலினைத் திருத்தமாக அச்சிட்டுதவிய யாழ்ப்பாணத்து அர். சூசை முனிவர் அச்சியந்திரசாலை அதிகாரிக்கும் நன்றி கூறுகின்றேன்.

வி. செல்வநாயகம்
இலங்கைப் பல்கலைக்கழகம்,
20.04.51

நான்காம் பதிப்பின் முன்னுரை

    இந்நூலிலுள்ள முதன்மூன்று அதிகாரங்களிலும் இக்கால ஆராய்ச்சிகளுக்கிணங்கச் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இந்நூலினை அச்சிட்டுதவிய ஸ்ரீ லங்கா அச்சகத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

வி.செ
01.01.65

ஐந்தாம் பதிப்பு வெளியீட்டாளர் குறிப்புரை

    இந்நூலின் 4ம் பதிப்பின் சகல பிரதிகளும் விலையாகிவிட்டன. துமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நூற் பிரதிகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி எழுதுpயுள்ளனர். இவர்களின் அவசரத் தேவையொட்டி 4ம் ஆம் பதிப்பை அப்படியே மீண்டும் 5ம் பதிப்பாக வெளியிட்டுள்ளோம்.
       
        வளர்ந்து வரும் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கும் புதிய கருத்துக்களுக்கும் அமைய இந்நூல் விரிவுபடுத்தி 5ம் பதிப்பாக வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது காலஞ் சென்ற எனது கணவரது நோக்கமாகும். ஆதற்கு ஏற்ப தேவையான திருத்தக்குறிப்புக்களையும் இலக்கிய வரலாற்று ஆய்வுக் கருத்துக்களையும் 1965ம் ஆண்டிலிருந்து அவர் சேகரித்து வந்தார்.
       
        அவற்றை சேர்த்துப் புதிய திருத்தங்களுடன் 1970 ல் 5ஆம் பதிப்பை வெளியிடுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டும், அவை தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு விட்டன. இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி மாணவர்களுக்கு நன்கு பயன்படத்தக்க வகையில் பேராசிரியர் அவர்கள் எழுதி வைத்துள்ள புதுpய கருத்துக்கள் திருத்தங்கள் யாவற்றையும் சேர்த்துத் தொகுத்து இந்நூலை ஆறாம் பதிப்பாக வி;ரைவில் வெளியிடுவோம்.

நன்றி

திருமதி. க. செல்வநாயகம்

நூன்முகம்

    உரையினுலேனுஞ் செய்யுவினவேணும் இயற்றப்படும் நூல்களெல்லாம் வாழ்க்கையின் கண் வரும் அனுபவங்களை அழகுறப்புனைந்து கூறும் நூல்களே சிறப்பாக இலக்கியமெனக் கருத்தக்கன. அத்தகைய இலக்கியங்களைச் காலவரன் முறையை ஒட்டி ஆராயவும் நூல்கள் இலக்கிய நூலாசிரியர் ஒருவனுடைய மனோபாவம், அனுபவம், குறிக்கோள், சூழல் முதலியவற்றிற்கு இனங்கவே அவணியற்றும் நூலின் நடை, தன்மை, அமைப்பு முதலியன உருக்கொள்ளுமாதலின், அந்நூலைச் செவ்வனவே படித்து இன்புற்றுஅவனுடைய வாழ்க்கை சூழல் முதலியவற்றை நாடியறிதல் அவசியமாகின்றது. ஆதனால் இலக்கிய நூலாசிரியர்களது வாழ்க்கை முதலியவற்றைப் பற்றியும் இலக்கிய ரலாற்று நூல் கூறும் அவ்வாறு இலக்கியங்களை ஆராய்வதோடும், இலக்கிய ஆசிரியர்களது வாழ்க்கையைக் கூறுவதோடும் அது நின்றுவிடுவதில்லை. குhலத்திற்குக் காலம் மாற்றமுற்றுச் செல்லும் இலக்கியப் போக்கினையும் அதற்குக் காரணமாயிருந்தவற்றையும் இலக்கிய வரலாற்று நூல் ஆங்காங்கு குறித்துச் செல்லும்.
       
        குறித்த ஒரு காலப்பகுதியில் ஒரு மொழியில் எழுந்த இலக்கியம் வேறொரு காலப்பகுதியில் எழுந்த இலக்கியத்தினின்றும் வேறுபட்ட பண்புகள் சிலவற்றைச் கொண்டிருந்தல் இயல்பாகும். அவ்வாறு காலத்திற்குக் காலம். அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களின் போக்கில் மாற்றங்கள் நிகழ்வதற்குப் பல காரணங்களுள்ளன. ஒரு மொழி வழங்கி வரும் நாட்டின் அரசியலிலோ பண்பாட்டிலோ மாற்றம் ஏற்படின் அவை காரணமாக அம் மொழியில் இலக்கியப் போக்கிலும் மாற்றம் உண்டாதல் இயல்பு, அதேபோல பிறநாட்டு நாகரிகத் தொடர்பு உண்டாயபோதும், சமயத்துறையில் கிளர்ச்சி தோன்றியவிடத்தும் இலக்கியப் போக்கு மாறுதடைவதுண்டு, சுருங்கக்கூறின் ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் புதிய கருத்துக்களையும் கொள்கைகளையும் தழுவத் தொடங்கிப் பழையனவற்றைக் கைவிடுவதால் அவர்களின் வாழ்க்கைப் போக்கில் மாற்றமுண்டாகின்றது. அது இலக்கியப் போக்கையும் ஓரளவிற்கு மாற்றிவிடுகின்றது. சுpல சமயம் ஆற்றல்மிக்க இலக்கிய ஆசிரியனும் ஒரு மொழியின் இலக்கியப் போக்கிற் பெரிய மாற்றங்களைப் புகுத்தி விடுகின்றான். ஆவன் ஒரு புதுவழியிற் செல்ல அவனுக்குப் பின்னே வரும் ஆ சரியர் பலர் அவ்வழிவைத் தாமும் மேற்கொண்டு அவனைப் பிற்பற்றிச் செல்வர். இவ்வாறு அவன் பிறருக்கு ஒரு புது வழியைக் காட்டுகின்ற நிலையிலும் தன் காலத்திலருந்த இலக்கிய மரபினை முழுவதும் மாற்றிவிடதவானிக்றான். ஆதனால் இலக்கியப் போக்கில் பெரிதான மாற்றம் ஒரே முறையில் திடீரென நிகழ்வதில்லை. முhற்றம் சிறிது சிறிதாகவே நிகழ்சின்றது.
       
        காலத்திற்கு காலம் இலக்கியப் போக்கில் மாற்றம் உண்டாவதால் அதற்கேற்ப இலக்கிய ஆராய்ச்சியாளர் இலக்கிய வரலாற்றினைச் சில பல காலப்பிரிவுகளாக வகுத்து;க கொண்டு ஆருhய்வர். குhலப்பிரிவுகள் ஒவ்வொன்றும் தத்தமக்குருpய பண்புகளiயுமடையனவாய் விளங்குமாதலின் அவற்றை இலக்கிய வரலாற்று ஆசரியர்கள் விளக்கிக்காட்டுவதோடு. ஒரு காலப்பிரிவில் எழுந்த இலக்கியப் போக்கிற்கும் அதற்கு முன்னும் பின்னும் எழுந்த இலக்கியங்களின் போக்கிற்கும் உள்ளதொடர்பினையும் ஒற்றுமை வேற்றுமைகளையும் எடுத்துக் காட்டியச் செல்வர். ஒரு நாட்டில் வாழம் மக்களுடைய பண்பாட்டிற்கு இசையவவே அங்கு தோன்றும் இலக்கியங்களளும் அமைகின்றன. ஆசிரிய நூலை இயற்றும் பொழுது தன் காலத்தில் வாழும்மக்கள் பெரும்பாலும் அதனை விரும்பிப்படிக்க வேண்டுமென்ற நோக்கங் கொண்டே இயற்றுகின்றன அதனால் அவன் இயற்றுவது அவன் காலத்து மக்கள் விரும்பத்தக்க முறையில் அமைய வேண்டி இருக்கின்றது நடையுடை பாவனைகளைப் போலவே காலத்தின் இயல்புக்கிணங்க நெறிப்பட்டுச் செல்லும் இலக்கியத்தின் பண்பினையும் இலக்கிய வரளாற்று நூல்கள் ஆங்காங்கு விளங்கிச் செல்லுமியல்பின
       
        ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளா்ந்து வரும் தமிழ் இலக்கியத்தின் வரளாற்றை ஆசிரியர்கள் பல காலப்பிரிவுகளாக வகுத்துக் கூறுவர் அவர் முறைக்கிணங்கவே இவ் வரளாற்று நூலின் கண்ணும் அது சங்க காலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்றாண்டு என ஏழு காலப்பிரிவுகளாக அமைத்துக் கூறப்படும் மாணவா்கட்கென எப்பொழுதும் இச்சிறு நூல் ஆரம்ப நூலாகலின் இதன்கண் விரிவான ஆராய்ச்சிகளுக்கு இடமில்லை ஒவ்வொரு காலப்பகுதியிலும் நூற்றுக்கணக்கான புலவர்கள் தோன்றிப் பெருந்தொகையான நூல்களை இயற்றித்தந்துள்ளனர் அவற்றை எல்லாம் இச்சிறு நூலின்கண் ஆராய்தல் முடியாதாகும் தமிழிலக்கிய வரளாற்றை விரித்துக் கூறும் நூல்கள் சிலவுள அந்நூல்களை மாணவர் மனங்கொண்டு கற்றற் பொருட்டு ஒரு வழிகாட்டியாகவே இந்நூலை இயற்ற எண்ணினேனும் ஆதலின் இதன்கண் ஒவ்வொரு காலப்பிரிவிலும் வாழ்ந்த புலவர்களுட் சிறப்பாகப் பாராட்ட வேண்டிய புலவர் சிலர் இயற்றிய இலக்கியங்களின் போக்கினையே ஆராய்ந்து கூறலாம் <

முச்சங்கங்கள்

    உலகில் வழங்கும் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் நம் தமிழ் மொழி பண்டைக்காலந்தொட்டு வளர்ச்சியுற்று வருகின்றது ஈராயிரம் ஆண்டுகளு்க்கு முன்னே அது சிறந்த கவிவள முடையதாய் உயர்நிலை பெற்று விளங்கிற்றெனச் சங்க நூல்களால் அறியக்கிடக்கினறதேயன்றி அதன் ஆரம்ப நிலையைபற்றியாவது தமிழிலக்கியத்தின் தோற்றத்தைப்பற்றியாவது நாம் இப்பொழுது யாதும் அறியமுடியாமல் இருக்கின்றது தமிழகத்தோடு யவன தேசத்தினர் வணிகம் செய்து வந்த பண்டைக்காலத்திலே பிறநாட்டு நல்லறிஞ்ஞா் சிலர் எழுதிவைத்த குறிப்புக்களாலும் வடமொழி நூல்கள் சிலவற்றாலும் பிற வரளாற்றுக் குறி்ப்புகளாலுமே மக்கள் பண்டைக்காலத்திற் சிறந்த பண்பாடு உடையவராய் வாழ்ந்தனர் என்பது தெளிவாக அறியக்கிடக்கின்றது முன்னொரு காலத்திலெ தமிழ் வழங்கிய பல நாடுகள் குமரிமுனைக்குத் தெற்கே பல காத்தூரம் பரங்துகிடந்தன காலத்தற்கு காலம் ஏற்பட்ட பல கடல்கோள்கள் காரணமாக அவை யாவும் அழிந்து போயின வடக்கே வேங்கடத்தையும் தெற்கே குமரிமுனையையும் எல்லையாகக் கொண்டு விளங்கிய நிலப்பரப்பே சங்க காலத்திலிருந்த தமிழ்நாடு
       
        கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளை கொண்ட காலப்பகுதியைச் சங்ககாலம் என்பர். அக்காலத்திலே சேர சோழ பாண்டிய ரென்னும் முடியுடை வேந்தர் மூவரும் பாரி, காரி முதலிய குறுநில மன்னர் பலரும் வேங்கடம், குமரி என்னும் எல்லைகளுக்கு உட்பட்டுக்கிடந்த தமிழ் நாட்டை அறநெறியினின்றும் வழுவாது ஆண்டு வந்தனர். அவர்கள் காலத்திலே தமிழ்நாடு செவ்வம் மலிந்து வளம் பெற்றது; கலைகள் ஓங்கின, தமிழ் நாட்டின் புகழ் எங்கும் பரவிற்று. அதனையறிந்தபிற நாட்டினர் பலர் தமிழ்நாட்டை நாடிவரலாயினர். பிறநாட்டு வாணிகம் விருத்தியடையத் தொடங் கவே தமிழ்நாட்டில் முசிறி, தொண்டி, கொற்கை, புகார் முதலிய துறைமுகப் பட்டினங்கள் வளம் பெற்றோங்கின. இவ்வாறு சங்ககாலத்திலே தமிழ் நாடு பல துறைகளிலும் சிறந்து உயர்நிலை பெற் றிருந்தமைக்கு, ஆறநெறி பிறழாது ஆண்டுவந்த மன்னரின் பேரூக்கமும் நாடுநவ்வாழ்வு அடைதற்கு உயிரையும் உவந்தளித்த மக்கள் தம் வீரவாழ்க்கையும். அறிவுடைய ஆன்றோரைப் போற்றிச் சீரிய வாழ்க்கை வாழ்ந்த தமிழர்தம் பண்பாடும். இன்னேரன்ன பலவுமே காரணமாயிருந்தன.
       
        பண்டைக்காலத்தில் முதற்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என முச்சங்கங்கள் வரன் முறையே பாண்டிநாட்டிலிருந்து தமிழை வளர்த்து வந்தன என்பர். அவை வீற்றிருந்த இடங்கள் முறையே தென்மதுரை, கபாடபுரம், மதுரை என்பன. பண்டைக் காலத்திலே பாண்டி நாடு குமரிமுனைக்குத் தெற்கே பல காததூரம் பரந்து கிடந்தது என்று கூறப்படுகிறது. அந்நிலப்பரப்பிலே பாண்டியருடைய தலைநகரமாகிய தென்மதுரை அமைக்கப்பட்டிருந்தது. முன்னொரு காலத்தில் அந் நிலப்பரப்பில் ஒரு பகுதியும் தென்மதுரையும் கடல் கொள்ளப்படவே, அதற்கு வடக்கிலிருந்த நிலப் பரப்பிலே கபாடபுரம் என்னும் நகரைப்பாண்டியர் அமைத்து, அங்கிருந்து தமது நாட்டை ஆண்டு வந்தனர். பின்னொருகாலத்தில் அந்நகரிருந்தநிலப் பரப்பையும் கடல் கொள்ள, அவர்கள் குமரி முனைக்கு வடக்கே சென்று, இப்பொழுதுள்ள மதுரையை அமைத்து அதன்கண் இருந்து ஆட்சி புரிந்து வந்தனர்.
       
        பாண்டியர் தென்மதுரையிலிருந்து ஆட்சி புரிந்த காலத்திலே தமிழை வளர்த்தற்கு அந்நகரில் நிறுவிய தமிழ்ச் சங்கம் முதற்சங்கம் என்றும், அவர்கள் கபாடபுரத்திலிருந்த காலத்தில் நிறுவிய சங்கம் இடைச்சங்கம் என்றும், இப்பொழுதுள்ள மதுரையில் அவர்கள் இருந்த காலத்தில் நிறுவிய சங்கம் கடைச்சங்கம் என்றும் அழைக்கப்பட்டன.
       
        முதற் சங்கத்திலே அகத்தியர், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலிய புலவர்களும் இடைச் சங்கத்திலே தொல்காப்பியர், வள்ளுர்க்காப்பியன்முதலிய புலவர்களும் கடைச் சங்கத்திலே கபிலர், பரணர், நக்கீரர் முதலிய புலவர்களுமிருந்து தமிழை ஆராய்ந்தனரென்பர். முதுநாரை, முதுகுருத. முதலிய நூல்கள் முதற் சங்கத்தாராலும், வெண்டாழி, வியாழமாலையகவல் முதலியன இடைச் சங்கத்தாராலும் இயற்றப்பட்டன வென்று இறைய னாரகப் பொருளுரையிற் குறிக்கப்பட்டுள்ளது.
       
        பண்டைக் காலத்திலே தமிழ் நாட்டிலிருந்து தமிழ் மொழியை வளர்த்து வந்த பேரறிஞர்களுள் அகத்தியர் தலைசிறந்தவரென்றும், அவர் சிவபெரு மானிடத்திலே தமிழைக் கேட்டறிந்தனரென்றும் அவருக்கு இருப்பிடம் பொதிய மலை என்றும் கூறுவர், அவர் இயற்றமிழ், இசைத்தமழ், நாடகத் தமிழ் என்னும் முத்தமிழையும் கற்றுணர்ந்து அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கண நூலொன்றை இயற்றினரென்பர். இலக்கணத்தோடு கூடிய தமிழ் இயற்றமிழ்; அது உரையும் பாட்டும்என இருவகைப்படும். பாட்டு இசையோடும் தாளத்தோடும் கூடிய விடத்து இசைத்தமிழ் எனப்படும். உரையும் பாட்டும் அபிநயத்தோடு கூடிய விடத்துநாடகத்தமிழ் எனப்படும். அகத்தியரிடம் தொல்காப்பியர் அதங்கோட்டாசிரியர், காக்கை பாடினியார் முதலிய மாணாக்கர் பன்னிருவர் கவ்வி கற்றனரென்றும், அவர்கள் அகத்தியத்திற்கு வழி நூலாகத் தொல்காப்பியம், வாய்ப்பியம், அவிநயம்,காக்கைபா டினியம் முதலிய பல நூல்களை இயற்றினரென்றும் கூறுவர், அவர்கள் பன்னிருவரும் ஒருங்கு கூடிப் பன்னிரு படலம் என்ற இலக்கண நூலையும் இயற்றினரென்பர். மேற்கூறய நூல்களுள் தொல் காப்பியமொழிந்த ஏனைய நூல்கள் இக்காலத்திற் கிடைத்ததில்லை பண்டைக்காலத்து நூல்களுள் தொல் காப்பியம், இறையனரகப்பொருள் என்னும் இலக்கண நூல்களும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் இலக்கிய நூல்களுமே இப்பொழுது நமக்குக்கிடைத் துள்ளன பழைய தமிழ் நூல்கள் சிலவற்றிற்குப்பிற் காலத்து உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரை களுள் அழிந்துபோன பண்டை நூல்களிலிருந்து பாக்களும் சூத்திரங்களும் எடுத்தாளப்பட்டுள்ளன . அவற்றை நோக்குமிடத்து, அக்காலத்திலே பல இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் வழக்கில் இருந்தன என்பது புலனாகின்றது. அந்நூல்களுள் அழிந்தொழிந்தன போக, எஞ்சியவையெல்லாம் தேடிப்பெற்று போற்றற்குரியனவே .

சங்கச் செய்யுளும் பொருள் மரபும்

    சங்க காலத்தில் ஐந்நூற்றிற்கு மேற்பட்ட புலவர்கள் தமிழ்நாட்டிற் பற்பல இடங்களிலுமிருந்து பல நூல்களையும் தனிச் செய்யுட்களையும் இயற்றினர். அவற்றுட் பல அழிந்து போயின. தனிச் செய்யுட்களுள் அழிந்தனபோக எஞ்சியவற்றின் அருமை பெருமைகளைப் பிற்காலத்திலிருந்த அரசர்களும் புலவர்களும் அறிந்து ஆங்காங்கு பற்பல இடங்களிற் கிடந்த செய்யுட்களைப் தேடிப்பெற்றுப் பாதுகாத்தாரென எண்ணக்கிடக்கின்றது. பின் ஒரு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் அவ்வாறு பேணிவைக்கப்பட்ட பாக்களுட் சிறந்தனவற்றைத் தெரிந்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களாகத் தொகுத்தனர். அவை மேற்கணக்கு நூல் களென்றும் கூறப்படும், கணக்கு என்ற சொல் இலக்கிய நூல்களைக் குறிக்கும்.
       
        தொகைநூல்கள் எட்டாவன: அகநானூறு, புறநாநூறு நற்றிணைநானுாறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்பன. திருமுருகாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுந ல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை. மலைபடுகடாம் என்னும் நெடும்பாட்டுக்கள் பத்தி்னைக்கொண்ட நூல் பத்துப்பாட்டு எனப்படும். மேற்கூறியவற்றோடு சிலப்பதிகாரம், ம ணிமேகலை, திருக்குறள் முதலியலற்றையும் சங்க காலத்தன என்பர் ஒருசாரார். அவை சங்கமருவிய காலத்தன என்பர் மற்றொருசாரார் ஆராய்ச்சியாளர் எவ்வாறு கூறிணும் எட்டுத்தொகை பத்த்துப்பாட்டு ஆகிய நூல்களிலுள்ள செய்யுட்களுட் பெரும்பாலான சங்க காலத்தவை என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். தொகை நூல்கள் எட்டனுள்ளே புறநாநூறு, பதிற்றுப்பத்து. பரிபாடல் என்னும் இவை மூன்றும் புறத்திணை கூறுவன; ஏனைய ஐந்தும் . அகத்தினை கூறுவன. பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு, பட்டி.னப்பாலை என்பன மூன்றும் அகத்தினைப் பாட்டுக்கள்; ஏனையவை ஏழும் புறத் திணைப் பாட்டுக்கள்.
       
        சங்கச் செய்யுளிற் காணப்படும் பொருள் மரபு அக்காலத்து மக்கள் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்துள்ளது. சங்கப் புலவா்கள் தம் செய்யுளுக்கு மக்கள் வாழ்க்கையைப் பொருளாக அமைத்தபோது, அதனை அகத்திணை புறத்திதிணை என இரண்டாக வகுத்து அமைத்தனர். அகத்திணை யென்பது காதலொழுக்கம், அது புணர்தல், பிரிதல் முதலிய பல பிரிவுகளையுடையது. காதலனு க்கும் காதலிக்கு மிடையேயுள்ள காதலொழுக்கத்தைப் புலவன் கூறும்போது, ஒருவர் பெயனரச் சுட்டாது கூறுவதும் சுட்டிக் கூறுவதும் உண்டு. பாக்களுள் ஒருவர் பெயரைச் சுட்டிக்கூறாப் பாக்களே அகத்திணை க்குரியவை. சுட்டியொருவர் பெயர்கொள்ளும் காதற்பாக்களையும் போர் முதலிய பிற ஒழுக்கங்களைக் கூறும் பாக்களையும் புறத்திணையுள் அடக்கினர். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றினுள் இன்பம் அகத்திணையின் பாற்பட ஏனையபுறத் திணையின் பாற்படும்.சங்ககாலப் புறத்திணைச் செய்யுட்களுள் பலவகைப் புறவொழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன எனினும், அவற்றுள் போரும் வீரமுமே சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன. செய்யுள் வழக்கில் மட்டுமன்றி உலக வழக்கிலும் சங்ககால மக்கள் தூய காதலொழுக்கத்தையும், அறத்தினின் றும் வழுவாத வீரவாழ்க்கையையும் சிறப்பாகப் போற்றி வந்தனரென்பது அக்கால நூல்கள் வாயி லாக அறியக்கிடக்கின்றது. காதலும் போரும் சங்க காலச் செய்யுளிற்போல வேறு எக்காலச் செய்யுளிலும் பாராட்டப்படவில்லை.
       
        உலகவழக்கினை ஆதாரமாகக்கொண்டெழுந்த சங்ககாலச் செய்யுள் வழக்கினை ஒருவாறு அறிந்து கொள்வதற்கு அக்கால மக்கள் வாழ்க்கை முறை யினை நாம் அறிதல் வேண்டும் மலைப்பிரதேசம், காட்டுப்பிரதேசம், நீர்வளமும் நிலவளமுமுள்ள வயற்பிரதேசம், கடற்கரைப்பிரதேசம், வரண்ட நிலப்பிரதேசம் என ஐந்து வகையான இயற்கைப் பிரிவுகளையுடையது தமிழ்நாடு. அவற்றை முறையே குறிஞ்சிநிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம், பாலைநீலம் என வழங்கினர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் தாவரங் கள் முறையே அவ்வந் நிலங்களிற் சிறப்பாகக் காணப்பட்டமையின் அவற்றின் பெயரால் அந் நிலங்களும் பெயர்பெற்றன. பண்டைக் காலத்தில் மக்கட் குழுவினைக் குறித்து நின்ற திணை என்னும் சொல் நாளடைவில் மக்கள் ஒழுக்கத்தைக் குறிப்பதாயிற்று. அதனால் குறிஞ்சித்திணை, முல்லைத்திணை முதலிய சொற்ரொடர்கள் செய்யுள் வழக்கில் அவ் வந் நிலங்களுக்குரிய சிறப்புடைக் காதலொழுக்கங்களைக் குறிக்கலாயின. அவ்வந் நிலங்கலுக்குரிய போரொழுக்கங்கள் மக்கள் போருக்குச் செல்லும் பொழுது சூடிச்சென்ற வெட்சி, வஞ்சி முதலிய பூக்கலாற் பெயர்பெறலாயின .

அன்பினைத்திணை

    புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடலென்னும் ஐந்தும் அன்பினைந்திணை என்று சிறப்பித்துக் கூறப்பட்ட தூய காலகாதழொழுக்கங்களாகவும் இவை உலகவழக்கில் எல்லா நில மக்களிடையேயும் காணப்பட்ட ஒழுக்கங்களெனினும் குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களுள் எந்நில மக்களுக்கு எவ்வொழுக்கம் சிறந்து நின்றதோ அதனை அந்நிலத்துக்கு உரியதாகக் கொண்டு சங்கப் புலவர்கள் செய்யுட்செய்தனர். அதனால் அம்முறை பற்றிக் குறிஞசி நிலத்துப் புணர்த்தலும் பாலைக்குப் பிரிதலும், முர்லைக்கு இருத்தலும், மருதத்துக்கு ஊடலூம், நெய்தலுக்கு இரங்களும் சிறப்பாக உரிய ஒழுக்கங்களாகச் சங்கச் செய்யுட் களில் அமைந்துள்ளன. மேற்கூறியவாறு ஐவகைக் காதழொழுக்கங்ளும் தத்தமக்குரியனவாகக்கூறப் பட்ட நிலங்களில் வாராது, உலகவழக்கு நோக்சிச் சிறுபான்மை மயங்கிவருதலும் உண்டு. அவ்வாறு மயங்கிவருவதாகச் செய்யப்பட்ட செய்யுட்களும் பவவுள. குறிஞ்சி முதலிய நிலங்களுக்குப் புணர்தல் முதலிய ஒழுக்கங்கள் உரியனவென்பது முற்காலத்து இலக்கண நூல்களாலும், அவற்றிற்கு எழுந்த உரைகளாலும் அறியக்கிடக்கின்றது.
       
        இனி, மேற்கூறிய ஐவகை ஒழுக்கங்களும் ஐவகை நிலங்ளுக்கும் உரியனவாகக் கொள்ளப் பட்டவாற்றைநோக்குவே்ம்; மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் தம் உணவுக்கு வேட்டையாடுதல், தினைவிளைத்தல் முதலிய தொழில்களைச் செய்துவந்தனர். தினை விளையுங் காலத்தில் அதனை அந்நிலத்து இளம் பெண்கள் பகற்பொழுதிற் காத்துநிற்க, ஆடவர் வேட்டையாடச் செல்லுதல் வழக்காறாயிருந்தது. வேட்டைமேல் மனங்கொண்டகாளையரும், தினைப் புனங் காத்துநின்ற இளங்கன்னியருக்கும் ஒருவரை யொருவர் தினைப்புனத்துக்கருகிலுள்ள சோலையிற் சுண்டு காதல் கொள்ளுதற்கும், பின்னர் அக்காதற் பயிரை அவர் வளர்த்தற்கும் ஏற்ற பல வசதிகள் குறிஞ்சிநில மக்கள் வாழ்க்கையிற் காணப்பட்டன. அதனால் நம் முன்னோர் போற்றிய காதல் நாடகத்தின் ஆரம்பக் காட்சிக்குப் பொருந்துமிடம் அந்நிலம் என்பதை உணர்ந்து, சங்ககாலப் புலவர் கள் புணர்தல் என்னும் ஒழுக்கத்தைக் குறிஞ்சிநிலத்திற்கு உரியதொரு காதலொழுக்கமாகக் கொண்டனர். அப்புணர்தல் ஒழுக்கம் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், பகற்குறி, இரவுக்குறி எனப்பல திறப்படும்.
       
        தலைவி, தலைவன், தோழி, பாங்கன், செவிலி நற்றாய் முதலிய பாத்திரங்கள் குறிஞ்சித்திணைச் செய்யுட்களில் வருதலுண்டு. தலைவி, தோழிமுதலான கன்னியர்கள் தினைப்புனக் காவற்காலங்களில் அச்சூழலிலே செவிலித் தாயின் பொறுப்பில் விடப்பட்டிருப்பர். அக்காவல் ஒழியும்வரை அக் கன்னியருக்கு அவளே தாயாக விளங்குதலால் அவளைச் செவிலித்தாய் எனக் கூறுதலுண்டு. அக் காலப்பகுதியில் தலைவியிடத்தில் அரும்பும் காத வொழுக்கத்தைத் தோழியறிதலும், அறிந்து காதற்பயிரை வளர்த்தற்குத் துணைபுரிதலும் ;அவ்வொழுக்கம் அம்பாலும் அலருமாகிப் பிறர்க்கும் புலனாகும் காலத்தில் தோழி அதனைச் செவிலித் தாய்க்குத் தெரியச்செய்து, அறத்தொடு நிற்றலும் பிறவும் தினைப்புனக் காவ ற்காலங்களில் நிகழ்வன இவையெல்லாம் அக்காதல் நாடகத்தின் முதலங்மாக அமைவன. தினை அறுவடை செய்ய அக் காவல் ஒழிவதால், தலைவி முதலான அக்கன்னியர்கள் தத்தம் வீட்டிற்குச் சென்று வாழ, தலைவியைச் சந்திக்கும் நோக்கமாகத் தலைவன் பகலில் செல்வது பகற்குறியென்றும், இரவிற் செல்வது இரவுக்குறியென்றும் அழைக்கப்படும். பகழிலாயினும் இரவிலாயினும் தலவைியைத் தலைவன் காண்பதற்கு இயலாவிடத்து அவளை வரைந்துகொள்ளும் தற்பொருட்டு வரைவு கடாவுதலுண்டு. தினைப் புனக் காவலில் தலைவன் தலைவியை முதன்முத லாகச் சந்தித்த இயற்கைப் புணர்ச்சி முதலாக வரைவு கடாவுதலீறாக உள்ளன யாவும் கள வொழுக்கத்தின் பாற்படுவன. வரைவு கடாவி மணந்து கொண்டபின் நிகழ்வனயாவும் கற்பின் பாற்படுவன.
       
        குறிஞ்சி முதலிய செழிப்புள்ள நிலங்களுக்கிடையே பரந்துகிடந்த வரட்சிபொருந்திய பிரதேசம் பாலைநிலமெனப்பட்டது. செழிப்புள்ள அந்நிலங்களைத் தொடுத்து நின்ற வழிகள் பல அக்காலத்திலே பாலை நிலத்தினூடாகச் சென்றன. அவ்வழிகளாற் போன பிரயாணிகள் கொண்டு சென்ற பொருள்களைப் பாலைநிலத்தில் வாழ்ந்த மக்கள் சூறையாடினர். அவ்வாறு ஆறலைத்தலையும் சூறையாடுதலையும் தொழிலாகக் கொண்ட பாலை நிலத்து ஆடவன் அத்தொழிலைச் செய்தற்பொருட்டு இடையிடையே தன் காதலியை விட்டுப்பிரிந்து செல்லுதல் வழக்காறாயிருந்தது. அதனால், பிரித்தலென்னும் காதலொழுக்கம் பாலைநிலத்துக்கு உரியதோர் ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டது. பிரிதவால் வரும் துன்பம் பாலைச் செய்யுட்களில் நன்கு சித் திரிக்கப்பட்டுள்ளது, இன்பச் சுவையினும் துன்பச்சுவையே மக்களுடைய மனதைப் பெரிதும் கவர்கின்றது. துன்பச் சுவையின் சிறப்பு நோக்கிப் போலும் தொகை நூல்களுட் பெரும்பாலான பாலைத்திணைச் செய்யுட்கள் கோக்கப்பட்டுள்ளன. அகநானூற்றுச் செய்யுட்களுள் 200 செய்யுட்கள் பாலைத்திணைச் செய்யுட்கள் என்பது ஈண்டுக் குறிப் பிடத்தக்கது. காதலன் காதலியாகிய இருவருள் ஒருவரையொருவர் விட்டுப்பிரிய முடியாத விடத்து இருவரும் ஒருங்கு செல்வதாகிய உடன்போக்கு என்னும் ஒழுக்கமும் பாலைநிலத்துக்கு உரியதாகும். அதனால், உடன்போக்குப் பாலையெனப்பட்டது.
       
        காடும் காடுசார்ந்த நிலமுமாகிய முல்லைநிலத்தில் வாழ்ந்தோர் ஆயர் எனப்படுவர். அவர் பண்டைக்காலத்தில் பெரும்பாலும் மந்தைமேயத்தற் தொழிலையே செய்து வந்தனர். தம்நிலத்தினையும் மந்தைகளையும் பகைவர்களிடத்திருந்து காத்தற் பொருட்டு தம் நிலத்தின் எல்லைப்புறங்களுக்கு அவா்கள் சென்று பாடிவீடு அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்து பகையினை அடக்கி மீளுதல் வழக்காறாயிருந்தது, வேனிற் பாசறை, கூதிர்ப் பாசறை எனப் பாசறை இருவகைப்படும். அரசன் முதுவேனிற் காலத்திற் பாசறையமைத்துப் போர் புரிந்து கார்காலத் தொடக்கத்தில் மீண்டு வருதலும் கூர்காலத்திற் பாசறையமைத்துப் போர் புரிந்து அக்கால முடிவில் மீண்டு வருதலும் வழக்காறாயிருந்தது.அங்ஙனம் அரசனும் படைத்தலைவர் முதலானோரும் பாசறைக்குச் செல்லும்போது தம் மனைவியரை வீட்டில் விட்டுத் தாம் மீண்டுவரும் காலம் இன்னது எனக் கூறிச்செல்வர். அவ்வாறு பிரிந்த ஆடவர் தாம் மீண்டுவருவதாகக் குறித்த காலம் வருந்துணையும் அவர் மனைவியர் தம்முடைய துன்பத்தை ஆற்றிக்கொண்டுவீட்டில் இருத்தலும் அப்பருவம் வந்தவிடத்தும் அவர் வாராராயின் ஆற்றாமை மீதூரப்பெற்றுத் துன்புறுத்தலும் பிறவும் முல்லைநில ஒழுக்கங்களாகக் கொள்ளப்பட்டன. தலைவன் பாசறையிலிருந்து தன் கடமைகளைச் செய்தலையும், தலைவி வீட்டிலிருந்து தலைவனை நினைத்துத் துன்புறுதலையும் முல்லைப்பாட்டு, நெடு நல்வாடை என்பன சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன.
       
        ‘காரும் மாலையும் முல்லை’ என்பது தொல் காப்பியச் சூத்திரம். வீட்டை விட்டுத் தூரதேசங்களுக்குச் சென்ற ஆடவா் திரும்பி வரும் பொழுது மாலை நேரத்தில் வீடு வந்து சேர்தல் வழக்காறாக இருந்தது. அக்கால மக்களின் வாழ்க்கை நிலையினை ஆராய்ந்து பார்க்கும் போது மாலைநேரத்தில் வீடு வந்து சேர்தல் மிக்க பொருத்தமுடையதாக இருந்தது என்பதை காணலாம். வேனிற் காலத்தில் அமைக்கப்பட்ட பாசறை வேனிற் ற்குதவுவதன்றி உதவாது . ஆகவே வேனிற் பாசறையிவிருந்து பகையினை அடக்கிய முல்லைநில ஆடவர், கார்காலம் வந்ததும் அப்பாசறையிற்றங்கமுடியாத காரணத்தால் கார்காரத் தொடக்கத்தில் வீட்டை நோக்கித் திரும்பி வருதல் இயல்பாகும். அங்ஙனம் மீழ்வோ் கார்காலத்து மாலை நேரத்தில் வீடு வந்து சேர்தல் உலகியலிற் பெருவழக்காயிருந்தமையின், அதனையே முல்லைத்திணைச் செய்யுட்களுக்கும் மர பாகக் கொண்டனர்.
       
        வயலும் வயல்சார்ந்த நிலமுமாகிய மருதநிலம் பிற நிலங்களிலும் வளம் மிக்குடையது. நீர்வளம் பொருந்திய அந்நிலம் சிறு முயற்சிக்கும் பெரும் பயன் அளித்தது. அதனால், உழவுத்தொழிலை மேற் கொண்ட அந்நில மக்கள் செல்வச் சிறப்புடையோ ராய் வாழ்ந்தனர். உணவு தேடுவதிலேயே தம் காலம் முழுவதையும் செலவிட வேண்டிய நிலைமருத நிலமக்களுக்குப் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆகவே அவர் தம் ஓய்வுநேரத்தை பாடல் முதலிய இன்பக் கலைகளை விருத்தி செய்தவிலும் அறிவை வளர்த்தலிலும் செலவிட்டனர். மருதநிலத்து ஆடவர் தாம் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் பகற்காலத்தில் செய்துமுடித்து இராக்காலத்தில் இன்பக்கலை வல்ல பாணரும் பரத்தையரும் வாழுமிடஞ்சென்று அவர் செய்யும் ஆடல் பாடல் முதலியவற்றில் ஈடுபட்டு இன்புற்று வாழ்ந்தனர். அவ்வாறு மருதநிலத்து ஆடவர் இராப்பொழுதிற் பெரும்யாகத்தைப் பரத்தையர் வீட்டிற் கழிப்பதை விரும்பாத அவர் மனைவிய ருக்கு அச்செயல் ஊடல்விளைவிப்பதாயிற்று. அதனால் கூடுதலைக்போன்று காதலருக்கு இசன்பம் தரும் ஊடுதலைமருதநிலத்துக்குரிய காதலொழுக்கமாகக் கொண்டு சங்கப் புலவர் செய்யுட்செய்தனர். பிற் காலங்களில் மருதநிலத்துத் தலைவர்கள் பரத்தையரைக் காதலித்துப் பரத்தையர் வீட்டிற் சில நாட்கள் தங்கியிருத்தல் முதலியன பரத்தையர் ஒழுக்கம் எனப்பட்டன.
       
        வெண்மணற் குன்றுகளையும் உப்பங்கழிகளையுமுடைய கடற்கரைப் பிரதேசமாகிய நெய்தல் * பாணன், பரத்தன் என்பன ஒருபொருட் சொற்கள். பாணன் என்னும் சொல்லுக்குப் பெண்பால் பாடினி; பசத்தன் என்னும் சொல்லுக்குப் பெண்பால் பரத்தை. பிற்காலத்திலே பாடினி, பரத்தன் என்னும் சொற்கள் இரண்டும் வழக்கு போகவே பாணண், பரத்தை என்னும் சொற்கள் பெருவழக்காவிருந்தன. ஆகவே, பரத்தையென்னும் சொல் பாணனுக்கு மனைவி என்னும் பொருளில் வழங்கலாயிற்று. நிலத்தில் மீன்பிடித்தல், உப்புவிளைத்தல் முதலிய வற்றைத்தொழிலாகவுடையபரதவர் வாழ்ந்தனர். மீன்பிடித்தற்குப் படகிலேறிக் காலையிற் சென்ற ஆடவர் மாலைக்கு முன் திரும்பிக் கரைக்கு வாராவிடின் அவர் மனைவியரும் பிறரும் அந்திப்பொழுதில் அவரை நினைத்துத் துன்பமுற்று இரங்குவர். அந்நேரத்திற் சூரியன் படுதல் பறவையினம் தம் சேக்கை நோக்கிக் கூட்டங் கூட்டமாகப் பறத்தல், கடற்கரையிற் புல்மேயும் விலங்கினம் தம் படுக்கையிடம் நோக்கிச் சேறல் முதலிய இயற்கைக் காட்சிகள் இயல்பாகவே மக்களுகு ஒரு சோக உணர்ச்சியைத் தூண்டவல்லன. அக்கடற்கரைப் பிரதேசம் ஆடவரும் இளமங்கையரும் பிறரறியாது ஒருவரை யொருவர் கண்டு தம்முட் காதல்கொள்ளுதற்கு ஏற்ற புன்னை முதலிய மரங்கள் செறிந்த வெண் மணற் குன்றுகளையுடையது. அவற்றின்கண் நாள்தோறும் காதலனைக் கண்டு இன்புறுங் காதலி, ஒரு நாளைக்காயினும் அவனைக் காணாவிடின் துன்புறுவள். அவ்வாறு சில நாட்களாகப் பகல் முழுவதும் காத்துநின்றும் அவனை காணாதவிடத்து அவன் தன்னை விட்டொழிந்தானே என்னும் கவலை அவள் மனத்தை உறுத்துவதால் அவளுக்கு இரங்கல் உண்டாகின்றது. அதனால், இரங்கல் என்னும் அகத்திணையொழுக்கம் நெய்தல் நிலத்திற்கு உரிய தாகக் கொள்ளப்பட்டது.

கைக்கிளை - பொருந்திணை

    மேற்கூறிய அன்பினைந்திணையுள் அடங்காத பிற அகவொழுக்கங்கள் கைக்கிளை, பெருந்திணையென இரண்டாக வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுட் கைக்கிளையென்பது ஒருதலைக்காமம். அது தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடமே தோன்றி விளங்குங் காதல். அதனை மூன்றாக வகுத்துக்கூறுவர். அவற்றுள்முதலாவது, பருவமெய்தாதபேதை யொருத்தியைக் கண்ட ஆடவனொருவன் அவள்மேற் காதல் கொண்டு அவளைப்பற்றிப் பலவாறெல்லாம் சொல்லியின்புறுதல், இரண்டாவது, ஒத்த அன்பினராய ஒருவனும் ஒருத்தியும் ஊழ் வசத்தால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுக்கூடும் கூட்டத்திற்குமுன் தலைவனிடம் பெரும்பாலும் நிகழும் காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என்னும் நான்கு செய்திகளுமாம். மூன்றாவது கொல்லேறு தழுவுதல் முதலியவை காரணமரக நிகழும் மண முறைகளாகும். இவ்வாறு நிகழும் கைக்கிளைப் பகுதிகளுட் பருவமெய்தாத பேதையரிடம் நிகழ்வதைச் சிறப்பித்துக் கூறும் செய்யுட்கள் கலித்தொகையிற் கோரப்பட்டுன்ளன. இயற்கைப் புணர்ச்சிக்குமுன் நிகழும் காட்சி முதலியவை பிற்காலங்களில் எழுந்த கோவைப் பிரபந்தத்திற் சிறப்பாகப்பாராட்டப்பட்டுள்ளன. கொல்லேறுதலுவுதலாகிய ஏறுகோடற் கைகளை முல்லை நிலத்து மக்களாகிய ஆயர் குலத்துள் வழங்கியதாகத் தெரிகின்றது. அதனைச் சிறப்பித்துக் கூறும் செய்யுட்கள் முல்லைக்கலியுட் கோக்கப்பட்டுள்ளன.
       
        பெருந்திணையென்பது பொருந்தாக் காமம். ஒருவன் ஒருத்தியிடம் மிக்க காமத்தனாகி, அவளை அடையப் பெறாது மடலேறுதல், வரைபாய்தல் முதலியவற்றால் தன்னை மாய்த்துக் கொள்ளுதல்முதலியவற்றைப் பொருளாகக் கொண்டு விளங்கும் செய்யுட்கள் பெருந்திணைப்பாற்படுவன . மடலேறு தலைப் பொருளாகக் கொண்ட செய்யுட்கள் குறுந் தொகையுள்ளும் நெய்தற்கலியுள்ளும் தொகுக்கப் பட்டுள்ளன. அச்செய்யுட்களிலே மடலேற்றத்தின் வரலாறு நன்கு விளக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இம்மடலேற்றம் முன்னாளில் நெய்தல் நில மக்களிடையே வழங்கிவந்த தற்கொலைமுறை வகையென்பது தெரிகின்றது. அதற்குப் பனைமடலாற் செய்யப்பட்ட குதிரையாகிய ‘மடல்மா’ ஒரு கருவி யாகக் கொள்ளப்பட்டது. இங்ஙனம்கா தல்காரணமாக மடலூரும் முறை ஆடவர் மட்டும் செய்தற் குரியதன்றிப் பெண்கள் செய்யத்தக்கதன்று என்று பண்டை நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளது.

கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக தில்

என வள்ளுவர் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. பெண்கள் மடலேறுவதாகக் கூறுவது பிற்காலவழக்காகும். அன்பினைந்திணையென்னும் தூய காதலைப் பாடுதல் பெருவழக்காயிருந்த சங்க காலத்தில் கைக்கிளை பெருந்திணை வழக்கு மிக அருகியே காணப்பட்டது என்பதை நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் தொகை நூல்களிற் கோக்கப்பட்டுள்ள செய்யுட்களைக் கொண் டு அறியலாம். சங்ககாலத்தில் ஆரம்பித்த அவ்வழக்கு விருத்தியடையத் தொடங்கிய காலம் சங்கமருவிய காலமாகும். கலித்தொகை சங்கநூலெனக் கொள்ளப்பட்ட போதும். அதன்கணுக்குள் பல செய்யுட்கள் சங்கமருவிய காலத்துக்கு உரியவை என்பதை அவை கூறும் பொருள், பண்பாடு, வாழ்க்கை முறை முதவியவற்றைக் கொண்டும், அச் செய்யுட்களின் மொழிநடை கொண்டும் அறியலாம். அவற்றுட் சில கைக்கிளை பெருந்திணைப் பொருள் கூறு வனவாகவுள்ளன.

புறத்திணை

    புணர்தல் முதலிய துய காதலொழுக்கம் ஐந்தினையும் குறிஞ்சி முதலிய ஐவகை நிலங்களுக்கு உரியனவாக வகுத்த புலவர்கள் மக்களின் போரொழுக்கத்தினையும் வெட்சி, வாகை, வஞ்சி, உழிஞை, தும்பை என ஐந்தாக வகுத்து, முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களுக்குமுரிய புறஒழுக்கங்களாகக் கொண்டனர். ஐவகை நிலங்களின் இயற்கைத் தன்மையினையும், அந்நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையினையும் நன்கு ஆராய்ந்தே இவ்வாறு வகுத்துள்ளனரென்பது தெரிகின்றது. குறிஞ்சிநில மக்கள் பிறநிலத்து மந்தைகளைக் களவிற் கொண்டுபோதல் காரணமாக ஏற்படும் பூசல் வெட்சியெனப்படும் அவ்வாறு குறிஞ்சிநிலத்தோர் நிரைகவரச் செல்லும்போது வெட்சிப்பூவைச் சூடிச்செல்வாராகலின், அப்போர் அப்பூவாற் பெயர் பெற்றது முதலிய பிற போர்களும் அன்ன.
       
        பாலை நிலத்தில் வாழ்ந்தோர் மறவர் எனப்படுவா். அவா் போருக்குச்சென்ற போது வாகைப்பூச்சூடிச் சென்றனராகலின், அவர் நிகழ்த்திய போர் வாகையெனப்பட்டது. அவர் எந்நிலத்திற் சென்று போர் புரிந்த போதும் வெற்றி பெற்றன்றி மீண்டிலராகலின், அவர் சூடிச்சென்ற வாகைப்பூ வெற்றிக்கு ஓர் அறிகுறியாகக் கருதப்பட்டது. அதனால், எத்துறையிலும் வெற்றி பெற்று விளங்குதலைப் பிற்காலத்தோர் வாகை சூடுதலென்பா்.
       
        முல்லை நிலத்து மக்கள் தம் பகைவரை அடக்கு தற்பொருட்டு முல்லைநில எல்லைப்புறங்களுக்குச் சென்று பாடிவீடுடமைத்துத் தங்கியிருந்து நிகழ்த்திய போர் வஞ்சியெனப்பட்டது. அங்ஙனம் அமைத்த பாடிவீடு வேனிற்பாசறை, கூதிர்ப்பாசறை, என இருவகைப்படும். வேனிற்பாசறை முதுவேனிற் காலத்தில் அமைக்கப்பட்டது. இவ்விருவகைப் பாசறைகளும் முறையே முல்லைப்பாட்டு, நெடுநல் வாடை என்னும் பாட்டுக்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
       
        மருதநிலத்துப் போர் உழிஞையாகும். பண்டைக் காலத்தரசர்கள் இயற்கையரண் பொருந்திய இடங்களைத் தெரிந்து அவற்றைத் தம் இருப்பிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலங்களில் அத்தகைய இயற்கையரண்ரகள் உண்டு. மருதநிலத்தில் இயற்கையரண் காண்டல் அரிதாகலின், அந்நிலத்தில் வாழ்ந்த அரசனும் மக்களும் பகைவரிடத்தினின்று தம்மையும் தம் பொருள்களையும் காத்தற்பொருட்டுச் செயற்கையரணிழைத்து அதன்கண் வாழ்ந்துவந்தனர். அவ் வரணைக் கொள்ளக்கருதிய பகைவர் அதனை முற்றி நிற்க, அது சாரணமாக அரணகத்துள்ள படைக்கும் அதன் புறத்திலுள்ள படைக்குமிடையே மூண்ட பூசல் உழிஞை எனப்பட்டது.
       
        நெய்தல் நிலத்தில் நடைபெற்ற போரொழுக்கம் தும்பையெனப்பட்டது. காடும் மலையும் கழனியுமின்றி மணல்பரந்த வெளிநிலமே நெய்தலாதலின் ஆங்குள்ள அரசனோடு போர்புரியக் கருதிய பகையரசன் அந் நிலத்திற் களம் குறித்துப் போர் நிகழ்த்துதல் வழக்காறாயிருந்தது. தும்பையாவது வேந்தனொருவன் தன் வவியை உலகோர் புகழ் தலையே பொருளாகக் கருதிப் பகை வேந்தன் மேற்செல்ல, அப்பகை வேந்தனும் அப்புகழையே கருதி அவனை ஒருகளத் தெதிர்த்து அவன் வலியினை அழித்தலாம். இத்தும்பைத்திணை படையாளரதுஅரிய பெரிய வீரச்செயல்களை விளக்குவதாகும். பலரும் வீரன் ஒருவனே அணுகிப் போர்செய்ய அஞ்சி, விலகிநின்று அம்பால் எய்யவும் வேல் கொண்டு எறியவும், அவன் குற்றுயிரான நிலையிலும் துளங்காது நின்று போர் செய்தலுண்டு. வாளால் தலை அறுபட்ட நிலையிலும் அவனுடம்பு நிலத்துச் சாயாது வீரச்செயல் காட்டி நின்று ஆடும் சிறப்பினைச் சங்கச்செய்யுட்கள் அழகாகச் சித்திரித்துக் காட்டுகின்றன.
       
        மேற்கூறிய பேரொழுக்கங்கள் ஐந்தினையும் விட, வேறு பல புறவொழுக்கங்களையும் பொருளாகக் கொண்டு சங்கப் புலவர் செய்யுட் செய்துள்ளனர். அவற்றுட் பெரும்பாலன காஞ்சித்திணை பாடாண்டிணை என்பவற்றுளடங்கும். அவையிரண்டும் கைக்கிளை, பெருந்திணையென்னும் அகத்திணைப் பிரிவுகளுக்குப் புறமாகும். ‘யாக்கை, செல்வம், இளமை முதலிய பல நெறியானும் நிலையாத உலகியற்கையை’ எடுத்துக் கூறுதல் காஞ்சித்திணையின் பாற்படும். இங்ஙனம் நிலையாமைக் குறிப்பு ஏதுவாக நிகழும் காஞ்சி ஆண்பாற்காஞ்சி, பெண்பாற் காஞ்சி என இரண்டாக வகுத்துக் கூறப்படும். போரிலே புண்பட்ட வீர னொருவன், அப்புண்ணைக் ஆற்றிக்கொண்டு வாழும் உலக வாழ்க்கையை வேண்டாது, அப்புண்ணைக் கிழித்துக்கொண்டு இறந்துபோதல், போர் நிகழ்ந்த அன்றிரவில் அப்போர்க்களத்தே புண்பட்டுக்கிடந்த வீரனெருவனை நாய், நரி முதலியன தீண்டாவண்ணம் பிறர் அவனைக் காத்தல் அங்ஙனங் கிடந்த வீரனொருவனை அவன் மனைவி காவல்செய்து நிற்றல் முதலியன ஆண்பாற் காஞ்சியுள் அடங்கும். அவையாவும் ஆடவரது வீரத்தைச் சிறப்பித்து நிற்றலால், ஆண்பாற் காஞ்சியெனப்பட்டன. மனைவி யொருத்தி தன் கணவன் போர்க்களத்தே மடிந்து கிடக்க, அவனைத் தழுவிக் கொண்டு அழுதல், உடனுயிர் நீத்தல், உடன்கட்டையேறுதல் முதலியன பெண்பாற் களஞ்சியாகும். காஞ்சித்திணைச் செய்யுட்கள் யாவும் பண்டைத் தமிழர் வீரப்பண்பை விளக்கிக் காட்டுகின்றன.
       
        சங்ககாலத்தில் எழுந்த புறத்திணைச் செய்யுட்களுட்பெரும்பாலானவை பாடாண்டிணையின் பாற்படுவன. பாடாண் என்பது பாடப்படும் ஆண்மகனது ஒழுகலாறு என்பர். அரசர் முதலானோரின் போற்றத்தகுந்த குணம், செயல் முதலியவற்றைப் புகழ்ந்துகூறும் செய்யுட்களும், அவர்களுக்கு அற வுரை முதலியன கூறி வாழ்த்தும் செய்யுட்களும் பிறவும் பாடண்டிணைச் செய்யுட்களாகும். கடவுள் வாழ்த்து, அறுமுறை வாழ்த்து, *புறநிலை வாழ்த்து, முதலியனவும் இதன்பாற்படும்.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

    எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் என்னும் நூல் களிலே தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்கள் யாவும் சங்ககாலச்செய்யுட்கள் என்றே கருதப் படுகின்றன. அவற்றுட் சில, பிற்காலத்தன என்று கூறுவாரும் உளர். அந்நூல்களைத் தொகுத்தோர் புறத்திணை கூறும் பாக்களுள் நானூறு பாக்களைத் தெரிந்து புறநானுாறு என்னும் நூலாகவும், நூறுபாக்களைத் தெரிந்து பதிற்றுப்பத்தென்னும்த நூலாகவும் தொகுத்துள்ளனர். இந்நூள்களிலுள்ள பாக்களுட் பல அகவற்பாவாயும் சிலவஞ்சிப்பாவாயுமுள்ளன அக்காலத்திலே தமிழ் நாட்டை ஆண்ட அரசா்களின் வீரச்செயல், கொடைச்சிறப்பு, ஆட்சித்திறன் முதலியவற்றையும், சங்ககால மக்க்களுடைய அறவொழுக்கம், வாழ்க்கைச் சிறப்பு, போர்முறைகள் முதலியவற்றையும், சங்கத்துச்சான்றோரெனப் பராட்ட ப்பட்ட அக்காலத்துப் புலவர்களுடைய சிறப்புடைக் குணங்களையும், புறநானூற்றுச் செய்யுட்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த முடியுடை வேந்தர்கள், குறு நிலமன்னர்கள் கடையெழுவள்ளல்கள் முதலானோருடைய சரித்திரங்களை நாம் அறிந்து கொள்ளுதற்கும் இந்நூற் செய்யுட்கள் பயன்படுகின்றன. இந் நூலிலுள்ள செய்யுட்கள் யாவும் கவிச்சுவை நிரம்பியவை உன்ளதை உள்ளவாறே கூறும் இயல்பினை யுனடயவை. கருதிய பொருள் விரைவிற் புலப்படுவதற்கு வேண்டிய சொற்களை அமைத்துப் புலவர்கள் செய்யுட் செய்தமையால் அவையாவும்பொருட்டெளிவுடையனவாக விளங்குகின்றன. வெற்றுச் சொற்களைக் காண்டல் அரிது. அதனால் அவை சொற் செறிவுடையனவாகவும் விளங்குகின்றன.
       
        புறநானூற்றுச் செய்யுட்கட் பெரும்பாலானவை அக்காலத்தில் வாழ்ந்த முடியுடை வேந்தர், குறுநில மன்னர் வள்ளல்கள் முதலானோரின் வீரக்குறிப்பு கொடைத்திறம், அறநெறி வழுவா ஆட்சிமுறை முதலியவற்றைப் புனைந்து கூறுகின்றன. அவற்றுட் பல, அம்மன்ன்ர் முதலானோரின் முன்னிலையில் நின்று அவர்களின் முகக்குறிப்பு, தோற்றப்பொலிவு முதலியவற்றை நேரிலே பார்த்துப் பாடியவையாகக் காணப்படுகின்றன. அக்காலத்து மன்னர்கள் புலவர்ளளைப் பெரிதும்மதித்து, அவர்களாற் அவர்களால் பாடப்பெறுதல் பெரும் பேறெனக் கருதி வாழ்ந்தனர். அதனால் அப்புலவர்களும் அரசர்களின் வீரச்செயல்களையும் கொடைச்சிறப்பினையும்தக்கவாறு பாராட்டிப் பாடினர். அங்ஙனம் பாராட்டிக் கூறும் செய்யுட்களுள் அவர்களின் வீரப்பண்பை விளக்கிக் கூறுவனவே பெரும்பாலானவை. அவற்றிற்கு ஓர் உதாரணம் ஔவையார் அதியமானைப் பாடிய ஒரு பாட்டு. அதியமான் நெடுமானஞ்சி என்னும் சிற்றரசனுக்கு ஒரு தவ மகன் பிறந்த போது, அவ்வரசன் போர்க்களத்தி னின்று போர்க்கோலத்தோடு சென்று தன்மகனைப் பார்த்ததை ஔவையார் கண்டு பாடியது அப் பாட்டு, அது வருமாறு:

கையது வேலே காலன புனைகழன்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
வட்கர் போகிய வளரிளம் போந்தை
யுச்சிக் கொண்ட வூசி வெண்டோட்டு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
வின்னு மாறாது சிவனே யன்னே
வுய்ந்தன ரல்லரிவ னுடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண்டன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே.

செறிவும் தெளிவும் பொருந்திய இப்பாட்டிலே அதியமானுடைய தோற்றப் பொலிவும் வீரப் பண்பும் அழகாகச் சித்திரிக்கப்படுகின்றன. கையது வேல், காலன புனைகழல், மெய்யது வியர், மிடற் றது பசும்புண் என இவ்வாறு சிறுச்சிறு வாக்கியங்களில் அவனுடைய தோற்றப்பொலிவு சித்திரிக்கப்படும் வகை கண்டு இன்புறற்பாலது, அவன் தன் சிறுவனைப் பார்த்தற்பொருட்டுப் போர்க் களத்தினின்று வீடு சென்றான் என்பதை இப்பாட்டு எமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. புதல்வதனைப் பார்த்து மகிழவேண்டிய இடத்தும் அவன் சினப் ஆறவில்லை. அச்சினத்தின் தன்மை ‘வரியம் பொருத வயக்களிறு போல’ என்னும் உவமை யினால் விளக்கப்படுகிறது. உணர்ச்சியைப் புலப்படுத்தச் சங்கப் புலவர்கள் கையாண்ட உவமை களுக்கு இது ஒரு தக்க உதாரணமாகும்.
       
        பதிற்றுப்பத்து என்னும் நூல் சேரமன்னர் பதின்மர்மீது பத்துப்பத்துப் பாக்களாகப் பாடப் பட்ட நூறு செய்யுட்களைக் கொண்டுள்ளது. இந் நூலிலுள்ள ஒவ்வொரு பத்தும் தனித்தனியே ஒவ்வொரு புலவராற் பாடப்பெற்று ஒவ்வொரு சேர அரசரைப் பாராட்டுகின்றது. சேர அரசர்களைப் பற்றிய செய்யுட்கள் புறநானூற்றிலும் உளவெனினும், அரசன் ஒருவனைக் குறித்துத் தொடர்ச்சியாகப் பாடப்பட்ட பத்துச் செய்யுட்கள் இந்நூலிலேதான் உண்டு. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பாட்டின் பெயர் என்பன, குறிக்கப்பட்டுள்ளன. அதை நோக்குமிடத்து இயற்றமிழுக்கு உரிய அகவற்பாவாலும் வஞ்சிப்பாவாலும் ஆகிய செய்யுட்கள் பிற்காலத் தில் இசையுடன் பாடப்பட்டனவெனக் கொள்ளுதற்கு இடமுண்டு. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும், அவ்வப் பத்தின் பாட்டுடைத் தலைவன் பெயர், செயல், ஆண்ட காலம் என்பனவற்றையும் செய்யுட்களைப் பாடிய புலவன் பெயர். அவன் பெற்ற பரிசில் முதலியவற்றையும் குறிக்கும் பதிகம் உண்டு. அவை ஆசிரியப்பாவாகத் தொடங்கிக் கட்டுரை நடையாக முடிகின்றன. அவை சோழப் பெரு மன்னர் காலத்தில் எழுந்த சாசனங்களிலுள்ளமெய்க்கீர்த்திகளை ஓரளவிற்கு ஓத்திருக்கின்றன. இந்நூலில் முதற் பத்தும் பத்தாம் பத்தும் இக் காலத்திற் கிடைத்தில.
       
        இந்நூல் சங்கமருவிய காலத்தது என்பர் சிலர். இந்நூலைப் பாடிய புலவர்கள். பாடப்பட்ட அரசர்கள் பாடிப்பெற்ற பரிசில் முதவலியவற்றைக் குறிக்கும் பதிகங்கள் நம்பத்தகுந்தனவல்ல என்பது அவா் கருத்தாகும். இந்நூலிறுள்ளசெய்யுட்களைப் பாடிய புலவர்களுள் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் என்னும் நால்வரும் சம காலத்தவர் என்பது சங்கச் செய்யுட்களால் அறியக்கிடக்கின்றது . வெவ்வேறு காலப்பகுதிகளில் ஒப்புயர்வற்று விளங்கிய சேரவேந்தர் நால்வரைச் சம காலத்தில் வாழ்ந்த சங்கப் புலவர் நால்வரும் பாடினர் என்பது நம்பத்தக்கதொன்றன்று, இத் நூவிற் காணப்படும் வரலாற்றுக் குறிப்புக்கள் சில ஒன்றற்கொன்று மாறுபட்டனவாகக் காணப்படுகின்றன. இந்நூலிலுள்ள செய்யுட்களைப் புறநானூற்றுச் செய்யுட்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது. இவை செயற்கைத் தன்மை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. ஒரு காட்சியை நேரே கண்டு உடனே பாடியதாகவுள்ள செய்யுட்கள் மிக அருகியே இந்நூலிற் காணப்படுகின்றன. வேந்தர்கள் நிகழ்த்திய போர்களைக் கூறும் செய்யுட்கள் இந்நூவிற் சிலவுள. அவற்றைப் புறநானூற்றிலுள்ள போர்க்களத்தைக் கூறும் செய்யுட்களோடு ஒருங்கு வைத்துப் படிக்கும்போது இந்நூற் செய்யுட்களின் செயற்கைத் தன்மையைத் தெளிவாகக் காணலாம். கபிலபரணர் முதலான சங்கப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களிற் காணப்படாத பல சொற்களும் சொற்ரொடர்களும் இந்நூலிற் பல விடங்களிலும் வந்துள்ளன. அதனாலும் இதுசங்ககாலத்துக்குரிய நூலன்று என்பதைத் தெளியலாம்.
       
        அகத்திணை கூறும் பாக்களுள், நூலொன்றுக்கு நானூறு பாக்களாக ஆயிரத்து இருநூறு பாக்களை நற்றிணை. குறுந்தொகை, அகநானூறு என்னும் நூல்களிலே தொகுத்துள்ளனர். அவை யாவும் அகவற்பாவாயுள்ளன. குறுந்தொகைச்செய்பயுட்கள் நாலடியைச் சிற்றெல்லையாகவும், எட்டடியைப் பேரெல்லையாகவுமுடையன, நற்றிணைச் செய்யுட்கள் ஒன்பதடியைச் சிற்றெல்லையாகவும், பன்னீரடியைப் பேரெல்லையாகவுமுடையன. அகநானூற்றுச் செய்யுட்கள் பதின்மூன்றடியைச் சிற்றெல்லையாகவும் முப்பத்தோரடியைப் பேரெல்லையாகவும் முடையன. இவை மூன்றனுள்ளும் அகநானூற்றச் செய்யுட்கள் ஒழுங்குமுறை ஒன்றினைத் தழுவியே கோக்கப்பட்டுள்ளன. அவற்றுள்
       
        1. 3. 5. 7. 9. 11 என்னும் எண் பெற்ற செய்யுட்கள் பாலைத் திணையாகவும்,
        2. 8. 12. 18 என்னும் எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும்,
        4. 14. 24 என்னும் எண் பெற்றவை முல்லையாகவும்,
        6. 16. 26 என்னும் எண் பெற்றவை மருதமாகவும்,
        10.20.30 என்னும் எண் பெற்றவை நெய்தலாகவும் கோக்கப்பட்டுள்ளன. ஏனைய நூல்களிரண்டும் யாதாயினும் ஓா் ஒழுங்கு முறை பற்றித் தொகுக்கப்படவில்லை. ஆனால், அவை அகநானுற்றிற்கு முன்னேயே கோக்கப்பட்டனவாதல் வேண்டும்.
       
        நற்றிணை குறுந்தொகை என்னும் இருதொகை நூல்களுள் முதலிற் கோக்கப்பட்டது நற்றினைஎன்பர் சிலர். குறுந்தொகை என்பர் வேறுசிலர். நற்றிணை முதலிற் கோக்கப்பட்டது எனக் கொள்ளுதற்கு அந்நூலுக்கு இடப்பட்டுள்ள பெயரே தக்க சான்றாகும். குறுந்தொகை என்னும் சொற்ரொடர், அடியளவாற் குறுகிய செய்யுட்களைக் கொண்டுள்ள தொகை , எனப் பொருள்படுமாகலின், இந்நூல் தொகுக்கப்படுதற்கு முன்னரே அடியளவால் நீண்டசெய்யுட்களைக் கொண்டுள்ள ஒரு தொகை நூல் இருந்திருத்தல் வேண்டுமெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். அந்நூலை நோக்கியேகுறுகிய செய்யுட்களையுடைய தொகைக் குறுந் தொகை எனப் பெயரிடப்பட்டிருத்தல் வேண்டும். குறுந்தொகை முதலிற் கோக்கப்பட்டதாயின், அதைத்தொகைக்குக் குறுகிய என்னும் அடை புணர்த்தப் பட வேண்டியதில்லை. இனி, நற்றினை என்னும் சொற்ரொடரிலூள்ள ‘நல்’ என்னும் அடை, அந் நூலிலுள்ள செய்யுட்களின் அடியளவு நோக்காது,அவற்றின் சிறப்பு நோக்கிப் புணர்த்தப்பட்டதாதல் வேண்டும் நற்றிணைக்குமுன் ஒரு தொகைநூல் இருந்திருப்பின் அந்நூலிலுள்ள செய்யுட்களின் அடியளவு நோக்கி இந்நூலிற்குக் குறுகிய நெடிய என்னும் அடைகளுள் யாதேனும் ஒன்று புணர்த் தப்பட்ட பெயரே இடப்பட்டிருக்கும். அவ்வாறன்றி நல் என்னும் அடை. புணர்த்தப்பட்டு நற்றிணை என்றிருப்பதால் இந்நூலே முதலிற் கோக்கப்பட்டதாகும்.
       
        நற்றிணை குறுந்தொகை, அகநானூறு ஆகிய தொகை நூல்கள் மூன்றிலுமிருந்து முறையே எடுக்கப்பட்ட மூன்று செய்யுட்கள் வருமாறு:

பாலை
       
        இது வரைவு நீட ஆற்றளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.
       
        நக்கீரர் பாடியது
       
        தோளே தொடிநெகிழ்ந் தனவே நுதலே
பிரிவர் மலரிற் பசப்பூர்ந் தன்றே
கண்ணுந் தண்பனி வைகின வன்னே
தெளிந்தன மன்ற தேயரென் னுயிரென
ஆழல் வாழி தோழி நீநின்
தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டுபடு புதுமலர் உண்டுறைத் தரீஇய
பெருமட மகளிர் முன்கைச் சிறுகோற்
பொலந்தொடி போல மின்னிக் கணங்கொ
ளின்னிசை முரசி னிரங்கி மன்ன
ரெயிலூர் பஃறேல் போலச்
சென்மழை தவழுமவர் நன்மலை நாட்டே.
       
        மருதம்
       
        இது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.
       
        பரணா் பாடியது
       
        எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுத்தலை போலப் புல்லென்
றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மெளவ னாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
       
        குறிஞ்சி
       
        இது இரவுக்குறி வந்த தலைமகன் சிறப்புறத் தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
       
        கபிலர் பாடியது
       
        மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றே ரன்ன கொடுமையோ டின்றி
யாமங் கொள்வரிற் ககனைஇக் காமங்
கடலினு கரைபொழி யும்மே
எவன்கொல் வழி தோழி மயங்கி
இன்ன மாகவு நன்னர் நெஞ்சம்
என்னெடும் நின்னெடுஞ் சூழாது கைம்மிக்கு
இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கான நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் ,தலையி நீர்வார்பு
இடடருங் கண்ண படுகுழி யியவின்
இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாஙஙகிய சென்ற தின்றே.

அகத்திணை ஐந்தனுக்கும் தனித்தனி நூறு செய்யுட்களாக ஐந்நூறு செய்யுட்களைக் கொண்டது ஐங்குறுநூறு. இதன் கணுள்ள செய்யுட்கள் யாவும் மூன்றடியைச் சிற்றெல்லையாகவும் ஆறடி யைப் பேரெல்லையாகவுமுடையன. ஒவ்வொரு திணைக்குமுரிய நூறு பாக்களும் பப்பத்துப் பாக்கள் கொண்ட பத்துப் பிரிவுகளையுடையன. பத்துச் செய்யுட்களைக்கொண்ட ஒவ்வொரு பிரிவும் பெரும் பாலும், ஒவ்வொரு துறை குறித்து நிற்றலையும் ஒவ்வொரு பெயர் பெற்று விளங்குதலையும் காணலாம், இந்நூலிலுள்ள பத்துக்களுள் மருதத்தினை கூறும் பத்துக்கள் முதலில் அமைக்கப்பட்டுள்ளன. அவை வேட்கைப் பத்து, வேழப் பத்து, கள்வன்பத்து. தோழிக்குரைத்த பத்து முதலியன, வேட்கைப் பத்து என்பது வேட்கையைப்பற்றிக் கூறிய பத்து என விரியும் அதன்கண் தோழி தலைவனுக்குத்தனது வேட்கையையும் தலைவியின் வேட்கையையும் கூறுகின்றாள். வேழப்பத்து என்பது வேழம் என்னும் சொல்லை அமைத்துப் பாடிய பத்துச்செய்யுட்கள் என விரியும். அப்பத்திலுள்ள ஒவ்வொரு செய்யுளிலும் வேழம் என்னும் சொல் அமைந்துள்ளது தலைவி தலைமகனது கொடுமையைப் பற்றித் தன் தோழிக்கு உரைத்தனால் ஒன்று தோழிக்குரைத்த பத்து என்ற பெயரைப் பெற்றுள்ளது. இவ்வாறே இந்நூலிலுள்ள பத்துக்கள் யாவும்கருப்பொருள் கூற்று முதலியன கொண்டு அடமைக்கப்பெற்ற பெயர்களையுடையனவாக உள்ளன
       
        இந்நூலிலேஅன்பினைந்திணைகள் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லையென முறையே அமைக்கப்பட்டள்ளன மருதத்திணையில் முதலாவதாக உள்ளவேட்கைப் பத்திற் காணப்படும் பத்துச் செய்யுட்களிலும் ‘வாழி யாதன் வாழி யவினி’ என்னும் அடி முதலில் வருதலால் அக்காலத்தில் வாழ்ந்த சேர வேந்தனாகிய ஆதனவினியை வாழ்த்தும் நோக்கமாக இந்நூல் தொகுக்கப்பற்டிருத்தல் வேண்டும் எனக்கொள்ளுதல் தகும் இந்நூலிலுள்ள பல செய்யுட்கள் முதல்,கரு, உரி என்னும் மூன்றினையும் சுருங்கிய அடிகளில் நயம்பட அமைத்துக் கூறுகின்றன தொல்காப்பியத்துக்கு உரைகண்ட இளம் பூரணர் முதலானோர் பற்பல இடங்களில் இந்நூற் செய்யுட்களை மேற்கோளாகக் காட்டியுள்ளனர். இந் நூலின் சிறப்பிற்கு அதுவே தக்க சான்றாகும். புறநானூறு, நற்றிணை முதலிய நூல்களிலுள்ள செய்யுட்களுக்கும் இந்நூலிலுள்ள செய்யுட்களக்குமிடையே பொருளமைப்பிலும் மொழிநடையிலும் பிறவற்றிலும் வேறுபாடு ,காணப்படலால் இந்நூல் கபிலபரண்ர் காலத்துக்குப் பிற்பட்டது எனச்சிலர் கருதுகின்றனர்.
       
        இந்நூலிலுள்ள பத்துக்களுக்கு உதாரணமாக இளவேனிற் பத்து மேலே தரப்படுகின்றது. அது தலைவன் பிரிந்துழிக் குறித்த இளவேனிற் பருவம் வரக்கண்ட தலைமகள் இரங்கிக் கூறிய பத்துச் செய்யுட்களை உடையது.

அவரோ வாரார் தான்வந் தன்றே
குயிற்பெடை இன்குர லகவ
அயிர்க்கேழ் நுண்ணற னுடங்கும்பொழுதே
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
சுரும்புகளித் தாலு மிருஞ்சினைக்
கருங்கா னூணவங் கமழும் பொழுதே,
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
திணிநிலைக் கோங்கம் பயந்த
அணிமிகு கொழுமுகை யுடையும் பொழுதே
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
நறும்பூங் குரவம் பயந்த
செய்யாப் பாவை கொய்யும் பொழுதே
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
புதுப்பூ வதிரல் தாஅய்க்
கதுப்பற லணியுங் காமா் பொழுதே
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
அஞ்சினைப் பாதிரி யலர்ந்தெனச்
செங்கணிருங்குயி லறையும் பொழுதெ
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
எழிற்றைகை யிளமுலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம்
மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
பொரிகான் மாஞ்சினை புதைய
எரிகா லிளந்தளி ரீனும் பொழுதே
       
        அவரோ வாரார் தான்வந் தன்றே
வேம்பி னெண்பூ வுறைப்பத்
தேம்படு கிளவியவர் தெளிக்கும் பொழுதே

    கலித்தொகை பரிபாடல் என்னும் தொகை நூல்கள் பாவாற் பெயர் பெற்றவை கலி, பரி பாட்டு ஆகிய இருவகைப் பாவும் முற்காலத்திலே இசையோடு கூட்டிப்பாடப்பட்டவை. அப்பாகவை யிரண்டும் அகத்திணைக்குச் சிறந்தவை என்பது.

நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கங்
கலியே பரிபாட் டாயிரு பாங்கினு
முரிய தாகு மென்னார் புலவர்

என்னுந் தொல்காப்பியச்சூத்திரத்றாற் பெறப்படுகின்றது. நூற்றைம்பது பாக்களைக் கொண்டுள்ள கலித்தொகை, திணைக்கொரு பிரிவாகக் குறிஞ்சி முதலிய ஐந்து திணைக்கும் ஐந்து பிரிவுகளையுடையது தலைவன், தலைவி, தோழி முதலியோர் ஒருவரோடு ஒருவா் உரையாடும் பான்மையில் இந் நூலிலுள்ள பாக்களுட் பல அமைந்துள்ளன. இவ்வாறு அவை நாடகப்போக்கில் அமைந்திருத்தலும், சொற்சுவை பொருட்சுவையுடையனவாகத் திகழ்தலும் இசையொடு கூட்டிப் பாடப்படும் பண்பினையுடையன வாயிருத்தலுமாகிய இச்சிறப்புக்களைக் கொண்டுள்ளனவாகலின், அவைபடிப்போர்க்குப் பெரிதும் இன்பந்தரவல்லன. அதனால், இந்நூலைக் கற்றறிந்தார் போற்றுங் கலி எனப் பெரியோர்கள் பாராட்டினர் இந்நூலிலுள்ள ஐந்து பிரிவுகளையும் பாலை பாடிய பெருங்கடுங்கோ முதலான சங்கப்புலவர்கள் ஐவர் பாடினர் என்பர். கலித்தொகைப் பாக்களில் மொழிநடை, போக்கு, பொருளமைதி, அவை குறிக்கும், மரபு, பண்பாட்டுநிலை, அவற்றின்கண் வந்துள்ள வடமொழிக்கதைகள் குறிப்புக்கள் முதலியவற்றை நோக்குமிடத்து இந்நூலிலுள்ள பாக்களுட் பெரும்பாலானவை, சங்க காலத்திற்கும் பின்னே தோன்றியவை எனச் சிலர் கருதுகின்றனர் ஆகவே பிற்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்களுள் ஒருவராகிய நல்லந்துவனார் தம்முடைய காலத்திற்கு முன் எழுந்த கலிப்பாக்களுள்பாக்களைத் தெரிந்து ஒரு நூலாகக் கோத்தார் என்பர்.
       
        கலிப்பா பலவகைப்படும். அவற்றுட்சில கலித் தொகையில் வந்துள்ளன. இந்நூலிலுள்ள கலிப்பா வகைகளுள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புக்களையுடை.ய ஒத்தாழிசைக் கலியே பெரும்பான்மையாக உள்ளது. தரவு என்பது முதலிலே தரப்படுவது. தாழிசையென்பது இடைநிலைப் பாட்டு. அது தரவின்பின் ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கிவரம் ஆங்கு என்னும் தனிச்சொல் தாழிசைக்குப்பின் மூன்றாம் உறுப்பாக வரும். சுரிதகம் என்பது தாழிசைப் பொருளினை முடிபு காட்டி ஈற்றில் நிற்கும். இவ்வாறு நான்கு உறுப்புக்களையுங் கொண்ட கலிப்பாவுக்கு ஓர் உதாரணம் வருவாறு

துணைபுணர்ந் தெழுதருந் தூநிற வலம்புரி
இணைதிரள் மருப்பாக எறிவழி பாகனா
அயில்திணி நெடுங்கத வமைத்தடைத் தணிகொண்ட
எயிலிடு களிறேபோ லிடுமணல் நெடுங்கோட்டைப்
பயில்திரை நடுநன்னாட் பாய்ந்துறூஉந் துறைவகேள்
       
        கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் .
தொடிநெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால் மற்றுநின்
குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ
       
        ஆய்மலர்ப் புன்னைக்கீழ் அணிநலந் தோற்றாழைத்
நோய்மலி நிலையளாத் துறப்பாயால் மற்றுநின்
வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ
       
        திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை
இகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயால் மற்றுநின்
புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ
எனவாங்கு
       
        சொல்லக் கேட்டனை யாயின் வல்லே
அணிகிளர் நெடுவரை யலைக்குநின் அகலத்து
மணிகிளர் ஆரந் தாரொடு துயல்வர
உயங்ன ளுயிர்க்குமென் தோழிக்கு
இயங்பகொலி நெடுந்திண்டேர் கடவுமதி விரைந்தே

    இது வரையாது வந்தொழுகுந் தலைவனைத் தோழி நெருங்கி வரைவுகடாயது.
       
        பரிபாடல் என்ற தொகைநூல் பரிபாட்டு என்னும்பாவாலாகிய பாட்டுக்கள் இருபத்து நான்கினைக் கொண்டுள்ளது, முன்னொருகாலத்தில் எழுபது பாட்டுக்களையுடடையதாக இருந்தது இப்பாட்டுக்களுள் திருமாலுக்கு உரியவை ஏழு முருகக் கடவுளுக்கு உரியவை எட்டு வையைக்கு உரியவை ஒன்பது தொல்காப்பியர் காலத்திலே பரிபாட்டு அகத்திணைக்கு உரியதாக விளங்கிற்று. பிற்காலத்தில் அப்பாவகை தெய்வ வாழ்த்து முதலிய புறப்பொருள் பற்றியும் வந்தது என்பதற்கு இந்நூலிலுள்ள பாட்டுக்களே சான்றாக விளங்குகின்றன அவை தழுவிவந்த போதும் அவற்றின்கண் ஆங்காங்கு அகத்திணைப்பொருள் விரவியிருத்தலைக் காணலாம்
       
        நெடும் பாட்டுக்கள் பத்தினைக்கொண்ட நூல் பத்துப்பாட்டு எனப்படும். அப்பாட்டுக்கள் பலஅகவற்பாவாயுள்ளன சில அகவலோடு வஞ்சி கலந்த பாட்டுக்கள். பத்துப்பாட்டிலுள்ள பாக்கள் யாவும் நூறு அடிக்கு மேற்பட்டவை. செய்யுள் வடிவிலுள்ள யாவும் பொதுவாகப் பாட்டு என்ற பெயரைப் பெறக்கூடியனவாயினும், பத்துப்பாட்டி லுள்ளவற்றையே சிறப்பாகப் பாட்டெனப்பாராட்டியுள்ளனர். அவை யுாவும் கூறுதற்கு எடுத்துக்கொண்ட பொருளை வேண்டிய அளவிற்குத் திறம்படக் கூறுகின்றன, அதனால், அவை பாட்டு எனப் பெயர் பெற்றனபோலும், அவற்றுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு. பட்டினப்பாலை என் பன மூன்றும் அகத்திணையின்பாற்படுவன. புறத்திணைக்குரிய ஏனையபாட்டுக்களுள் ஐந்து ஆற்றுப்படைச் செய்யுட்கள். அவையாவன திருமுருற்காற்றுப்படை, பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை,மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை என்பன.! ஆற்றுப்படை என்பது வழிப்படுத்தல் என்னும் பொருளையுடையது. கூத்தர்,பாணர் முதலியோர் ஒருவள்ளலிடஞ் சென்று பெருஞ்செல்வத்தைப் பெற்று மீண்டுவரும் வழியில் வறுமைப்பிணியால் வாடிய இரவலரைக் காணின் தரம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த இரவலர்க்கு எடுத்துக்கூறி, அவ்வள்ளலிடம் அவர்களும் சென்று பொருளைப் பெறுமாறு தாம் சென்ற வழியைக்கூறி அவ்வழியாற் போகச் செய்தல், ஆற்றுப்படை எனப்படும். வீடுபேறு கருதி நின்றரை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்தியதாகக் கூறப்படும் திருமுருகாற்றுப்படை இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் போன்று ஏனைய பாட்டுக்களுக்கு முதலில் வைக்கப்பட்டுள்ளது. பொருளமைப்பிலும் மொழி நடையிலும் திருமுருகாற்றுப்படைக்கும் ஏனைய, ஆற்றுப்படைகளுக்குமிடையே வேற்றுமை இருத்தலால், அதனைச் சங்கப்புலவர் நக்கீரர் பாட வில்லை என்றும் அது பிற்காலத்தது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகி்ன்றனர். நக்கீரர் பாடிய நெடுநல்வாடை இருத்தலாகிய அகத்திணை ஒழுக்கம் கூறுகின்றதெனினும், புலவர் தாம் வாழ்ந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியனைத் தலைனாகவும் பாண்டிமாதேவியைத் தலைவியாகவும் வைத்துப்பாடியுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்கான குறிப்புக்கள் அப்பாட்டிற் காணப்படலால், அது புறத்திணைப்பாட்டு என்றே கொள்ளப்படுகின்றது. சுட்டியொருவர் பெயர் கொள்ளாக் காதலொழுக்கமே அகத்திணைக்கு உரியது. ஏனைக் காதலொழுக்கம் புறத்திணைக்கு உரியதாகலின் புறநானூற்றிலேகாதலொழுக்கம் கூறும் செய்யுட்கள் சில தொகுக்கப்பட்டள்ளனபத்துப்பாட்டுக்களுள்ளும் அடியளவால் மிக நீண்டது மதுரைக்காஞ்சியாகும். காஞ்சித்திணை என்பது வீடுபேறு நிமித்தமாகப், பல் வேறு நிலமையைச் சான்றோர் கூறும் குறிப்பினது. அப்பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் செவியறிவுறுத்தற்கு மங்குடிமருதனார் பாடியது.

சங்கப் புலவரும் சங்க இலக்கியப்பண்பும்

    அறிவொழுக்கங்களிற் சிறந்த சங்ககாலப் புலவா்களைச் சான்ரோரென்றலும், அவர் பாடிய செய்யுளைச் சான்றோர் செய்யுளென்றலும் தமிழ் வழக்கு. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உளப்பாங்குள்ள அப்புலவர்கள் மன்னர்க்குரிய பெருமதிப்பை மக்கள்பாற் பெற்றனர். மக்களிடத்திற் பேரன்பும், அரசரை அறநெறியிற் செலுத்தும் அருமுயற்சியும், அஞ்சாநெஞ்சத்தோடு எவ்விடத்தும் உண்மையை எடுததுக்கூறும் மனத்திண்மையும் உடையவர். வாழ்த்து மொழியும் பாராட்டும் உரியவர்க்கன்றிப் பிறர்க்கு வழங்காத் தீரமும் உறுதியுமுடைய பெருந்தகையாளர். இதனாலன்றேஅவர்களின் அன்பைப் பெறுதல் பெரும்பேறெனக் கொண்டு அக்காலத்து அரசர்களும் வேண்டுவன புரிந்து அவர்களைச் சிறப்பித்தனர். புலவர் பாடும் புகழினும் பெரிதாக வேறெதனையும் மதியாத அரசர் அப்புலவர்களின் உணர்ச்சியைத் தூண்டக் கூடிய முறையில் வாழ்ந்து அவர்களாற் பாமாலை சூட்டப்பெற்றனர், வறுமையிற் கிடந்து வருந்திய போதும், அப்புலவர்கள் புகழுக்குரியவொருவனை யன்றிப் பிறரைப்பாடாது அவன் கொடுப்பது கூழாயினும் அதனை உவந்தேற்று வறுமையைப் போக்கி வாழ்ந்தனர், துன்பம் வந்துற்றபோதிலும் துளங்குதலறியாத உள்ளம்படைத்த அப்புலவர்கள் பூசனை புரிந்து தம்மைப் போற்றிய மன்னருக்கு உயிரையும் உவந்தளித்தனர். அரசனின் சீற்றத்துக்கு இரையாகி அழிந்து கிடந்த இடங்களைக் கண்டு அவர்கள் இரங்கினர். நாட்டின் நலன் கருதிப் பகையரசர்களைச் சந்துசெய்து, .தமிழ்நாட்டிலே ஒற்றுமையை நிலவச்செய்து, தமிழர்தம் பண்பாடடினை வளர்த்ததோடு பிறர் புகழ்பாடியும் தம்புகழ் நாட்டிய சங்க காலப் புலவா்களின் வாழ்க்கை உள்ளுந்தோறும் உவகையளிக்குந் தன்மையது, தமக்கு நெல்லிக்கனியீந்த அதிகமான் உயிர்நீத்தபோது ஒளனவயார் நெஞ்சுருகிப் பாடிய தும் பாரி இறந்தபின் உயிர்வாழ விரும்பாது கபிலர் வடக்இருந்ததும் குமணன் நாடிழந்துகாட்டில் வதியுநாளில் பெருந்தலைச்சாத்தனார் சென்றிரப்ப, அவன் தன் தலை கொய்தற்கு வாளைக் கொடுத்ததும் கோப்பெருஞ்சோழன் உயிர்துறக்க அத்துயரைப் பொறுக்க முடியாத பிசிராந்தையார் தம்முயிர் துறந்ததுமாகிய நிகழ்ச்சிகள் பல அக் காலத்தப் புலவர்களுக்கும் அரசர்களுக்குமிடையே யிருந்த அன்பின் பெருக்கை எடுத்துக் காட்டுகின்றன கபிலர் பரணர் முதலிய சங்ககாலப் புலவர்கள் ‘தாரகை நடுவண் தண்மதி’ போன்றுவிளங்கித் தமிழ்ப் புலவர்கள் வாழ்க்கைக்குத் தனிப்பெருமை கொடுத்த வரலாறு புறநானூாறு முதலிய தொகை நூலகளிற் காணப்படுகின்றது. அவற்றாலன்றிவேறு எவ்கையாலும். அவா்தம் பண்பட்ட வாழ்க்கையைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாது,
       
        என்றுமிறவாத இன்பத் தமிழ்ப் பாக்களைச் சங்கப் புலவர்கள் எட்ப்படிப் பாடினர் என்பதைஆராய்வோமாயின் அப்புலவர்களின் பெருமையை நாம் ஒருவாறு கண்டு தெளியலாம். ஆழ்ந்த கருத்துக்களை இனிய மொழிநடையில் தெளிவாகப் பாடுதற்கு அவர்கள் கல்வியறிவு மட்டுமன்றிச் சீரிய ஒழுக்கமுங் காரணமாயிற்று. அறிவொழுக்கங் களால் மேம்பப்ட்டு விளங்கிய அப்புலவர்களின் உள்ளம் ஒளியுடையதாக விளங்கிற்று, உள்ளத்தில் ஔியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்னும் உண்மையைக் காட்டுவனவாகச் சங்கச் செய்யுட்கள் யாவும் விளங்குகின்றன. அதனாலன்றே அவர்கள். சான்றோர் என்று அழைக்கப்பட்டனர். சான்றோர் என்னுஞ் சொல் சால்பு என்னுஞ் சொல்லை அடிப்படையாக் கொண்டுள்ளது எல்லா நற் குணங்களும் நிரம்பப் பெறுதல் சால்புடைமை எனப்படும். அங்ஙனம் நற்குணங்கள் யாவும் அமையப்பெற்ற சான்றோர் பெருந்தொகையின ராக அக்காலத்தில் வாழ்ந்தமையால், சங்ககாலத் தமிழகம் சிறப்புற்று விளங்கிற்றெனலாம். நாட்டின் நலன்கருதி அவர்கள் எவ்வெவ் வழிகளிற் சென்று உழைத்தனர் என்பதையும் அரசன் முன்னிலையில் அஞ்சாது நின்று அறவழி காட்டி நாட்டை நல்வழிப்படுத்திய வகையினையும் புறநானூற்றுச் செய்யுட்கள் தெளிவாகக் காட்டுகின்றன. புகழ்ந்துபாடினும் இகழ்ந்து பாடினும் பாடிய பொருளைப் பயந்தேவிடுத் பெற்றிவாய்ந்த உண்மைக் கவிதைகள் அவர்கள் நாவில்எழுந்தன. அதனால் அவர்கள் செந்நாப் புலவர் என்றும் திருந்துமொழிப் புலவர் என்றும்சங்ககாலத்திலேயேபாராட்டப்பட்டனர். ஆகவே. இத்தகைய தூய உள்ளமும் அறிவும் படைத்தஅருளாளரின் நட்பை அக்காலத்தரசர்கள் பெரிதும் விரும்பியதோடு, அவர்களாற் புகழ்ந்து பாடப்படுதலைப் பெரும் பேறெனக் கருதி அப் புலவர்கள் உள்ளம் உவப்பன செய்து அவர்களைத் தழுவிக்கொண்டணர்.
       
        ஐஞ்ணூற்றுக்கு மேற்பட்ட புலவர்கள் சங்க காலத்திலிருந்து செய்யுட்செய்திருக்கின்றார்களென்பது அக்கால நூல்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது குறுகிய அக்காலப் பகுதியுட் பெருந்தொகையினராகப் புலவர்கள் தோன்றியதுபோல வேறெக்காலப் பகுதியிலும் தமிழ்நாட்டிற்றோன்றவில்லை ஒருகாலப்பரப்பில் அவ்வாறு பெருந்தொகை யினராய்ப் புலவர்கள் தோன்றுதற்கான காரணங்களை நோக்குவாம்.
       
        புலவனுடைய உள்ளமானது குழந்தையினுடைய உள்ளத்தை ஒருவாறு ஒத்திருக்கின்றது.இயற்சகைக் காட்சிகழளக்கண்டு குதூகலங்கொள்ளுதல்சொல்லையும் அதுகுறிக்கும்பொருள், உணர்ச்சி முதலியவற்றையும் அவதானித்தல் கற்பனையுலகிற் சஞ்சரித்தல் ஆகியன குழந்தையிடத்திரும் புலவனிடத்திலும் காணப்படும் சிறப்பியல்புகள், குழந்தைப்பருவம்ஒருவனைவிட்டு நீங்கவே அப்பருவத் திற்குரிய சில சிறப்பியல்புகளும் அவனை விட்டுப் பெரும்பாலும் அகன்றுவிடுகின்றன. அவ்வாறு அது நீங்கினும், கற்பனையுலகிற் சஞ்சரித்தல் முதலிய சிறப்பியல்புகள் அவனை விட்டு நீங்காது வளர்ந்து வருமாயின் அவன் சிறந்த புலவனாவான் என்பதிற் சந்தேகமில்லை குழந்தைப்பருவத்திலுள்ள ஒருசமுதாயத்திலும் குழந்தைக்குரிய மேற்கூறிய சிறப்பியல்புகள் காணப்படும் அதனால் ஒரு சமுதாயம் குழந்தைப்பருவத்திலிருக்கும் போது அதன்கண்ணுள்ள மக்கட் பலா் உணர்ச்சியைப் புலப்படுத்தும் பாக்களைப் பாடக்கூடிய ஆற்றலுடையோராயிருத்தலும் சமுதாயம் வளர்ச்சியுறத் தொடங்க அத்தகைய புலமையுடையோர் குனறந்துபோதலும் இலக்கியலரலாற்று நூல்கள் கூறும் உண்மையாம் இனாலேயே ஒரு மொழியிற் செய்யுளிலக்கியம் முதலிற்றேன்ற அதனைத்தொடர்ந்து உரைநடை இலக்கியம் தோன்றுகின்றது. தமிழ் மக்களின் பண்பாட்டு வளர்ச்சியை நோக்கும்போது சங்ககாலத்துச் சமுதாயம் கற்பசனையுகிற் சஞ்சரித்தல் முதலிய சிறப்புடைப் பண்புகளையுயையதாய் விளங்கினமையால் அச்சமுதாயத்தின் கண்பல சிறந்த புலவர்கள் தோன்றியதில் வியப்பொன்றுமில்லை
       
        அகத்தும், புறத்தும் முரண்பாடில்லாத சங்க கால மக்களின் வாழ்க்கை முறையும் அக்காலப் பாவளத்திற்குச் சாதகமாயிருந்தது. ஒரு புலவனிடத்திற் காணப்படும் சிறப்பியல்புகளுள், தெளிந்ந உள்ளமும்ஒன்று, விருப்பு வெறுப்புக்களாலேற்படும் இன்பத்துன்பங்கள் ஒருவன் மனத்தைத் தாக்கிக் கொண்டிருக்குமாயின், எத்துணை நூலறிவிருந்த போதிலும் அவனுள்ளத்தில் உண்மையறிவும் உயர்ந்தகவிதையும் உதிக்கமாட்டா நிம்மதியில்லா மனத்துக்கு நிறைவுத்தன்மை எங்கிருந்து வருதல் கூடும்? அத்தகைய உள்ளததிற் சிறந்த கவிதை உருப்பெறமாட்டாது. மனவமைதியைத் தரவல்ல வாழ்க்கைமுறையும் உளப்பாங்கும் ஒருவனிடத்தில் அமையாவிடின் அவன் உண்மைப் புலமைக்கு உரிய னாகான், சங்ககாலப் புலவர் உள்ளத்தில் தெளிவும் நிறைவுத் தன்மையும் குடிகொண்டிருந்தமைக்கு அவர்தம் செய்யுட்களே சான்றாகும்.
       
        சங்ககாலச் செய்யுட்களின் சொற்பொருட் போக்கிற்கும் பிற்காலச் செய்யுட்களின் போக்கிற் கும் பலவகையில் வேற்றுமை உண்டு. சங்ககாலத்திலிருந்த புலநெறிவழக்கு, பொருள்மரபு முதலியவற்றுட் சில பிற்காலத்தில் வழக்கொழிந்து. போயின. அங்ஙனம் பழைய முறைகள் கைவிடப்பட சில புதியமுறைகள் பிற்காலத்திற்றோன்றலாயின. மக்களின் நடையுடை பாவனைககள் காலத்திற்குக் காலம் வேறுபடுவது போலவே செய்யுள் வழக்கு முதலியனவும் வேறுபடுதல் இயல்பாகும். ஒரு காலத்தி லிருந்த வழக்கு வேறொருகாலத்தில் ஏன் கைவிடப் படுகிறது என்பதையும் புதியதொரு வழக்குத் தோன்றுதற்கான காரணங்கள் எவை என்பதையும் நாம் அறிந்தாலன்றி, தமிழிலக்கிய வரலாற்றைச் செவ்வனே அறிந்துகொள்ளல் இயலாது சங்ககாலம், ஏறக்குறைய 300ஆண்டுகளைக்கொண்ட காலப் பகுதி என்பதை மேலே குறித்தோம். அக்காலப் பகுதியிலேயே செய்யுள்மரபுசிறிது சிறிதாக மாற்ற முற்றுச்சென்றிருப்பதை நாம் அக்காலச் செய்யுட்களிற் காணலாம். அக்காலப் பகுதியில் மக்கள் வாழ்க்கை மிக விரைவாக, முன்னேறிற்றென நூல்களால் அறியக்கிடக்கின்றது. வாழ்க்கையிலுண்டான மாற்றங்களுக்கு இணங்கச் செய்யுள் மரபும் மாற்றமடைந்துள்ளது. அம்மரபில் ஏற்பட்ட மாற்றங்களையெல்லாம் இச்சிறு நூலின் கண் குறித்தல் இயலாது எனினும் அவற்றுள் ஒன்றை மட்டும் ஈண்டுக் குறித்து அப்பாற் செல்வாம்.
       
        ஐவகை, நிலங்களுட் பாலைநிலம் வரண்ட பிர தேசமாதலாலும் அந்நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் அந்நிலத்திலிருந்து பெற முடியாமையாலும். அந் நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறிஞ்சி முதலிய ஏனைய நிலங்களிற் சென்றுவாழ நேர்ந்தது. அங்ஙனம் வாழ்ந்த காலத்தில்ஐவகை நிலங்களுக்கும் உரியனவாக வழக்கிலிருந்த ஐவகை யொழுக்கங்களும் பாலை ஒழித்த நால்வகை நிலங்களுக்கும் உரியனவாகக் கொள்ளப்பட்டன. ஆகவே பிரித்தல் உடன் போக்கு என்னும் பாலையொழுக்கங்கள் குறிஞ்சி முதலிய ஏனைநிலங்களுக்குஉரியவாயின, பாலை நிலத்தில் மக்கள் வாழ்ந்த காலத்திற் பிரிவு பொருள்வயிற்பிரிவாக இருந்தது, அது பிற்காலத்தில் ஓதற்பிரிவு, பகைவயிற்பிரிவு, பொருள்வயிற்பிரிவு என மக்கள் வாழ்க்கைக்கு இணங்கப் பலவகைப்படலாயிற்று. இனி, சங்ககாலத் தொடக்கத்தில் அன்பினைந்திணையாகிய ஐவகைக் காதலொழுக்கங்களே வழக்கிலிருந்தன. அக்காலமுடிவிற் கைக்கிளை, பெருந்திணையாகிய இரண்டு, ஒழுக்கங்கள் சேர்ந்து அகத்திணை ஒழுக்கங்கள் ஏழாயினமைக்கு மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங் களே காரணமாகும்.
       
        சங்கச் செய்யுடகளிற் காணப்படும் தனிப் பண்புகள் சிலவுள, இன்ன பொருளை இன்னவாறு அமைத்தல் வேண்டும் என்னும் மரபு பிறழாமல் அக்காலப் புலவர்கள் செய்யுட்களை இயற்றினர். மக்களுடைய ஒழுக்கங்களும் மனோபாவங்களுந்தான் செய்யுட்களுக்குப் பொருளாக அமைதல் வேண்டும் என்பது அக்கால மரபாகும். காதல், வீரம் முதலிய பண்புகளைச் சங்கப்புலவர்கள் சித்திரித்துக்காட்டும் வகை வியக்கத்தக்கது. அவர்கள் இயற்கையின் பல் வகைக் கோலங்களையும் சித்திரித்துக்காட்டுகின்றன ரெனினும், இயற்கை வருணனை சங்கச் செய்யுளில் முதலிடம் பெறவில்லை மக்களுடைய ஒழுக்கந்தான் முதலிடம் பெற்று விளங்குகின்றது. அதனைக் கூறுமிடத்து, அதற்கிணங்க இயற்கைக் காட்சிகள் சித்திரிக்கப்படுகின்றன. இயற்கையோடு நெருங்கிய தொடர்புடையது அக்கால மக்களின் வாழ்க்கை. பூக்களாலும் தழை கொடிகளாலும் தம்மை அலங்கரித்துக்கொள்வதில் அவர் பெருவிருப்புடை.யர், அக்கால அரசருட் சிலர் மயிலுக்கு போர்வையும் முல்லைக்குத் தேரும் ஈந்த செய்திகள் இயற்கைக் காட்சிகளில் அக்கால மக்களுக்கிருந்த ஈடுபாட்டினை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. எனினும் இயற்கையை மட்டுமே சிந்திரித்துக் காட்டும் செய்யுட்கள் எழுதற்கு அக்கால மரபு இடம் அளிக்கவில்லை அகத்திணை ஒழுக்கங்களைக் கூறும் செய்யுட்களில் ஆங்காங்கு இயற்கைக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக வருணிக்கற்பட்டிருத்தலைக் காணலாம். அவற்றின்கண் ஐந்திணை வகையாகிய முதல் கரு உரிப் பொருள்கள் விசேடமாக அமைந்திருக்கின்றன இவற்றுள் உரிப்பொருளே அகத்திணைச் செய்யுளுக்கு உயிராக உள்ளது இதனை அடுத்து மா, மரம், புள் முதலிய கருப்பொருள்கள் சிறந்தனவாகக் கருதப்பட்டன. கரு, உரியாகிய இருவகைப் பொருள்களோடு., நிலம், பொழுது ஆகிய முதற் பொருளும் ஒரு செய்யுளில் அமையுமாயின், அச் செய்யுள் விளக்கமுற்றுத் திகழுமெனக் கொள்ளப் பட்டது அவ்வாறு முதற் பொருளும் கருப்பொருளும் சிறப்பாக அமைந்துள்ள செய்யுட்களிலே, இயற்கை வருணனைகளைக் காணலாம். புறத்திணைச் செய்யுட்களிலும் இயற்கை வருணனைகள் உள வெனினும் அச்செய்யுட்களில் முதலிடம் பெறுவனமக்களுடைய புறவொழுக்கமாகிய போர் முதலியனவே.
       
        சங்கப்புலவர்களுக்கு இயற்கையின் கண் இருந்த ஈடுபாட்டினை அவா்கள் புனைந்துகூறிய உவமைகளாலும் பிறவற்றாலும் அறிந்து கொள்ளலாம் வேறுபட்ட இரு பொருள்களுக்குக் கிடையேவுள்ளஒப்புமையைக் கண்டு அதனை உள்ளுந்தோறும் உவகையளிக்கும் வகையில் எடுத்துக் காட்டும் ஆற்றல். உள்ளத்தெளிவும் நுண்னுணர்வுமுடைய புலவரிடத்தன்றிப் பிறரிடத்திற் காணப்படமாட்டாது. உவமைகளைக் கையாளும் வகையிலிருந்து ஒருபுலவனுடைய கற்பனை சக்தியையும்பிற ஆற்றல் களையும் ஒருவாறு அறிந்துகொள்ளலாம். சங்கப் புலவர்கள் இயற்கைக் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும். ஏந்த அளவிற்குக் கூர்ந்து அவதானித்தார்கள் என்பதை அவர்கள் அமைத்த உவமைகள்வாயிலாக நாம் அறியலாம். வேறுபட்ட பொருள்கள் ஒன்றற் கொன்று உவமையாக வருதலைக் காணும்போது எமக்கு ஒரு வியப்புணர்ச்சி தோன்றுகிறது. அவை புலவனுடைய உள்ளக்கருத்தையும் உணர்ச்சியை யும் வெளிப்படுத்தும் வகையினை நோக்கும்போது சங்கப் புலவனுடைய ஆற்றலைக்கண்டு இன்புறமுடிகின்றது சங்கச் செய்யுட்களிற் சாதாரண உவமைகள் மட்டுமன்றி உள்ளுறை உவமங்களுங் காணப்படுகின்றன சாதாரண உவமைகள் வருமிடத்து, உவமையும் பொருளும் வெளிப்பட்டு நிற்றலைக்காணலாம். உள்ளுறையுவமம் வருமிடத்து உவமை வெளிப்பட்டு நிற்கப் பொருள் தொக்கு வரும். வெளிப்படையாகக் கூறவிரும்பாத ஒன்றைக்குறிப்பாகப் புலப்படுத்தற் பொருட்டு உள்ளுறையுவமம் கையாளப்படுகிறது. தோழி முதலியோர் கூற்றாக வரும் செய்யுட்களில் உள்ளுறையுவமம் பெரும் பாலும் வருதலுண்டு. தோழிதலைவனுடைய ஒழுக லாற்றினை வெளிப்படையாகக், கடிந்து கூற விரும் பாதவிடத்து அவனுடைய நாட்டிற் காணப்படும் இயற்கைக் காட்சிகளைப் புனைந்து கூறும் வாயிலாகத் தன் கருத்தை வெளிப்படுத்துதல் உண்டு. இத்தகையஉள்ளுறை யுவமங்களும் குறிப்பாகப் பொருளை யுணர்த்தும் இறைச்சி முதலியனவும் சங்கப் புலவர் களாற் சிறப்பாகக் கையாளப்பட்டன.
       
        சங்ககால அகத்திணைச் செய்யுள் வழக்கினைப் புலனெறிவழக்கு என்றும் கூறுதலுண்டு அது நாடக வழக்கினையும் உலகியல் வழக்கினையும் ஆதாரமாகக் கொண்டு எழுந்தது என்று தொல்காப்பியா் கூறு கின்றனா் அகத்திணைப் பொருளைக் கூறும்பொழுது அதற்கு வேண்டிய காலம், இடம் சூழல் முதலியவற்றை வகுத்துக்கொண்டு அதனை ஒரு செய்யுளிற் கூறுதலேவழக்காறாகும். அங்ஙனம் கூறும்பொழுதும் புலவன் தன் கூற்றாகக் கூறுதல் மரபன்று தலைவன் தலைவி, தோழி முதலானோருள் ஒருவர் கூற ஒருவா் கேட்பதாகக் கூறுதலே மரபாகும் புறத்திணைப் பொருளைக்கூறும் பொழுது புலவன் தன் கூறாகக் கூறுதலுண்டு, இனி ஒரு பொருளை செய்யுளில் அமைத்துக் கூறுதலே சங்ககாலத்திற் பெருவழக்காக இருந்தது. தொடர்ச்சியாக வரும் பல செய்யுட்களில் ,ஒருபொருளைக் கூறுதல் பிற்காலவழக்காகும் இனி சங்கச் செய்யுளின் தனிச்சிறப்பிற்குக்காரணமாக இருந்தவற்றுள் அக்கால மொழிநிலையும் ஒன்றாகும், ஆரிபம் முதலிய பிறமொழிகளிலுள்ள சொற்களுட் பெரும்பாலன பல எழுத்துக்களாலானவை, தமிழ்மொழியிலுள்ள சொற்களோ சில எழுத்துக்களானவை. அவற்றுள்ளும் சங்க காலத்தில் வழங்கிய தமிழ்ச் சொற்கள் மூன்று நான்கு எழுத்துக்களை இகவாதன சொற்கள் பலஒன்றோடொன்று தொடர்ந்து செல்லும்பொழுது உருபு முதலியன விரியாது தொக்கு நிற்பதே சங்க காலத்திற் பெருவழக்காயிருந்தது. இவ்வாறு சில எழுத்துக்களாலான சொற்கள் ஒன்றோடுஒன்று தொடா்ந்து வரும்பொழுது உருபுகள் விரியாது வரின் சொ!ற்செறிவுஏற்படுகின்றது உதாரணமாக,

“செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்”
       
        “இமிழ்குரன் முரச மூன்றுட னாலுந்
தமிழ் கெழு கூடற் றண்கோல் வேந்து”

என்னும் இவ்வடிகளில் வேற்றுமை யுருபுகளும் பிறவும் தொக்குவருதல் காண்க, பிற்காலப் பகுதி களிற் புலவா்கள் பல சொற்றொடர்களால் விரித்துரைத்த பொருளையெல்லாம் அக்காலத்துப் புலவர்கள். தொகைகளை அமைத்தும், அடைகள் புணர்த்தியும் பெயர்ச்சொற்களுக்கு விகுதிகூட்டி வினையாக்கியும் இன்னோரன்ன பல முறைகளாற் சுருங்கிய மொழியில் விரிந்த பொருளை அமைத்துச் செய்தனர். சொற் சுருக்கமும் பொருட்செறிவுமுடைய சொற்ரொடர்களும் வினைத்தொகை தொகைகளும் பிறவும் சங்ககால வழக்கில் மிகுதியாகப் பயின்று வந்தமையாலே சங்கத்தமிழ் சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை விளக்கும் திறமுடையதாகி விளங்கிற்று அக்காலச் செய்யுட்கள் பிற்காலக்ககுதிகளில் எழுந்த செய்யுட்களிலும் சிறந்தனவாகக் காணப்படுவதற்கு அக்கால மொழி நிலையினையும் ஒரு காரணமாகக் கூறலாம்