நோக்கம்
தமிழ் எண்ணிமத் திட்டமானது அச்சு வடிவிலுள்ள தமிழ் ஆவணங்களை எண்ணிம வடிவில் மாற்றுவதற்கான ஒரு கணிமத்தினை (மென்பொருளினை) உருவாக்குவதனையும் தமிழிலுள்ள சிறப்பு மிக்க நூல்களின் தொகுப்பு ஒன்றினை இணையத்தினூடு வெளியிடுவதனையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்பாடாகும்.
தமிழ் ஆவணங்களினை எண்ணிமப் படுத்தும் முயற்சியானது பல நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. “நூலகம்” நிறுவகம், “மதுரை திட்டம்" என்பன
இச்செயற்பாட்டில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்றன.
தமிழ் எண்ணிம முயற்சிகளின் பிரதான வழிமுறையாக ஆவணங்கள் வருடிகள் மூலம் படங்களாக மாற்றப்பட்டு சேமிக்கபடுகின்றன.
இம் முறைமூலம் சேமிக்கப்படும் ஆவணங்களில் சொற்களினையோ சொற்தொடர்களினையோ தேடுதல், மொழிபெயர்த்தல் மற்றும் மொழியியல் ஆய்வுகளினை மேற்கொள்ள முடியாது.
தமிழ் எண்ணிமத் திட்டமானது தமிழ் எழுத்துருக்களினை அடையாளம்கண்டு தேடல், மொழிபெயர்த்தல் மற்றும் மொழியியல் ஆராய்ச்சிகளிற்கு பயன்படும் வகையில் எழுத்துக்களின் எண்ணிம வடிவில் ஆவணங்களினை சேமிக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த வகையில் இத் திட்டமானது தமிழ் ஆவணங்களினை எண்ணிமப்படுத்தும் முயற்சிகளிற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தின் பிரதான பங்காளர்களாக கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கணனி விஞ்ஞானத்துறையும் இணைந்துள்ளனர். இக்ரா இத்திட்டத்திற்கான நிதிப்பங்காளராக விளங்குகிறது.
இலங்கையின் இரு அந்தங்களில் அமைந்துள்ளன யாழ்ப்பாணத்தினையும் கொழும்பினையும் இயங்குமிடமாகக் கொண்ட பல வகையில் வேறுபட்ட இரு அமைபுக்களினால் ஒரு திட்டத்தினை முன்னெடுத்து வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான வழிவகைகளினை ஆராய்வதும் இத்திட்டத்தின் ஒரு உப நோக்கமாக அமைந்துள்ளது.
திட்ட செயற்பாடுகள்
ஆர்வலர் அமைப்பு - தமிழ் எண்ணிமத் திட்டத்தின் பெறுபேறுகள் பொதுமக்களினை அடையச் செய்வதற்கான முதலாவதும் முக்கியமானதுமான செயற்பாடாக பல்வேறு வகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்காற்றிவருபவர்களை கொண்டதான ஆர்வலர் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. திட்டத்தின் காலம் மற்றும் செயற்படுத்தல் நெருக்கடிகளினை கருத்தில் கொண்டு யாழ் குடாநாட்டுப் பிரதேசத்திலிருந்து ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அச்சுப் பயன்பாட்டுத் தமிழ் எழுத்துருக்களினை அடையாளம் காணுதல் - தமிழ் எண்ணிம மாற்றி கணிமம் (மென்பொருள் )உருவாக்கத்திற்கு அச்சுப் பிரதி ஆவணங்களிலுள்ள தமிழ் எழுத்துருக்களினை அடையாளம்கண்டு வரையறுத்தல் ஒரு முக்கிய செயற்பாடாகும். அடையாளம் காணப்பட்ட எழுத்துருக்களாவன:
திட்டத்தில் உள்ளடக்கப்படும் ஆவணங்களின் தெரிவு - திட்டத்தின் கால வரையறையினை கருத்தில் கொண்டு தமிழ் மொழியில் அச்சுப் பிரதிகளாக ஆவணங்களிலிருந்து மிகவும் பொருத்தமான ஒரு தொகுதியினை அடையாளம் காணல் திட்டத்தின் ஒரு செயற்பாடாகும். ஆவணங்களின் தெரிவு ஆர்வலர் அமைப்பின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.
நூல்களினை பிரதிமை விம்பங்களாக சேமித்தல் - ஆவணங்களினை எண்ணிமப்படுத்தும் செயற்பாட்டின் முதற்படியாக தேர்வு செய்யப்பட்டன.
நூல்களினை பிரதிமை விம்பங்களாக (நிழல் படங்களாக) வருடி மற்றும் ஒளிப்படக் கருவிகளினால் மாற்றி சேமிக்கப்பட்டன. நூலகம் நிறுவகம் இச் செயற்பாட்டிற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளது. நூலகத்திட்டத் தொகுப்பிலுள்ள எண்ணிம ஆவணங்களினை வழங்கியும் ஏனைய ஆவணங்களினை தமது உபகரணங்கள் மற்றும் வல்லுனர்களின் உதவியுடன் நிழல் படங்களாக மாற்றியும் திட்ட நடவடிக்கைகளினை முன்னெடுக்க உதவிபுரிந்துள்ளனர்.
தமிழ் எண்ணிம மாற்றி கணிம உருவாக்கம் - இக் கணிமத்தினை (மென்பொருளினை) கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரி யாழ்ப்பாண பல்கலைக்கழக கணனி விஞ்ஞானத்துறையின் உதவியுடன் உருவாக்கியுள்ளது. இக் கணிமத்திற்கு "அகரமறியி" எனப்பெயரிடப்பட்டுள்ளது.
விம்பங்களாக சேமித்த ஆவணங்களினை எண்ணிமப்படுத்துதல் - நூலக நிறுவனத்தின் பங்களிப்புடன் முதற்கட்டமாக ஒருதொகுதி நூல்கள் நிழல் படங்களாக சேமிக்கப்பட்டுள்ளன.
விம்பங்களினை எண்ணிம வடிவிற்கு மாற்றி பிழை திருத்துதல் - முதற்கட்டமாக தெரிவு செய்யபட்ட நூல்களிலிருந்து ஆயிரம் பக்கங்கள் எண்ணிம வடிவிற்கு மாற்றி பிழை திருத்தப்பட்டுள்ளன.
எண்ணிம வடிவிற்கு மாற்றப்பட்ட ஆவணங்களினை இணையத்தில் வெளியிடுதல் - எண்ணிம வடிவிற்கு மாற்றப்பட்ட ஆவணங்கள் http://www.csc.jfn.ac.lk/tdp இல் வெளியிடப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட தமிழ் எழுத்துக்கள்
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௦
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப்
ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
கு ஙு சு ஞு டு ணு து நு பு
மு யு ரு லு வு ழு ளு று னு
கூ ஙூ சூ ஞூ டூ ணூ தூ நூ பூ
மூ யூ ரூ லூ வூ ழூ ளூ றூ னூ
ஸ ஷ ஜ ஹ க்ஷ ஸ்ரீ ஶ
ஸு ஷு ஜு ஹு க்ஷு ஶு
௹ ௺ ௸ ௳ ௴ ௵ ௶ ௷
Copyright © 2013 - All Rights Reserved - Department of Computer Science, Faculty of Science, University of Jaffna