1.கடவுள் இயல்
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான்
2. சிவபெருமான். எப்படிப்பட்டவர்?
என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர்
3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.
4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக்கொண்டு செய்வார்?
தமது சக்தியைக் கொண்டு செய்வார்.
5. சக்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லமை,
6. சிவபெருமானுக்குச் சக்தி யாவர்?
உமாதேவியார்.
7. சிவபெருமானுடைய திருக்குமாரர்கள் யாவர்?
விநாயகக் கடவுள், வைரவக்கடவுள், வீரபத்திரக்கடவுள், சுப்பிரமணியக்கடவுள் என்னும் நால்வர்,
8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாருரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?
திருக்கைலாசமலை
9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்.
சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும்,சைவாசாரியர் இடத்திலும், சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.
திருச்சிற்றம்பலம்
2. புண்ணிய பாவ இயல்
1. சிவபெருமான் ஆன்மாக்களுக்காக அருளிச் செய்த முதனூல்கள் எவை?
வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாம்
2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?
புண்ணியங்கள்
3. புண்ணியங்கள் ஆவன யாவை?
கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன் உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியார்களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்னம பேசுதல், செய்ந்நன்றிஅறிதல் முதலானவைகள்.
4. புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பார்?
மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய் இன்பத்தை அனுபவிப்பர்.
5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?
பாவங்கள்
6. பாவங்கள் ஆவன யாவை?
கொலை, களவு, கள்ளுக்குடித்தல். மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்
7. பாவங்களைச் செய்தவர் எதனை அநுபவிப்பர்?
நரகங்களிலே விழுந்து, துன்பத்னத அநுபவிப்பர்,
திருச்சிற்றம்பலம்.
3. விபூதி இயல்
1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது
சைவசமயம்.
2. சைவசமயிகள் சரீரத்திலே அவசியமாகத் தரிக்கவேண்டிய அடையாளம் யாது?
விபூதி
3. விபூதி ஆவது யாது?
பசுவின் சாணத்னத அக்கினியினாலே சுடுதலால் உண்டாகிய திருநீறு
4. எந்த நிற விபூதி தரிக்கத்தக்கது?
வெள்ளை நிற விபூதி
5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல்வேண்டும்?
பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்துவைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.
6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்?
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாவேனும் இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்.
7. விபூதியை எப்படித் தரித்தல் வேண்டும்?
நிலத்திலே சிந்தாவண்ணம் அண்ணாந்து “சிவசிவ” என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.
8. விபூதி நிலத்தில் சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
சிந்திய விபூதியை எடுத்துவிட்டு. அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
9. நடந்துகொண்டு ஆயினும் கிடந்துகொண்டு ஆயினும் விபூதி தரிக்கலாமா?
தரிக்கல் ஆகாது
10. எக்காலங்களிலே விபூதியை அவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?
நித்திரை செய்யப் புகும்போதும். நித்திரை விட்டெழுந்த உடனும், தந்தசுத்தி செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ்செய்த உடனும், போசனத்துக்குப் போகும்போதும், போசனஞ்செய்த பின்னும் விபூதி அவசியமாக தரித்துக் கொள்ளல் வேண்டும்.
11. ஆசாரியர் ஆயினும் சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?
மூன்றுதரம் ஆயினும் ஐந்துதரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு. இரண்டு கைகரோயும் நீட்டி வாங்கல் வேண்டும்.
12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்டபின் யாது செய்தல் வேண்டும்?
முன்போல மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்,
13. சுவாமி முன்னும் குரு முன்னும் சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும் ?
முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்,
14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?
உத்தூளனம். திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும். (திரிபுண்டரம் - மூன்று குறி)
15. திரிபுண்டரந் தரிக்கத்தக்க தானங்கள் யாவை?
சிரம், நெற்றி, மார்பு, தொப்பூழ், முழந்தாழ்கள் இரண்டு,புயங்கள் இரண்டு,முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு,விலாப்புறம் இரண்டு, முதுகு,கழுத்து என்னும் பதினாறுமாம்;
இவைகளுள், விலாப்புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையுங் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண் தானங்கொள்வதும் உண்டு.
16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந்தரித்தல் வேண்டும்?
இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும். அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.
17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?
அவ்வாறு அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
18. மற்றைத் தானங்களில் எவ்ளளவு நீளந் தரித்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.
19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும் ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.
திருச்சிற்றம்பலம்.
4. சிவ மூலமந்திர இயல்
1. சைவசமயிகள் நியமமாகச் செபிக்கவேண்டிய சிவ மூலமந்திரம் யாது?
ஸ்ரீ பஞ்சாக்ஷரம்,
2. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபஞ்செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?
மதுபானமும் மாமிசப்போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சில தீட்சை பெற்றவராய் உள்ளவர்.
3. பஞ்சாக்ஷரத்திலே எத்தனை உருத்தல் வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச்செபித்தல் வேண்டும்.
4. எதற்தத் திக்கு முகமாக இருந்து செபித்தல் வேண்டும்?
கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் இருந்து செபித்தல் வேண்டும்.
5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் மடக்கி காலோடு காலை அடக்கி,இடைத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல்வேண்டும்,
6. எப்படி இருந்து செபித்தல் ஆகாது?
சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக்கொண்டும் போர்த்துக்கொண்டும், குடுமியை விரித்துக்கொண்டும், கெளபீனந் தரியாமலும், வேட்டி தரியாமலும், பேசிக்கொண்டும், இருளில் இருந்துகொண்டுஞ் செபித்தல் ஆகாது.
7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?
சிவபெருமான் இடத்திலேயே அழுந்திச் கிடத்தல் வேண்டும்:
8. நிற்கும்பொழுதும், நடக்கும்பொழுதும், இருக்கும்பொழுதும், கிடக்கும்பொழுதும், மற்றைய எத்தொலிலைச் செய்யும் பொழுதும் மனதை எதிலே பதித்தல் வேண்டும்
உயிர்க்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேகிய மனதைப் பதித்தல் வேண்டும்.
9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?
வேறு ஒன்றிலும் பற்று வையாது சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக்கொண்டும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக்கொண்டும் மரித்தல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்.
5. நித்தியகரும இயல்
1. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே நித்திரை வீட்டுடழுதல் வேண்டும்.
2. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல்வேண்டும்?
விபூதி தரித்துச் சிவபெருமானைத் தியானித்துத் தோத்திரஞ் செய்து கொண்டு பாடங்களைப் படித்தல்வேண்டும்.
மலசல மோசனம்
3. அதற்குப் பின் யாது செய்யத்தக்கது?
மலசல மோசனஞ் செய்யத்தக்கது.
4. எவ்விடத்திலே மலசலங்கழித்தல் வேண்டும்?
திருக்கோயிலுக்குத் தாரமாய் உள்ள தனிஇடத்திலே மலசலங் கழித்தல் வேண்டும்.
5. எவ்விடங்களில் மலசலங் கழித்தல் ஆகாது?
வழியிலும், குழியிலும், நீர்நிவேரசிலும், நீர்க்கரையிலும், கோமயம் உள்ள இடத்திலும்,, சுடுகாட்டிலும்,பூந்தோட்டத்திலும், மர நிழலிலும். உழுதநிழலிலும், அருவி பாயும் இடத்திலும், பசு மந்தை நிற்கும் இடத்திலும், புற்றிலும், அருவி பாயும் இடத்திலும், மலையிலும் மலசலங் கழித்தல் ஆகாது.
6. எந்தத் திக்கு முகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?
பகலிலே வடக்கு முகமாகவும் இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.
7. எப்படி இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்
தலையையுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்குநுனியைப் பார்த்துக்கொண்டு, மெளனமாக இருந்து மலசலங்கழித்தல் வேண்டும்.
செளசம்
<8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?/span>
எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துக்கு ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு, கெளசஞ் செய்தல் வேண்டும்.
9. செளசம் எப்படிச் செய்தல் வேண்டும்?
மண்ணுஞ் சலமுங்கொண்டு இடக்கையினாலே குறியில் ஒருதரமும், குதத்தில் ஐந்துதரத்துக்கு மேலும் இடக்கையை இடையிடையே ஒவ்வொருதரமும், பின்னும் இடக்கையைப் பத்துத்தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழுதரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால்வரையும் கைகளை முழங்கைவரையும் ஒவ்வொருதரங் கழுவல் வேண்டும்.
10. இப்படிச் செய்தபின் யாது செய்தல் வேண்டும்?
அவ்விடத்தை விட்டு வேறொரு துறையிலே போய், வாயையும் கண்களையும் நாசியையும் காதுகளையும் கைகால்களில் உள்ள நகங்களையுஞ் சுத்திசெய்து. எட்டுத்தரஞ் சலம் வாயிற் கொண்டு, இடப்புறத்திலே கொப்பளித்தல் வேண்டும்.
11. வாய் கொப்பளித்தபின் யாது செய்தல் வேண்டும்?
தலைக்கட்டு இல்லாமல் மூன்றுதரம் ஆசமனஞ் செய்தல் வேண்டும் (ஆசமனம்-உறுஞ்சுதல்)
12. ஆசமனம் எப்படிச் செய்தல் வேண்டும்?
வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டு பெருவிரல் அடியிற் சார்ந்த *உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.
13. செளசத்துக்குச் சமீபத்தில் சலம் இல்லை யானால் யாது செய்தல் வேண்டும்?
பாத்திரத்திலே சலம் மொண்டு, ஒரிடத்தில் வைத்துக்கொண்டு, மலசலங்கழித்து, செளசஞ்டுசய்துவிட்டு, பாத்திரத்தைச் சுத்திசெய்து. சலம்மொண்டு, வாய் கொப்பளித்துக் கால் கழுவல் வேண்டும்.
தந்தசுத்தி
14. செளசத்துக்குப்பின் யாது செய்யத்தக்கது?
தந்தசுத்தி செய்யத்தக்கது.
15. எதனாலே தந்தசுத்தி செய்தல் வேண்டும்?
சலத்தினாலே கழுவப்பட்ட பற்கொம்பினாலேனும், இலையினாலேனுந்தந்தசுத்தி செய்தல் வேண்டும்.
உழுந்தமிழ்ந்து - உழுந்து அமிழக்கூ கூடிய அளவு
16. எந்தத் திக்கு முகமாக இருந்து தந்தசுத்தி செய்தல் வேண்டும்?
கிழக்குமுகமாகவேனும், வடக்குமுகமாகவேனும் இருந்து தந்தசுத்தி செய்தல் வேண்டும்.
17. தந்தசுத்தி எப்படிச் செய்தல் வேண்டும்?
பல்லின் புறத்தையும் உள்ளையுஞ் செவ்வையாகச் சுத்தி செய்து, ஒரு சுழியை இரண்டாகப் பிளந்து, அவைகளினாலே நாக்கை வழித்து இடப்புறத்திலே போட்டுவிட்டு, சலம் வாயிற்கொண்டு பன்னிரண்டுதரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கால்களையுங் கழுவல் வேண்டும்.
18. நின்று கொண்டு ஆயினும் நடந்து கொண்டு ஆயினுந் தந்தசுத்தி பண்ணலாமா?
பண்ணல் ஆகாது.
ஸ்நானம்
19. தற்சுத்திக்குப்பின் யாது செய்யத்தக்கது?
ஸ்நானம் செய்யத்தக்கது.
20. ஸ்நானஞ் செய்யத்தக்க நீர்நிலைகள் யாவை?
ஆறு, ஓடை, குளம், கேணி, மடு முதலியவைகளாம்.
21. ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?
கெளபீனத்தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையுங்கழுவி, வேட்டியைத் தோய்த்து அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவிச் செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.
22. எவ்வளவினது ஆகிய சலத்திலே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?
கொப்பூழ் அளவினது ஆகிய சலத்திலே இறங்கி ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
23. எந்தத் திக்குமுகமாக நின்று ஸ்நானஞ் செய்தல் வேண்டும்?
நதியிலே ஆனால் அதற்கு எதிர்முகமாக நின்றும், குளம் முதலியவைகளிலே ஆனால் வடக்கு முகமாகவேனும் நின்றும் ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.
24. சலத்திலே எப்படி முழுகல் வேண்டும்?
ஆசமனஞ்செய்து. இரண்டு காதுகளையும் இரண்டு பெருவிரல்களினாலும் இரண்டு கண்களையும் இரண்டு சுட்டுவிரல்களினாலும் இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக்கொண்டு, சிவபெருமானைச் சிந்தித்து முழுகல் வேண்டும்.
நித்தியகரும இயல்
25. இப்படி முழுகின உடனே யாது செய்தல் வேண்டும்?
ஆசமனஞ் செய்து கொண்டு, கரையில் ஏறி வேட்டியைப் பிழிந்து தலையில் ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பில் உள்ள ஈரத்தைத் துவட்டிக் குடுமியை முடித்து. ஈரக்கெளபீனத்தைக் களைந்து, உலர்ந்த கெளபீனத்தைத் தரித்து இரண்டு கைகளையுங்கழுவி, உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, ஈரவஸ்திரத்தையும் கெளபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடல் வேண்டும்.
26. சிர ஸ்நானஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
கண்ட ஸ்நானமேனும், கடி ஸ்நானமேனுஞ் செய்தல் வேண்டும்.
27. கண்ட ஸ்நானம் ஆவது யாது?
சலத்தினாலே கழுத்தின் கீழே கழுவி, கழுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம்படும்படி துடைப்பது.
28. கடி ஸ்நானம் ஆவது யாது?
சலத்தினாலே அரையின் கீழே கழுவி, களுவாது எஞ்சிய உடம்பை நனைந்த வஸ்திரத்தினாலே ஈரம்படும்படி துடைப்பது.
அநுட்டானம்
29. ஸ்நானத்துக்குப் பின் யாது செய்தல் வேண்டும்?
சுத்த சலங்கொண்டு அநுட்டானம் பண்ணி, பஞ்சாக்ஷர செபஞ் செய்து தோத்திரம் பண்ணல் வேண்டும்.
போசனம்
30. அதற்குப் பின் யாது செய்யத்தக்கது?
போசனஞ் செய்யத்தக்கது.
31. போசனபந்திக்கு யோக்கியர் ஆவார் யாவர்?
மதுபானமும் மாமிசபோசனமும் இல்லாதவராயும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.
32. எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?
தாழ்ந்த சாதியார் இடத்திலும் கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்வர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.
33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?
தாழ்ந்த சாதியார் இடத்திலும் கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்வர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.
33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?
போசனம்பண்ணல் ஆகாது
34. எவ்வகைப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்?
கோமயத்தினாலே மெழுகப்பட்ட தானத்தில் இருந்து போசனம் பண்ணல் வேண்டும்.
35. போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?
வாழையிலே, பலாவிலே, புன்னையிலே, பலாசிலை பாதிரியிலை, தாமரையிலை, என்பவைகளாம்.
36. போசன பாத்திரங்களை யாது செய்த பின் போடல் வேண்டும்?
சலத்தினாலே நன்றாக கழுவியபின் போடல் வேண்டும்.
37. வாழையிலேயை எப்படிப் போடல் வேண்டும்?
தண்டு உரியாமல் அதனுடைய அடி வலப்பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும்.
38. இலை போட்டபின் யாது செய்தல் வேண்டும்?
அதிலே சலத்தினாலே புரேராஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு. நெய். இவைகளைப் படைத்தல் வேண்டும்.
39. போசனம் பண்ணும் போது எப்படி இருத்தல வேண்டும்?
வீண்வார்த்தை பேசாமலும், சிரியாமலும்தாங்காமலும், அசையாமலும். கால்களைமடக்கிக்கொண்டு செவ்வையாக இருத்தல் வேண்டும்.
40. போசனம் எப்படிப் பண்ணல் வேண்டும்?
அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறுகப்பிரித்து, பருப்பு நெய்யோடு பிசைந்து, சிந்தாமற் புசித்தல் வேண்டும். அதன்பின் சிறிது பாகத்தை முன்போலப் பிரித்து, புளிக்கறியோடு ஆயினும் ரசத்தோடு ஆயினும் பிசைந்து, புசித்தல் வேண்டும். அதன்பின் மோரோடு பிசைந்து, புசித்தல் வேண்டும். கறிகளை இடையிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும், இலையிலும் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனும் தண்ணரீரேனும் பானம் பண்ணல் வேண்டும்.
41. போசனம் பண்ணும் போது உமியத்தக்கதை எங்கே உமிதல் வேண்டும்?
இலையின் முற்பக்கத்தை மிதத்தி,, அதன்கீழ் உமிதல் வேண்டும்.
42. போசனம் பண்னும் போது மனதை எதிலே இருத்துதல் வேண்டும்?
சிவபெருமானுடைய திருவடியிலே இருத்துதல் வேண்டும்.
43. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
எழுந்து வீட்டுக்குப் புறத்தேபோய்க் கைகளைக்கழுவி, சலம் வாயிற் கொண்டு பதினாறுதரம் இடப்புறத்திலே கொப்பளித்து. வாயையும் கைகளையும் கால்களையுங் கழுவல் வேண்டும்.
44. உச்சிடத்தை எப்படி அகற்றல் வேண்டும்?
இலையை எடுத்து எறிந்துவிட்டு, கைகழுவிக்கொண்டு, உச்சிட்டத்தானத்னதக் கோமயஞ் சேர்ந்த சலந்தெளித்து மெழுகிப் புறத்தேபோய்க் கைகழுவிவிட்டு, பின்னும் அந்தத்தானத்திலே சலந்தெளித்துவிடல் வேண்டும்.
45. உச்சிட்டத்தானத்னத எப்படி மெழுகல் வேண்டும்?
இடையிலே கையை எடாமலும். முன்பு தீண்டிய இடத்தைப் பின்பு தீண்டாமலும், புள்ளி இல்லாமலும் மெழுகள் வேண்டும்.
படித்தல்
46. போசனத்துக்கு பின் யாது செய்யத்தக்கது?
உபாத்தியாயர் இடத்தே கல்வி கற்கத் தக்கது.
இரவிற் செய்யுங் கருமம்
47. சூரியன் அஸ்தமிக்கும் போது யாது செய்தல் வேண்டும்?
மலசல விமோசனஞ்செய்து, செளசமும் ஆசமனமும்பண்ணி, விபூதிதரித்து, சிவபெருமானை வணங்கித் தோத்திரஞ் செய்துகொண்டு, விளக்கிலே பாடங்களைப் படித்தல் வேண்டும்.
48. அதன் பின் யாது செய்தல் வேண்டும்?
போசனஞ்செய்து. நூறடி உலாவி, சிறிது நேரஞ்சென்றபின் சயனித்தல் வேண்டும்
49. எப்படிச் சயனித்தல் வேண்டும்?
கிழக்கே ஆயினும், மேற்கே ஆயினும், தெற்கே ஆயினும் தலைவைத்து, சிவபெருமானைச் சிந்தித்துக்கொண்டு, வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும், வடக்கே தலைவைத்தல் ஆகாது.
50. எப்போது எழுந்துவிடல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே எழுந்துவிடல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்.
6.சிவாலய தரிசன இயல்
1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?
திருக்கோயில்
2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு போதல் வேண்டும்
3. திருக்கோவிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?
தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தை தரிசித்து, இரண்டு கைககளையுஞ் சிரசிலே குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.
4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
வடக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும். எந்தத்திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
கிழக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
7. எந்தத் திக்குகளிலே கால்நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?
கிழக்கிலும் வடக்கிலும் கால்நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.
8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்
9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு மோவாய், புயங்கள் இரண்டு, என்னும் எட்டு அவயமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ண வேண்டும்?
பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.
12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்றுதரமாயினும், ஜந்துதரமாயினும், ஏழுதரமாயினும், ஒன்பதுதரமாயினும் பண்ணல் வேண்டும், ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.
13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?
பிரதஷிணம் பண்ணல் வேண்டும்.
14. எப்படிப் பிரதஷிணம் பண்ணல் வேண்டும்?
இரண்டு கைகளேயும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு. கால்களை மெல்ல வைத்துப் பிரதஷிணம் பண்ணல் வேண்டும்.
15. பிரதஷிணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்றுதரமாயினும், ஜந்துதரமாயினும், ஏழுதரமாயினும், ஒன்பதுதரமாயினும் பண்ணல் வேண்டும்.
16. சுவாமி சந்திதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?
முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ்செய்து, விபூதி வாங்கித் தரித்துக்கொண்டு, அதன்பின் சபாபதி, தணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
17. விக்கினேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?
முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்றுமுறை குட்டி வலக்காதை இடக்கையினாலும் இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.
18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுது எல்லாம் யாது செய்தல் வேண்டும்?
இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும், மார்பில் ஆயினும் குவித்துக் கொண்டு மனங்கசிந்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.
19. எந்தக்காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்தல் ஆகாது?
அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது , தரிசனஞ் செய்யல் ஆகாது.
20. அபிஷேககாலத்திலே பிரதகூஷிண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?
அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.
21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
சண்டேசுரர் சந்நிதியை அடைந்து, கும்பிட்டு, மூன்றுமுனற கைகொட்டி, சிவதரிசன பலத்தைத் தரும்பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.
22. சண்டேசுர தரிசனத்தின்பின் யாது செய்தல் வேண்டும்?
சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து, ஸ்ரீ பஞ்சாகூஷரத்தில் இயன்ற உருச்செபித்துக்கொண்டு,எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.
23. நித்தியமும் நியமமாக ஆலயதரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
சோமவாரம், மங்கலவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம்,பெளர்ணினம, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாதப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திரகிரகணம். சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களில் ஆயினுந் தரிசனஞ் செய்தல் வேண்டும்.
24. திருக்கோயிலிலே செய்யத்தகாத குற்றங்கள் யாவை?
ஆசாரம் இல்லாது போதல் கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங்கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல். காலை நீட்டிக்கொண்டு இருத்தல், மயிர்கோதிமுடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல்,சிரசிலே வஸ்திரந் தரித்துக் கொள்ளுதல், தோளிலே உத்தரீயம் இட்டுக்கொள்ளுதல், சட்டை இட்டுக்கொள்ளுதல், பாதரனஷ இட்டுக்கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் கடத்தல், நிருமாலியத்னத மிதித்தல், தூபி துவசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண்வார்த்தை பேசல். சிரித்தல், சண்டை இடுதல், விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
திருச்சிற்றம்பலம்.
7.தமிழ் வேத இயல்
1. சைவசமயத்தவர்கள் ஓதவேண்டிய தமிழ் வேதங்கள் யாவை?
தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.
2. தேவாரஞ் செய்தருளினவர் யாவர்?
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்சுரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.
3. திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்?
மாணிக்கவாசக சுவாமிகள்
4. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே திருவதாரஞ் செய்தருளினார்?
சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராமணகுலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
5. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார் ?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரில் வேளாளர் குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
6. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார் ?
திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே சிவப்பிராமணகுலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
7. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்?
பாண்டிநாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் பிராமணகுலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்.
8. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவர்கள்?
சைவசமய குரவர்கள் எனப் பெயர்பெறுவர்கள்.
9. யாது காரணத்தினால் இவர்கள் சைவசமய குரவர்கள் எனப்பெயர் பெறுவார்கள்?
பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியினாலே சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவர்கள்.
10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து பொற்கிண்ணத்தில் ஊட்டிய திருமூலைப்பாலை உண்டது.
(2) சிவபெருமான் இடத்திலே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது;
(3) வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப்பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப்பாடினது.
(4) பாலை நிலத்ததை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது
(5) பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்னதயும் போக்கினது.
(6) சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியில் போட்டுப் பச்சையாக எடுத்தது.
(7) வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டுப் எதிர் ஏறும்படி செய்தது.
(8) புத்தநந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.
(9) ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தை திருப்பதிகத்தினாலே கரை சேர்ந்தது.
(10) ஆண்பனைகளைப் பெண்பனைகள் ஆக்கியது.
(11) விஷத்தினால் இறந்த செட்டினய உயிர்ப்பித்தது.
(12) விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண் ஆக்கினது.
(13) தமது திருக்கல்யாணம் தரிசிக்சு வந்தவர்கள் எல்லாரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
11. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) சமணர்களாலே ஏழுநாள் சுண்ணாம்பறையிலே ஆட்டப்பட்டு இருந்தும் வேகாது பிழைத்தது.
(2) சமணர்கள் கொடுத்த நஞ்சுகலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாவாது பிழைத்தது.
(3) சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ்செய்து வணங்கப்பட்டது.
(4) சமணர்கள் கல்லிலே சேர்த்துக்கட்டிச் சமுத்திரத்தில் இடவும் அக்கல்லே தோணியாகக் கரை எறினது.
(5) சிவபெருமான் இடத்திலே படிக்காசு பெற்றது.
(6) வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடியது.
(7) விஷத்தினால் இறந்த பிராமணப்பிள்ளைனய உயிர்ப்பித்தது.
(8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரை ஏறினது.
12. சுந்தரமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) செங்கற்கள் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
(2) சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தா சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டுத் திருவாரூரில் உள்ள குலத்திலே எடுத்தது.
(3) காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
(4) முதலே விழுங்கிய பிராமணப்பிள்ளையை அம்முதலே வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.
(5) வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளின்று.
13. மாணிக்கவாசக சுவாமிகள் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?
(1) சிவபெருமானே நரியைக் குதினர ஆக்கிக் கொண்டு வரும்படிக்கும், மண்சுமந்து அடிபடும்படிக்கும் பெற்றுக்கொண்டது.
(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமை ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது
(3) பிறவிதொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும் படி செய்தது.
(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதம்படி பெற்றுக் கொண்டது
(5) எல்லாருங்காணக் கனகசபையின் உள்ளே சிவத்தோடு கலந்தது.
14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?
சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.
15. தமிழ் வேதம் ஒதுதற்கு யோக்கியர் யாவர்?
மதுபானமும் மாமிசபோசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய். சிவதீட்ஷை பெற்றவராய் உள்ளவர்.
16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?
சுத்திடுசய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ்வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ்டுசய்து, இருந்துகொண்டு, அன்புடனே ஒதல் வேண்டும். புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும் வைத்தல் ஆகாது.
17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பயன் பெறுவர்?
சிவபெருமானுடைய திருவடிக்கீழ்ப் போரின்பத்தை அனுபவிப்பர்.
திருச்சிற்றம்பலம்.
வினாவும் விடையும் 135.
முற்றும்.
தோத்திரத்திரட்டு
விநாயகக்கடவுள்
மண்ணுல கத்திலனிற் பிறவி மாசற
எண்ணிய பொருடுளெலா மெளிதின் முற்றுறக்
கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன மலரடி பணிந்து போற்றுவாம். 1
உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந்
தறிநிறுவி யுறுதி யாகத்
தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி
யிடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப்பசு போதக் கவளமிடக்
களித்துண்டு கருணே யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்னத
நினைந்துவரு வினைக டீர்ப்பாம். 2
சிவபெருமான்
பூமலர் மிசைவரு புனித னாதியோர்
தாமுணர் வரியதோர் தலைமை யெய்தியே
மாமறை முதற்கொரு வடிவ மாகியோன்
ககாமரு செய்யபூங் கழல்கள் போற்றுவாம். 3
பங்கயன் முகுந்தனும் பரமேன் றுன்னியே
தங்களி லிருவருஞ் சமர்செய் துற்றுரு
அங்கவர் வெருவர வங்கி யாழெ
பபுங்கவன் மலரடி போற்றி செய்குவாம், 4
நாரண னென்னுந் தேவு
நான்முகத் தவனு முக்கட்
பூரணன் றனு மாகிப்
புவிபடைத் தளித்து மாற்றி
ஆரண முடிவுந் தேறா
அநாதியா யுயிர்கட் கெல்லாங்
காரண னாய மேலான்
சுழலிலே கருத்துள் வைப்பாம். 5
ஏகனே போற்றி யார்க்கும்
ஈசனே போற்றி யம்மை
பாகனை போற்றி மேலாம்
பரஞ்சுட ருருவே போற்றி
மேகமார் களனே போற்றி
விடைமிசை வருவாய் போற்றி
மோகமார் தக்கன் வேள்வி
முடித்திடு முதல்வா போற்றி. 6
அம்புயா சனன்மா லின்னும்
அளப்பருந் திறத்தாய் போற்றி
நம்பனே போற்றி யெங்கள்
நாதனே போற்றி கோதில்
செம்பொனே மணியே போற்றி
சிவபெரு மானே போற்றி
எம்பிரான் போற்றி முக்கண்
இறைவனே போற்றி போற்றி. 7
பொங்கரா வணிக ளாகப்
புனைதரு புனிதா போற்றி
அங்கரா கத்திற் பூதி
அணிந்திடு மாதி போற்றி
வெங்கரா சலத்தின் வன்றேல்
வியன்புறம் போர்த்தாய் போற்றி
சங்கரா பரமா போற்றி
தாணுவே போற்றி போற்றி, 8
எவ்வெவர் தம்மை யேனும்
யாவரே யெனினும் போற்றின்
அவ்வவ ரிடமாக் கொண்டே
அவர்க்கரு டருவாய் போற்றி
மெய்வரு தெளிவி லுன்னை
வெளிப்பட வுணர்ந்து ளோர்க்குத்
தெய்வத போக முத்தி
சிறப்பொடு தருவாய் போற்றி. 9
அம்புய மலர்மே லண்ணல்
அச்சுக னாதி வானோர்
தம்பத மெமக்கு நல்குந்
தற்பரா என்றே யாரும்
நம்புறு பொருட்டால் வேதம்
நவின்றிட வடைந்தோர்க் கெல்லா
உம்பர்தம் பதமு மீயும்
உலகுடை முதல்லா போற்றி. 10
வேதநா யகனே போற்றி
விண்ணவர் தலைவா போற்றி
மாதொரு பாகா போற்றி
மறுசம யங்கண் மாளப்
பேதகஞ் செய்வாய் போற்றி
பிஞ்ஞகா போற்றி யான்செய்
பாதக மனைத்துந் தீர்க்கும்
பராபரா போற்றி போற்றி. 11
யாவையும் படைப்பாய் போற்றி
யாவையுந் துடைப்பாய் போற்றி
யாவையு மானாய் போற்றி
யாவையு மல்லாய் போற்றி
யாவையும் புணர்ந்தாய் போற்றி
யாவையும் பிரிந்தாய் போற்றி. 12
சரண மங்கைருயார் பங்குறை சங்கர சரணஞ்
சரண மங்கல மாகிய தனிமுதல் சரணஞ்
சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ்
சரண மும்பர்க னாயக பசுபதி சரணம். 13
கல்லாப் பிழையுங் கருதாப்
பிழையுங் கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப்
பிழையுநின் னைந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையுந் துதியாப்
பிழையுந் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தரு
ளாய்கச்சி யேகம்பனே, 14
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனை
யால்வருந் தோடஞ் செய்த
பொல்லாத தீவினை பார்வையிற்
பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டுந்
தீங்குக ளாயவுமற்
றெல்லாப் பிழையும் பொறுத்தரு
ளாய்கச்சி யேகம்பனே, 15
கொல்லாமற் கொன்தைத் தின்னாமற்
குத்திரங் கோள்களவு
கல்லாமற் கைதவ ரோடிணங்
காமற் கனவிலும் பொய்
சொல்லாம சொற்களைக் கேளாமற்
றேகையர் மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய்
சிதம்பர தேசிகனே, 16
உமாதேவியார்
செறிதரு முயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய
மறுவறு வரனிட மரபின் மெவிய
அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய
இறைவிதன் மலரடி யிறைஞ்சி யேத்துவாம். 17
மனிதருந் தேவரு மாயா
முனிவரும் வந்துசென்னி
குனிதருஞ் சேவடிக் கோமள
மேகொன்னற வார்சடைமேற்
பனிதருந் திங்களும் பாம்பும்
பகீரதி யும்படைத்த
புனிதரு நீயுமென் புந்தியெந்
நாளும் பொருந்துகவே. 18
நின்று மிருந்துங் கிடந்து
நடந்து நினைப்பதுன்னை
என்றும் வணங்குவ துன்மலர்த்
தாளெழு தாமறையின்
ஒன்று மரும்பொ ருளேயரு
ளேயுமை யேயிமயத்
தன்றும் புறந்தவ ளேயழி
யாமுத்தி யானந்தமே. 19
கண்ணிய துன்புகழ் கற்பதுன்
னாமங் கசிந்துபத்தி
பண்ணிய துன்னிரு பாதாம்
புயத்திற் பகலிரவா
நண்ணிய துன்னை நயந்தோ
ரவையத்து நாமுன் செய்த
புண்ணிய மேதென்னம் மேபுவி
யேழையும் பூத்தவளே. 20
வவ்விய பாகத் திறைவரு
நீயு மகிழ்ந்திருக்கும்
செவ்வியு முங்க டிருமணக்
காலமுஞ் சிந்தையுள்ளே
அவ்வியந் தீர்த்தென்னை யாண்டபொற்
பாதமு மாகிவந்து
வெவ்விய காலனென் மேல்வரும்
போது வெளிநிற்கவே. 21
உமாதேவியார்
செறிதரு முயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய
மறுவறு வரனிட மரபின் மெவிய
அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய
இறைவிதன் மலரடி யிறைஞ்சி யேத்துவாம்.17
மனிதருந் தேவரு மாயா
முனிவரும் வந்துசென்னி
குனிதருஞ் சேவடிக் கோமள
மேகொன்னற வார்சடைமேற்
பனிதருந் திங்களும் பாம்பும்
பகீரதி யும்படைத்த
புனிதரு நீயுமென் புந்தியெந்
நாளும் பொருந்துகவே. 18
நின்று மிருந்துங் கிடந்து
நடந்து நினைப்பதுன்னை
என்றும் வணங்குவ துன்மலர்த்
தாளெழு தாமறையின்
ஒன்று மரும்பொ ருளேயரு
ளேயுமை யேயிமயத்
தன்றும் புறந்தவ ளேயழி
யாமுத்தி யானந்தமே. 19
கண்ணிய துன்புகழ் கற்பதுன்
னாமங் கசிந்துபத்தி
பண்ணிய துன்னிரு பாதாம்
புயத்திற் பகலிரவா
நண்ணிய துன்னை நயந்தோ
ரவையத்து நாமுன் செய்த
புண்ணிய மேதென்னம் மேபுவி
யேழையும் பூத்தவளே. 20
வவ்விய பாகத் திறைவரு
நீயு மகிழ்ந்திருக்கும்
செவ்வியு முங்க டிருமணக்
காலமுஞ் சிந்தையுள்ளே
அவ்வியந் தீர்த்தென்னை யாண்டபொற்
பாதமு மாகிவந்து
வெவ்விய காலனென் மேல்வரும்
போது வெளிநிற்கவே. 21
கொள்ளேன் மனத்தினின் கோலமல்
லாதென்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசம யம்விரும்
பேன்வியன் மூவுலகுக்
குள்ளே யனைத்தினுக் கும்புறம்
பேயுள்ளத் தேவிளைந்த
கள்ளே களிக்குங் களியே
யளியவென் கண்மணியே, 22
மணியே மணியி னொளியே
யொளிரு மணிபுனெந்த
அணியே யணியு மணிக்கழ
கேயணி காதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே
யமரர் பெருவிருந்தே
பணியே னெருவனர நின்பத்ம
பாதம் பணிந்தபின்னே, 23
பின்னே திரிந்துன் னடியாரைப்
பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கண் முயன்றுகொண்
டேன்முதன் மூவர்க்கும்
அன்னே யுலகுக் கபிராமி
யென்னு மருமருந்தே
என்னே யினியுன்னை யான்மற
வாமனின் றேத்துவனே. 24
சொல்லும் பொருளு மெனநட
மாடுந் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடி
யேநின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்
கேயழி யாவரசுஞ்
செல்லுந் தவடுநறி யுஞ்சிவ
லோகமுஞ் சித்திக்குமே. 25
சபாபதி
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுலான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம், 26
வையகமின் புறநின்ற
மருமலிபோற் பதம் போற்றி
கையமரு நிலை போற்றி
கருணெமுகமலர் போற்றி
மெய்யிலகு மொளி போற்றி
விரவியெனை யெடுத்தாண்ட
செய்யதிரு வடிபோற்றி
திருச்சிற்றம்பலம் போற்றி. 27
சிவகாமியம்மை
மன்றின்மணி விளக்கெனலா
மருவுமுக நகைபோற்றி
ஒன்றியமங் கலநாணி
னொளிபோற்றி யுலகும்பர்
சென்றுதொழ வருள்சுரக்குஞ்
சிவகாம சுந்தரிதன்
நின்றதிரு நிலை போற்றி
நிலவுதிரு வடிபோற்றி. 28
தட்சணாமூர்த்தி
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
ஆரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாம
னினைந்துபவத்தொடக்கை வெல்வாம் 29
வைரவக்கடவுள்
பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம், 30
வீரபத்திரக்கடவுள்
அடைந்தவி யுண்டிடு மமரர் யாவரும்
மிடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மாமக மொடியத் தக்கனைத்
தடிந்திடு சேவகன் சரணம் போற்றுவாம். 31
சுப்பிரமணியக்கடவுள்
மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொழி கருணே போற்றி
ஏலருந் துதிக்க நின்ற
விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேண்
மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி. 32
அருவமு முருவு மாகி
அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரம்மாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்க ளாறுங்
கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஓருதிரு முருககன் வந்தாய்
குதித்தன னுலக முய்ய 33
முழுமதி யனடன வாறு
முகங்களு முந்நான் காகும்
விழிகளி னருளும் வேலும்
வேறுள படையின் சீரும்
அழகிய சுரமீ ராறும்
அணிமணித் தண்டை யார்க்குஞ்
செழுமல ரடியுங் கண்டான்
அவன்றவஞ் செப்பற் பாற்றே. 34
மூண்டக மலர்ந்த தன்ன
மூவிரு முகமுங் கண்ணுங்
குண்டல நிரையுஞ் செம்பொன்
மவுலியுங் கொல மார்பும்
எண்டரு கரமீ ராறும்
இலங்கெழிற் படைகள் யாவுந்
தண்டையுஞ் சிலம்பு மார்க்குஞ்
சரணமுந் தெரியக் கண்டான். 35
னீறு கேதனம் வச்சிர மங்குசம் விசிகம்
மாறி லாதவே லபயமே வலமிடம் வரதம்
ஏறி பங்கய மணிமழுத் தண்டுவில் விசைந்த
ஆறி ரண்டுகை யறுமுகங் கொண்டுவே ளடைந்தான் 36
எங்க ணும்பணி வதனங்க ளெங்கனும் விழிகள்
எங்க ணுந்திருக் கேள்விக ளெங்கணு கரங்கள்
எங்க ணிந்திருக் கழலடி யெங்கணும் வடிவம்
எங்க ணுஞ்செறிந் தருள்செயு மறுமுகத் திறைக் 37
மூவர்கண் முதல்வன் வந்தான்
முக்கணா ன்குமரன் வந்தான்
மேவலர் மடங்கல் வந்தான்
வேற்படை வீரன் வந்தான்
ஏவருந் தெரித றேற்றா
திருந்திடு மொருவன் வந்தான்
தேவர்க டேவன் வந்தான்
என்றன சின்ன மெல்லாம். 38
கந்தநம வைந்துமுகர் தந்தமுரு
கேசநம கங்கை யுமைதன்
மைந்தநம பன்னிரு புயத்தநம
நீபமலர் மாலே புனையுந்
தந்தைநம வாறுமுக வாதிநம
சோதிநம தற்பர மதாம்
எந்தைநம வென்றுமிளை யோய்நம
குமாரநம வென்று தொழுதார். 39
விரிஞ்சன்மா றேவ ராறும்
வெலற்கரும் விறலோ னாகிப்
பெருஞ்சுரர் பதமும் வேத
வொழுக்கமும் பிறவு மாற்றி
அருஞ்சினற யவர்க்குச் செய்த
அவுணர்குர் னாவி கொள்வான்
பரஞ்சுட ருருவாய் வந்த
குமரனைப் பணிதல் செய்வாம். 40
மாயையின் வலியோ னாகி
மான்முத லோரை வென்றே
ஆயிரத் தோரெட் டண்டம்
அரசுசெய் துகநூற் றெட்டுக்
சாயம தழிவின் றாகிக்
கடவுளர்க் கலக்கண் செய்த
தீயசூர் முதலைச் செற்ற
குமரன்றாள் சென்னி வைப்பாம். 41
ஆறுமா முகப்பிரா யிவ்விடை
வேறொரு துணையிலை மெய்மை யீதெனத்
தேறின னவனடிச் சிந்தை செய்தனன்
மாறிழி யருவிநீர் வழியுங் கண்ணினான், 42
நண்ணினர்க் கினியா யோலம்
ஞானநா யகனே யோலம்
பண்ணவர்க் கினறயே யோலம்
பரஞ்சுடர் முதலே யோலம்
எண்ணுதற் கரியா யோலம்
யாவையும் படைத்தா யோலங்
கண்ணுதற் பெருமா னல்குங்
கடவுளே யோல மோலம். 43
தேவர்க் கடவே யாலஞ்
சிறந்தசிற் பரபின யோலம்
மேவலர்க் கிடியே யோலம்
வேற்படை விமலா வோலம்
பஈவலர்க் கெளியா யோலம்
பன்னிரு புயத்தா யோலம்
மூவரு மாகி நின்ற
மூர்த்திருய யோல யோலம் 44
புன்னெறி யதனிற் செல்லும்
போக்கினை விலக்கி மேலாம்
நன்னெறி யொழுகச் செய்து
நவையறு காட்சி நல்கி
என்னையு மடிய னாக்கி
யிருவினை நீக்கி யாண்ட
பன்னிரு தடந்தோள் வள்ளல்
பாதபங் கயங்கள் போற்றி 45
துய்யதோர் மறைக னாலுந்
துதித்திடற் கரிய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க
சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு கீண்ட
வேற்படைட வாழ்க வன்னான்
பொய்யில்சீ ரடியார் வாழ்க
வாழ்கவிப் புவன மெல்லாம். 46
ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீ ரடியா ரெல்லாம், 47
குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தபழந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய்- என்றும்
இளையா யழகியா யேறூர்ந்தா னேறே
உனையாயென் னுள்ளத் துனற. 48
குன்றமெறிந்ததுவுங்குன் றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னெக்
கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்தது
மெய்விடா வீரன்கை வேல் வும் 49
வீரவே முரைவேல் விண்ணேர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வே டிருக்கைவேல் -வாரி
குளித்தவேல் கொற்றவேல்சூர் மார்புங் குன்றுந்
துளேத்தவே லுண்டே துணை 50
இன்ன மொருகா லெனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில் வேற் சூர்தடிந்த கொற்றவாமுன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 51
உன்னை யொழிய வொருவரையும் நம்புகிலேன்
பின்னை யொருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக்
கோலப்ப வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே 52
அஞ்சு முகந்தோன்றி லாறு முகந்தோன்றும்
வெஞ்சமரந்தோன்றில் வேறொன்றும்-நெஞ்சில்
ஒருகா னினைக்கி லிருகாலுந் தோன்றும்
முருகாவென றோதுவார் முன். 53
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே-ஒருகைமுகன் [ழுதும்
றம்பியே நின்னுடைய தண்டைக்காலெப் பொ
நம்பியே கைதொழுவே னான். 54
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம்
புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந்
தடம்புய மாறிரண்டும்
மருவடி வான வதனங்க
ளாறு மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங்
குளிரக் குதிகொண்டவே, 55
செங்கே ழடுத்த சிவனடி
வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு
தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்
செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினு மங்கேயென்
முன்வந் தெதிர்நிற்பனே. 56
சூலம் பிடித்தெம பாசஞ்
சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் றனக்கொரு காலுமஞ்
சேன்கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான்
குமார னறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே
நமக்கொரு மெய்த்துணையே 57
நாளென் செயும்வினை தானென்
செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென்
செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்
தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன்
சோலந்து தோன்றிடினே 58
வெட்டுங் கடாமிசைத் தோன்றும்
கூற்றன் விடுங்கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க
வேண்டுங் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும்விட்
டோடவெட் டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங்
கலாப மயூரத்தனே, 59
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத் துனைமுரு காவெனு
நாமங்கண் முன்புசெய்த
பழிக்குத் துளோயவன் பன்னிரு
தோளும் பயந்ததனி
வழிக்குதத் துணைவடி வேலுஞ்செங்
கோடன் மயூரமுமே. 60
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்
தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக்
கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா
தவர்க்கொரு தாழ்வில்லையே 61
குமரா சரணஞ் சரண்மென்
றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமா
டிருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான
ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையேடு
வந்தினி யென்செயுமே. 62
மாலோன் மருகனை மன்றாடி
மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான
தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோ
டனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில
னேயந்த நான்முகனே 63
திருநந்திதேவர்
ஐயிரு புராணநூ லமலற் கோதியுஞ்
செய்யபன் மறைகளுந் தெரிந்து மாயையான்
மெய்யறு சூள்புகல வியாத னீடடிய
கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம். 64
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
பண்டைவல் வினையினாற் பாயுடுத் துழல்
குண்டரை வென்றுமுன் கூடல் வைகியே
வெண்டிரு நீற்றொளி விளங்கச செய்திடு
தண்டமிழ்விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம். 65
திருநாவுக்கரசு நாயனார்
பொய்யுரை நூல்சில புகலுந் தீயமண்
கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு,
வெய்யகற் றோணியாய் மிதப்ப மேற்படு
துய்யசொல் லரசர்தா டொழுது போற்றுவாம், 66
சுந்தரமூர்த்தி நாயனார்
வறந்திடு பொய்கை முன்னிரம்ப மற்றவண்
உறைந்திடு முதலைவந் துதிப்ப வன்னதால்
இறந்திடு மகன்வளர்ந் தெய்தப் பாடலொன்
றறைந்திடு சுந்தர னடிகள் போற்றுவாம். 67
மாணிக்கவாசக சுவாமிகள்
கந்தமொ டுயிர்படுங் கணபங் கம்மெனச்
சிந்தைகொள் சாக்கியர் தியங்க மூகராய்
முந்தொரு முகையை மொழிவித் தெந்தைபால்
வந்திடு மடிகளை வணக்கஞ் செய்குவாம். 68
அறுபத்துமூவர்
தத்து மூதெயின் மூன்றுந் தழலெழ
முத்து மூரன் முகிழ்ந்த நிராமய
சித்து மூர்த்திதன் றாளிணை சேரறு
பத்து மூவர் பதமலர் போற்றுவாம். 69
சண்டேசுரர்
மனாதிகளுக் கெட்டாத பரமானந்த
வாழ்வினையங் கோரிலிங்க மணலாற் கூப்பித்
தனாதிதயந் தனினின்றுந் தாபித தான்பால்
தழைத்தவன்பா லாட்டவந்து தடுக்கத் தா
எனாதவன்ற னிருபதமு மழுவாற் றுண்டித் தை
திகழ்ந்தவனைப்பரபதத்துளிருத்தானும்
பினாகியரு ளடைந்தவிறற் சண்டே சன்றாள்
பிரசமல ரிறைத்திறைஞ்சிப் பரசு வாமே70
சரசுவதி
தாவறு முலகெலாந் தந்த நாள்முகத்
தேவுதன் றுணைவியாயச் செறிந்த பல்லுயிர்
நாவுதொ றிருந்திடு நலங்கொள், வாணித
பூவடி முடிமிசைப் புனைநது போற்றுவாம் 71
சேக்கிழார் நாயனார்
தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கி னாற்சொல்ல வல்ல டசிரஈடுனங்கள்
பாக்கி யப்பய ளுப்பதி குன்னறவஈழ்
சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம். 72
திருச்கிற்றம்பலம்.
தோத்திரத்திரட்டு முற்றும்.